புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாகுபலி: இதுதான் இந்தியாவின் பிரம்மாண்டமா?
Page 1 of 1 •
- kumaravel2011புதியவர்
- பதிவுகள் : 19
இணைந்தது : 24/07/2015
‘இந்தியாவின் மிக அதிக பட்ஜெட்டில் உருவான படம்’, ‘ஹாலிவுட்டுக்கு சவால் விடும் ஸிஜி’, ‘கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கும் மேலான உழைப்பில் எடுக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான படம்’ என்றெல்லாம் பல விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு, ஊரெல்லாம் ‘பாஹுபலி பாஹுபலி’ என்ற ஹைப் உருவாக்கப்பட்டு வெளிவந்திருக்கும் படம். ‘ஹாலிவுட் ஃபாண்டஸிகளுக்கான இந்தியாவின் பதில்’ என்ற டாக்லைன் இப்படத்துக்குப் பொருந்துகிறதா? ‘ஒரு திரைப்படம்’ என்ற அளவில் பாஹுபலி (தெலுங்கில் பாஹுபலி. தமிழில் பாகுபலி. பாஹுபலி என்பதே சரியான வார்த்தை. பரந்த தோள்களை உடையவன் என்பது அதன் பொருள்) எப்படி?
முதலில் நான் சொல்லவிரும்பும் ஒரு விஷயம் – இப்படம் நமக்குப் பிடித்திருக்கிறது/பிடிக்கவில்லை என்பதைத்தாண்டிப் பல விஷயங்கள் உள்ளன. ஒரு படம் இப்படி நாடு முழுதும் வெறித்தனமாக மார்க்கெட்டிங் செய்யப்படும்போது, கிட்டத்தட்ட எல்லாத் திரைப்பட ரசிகர்களின் பின்னங்கழுத்தையும் பிடித்துத்தள்ளி, இப்படத்தைப் பார்க்கச் செய்யும் அளவு விளம்பரங்கள் ஒவ்வொரு மணி நேரமும் வந்துகொண்டே இருக்கும்போது, ஒரு திரைப்பட ரசிகனாக நமது வேலை, அவற்றுக்கெல்லாம் மயங்கி, கண்மூடித்தனமாக இதுபோன்ற படங்களைப் பார்ப்பது அல்ல. ஒரு திரைப்படம் என்ற வகையில், கதை, திரைக்கதை, இயக்கம், நடிப்பு, இசை உட்பட்ட எல்லா அம்சங்களிலும் இப்படம் நம்மைத் திருப்தி செய்கிறதா என்பதைப் பிற படங்களைப் பார்த்து முடிவுசெய்வதுபோலவே இப்படத்தையும் பார்ப்பதுதான் நம் வேலையாக இருக்கவேண்டும். அப்படித்தான் எல்லாப் படங்களையும் பார்க்கவேண்டும் என்பது என் கருத்து. நான் அப்படித்தான் பார்க்கிறேன். எந்த ஹைப்பும் என்னை பாதிக்க முடியாது. எனக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அதன் காரணங்களை முழுதாக எழுதுவதே என் இயல்பு.
பாஹுபலியின் முதல் காட்சியே, இப்படம் எப்படி இருக்கப்போகிறது என்பதைத் தெரியப்படுத்திவிட்டது. ரசனையில் நமக்கும் ஆந்திராவுக்கும் சிறுசிறு வித்தியாசங்கள் உள்ளன அல்லவா? ஹீரோவைக் கடவுள் ரேஞ்சில் வைத்து வழிபடுவது போன்ற சில ஒற்றுமைகள் இருந்தாலும், தரைரேட் விட்டலாச்சார்யா படம் ஒன்றை நம்மால் இன்றைய காலகட்டத்தில் முழுதுமாக ரசித்தல் இயலாத காரியம். காரணம், தமிழ்ப்படங்கள் இதுபோன்ற மொக்கைகளில் இருந்து விடுபட்டு, தரமான படங்களை ஏற்கெனவே கொடுத்துக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், ஒரு விட்டலாச்சார்யா படத்தின் தரத்தில் ஒரு படத்தை எடுத்து, ‘இதுதான் இந்தியாவின் பிரம்மாண்டம்’ என்று அனைவரின் மீதும் திணித்தால் அதை எப்படி ஒப்புக்கொள்ளமுடியும்? தண்ணீருக்குள்ளேயே தன்னிஷ்டத்துக்கு நடக்கிறாள் ஒரு அம்மணி. அவள் உயர்த்தப்பட்ட கையில் ஒரு குழந்தை. பின்னணியில் இருக்கும் மிகப்பெரிய அருவியோ, ஸிஜி என்று அப்பட்டமாகத் தெரிகிறது. இப்படியாக, துளிக்கூட ஒன்ற முடியாத ஒரு காட்சியோடுதான் பாஹுபலி துவங்குகிறது. இந்தக் காட்சியைப் பார்த்தாலே, படத்தில் பின்னால் என்னவெல்லாம் வரப்போகிறது, படத்தின் மேக்கிங் எப்படி இருக்கப்போகிறது என்பதெல்லாம் தெளிவாகவே புரிந்துவிடும்.
இந்தக் குழந்தை யார்? அது எப்படி வளர்க்கப்படுகிறது? இதெல்லாம் படம் துவங்குமுன்னரே நமக்குத் தெரிந்த சங்கதிகளே. எனவே, இந்தக் காட்சிகளை அட்லீஸ்ட் கொஞ்சமாவது சுவாரஸ்யமாகவோ வித்தியாசமாகவோ எழுதியிருப்பார்கள் என்று நினைத்தால், பட்ட காலிலேயே மறுபடி மறுபடி மடேல் மடேலென்று அடிக்கிறார் ராஜமௌலி.
படத்தின் கதை நடக்கும் நிலப்பரப்பு எத்தகையது? அந்த நிலப்பரப்பை எப்படிக் கற்பனை செய்துகொள்வது? மிகப்பெரிய அருவி. மேலே ஒரு நாடு. கீழே சில காட்டு மக்கள். அங்கே லோக்கல் ஹல்க்காக வளர்கிறார் ஹீரோ. இதுதான் நிலப்பரப்பின் பின்னணி. அந்த நிலத்தில் திடீரென்று பனி பெய்கிறது. இந்தப் பனிக்கு சம்மந்தமே இல்லாமல் வசந்தம். இறுதிக்காட்சியின் போர்க்களம் நிகழும் இடமே அதுவரை வரவில்லை. இப்படி, தானும் குழம்பி, நம்மையும் குழப்பியுள்ளனர். கொஞ்சம் தள்ளி, ஹீரோயின் ஒரு பெரிய ரகசிய கும்பலுடன் புரட்சிக்காரியாக இருக்கிறார். அதுகூட எப்படி ஹீரோவுக்குத் தெரிகிறது என்றால், திடீரென ஒரு முகமூடி அவருக்குக் கிடைப்பதால்தான். அந்த முகமூடியின் பின்னணியைத் தேடிச் செல்லும் ஹீரோவுக்கு, அந்த முகமூடி இந்தப் புரட்சிக்கார கும்பலுடையது என்று தெரிகிறது.
அந்த மிகப்பெரிய அருவியின் உச்சியில் என்ன இருக்கிறது என்று பார்க்க முடிவுசெய்கிறார் ஹீரோ. Dark Knight Rises படத்தில் இந்தியாவில் ஒரு பாதாள சிறைக்குள் சிக்கிக்கொண்ட ப்ரூஸ் வேய்ன், கீழிருந்து மேலே வரப் போராடுவார் இல்லையா? அதுதான் இந்தப் படத்திலும் அப்படியே கட் காப்பி பேஸ்ட் செய்யப்பட்டிருக்கிறது. அதிலாவது கிணறு. இதிலோ பிரம்மாண்ட அருவி. ஆனால் அதில் ப்ரூஸ் வேய்ன் கஷ்டப்பட்டதைக் கூட இதில் பிரபாஸ் செய்வதில்லை. அவர் பாட்டுக்கு சிம்பன்ஸி போல தாவித்தாவி அருவியைத் தாண்டிவிடுகிறார். அப்பட்டமான, கொடூரமான தெலுங்குப்படத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் மனதில் உறுதிப்பட்டது இந்தக் காட்சியில்தான்.
புரட்சிக்காரியை சந்திக்கிறார் ஹீரோ. அவளுக்கு ஒரு நோக்கம் உள்ளது. உடனேயே இருவருக்கும் காதல். டகாலென்று காட்சிகள் மாறி, Game of Thrones சீரீஸில் மூன்றாவது சீஸனில் ஜான் ஸ்னோ யிக்ரிட்டை சுவற்றுக்கு வெளியே சென்று சந்திப்பான் இல்லையா? அந்தக் காட்சிகள் ஓடுகின்றன. தமன்னாவின் உடைகள் வேறு அப்படியே யிக்ரிட்டை நினைவுபடுத்தவும் செய்கின்றன. இந்த ஜான் ஸ்னோ-யிக்ரிட் சந்திப்பு முடிந்ததும், ஹீரோ அருவியின் மேல் இருக்கும் நாட்டுக்கு மாறுவேடத்தில் செல்கிறார். அங்கு செல்லும் ஹீரோ சும்மா இருக்காமல், அமெரிக்க சுதந்திரதேவியின் சிலை சைஸில் இருக்கும் ஒரு சிலையை சும்மா ஜாலியாகத் தூக்கி, ஹல்க்கின் மார்க்கெட்டைக் காலி செய்கிறார். உடனடியாக மக்கள் அனைவரும் ஆர்கஸம் அடைந்து ஓலமிட, கொடுங்கோல் மன்னன் ஹீரோவைப் பார்த்துக் கடுப்பாகிறான். அவனிடம் இருக்கும் ஒரு அம்மணியைக் காப்பாற்றுகிறார் ஹீரோ. அவனைத் தடுக்க வருகிறார் கட்டப்பா (சத்யராஜ்). ஆனால் ஹீரோவின் முகத்தைப் பார்த்ததும், படுபயங்கர செண்ட்டிமெண்ட் இசை முழங்க, அவனது காலைத் தூக்கித் தனது (மொட்டை)த்தலையில் வைத்துக்கொள்கிறார். அந்த சீனில் உள்ள அனைவரும் மறுபடி ஆர்கசத்தில் ஓலமிடுகின்றனர். விட்டலாச்சார்யா காலத்துப் பின்னணி இசை நம் காதைப் பதம் பார்க்கிறது.
இந்த இடத்தில் அமரேந்திர பாஹுபலி யார் என்று கிட்டப்பா..ச்சே.. கட்டப்பா விளக்குகிறார். ப்ளாஷ்பேக் துவக்கம். அதுவும் புதிதான ப்ளாஷ்பேக் இல்லை. அதே மஹாபாரதக்கதைதான். பாண்டுவுக்கும் திருதிராஷ்ட்ரனுக்கும் இடையே நிலவிய பிரச்னை. பாண்டுவுக்கு ஒரே மகன். அமரேந்திர பாஹுபலி. திருதிராஷ்ட்ரனுக்கு ஒரு மகன். பல்லாள (பல்வாள்) தேவன். தாயாக ரம்யா கிருஷ்ணன்.
இந்த ப்ளாஷ்பேக்கை அப்படியே முடித்துவிட்டால் படமே முடிந்துவிடுமே? எனவே வேண்டுமென்றே வலிந்து திணிக்கப்பட்ட ஒரு போர்க்காட்சி. இந்தப் போர்க்காட்சிக்கு ஒரு காரணமே இல்லை. உதாரணமாக, த டூ டவர்ஸ் படத்திலோ அல்லது ரிடர்ன் ஆஃப் த கிங் படத்திலோ இறுதியில் வரும் போர்க்களக் காட்சிகளுக்குப் படங்களின் துவக்கத்தில் இருந்தே அருமையான பில்டப்கள் இருக்கும். ஆடியன்ஸை சிறுகச்சிறுக அப்போர்க்களங்களுக்குத் தயார்படுத்தும் முயற்சி இது. இதனால் அப்போர்கள் செயற்கையாக இரல்லாமல் மிகவும் இயல்பாகக் கதையோடு பொருந்தும். ஆனால் இது அக்மார்க் தெலுங்குப் படமாயிற்றே? அதிலெல்லாம் எங்க்கே லாஜிக் இருக்கும்? திடீரென இந்தப் போர்க்காட்சிக்கு ஓரிரு வசனங்களின் மூலமே காரணம் சொல்லப்பட்டுப் போரும் துவங்கிவிடுகிறது. இந்தப் போர்க்களத்தில் வரும் எதிரிகளோ கதையில் இல்லவே இல்லாத ஆட்கள். இந்தப் போர்க்களத்துக்காகவே உருவாக்கப்பட்ட செயற்கையான கும்பல்.
இதுதான் பாஹுபலி in a nutshell.
இதுவரை நான் எழுதியதைப் படித்தாலே பாஹுபலியின் பிரச்னைகள் என்னென்ன என்பது தெரிந்துவிடும். ஒரு துளிக்கூட ‘கதை’ என்னும் வஸ்துவே இல்லாத படம் இது. கதை இல்லாததால், இஷ்டத்துக்கு அலைபாய்கின்றன இதன் காட்சிகள். ஆடியன்ஸை நம்பவைக்கவேண்டும் என்ற முனைப்பு சிறிதும் இல்லாமல், கண்டபடி கொடூரமான கற்பனை வறட்சியில் எழுதப்பட்ட காட்சிகள் படம் முழுக்க இருக்கின்றன. ‘பிரம்மாண்டம்’ என்பது மட்டுமே இப்படத்தைக் காப்பாற்றிவிடும் என்பதுதான் ராஜமௌலியின் எண்ணம் என்பது நன்றாகவே தெரிகிறது. ஆனால் சம்மந்தா சம்மந்தமில்லாத, மிகவும் ஆவரேஜான காட்சிகள் படம் முழுக்கவே இருந்தால் எப்படி? இரண்டாம் பாதியில் வரும் போர்க்காட்சிகளில் சற்றே பரவாயில்லாத ஸிஜி காட்சிகள் இருக்கின்றனதான். அதில் சந்தேகமில்லை. ஆனால் அவை இப்படம் விளம்பரப்படுத்தப்படுவதுபோல் ‘மிகச்சிறந்த’, ‘Ground breaking’ என்ற வார்த்தைகளுக்கெல்லாம் சற்றுக்கூட தகுதி இல்லாதவை. ‘தெலுங்குப்படங்களின் தரத்துக்கு இவை பரவாயில்லை’ என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் தமிழ்ப்படங்களின் செய்நேர்த்திக்கு அருகேகூட பாஹுபலி வர முடியாது என்பதே உண்மை.
பாஹுபலியின் அதே genreல் எடுக்கப்பட்ட பல ஹாலிவுட் படங்களைக் கவனித்தாலே போதும் – ஒரு கதாபாத்திரம் எப்படி உருவாக்கப்படவேண்டும்? அது இடம்பெறும் காட்சிகள் எவ்வளவு தரமாக இருக்கவேண்டும்? ஒட்டுமொத்தமான திரைக்கதை மூலம் ஆடியன்ஸின் மனதுக்கு நெருக்கமாக எப்படி சொல்ல வரும் கதையை மாற்றுவது? என்பதெல்லாம் எளிதில் விளங்கிவிடும். அறுபதுகளில் வெளிவந்த நம்மூர் ‘கர்ணன்’ படம் இன்றும் அட்டகாசமாக இருக்கும். காரணம் ஸ்பெஷல் எஃபக்ட்கள் அல்ல. கதையும் திரைக்கதையும்தான். ஆனால் பாஹுபலியில் இவை இரண்டுமே மறக்கப்பட்டு, காட்சிகளில் பிரம்மாண்டம் என்பதுமட்டுமே பிரதானப்படுத்தப்பட்டிருக்கிறது. எத்தனை கோடி பட்ஜெட்டை நம்மாட்களிடம் கொடுத்தாலும், அம்மா செண்ட்டிமெண்ட், சிவலிங்கம், குத்துப்பாட்டு, டூயட், எரிச்சல் வரவழைக்கும் காதல் காட்சிகள், ரத்தம் காளி சிலையின் மீது தெறிப்பது போன்ற தெலுங்கு செண்டிமெண்ட்கள் இல்லாமல் படம் வராது என்பது பாஹுபலியின்மூலம் புரிந்தது.
பாஹுபலிக்காக உருவாக்கப்பட்டிருக்கும் மொழி பற்றியும் சில வார்த்தைகள். நம்மாட்களுக்கு ஒரு புதிய மொழியை உருவாக்குவது அத்தனை எளிது என்ற எண்ணம். டால்கீன் உருவாக்கிய எல்விஷ் மொழியைப் பற்றியும், அதில் இடம்பெற்றுள்ள சிக்கலான வார்த்தைகள் பற்றியும், அதற்கு எத்தனை காலம் ஆனது என்பது பற்றியும் இவர்கள் கொஞ்சமாவது படிக்கவேண்டும். புதிதாக எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் ‘தக்கிரி பிக்கிரி’ என்று வார்த்தைகளைப் போட்டு உருவாக்கலாம். ஆனால் அவைகளைப் படத்தில் எப்படி உபயோகிக்கவேண்டும் என்ற அறிவு கொஞ்சம் கூட இல்லாவிட்டால் பாஹுபலியில் வரும் மொழி போலத்தான் ஆகும். சுருக்கமாக, பல ஹாலிவுட் படங்களில் இடம்பெறும் அம்சங்களை அவற்றைப்பற்றிய எந்த அறிவும் இல்லாமல் மனம்போனபோக்கில் தெலுங்கு கைமாவாக அளித்துள்ளனர்.
ராஜமௌலி இயக்கிய ‘நான் ஈ’ எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. ஒரு திரைக்கதை எப்படி எழுதப்படவேண்டும் என்பதற்கு நான் ஈ ஒரு மிகச்சிறந்த உதாரணம். எனது திரைக்கதை வகுப்புகளில் நான் ஈயின் சில காட்சிகளை எடுத்துக்கொண்டு விவாதிப்பது என் வழக்கம். இப்படிப்பட்ட ஒரு விறுவிறுப்பான படத்தை இயக்கிய ராஜமௌலியை பாஹுபலி போன்ற ஒரு படத்தை எடுக்கத் தூண்டியது எது? எத்தனை யோசித்தாலும் விளங்கவில்லை. பாஹுபலி ஒரு அக்மார்க் தெலுங்குப்படம் மட்டுமே. அப்படிப்பட்ட படங்களை ரசிக்கும் ஆடியன்ஸுக்காக மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தெலுங்கில் மட்டும் வெளியானால் போட்ட பணத்தை எப்படி எடுப்பது? இதனால், ‘மாபெரும் ஸிஜி’, ‘இந்தியா கண்டிராத பிரம்மாண்டம்’ என்றெல்லாம் போலியாக விளம்பரம் செய்யப்பட்டு, இந்திய மக்கள் அனைவரின் தலையிலும் சுமத்தப்பட்டுள்ளது இப்படம். தமிழ் சினிமா பாஹுபலியையெல்லாம் தாண்டி எங்கோ சென்றுகொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் நாற்பது வருடங்கள் முன்னர் வந்திருக்கவேண்டிய பாஹுபலி போன்ற கொடூரங்கள் எல்லாம் இன்றைய காலகட்டத்தில் வெளியாகி நம் ரசனையைப் பதம் பார்ப்பது ஒரு துன்பியல் நிகழ்வு தவிர வேறில்லை. சத்யராஜ், சில காட்சிகளில் ரம்யா கிருஷ்ணன், இதன் production design ஆகியவற்றைத் தவிர பாஹுபலியில் பாராட்டப்படுவதற்கு எதுவுமே இல்லை என்பது என் கருத்து. இத்தனை வருட உழைப்பையும் இத்தனை கோடி ரூபாய்களையும் இவ்வளவு பொறுப்பற்றவகையில் வீணடித்ததை நினைத்தால் மனம் வலிக்கிறது.
பி.கு
1. இந்தக் கட்டுரை, தரமான சினிமா வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எழுதப்பட்டிருக்கிறது. மிகப்பெரிய மார்க்கெட்டிங்கினால் நாடு முழுதும் இருக்கும் திரைரசிகர்களை ஒரு அக்மார்க் தெலுங்குப்படம் பார்க்கவைத்து ஏமாற்றும் கொடுமையை எதிர்த்தே இதை எழுதியிருக்கிறேன். எனக்கும் ராஜமௌலிக்கும் எந்த வாய்க்கால் தகராறும் இல்லை என்பதை, இக்கட்டுரை படித்துவிட்டு ‘ஹேட்டர்’ என்று எழுதப்போகும் நண்பர்களுக்குப் புரியவைப்பதற்காகவே இந்த டிஸ்க்ளெய்மர்.
2. ‘பாஹுபலி’ எனக்குப் பிடித்திருக்கிறது. எனக்கு இதுபோன்ற சண்டைக்காட்சிகள் மட்டுமே தேவை. கதை வேண்டாம் என்னும் நண்பர்களை நான் எந்த வகையிலும் இன்ஃப்ளுயன்ஸ் செய்யவில்லை. இங்கே நான் எழுதியிருப்பது என் கருத்து மட்டுமே.
3. படத்தில் வரும் காலகேயர்களுக்கும் கேம் ஆஃப் த்ரோன்ஸின் டோத்ராகிகளுக்கும் வேற்றுமையே இல்லை. போலவே, க்ளைமாக்ஸில் நெருப்பின் உதவியால் காலகேயர்களைத் தாக்குவதற்கும், கேம் ஆஃப் த்ரோன்ஸின் இரண்டாம் சீஸனின் இறுதியில் டிரியன் ஸ்டான்னிஸின் படைகளை நெருப்பினால் தாக்குவதற்கும் தொடர்புகள் உண்டு.
4. ‘பாஹுபலி ஒரு tale. இதற்கெல்லாம் திரைக்கதையே தேவையில்லை. இந்த உண்மை கூட எனக்குப் புரியவில்லை’ என்று ஒரு நபர் – சினிமாவுக்குப் போகிறேன் என்பதைக்கூட, ‘வெண்திரையில் பளிச்சிடும் பிம்பக்கோர்வைகள் வரிசையாக சலனமடையும் ஒரு அரங்குக்கு என் கால்களின் உதவியால் சிறுகச்சிறுக நடந்து சென்றேன்’ என்று ஒரு வாக்கியத்தையே ஃபுல் ஸ்டாப் இடாமல் ஒரு முழுப் பக்கத்துக்கு வேண்டுமென்றே வலிந்து வரவழைத்துக்கொண்ட புரியாத ‘இலக்கிய’த்தரத்தில் எழுதும் ‘சினிமா கண்டிராத பேரரிஞர்’ – எழுதியிருப்பதை ஃபேஸ்புக்கில் ஸ்க்ரால் செய்யும்போது கஷ்டப்பட்டு எழுத்துக்கூட்டிப் படித்துப் புரிந்துகொண்டேன் (அவரைப் போன்றவர்களைப் பற்றி எழுதினால் ஆட்டோமேடிக்காக அவர்களின் நடை வந்துவிடுகிறது பாருங்கள்). Tale என்பதன் ஸ்பெல்லிங் கூடத் தெரியாத நபர்களிடம் சினிமா மாட்டிக்கொண்டு முழிப்பது கஷ்டமாகத்தான் உள்ளது. என்ன செய்வது? இதுவரை இந்தக் கட்டுரையில் நான் கொடுத்திருக்கும் உதாரணங்களைப் பார்த்தாலே போதும். குறிப்பாக ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’, ‘லார்ட் ஆஃப் த ரிங்ஸ்’ போன்றவற்றைப் பார்த்தாலே, ஒரு tale என்றால் என்ன என்பது இவர்களைப் போன்றவர்களுக்குப் புரிந்துவிடும். நம் தளத்தைப் படிப்பவர்களுக்கெல்லாம் இது சிறுபிள்ளைத்தனமாக இருக்கலாம். அன்னாருக்கு லார்ட் ஆஃப் த ரிங்ஸ் புரியவில்லை என்றால், அது பற்றி நான் எழுதியிருக்கும் இலவச மின்புத்தகத்தைத் தரவிறக்கிப் படிக்கலாம். மிக எளிமையான நடையில் அது எழுதப்பட்டிருப்பதால் ஒருவேளை இவர்களைப் போன்றவர்கள் அது புரியாமல் தவிக்கக்கூடும். அது பரவாயில்லை. சுருக்கமாக, பணத்தைப்போட்டு எடுக்கப்படும் எந்தப் படத்துக்கும் திரைக்கதை என்பது அவசியம் தேவை. அது எப்படிப்பட்ட படமாகவும் இருக்கலாம். திரைக்கதையே இல்லாமல் இஷ்டத்துக்குக் காட்சிகளை அமைத்து எடுக்கப்படும் படங்கள், பட்ஜெட்டை எடுத்து வெற்றிகரமான வசூலில் ஜெயித்தாலும் மிக எளிதில் மறக்கப்பட்டு விடும். அதற்குத் தமிழிலேயே பல உதாரணங்கள் உள்ளன (இந்தப் பேரறிஞரை முதலில் ignore செய்யவே விரும்பினேன். காரணம், நம் வேலையை நாம் பார்த்துக்கொண்டிருக்கும்போது சம்மந்தமே இல்லாமல் நம்மை வம்புக்கு அழைப்பவர்களை ignore செய்வதே என் பாணி. ஆனாலும், இவரது மொக்கையான அறிக்கை எத்தனை தவறானது என்பதைப் புரியவைத்தால்தான் அவருக்கே அது நன்மைகூட பயக்கலாம்; அது அவரது கண்ணோட்டத்தை மாற்றக்கூடும் என்பதால்தான் இந்த விளக்கம். இதைப் படித்துவிட்டு அந்த அறிஞர் ஒரு முழுப்பக்கத்துக்கு ஃபுல் ஸ்டாப் வைக்காமல் பதில் எழுதக்கூடும். ஆனால் என் வேலை முடிந்தது. அவர் இனி எந்தப் பதில் எழுதினாலும் அதை எழுத்துக்கூட்டிப் படிக்கும் பொறுமை எனக்கு இல்லை. செய்யவேண்டிய வேலைகள் எக்கச்சக்கமாக உள்ளன. இவரிடம் எனக்கு இதுவரை எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் சம்மந்தமே இல்லாமல் என்னை ஏன் வம்புக்கு இழுக்கவேண்டும் என்பது விளங்கவில்லை).
http:// karundhel.கம /2015/07/bahubali-the-beginning-2015-தமிழ் -telugu.html

- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
நல்ல பதிவு குமாரவேல் .
என் கருத்து என்னவென்றால் மக்கள் அவ்வளோ முட்டாள்களா என்ன ?
விளம்பரங்களுக்கு மயங்கி பார்பார்களா ? அப்படி பார்த்தல் பாபநாசம் படத்தை ரசிதிருப்பார்களா ?
லிங்கா superstar படம் தான் ... ஆனால் ஓடவில்லையே.... இந்த கட்டுரையின் ஆசிரியர் அவர் கருத்தை கூறியுள்ளார் அவளோ தான் . ஒன்றை எதிர்த்து சொல்வதால் நாம வித்யாசமா தெரிவோமா என்ன ?
மன்னிக்கவும் ... எனக்கு உங்கள் மேல் எந்த கோபமோ வருத்தமோ இல்லை ... இந்த ஆசிரியர் நெறைய ஆங்கில படம் பார்த்திருப்பார் போல இருக்கு . ஆனால் என்னை போன்றவர்கள் அவர் சொன்ன 2 படங்களுமே பார்க்காதவர்கள் ... இருப்பார்கள் அல்லவா . ஆகா என்னை போல் உள்ளவர்களுக்கு இது புதுசு ... நாங்க ரசிக்கிறோம் .. அது யார் தப்பும் இல்லையே ... அதனால் ரசிப்பவர்கள் முட்டாள்களா என்ன ? இந்த காலத்து இசையும் மேற்கத்திய இசை (ராப் )போல் உள்ளது ... அதை நாம் ரசிக்கிறோம் . அதால் என்ன ? கோப்பி அடிப்பதால் ரசிக்ககூடாத என்ன ?
ஒரு காட்சி அந்த இயக்குனரை பாதித்து விட்டது . அதை தனது படத்தில் கொண்டு வருவது தப்பா?
அது அவர் படைப்பு, அவர் விருப்பம்... அதனால் எல்லாம் ஒன்றை , ஒருவரை குறை சொல்ல கூடாது ... எது எப்படி இருந்தாலும் பாஹுபலி பார்த்ததில் ஒரு வித சந்தோசம் தான் எனக்கு உருவாகி உள்ளது .
அதை பார்த்து விட்டு நாம் "பொன்னியின் selvan" ஐ யாரவது படமாக எடுக்க மாட்டர்களா என்று ஏங்குகிறேன் ... அந்த காவியத்திற்கு நிகர் உண்டா ?
என்னமோ நம் நட்டு குழந்தைகள் "ஹர்ரி போட்டர் " ஐ போய் பார்கிறார்கள் படிகிறார்கள் ... இந்த சரித்திர காவியத்தை படித்தால் அப்படி சொல்ல மாட்டார்கள் ... கண்டிப்பாக என் கனவு நிறைவேறும் ....

சரியா சொன்னிங்க ஷோபனா மேடம்!
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1153209kumaravel2011 wrote:சரியா சொன்னிங்க ஷோபனா மேடம்!
தம்பி என்ன தப்பா நெனைக்காதீங்க .. என் கருத்தை சொன்னேன் அவ்வளோ தான் .
மேற்கோள் செய்த பதிவு: 1153168shobana sahas wrote:நல்ல பதிவு குமாரவேல் .
என் கருத்து என்னவென்றால் மக்கள் அவ்வளோ முட்டாள்களா என்ன ?
விளம்பரங்களுக்கு மயங்கி பார்பார்களா ? அப்படி பார்த்தல் பாபநாசம் படத்தை ரசிதிருப்பார்களா ?
லிங்கா superstar படம் தான் ... ஆனால் ஓடவில்லையே.... இந்த கட்டுரையின் ஆசிரியர் அவர் கருத்தை கூறியுள்ளார் அவளோ தான் . ஒன்றை எதிர்த்து சொல்வதால் நாம வித்யாசமா தெரிவோமா என்ன ?
மன்னிக்கவும் ... எனக்கு உங்கள் மேல் எந்த கோபமோ வருத்தமோ இல்லை ... இந்த ஆசிரியர் நெறைய ஆங்கில படம் பார்த்திருப்பார் போல இருக்கு . ஆனால் என்னை போன்றவர்கள் அவர் சொன்ன 2 படங்களுமே பார்க்காதவர்கள் ... இருப்பார்கள் அல்லவா . ஆகா என்னை போல் உள்ளவர்களுக்கு இது புதுசு ... நாங்க ரசிக்கிறோம் .. அது யார் தப்பும் இல்லையே ... அதனால் ரசிப்பவர்கள் முட்டாள்களா என்ன ? இந்த காலத்து இசையும் மேற்கத்திய இசை (ராப் )போல் உள்ளது ... அதை நாம் ரசிக்கிறோம் . அதால் என்ன ? கோப்பி அடிப்பதால் ரசிக்ககூடாத என்ன ?
ஒரு காட்சி அந்த இயக்குனரை பாதித்து விட்டது . அதை தனது படத்தில் கொண்டு வருவது தப்பா?
அது அவர் படைப்பு, அவர் விருப்பம்... அதனால் எல்லாம் ஒன்றை , ஒருவரை குறை சொல்ல கூடாது ... எது எப்படி இருந்தாலும் பாஹுபலி பார்த்ததில் ஒரு வித சந்தோசம் தான் எனக்கு உருவாகி உள்ளது .
அதை பார்த்து விட்டு நாம் "பொன்னியின் selvan" ஐ யாரவது படமாக எடுக்க மாட்டர்களா என்று ஏங்குகிறேன் ... அந்த காவியத்திற்கு நிகர் உண்டா ?
என்னமோ நம் நட்டு குழந்தைகள் "ஹர்ரி போட்டர் " ஐ போய் பார்கிறார்கள் படிகிறார்கள் ... இந்த சரித்திர காவியத்தை படித்தால் அப்படி சொல்ல மாட்டார்கள் ... கண்டிப்பாக என் கனவு நிறைவேறும் ....
ஒ .....இதான் அநியாயத்த கண்டா பொங்குறதா ....
விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
- சங்கர்.பபண்பாளர்
- பதிவுகள் : 60
இணைந்தது : 21/07/2015
”விடுவதில்லை
விரும்புவது
கிடைத்தாலும்
விரும்பாமல்
வந்தாலும்”
பொங்கி விட்டீர்கள் இது உங்கள் கருத்து... நிறைய ஆங்கிலப்படங்கள் பார்த்தவர்களுக்கு இப்படம் ஒகே, பார்க்காதவர்களுக்கு பிரமாண்டம்...

சங்கர்.ப
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆமாம் படம் மிகப்பிரம்மாண்டம் தான். நானும் பார்த்து விட்டேன் போன வாரம். (தியேட்டரில்) நவீன ஸ்டைலில் விட்டலாச்சார்யா படம் பார்த்த போது (இடையிடையே பல கேள்விகள் எழுந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு பார்த்தால்) மனதில் சந்தோஷம் ஏற்படத்தான் செய்தது.
நேரம் போவதே தெரியாமல் நானும் ரசித்தேன். ஆனா பாருங்க, பார்த்துட்டு இருக்கும் போதே பொசுக்குன்னு முடிச்சு அடுத்த வருஷம் வந்து ரெண்டாம் பாகம் பாருங்கன்னு சொன்னாங்க பாருங்க..... அது தான் உச்சபட்ச கடுப்பு.
அதிரப்பள்ளி அருவி (அடுத்த டூர் கேரளா தான்) இவ்வளவு அழகா என்று வியக்கவைத்திருக்கிறார்கள். அந்த கால அம்புலிமாமாவில் வரும் விக்ரமாதித்யனின் தோற்றத்தோடு ஹீரோ மிக அழகாக தான் பொருந்தி விடுகிறார். போர்க்களம் மிக, மிக பிரம்மாண்டம். போர் வெகு நேரம் நீடிப்பதால் அதுவே கொஞ்சம் போரடிக்கிறது.
ஆனாலும் படத்தை சீக்கிரமே முடித்துவிட்டார்கள்... ரொம்ப மோசம்....
நேரம் போவதே தெரியாமல் நானும் ரசித்தேன். ஆனா பாருங்க, பார்த்துட்டு இருக்கும் போதே பொசுக்குன்னு முடிச்சு அடுத்த வருஷம் வந்து ரெண்டாம் பாகம் பாருங்கன்னு சொன்னாங்க பாருங்க..... அது தான் உச்சபட்ச கடுப்பு.
அதிரப்பள்ளி அருவி (அடுத்த டூர் கேரளா தான்) இவ்வளவு அழகா என்று வியக்கவைத்திருக்கிறார்கள். அந்த கால அம்புலிமாமாவில் வரும் விக்ரமாதித்யனின் தோற்றத்தோடு ஹீரோ மிக அழகாக தான் பொருந்தி விடுகிறார். போர்க்களம் மிக, மிக பிரம்மாண்டம். போர் வெகு நேரம் நீடிப்பதால் அதுவே கொஞ்சம் போரடிக்கிறது.
ஆனாலும் படத்தை சீக்கிரமே முடித்துவிட்டார்கள்... ரொம்ப மோசம்....
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஷோபனா...! இந்த படத்தை பற்றி நானே எழுதலாம் என்றிருந்த வேளையில் படத்தை பற்றி இப்படி ஒரு விமர்சனம் வரவே நேற்று இதற்கு பதிவு போடாமலே போய்விட்டேன்.
அப்புறம் இப்போது பார்த்தால்... நீங்கள் சொல்லியிருந்த கருத்து மிக அருமையாக இருந்தது.

மிக அருமை. உண்மையுங்கூட. தாங்க்ஸ் ஷோபனா. குமரவெல்2011 அவர்களுக்கும் நன்றி.ஷோபனா wrote:
மக்கள் அவ்வளோ முட்டாள்களா என்ன ?
விளம்பரங்களுக்கு மயங்கி பார்பார்களா ? அப்படி பார்த்தல் பாபநாசம் படத்தை ரசிதிருப்பார்களா ?
லிங்கா superstar படம் தான் ... ஆனால் ஓடவில்லையே.... இந்த கட்டுரையின் ஆசிரியர் அவர் கருத்தை கூறியுள்ளார் அவளோ தான் . ஒன்றை எதிர்த்து சொல்வதால் நாம வித்யாசமா தெரிவோமா என்ன ?
மன்னிக்கவும் ... எனக்கு உங்கள் மேல் எந்த கோபமோ வருத்தமோ இல்லை ... இந்த ஆசிரியர் நெறைய ஆங்கில படம் பார்த்திருப்பார் போல இருக்கு . ஆனால் என்னை போன்றவர்கள் அவர் சொன்ன 2 படங்களுமே பார்க்காதவர்கள் ... இருப்பார்கள் அல்லவா . ஆகா என்னை போல் உள்ளவர்களுக்கு இது புதுசு ... நாங்க ரசிக்கிறோம் .. அது யார் தப்பும் இல்லையே ... அதனால் ரசிப்பவர்கள் முட்டாள்களா என்ன ?
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1153324விமந்தனி wrote: ஷோபனா...! இந்த படத்தை பற்றி நானே எழுதலாம் என்றிருந்த வேளையில் படத்தை பற்றி இப்படி ஒரு விமர்சனம் வரவே நேற்று இதற்கு பதிவு போடாமலே போய்விட்டேன்.
அப்புறம் இப்போது பார்த்தால்... நீங்கள் சொல்லியிருந்த கருத்து மிக அருமையாக இருந்தது.மிக அருமை. உண்மையுங்கூட. தாங்க்ஸ் ஷோபனா. குமரவெல்2011 அவர்களுக்கும் நன்றி.ஷோபனா wrote:

ரொம்ப நன்றி அக்கா .. நீங்கள் கொடுக்கும் ஊக்கத்திற்கு நன்றி . இந்த பதிவு என்னை அவ்வாறு எழுத தூண்டி விட்டது ... பொறுத்துக்கொள்ள முடியல .. எவ்வளவோ சுமாரான படங்களுக்கு இடையில் ஒரு நல்ல படம் வந்தால் இவங்களுக்கு பொறுக்கறது இல்ல ... நாட்டில் எவ்வளவோ சங்கதிகள் நடக்குது .. அதுக்கு ஒன்னும் பொங்கி எழுவது இல்ல ... இவர்களுக்கு கிடைத்ததெல்லாம் சினிமா மீது குறை கூறுவது தான் .. எதிலும் குறை கண்டுபிடிப்பது ...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1