புதிய பதிவுகள்
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_m10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10 
163 Posts - 79%
heezulia
மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_m10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_m10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_m10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_m10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_m10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_m10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10 
1 Post - 0%
Guna.D
மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_m10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10 
1 Post - 0%
prajai
மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_m10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10 
1 Post - 0%
Pampu
மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_m10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_m10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10 
328 Posts - 78%
heezulia
மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_m10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_m10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_m10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10 
8 Posts - 2%
prajai
மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_m10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_m10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya

ஜாஹீதாபானு
மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_m10மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன்

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 22 Jul 2015 - 19:08

மதுவிலக்குக் கொள்கையில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டவரா கருணாநிதி? - தமிழருவி மணியன்

மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் PdbzZjYkR8Sa5Uhg9b4i+thamizharuvi_22959_2481170h

வாக்குறுதிகளை வழங்குவதும், பின்பு அவற்றிற்கு நேர்மாறாக நடப்பதும் கருணாநிதியின் கடந்த காலச் சரித்திரம் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''திமுக வரவிருக்கும் சட்டப் பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு நடைமுறைப்படுத்தபடும் என்று கருணாநிதி அறிவித்திருக்கிறார்.

ஆட்சி நாற்காலியைக் கைப்பற்றுவதற்கு அனைத்து வழிகளிலும் முயற்சியை மேற்கொண்டிருக்கும் கருணாநிதி, மக்களை ஏமாற்றும் தேர்தல் உத்திகளுள் ஒன்றாகவே இந்த அறிவிப்பும் இருக்கக்கூடும்.

கொட்டும் மழையில் இராஜாஜி கோபாலாபுரத்து வீடு தேடி வந்து கண்கள் கலங்கியபடி, மதுவிலக்கை ரத்து செய்து ஒரு சமுதாயத்தையே சாராயத்தின் மூலம் சீரழித்துவிட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தபோது செவி சாய்க்காதவருக்கு இன்று திடீர் ஞனோதயம் எப்படி வந்தது?

பூரண மதுவிலக்கை கருணாநிதி உண்மையில் நடைமுறைப்படுத்த விரும்பினால் நாட்டு மக்களுக்கு ஒரு விளக்கத்தைத் தர வேண்டும். தமிழக அரசின் ஆண்டு வருவாய் ஒரு லட்சத்து நாற்பத்தாராயிரம் கோடி ரூபாய். இதில் மானியம், இலவசம், அரசு ஊழியர் ஊதியம், ஓய்வூதியம், வாங்கிய 2 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட கடனுக்கு வட்டி ஆகிய செலவினங்களுக்கு ஒதுக்கப்படுவது 1.36 ஆயிரம் கோடி. வளர்ச்சித் திட்டங்களுக்கு எஞ்சுவது 6000 கோடி ரூபாய்க்கும் குறைவு.

இந்த நிலையில் டாஸ்மாக் வருவாய் 26000 கோடி ரூபாய் இழப்புக்குப் பின்பு அதை எந்த வகையில் ஈடு செய்து அரசின் நிதி நிலையை மேம்படுத்துவார் என்பதை அவர் முதலில் விரிவாக விளக்க வேண்டும்.

தன் ஆட்சிக் காலத்தில் மதுவிலக்குக் கொள்கையில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டவர் இல்லை கருணாநிதி. இன்று பூரண மதுவிலக்கைக் கொண்டுவருவதாகச் சொல்லி ஆட்சியில் அமர்ந்த பின்பு கள்ளச் சாராயச் சாவுகளையும் நிதி நிலை நெருக்கடிகளையும் காரணங்களாகக் காட்டி மீண்டும் மதுக்கடைகளை திறக்க மாட்டார் என்பதற்கு என்ன உத்திரவாதம் ?

வாக்குறுதிகளை வழங்குவதும், பின்பு அவற்றிற்கு நேர்மாறாக நடப்பதும் கருணாநிதியின் கடந்த காலச் சரித்திரம் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்'' என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

நன்றி : தி ஹிந்து .

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed 22 Jul 2015 - 19:17

எந்த கட்சி ஆச்சிக்கு வந்தாலும் பூரண மதுவிலக்கை அமல் படுத்தாது அனைத்துகட்சியுமே தேர்தல் உட்டாலக்கடி வாக்குறுதித்தான் தருகிறது என்று அனைவருக்குமே தெரியும்
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik

ஈகரை தமிழ் களஞ்சியம் மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 22 Jul 2015 - 19:18

கொட்டும் மழையில் இராஜாஜி கோபாலாபுரத்து வீடு தேடி வந்து கண்கள் கலங்கியபடி, மதுவிலக்கை ரத்து செய்து ஒரு சமுதாயத்தையே சாராயத்தின் மூலம் சீரழித்துவிட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தபோது செவி சாய்க்காதவருக்கு இன்று திடீர் ஞனோதயம் எப்படி வந்தது?

ஆம் , அந்த காலத்தில் பரவலாக பேசப்பட்ட விஷயம் .

மதுவிலக்கு தளர்த்தப்பட்ட சமயம்
அப்போது திருச்சியில் இருந்தேன் நான் .
மதியம் 3 மணி இருக்கும் , ஒரு பெண்மணி , 50 வயது இருக்கும் , தலையில் கூடை ,நடு ரோடில்,
நான் குடிச்சிட்டேன் ,நான் குடிச்சிட்டேன் என்று கூவிக்கொண்டும் பாடிக்கொண்டும் தள்ளாடிபடி
வந்து கொண்டு இருந்தார் .

அன்று ஆரம்பம் ஆன துயரத் தொடர் , மெகா சீரியல் போல் வளர்ந்து கொண்டே இருக்கிறது .

விதைத்தவர் ஒருவர் , வளர்த்தவர் ஒருவர் , அவதிப்படுபவர் ஆயிரம் ஆயிரம் குடும்பங்கள் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 22 Jul 2015 - 19:22

balakarthik wrote:எந்த கட்சி ஆச்சிக்கு வந்தாலும் பூரண மதுவிலக்கை அமல் படுத்தாது அனைத்துகட்சியுமே தேர்தல் உட்டாலக்கடி வாக்குறுதித்தான் தருகிறது என்று அனைவருக்குமே தெரியும்
மேற்கோள் செய்த பதிவு: 1152500

100% சரி .
பதவிக்கு வந்து விட்டால் ,அவ்வளவுதான் ,
யாராவது வாக்குறுதியானது என்னது என்று கேட்டால் ,
அவனது வா குருதியாவது நிச்சயம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed 22 Jul 2015 - 19:29

T.N.Balasubramanian wrote:விதைத்தவர் ஒருவர் , வளர்த்தவர் ஒருவர் , அவதிப்படுபவர் ஆயிரம் ஆயிரம் குடும்பங்கள் .

ரமணியன்

இவர் இதை மட்டுமல்ல இலவசம் கொடுப்பதையும் இவர் தான் விதைத்தார்

ஈகரை தமிழ் களஞ்சியம் மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed 22 Jul 2015 - 19:45

முதலில், " மதுவிலக்கை அமல்படுத்துவேன் "என்று இராமதாஸ் சொன்னபோது யாரும் அவரை பொருட்படுத்தவில்லை . "மரம்வெட்டி " என்று கேலி பேசினார்கள் .

இப்போது கலைஞர் " மதுவிலக்கை அமல்படுத்துவேன் " என்று சொன்னால், அதை யாரும் நம்பத் தயாராக இல்லை .

அம்மையார் இன்னும் வாயைத் திறக்கவில்லை .

அடுத்து ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்புள்ள கட்சிகள் இரண்டே இரண்டுதான் . தி .மு .க . அல்லது அ .தி .மு .க . இந்த நிலையில் அம்மையார் " மதுவிலக்கை அமல்படுத்துவேன் " என்று சொன்னால்தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கமுடியும் . அவரை ஒரு இக்கட்டான நிலையில் கலைஞர் மாட்டிவிட்டுள்ளார் .எனவே அம்மையாரிடமிருந்து " நான் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவேன் "என்ற அறிவிப்பு சீக்கிரத்தில் வரலாம் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed 22 Jul 2015 - 19:54

M.Jagadeesan wrote:அடுத்து ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்புள்ள கட்சிகள் இரண்டே இரண்டுதான் . தி .மு .க . அல்லது அ .தி .மு .க . இந்த நிலையில் அம்மையார் " மதுவிலக்கை அமல்படுத்துவேன் " என்று சொன்னால்தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கமுடியும் . அவரை ஒரு இக்கட்டான நிலையில் கலைஞர் மாட்டிவிட்டுள்ளார் .எனவே அம்மையாரிடமிருந்து " நான் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவேன் "என்ற அறிவிப்பு சீக்கிரத்தில் வரலாம் .

மது பிரெச்சனை இப்பொழுது பெரிதாக உருவெடுத்துள்ளது நிஜம்த்தான் ஆனால் திமுக மீண்டும் வர வாய்ப்பு மிக மிக குறைவாகவே உள்ளது ADMK மீது மக்களுக்கு பெரிய கோபமில்லை ஜெயாவின் வழக்கு அந்த அளவுக்கு மக்களிடையே பாதிப்பை ஏற்படுத்தவில்லை

முழு மதுவிலக்கு சாத்தியமில்லை என்று மக்களுக்கும் தெரியும்
தடை செய்வதாக சொல்பவர்களும் செய்யமாட்டார்கள் என்பதும் மக்களுக்கு தெரியும் மேலும் இடைத்தேர்தலுக்கு முன் அம்மையார் மதுக்கடைகளின் நேரத்தை குறைப்பதாக கூறியிருந்தார் அந்த நேரத்தில் தேர்தல் வந்ததால் அது நடக்கவில்லை இப்பொழுது அதை செய்யலாம் அல்லது மதுக்கடைகளை குறைப்பதாக சொல்லலாம் மற்றபடி அம்மையார் முழு மதுவிலக்கை கொண்டுவருவதாக உறுதியாளிக்கமாட்டார்கள் என்றே தோன்றுகிறது

ஈகரை தமிழ் களஞ்சியம் மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 22 Jul 2015 - 20:37

[b]அன்புமணி கேள்விகள் ஸ்டாலின்னுக்கு[/b]

பலமுறை மீண்டும், மீண்டும் மதுவைத் திணித்து சீரழித்ததற்காக தமிழ்நாட்டு மக்களிடம் நீங்களும், அதிமுகவும் பாவமன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் கூறுகையில், '' உங்கள் கட்சித் தலைமையின் கருத்தை வலுப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு, ‘‘சொன்னதை செய்யும் கழக அரசு முழு மதுவிலக்கையும் நடைமுறைப்படுத்தும்’’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை முகநூலில் பதிவு செய்திருக்கிறீர்கள்.

அதைப் படித்ததும் திமுகவின் முரண்பட்ட நிலைகள் தொடர்பாக என் மனதில் எழுந்த 10 வினாக்களை இக்கடிதத்தில் வரிசைப்படுத்தியிருக்கிறேன்.

இவை மக்கள் மனதிலும் எழுந்துள்ள வினாக்கள் என்பதால் இவற்றுக்கு நீங்கள் விடையளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

1. தமிழ்நாட்டில் 4 வயது குழந்தை கூட மது குடிக்கும் அவல நிலை ஏற்பட்டதற்கு காரணம் யார்?

2. 1971 ஆம் ஆண்டில் ராஜாஜி கொட்டும் மழையில் கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்று, மதுவிலக்கை ரத்து செய்து விட வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட போதிலும், அதை பொருட்படுத்தாமல் 23 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த மதுவிலக்கை ரத்து செய்தவர் யார்?

3. மது மூலம் கிடைக்கும் வருவாய் என்பது புழுத்துப்போன தொழுநோயாளி கையில் உள்ள வெண்ணெயை வாங்குவதற்குச் சமம் என்று அண்ணா கூறினார். மது கூடவே கூடாது என்று பெரியார் கூறினார். ஆனால், பெரியார், அண்ணாவின் கொள்கைகள் தேவையில்லை... வருமானம் தான் முக்கியம் எனக் கருதி மதுக்கடைகளை திறந்தவர் யார்?

4. புதிய மது ஆலைகளுக்கு அனுமதி அளிப்பதில்லை என 30 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த விதியை தளர்த்தி தங்கள் கட்சியைச் சேர்ந்த இரு முன்னாள் மத்திய அமைச்சர்கள், வேண்டிய இருவர் உட்பட 5 பேருக்கு புதிய மது ஆலைகளை நடத்த அனுமதி வழங்கியது யார்?

5. மது விலக்கை ஏற்படுத்தும் சிந்தனை கருணாநிதிக்கு ஏற்கெனவே ஏற்பட்டுவிட்டதாக கூறியிருக்கிறீர்கள். அப்படியானால், தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று 22.12.2008 அன்று ராமதாஸூக்கு வாக்குறுதி அளித்த கருணாநிதி, அதன்பிறகு 30 மாதங்கள் ஆட்சியில் இருந்தும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தாதது ஏன்? அப்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத கருணாநிதி இப்போது மட்டும் நிறைவேற்றுவார் என எப்படி நம்புவது?

6. 1996 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் முழுமதுவிலக்கு மிகத் தீவிரமாக செயல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்த கருணாநிதி அதன் பின்னர் 10 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தும் அதை நிறைவேற்றாதது ஏன்? தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று 27.12.2008 அன்று நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதன்பின் இரண்டரை ஆண்டுகள் பதவியில் இருந்த உங்கள் அரசு அதை செயல்படுத்தாதது ஏன்? இப்படிப்பட்ட உங்களை எப்படி மக்கள் நம்புவார்கள்?

7. தமிழகத்தில் நடைமுறையில் இருந்த மதுவிலக்கை நீக்கி கடந்த 44 ஆண்டுகளாக மதுவைக் கொடுத்து இரு தலைமுறைகளை சீரழித்தது யார்?

8. காமராஜர் முதலமைச்சராக இருந்த போது 12,000 புதிய பள்ளிகளை திறந்து அனைத்து மாணவர்களையும் படிக்க வைத்தார். ஆனால், அவருக்குப் பின் 7,000 மதுக்கடைகளை திறந்து மக்களை குடிக்க வைத்தது யார்?

9. அதிமுக தான் டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்ததாகவும், அதனால் தான் 10 ஆயிரம் பேருக்கு ஒரு மதுக்கடை என்ற நிலை ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டும் நீங்கள், உங்கள் ஆட்சியில் அந்த கடைகளை மூடாதது ஏன்?

10. மதுவின் மூலம் கிடைக்கும் வருவாய் முக்கியமல்ல, மக்கள் நலனே முக்கியம் என்று திடீரென அக்கறை காட்டுகிறீர்கள். 2006 ஆம் ஆண்டில் திமுக அரசு பதவியேற்ற போது ஆண்டுக்கு ரூ.6086 கோடியாக இருந்த மது வருவாயை 2011 ஆம் ஆண்டில் 150% அதிகரித்து ரூ.14,965 கோடியாக இலக்கு நிர்ணயித்து உயர்த்தினீர்களே.... இதனால் மக்கள் நலன் பாதிக்கப்படவில்லையா?

இந்த 10 கேள்விகளுக்கும் நீங்கள் விடை தருவீர்கள் என்று நம்புகிறேன். தமிழகத்தின் இன்றைய சீரழிவுக்குக் காரணம் உங்கள் கட்சியும், அதிமுகவும் தான். பெண்கள் மற்றும் குழந்தைகளும் மது அருந்தும் கலாச்சாரத்தை உருவாக்கிய உங்களையும், அதிமுகவையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். 44 ஆண்டுகளாக மதுவைக் கொடுத்து மக்களைக் கெடுத்த நீங்கள் இப்போது மது விலக்கு பற்றி பேசத் தொடங்கியிருப்பதற்குக் காரணம் கடந்த 30 ஆண்டுகளாக ராமதாஸ் மேற்கொண்ட மது எதிர்ப்பு மற்றும் மது ஒழிப்பு பணிகள் தான் என்பது எங்களுக்கு பெருமையளிக்கிறது.

மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதாக பலமுறை வாக்குறுதி அளித்த திமுக அத்தனை முறையும் வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றியிருக்கிறது. இப்போது தேர்தலை மனதில் கொண்டு மீண்டும் ஒருமுறை வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்ற முயல்கிறீர்கள்.

பலமுறை மீண்டும், மீண்டும் மதுவை திணித்து சீரழித்ததற்காக தமிழ்நாட்டு மக்களிடம் நீங்களும், அதிமுகவும் பாவமன்னிப்பு கேட்க வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

நன்றி :தி ஹிந்து

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed 22 Jul 2015 - 20:42

கடந்த 30 ஆண்டுகளாக ராமதாஸ் மேற்கொண்ட மது எதிர்ப்பு மற்றும் மது ஒழிப்பு பணிகள் தான்

முதலில் இவர் கட்சி ஆளுங்களை குடிக்காமல் பார்த்துக்கொள்ளட்டும்

ஈகரை தமிழ் களஞ்சியம் மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 22 Jul 2015 - 20:54

மரங்களை வெட்டுதல் /சாலை மறியல் / தரமற்ற மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்தல்,
தானோ/ தன் குடும்பத்தினரோ அரசியல் /பதவிகளுக்கு வரமாட்டோம் என்பது ./தானே போய் கருணாநிதி குடும்பத்திற்கு கல்யாண பத்திரிகை வைப்பது --அரசியல் நாகரீகம் என்பது
அதே அவர் கட்சியின் மணி ,கருணாநிதியை கண்டு தன் வீட்டு கல்யாணப் பத்திரிகை கொடுத்தால் காச்ச்மூச்ச் .
இவர்களை எல்லாம் அரசியல் xxxxxxxxx என்றே கூறவேண்டும்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக