புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_m10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10 
91 Posts - 63%
heezulia
சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_m10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_m10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_m10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_m10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10 
1 Post - 1%
viyasan
சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_m10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10 
1 Post - 1%
eraeravi
சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_m10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_m10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10 
283 Posts - 45%
heezulia
சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_m10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_m10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_m10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_m10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10 
19 Posts - 3%
prajai
சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_m10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_m10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_m10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_m10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_m10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல் பொறுக்காதவரா நீங்கள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 26, 2015 6:21 am

மனசே சரியில்ல... என் மகன் கண்டபடி பேசிட்டான்;
முதலாளி ரொம்ப திட்டிட்டார்; மேலதிகாரி, பலர்
எதிரில் வாங்கு வாங்குன்னு வாங்கிட்டார்;

என் நண்பன் இப்படி பேசுவான்னு நினைக்கவே இல்ல...' -
இப்படி, 'மனசு சரியில்ல' என்பதற்கு விதவிதமாக
விளக்கம் தருவர்.

கல்லடி கூடப் பரவாயில்ல; சொல்லடிகளை தாங்க
முடியாது என்பது உண்மையே!

இத்தகைய சொல்லடிகளை அணுக, மூன்று வழிகள்
உள்ளன.

முதலாவது: 'அவர்கள் சொல்லத் தான் செய்வர்...' என,
சொல் தாக்குதல்களை தாங்கும்படியான மனப்
பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பிள்ளைகள், சிறு குழந்தைகளாக இருந்த போது,
நம் மடியில், சிறுநீர், மலம் கழித்து நம்மை சிறிதளவு
சோதித்தனர். இன்று, அவர்கள் வளர்ந்து விட்டதால்,
இடுப்பிற்கு கீழே கழியாமல், வாய் வழியே
கழிகின்றனர்.

பெற்ற கடமைக்கு, நம் பிள்ளைகள் தானே என்று பாச
உணர்வோடு பொறுத்தும், சகித்தும் போக வேண்டியது
தான், வேறு வழி!

பதிலுக்கு நாமும் குரலை உயர்த்தினால், அவர்கள்
இன்னும் ஒருபடி மேலே போவரே தவிர, அடங்க
மாட்டார்கள். காரணம், இன்றைய ஒலி மற்றும் காட்சி
ஊடகங்கள் இவர்களுக்கு சொல்லி தருவதே, 'அடங்கிப்
போகாதே... உன் உரிமையை நிலைநாட்டு; உன் கருத்தை
வலியுறுத்து; கிழங்கள் கத்தினால் கத்திவிட்டு போகட்டும்...'
என்று அடங்காப் போக்கை நியாயப்படுத்துகின்றன.

அத்துடன், 'மேலைநாட்டு பிள்ளைகள் எப்படி தெரியுமா...'
என்று, நம் பண்பாட்டிற்கு சரிப்பட்டு வராத விஷயங்களை,
நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி, நியாயப்படுத்தவும்
பார்க்கின்றன.

தங்களுக்காக மட்டுமே வாழ்கிற மேலைநாட்டு சுயநல
பெற்றோர் எங்கே, தமக்கென வாழாமல்
பிள்ளைகளுக்காகவே தியாக வாழ்க்கை வாழ்கிற
நம்மவர்கள் எங்கே!

கை நீட்டி காசு வாங்குகிறோம்; சொல் மட்டும் கூடாது
என்றால் எப்படி! ஒரு உணவகத்தில் சிறு தொகை தந்து,
இரு இட்லிகளை சாப்பிடுவோர் கூட உணவிலே குறை
கண்டால், 'கூப்பிடுய்யா மானேஜரை... என்னய்யா ஓட்டல்
நடத்துறீங்க...' என்று ஆர்ப்பாட்டம் செய்யும் போது,
மாதா மாதம் படியளக்கிறவர் வாய் திறக்கக் கூடாது
என்றால் எப்படி?

இரண்டாவது: 'அவர்கள் தரம் அப்படி, என்ன செய்வது...'
என்ற பெருந்தன்மை.
நாய் என்றால் குரைக்கத்தான் செய்யும்; குயிலோ, அழகுறக்
கூவும். எனவே, நம்மை பார்த்து கத்துபவர்கள் தங்களது
அடையாளங்களை வெளிப்படுத்தி, தரங்களை
காண்பிக்கின்றனரே தவிர, இதற்காக வருந்தத்
தேவையில்லை. 'நாய் எப்படி குரைக்கப் போயிற்று' என்றா
கேள்வி கேட்பது?

மூன்றாவது: 'சொல்லும்படி நாம் இடம் தந்திருக்கக் கூடாது...'
என்ற சுயகட்டுபாடு.
ஒரு கையால் ஓசையை உருவாக்க முடியாது; இரண்டாவது
கையும் சேரும் போது தான், அது ஓசையாகிறது.

வாழ்வில் நம்மை சுற்றியுள்ளோர் நம்மீது எழுப்பும் புகார்
ஓசையும் இத்தகையது தான். 'நாம் செய்வதெல்லாம் சரி,
நாம் பேசுவதெல்லாம் நியாயம்...' என்று நம்மை நாமே
வேண்டுமானால், பாராட்டிக் கொள்ளலாம். ஆனால்,
எதிராளிகளின் பார்வையில், இவை மிகவும்
குறைபாடுகளையே கொண்டிருக்கின்றன.

'என்னை எவரும் ஒன்றும் சொல்லக் கூடாது...' என்று,
எதிர்பார்ப்போர், எதுவும் சொல்லும்படி வைத்துக்
கொள்ளலாமா... விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட
தேவதைகளா நாம்!

'தனக்கு தோன்றியதை செய்வோரும்,, தாம் நினைத்தது
நடக்க வேண்டும்...' என்று எண்ணுவோரும், பிறரிடம்,
எதிர்பார்ப்பது எந்த வகையில் சரி?

கண்ணாடியில் நம் பிம்பம் அப்படியே தெரியும் என்பர்.
ஆனால், இடப்பக்க வகிடு வலப்பக்கமாக தெரிகிறது
என்பதே உண்மை. இதேபோல், எதிராளியின் பார்வையில்
நம் செயல்களோ வேறு!

காயங்களை ஆற்றும் நியாயங்களை, உங்கள்
முன்னெடுத்து வைத்து விட்டேன். ஆறுங்கள்; மனம் தேறுங்கள்!
-
------------------------------------------------------

- லேனா தமிழ்வாணன்
நன்றி- தினமலர்

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sun Jul 26, 2015 6:26 am

//கண்ணாடியில் நம் பிம்பம் அப்படியே தெரியும் என்பர்.
ஆனால், இடப்பக்க வகிடு வலப்பக்கமாக தெரிகிறது
என்பதே உண்மை. இதேபோல், எதிராளியின் பார்வையில்
நம் செயல்களோ வேறு!//

ரொம்ப உண்மை அய்யா .... அருமையான கட்டுரை ... இதில் சொன்னபடி செய்தால் 50% மனக்குழப்பங்கள் இருக்காது .நல்ல பதிவு அய்யா . நன்றி .
shobana sahas
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் shobana sahas

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 28, 2015 11:29 am

'மனசே சரியில்ல... என் மகன் கண்டபடி பேசிட்டான்; முதலாளி ரொம்ப திட்டிட்டார்; மேலதிகாரி, பலர் எதிரில் வாங்கு வாங்குன்னு வாங்கிட்டார்; என் நண்பன் இப்படி பேசுவான்னு நினைக்கவே இல்ல...' - இப்படி, 'மனசு சரியில்ல' என்பதற்கு விதவிதமாக விளக்கம் தருவர்.

கல்லடி கூடப் பரவாயில்ல; சொல்லடிகளை தாங்க முடியாது என்பது உண்மையே!

இத்தகைய சொல்லடிகளை அணுக, மூன்று வழிகள் உள்ளன.

முதலாவது: 'அவர்கள் சொல்லத் தான் செய்வர்...' என, சொல் தாக்குதல்களை தாங்கும்படியான மனப் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பிள்ளைகள், சிறு குழந்தைகளாக இருந்த போது, நம் மடியில், சிறுநீர், மலம் கழித்து நம்மை சிறிதளவு சோதித்தனர். இன்று, அவர்கள் வளர்ந்து விட்டதால், இடுப்பிற்கு கீழே கழியாமல், வாய் வழியே கழிகின்றனர்.

பெற்ற கடமைக்கு, நம் பிள்ளைகள் தானே என்று பாச உணர்வோடு பொறுத்தும், சகித்தும் போக வேண்டியது தான், வேறு வழி!

பதிலுக்கு நாமும் குரலை உயர்த்தினால், அவர்கள் இன்னும் ஒருபடி மேலே போவரே தவிர, அடங்க மாட்டார்கள். காரணம், இன்றைய ஒலி மற்றும் காட்சி ஊடகங்கள் இவர்களுக்கு சொல்லி தருவதே, 'அடங்கிப் போகாதே... உன் உரிமையை நிலைநாட்டு; உன் கருத்தை வலியுறுத்து; கிழங்கள் கத்தினால் கத்திவிட்டு போகட்டும்...' என்று அடங்காப் போக்கை நியாயப்படுத்துகின்றன.

அத்துடன், 'மேலைநாட்டு பிள்ளைகள் எப்படி தெரியுமா...' என்று, நம் பண்பாட்டிற்கு சரிப்பட்டு வராத விஷயங்களை, நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி, நியாயப்படுத்தவும் பார்க்கின்றன.
தங்களுக்காக மட்டுமே வாழ்கிற மேலைநாட்டு சுயநல பெற்றோர் எங்கே, தமக்கென வாழாமல் பிள்ளைகளுக்காகவே தியாக வாழ்க்கை வாழ்கிற நம்மவர்கள் எங்கே!

கை நீட்டி காசு வாங்குகிறோம்; சொல் மட்டும் கூடாது என்றால் எப்படி! ஒரு உணவகத்தில் சிறு தொகை தந்து, இரு இட்லிகளை சாப்பிடுவோர் கூட உணவிலே குறை கண்டால், 'கூப்பிடுய்யா மானேஜரை... என்னய்யா ஓட்டல் நடத்துறீங்க...' என்று ஆர்ப்பாட்டம் செய்யும் போது, மாதா மாதம் படியளக்கிறவர் வாய் திறக்கக் கூடாது என்றால் எப்படி?

இரண்டாவது: 'அவர்கள் தரம் அப்படி, என்ன செய்வது...' என்ற பெருந்தன்மை.

நாய் என்றால் குரைக்கத்தான் செய்யும்; குயிலோ, அழகுறக் கூவும். எனவே, நம்மை பார்த்து கத்துபவர்கள் தங்களது அடையாளங்களை வெளிப்படுத்தி, தரங்களை காண்பிக்கின்றனரே தவிர, இதற்காக வருந்தத் தேவையில்லை. 'நாய் எப்படி குரைக்கப் போயிற்று' என்றா கேள்வி கேட்பது?

மூன்றாவது: 'சொல்லும்படி நாம் இடம் தந்திருக்கக் கூடாது...' என்ற சுயகட்டுபாடு.
ஒரு கையால் ஓசையை உருவாக்க முடியாது; இரண்டாவது கையும் சேரும் போது தான், அது ஓசையாகிறது.

வாழ்வில் நம்மை சுற்றியுள்ளோர் நம்மீது எழுப்பும் புகார் ஓசையும் இத்தகையது தான். 'நாம் செய்வதெல்லாம் சரி, நாம் பேசுவதெல்லாம் நியாயம்...' என்று நம்மை நாமே வேண்டுமானால், பாராட்டிக் கொள்ளலாம். ஆனால், எதிராளிகளின் பார்வையில், இவை மிகவும் குறைபாடுகளையே கொண்டிருக்கின்றன.

'என்னை எவரும் ஒன்றும் சொல்லக் கூடாது...' என்று, எதிர்பார்ப்போர், எதுவும் சொல்லும்படி வைத்துக் கொள்ளலாமா... விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட தேவதைகளா நாம்!
'தனக்கு தோன்றியதை செய்வோரும்,, தாம் நினைத்தது நடக்க வேண்டும்...' என்று எண்ணுவோரும், பிறரிடம், எதிர்பார்ப்பது எந்த வகையில் சரி?

கண்ணாடியில் நம் பிம்பம் அப்படியே தெரியும் என்பர். ஆனால், இடப்பக்க வகிடு வலப்பக்கமாக தெரிகிறது என்பதே உண்மை. இதேபோல், எதிராளியின் பார்வையில் நம் செயல்களோ வேறு!
காயங்களை ஆற்றும் நியாயங்களை, உங்கள் முன்னெடுத்து வைத்து விட்டேன். ஆறுங்கள்; மனம் தேறுங்கள்!

- லேனா தமிழ்வாணன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 28, 2015 3:33 pm

ஏற்கனவே உள்ள பதிவுடன் இணைக்கலாம்...
--
http://www.eegarai.net/t122733-topic

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 28, 2015 9:43 pm

ayyasamy ram wrote:ஏற்கனவே உள்ள பதிவுடன் இணைக்கலாம்...
--
http://www.eegarai.net/t122733-topic
மேற்கோள் செய்த பதிவு: 1153799

இதோ இணைத்து விடுகிறேன் ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக