ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு எந்த அடையாளமும் தேவையில்லை!--ஜெயம்ரவி

2 posters

Go down

எனக்கு எந்த அடையாளமும் தேவையில்லை!--ஜெயம்ரவி Empty எனக்கு எந்த அடையாளமும் தேவையில்லை!--ஜெயம்ரவி

Post by ayyasamy ram Wed Aug 12, 2015 8:07 am


ரொமான்டிக் ஹீரோவாக “ரோமியோ ஜூலியட்’ படத்தில்
ஹன்சிகாவோடு அலம்பல் செய்த ஜெயம்ரவி தற்போது
“சகலகலாவல்லவனி’ல் காமெடி சரவெடியாக த்ரிஷா,
அஞ்சலியோடு கலகலக்க வைக்கிறார்.
படத்தை முடித்துவிட்டு ரிலீசுக்குத் தயாராக இருந்தவரிடம்
பேசினோம்.

“ரோமியோ ஜூலியட்’டில் ரெண்டு ஜோடி போல “சகலகலாவல்லவனி’லும் த்ரிஷா, அஞ்சலி. ரெண்டு ஜோடி சென்டிமென்டா? த்ரிஷாவை நீங்கதான் செலக்ட் பண்ணிங்களாமே?
இதுக்குக்கூட சென்டிமென்ட் பார்த்தா அப்புறம் எல்லாப் படத்திலேயும் ரெண்டு ஹீரோயின் போர் அடிச்சுடும். அது காரணமில்லை. த்ரிஷா, அஞ்சலி ரெண்டு கான்ட்ராஸ்ட் கேரக்டர் கதைக்குத் தேவைப் பட்டது. ரெண்டு பேரும் ரொம்ப நல்லா பண்ணியிருக்காங்க. த்ரிஷா செலக்ஷன் இயக்குநர் சாய்ஸ். அதில் நான் தலையிடுவதில்லை.

த்ரிஷா, அஞ்சலி.. யாருக்கு முக்கியத்துவம்?
ரெண்டு பேருக்கும் ஈக்வல் கேரக்டர்தான். முக்கியத்துவம்னா அந்தந்த கேரக்டர் அந்தந்தக் காட்சியில் முக்கியத்துவமா தெரிவாங்க. த்ரிஷா சிட்டி கேர்ள், வில்லேஜூக்கு காஜ்ட்ராஸ்டா இருக்கிற கேரக்டர். அஞ்சலி வில்லேஜ் கேர்ள். ரொம்ப சாப்ட், அப்படி ஒரு அடக்கம்.

த்ரிஷா, அஞ்சலி – யாரோட அதிகமா கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகியிருக்கு?
அது எந்தெந்த இடத்துல எதுலாம் ஒர்க்அவுட் ஆகணுமோ அங்கெங்கெல்லாம் ஆகியிருக்கு.

முதலில் சாக்லெட் பாயா வந்தீங்க. அப்புறம் ஆக்ஷன் ஹீரோ. வருங்காலத்தில் ஜெயம்ரவியை எப்படிப் பார்க்கலாம்?
இந்த மாதிரிதான் பண்ணணும் என்கிற ஐடியாவே இல்லாமல் எல்லாம் கலந்துகட்டி பண்ணணும்ங்கறதுதான் என் பாணி. ஒரே மாதிரி கேரக்டரில் நடித்தால் எனக்கும் போர் அடிக்கும் ஆடியன்ஸுக்கும் போர் அடிக்கும். அதனால இப்ப நடிக்கிற மூணு படங்களும் ஒவ்வொரு டைப்பானது. சகலகலாவல்லவன் ஃபுல் காமெடி. தனி ஒருவன் சீரியஸ் என்டர்டெய்னர் படம். நாய்கள் ஜாக்கிரதை இயக்குநர் சக்திராஜன் இயக்கும் படம் ஹார்ரர் த்ரில்லர் படம்.

சகலகலாவல்லவன் கமல் பட டைட்டில். இதுவும் கமல் படம் மாதிரி இருக்குமா? கதை என்ன?
கொஞ்சம் கூட கமல் சகலகலாவல்லவன் மாதிரி இருக்காது. ஒரு கிராமத்தில் எதிரெதிரான எண்ணம் கொண்ட இரண்டு குடும்பங்களுக்குள் நடக்கும் சம்பவங்கள்தான் கதை. சூரி குடும்பம் காமெடியான, ஜாலியான குடும்பம். எங்க குடும்பத்தைச் சேர்ந்தவங்க, எதையும் சீரியஸா எடுத்துப்பாங்க. ஒரு ஊர் சம்பவங்களில் ஏற்படும் பிரச்னைகளில் கதை தொடங்குகிறது. அதுக்கிடையில் அஞ்சலிக்கும் எனக்கும் லவ் டிராக். இன்னொரு பக்கம் த்ரிஷா லவ் டிராக். பைனலா, கஷ்டப்பட்டு மெஸேஜ் சொல்லாமல் காமெடியா தியேட்டரில் இருக்கிற எண்ணமே இல்லாமல் ஆடியன்ஸ் ரசிக்கிற மாதிரி இருக்கும்.

உங்க கேரக்டர் என்ன?
பிரபு மகன் சக்தியா வர்றேன். ஊர்ல நடக்கிற எல்லா எலக்ஷன்கலயும் பிரபுதான் ஜெயிப்பார். அவரோட எல்லா புகழுக்கும் சொத்துக்கும் நான்தான் வாரிசு. அப்ப ஊரார் கண் என்மேல விழும். கிராமத்துப் பெண் அஞ்சலி, மார்டன் கேர்ள் த்ரிஷா ஆகியோருக்குள் என்னைக் காதலிக்கப் போட்டி. இதில் யாரை நான் தேர்ந்தெடுக்கிறேன் என்பதே திரைக்கதை. முழுசா சொல்ல முடியாது.

ஷூட்டிங் எங்கெங்க நடந்தது?
பொள்ளாச்சி, குற்றாலம் பகுதிகள்ல ரொம்ப அழகான வில்லேஜை காட்டியிருக்கிறோம். நாங்க ஷூட் பண்ணபோது சீசன் ரொம்ப பசுமையா இருந்தது. கேமராமேன் யு.கே. செந்தில்குமார் வளைச்சி வளைச்சி படம்பிடித்திருக்கிறார். படத்தின் காமெடியை விட இயக்குநர் கராஜும் சூரியும் ஷூட்டிங் ஸ்பாட்டில் அடித்த லூட்டி வயிறு வலி வந்து விட்டது. அதே மூடுல நடிச்சிருக்கோம். அப்ப படம் எப்படி இருக்கும்னு பார்த்துக்குங்க. ரொம்ப என்ஜாய் பண்ணுவீங்க.

காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கிறதுனால ஆக்ஷன், ரொமான்ஸ் இருக்காதா?
அதுவும் இருக்கு. தேவையான இடத்துல தேவையான அளவுக்கு ஆக்ஷன், ரொமான்ஸ் இருக்கு. கொஞ்சமே ஆனாலும் அதிரடி ஆக்ஷனா இருக்கும்.

தமிழ் சினிமாவில் இதுபேய் படங்களின் சீசன், பேய் படங்களில் நடிப்பீர்களா?
நான் எப்பவுமே பேய் படம், நாய் படம்னு பிரித்துப் பார்க்க மாட்டேன். கதையைத்தான் பார்ப்பேன். அதனால்தான் என்னால் வெரைட்டியான படங்களில் நடிக்க முடியுது. தில்லாலங்கடியும் பண்ண முடியுது. பேராண்மையும் பண்ண முடியுது. ஆதிசிவமும் பண்ண முடியுது.

ஐ படத்தில் விக்ரம் கெட்-அப்பை மாற்றி நடித்த மாதிரி நடிப்பீங்களா?
அதுக்குத்தான விக்ரம் இருக்காரே. அவரே நல்லா நடிக்கிறாரே. நான் வேற எதுக்கு? என் வழி எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் நடிப்பது. கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான்.

நிறைய படங்கள் வருகிறது. தியேட்டர் கிடைப்பதில்லை. மூன்று நாள் ஓடினாலே வெற்றிப்படம் என்கிற நிலை. இது பற்றி என்ன நினைக்கிறீங்க?
இது ஒட்டுமொத்த சினிமா இன்டஸ்ட்ரியும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டிய பிரச்னை. தனி ஒருவராகவோ, தனி ஒரு குழுவாகவோ முடிவெடுத்தா தப்பா போயிடும். படங்கள் முன்னே நூறு நாள் ஓடினாதான் வெற்றிப்படமா இருந்தது. இப்ப அப்படி இல்லை. நிறைய தியேட்டர்களில் ரிலீஸ் செய்றாங்க. ரெண்டு வாரம் ஓடினாலே அந்த கலெக்ஷன் வந்திடுது. அந்தளவுக்கு மக்கள் பார்த்திடுறாங்க. எல்லா கணக்கும் ஒண்ணுதான்.

நடிகர் சங்கப் பிரச்னையில் நீங்க எந்த பக்கம்?
நான் நியாயத்தின் பக்கம்.

இவ்வளவு தந்திரமா பதில் சொல்றீங்களே எதிர்காலத்துல அரசியலுக்கு வருவீர்களா?
நான் ஏற்கெனவே அரசியல்ல இருக்கேங்க. இந்திய பிரஜையா பிறந்தாலே அரசியல்வாதிதான். வோட்டுப்போடறேன்ல. ஒரு அரசியல் பார்வையில்லாமலா இருப்பேன்.

————————————
– பொன். மூர்த்தி
கல்கி :
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எனக்கு எந்த அடையாளமும் தேவையில்லை!--ஜெயம்ரவி Empty Re: எனக்கு எந்த அடையாளமும் தேவையில்லை!--ஜெயம்ரவி

Post by விஸ்வாஜீ Wed Aug 12, 2015 8:48 am

ayyasamy ram wrote:
இவ்வளவு தந்திரமா பதில் சொல்றீங்களே எதிர்காலத்துல அரசியலுக்கு வருவீர்களா?
நான் ஏற்கெனவே அரசியல்ல இருக்கேங்க. இந்திய பிரஜையா பிறந்தாலே அரசியல்வாதிதான். வோட்டுப்போடறேன்ல. ஒரு அரசியல் பார்வையில்லாமலா இருப்பேன்.

————————————
– பொன். மூர்த்தி
கல்கி :
மேற்கோள் செய்த பதிவு: 1157127
நல்ல பதில்
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum