புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  Poll_c10டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  Poll_m10டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  Poll_c10 
100 Posts - 48%
heezulia
டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  Poll_c10டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  Poll_m10டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  Poll_c10டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  Poll_m10டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  Poll_c10டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  Poll_m10டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  Poll_c10டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  Poll_m10டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  Poll_c10 
7 Posts - 3%
prajai
டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  Poll_c10டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  Poll_m10டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  Poll_c10டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  Poll_m10டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  Poll_c10 
2 Posts - 1%
Barushree
டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  Poll_c10டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  Poll_m10டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  Poll_c10டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  Poll_m10டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  Poll_c10டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  Poll_m10டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  Poll_c10டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  Poll_m10டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  Poll_c10 
227 Posts - 51%
heezulia
டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  Poll_c10டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  Poll_m10டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  Poll_c10டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  Poll_m10டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  Poll_c10டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  Poll_m10டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Karthikakulanthaivel
டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  Poll_c10டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  Poll_m10டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 20, 2015 9:31 pm

டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!

வலிகள் மிகுந்த தங்கள் வாழ்க்கையில் அன்பைத் தூவி, வெற்றுப் பாதையை வெற்றிச் சாதனையாக்கிய திருநங்கைகள் நால்வரைப் பற்றி..

டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  ZGSCslVdSceTw2e9ri4w+b_2480179f
1) பிரியா பாபு (எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர்):

திருநங்கைகள் சமூகத்தின் இலக்கிய முகங்களில் முக்கியமானவர் பிரியா பாபு. திருநங்கைகள் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளுக்குத் தொடர்ந்து குரல் கொடுப்பவர். இவரின் 'மூன்றாம் பாலின் முகம்' நூல் சென்னை, மதுரை, கோவையிலுள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையில் பிறந்தவரான பிரியா பாபு, 1970-களிலேயே சென்னை வந்துவிட்டார். வந்தவருக்கு வழக்கமாய் திருநங்கைகளுக்கு ஏற்படும் நிலையே நேர்ந்திருக்கிறது. பெரும்பாலான திருநங்கைகள் பிச்சை எடுத்தல் மற்றும் பாலியல் தொழிலையே செய்து கொண்டிருந்தனர். எல்லாவற்றையும் கண்டு மனமுடைந்த பிரியா, தற்செயலாக சு.சமுத்திரம் அவர்களின் 'வாடாமல்லி' நாவலைப் படித்தார். நாவலின் ஆதர்ச கதாபாத்திரமான சுயம்புவாகவே மாறிய பிரியா, வாழ்க்கையை அதன் போக்கில் எதிர்கொள்ளக் கற்றுக்கொண்டார்.

மும்பைக்குச் சென்று, சமூக சேவையாளராக தனது வேலையை ஆரம்பித்தவர், பாபு என்பவரைச் சந்தித்து, காதலித்து மணமும் செய்துகொண்டார்.

தமிழ்நாட்டையும் தாண்டி விரிவடைந்தது அவரின் பணி. திருநங்கைகளுக்கு வாக்களிக்கும் உரிமை வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முதல் மனு பிரியாவுடையது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரஜினியுடன் இணைந்து இதைச் செய்தார்.

வேலையைத் தாண்டி, பிரியா பாபுவுக்கு கலைகள் எப்போதும் கைவந்த கலை. திருநங்கைகள் சமூகம் சார்ந்து ஏராளமான விழிப்புணர்வு தரும் ஆவணப்படங்களை எடுத்தவர், தற்போது பழங்கால இலக்கியங்கள், பாடல்கள், கல்வெட்டுகளில் திருநங்கைகளைப் பற்றிக் காணப்படும் சரித்திர ஆதாரங்களை ஆவணப்படக் கதையாக எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

சென்னையில் குடியிருக்க வீடு தேடித்தேடி அலுத்துப்போனவர், ஒரு வருடம் முன்னர் மதுரைக்கே குடிபெயர்ந்திருக்கிறார். அவருக்கான திருமண வாழ்க்கையைப் பற்றிப் பேசும்போது, குரல் கம்முகிறது.

"நானும் பாபுவும், திருமணமாகி ஆறு வருடங்களுக்குப் பின்னர், பிரிந்துவிட்டோம். பாபுவின் குடும்பம், அவரின் குழந்தைக்கு ஆசைப்பட்டது. திருநங்கை என்பதால் என்னால் குழந்தை பெற்றுத்தர முடியாது என்று கூறிவிட்டனர்.

அதிலிருந்து மீண்டு வந்து இதோ உங்கள் முன் நிற்கிறேன்!" என்பவரின் முகத்தில் நம்பிக்கையின் ஆயிரம் வாட்ஸ் வெளிச்சம்.

2)செல்வி (பிஸியோதெரபிஸ்ட், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை):

"இந்த மனுஷன் இப்படிப் போட்டு என்னை சாகடிக்கிறானே?"

அழுது கொண்டே தன் முந்தானையால் முகத்தை மூடிக்கொண்டு அழுகிறார் அப்துலின் மனைவி. உடல்நலம் சரியில்லாமல் படுத்திருக்கும் அப்துலின் முகத்தில் எள்ளும் கொள்ளும், வெடிக்கிறது.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை. அரசு மருத்துவமனைக்கே உரிய பயமும், பதற்றமும், அவசரமும் அங்கே விரவிக் கிடக்கிறது. காலையிலே ரவுண்ட்ஸ் வந்த பிசியோதெரபிஸ்ட் செல்வி இதைப் பார்த்து, என்ன என்று கேட்கிறார்.

அவரைப் பார்த்தவுடனே உடைந்து விசும்பத் துவங்குகிறார் அப்துலின் மனைவி. "விடிகாலைல 3 மணில இருந்து, ஒரு நிமிஷம் கூடத் தூங்காம இந்தாளுக்குப் பக்கத்திலேயே நின்னுட்டு இருக்கேன்."

அடுத்த 20 நிமிடங்களில் அந்த இடமே மாறுகிறது. மூச்சை இழுத்து விடுமாறு அப்துலிடம் கூறும் செல்வி, அவரின் காலைத் தேய்த்துவிட்டவாறே, இருவரிடமும் வாழ்க்கை, விட்டுக்கொடுத்தல்,அன்பு, அக்கறை பற்றிப் பேசத் தொடங்குகிறார்.

சில நிமிடங்களில் தூய வெள்ளை நிறக் கோட்டுடன் கம்பீரமாய் செல்வி அடுத்த் நோயாளியை நோக்கி நகர்ந்த போது, அப்துலின் மனைவியின் கண்கள் காய்ந்து, முகத்தில் புன்னகை பளிச்சிடுகிறது. புன்னகைத்த செவிலியரைப் பார்த்து சினேகமாய்த் தலையசைக்கும் செல்வி, மருத்துவர்களுக்கு, புன்னகையுடனே வணக்கம் சொல்கிறார்.

டீன் ஏஜ் பையனாக சென்னை வந்த செல்வி, திருநங்கையாகி, அலுவலர், உடற்பயிற்சியாளர், முதலிய வேலைகளைச் செய்து, இன்று ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிஸியோதெரபிஸ்டாக இருக்கிறார். சொந்தமாக வைத்திருக்கும் கிளினிக்குக்கு வருபவர்களுக்கு இலவசமாக ஆலோசனையும் கூறுகிறார்.

திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து சென்னை வந்த செல்வியின் வாழ்க்கை படிப்பு, நண்பர்கள், ஒற்றை அறை, காதல், திருமணம், துரோகம், வலி, தற்கொலை முயற்சி, வேலை எனக் காலத்தின் ஓட்டத்தில் பல அத்தியாயங்களைக் கடந்து, அவரை கே.பாலசந்தரின் நாயகியாகவே மாற்றியிருக்கிறது.

டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  7d1fgEIS4mk4pbIWq4ew+a_2480162a

3)ஓல்கா (திருநங்கைகளுக்கான போராளி):

கான்வென்ட்டில் படிப்பு. உலகின் பல்வேறு இடங்களுக்குப் பயணித்து, அனேகமாய் எல்லா விதமான மனிதர்களையும் சந்தித்து, அலுவலக உதவியாளர் முதல் கர்ப்பிணிப் பெண்களுக்கான ஆலோசகர் வரை பணிபுரிந்தவர் ஓல்கா. தனியாளாய் நின்ற தன் அம்மாவால் வளர்க்கப்பட்டார்.

பொத்திப் பொத்தி வளர்க்கப்பட்ட குழந்தையான, ஓல்கா சிறு வயது சம்பவம் ஒன்றை நினைவுகூர்கிறார். "அப்போது பையன்கள் எல்லாம் ஒன்றாக நீச்சல் அடிப்பதற்காகச் செல்வோம். ஆனால் நான் சட்டை அணிந்து கொண்டுதான் செல்வேன். அப்போதே மற்ற பையன்கள் மாதிரி நாம் இல்லை என்றுதான் தோன்றும். அப்போதெல்லாம் புத்தகங்களே எனக்குத் துணை. நாளாக நாளாக பெண்ணாக வேண்டும் என்ற எண்ணம் என்னுள் வலுப்பெற்றது.

ஓர் ஆண் பெண்மையாக உணர்ந்தால் அவன் ஒதுக்கப்பட வேண்டும்; அதுவே ஒரு பெண் ஆணைப் போல நடந்துகொண்டால் அவள் கொண்டாடப்பட வேண்டும் என்னும் இடத்தில்தான் பிரச்சினை தொடங்குகிறது."

வளர்ந்ததும் மருத்துவரையும், அறுவை சிகிச்சை நிபுணரையும் சந்தித்த ஓல்கா, தன் அம்மாவின் ஒப்புதலோடு, பெண்ணாக மாறினார். 87 சதவீத மதிப்பெண்களோடு பள்ளியை விட்டு வெளியே வந்தார். மருத்துவக் கனவுகளோடு காத்திருந்தவருக்கு எந்தக் கல்லூரியிலும் இடம் கிடைக்கவில்லை. பல இடங்களில் முயன்று, கடைசியாக தொலைதூரக்கல்வி மூலம் கல்வி பயின்றார்.

தனக்கு ஏற்பட்ட நிலை, இப்போது எந்தத் திருநங்கைக்கும் வந்துவிடக்கூடாது என்று போராடி வருகிறார் ஓல்கா. ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக இருக்கும் ஓல்கா, சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் ஆணாதிக்கத்தை ஒழித்தாலே திருநங்கைகள் சந்திக்கும் பிரச்சினைகளைத் தீர்க்கமுடியும் என்கிறார்.

இளம் வயதிலேயே திருநங்கைகளுக்கு கிடைக்க வேண்டிய முறையான ஒதுக்கீடுகள் குறித்த கொள்கை மாற்றங்களைப் பற்றித் தீவிரமாகப் பேசும் ஓல்கா, திருநங்கைகளுக்கான பாகுபாடு எதிர்ப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவருவதையே இலக்காகக் கொண்டிருக்கிறார்.

4எஸ்தர் பாரதி (மத போதகர்):

ஒரு பிளாஸ்டிக் கவரில் எஸ்தர் பாரதியின் விலைமதிப்பற்ற உடைமை ஒன்று பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிறது. நீண்ட வெண்ணிற அங்கிதான் அது. அதை அணிந்தவுடனே பாரதியின் முகத்தில் கம்பீரம் ஒளிர்கிறது.

செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இந்திய மறு பிரவேச திருச்சபையின் முதல் போதகராக பொறுப்பேற்றுச் சாதனை படைத்தவர் பாரதி. தன் வேலையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் பயணித்தவருக்கு, உலகத்தையே சுற்றும் வாய்ப்பு கிடைத்தது. சென்ற இடங்களிலெல்லாம் வெறும் போதனையை மட்டுமே அளிக்காமல், திருநங்கைகளுக்கு விழிப்புணர்வை ஊட்டினார்.

"நான் கிராமத்தில் போதகராக இருந்தபோது, என்னைக் கடந்து செல்லும் மக்கள் வணக்கம் செலுத்திவிட்டுத்தான் செல்வர். திருநங்கை நண்பர்களை அழைத்துச் சென்றபோதும் கூட அப்பழக்கம் மாறவில்லை. அன்றைக்குத்தான் என்னைத் தத்து எடுத்துக்கொண்ட மதத்திலேயே முழுவதுமாய் அடைக்கலம் புகுந்தேன்.

என்னுடைய வாழ்க்கைப் பயணம் அத்தனை எளிதாக இருந்ததில்லை. ஏன் இப்பொழுதும் இருப்பதில்லை. ஆனாலும் இதுதான் என் பாதை என்பதில் தெளிவாக இருக்கிறேன் " என்கிறார் பாரதி.

வட சென்னையில் ஒற்றை அறை கொண்ட வீட்டில்தான் பாரதியின் வாசம். இன்னும்கூட நல்ல வீட்டில் அவரால் வாழ முடியும். ஆனால் திருநங்கை என்னும் அடையாளம், அவருக்கு எங்கும் வீடு கிடைக்க விடவில்லை.

நன்றி தி ஹிந்து
(தமிழில்: க.சே.ரமணி பிரபா தேவி)

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 20, 2015 9:37 pm

சமூகத்தில் உண்மையிலேயே ஒதுக்கப்பட்ட ஜாதி இவர்கள்தான் என எண்ணுகிறேன் .
நாமறிந்த நால்வரை தவிர , நம் /சமூகத்தில் பார்வைக்கு வெளிவராதவர்கள் பலர்
இருக்கலாம் .
மனிதாபமானத்துடன் இவர்களுடன் பழகுவோம் !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 20, 2015 10:27 pm

T.N.Balasubramanian wrote:சமூகத்தில் உண்மையிலேயே ஒதுக்கப்பட்ட ஜாதி இவர்கள்தான் என எண்ணுகிறேன் .
நாமறிந்த நால்வரை தவிர , நம் /சமூகத்தில் பார்வைக்கு வெளிவராதவர்கள் பலர்
இருக்கலாம் .
மனிதாபமானத்துடன் இவர்களுடன் பழகுவோம் !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1151800
-
மனித நேயம் காப்போம்...

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jul 20, 2015 11:54 pm

ayyasamy ram wrote:
T.N.Balasubramanian wrote:சமூகத்தில் உண்மையிலேயே ஒதுக்கப்பட்ட ஜாதி இவர்கள்தான் என எண்ணுகிறேன் .
நாமறிந்த நால்வரை தவிர , நம் /சமூகத்தில் பார்வைக்கு வெளிவராதவர்கள் பலர்
இருக்கலாம் .
மனிதாபமானத்துடன் இவர்களுடன் பழகுவோம் !

ரமணியன்

-
மனித நேயம் காப்போம்...

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonடாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jul 21, 2015 2:33 am

இவர்களை நான் விஜய் டிவி " நீயா நானா" வில் 2014 ஆண்டு பார்த்திருக்கிறேன் . பாராட்டுக்கள். கண்டிப்பாக இன்னும் 5 ஆண்டுகளில் அவர்கள் இன்னும் முன்னேறி இருப்பார்கள் ... அவர்களின் வளர்ச்சி நம் கைகளில் உள்ளது . நாம் அவர்களை ஒதுக்காமல் , தவறாக பார்க்காமல் , இருந்தாலே அவர்கள் நல்ல நிலைமைக்கு வருவார்கள் என நம்புகிறேன் .
shobana sahas
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் shobana sahas

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Oct 21, 2015 11:48 am

ஆமோதித்தல் ஆமோதித்தல்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Nov 11, 2015 6:58 am

வாழ்க வளமுடன்
புன்னகை

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Nov 11, 2015 9:33 pm

அருமையான பதிவு ஐயா. இந்த பட்டியலில் புதிதாக ஒரு திருநங்கை பிருத்திகா யாஷினி சேர்ந்துள்ளார். காவல்துறையில் பல போராட்டங்களுக்கு பிறகு காலடி வைத்து உள்ளார். அர்த்தநாரீஸ்வரரை வணங்கும் நாம் திருநங்கைகளை புறக்கணிப்பது எவ்வளவு பெரிய முரண்பாடு.வெளியே வராத எவ்வளவு பேர் சமூகத்தில் உள்ளனர். முடிந்தவரை நாம் புறக்கணிக்காமல் அரவணைத்து சென்றால் அவர்களாகவே முன்னுக்கு வந்து விடுவார்கள். நன்றி ஐயா நல்ல பதிவு

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 11, 2015 10:26 pm

இப்போதுதான் அரசாங்கமும் விழித்து கொண்டு உள்ளது .
திருநங்கைகளில் சிலர் இன்னும் அடாவடி செய்து கொண்டு இருக்கின்றனர் .
அவர்களுக்கு தெளிவு படுத்தப்படவேண்டிய காலகட்டம் இது .
முன்னோடி திருநங்கைகள் எடுத்து கூறினால் அதிக பலன் கிடைக்கும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Nov 12, 2015 6:46 am

இவர்களில் பலர் கும்மி அடித்து கொண்டா தட்டி பிழைத்து வருவதால்தான் ஒதுக்கப்படும் நிலை உள்ளது. அதை தவிர்த்தால் ....................

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக