புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_c10தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_m10தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_c10 
49 Posts - 60%
heezulia
தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_c10தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_m10தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_c10தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_m10தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_c10தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_m10தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_c10தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_m10தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_c10 
3 Posts - 4%
Guna.D
தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_c10தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_m10தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_c10தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_m10தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_c10தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_m10தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_c10தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_m10தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_c10தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_m10தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_c10 
44 Posts - 60%
heezulia
தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_c10தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_m10தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_c10தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_m10தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_c10தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_m10தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_c10தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_m10தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_c10தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_m10தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_c10தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_m10தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_c10தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_m10தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_c10தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_m10தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்!


   
   
kumaravel2011
kumaravel2011
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 24/07/2015

Postkumaravel2011 Thu Aug 06, 2015 8:03 pm

தமிழ்த் திரையுலகில் 1960 முதல் 1969 வரையான காலகட்டம் எப்படிப்பட்டது? ஐம்பதுகளில் தியாகராஜ பாகவதர், எல்லிஸ்.ஆர்.டங்கன், பி.யூ. சின்னப்பா, ரஞ்சன் முதலியவர்களின் அலை ஓயத்துவங்கி, எம்.ஜி.ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எம்.ஆர். ராதா போன்ற நடிகர்கள் பிரபலம் அடையத்துவங்கி, பானுமதி, சாவித்ரி, சரோஜா தேவி, பத்மினி, தேவிகா முதலிய கதாநாயகிகள் பிரபலமாகிக்கொண்டிருந்த காலம். ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா, காஞ்சனா, வாணிஸ்ரீ, ராஜஸ்ரீ முதலிய கதாநாயகிகள் அறிமுகமான காலகட்டம். புராணப் படங்கள், சரித்திரகாலக் கதைகள், மாயாஜாலக் கதைகள் போன்றவை பிரபலமாக விளங்கிய ஐம்பதுகளின் காலகட்டத்துக்குப் பின்னர் சமூகக் கதைகள் வெற்றிகரமாக ஓடத்துவங்கிய காலம். டணால் தங்கவேல், நாகேஷ், சந்திரபாபு முதலிய நகைச்சுவை நடிகர்கள் கொடிகட்டிப் பறந்த வருடங்கள் இவை. ஐம்பதுகளில் கர்னாடக சங்கீதத்தை இசையில் கலந்த ஜி.ராமநாதன் போன்ற இசையமைப்பாளர்களிடமிருந்து எம்.எஸ். விஸ்வநாதன்- ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன் போன்ற ஜனரஞ்சகமான இசையமைப்பாளர்கள் உருவாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்த காலம். பல தமிழ்ப்படங்கள் ஹிந்தியில் எடுக்கப்பட்ட காலகட்டமும் இதுதான். அண்ணாதுரை, கருணாநிதி போன்ற வசனகர்த்தாக்கள் ஐம்பதுகளிலேயே அறிமுகமாகியிருந்தாலும், அவர்கள் தங்கள் புகழால் அரசியலில் நுழைந்து வெற்றியடைந்தது இந்தக் காலகட்டத்தில்தான். கண்ணதாசன் புகழின் உச்சத்தில் இருந்தது அறுபதுகளில்தான். வாலி எம்.ஜி.ஆருக்கென்றே பிரத்யேகமாக எழுதிய பாடல்கள் பிரம்மாண்டமான வெற்றி அடைந்து எம்.ஜி.ஆரின் அரசியல் பிரவேசத்துக்கு உறுதுணையாக இருந்தது அறுபதுகளில்தான். ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்ட முதல் தமிழ்ப்படம் (தெய்வமகன்) அறுபதுகளில்தான் வெளிவந்தது. எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி ஆகியவர்களின் நூறாவது படங்கள் வெளியானதும் இதே காலகட்டத்தில்தான்.
இப்படியாக எல்லா வகைகளிலும் தமிழ் சினிமாவுக்கு மிக முக்கியமான காலகட்டமாக 1960 முதல் 1969 வரையான காலத்தைத் தயங்காமல் சொல்லமுடியும். இந்த வருடங்களில், நாம் மேலே பார்த்த அத்தனைக்கும் அடிப்படையாக விளங்கியவர்கள் அந்தப் படங்களையெல்லாம் இயக்கிய இயக்குநர்கள் என்ற வகையில், அவர்களில் முக்கியமானவர்களைப் பற்றிப் பார்ப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
ஐம்பதுகளின் இறுதியில் வெற்றிகரமான வசனகர்த்தாவாக விளங்கிய ஒருவர், இயக்குநராகத் தனது முதல் படமாகக் கல்யாணப் பரிசை இயக்கினார். அப்படம் பிரமாண்ட வெற்றியடைந்ததும், சொந்தமாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கி, அதில் வரிசையாகப் படமெடுக்க ஆரம்பித்தார். அவரது தயாரிப்பு நிறுவனமான சித்ராலயாவுக்காக அவர் இயக்கிய முதல் படமான தேன் நிலவு வெளியானது 1961ல். அந்த இயக்குநர் ஸ்ரீதர். சித்ராலயா மூலம் ஸ்ரீதர் எடுத்த பல வெற்றிப்படங்கள் அப்போதிலிருந்து துவங்கி எழுபதுகள் வரை வெளியாகின. ஸ்ரீதரின் ஒவ்வொரு படமும் அவர் இயக்கிய முந்தைய படத்திலிருந்து அவசியம் வித்தியாசப்பட்டிருக்கும். தேன் நிலவு, காஷ்மீரில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம். மட்டுமல்லாமல் முற்ரிலுமாக அவுட்டோரிலேயே எடுக்கப்பட்ட படமும் கூட. இதற்கு அடுத்த சித்ராலயா படம் முற்றிலும் ஒரு மருத்துவமனையின் செட்டுக்குள்ளேயே எடுக்கப்பட்டது. அதுதான் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ (1962). இதற்குப்பின் ஸ்ரீதர் இயக்கியது, தமிழின் முதல் மறுஜென்மக்கதை. அதுதான் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ (1963). பின்னர் ஒரு இசைக்கலைஞனை மையமாக வைத்து ஸ்ரீதர் இயக்கிய ‘கலைக்கோயில்’ (1964) வெளியானது. அதற்கு அடுத்த படம் தமிழில் முதல் வண்ண சமூகப்படம். அதுதான் ‘காதலிக்க நேரமில்லை’ (1964). பின்னர் தமிழில் ஒப்பனையே செய்யப்படாத படம் ஒன்றை எடுத்தார் (‘நெஞ்சிருக்கும் வரை’ – 1967). இதன்பின்ஐரோப்பாவில் எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப்படமாக ‘சிவந்தமண்’ (1969) வெளியாகியது.
https://www.youtube.com/embed/WB8mJy6KPS0?feature=oembed
இவற்றுக்கு இடையே ‘சுமைதாங்கி’, ‘போலீஸ்காரன் மகள்’, ‘வெண்ணிற ஆடை’, ‘கொடிமலர்’, ‘ஊட்டி வரை உறவு’ போன்ற தமிழ்ப்படங்களும், ‘நஸ்ரானா’ (கல்யாணப்பரிசின் ஹிந்தி வடிவம்), ‘தில் ஏக் மந்திர்’ (நெஞ்சில் ஓர் ஆலயம்), ‘ப்யார் கியே ஜா’ (காதலிக்க நேரமில்லை), ‘நை ரோஷ்ணி’, ‘சாத்தி’ (பாலும் பழமும்) ஆகிய ஹிந்திப் படங்களையும் இயக்கியிருக்கிறார் ஸ்ரீதர். தனது படங்களில் ஏராளமான நடிகர்களையும் டெக்னீஷியன்களையும் அறிமுகப்படுத்திய பெருமையும் ஸ்ரீதரையே சேரும். இப்படியாக, அறுபதுகளில் கொடிகட்டிப்பறந்த இயக்குநர்களில் தனக்கென்று ஒரே பாணி எதையும் வகுத்துக்கொள்ளாது, ஒவ்வொரு படத்தையும் வித்தியாசமாக எடுத்த ஸ்ரீதரே முதன்மையானவர்.
ஸ்ரீதர் தனது முத்திரையை வெற்றிகரமாகப் பதித்த காலகட்டத்தில் ஐம்பதுகளில் அறிமுகமாகி அறுபதுகளில் பிரபலமாக விளங்கிய சில இயக்குநர்களும் இருந்திருக்கின்றனர். அவர்களில் முக்கியமானவர்கள் கிருஷ்ணன்-பஞ்சு. 1944ல் தங்களது முதல் படத்தை இயக்கிவிட்ட இந்த ஜோடி, இதன்பின் ‘பைத்தியக்காரன்’ (1947), ‘ரத்னகுமார்’ (1949), ‘பராசக்தி’ (1952), ‘ரத்தக்கண்ணீர்’ (1954) போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கி, அறுபதுகளிலும் ‘தெய்வப்பிறவி’ (1960), ‘அன்னை’ (1962), ‘குங்குமம்’ (1963), ‘சர்வர் சுந்தரம்’ (1964), ‘குழந்தையும் தெய்வமும்’ (1965), ‘பெற்றால்தான் பிள்ளையா’ (1966), ‘உயர்ந்த மனிதன்’ (1968) ஆகிய படங்களை வெற்றிகரமாக இயக்கியது. இதன்பின்னரும் 1985 வரை படங்களை இயக்கிய கூட்டணி இது. தமிழ்த் திரைப்படங்கள் மெல்ல மெல்ல மாற்றத்துக்குள்ளான காலகட்டங்களில் பராசக்தி, ரத்தக்கண்ணீர் என்ற இரண்டு மிக முக்கியமான படங்களை எடுத்து அந்த மாற்றத்துக்குக் காரணமான முக்கியமானவர்கள் இவர்கள். நல்லதம்பி படத்தில்தான் அண்ணாதுரை வசனகர்த்தாவாக அறிமுகமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/KiYCD6Nldqg?feature=oembed
இவர்களைப்போலவே ஐம்பதுகளில் துவங்கி அறுபதுகளில் பிரபலமாக விளங்கிய இன்னொருவர் பிரகாஷ்ராவ். தெலுங்கு இயக்குநரான இவரைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர்கள் வீனஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தார். அதில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீதர். 1956ல் ஸ்ரீதரின் வசனத்தில் வெளியான அமரதீபம்தான் பிரகாஷ்ராவின் முதல் தமிழ்ப்படம். இதன்பின்னர் ஸ்ரீதருடன் ‘உத்தமபுத்திரன்’ படத்திலும் பணியாற்றினார். அறுபதுகளில் இவர் எடுத்த படங்களில் ‘காத்திருந்த கண்கள்’ (1962), ‘படகோட்டி’ (1964) ஆகியவை முக்கியமானவை. இக்காலகட்டத்தில் பெரும்பாலும் ஹிந்திப்படங்களையே எடுத்துக்கொண்டிருந்தார் பிரகாஷ்ராவ் என்பது முக்கியமானது.
https://www.youtube.com/embed/GfM3pr4d7cw?feature=oembed
அறுபதுகளின் காலகட்டத்தை நினைத்துப்பார்க்கையில் பீம்சிங்கை மறக்கமுடியாது. இவரது முதல் படம் 1954ல் வெளிவந்துவிட்டது (அம்மையப்பன்). ‘பதிபக்தி’ (1958) மற்றும் ‘பாகப்பிரிவினை’ (1959) மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். 1960ல் ‘படிக்காத மேதை’ வெளியாகிப் பெருவெற்றி அடைந்தது. அதே வருடத்தில் ‘களத்தூர் கண்ணம்மா’ இவரது மற்றொரு வெற்றிப் படம். இதுபோலவே 1961ல் ‘பாவமன்னிப்பு’, ‘பாசமலர்’ மற்றும் ‘பாலும் பழமும்’ ஆகிய மூன்று பெருவெற்றிப் படங்களை சிவாஜியை வைத்துக் கொடுத்தவர். ‘பா’ வரிசைப் படங்கள் இவரது சிறப்பம்சம். போலவே அடுத்த வருடமான 1962ல் பொங்கலுக்கு வெளியான ‘பார்த்தால் பசி தீரும்’, தமிழ்ப்புத்தாண்டுக்கு வெளியான ‘படித்தால் மட்டும் போதுமா’ ஆகிய வெற்றிப்படங்களும் இவருடையவையே. பின்னரும் ‘பார் மகளே பார்’ (1963), ‘பச்சை விளக்கு’ (1964), ‘பழனி’ (1965) ஆகிய பா வரிசைப் படங்களைக் கொடுத்தார் (இடையே ‘பதிபக்தி’, ‘பந்தபாசம்’, ‘பாலாடை’, ‘பாதுகாப்பு’ ஆகிய பா வரிசைப் படங்களும் உண்டு). பின்னர் ‘சாந்தி’ (1965) வெளியானது. இதன்பின்னர் பல ஹிந்திப் படங்களை இயக்கியிருக்கிறார். 1976ன் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ இவருடையதே. பின்னர் 1978ல் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ இயக்கினார்.
https://www.youtube.com/embed/z4CbKsqcpVI?feature=oembed
பீம்சிங்கைப் போலவே பி.ஆர்.பந்துலுவும் முக்கியமானவர். இவரும் ஐம்பதுகளிலேயே முதல் படத்தை இயக்கிவிட்டவர் (‘தங்கமலை ரகசியம்’ – 1957). 1959ல் இவரது ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம் சிவாஜிக்குப் பெரும்புகழைத் தேடிக்கொடுத்து, அசைக்க முடியாத நடிகராக சிவாஜியை மாற்றியது. அறுபதுகளில் ‘கப்பலோட்டிய தமிழன்’ (1961), ‘பலே பாண்டியா’ (1962), ‘கர்ணன்’ (1964), ‘ஆயிரத்தில் ஒருவன்’ (1965), ‘நாடோடி’ (1966), ‘ரகசிய போலீஸ் 115’ (1968) போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். அக்காலகட்டத்தின் பிரம்மாண்டமான படங்களை இயக்கியவர்.
https://www.youtube.com/embed/96WAGOzyBTs?feature=oembed
டி.யோகானந்தும் அறுபதுகளில் மிகவும் அனுபவம் வாய்ந்த இயக்குநராக இருந்தவர்தான். பழம்பெரும் இயக்குநர் எல்.வி பிரசாத்தின் உதவி இயக்குநராக நாற்பதுகளின் துவக்கத்தில் இருந்தவர். ஐம்பதுகளில் சரமாரியாகப் பல படங்களைத் தமிழிலும் தெலுங்கிலும் இயக்கியவர். எம்.ஜி.ஆரின் ‘மதுரை வீரன்’ (1956) இவருடையதே. 1960ல் ‘பார்த்திபன் கனவு 1962ல் ‘ராணி சம்யுக்தா’, 1963ன் ‘பரிசு’ போன்றவை அறுபதுகளில் இவர் இயக்கிய தமிழ்ப்படங்கள். 1984 வரை (‘சரித்திர நாயகன்’) தொடர்ந்து படமெடுத்துக்கொண்டிருந்திருக்கிறார் யோகானந்த்.
கே.சங்கரும் அறுபதுகளில் ஆதிக்கம் செலுத்திய இன்னொரு முக்கியமான இயக்குநர். இவரது முதல் படமும் ஐம்பதுகளிலேயே வந்துவிட்டது (‘நாக தேவதை’ – 1956). ‘பாதகாணிக்கை’ (1962), ‘ஆலயமணி’ (1962), ‘பணத்தோட்டம்’ (1963), ‘ஆண்டவன் கட்டளை’ (1964), ‘கலங்கரை விளக்கம்’ (1965), ‘சந்திரோதயம்’ (1966), ‘குடியிருந்த கோயில்’ (1968), ‘அடிமைப்பெண்’ (1969) என்று சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆரை வைத்துப் பல வெற்றிப்படங்கள் எடுத்தவர். எழுபதுகளிலும் எம்.ஜி.ஆரை வைத்துப் பல படங்களை இயக்கியிருக்கிறார். எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் பல பக்திப்படங்களை இயக்கியிருக்கிறார்.
அறுபதுகளில் பிரபலமாக விளங்கிய இன்னொரு இயக்குநர், பா. நீலகண்டன். ‘திருடாதே’ (1961), ‘நல்லவன் வாழ்வான்’ (1961), ‘கொடுத்து வைத்தவள்’ (1963), ‘பூம்புகார்’ (1964), ‘காவல்காரன்’ (1967), ‘கண்ணன் என் காதலன்’ (1968), ‘கணவன்’ (1968) என்று இவரும் பல வெற்றிப்படங்களை எடுத்தவரே. அறுபதுகளைப் போலவே எழுபதுகளில் பல எம்.ஜி.ஆர் படங்களை இயக்கினார். எம்.ஜி.ஆரின் கடைசிப்படமான ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’ திரைப்படத்துக்கு எம்.ஜி.ஆரோடு சேர்ந்து வசனங்கள் எழுதியிருக்கிறார்.
அறுபதுகளில் தமிழுக்கு முற்றிலும் வித்தியாசமான ஜேம்ஸ் பாண்ட் பாணிப் படங்கள் எடுத்த மாடர்ன் தியேட்டர்ஸ் ராமசுந்தரமும் குறிப்பிடத்தக்க இயக்குநரே. சமகால இயக்குநர்கள் அனைவருமே உணர்ச்சிபூர்வமான படங்களில் கவனம் செலுத்தியபோது, பூனையுடன் இருக்கும் மர்ம வில்லன் (இந்த வில்லன் யார் என்பது கடைசிக்காட்சியில்தான் காட்டப்படும்), கோட் சூட் தொப்பி அணிந்த ஸ்டைலான ஜேஂஸ்பாண்ட் பாணி ஹீரோ, காபரே நடனங்கள், இனிமையான பாடல்கள், சண்டைக்காட்சிகள் ஆகிய அனைத்தையும் சேர்த்துக்கொண்டு பல படங்களை இயக்கியிருக்கிறார். இவரது காலகட்டம்தான் தமிழில் ரகசிய ஏஜெண்ட் படங்களின் பொற்காலம் என்று அவசியம் சொல்லலாம். ஜெய்சங்கரை ‘தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்’ என்று மாற்றியது இவரே. ‘இரு வல்லவர்கள்’ (1966), ‘வல்லவன் ஒருவன்’ (1966), ‘காதலித்தால் போதுமா’ (1967), ‘நான்கு கில்லாடிகள்’ (1969) ஆகியவை அறுபதுகளில் ஜெய்சங்கரை வைத்து ராமசுந்தரம் இயக்கியவை. இதைத்தவிர, அப்போது வில்லன்களாக இருந்த அசோகன் மற்றும் ஆர்.எஸ் மனோஹரை வைத்து ‘வல்லவனுக்கு வல்லவன்’ (1965) என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார் ராமசுந்தரம். இதில் இந்த இருவரும் ஹீரோக்கள். வில்லனாக நடித்தவர் அக்காலத்திய சூப்பர் ஸ்டார்களில் ஒருவர். யார் என்பதைப் படத்தைப் பார்த்து நீங்களே தெரிந்துகொள்ளலாம். இவை தவிர, ரவிச்சந்திரன் மற்றும் ஆர்.எஸ். மனோஹரை வைத்து இவர் எடுத்த ‘எதிரிகள் ஜாக்கிரதை’, ராமசுந்தரத்தின் முக்கியமான படங்களில் ஒன்று (‘எனக்கொரு ஆசை இப்போது.. உனக்கதை சொல்வேன்.. மறைக்காமல் வர வேண்டும்’ பாடல் நினைவிருக்கிறதா?)
https://www.youtube.com/embed/oGP1gVm7-i0?feature=oembed
புராணப்படங்கள் அறுபதுகளில் மெல்ல வழக்கொழிந்துவந்தபோது, நாற்பதுகளின் காலகட்டத்தைப் போலவே தமிழில் புராணப்படங்களை வெற்றிகரமாக ஓடவைத்த ஏ.பி.நாகராஜன் இன்னொரு முக்கியமான இயக்குநர். ‘திருவிளையாடல்’ (1965), ‘சரஸ்வதி சபதம்’ (1966), ‘திருவருட்செல்வர்’ (1967), ‘கந்தன் கருணை’ (1967), ‘திருமால் பெருமை’ (1968) ஆகியவை இவர் அறுபதுகளில் எடுத்த புராணப்படங்கள். ஐம்பதுகளில் ‘டவுன்பஸ்’, ‘நான் பெற்ற செல்வம்’, ‘மக்களைப் பெற்ற மகராசி’, ‘சம்பூர்ண ராமாயணம்’ ஆகிய படங்களுக்கு வசனங்கள் எழுதியிருக்கிறார்., அறுபதுகளில் இவர் வரிசையாக எடுத்த புராணப் படங்களுக்கு முன்னர் ‘குலமகள் ராதை’, ‘நவராத்திரி’ அகிய படங்களையும் இயக்கியிருக்கிறார். இவரது புராணப்படங்களில் பெரும்பாலும் சிவாஜியே நடித்தார். இவையெல்லாவற்றையும் விட, இன்றுவரை பிரபலமாக இருப்பது 1968ல் இவர் இயக்கிய ‘தில்லானா மோகனாம்பாள்’ படமே. கொத்தமங்கலம் சுப்பு ஆனந்த விகடனில் எழுதிய இந்தத் தொடரை மிகத்திறமையாகப் படமாக்கியிருக்கும் பெருமை நாகராஜனையே சேரும்.
https://www.youtube.com/embed/_uAE2d0u3Ko?feature=oembed
ஸ்ரீதருடன் பணிபுரிந்து, பின்னர் தனியே திரைப்படங்கள் இயக்கத் துவங்கிய கே.எஸ் கோபாலகிருஷ்ணன் அறுபதுகளின் இன்னொரு முக்கியமான இயக்குநர். ஐம்பதுகளில் பாடல்கள் எழுதத்துவங்கி, பின்னர் வசனகர்த்தாவாக ஆகி, அதன்பின்னர் இயக்குநராக ஆனவர் கோபாலகிருஷ்ணன். இவரது ‘கற்பகம்’ (1963), ‘கைகொடுத்த தெய்வம்’ (1964), ‘சித்தி’ (1966), ‘பணமா பாசமா’ (1968) போன்ற படங்கள் இந்தக் காலகட்டத்தில்தான் வெளிவந்தன.
தேவர் பிலிம்ஸ் சார்பில் எம்.ஏ திருமுகம் இயக்கிய ஏராளமான படங்கள் வெளியானது அறுபதுகளில்தான். எம்.ஜி.ஆரை வைத்து ‘தாய் சொல்லைத் தட்டாதே (1961)’ படத்தில் துவங்கி ‘தேர்த்திருவிழா’ (1968) வரை அறுபதுகளில் பல படங்கள் எடுத்தார். எழுபதுகளிலும் படங்கள் இயக்கியவர் இவர். டி.ஆர் ராஜகுமாரியின் சகோதரரான டி.ஆர்.ராமண்ணா, அறுபதுகளின் இன்னொரு முக்கியமான இயக்குநர். இவரும் எம்.ஜி.ஆரை வைத்துப் பல படங்கள் இயக்கியவர். அறுபதுகளில் பல படகள் எடுத்த இன்னொரு இயக்குநர் ஏ.சி. திருலோகசந்தர். ‘தெய்வமகன்’ (1969) படத்தை இயக்கியவர் இவரே. ‘அன்பே வா’ உட்படப் பல படங்கள் எடுத்திருக்கிறார்.
இவர்களைத் தவிர, அவ்வப்போது படங்கள் எடுத்த தாதா மிராஸி (‘சிவகாமி -1960′, ‘ரத்தத்திலகம்’ – 1963, ‘புதிய பறவை’ -1964), ஜோஸஃப் தளியத் (‘விஜயபுரி வீரன்’ – 1960, ‘இரவும் பகலும்’ -1965 (ஜெய்சங்கரின் முதல் படம்), ‘காதல் படுத்தும் பாடு’ – 1966), வீணை பாலசந்தர் (‘பொம்மை’ – 1964), எம்.ஜி.ஆரை வைத்து ‘எங்க வீட்டுப் பிள்ளை’ திரைப்படத்தை 1965ல் இயக்கிய சாணக்யா, அறுபதுகளில் ‘நீர்க்குமிழி’, ‘எதிர் நீச்சல்’, ‘பாமா விஜயம்’ போன்ற படங்களை எடுத்த கே. பாலசந்தர், ‘டீச்சரம்மா’ (1968) படத்தை இயக்கிய பிரபல கன்னட இயக்குநர் புட்டண்ணா கங்கல் உள்ளிட்ட பல இயக்குநர்களைப் பற்றி இன்னும் ஏராளமான விஷயங்களை நினைவுகூரமுடியும்.
1960 முதல் 1969 வரையிலான இந்தக் காலகட்டத்தின் மிக முக்கியமான விஷயமாக இசையும் பாடல்களுமே இருந்தன. நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும் மிகப் பிரபலமாக இருந்த ‘இசைச்சக்கரவர்த்தி’ ஜி.ராமநாதனுக்குப் பின் ஏ.எம்.ராஜா, விஸ்வநாதன்- ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், வேதா, சங்கர்-கணேஷ் ஆகியவர்கள் தமிழ்த் திரையுலகில் முத்திரை பதித்த வருடங்கள் இவை. குறிப்பாகக் கே.வி மகாதேவன் மற்றும் விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் பாடல்களுக்குத் தமிழகமே அடிமையாக இருந்த காலம் இது. இவர்களுடன் கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், வாலி, ஆலங்குடி சோமு, கொத்தமங்கலம் சுப்பு, மருதகாசி, கா.மு.ஷெரீஃப் போன்றவர்கள் அணிசேர்ந்து, மறக்கமுடியாத பல பாடங்களை அளித்தனர். அந்தந்த நடிகர்களுக்கு இன்றுவரையிலும் அழியாப்புகழை அளித்துக்கொண்டிருக்கும் இந்தப் பாடல்களுக்காகவே இந்தக் காலகட்டத்தை மறக்காமல் இருக்கலாம். சிவாஜியின் நடிப்பு, எம்.ஜி.ஆரின் துடிப்பான படங்கள், ஜெமினி கணேசனின் காதல் படங்கள், எஸ்.எஸ்.ஆர், ஏ.வி.எம் ராஜன் முதலியவர்களின் அமைதியான நடிப்பு, மாடர்ன் தியேட்டர்ஸின் ஆக்‌ஷன் படங்கள், விஜயலலிதா நடித்த லேடி ஜேம்ஸ்பாண்ட் படங்கள், எம்.என்.நம்பியார், பி.எஸ்.வீரப்பா, எஸ்.ஏ.அசோகன், ஆர்.எஸ்.மனோகர், ‘கவர்ச்சி வில்லன்’ கண்ணன், மேஜர் சுந்தர்ராஜன், வி.கோபாலகிருஷ்ணன், அறுபதுகளின் கதாநாயகர்களின் நண்பனாகப் பல படங்களில் நடித்த பாலாஜி, தேங்காய் சீனிவாசன் முதலிய நடிகர்களின் நடிப்பு போன்ற பல்வேறு அம்சங்கள் கலந்து, அறுபதுகளைத் தமிழ்த் திரையுலகின் மறக்கமுடியாத காலகட்டமாக ஆக்கியிருப்பதைத் திரைரசிகர்கள் அனைவரும் கட்டாயம் ஒத்துக்கொள்வர்.
https://www.youtube.com/embed/cy58kizXUSY?feature=oembed
by Rajesh,
தமிழ் ஹிந்து சித்திரை மலரில் வெளியான கட்டுரை இது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக