ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

+19
mbalasaravanan
rejeetharakan
ayyasamy ram
K.Senthil kumar
பழ.முத்துராமலிங்கம்
Hari Prasath
sundarr.sa
சசி
Namasivayam Mu
ஜாஹீதாபானு
விஸ்வாஜீ
M.Jagadeesan
வேல்முருகன்
Aarthi Krishna
விமந்தனி
சரவணன்
balakarthik
shobana sahas
krishnaamma
23 posters

Page 45 of 46 Previous  1 ... 24 ... 44, 45, 46  Next

Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 45 Empty தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Wed Jul 22, 2015 6:02 pm

First topic message reminder :



தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............


இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் புன்னகை

இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே,  நீங்களும் பதிவு போடுங்கள்................புன்னகை


முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............


Last edited by krishnaamma on Sat Aug 01, 2015 9:24 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 45 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Sun May 01, 2016 12:46 am

மதுமிதா wrote:அருமை அம்மா... இவை எல்லாம் நாம் ஏற்கனவே கேட்ட கதை தான் என்றாலும் மறுபடி கேட்க நன்றாக உள்ளது..... மேலும் தாங்கள் கதையை எழுதியது போல் இல்லாமல் சொல்வது போல் உள்ளது... தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 45 3838410834 மகிழ்ச்சி  daily என்ன மாதிரி குட்டி பாப்பா க்கு கதை சொல்லி தூங்க வைக்கிறதுக்கு thanksம்மா ......

சொன்னாப் போச்சு............ஜாலி ஜாலி ஜாலி........ரொம்ப சந்தோஷம் மது ! ............ குதூகலம் குதூகலம் குதூகலம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 45 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Sun May 01, 2016 12:47 am

மதுமிதா wrote:அருமை அம்மா... இவை எல்லாம் நாம் ஏற்கனவே கேட்ட கதை தான் என்றாலும் மறுபடி கேட்க நன்றாக உள்ளது..... மேலும் தாங்கள் கதையை எழுதியது போல் இல்லாமல் சொல்வது போல் உள்ளது... தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 45 3838410834 மகிழ்ச்சி  daily என்ன மாதிரி குட்டி பாப்பா க்கு கதை சொல்லி தூங்க வைக்கிறதுக்கு thanksம்மா ......

சொன்னாப் போச்சு............ஜாலி ஜாலி ஜாலி........ரொம்ப சந்தோஷம் மது ! ............ குதூகலம் குதூகலம் குதூகலம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 45 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by மதுமிதா Sun May 01, 2016 12:15 pm

krishnaamma wrote:
மதுமிதா wrote:அருமை அம்மா... இவை எல்லாம் நாம் ஏற்கனவே கேட்ட கதை தான் என்றாலும் மறுபடி கேட்க நன்றாக உள்ளது..... மேலும் தாங்கள் கதையை எழுதியது போல் இல்லாமல் சொல்வது போல் உள்ளது... தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 45 3838410834 மகிழ்ச்சி  daily என்ன மாதிரி குட்டி பாப்பா க்கு கதை சொல்லி தூங்க வைக்கிறதுக்கு thanksம்மா ......

சொன்னாப் போச்சு............ஜாலி ஜாலி ஜாலி........ரொம்ப சந்தோஷம் மது ! ............ குதூகலம் குதூகலம் குதூகலம்
மேற்கோள் செய்த பதிவு: 1205384புன்னகை புன்னகை


தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 45 Mதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 45 Aதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 45 Dதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 45 Hதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 45 U



தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 45 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 45 Empty தாகம் எடுத்த காகம் !

Post by krishnaamma Tue May 17, 2016 1:20 am

31. தாகம் எடுத்த காகம் !

ஒரு ஊரில் ஒரு காக்கா ஒரு மரத்தில்  வாழ்ந்து வந்ததாம். எப்பவும் அது காலை இரை தேடி கிளம்புமாம். அதேபோல ஒருநாள்  அது இரை தேடி ஒரு நாள் ரொம்ப  தூரம் பறந்ததாம் . ஆனாப்பாருங்கோ, அன்னைக்கு என்று துரதிர்ஷ்டவசமாக  அதற்கு ஒரு 'மம்மு' கூட (இரை_  கூட கிடைக்கவில்லையாம் சோகம்

ரொம்ப தூரம் பறந்தது தான் மிச்சமாம். அப்படி ரொம்ப  தூரம் பறந்ததால் ரொம்ப தாகம் எடுத்ததாம் அதுக்கு . வழியில் எங்கேயாவது தண்ணி இருக்கா என்று பார்த்துக்  கொண்டே பறந்ததாம்; தேடியதாம். ஹுஹும்.......தண்ணி  இருப்பதற்கான அறிகுறியே இல்லையாம். ரொம்ப சோகமாய் பொச்சம் அந்த காக்காக்கு.

'என்னடா இது , இன்னைக்கு இப்படி ஆகிடுச்சே' என்று மனதிற்குள்  நினைத்துக் கொண்டே  இன்னும் பறந்ததாம்.  முடிவில் அது தூரத்தில் ஒரு பானை இருப்பதைப் பார்த்து "ஆஹா .. கடவுள் நம்மை கை விடவில்லை.. தூரத்தில் ஒரு பானை இருக்கிறது, அங்கே போனால் நிச்சயம் நமக்கு கொஞ்சம் தண்ணீர் கிடைக்கும்" என்று நினைத்துக்கொண்டே அருகில் சென்று பார்த்ததாம் .

பார்த்தால்,  அதன் அதிர்ஷ்டம் பானையில் கொஞ்சம் தண்ணீர் இருந்ததாம், ஆனால் அது காக்கைக்கு எட்டும்படியான தூரத்தில் இல்லாமல் பானை இன் அடி இல் இருந்ததாம். என்றாலும் அது, பானையின் மேல் உட்கார்ந்து தலையை உள்ளே விட்டு தண்ணீர் குடிக்கப்  பார்த்ததாம் .....

ஆனால் அதற்கு எட்டலை. என்ன பண்ணலாம் என்று கொஞ்சம் யோசித்ததாம், 'கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலியே' என்று கொஞ்சம் வருத்தப் பட்டதாம். என்றாலும் பதட்டப்படாமல், இதுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்ததாம். சுத்தும் முத்தும் பார்த்ததாம், கொஞ்ச துரத்தில் நிறைய சின்ன சின்ன கல் கொட்டி
வைத்திருந்தர்களாம்.

காக்காய்க்கு ஐடியா வந்து விட்டது, அந்தக் கற்களை, பொறுமையாக  வொவ்வொன்னாக  எடுத்து பானையின் உள்ளே போட்டதாம். கொஞ்ச கொஞ்சமாய்  தண்ணீர் மேலே வந்ததாம். ரொம்ப சந்தோஷத்தோட அது  தண்ணீர் குடிச்சிட்டு, தெம்பாக இரை தேடப் போச்சாம்.

அதனால் குழந்தைகளே, மனசு இருந்தால் மார்க்கம் உண்டு, என்பதை நினைவில் வைத்துக் கொள்ளணும். எதுவுமே இல்லாமல் போச்சே என்று பதட்டப்படாமல், இருப்பதை எப்படி செம்மையாக உபயோகிப்பது என்று கொஞ்சம் பதட்டப்படாமல் யோசித்தால் நமக்குத்தான் நல்லது நடக்கும்.

மேலும், காக்கைக்கே இத்தனை சூப்பராக ஐடியா வந்து இருக்கே, நமக்கு வராதா என்ன? சரியா?

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 45 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Wed May 18, 2016 12:00 am

இன்னும் யாரும் பார்க்கலையா இதை? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 45 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Thu Jun 09, 2016 1:10 am

32. தானத்தில் சிறந்தவர் கர்ணனே !

ரொம்ப நாட்களாகவே பாண்டவர்களுக்கு ஒரு சந்தேகம் இருந்ததாம். அது, நம்முடைய அண்ணன் தர்மரும் தானம் செய்வதில் சிறந்தவர் தானே, பின்ன என் எல்லோரும் கர்ணனை மட்டும் தானம் செய்வதில் சிறந்தவன் என்று சொல்கிறார்கள்? என்பது தான் அந்த சந்தேகம். .

இவர்கள் தங்கள்  சந்தேகத்தை ஒருநாள் கிருஷ்ணரிடம் கேட்டார்கள்...இவர்களின் சந்தேகத்தை தெரிந்து கொண்ட அவரும், தங்கமலை, வெள்ளி மலை என இரு மலைகளை உருவாக்கினாராம். அதை காட்டி,  "இங்கே பாருங்கள்! இந்த இரு மலைகளையும் பொழுது சாய்வதற்குள், நீங்கள்  தருமம் செய்துவிட்டால் தானத்தில் சிறந்தவர் தர்மர் என்று ஒப்புக் கொள்கிறேன்,'' என்று சொன்னாராம்.

உடனே இதென்ன பிரமாதம் என்று நினைத்து, பீமனும், அர்ஜுனனும் மற்றவர்களும் அந்த இரு மலைகளில் இருந்து தங்கத்தையும், வெள்ளியையும் பாளம் பாளமாக வெட்டி எடுத்துத் தர தருமர் அதை உடனுக்கு உடன் நகர மக்களுக்குத் தானம் செய்தாராம்.

ஆனால், நகர மக்களில் நிறைய பேருக்கு அப்படி  தானம் செய்தும் தங்கமும் வெள்ளியும் குறையவே இல்லையாம், மாறாக அந்த ரெண்டு மலைகளும் வெட்ட வெட்ட வளர்ந்து கொண்டே இருந்தது போல அவர்களுக்கு தோன்றியதாம்.

ஆச்சு சாயங்காலம் ஆகப்போகிறது........ஆனாலும் மலை குறைந்த பாடில்லை......... இனி தங்களால் முடியாது என்பதை உணர்ந்த தருமர், "எங்களால் முடியாது கண்ணா!'' என்று தன் தோல்வியை ஒப்புக் கொண்டாராம்.

உடனே கிருஷ்ணன் ஓர் ஆளை அனுப்பி கர்ணனை வரவழைத்தாராம். இவர்களும் இவன் ஒருவன் எப்படி தானம் செய்துவிட முடியும் என்று யோசித்தார்களாம். அது எப்படி என்று தெரிந்து கொள்ளும் ஆவலும்  இருந்ததாம் அவர்களுக்கு.

கர்ணன் வந்ததும், கண்ணன் அவனை பார்த்து, "கர்ணா! இதோ பார் இந்த இரண்டு மலைகளில் ஒரு மலை தங்க மலை. மற்றொன்று வெள்ளி மலை; இதை நீ பொழுது சாய்வதற்குள் தானம் செய்ய வேண்டும். பொழுது சாய இன்னும் ஒரு நாழிகைப் பொழுதே உள்ளது. உன்னால் முடியுமா? யோசித்துச் சொல்,'' என்று சொன்னாராம்.

உடனே கர்ணன், "இதில் யோசிக்க என்ன இருக்கிறது கண்ணா, இதோ ஒரு நொடி இல் செய்து விடலாமே! "'' என்று சொன்னானாம். அந்த வழியாக போய்க்கொண்டிருந்த ரெண்டு பேரைக் கூப்பிட்டானாம்.

"இதோ பாருங்கள்! நீங்கள் இருவரும் ஆளுக்கொரு மலையாக இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்,'' என்று சொல்லிவிட்டு , 'ஆச்சு கிருஷ்ணா' என்று இவரிடமும் சொல்லிவிட்டு,  தனது தர்மத்தை முடித்து விட்டுக் , கிருஷ்ணரை நோக்கி ஒரு கும்பிடும் போட்டுவிட்டு கிளம்பி போய் விட்டானாம் .

இதப் பார்த்துக் கொண்டிருந்த பாண்டவர்கள் அசந்து போய்ட்டாங்களாம்.  அவர்களை ஒரு அர்த்தபுஷ்டியுடன் பார்த்தாராம் கண்ணன்..........."நீங்கள் தானம் தரும்போது   , 'இவர்களுக்கு இது போதும் என்று ' நீங்களாகவே நினைத்துக்கொண்டு அளவாக வெட்டி வெட்டி கொடுத்தீர்கள், ஆனால் கர்ணன் தரும்போது, மனம் தாராளமாய் இருந்ததால், 'இவ்வளவு பெரிய மலையை  வைத்துக்கொன்று தானம் வாங்குபவர்  என்ன செய்வார்' என்றெல்லாம் யோசிக்காமல், நான் இதை தானம் செய்யணும் என்று மட்டுமே எண்ணி, அப்படியே தூக்கிக் கொடுத்தான்' தானம் செய்ய அதைப் போல பட்டற்ற, பரந்த மனம் தான் தேவை "என்று சொன்னாரம் அந்த அஞ்சன வண்ணக் கண்ணன் புன்னகை

அதனால், கொடுக்கணும் என்று நினைக்கவும் , உடனே தூக்கிக் கொடுக்கவும் மனம் வேண்டும், தரும் பொருள் மேல் பற்று இல்லாமல் இருக்கணும்..... .அப்போது தான் நம்மால் தானம் செய்ய முடியும் குழந்தைகளா புன்னகை .......அதனால் தான் யாருக்காவது பணமோ பொருளோ தருவதாக இருந்தால், உடனே தந்து விடணும் , நேரம் கடத்தினால் முதலில் நாம் நினைத்ததில் 100 இல் ஒரு பங்கைக் கூட தந்திருக்க மாட்டோம் புன்னகை ...புரிந்ததா? !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 45 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by சசி Thu Jun 09, 2016 8:22 am

கர்ணன் கதை அருமை மா......நன்றி...


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 45 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Fri Jun 10, 2016 1:42 am

சசி wrote:கர்ணன் கதை அருமை மா......நன்றி...
மேற்கோள் செய்த பதிவு: 1210310

மிக்க நன்றி சசி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 45 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Wed Dec 21, 2016 11:29 am

கூடா நட்பு!

ஒரு காட்டில் நரி, ஓநாய், கீரி, எலி மற்றும் புலி ஆகியவை வசித்து வந்தன. நரியுடன் மற்ற நான்கு விலங்குகளும் நட்பு கொண்டிருந்ததாம்
.
இப்படி நான்கும் நரிக்கு நண்பர்களாக இருந்தாலும், நரி தன் நண்பர்களின் நலனை விட்டு, சுய நலனையே பெரிதாக நினைக்குமாம்

அப்போ ஒருநாள் , இந்த ஐந்து மிருகங்களும் ஒரு மான் கூட்டத்தை பார்த்ததாம்.அந்த மான் கூட்டத்தில் ஒரு மான் மட்டும் நல்லா கொழுகொழுவென்று இருந்ததாம் . அதைக் பார்த்ததும், ஓநாய், நரி, எலி, புலி, கீரி ஆகியவற்றிற்கு அந்த மானை அடித்துச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை எழுந்ததாம்.

அதை எப்படி அடித்து சாப்பிடுவது என்ற தயக்கம் ஐந்து நண்பர்களுக்கும் வந்ததாம் .ஏனென்றால் , யார் அடிக்கச் சென்றாலும் மான் நான்கு கால் பாய்ச்சலில் பறந்தோடி விடுகிறது. அதைப் பிடிப்பது என்பது பெரும் பாடாக இருந்ததாம்அப்படி இருக்கையில், அதன் மாமிசத்துக்கு ஆசைப்படுவது அவ்விலங்குகளுக்கு பெருத்த சவாலாக இருந்ததாம் .

அதனால ஆழ்ந்து யோசித்த நரி ஒரு யோசனை சொன்னதாம். ''மான் தூங்கிக்கொண்டிருக்கும் போது எலி, மானின் காலைக் கடிக்க வேண்டும். அப்படிக் கடித்து விட்டால் கடிப்பட்ட காயத்துடன் மானால் அதிவேகமாக ஓட முடியாது. அப்போது புலி பாய்ந்து மானைக் கொன்று விடலாம். அப்புறம் நாம் அனைவரும் மான் கறியைப் பங்கு போட்டு தின்று பசியாறலாம்,'' என்றதாம்.

இதற்கு எலியும், புலியும் ஒப்புக் கொண்டனவாம். ஒருநாள், மான் ஒரு மரத்தடியில் களைப்பாக தூங்கி கொண்டிருந்ததாம் . அதுதான் சமயம் என்று யோசித்த எலி, மெதுவாக பதுங்கிப் போய் மானோட கால் குளம்பை கடித்ததாம்.

பாவம், மான் வலியால் துடிதுடித்துப் போனது. கூரான முள்குத்தியது போன்ற வலி, கால் பாதத்திலிருந்து விண் விண்னென்று வலிக்க, அது தன் காலை பார்த்ததாம்.

அந்நேரம் பார்த்து புலி ஓடி வர, பயந்து போன மான் நிற்கக் கூட நேரமில்லாமல் காற்றாய் பறந்ததாம் . ஆனால், முன் போல மானால் ஓட முடியவில்லைசோகம் அதால் பாதத்தை தரையில் ஊன்ற முடியவில்லை, பாவம்ஒரு காலை தூக்கியவாறு மூன்று காலில் ஓட, புலி அதனை விடவும் வேகமாய் ஓடி அதைத் துரத்தி அடித்ததாம்.

அடிபட்ட மான் தரையில் பொத்தென்று விழுந்ததாம்.விழுந்த மானின் கழுத்தைக் குதறியது புலி.
மெலியாரை வலியார் எய்ப்பது மனிதனில் மட்டுமல்ல, விலங்கிலும் உண்டு என்பதை புலி நிரூபித்தது. மான் விலுக் விலுக்கென்று தன் கால்களை உதைத்துக் கொண்டே விழிகள் விரிய பரிதாபமாய் உயிரை விட்டது சோகம்

இதற்காகவே காத்திருந்தது போல ஐந்து விலங்குகளும் மான் கறியை ருசிக்க ஆசையோடு அதைச் சுற்றி நின்றன. நண்பர்கள் நால்வர் நாவிலும் எச்சில் ஊறுவதைக் கண்டது நரி. ஆனால்அ, தற்கு மான் கறியை தான் மட்டுமே முழுதாக சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்ததாம்.

எல்லாரும் சமமாகப் பங்கிடும் போது தனக்கு கொஞ்சம் தான் மாமிசம் கிடைக்கும். அதே, முழு மானாக இருந்தால் வேண்டிய மட்டும் சாப்பிடலாம். ஆகையால், எப்படியாவது இந்த மான் கறியை நாம் மட்டுமே உண்ண வேண்டும். அதற்கொரு வழியை கண்டுப்பிடிக்க வேண்டும் என்ற நினைப்புடன் மூளையைக் கசக்கிக் கொண்டதாம். சட்டென்று ஒரு யோசனையை சொன்னது அது.

''நான் மானை பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் நால்வரும் சென்று காட்டாற்றில் குளித்து விட்டு வாருங்கள். பிறகு நான் சென்று குளித்து விட்டு வருகிறேன். அதன் பின் எல்லாரும் சேர்ந்து இந்த மானை ருசிக்கலாம்,'' என்றதாம்.

நரி சொன்னதற்கு ஆட்சேபம் ஏதும் தெரிவிக்காமல், மற்ற விலங்குகள் குளித்து விட்டு வருவதற்காக குதூகலத்துடன் ஓடி போச்சாம்.

ஆற்றில் குதித்து நனைந்த புலிக்கு அகோரமாகப் பசி எடுத்தது. அது ஆவலுடன் நரி இருந்த இடத்திற்கு முதலில் வந்து சேர்ந்தது.

அங்கு நரி உலகமே அழிந்து போனது போல் சோகமே உருவாக இருந்ததாம் . அதைக் கண்ட புலி,

''என்னாச்சு நண்பா? ஏன் இந்த சோகம்? அதுவும் சுவையான மான் கறியை உண்ணப் போகும் இந்த நேரத்தில் எதற்கு இந்த சோக கீதம்?'' என்றது.

தொடரும்...............


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 45 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Wed Dec 21, 2016 11:38 am

''காலம் கெட்டுப் போச்சு நண்பா!'' என்றது நரி.

''ஏன்? காலத்துக்கு என்ன? புதிராக ஏன் பேசுகிறாய்?' விளக்கமாகச் சொல்,'' என்றது புலி.

''புலியான உன் வீரத்தை, எலி கேலி பேசியது நண்பா. அதை நினைத்துதான் நான் தாங்க முடியாத சோகத்தில் இருக்கிறேன்,'' என்று பிரித்தாளும் தனது சூழ்ச்சியை ஆரம்பித்தது நரி.

இதை உணராத புலி, ''என்ன சொன்னான் அந்த சிறு பயல்? உடனே சொல்!'' கோபத்தில் தரையை கால் நகங்களால் பிராண்டியது.

''நான் காலைக் கடித்ததால்தான் மானை புலியால் வீழ்த்த முடிந்தது. என்னுடைய வீரத்தால் வீழ்ந்த மானை, புலி இன்று புசித்து தன் பசியைப் போக்கிக் கொள்ளப் போகிறது... என்று உன் வீரத்தைப் பற்றி குறை சொல்லியது நண்பா!'' என்று எலி சொல்லாததையெல்லாம் சொல்லியதாம் அந்த குள்ள நரி.

அதை உண்மை என்று நம்பிய புலியும், ''இது எனக்கு மிகப்பெரிய அவமானம். எலியின் தயவால் அடித்த மானை புசிக்க எனக்கு விருப்பமில்லை. இந்தக் கானகத்தில் தேடி அலைந்து நானே சுயமாய் அடித்த ஒரு விலங்கைத்தான் சாப்பிட்டு பசியாறுவேன். எலி போன்ற சின்னப் பயல்களுடன் நட்பு பாராட்டியது என் தவறு. அவன் தயவோடு கிடைக்கும் மான் கறி எனக்கு ஒரு போதும் வேண்டாம். நான் வருகிறேன்...'' கோபத்தில் உறுமி விட்டு அந்த இடத்தை விட்டு கோபமாக போய்விட்டதாம் புலி
.
'அப்பாடா! இருப்பதிலேயே பலசாலியான புலியை ஒரு வழியாய் ஏமாற்றி அனுப்பியாகிவிட்டது' என்று உள்ளூக்குள் பெருமூச்சு விட்டது நரி.

சிறிது நேரத்தில் முன் பற்கள் நீண்ட எலியும், வாலை ஆட்டியபடியே ஓடி வந்தது.

''புலி நகம் பட்ட மானின் உடம்பில் விஷம் உள்ளதாகக் கூறி, இக்கறியை உண்ண மறுத்து கீரி சென்று விட்டது. கீரியின் வார்த்தைகளைக் கேட்ட பிறகு எனக்கு மான் கறியை சாப்பிட பயமாகப் போய் விட்டது. விஷம் தோய்ந்த உணவைச் சாப்பிட்டு, ஏதாவது ஆகி விட்டால் என்ன செய்வது நண்பா?'' என்று அப்பாவியாய் கேள்வி கேட்டது நரி.

''எதற்கும் நீ எச்சரிக்கையாக இருந்து கொள். உன் நல்லதுக்குத்தான் சொல்கிறேன். மான் கறியை உண்ண மறுத்துச் சென்ற கீரி பக்கத்தில் எங்காவதுதான் பயங்கர பசியோடு பதுங்கி இருக்கும். அது உன்னைக் கண்டால் ஒருவேளை அடித்துச் சாப்பிட திட்டம் கூட திட்டியிருக்கலாம். நீ எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நான் இதை உன்னிடம் கூறியதை கீரிக்கு தெரிந்தது போல் காட்டிக் கொள்ளாதே,'' என்று எலி வயிற்றில் புளியைக் கரைக்க, அது கிலி பிடித்து அந்த இடத்தை விட்டு தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடித்ததாம்.

அடுத்து ஓநாய் வந்தது. அதனிடம், ''உனக்கொரு ரகசியம் சொல்கிறேன். புலி உன் மீது கோபமாக இருக்கிறது. தன் மனைவியை அழைத்து வர அது தன்னுடைய இருப்பிடமான குகைக்குப் போய் இருக்கிறது. இன்று உன் கதையை முடித்து விட்டுத்தான் மறுவேலை பார்க்கப் போகிறதாம். அதனால் நீ சீக்கிரமாக இந்த மான் கறியை சாப்பிட்டு விட்டு புலி வருவதற்குள் இந்த இடத்தை விட்டுப் போய் விடு,'' என்று அதன் உயிருக்கும் உலை வைப்பது போல், ஆனால் அன்பாக பேசியது அந்த நரி.

மான் கறியை சாப்பிட்டுக் கொண்டிருந்தால், பிறகு தன் கறியை புலி சாப்பிடும் என்று உணர்ந்த ஓநாய், உயிரை கையில் பிடித்துக் கொண்டு புலி வருவதற்குள் இடத்தைக் காலி செய்து பறந்து போனது.

இறுதியாக கீரி வந்தது.

வா!..வா!...உனக்காகத்தான் காத்திருக்கிறேன்.என்று உறுமியதாம் நாரி..... நான் பாய்ந்து கடித்ததை தாங்க முடியாமல்தான் புலி, எலி, ஓநாய் எல்லாம் உயிர் பிழைத்தால் போதும் என்று ஓடிவிட்டன. நீ ஒருவன் மட்டும்தான் மிச்சமிருக்கிறாய். உன்னால் முடியும் என்றால் என்னுடன் தனியாக நின்று சண்டை இடு. நீ வெற்றி பெற்றால் இந்த மான் கறியை நீ தாராளமாய் சாப்பிடலாம்...எப்படி வசதி ?...'' என்று சண்டை இடும் நோக்கத்த்துடன் கீரியுடன் சண்டைக்கு மல்லு கட்டியது நரி.

நரியின் வார்த்தைகளை கீரி அப்படியே நம்பியது. 'நம்மை விட பலம் வாய்ந்த புலியே இதனிடம் தோற்றோடி இருக்கும் போது நாம் எம்மாத்திரம்? இந்த மான் கறிக்கு ஆசைப்பட்டு இதனிடம் சண்டைக்கு நின்றால், பிறகு நம் உயிருக்குத்தான் ஆபத்து. இந்த கறி இல்லாவிட்டால், வேறு கறி ஏதாவது உண்டு உயிர் வாழ்ந்து கொள்ளலாம். ஆனால், உயிர் போனால் மறுபடியும் வருமா?' என்று யோசித்ததாம்.

என்றாலும் மற்ற மிருகங்களைக் காணாமல் குழம்பிய கிரி...சிறிது யோசனைக்குப் பின், ''ஹிஹி..நமக்குள் சண்டை எதற்கு நரி ? நீ வேண்டாம் என்றால் நான் போய் விடுகிறேன். இந்தக் கறியை நீயே சாப்பிடு..எனக்கு வயிறு சரி இல்லை ..ஹிஹி...!'' என்று சொல்லியடியே, இவனைப் போய் நண்பன் என்று நினைத்தோமே !...என்று தன்னைத்தனே நொந்து கொண்டு விறுவறுவென்று நடையைக் கட்டியதாம்.

அதன் பிறகு மான் கறியை தான் மட்டுமே புசித்து மகிழ்ந்ததாம் அந்த பொல்லாத நரி....செல்வங்களே! மிருகங்களில் மட்டும் அல்ல மனிதர்களிலும், ஒரு சிலர் தாங்கள் வெற்றி பெறவும், நினைத்தது நடக்கவும் நரி போல் நடந்து கொள்வர். நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்!...சரியா? புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 45 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 45 of 46 Previous  1 ... 24 ... 44, 45, 46  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum