ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

+19
mbalasaravanan
rejeetharakan
ayyasamy ram
K.Senthil kumar
பழ.முத்துராமலிங்கம்
Hari Prasath
sundarr.sa
சசி
Namasivayam Mu
ஜாஹீதாபானு
விஸ்வாஜீ
M.Jagadeesan
வேல்முருகன்
Aarthi Krishna
விமந்தனி
சரவணன்
balakarthik
shobana sahas
krishnaamma
23 posters

Page 16 of 46 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 31 ... 46  Next

Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 16 Empty தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Wed Jul 22, 2015 6:02 pm

First topic message reminder :



தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............


இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் புன்னகை

இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே,  நீங்களும் பதிவு போடுங்கள்................புன்னகை


முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............


Last edited by krishnaamma on Sat Aug 01, 2015 9:24 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 16 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by shobana sahas Thu Aug 20, 2015 1:23 am

krishnaamma wrote:
shobana sahas wrote:காத்திருக்கிறோம் க்ரிஷ்ணாம்மா .
மேற்கோள் செய்த பதிவு: 1158146

இன்னைக்கு கொஞ்சம் படித்துக்கொண்டே இருந்து விட்டேன், நாளை போடறேன் ஷோபனா புன்னகை ....நன்றி !
மேற்கோள் செய்த பதிவு: 1158169
ஒகே ம்மா ..
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 16 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Thu Aug 20, 2015 10:56 am

அடுத்த கதை 9. பாம்பும் முனிவரும் !

ஒரு ஊருக்கு பக்கத்தில் காடு இருந்ததாம். அதன் வழியே போனால் அடுத்த ஊருக்கு சிக்கிரம் போகலாம், இது குறுக்கு வழி. அப்படி சுலபமாய் அடுத்த ஊருக்கு போய் வந்தார்கள் இந்த ஊர் மக்கள்.

ஒருநாள் அந்த காட்டு வழி இல் இருந்த ஒரு புற்றில் ஒரு பாம்பு வந்து தங்கியதாம். அது போவோர் வருவோரை கடித்ததால், எல்லோரும் அந்த வழியே போக பயந்தாங்களாம்.  

பாம்புப் புற்று இருந்த பாதை அந்த ஊருக்கும் பக்கத்து சந்தைக்கும் குறுக்கு வழியாக இருந்தது இந்த ஊர் மக்களுக்கு ரொம்ப வசதியாக இருந்ததாம்.....இப்போ இந்த  பாம்புக்கு பயந்தே ஊர் மக்கள் ரொம்ப தூரம் சுற்றி அந்த சந்தைக்குப் போய் வந்து கொண்டிருந்தார்களாம்.  

அவங்களுக்கு வேறு வழியில்லாததால் சலிப்பாகவே வாழ்க்கையை நடத்தினாங்கலாம் .
ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு முனிவர்  வந்தாராம். அவர் அந்த வழியாக அடுத்த ஊருக்கு போக முயலும் போது ஊர் மக்கள் "வேண்டாம் சாமி" என்று தடுத்தாங்களாம் .

அவரும் " ஏன்?" என்று கேட்கவே , இவங்க அந்த பாம்பு பத்தி சொன்னாங்களாம் .

இவரும், " ஒ..அப்படியா சங்கதி, நான் இப்போவே சரி பண்ணறேன், நீங்க கவலைப்படாமல் நாளை முதல் இந்த வழியை பயன் படுத்தலாம் " என்று சொல்லி போனாராம்.

மக்களுக்க்கு  ஒரே சந்தோஷமாய் போச்சாம். இந்த முனிவரை வாழ்த்தி வணங்கினாங்களாம். முனிவர் நேரே பாம்பு புத்துக்கு கிட்டே போனாராம்.

தன் புத்துகிட்டே வரும் முனிவரை பார்த்ததாம் அந்த பாம்பு, உடனே வெளியே வந்து அவரை வணங்கி, " ஸ்வாமி, நான் போன பிறவியில் என்ன பாவம் செய்தேனோ,  இந்தப் பிறவியில் பாம்பாகப் பிறந்திருக்கேன் ..........அதனால் மீண்டும் பிறவாதிருக்க நான் என்ன செய்யவேண்டும் தயவுசெய்து எனக்கு உபதேசம் செய்ய வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டதாம்.

இப்படி அது கேட்டதும் முனிவருக்கு ரொம்ப சந்தோஷமாய் இருந்ததாம். அவர்  சிரித்துக்கொண்டே,
“நீ இந்தப் பிறவியில் யாரையும் கடித்துத் துன்புறுத்தாமல் இருந்தால் போதும். உனக்கு அடுத்த
பிறவியில் நல்ல உயர்ந்த பிறவி கிட்டும்” என்று உபதேசித்தாராம். அதற்கு  ஆசியும் வழங்கினாராம்.

அதைக் கேட்ததும் அந்த  பாம்பு ரொம்ப சந்தோஷமாகி , மீண்டும்  அவரை வணங்கி விட்டு போனதாம்.மறுநாள் முதல் அந்த கிராம வாசிகள் அந்த வழியாக போகும்போது, இது பேசாமல் தன் புத்திலேயே இருந்ததாம்.

வெளியே அரவம் கேட்டாலும் சும்மா எட்டிப்பார்க்குமே  தவிர யாரையும் எதுவும் செய்யாமல் இருந்ததாம்.

மிருகங்கள் எப்போதுமே சத்தியத்துக்கு கட்டுப்பட்டவை, மனிதன் மட்டுமே சத்தியத்தை மீறுவான். சோகம்....இது கசப்பான நிஜம்........இந்த கிராம வாசிகளுக்கு பாம்பு சும்மா இருப்பது கண்டு பொறுக்கலை, அதன் மேலே சின்ன சின்ன கல்லை  வீசினார்களாம்

தொடரும்.......................


Last edited by krishnaamma on Wed Sep 02, 2015 10:47 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 16 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Thu Aug 20, 2015 10:58 am

பாவம் அப்போவும் அந்த பாம்பு ஒண்ணும் செய்யலை.... அதனால் தைரியம் அதிகமாகி அதன் கிட்டே போய் அதை அடித்தார்களாம் . அப்போதும் அது பாவம் தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள  ஓடிப்போய் விட்டதாம்.

இப்படியே கொஞ்சநாள் போச்சாம். அந்த  முனிவர் மீண்டும் இந்த ஊருக்கு வந்தாராம். ஊரின்  நிலைமையை பார்த்தாராம், எல்லோரும் குறுக்கு பாதையை  உப்யோகித்துக்கொண்டிருந்ததை பார்த்து, திருப்தியாச்சாம் அவருக்கு .  

சரி பாம்பையும் ஒருமுறை பார்த்துவிட்டு போகலாம் என்று நினைத்து புற்றின் அருகே போனாராம். அங்கே  பாம்பு இல்லை, புத்தும் சிதைந்து இருந்ததாம். அதை பார்த்ததுமே அங்கு என்ன நடந்திருக்கும் என்று அவருக்கு புரிஞ்சு போச்சாம்.

அடாடா ...........நம்மால்தானே இந்த பாம்புக்கு இந்த கதி, என்று வருத்தப்பட்டு பாம்பை தேடி சென்றாராம்.


ஓரிடத்தில் ரத்த கரைகளை பார்த்த முனிவர் , அதை தொடர்ந்து சென்றாராம்.அங்கு பார்த்தல், ஊர்ந்து செல்ல முடியாதபடி உடல் முழுவதும் காயம்......ரத்தம்
சிந்தும் உடலுடன், அந்த பாம்பு படுத்திருந்ததாம்.

முனிவர் குரல் கேட்டதும்,  வலியுடன் நகர்ந்து போய், முனிவர் முன் நின்றது.  ரத்தம் சொட்டும் உடம்புடன் வந்து நின்ற பாம்பைப் பார்த்து திடுக்கிட்ட முனிவர்,”என்ன ஆச்சு, ?ஏன் இப்படி காயப் பட்டு வந்திருக்கிறாய்?”என்று அன்போடும் கவலையோடும் கேட்டாராம்.

"நாம்தான் யாரையும் கடிப்பதில்லை யாருக்கும் தீங்கு செய்வதில்லை என
முனிவரிடம் கூறிவிட்டோமே என்று நான் அமைதியாக இருந்தேன் ......அதற்கான பரிசு இது" என்று
துக்கம் தொண்டையை அடைக்க கூறியது பாம்பு.

மேலும்  சொன்னதாம் , “ஸ்வாமி , நீங்கள் சொன்னபடியே யாரையும் கடிப்பதில்லை என முடிவு செய்து விட்டோமே என்று புத்துக்கு உள்ளேயே தான் இருந்தேன், அவர்கள் போக வர நான் எதுவும் தடை செய்யவில்லை..........ஆனால் அவர்கள் என்னை........என்று மேலே சொல்ல முடியாமல் கண்ணீர் வடித்தது...............அந்த பாம்பு............. அழுகை  அழுகை  அழுகை

அதன் பரிதாப நிலைக்கு இறங்கிய முனிவர் அதன் காயத்துக்கு மருந்து போட்டபடி, அதனிடம் அன்பாக  பேசினார் .

“உன்னைக் கடிக்காதே என்றுதானே சொன்னேன்.
நீ உன் பிறவிகுணத்தைக் காட்டவேண்டியதுதானே?” என்றார் சிரித்தவாறே.

பாம்புக்குப் புரியவில்லை...........அது “என்ன ஸ்வாமி சொல்கிறீர்கள்.....புரியலையே ?”என்று கேட்டது.

“ஆமாம் உன் பாம்பு குணமான சீறும் குணத்தைக் காட்டியிருந்தால், அவர்கள் பயந்து
ஓடியிருப்பார்கள்.............. நீயும் அடிபடாமல் தப்பியிருக்கலாமே ” என்றார்.

இதைக்கேட்டதும் பாம்புக்கு ரொம்ப சந்தோஷமாய் போச்சாம்..........அதுவும் புன்னகித்தவாறே, “உண்மைதான் சுவாமி நீங்கள் கடித்துத் துன்புறுத்தாதே என்றுதான் கூறினீர்கள் சீறிப் பயமுறுத்தாதே என்று சொல்லவில்லையே”....என்றதாம்.

புன்னகையோடு அந்தப் பதிலை ஏற்றுக் கொண்ட முனிவர் பாம்புக்கு விடை கொடுத்து அனுப்பினார்.

சில நாட்கள் கழித்து அந்தப் பாம்பு காட்டின் எல்லையில் ஒரு பாறை அருகே
படுத்திருந்தது. அப்போது சில மாடு மேய்க்கும் பசங்க அங்கு வந்தனர்.
பாம்பு படுத்திருப்பதைப் பார்த்தனர்.

உடனே, கல்லை  எடுத்து அடிக்க பார்த்தனர். அவங்க  கிட்டே வந்தாங்க பாரு , அவ்வளவுதான், பாம்பு தன் படத்தை விரித்து .............." புஸ்" என ஒரு சீறல் சீறித்தாம் பாரு.....எல்லா பசங்களும் ஓடிட்டாங்களாம்   ஜாலி ஜாலி ஜாலி  

அவங்க எல்லோரும் அவா அவா மாடுகளை ஒட்டிக்கொண்டு ஊரைப்பார்க்க போய்விட்டார்களாம்.
பாம்பு நிம்மதியாய் மூச்சு விட்டு, தன் புத்துக்கு வந்து சேர்ந்ததாம்.

அடுத்த பிறவி நல்ல பிறவியாக அமையணுமானால்,

இப்பிறவியில் யாருக்கும் தீங்கு செய்யாமல் இருக்கவேண்டும் என்ற கொள்கையைக்
கடைபிடித்தது அந்தப் பாம்பு.அதே போல் தனக்கு தீமை  வந்தால்,  தன் குணத்தைக் காட்டித் தப்பிப்பதும் தவறு அல்ல என்பதைப் புரிந்து கொண்டது அந்தப் பாம்பு.

என்ன குட்டிகளா , உங்களுக்கும் புரிந்ததா, சாதுவா இருக்க வேண்டியதுதான், "வீண் சண்டைக்குத்தான் போகக்கூடாதே தவிர வந்த சண்டையை விடக்கூடாது".......

" தன்னைக்கொல்ல வந்த பசுவையும் கொல்லலாம்" என்கிறது மனு நீதி புன்னகை...புரிஞ்சுதா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 16 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by shobana sahas Thu Aug 20, 2015 10:00 pm

க்ரிஷ்ணாம்மா , ரொம்ப நல்ல கதை . இந்த காலத்திற்கு ஏற்றார் போல் உள்ளது . அருமை ...
கருத்தாழம் மிக்க கதை ... குழந்தைகளுக்கு "எங்கு வாயை தொரக்கனுமோ அங்கு தொரக்கனும் ..." என்று சொல்வது போல் உள்ளது .. சூப்பர் . வாழ்த்துக்கள் அம்மா . நன்றி . வி பொ பா
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 16 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Fri Aug 21, 2015 2:41 am

shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா , ரொம்ப நல்ல கதை . இந்த காலத்திற்கு ஏற்றார் போல் உள்ளது . அருமை ...
கருத்தாழம் மிக்க கதை ... குழந்தைகளுக்கு "எங்கு வாயை தொரக்கனுமோ அங்கு தொரக்கனும் ..." என்று சொல்வது போல் உள்ளது .. சூப்பர் . வாழ்த்துக்கள் அம்மா . நன்றி . வி பொ பா
மேற்கோள் செய்த பதிவு: 1158351

நன்றி ஷோபனா..........ஆமாம் எதுக்கு NO சொல்லணும் என்றும் தெரிந்திருக்கணும், கொஞ்சம் மழுமாடினாலும் போச்சு புன்னகை
.
.
.
நாளை அடுத்த கதை புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 16 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Tue Aug 25, 2015 11:36 am

அடுத்த கதை 10. ஒரு ஆமை, ஒரு மீன், ஒரு நண்டு மற்றும் ஒரு தவளை  கதை.....இன்று இரவு அல்லது நாளை புன்னகை
.
.
.
.
கதை என்ன என்று ஊகித்து விட்டீர்களா? புன்னகை


Last edited by krishnaamma on Wed Sep 02, 2015 10:47 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 16 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Thu Aug 27, 2015 1:48 am

அடுத்த கதை 10. ஒரு ஆமை, ஒரு மீன், ஒரு நண்டு மற்றும் ஒரு தவளை  கதை !

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 16 SomSPWNuSOuc6VR5bZln+tumblr_m05tw8r3801rp2w10o1_500

ஒரு குளத்தில் ஒரு ஆமை, ஒரு மீன், ஒரு நண்டு மற்றும் ஒரு தவளை  வாழ்ந்து வந்ததாம். ஒருநாள் ஒரு மீனவன் அந்த குளத்தை பார்த்தானாம். கூட வந்த வந்தவனிடம் சொன்னானாம்,

" நான் இப்போ த்தான் இந்த குளத்தை பார்க்கிறேன், நாளை வந்து மீன் பிடிக்கப் போகிறேன்" .

இதை கேட்ட ஆமை இந்த செய்தியை உடனே தன் நண்பர்களிடம் சொன்னதாம். எல்லாத்துக்கும் ரொம்ப கவலையாய் போச்சாம்.......என்ன  பண்ணுவது என்று பேச எல்லாம் ஒன்று கூடினார்களாம்.

" அந்த வலைஞனிடமிருந்து எப்படி தப்பிப்பது"  என்று தவளை முதலில் கேட்டதாம்.

அதுக்கு  அந்த ஆமை , "எனக்கு ஆயிரம்  வழி இருக்கு நான் ஏதாவது ஒன்றை செய்து தப்பித்துவிடுவேன்" என்றதாம்.

அடுத்து மீன் சொல்லித்தாம், "எனக்கு 100 வழி இருக்கு அதில் நான் ஏதாவது ஒன்றை செய்து தப்பித்துவிடுவேன்" என்றதாம்.

அடுத்து இருந்த நண்டு  சொல்லித்தாம், எனக்கு 10 வழி இருக்கு, அதில் நான் ஏதாவது ஒன்றை செய்து தப்பித்துவிடுவேன்" என்றதாம்.

"எங்களைக் கேட்கிராயே நீ என்ன செய்யப்போகிறாய்?"  என்று எல்லாம் சேர்ந்து தவளையைக் கேட்டதாம்.

அதற்கு அந்த தவளை சோகமாய் எனக்கு ஒரே ஒரு வழி தான் தெரியும் , அதை வைத்துத் தப்பிக்க பார்க்கிறேன்" என்றதாம்.

ஹும்...........நாளை என்ன நடக்கப்போகிறதோ என்று வருத்தத்துடன், எல்லோரும் தூங்க போய்விட்டார்களாம்.............

மறுநாள் காலை அந்த வலைஞன் வந்தானாம்..............முதலில் அவன் கண்ணில்  பட்டது அந்த ஆமை தான், அதை பிடித்து கவுத்து போட்டானாம்................

( இப்போ நாம் குழந்தைகளை கேட்கணும்,

"ஆமையை கவுத்து போட்டால் என்ன ஆகும்?".என்று............அதுகள் சொன்னால் ஓகே இல்லாவிட்டால், நாம் சொல்லணும். ....ஆமையை கவுத்து போட்டால், ஓட்டின் கனத்தை தூக்கிக் கொண்டு அதால் திரும்ப முடியாமல் அது இறந்து விடும் என்று புன்னகை )

அடுத்து தூண்டிலை போட்டானாம், மீன் சிக்கி விட்டதாம். அதை பிடித்து தன் அரைஞாண் கொடி இல் கோர்த்துக் கொண்டானாம்.

அடுத்து , அங்கும் இங்கும் ஓடிய நண்டை பார்த்தானாம் , அதை லாவகமாய் பிடித்து, அதன் கால்களை முறித்து, தன் சட்டி இல் போட்டுக்கொண்டானாம்.

அடுத்தது தவளை மட்டுமே பாக்கி, அதை பிடிக்க  குனிந்தானாம், அது தள்ளி போய் குதித்ததாம், சரி என்று அங்கு போனானாம்.......அது இங்கு குதித்ததாம்............."அடடா " என்று சொல்லிக்கொண்டே மறுபடி  முயன்றானாம்..........

அவன் பிடிக்க குனிந்ததும், அது தள்ளி போய் குதித்ததாம், சரி என்று அங்கு போனானாம்.......அது இங்கு குதித்ததாம்....இப்படியாக பலமுறை நடந்ததாம்....ஆவனுக்கு இடுப்பு வலித்தது தான் மிச்சம் , தவளை யை பிடிக்க முடியலை அவனால்..........

"ச்சே!" போகட்டும் என்று சொல்லிக்கொண்டே, மற்றவற்றை எடுத்துக்கொண்டு , நடையை கட்டினானாம் புன்னகை

இந்த தவளைக்கு ரொம்ப சந்தோஷமாய் போச்சாம், தன்னுடைய ஒரே ஒரு  யுக்தியே நல்லபடி   பலித்துவிட்டதே என்று. ஆனாலும் , தன் நண்பர்கள் அவ்வளவு வழிகளை வைத்துக்கொண்டு ஏன் அவனிடம் மாட்டி இறந்தார்கள் என்று அதற்கு புரியலையாம்.

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 16 RTZMKuIvQFiy9xJgo7fg+frog_jump

அது பாட்டுக்கு குதித்துக்கொண்டே இந்த பாட்டை  பாடியதாம் :

ஆயரத்தி  பத்தர  மல்லாத்தர ,

நூத்தி பத்தர கோத்தர,

பைத்து பத்தர முறித்தர,

ஏக பத்தர தத்தர பித்தர தப்பித்தர...............என்று பாடிக்கொண்டே குதித்து குதித்து ஓடிபோச்சாம்  ஜாலி  ஜாலி  ஜாலி


Last edited by krishnaamma on Wed Sep 02, 2015 10:48 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 16 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by shobana sahas Thu Aug 27, 2015 3:57 am

ரொம்ப அருமை க்ரிஷ்ணாம்மா. இந்த கதையை நான் கேட்டதே இல்லை. அருமையாகவும் சுவாரசியம் ஆகவும் இருந்தது படிப்பதற்கு . உங்கள் கிராபிக்ஸ் தவளை குதிப்பது சூப்பர்... கதையில் சின்ன அறிவியல் உண்மையும் உள்ளது ... ஆமை யை பற்றி...
ரொம்ப அருமை க்ரிஷ்ணாம்மா . உங்களுக்கு எவ்வளோ பாராட்டுக்களும் , நன்றிகளும் சொல்லிக்கொண்டே இருக்கலாம் .
வி பொ பா.
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 16 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Thu Aug 27, 2015 10:57 am

shobana sahas wrote:ரொம்ப அருமை க்ரிஷ்ணாம்மா. இந்த கதையை நான் கேட்டதே இல்லை. அருமையாகவும் சுவாரசியம் ஆகவும் இருந்தது படிப்பதற்கு . உங்கள் கிராபிக்ஸ் தவளை குதிப்பது சூப்பர்... கதையில் சின்ன அறிவியல் உண்மையும் உள்ளது ... ஆமை யை பற்றி...
ரொம்ப அருமை க்ரிஷ்ணாம்மா . உங்களுக்கு எவ்வளோ பாராட்டுக்களும் , நன்றிகளும் சொல்லிக்கொண்டே இருக்கலாம் .
வி பொ பா.
மேற்கோள் செய்த பதிவு: 1159046

ஹேய் ஷோபனா, ........ஓகே ஓகே.......மிக்க நன்றி !...........ஏதோ என்னால் ஆனது..............இங்கே உடார்ந்து கொண்டே உங்களுக்கு கதை சொல்கிறேன் பாருங்கோ ஜாலி ஜாலி ஜாலி..............எனக்கு ரொம்ப சந்தோஷம் அதில் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 16 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by krishnaamma Fri Aug 28, 2015 3:33 pm

அடுத்த  கதை.11. புறாவும் கட்டெறும்பும்.......இன்று இரவு அல்லது நாளை புன்னகை


Last edited by krishnaamma on Wed Sep 02, 2015 10:49 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 16 Empty Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 16 of 46 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 31 ... 46  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum