ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

+19
mbalasaravanan
rejeetharakan
ayyasamy ram
K.Senthil kumar
பழ.முத்துராமலிங்கம்
Hari Prasath
sundarr.sa
சசி
Namasivayam Mu
ஜாஹீதாபானு
விஸ்வாஜீ
M.Jagadeesan
வேல்முருகன்
Aarthi Krishna
விமந்தனி
சரவணன்
balakarthik
shobana sahas
krishnaamma
23 posters

Page 24 of 46 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 35 ... 46  Next

Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 24 Empty தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Wed Jul 22, 2015 6:02 pm

First topic message reminder :



தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............


இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் புன்னகை

இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே,  நீங்களும் பதிவு போடுங்கள்................புன்னகை


முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............


Last edited by krishnaamma on Sat Aug 01, 2015 9:24 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 24 Empty அடுத்த கதை 16. ஆமையும் முயலும் ! .

Post by krishnaamma Thu Oct 15, 2015 12:50 am

அடுத்த கதை 16. ஆமையும் முயலும் ! .

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 24 BoNfPsgrTs2QwHeaUuRa+Toiதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 24 TGe6u2VYRgOmXngRnWxz+c639104c862a2cdca6fbc0f052b50dac

இது எல்லோருக்கும் தெரிந்த கதை தான்...ஆனால் குழந்தைகளுக்குத் தெரியாதே அது தான் இங்கே போடுகிறேன் ஜாலி ஜாலி ஜாலி

ஒருநாள் காட்டில், சில  விலங்குகள் எல்லாம் புற்களை  மேய்ந்தவாரே  பேசிக்  கொண்டிருந்ததாம் . அப்போது எல்லாம் ஒன்று போல ஆமையை புகழ்ந்ததாம். இது தான் ரொம்ப நாள் வாழும் உயிரினம், ரொம்ப சாது வானது, யாருக்கும் தொந்தரவு தராதது என்றெல்லாம் சொன்னதுகளாம். நாமெல்லாம் நம்   உயிரைக்காக்க     ஓடணும் ஒளியணும், இதுக்கு தன் ஓடே பாதுகாப்பு, ரொம்ப கொடுத்துவைத்த உயரினம் என்றெல்லாம் சொல்லித்தாம். இதை கேட்டுக்கொண்டிருந்த  முயலுக்கு அந்த ஆமையை பார்த்து தேவை இல்லாமல் பொறாமை வந்ததாம்.

ஆமைகள் 150 வருடங்கள் வரை வாழும், முயல்கள் 4 முதல் 10 ஆண்டுகள் மட்டுமே வாழும். மான்கள் 12  ஆண்டுகள் உயிர் வாழும், ஆடுகள் 10 ஆண்டுகள் உயிர் வாழும். , மயில்கள் சுமார் 35 வருடங்கள் வரை உயிர் வாழும். பசுமாட்டின் ஆயுள் சுமார் 20 வருடங்கள்.இதெல்லாம் குழந்தைகளுக்கு இந்த நேரத்தில் சொல்லலாம் புன்னகை

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ஒரு முயலுக்கு, தான் 'வெள்ளை வெளேர்' என்று ' புஸ்க்கு புஸுக்கு' என்று எவ்வளவு அழகாய் இருக்கிறோம், தன்னைப் பற்றி ஒரு வார்த்தை கூட புகழாமல், 'மர' கலரில் அழுக்காக இருக்கும் இந்த ஆமையைப்பற்றி இத்தனை  பேச்சா ? என்று கோவம் வந்ததாம் ..............

தான்  அந்த ஆமையைக் காட்டிலும் எதிலாவது சிறந்தவன் என்று நிரூபிக்கணும்   என்கிற வேகம் வந்ததாம்.

எனவே, அது ஆமையைப்பார்த்து , " நீ அவ்வளவு பெரிய ஆள் என்றால், என்னுடன் போட்டிக்கு வருகிறாயா? " என்றதாம்.

மற்ற மிருகங்களுக்கு என்ன எது என்று புரியவில்லை............" ஏய், முயலே என்ன உளறுகிறாய்?"......என்று கேட்டதுகளாம். ...

" இப்போ என்ன திடீர் போட்டி?" என்றதாம் ஒரு ஆடு ..........

" இல்லை, இந்த ஆமைதான் ரொம்ப 'கிரேட்' எட்ன்று எல்லோரும் சொல்லறீங்களே என்று கேட்டேன்".என்றதாம் முயல்.

" நாங்க தான் சொன்னோமே தவிர , ஆமை ஒன்றும் தன்னைப் பத்தி சொல்லிக்கலையே, பின் ஏன் அதை வம்புக்கு நீ இழுக்கிறாய்?" என்றதாம் மான்.

" நீங்க சொல்லும்போது அமைதியாய் அது இருந்ததால், நீங்கள் சொல்வதை ஆமோதித்ததாகத் தானே அர்த்தம் ?" என்றதாம் முயலும்  விடாமல்.

எல்லாவற்றையும் வெறுமனே கேட்டுக்கொண்டிருந்த ஆமைக்கு, முயலின் மன ஓட்டம் புரிந்து விட்டது.....அது தன்னைப்பார்த்து பொறாமைப்படுகிறது என்று தெரிந்து கொண்டது. எனவே, அது மென்மையாக புன்னகைத்து, " என்ன உன் போட்டி, சொல்லு என்னால் முடியுமா என்று பார்க்கிறேன்"..........என்றதாம்.

'உன்னால் என்ன உன் பாட்டானாலும் நான் சொல்வதை செய்ய முடியாது ' என்று mind voice இல்  நினைத்ததாம்  அந்த முயல்.......ஆனால் வாயில் , " என்னுடன் நீ ஓட்டப்பந்தயத்துக்கு வரியா? " என்றதாம்.....................

இதக்  கேட்டதும் எல்லா மிருகங்களும் கை கொட்டி சிரித்ததாம்......." என்ன உனக்கு மூளைக் கெட்டு போச்சா? , பாவம் ஆமையைப் பொய் ஓட்டப்பந்தயத்துக்கு கூப்பிடுகிறாயே?...நியாயமா? " என்றதுகளாம்.

ஆனால் ஆமை மட்டும் கலங்காமல் , "சரி" என்றதாம்.

இப்போ எல்லா மிருகங்களும் , ஆமை யைப்பர்த்து, " உனக்கு என்ன பைத்தியமா?..........துள்ளி ஓடும் முயலுடன் " ...என்று தொடரும் முன்பே,

ஆமை, " எப்போ போட்டி வெச்சுக்கலாம்?" என்றதாம்.

முயலும் , " இதோ இப்போவே"...........என்றதாம்.

இவ்வளவு ஆனதும் மற்ற மிருகங்கள் எல்லாம் தங்களுக்குள் 'சல சல' வென பேசிக்கொண்டதே தவிர, இவங்க  போட்டி பத்தி எதுவும் பேசலையாம். பார்க்க மட்டும் ஆர்வம் காட்டியதுகளாம்.  

எங்கிருந்து எங்கு ஓடணும் , யார் அம்பயர் என்றெல்லாம் முடிவு செய்ததுகளாம்.

கிளி,  முதலில் விசில்  அடித்து போட்டியை துவக்க ஒப்புக்கொண்டதாம் .

முயல் மற்றும் ஆமை இன் கூடவெ பறந்து அவர்களை பின்தொடர காகம் ஒப்புக்கொண்டதாம்.

'வின்னிங் ஸ்பாட்' இல் ஒரு அழகிய கலை மான் நின்று கொண்டதாம்.

எல்லோரும் இந்த அதிசய ஓட்டப்பந்தயத்தை பார்க்க இரண்டு பக்கமும் குவிந்தார்களாம்.


தொடரும்.......................


Last edited by krishnaamma on Thu Oct 15, 2015 9:32 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 24 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Thu Oct 15, 2015 1:23 am

கிளி விசில் அடிக்க,  போட்டி ஆரம்பித்ததாம். விசில் அடித்ததுமே  முயல்  துள்ளி துள்ளி ஓடித்தாம் .இரண்டே நிமிடத்தில் மற்ற மிருகங்களின் கண்களில் இருந்து அது மறைந்து விட்டது...ஆனால் பாவம் ஆமை மெல்ல 4 அடி தான் எடுத்து வைத்திருந்தது..............' இது வின்னிங் போஸ்ட் க்கு போவதற்குள் அந்த முயலின் ஆயுசே முடிந்து விடப்போகிறது ' என்று மற்ற மிருகங்கள் பேசி சிரித்ததாம்.  

ஆனால் அந்த பேச்சு தன காதில் விழாதது போலவே ஒன்றும் பேசாமல் than ' கருமமே கண்ணாக' இருந்ததாம்  ஆமை. மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்து சீராகவும் உறுதியாகவும் நம்பிக்கையுடனும்  நடந்ததாம். காக்காஇன் பாடுதான் திண்டாட்டமாய் போச்சாம், அது பாவம் அங்கும் இங்கும் பறந்ததாம்.

இதை பார்த்ததும் மற்றும் ஒரு காக்கை அதன் உதவிக்கு வந்ததாம், "நான் ஆமையை பார்த்துக்கொள்கிறேன், நீ முயலை பார்த்துக்கொள்" என்றதாம்.

நிம்மதியாக அந்த காக்கையும் முயலை பார்க்க  சென்று விட்டதாம். வேகமாக ஓடிய முயலுக்கு மூச்சு  வாங்கியதாம். திரும்பிப்பார்த்தால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இல் ஆமையைக்காணும், சரி கொஞ்ச நேரம் உட்கார்ந்து ஓய்வு எடுத்துவிட்டு பிறகு ஓடலாம் என்று நினைத்ததாம்.

நல்ல மரநிழலாய் பார்த்து உட்கார்ந்து தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டதாம் . உட்கார்ந்ததும் அதற்கு இப்போ வியர்வை அடங்கி, தாகம் எடுத்ததாம். சுத்தும் முத்தும் பார்த்ததாம் அந்த முயல்.................அருகிலேயே ஓடிய நதியை பார்த்ததாம்..... அங்கு  போய் தண்ணீர் குடித்து தாகத்தை தனித்துக்கொண்டதாம்.

மீண்டும் மரத்தடிக்கு வந்ததாம். இதையெல்லாம் இதை பின் தொடர்ந்து வந்த காகம் பார்த்துக்கொண்டே இருந்ததாம். முயல் மீண்டும் ஓடப்போகிறது என்று நினைத்த காக்காவுக்கு ஏமாத்தமே மிஞ்சியதாம். முயல் மீண்டும் மரத்தடிக்கு வந்ததுடன் இல்லாமல் நல்லா 'ஹாய்'யாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டதாம்.
சரி என்று அந்த காக்கையும் மரக்கிளை இல் உட்கார்ந்து கொண்டதாம்.

நல்ல 'குளு குளு' காத்து வீசினதாலே, ஓடிவந்த களைப்பில் அந்த முயலுக்கு தூக்கம் கண்ணை சுத்திண்டு வந்ததாம். 'இந்த ஆமை வருவதற்குள்ளே நான் ஒரு குட்டித் தூக்கமே போட்டுவிடுவேன்..........அதோ தெரிகிறது 'வின்னிங் போஸ்ட்' ஒரே தாவாக தாவிடுவேன்'...............என்று நினைத்துக்கொண்டு 'ஜாம்' என்று நன்னா படுத்துண்டு, தூங்கிப்  போச்சாம்.

இதன் எண்ணம் காக்கைக்கு தெரியாததால், அதற்கு ஒரே ஆச்சர்யமாம்.....என்ன இது ஓடிப் போய் வின்னிங் போஸ்ட் ஐ  தொடாமல், தூங்குகிறதே, என்று பார்த்ததாம்........என்றாலும், தன் வேலை முயலை கண்காணிப்பது மட்டுமே என்று நினைத்து பேசாமல் அதுவும் அதே மரத்தின் மேலே உட்கார்ந்து கொண்டு, நடப்பதை பார்த்துக்கொண்டு, பேசாமல்  இருந்ததாம்.

திடீரென்று பெரிய கரகோஷம் கேட்டதாம். தூக்கி வாரிப் போட்டு முயல் முழிச்சு பார்த்ததாம்............. 'வின்னிங் போஸ்ட்' இல் எல்லா மிருகங்களும்  ஒரே கூப்பாடு போட்டுக்கொண்டு குதித்துக்கொண்டு இருந்ததுகளாம். சட்டென்று ஓடிப்போய் பார்த்ததாம் முயல்...............

பார்த்தால் ,..............எல்லா மிருகங்களும் ஆமையை பாராட்டிக்கொண்டு இருந்ததாம், அதனுடன் 'செல்பி' எடுத்துக் கொண்டதுகளாம்.....ஒரே அமர்க்களமாய் இருந்ததாம் .............இந்த நேரத்தில் ஒன்று முயலை பார்த்து விட்டதாம்..............

" ஹேய், அங்கே பாரேன் அந்த முயல் வந்தாச்சு"என்று கத்தித்தாம்   .................உடனே  எல்லாம் முயலை சூழந்து கொண்டு , " என்னப்பா, என்ன ஆச்சு பார்த்தியா?...........வீணாய் வலுச்சண்டைக்கு வந்தியே, தேவையா உனக்கு ?"....என்று கேட்டதுகளாம்.

முயலுக்கு ரொம்ப அவமானமாய் போச்சாம்.......அதனால் இனி யார்முகத்திலும் விழிக்கக் கூடாது என்று 'பதுங்கி பதுங்கி' வாழ்கிறதாம் இன்று வரை. தேவையா இது...எதுக்கு வீணாக பொறாமைப் படணும், இப்படி கஷ்டப்படணும்?

அதற்கு 2 விஷயம் தெரியலை.

1. Over  confidence  கூடாது............... கூடாது  கூடாது  கூடாது
2. Slow  and   Steady  wins  the  race ................. சூப்பருங்க

இது ரெண்டையும் நீங்க,( குழந்தைகள்) நிச்சயம் நினைவு வைத்துக்கொள்ளணும். மேலும் யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது. ஒருத்தொருத்தருக்கும் ஒவ்வொரு நல்ல குணங்கள் இருக்கும்....யாரும் மட்டமும் இல்ல யாரும் உசத்தியும் இல்லை .....பொறாமை கூடவே கூடாது..............ஓகே வா கண்ணுங்களா? புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 24 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by shobana sahas Thu Oct 15, 2015 3:09 am

அஹ்ஹா . ... ரொம்ப அருமையாக எழுதி உள்ளீர்கள் க்ரிஷ்ணாம்மா . தெரிந்த கதை தான் என்றாலும் உங்கள் கற்பனை, கைவண்ணத்தில் ரொம்ப ஜோர்ஆக வந்துள்ளது . பல அறிவியல் உண்மையையும் கலந்து கொடுத்துள்ளீர்கள் .
உங்களுக்கு என் பாராட்டுக்கள் . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க கதை சொல்லுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான் .
வி பொ பா க்ரிஷ்ணாம்மா . சூப்பர் ...
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 24 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by M.Jagadeesan Thu Oct 15, 2015 9:06 am

கதையில் நீங்கள் ஏற்படுத்திய மாற்றங்கள் ரசிக்கும்படி இருந்தன !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 24 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Thu Oct 15, 2015 10:11 am

shobana sahas wrote:அஹ்ஹா . ... ரொம்ப அருமையாக எழுதி உள்ளீர்கள் க்ரிஷ்ணாம்மா . தெரிந்த கதை தான் என்றாலும் உங்கள் கற்பனை, கைவண்ணத்தில் ரொம்ப ஜோர்ஆக வந்துள்ளது . பல அறிவியல் உண்மையையும் கலந்து கொடுத்துள்ளீர்கள் .
உங்களுக்கு என் பாராட்டுக்கள் . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க  கதை சொல்லுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான் .
வி பொ பா க்ரிஷ்ணாம்மா . சூப்பர் ...

மிக்க நன்றி ஷோபனா ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
.
.
அந்த படங்களை தொட்டு ப்பார்த்தீகலா ஷோபனா, முயல் முதலில் இருந்தாலும் ஆமை படத்தின் அருகே 'கர்சரைக்' கொண்டுபோய் பாருங்களேன் புன்னகை....................

ஆமாம் ஷோபனா, கதைகளின் நடுவே நாம் இப்படி சிலது சொல்லிடனும், பாடமாய் சொன்னால் மனதில் நிற்காது, போர் அடிக்கும், இப்படி சொல்லும்போது ஆர்வமாய் கேட்பார்கள். அவர்களுக்குப் பிடித்த விலங்கு பேர் சொல்லி, அது எத்தனை நாள் இருக்கும் என்று கேட்பார்கள்.......நீங்கள் வேண்டுமானால் பாருங்களேன், சேஷு கேட்பான் ' அம்மா நாய் எத்தனை வருடம் இருக்கும்' என்று புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 24 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Thu Oct 15, 2015 10:25 am

M.Jagadeesan wrote:கதையில் நீங்கள் ஏற்படுத்திய மாற்றங்கள் ரசிக்கும்படி இருந்தன !
மேற்கோள் செய்த பதிவு: 1169062

மிக்க நன்றி ஐயா புன்னகை.......இந்தக்காலத்து குழந்தைகளுக்கு ஏற்றவாறு சொல்லணும் ஐயா, 'எப்படி ஆமையும் முயலும் ரேஸ் வெச்சுது'.......என்று தலை இல் அடித்துக்கொள்வார்கள் புன்னகை.................அதனால் தான் பலமான பேஸ் போட்டேன் புன்னகை
.
.
அடுத்த கதை பாருங்கோ இன்னும் நல்லா இருக்கும் !............... நடனம் நடனம் நடனம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 24 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by விமந்தனி Thu Oct 15, 2015 10:46 am

அடேயப்பா! 16 கதைகள் ஓடிடுச்சா.... அதிர்ச்சி மெதுவா படிக்கிறேன் கிருஷ்ணாம்மா. நானும் ஆமை தான். சோகம் கொஞ்சம் லேட்டாகும். புன்னகை புன்னகை


தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 24 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 24 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Thu Oct 15, 2015 10:48 am

விமந்தனி wrote:அடேயப்பா! 16 கதைகள் ஓடிடுச்சா.... அதிர்ச்சி மெதுவா படிக்கிறேன் கிருஷ்ணாம்மா. நானும் ஆமை தான். சோகம் கொஞ்சம் லேட்டாகும். புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1169107

என்ன அவசரம், மெல்ல படியுங்கோ புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 24 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Thu Oct 15, 2015 11:54 pm

அடுத்த கதை 17. ஆமையும் முயலும்............மற்றும் ஒரு கதை புன்னகை.......நாளை !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 24 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by shobana sahas Fri Oct 16, 2015 2:14 am

அது என்ன ..... தெரியாதே க்ரிஷ்ணாம்மா ?
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 24 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 24 of 46 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 35 ... 46  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum