ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் இலக்கணம்

+8
கவியரசன்(கவிச்சுடர்)
krishnaamma
balakarthik
shobana sahas
மாணிக்கம் நடேசன்
ayyasamy ram
T.N.Balasubramanian
M.Jagadeesan
12 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

தமிழ் இலக்கணம்  - Page 3 Empty தமிழ் இலக்கணம்

Post by M.Jagadeesan Mon Jul 20, 2015 9:50 am

First topic message reminder :


தமிழாசிரியர் வகுப்பினுள் நுழைந்தார். மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று ,"வணக்கம் அய்யா! " என்றனர்.

" மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். அமருங்கள். இன்று என்ன பாடம்?"

" இலக்கணம் அய்யா! "

" நல்லது. எல்லோரும் இலக்கணப் புத்தகம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்."

அப்பொழுது சரவணன் என்ற மாணவன் எழுந்து " அய்யா! பள்ளிக்கு வரும் வழியில் ஒரு கடையில் " இங்கு சிமெண்ட் விற்க்கப்படும்" என்று எழுதியிருந்தது. அது சரியா அய்யா?" என்று கேட்டான்.

ஆசிரியர் சரவணனை, அவன் சொன்னதைக் கரும்பலகையில் எழுதிக்காட்டுமாறு கேட்டுக்கொண்டார். சரவணனும் ," இங்கு சிமெண்ட் விற்க்கப்படும் " என்று எழுதினான்.

உடனே தமிழாசிரியர், " விற்கப்படும் " என்று எழுதுவதே சரி. " விற்க்கப்படும் " என்று எழுதுவது தவறு. வல்லெழுத்து " ற் " க்குப் பக்கத்தில் ஒற்றெழுத்து வருதல் கூடாது. உங்கள் நினைவுக்காக ஒரு குறிப்புத் தருகிறேன்.அதாவது "ய், ர், ழ் " ஆகிய மூன்று எழுத்துக்களுக்குப் பக்கத்தில்தான் ஒற்று எழுத்து வருதல் வேண்டும்.உதாரணமாக " நாய்க்குட்டி, நீர்க்குமிழி, தமிழ்த்தாய் " என்று எழுதுவதுதான் சரி. பிற ஒற்று எழுத்துக்களுக்குப் பக்கத்தில் ஒற்று எழுத்து வருவது பிழை."

" ஐயா! அப்படியானால் " கேப்டன் விஜயகாந்த் " என்று எழுதுவது பிழையா?" என்று சரவணன் கேட்டான்.

" உறுதியாகச் சொல்வேன்; அவ்வாறு எழுதக்கூடாது. " கேப்டன் விஜயகாந்து " என்றுதான் எழுதவேண்டும். சிலர் டீக்கடைக்குச் சென்று "ஒரு ஸ்ட்ராங்க் டீ போடப்பா! என்று கேட்பார்கள். சிலர் "பேங்க்" என்று எழுதுவார்கள்.ஆங்கில வார்த்தைகளை அப்படியே தமிழில் எழுதுவதால்தான் இதுபோன்ற குழப்பங்கள் வருகின்றன. "பேங்க் "என்ற வார்த்தைக்குப் பதிலாக " வங்கி " என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாமே! "ஸ்ட்ராங்க் டீ " என்பதற்குப் பதிலாக " கெட்டியான டீ " என்று சொல்லலாமே! " என்று ஆசிரியர் சொன்னார்.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down


தமிழ் இலக்கணம்  - Page 3 Empty Re: தமிழ் இலக்கணம்

Post by விமந்தனி Wed Jul 22, 2015 11:33 am

அருமையான இலக்கண பதிவு. இலக்கணப்பிழையோடு எழுதும் என் போன்றவர்களுக்கு மிகவும் உதவி கரமாக இருக்கும். எல்லாம் ஏற்கனவே பள்ளியில் படித்தது தான் என்றாலும். அப்போது புரியாமல் கண்ணாமூச்சி காட்டியது இப்பொழுது நன்றாகவே தெளிவாகிறது. மிக்க நன்றி ஐயா. உங்கள் இலக்கண சேவையை தொடருங்கள். தொடர்கிறோம்....


தமிழ் இலக்கணம்  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதமிழ் இலக்கணம்  - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தமிழ் இலக்கணம்  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

தமிழ் இலக்கணம்  - Page 3 Empty Re: தமிழ் இலக்கணம்

Post by M.Jagadeesan Wed Jul 22, 2015 11:36 am

வல்லெழுத்துக்களில்  க , ச , த , ப மட்டுமே மொழிக்கு முதலாக வரும் . நிலைமொழி ஈற்றில் " ழ் " இருந்து வருமொழி முதலில் க ,ச ,த ,ப வந்தால் நிச்சயம் ஒற்று மிகுந்து வரும் .

தமிழ் +கடல் = தமிழ்க்கடல்  ( தமிழ்க்கடல் இராய . சொக்கலிங்கம் )

தமிழ் + தென்றல் = தமிழ்த்தென்றல் ( தமிழ்த் தென்றல் திரு . வி . க )

தமிழ் + சங்கம் = தமிழ்ச் சங்கம் ( கரந்தைத் தமிழ்ச் சங்கம் )

தமிழ் + பாட்டு = தமிழ்ப்பாட்டு

இதேபோல

தமிழ் + களஞ்சியம் = தமிழ்க்களஞ்சியம்  என்பதுதான் சரி . தமிழ் களஞ்சியம் என்பது சரியல்ல .

நான் ஈகரையில் சேரும்போதே இந்தத் தவறைக் கவனித்தேன் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தமிழ் இலக்கணம்  - Page 3 Empty Re: தமிழ் இலக்கணம்

Post by ராஜா Wed Jul 22, 2015 11:46 am

M.Jagadeesan wrote:வல்லெழுத்துக்களில்  க , ச , த , ப மட்டுமே மொழிக்கு முதலாக வரும் . நிலைமொழி ஈற்றில் " ழ் " இருந்து வருமொழி முதலில் க ,ச ,த ,ப வந்தால் நிச்சயம் ஒற்று மிகுந்து வரும் .

தமிழ் +கடல் = தமிழ்க்கடல்  ( தமிழ்க்கடல் இராய . சொக்கலிங்கம் )

தமிழ் + தென்றல் = தமிழ்த்தென்றல் ( தமிழ்த் தென்றல் திரு . வி . க )

தமிழ் + சங்கம் = தமிழ்ச் சங்கம் ( கரந்தைத் தமிழ்ச் சங்கம் )

தமிழ் + பாட்டு = தமிழ்ப்பாட்டு

இதேபோல

தமிழ் + களஞ்சியம் = தமிழ்க்களஞ்சியம்  என்பதுதான் சரி . தமிழ் களஞ்சியம் என்பது சரியல்ல .

நான் ஈகரையில் சேரும்போதே இந்தத் தவறைக் கவனித்தேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1152352மிக்க நன்றி ஐயா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ் இலக்கணம்  - Page 3 Empty Re: தமிழ் இலக்கணம்

Post by சரவணன் Wed Jul 22, 2015 12:34 pm

விமந்தனி wrote:அருமையான இலக்கண பதிவு. இலக்கணப்பிழையோடு எழுதும் என் போன்றவர்களுக்கு மிகவும் உதவி கரமாக இருக்கும். எல்லாம் ஏற்கனவே பள்ளியில் படித்தது தான் என்றாலும். அப்போது புரியாமல் கண்ணாமூச்சி காட்டியது இப்பொழுது நன்றாகவே தெளிவாகிறது. மிக்க நன்றி ஐயா. உங்கள் இலக்கண சேவையை தொடருங்கள். தொடர்கிறோம்....
புன்னகை புன்னகை சியர்ஸ்


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தமிழ் இலக்கணம்  - Page 3 Empty Re: தமிழ் இலக்கணம்

Post by T.N.Balasubramanian Wed Jul 22, 2015 12:44 pm

இதுக்கு டோஸ்ட்டா !!

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழ் இலக்கணம்  - Page 3 Empty Re: தமிழ் இலக்கணம்

Post by M.Jagadeesan Thu Jul 23, 2015 9:45 am

தமிழாசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தார் .

மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று, " வணக்கம் ஐயா ! " என்றனர் .

" வணக்கம் ! அமருங்கள் ! நேற்று நடத்திய இலக்கண பாடத்தில் ஏதேனும் ஐயம் உள்ளதா ?"

அப்போது சங்கரன் என்ற மாணவன் எழுந்து, " ஐயா ! தொலைபேசி என்ற சொல்லில் ஒற்று மிகுந்து வருமா ? அதாவது தொலைபேசி என்பது சரியா அல்லது தொலைப்பேசி என்பது சரியா ? "

" நல்ல கேள்வி !  "தொலைக்காட்சி " என்று சொல்வதுபோல " தொலைப்பேசி " என்று சொல்வதுதான் சரி .  "தொலை பேசி " என்று சொல்வது தவறு . இதேபோல " கைப்பேசி " என்றுதான் சொல்லவேண்டும் ." கைபேசி " என்று சொல்வது தவறு . "அலைப்பேசி " என்று சொல்வது சரி .  "அலைபேசி " என்று சொவது தவறு .

அப்பொழுது சரவணன் எழுந்து ," ஐயா ! எந்த இடத்தில் ஒற்று வரவேண்டும் ; எந்த இடத்தில் ஒற்று வரக்கூடாது என்பதற்கு , விதிமுறைகள் ஏதேனும் உள்ளனவா ? "

" நிச்சயமாக உள்ளன . அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம் ."

வல்லெழுத்து மிகும் இடங்கள்:
1. அ, இ, எ இம்மூன்று எழுத்தின் முன்னும், அந்த, இந்த, எந்த என்பவற்றின் முன்னும் மிகும்.
(எ-டு) அப்பையன், இப்பையன், எக்குழந்தை?
அந்தப் பையன், இந்தத் தாத்தா, எந்தச் சாத்தன்?

2.ஓரெழுத்து ஒரு மொழி முன் மிகும்.
(எ-டு) பூப் பறித்தான், கைக் குழந்தை

3.ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் முன் மிகும்.
(எ-டு) அறியாப் பிள்ளை, தீராத் துன்பம்

4.அகர, இகர ஈற்று முன் மிகும்.
(எ-டு) வரச் சொன்னான், ஓடிப் போனான்

5.வன்தொடர்க் குற்றுகரம் முன் மிகும்.
(எ-டு)எட்டுத் தொகை, கற்றுக் கொடுத்தான்

6. திரு, நடு, முழு, பொது என்னும் சொற்கள் முன் மிகும்.
(எ-டு) திருக்கோவில், நடுத்தெரு, முழுப்பேச்சு, பொதுப்பணி,

7.இரண்டாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை விரியின் பின் மிகும்.
(எ-டு) பூனையைப் பார்த்தான், கடைக்குப் போனான்.

8.பண்புத் தொகையில் மிகும்.
(எ-டு) வெள்ளைத் தாமரை, மெய்ப்பொருள், பசுமைத் தாயகம்.

9.இருபெயரொட்டுப் பண்புத் தொகையில் மிகும்.
(எ-டு) தைத் திங்கள், வட்டக் கல், கோடைக்காலம்

10. உவமைத் தொகையில் மிகும்.
(எ-டு) முத்துப்பல், கமலச் செங்கண்.

சரி ! இனி சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம் . நோட்டுப் புத்தத்தில் குறித்துக் கொள்ளுங்கள் .

அந்த பக்கம் போகாதே!- -----------பிழை
அந்தப் பக்கம் போகாதே!-----------சரி

இந்த கடையில் வாங்கு.------------பிழை
இந்தக் கடையில் வாங்கு.----------சரி

எந்த பேனா நல்லது?- பிழை
எந்தப் பேனா நல்லது?- சரி

அப்படி சொல்லாதே! ----பிழை
அப்படிச் சொல்லாதே!------சரி

இப்படி பார்க்காதே!--------பிழை
இப்படிப் பார்க்காதே!------சரி

எப்படி செய்தாய்?-------பிழை
எப்படிச் செய்தாய்?-----சரி

புதுமனை புகுவிழா அழைப்பிதழ்.-------பிழை
புதுமனைப் புகுவிழா அழைப்பிதழ்.-------சரி

தனி பாடல் திரட்டு.----------பிழை
தனிப்பாடல் திரட்டு.---------சரி

நடு தெருவில் கூட்டம் நடந்தது.-------பிழை
நடுத்தெருவில் கூட்டம் நடந்தது.-------சரி

முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தான்.-------பிழை
முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைத்தான்.---சரி

புது பானையில் பொங்கலிட்டாள்.----------பிழை
புதுப் பானையில் பொங்கலிட்டாள்.--------சரி

திரு குளம் நிரம்பியது.--------பிழை
திருக்குளம் நிரம்பியது.-------சரி

அரை கவளம் சாப்பிட்டான்.--------பிழை
அரைக்கவளம் சாப்பிட்டான்.-------சரி

பாதி பக்கம் படித்தேன்.-------------பிழை
பாதிப்பக்கம் படித்தேன்.------------சரி

பொது கூட்டம் நடந்தது.-------------பிழை
பொதுக்கூட்டம் நடந்தது.------------சரி

தேக்கு பலகை உறுதியானது.---------பிழை
.தேக்குப் பலகை உறுதியானது.-------சரி

அவன் தப்பு கணக்கு போட்டான்.----------பிழை
அவன் தப்புக் கணக்குப் போட்டான்.------சரி

அவன் தமிழ் கற்று கொண்டான்.---------பிழை
அவன் தமிழ் கற்றுக் கொண்டான்.-------சரி

இனிமையாக பாட்டு பாடினாள்.-------------பிழை
இனிமையாகப் பாட்டுப் பாடினாள்.----------சரி

பாலுக்கு காவல் பூனைக்கு தோழன்.--------பிழை
பாலுக்குக் காவல் பூனைக்குத் தோழன்.----சரி

நாய் குட்டி அழகாக உள்ளது.-------------பிழை
நாய்க்குட்டி அழகாக உள்ளது.-----------சரி

வேர் பலா இனிப்பாக இருக்கும்.---------பிழை
வேர்ப்பலா இனிப்பாக இருக்கும்.---------சரி

மலர் செண்டு கொடுத்தான்.----------பிழை
மலர்ச் செண்டு கொடுத்தான்.-------சரி

நீர் குமிழி போன்ற வாழ்வு.--------------பிழை
நீர்க் குமிழி போன்ற வாழ்வு.-----------சரி

தமிழ் தாய் வாழ்த்து பாடினான்.------பிழை
தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடினான்.-----சரி

தீ பந்தம் பிடித்தான்.---------பிழை
தீப்பந்தம் பிடித்தான்.--------சரி

பூ செண்டு கொடுத்தான்.--------பிழை
பூச்செண்டு கொடுத்தான்..........சரி

கை கொடுத்து உதவினான்.--------பிழை
கைக்கொடுத்து உதவினான்.-------சரி

மை தீட்டிய கண்.----------பிழை
மைத் தீட்டிய கண்.--------சரி

சாரை பாம்பு ஓடியது.---------பிழை
சாரைப்பாம்பு ஓடியது.--------சரி

குருவி கூட்டை கலைத்தான்.--------பிழை
குருவிக்கூட்டைக் கலைத்தான்.------சரி

பொய் சான்று சொன்னான்.........பிழை
பொய்ச்சான்று சொன்னான்.------சரி

எங்கு போய் தேடுவேன்?------------பிழை
எங்கு போய்த் தேடுவேன்?...........சரி

பாம்பு புற்றில் கை விட்டான்.-------பிழை
பாம்புப் புற்றில் கை விட்டான்.-------சரி

மருந்து கடையில் மருந்து வாங்கினேன்.----பிழை
மருந்துக் கடையில் மருந்து வாங்கினேன்.------- சரி

பாலை நன்றாய் குடிக்குது கன்று குட்டி.----------பிழை
பாலை நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி.-------சரி

நெய்பவனுக்கு எதற்கு குரங்கு குட்டி?----------பிழை
நெய்பவனுக்கு எதற்குக் குரங்குக் குட்டி?-----சரி

தாமரை கண்ணான் உலகு.---------பிழை
தாமரைக் கண்ணான் உலகு.--------சரி

படத்திற்கு மர சட்டம் போட்டான்.---------பிழை
படத்திற்கு மரச்சட்டம் போட்டான்.-----சரி

சாமிக்கு வெள்ளி கவசம் அணிவித்தனர்.---------பிழை
சாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவித்தனர்.--------சரி

கோழி தவிடு விற்றான்.--------பிழை
கோழித்தவிடு விற்றான்.-------சரி

கடற்கரை சாலை மிகவும் அழகானது.-------பிழை
கடற்கரைச்சாலை மிகவும் அழகானது.------சரி

தண்ணீர் பாத்திரம் நிரம்பியது.----------பிழை
தண்ணீர்ப்பாத்திரம் நிரம்பியது.--------சரி

இனி ஒற்று மிகா இடங்களைப் பற்றி அடுத்த வகுப்பில் பார்ப்போம் .

மாணவர்கள் : நன்றி ஐயா !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தமிழ் இலக்கணம்  - Page 3 Empty Re: தமிழ் இலக்கணம்

Post by T.N.Balasubramanian Thu Jul 23, 2015 9:56 am

பூச்செண்டு உங்களுக்கு அய்யா தமிழ் இலக்கணம்  - Page 3 HQiC4I4wSaXexpH52fLf+220 ,

இன்றைய இலக்கண குறிப்புகளுக்கு !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழ் இலக்கணம்  - Page 3 Empty Re: தமிழ் இலக்கணம்

Post by krishnaamma Thu Jul 23, 2015 10:07 am

நல்ல விரிவான பதில்....மிக்க நன்றி ஐயா புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழ் இலக்கணம்  - Page 3 Empty Re: தமிழ் இலக்கணம்

Post by விமந்தனி Thu Jul 23, 2015 10:09 am

அருமையான விளக்கமான விளக்கம் ஐயா. மிக எளிமையாக இருந்தது இன்றைய ஆரம்ப வகுப்பு.


தமிழ் இலக்கணம்  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதமிழ் இலக்கணம்  - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தமிழ் இலக்கணம்  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

தமிழ் இலக்கணம்  - Page 3 Empty Re: தமிழ் இலக்கணம்

Post by T.N.Balasubramanian Thu Jul 23, 2015 6:32 pm

வாழ்த்துகள் என்பது சரியா ?
வாழ்த்துக்கள் என்பது சரியா ?

விளக்கமாக தெளிவு படுத்தவும் , jagadeesan அவர்களே !
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழ் இலக்கணம்  - Page 3 Empty Re: தமிழ் இலக்கணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum