புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:05 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:41 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 9:35 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் இலக்கியத்தில் மிகவும் உயர்ந்தது திருக்குறளே ! கவிஞர் இரா .இரவி  Poll_c10தமிழ் இலக்கியத்தில் மிகவும் உயர்ந்தது திருக்குறளே ! கவிஞர் இரா .இரவி  Poll_m10தமிழ் இலக்கியத்தில் மிகவும் உயர்ந்தது திருக்குறளே ! கவிஞர் இரா .இரவி  Poll_c10 
60 Posts - 50%
heezulia

48 Posts - 40%
mohamed nizamudeen

3 Posts - 3%
vista

2 Posts - 2%
Abiraj_26

Rathinavelu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

prajai

Anthony raj

mini

இந்த மாத அதிக பதிவர்கள்

417 Posts - 58%

246 Posts - 34%

22 Posts - 3%

9 Posts - 1%

5 Posts - 1%
T.N.Balasubramanian

4 Posts - 1%
சுகவனேஷ்

3 Posts - 0%
Guna.D

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் இலக்கியத்தில் மிகவும் உயர்ந்தது திருக்குறளே ! கவிஞர் இரா .இரவி

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1818
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Jun 21, 2015 9:14 am

தமிழ் இலக்கியத்தில் மிகவும் உயர்ந்தது திருக்குறளே !
கவிஞர் இரா .இரவி !
தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற சொற்களே இல்லாமல் தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை தேடித் தந்தது திருக்குறள் .உலகில் தமிழ் மொழி அறியாதவர்கள் கூட திருக்குறள் அறிந்துள்ளனர்.அதனால்தான் தமிழ்ப்பாட்டி அவ்வை சொன்னாள். ."அணுவைத் துளைத்துஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள் . திருக்குறளை மொழி பெயர்க்காத மொழி இல்லை .திருக்குறளை மொழி பெயர்க்காத மொழி மொழியே இல்லை .பெரும்பாலான உலக மொழிகள் யாவிலும் மொழி பெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள். திருக்குறள் அளவிற்கு பெரும்பாலான மொழிகளில் கம்ப இராமாயணம் மொழி பெயர்க்கப்பட வில்லை என்பது உண்மை . பெற்ற தாய் பசியோடு இருந்தால் பஞ்சமா பாதகம் செய்தாவது தாய் பசியினை போக்கிடு என்றுதான் வேதங்கள் சொல்கின்றன .ஆனால் திருவள்ளுவரோ .
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க ( 656)
சான்றோர் பழிக்கும் வினை .
பெற்ற தாய் பசியோடு இருந்தாலும் தவறான செயல் செய்து பசி போக்க நினைக்காதே ! அறம் பற்றி இவ்வளவு உயர்வாக உலக இலக்கியம் எதிலும் சொல்லவில்லை என்பது உண்மை .
திருக்குறளின் அருமை பெருமை நன்கு உணர்ந்த காரணத்தால்தான் "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு "என்று பாடினான் மகாகவி பாரதி .
காந்தியடிகள் அடுத்தபிறவி என்று ஒன்று இருந்தால் தமிழனாகப் பிறக்க வேண்டும் .காரணம் திருக்குறளை எழுதப்பட்ட மூல மொழியான தமிழில் படித்து உணர வேண்டும் .என்று ஆசைப்பட்டார். காந்தியடிகள் இராமனை வணங்கிய போதும் அவர் திருக்குறளை நேசித்த அளவிற்கு கம்ப இராமாயணத்தை நேசிக்கவில்லை என்பது உண்மை .காந்தியடிகளை அகிம்சை வழியில் நடக்கக் காரணமாக இருந்தது திருக்குறள் .
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண ( 314 )
நன்னயம் செய்து விடல் .
விவிலியம் கூட ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னம் காட்டு என்கிறது .திருவள்ளுவர் ஒருபடி மேலே சென்று உனக்கு தீங்கு செய்த பகைவனும் வெட்கப்படும் வண்ணம் நன்மை செய் .இதுபோன்ற ஒப்பற்ற அகிம்சை கருத்தை உலக இலக்கியம் எதிலும் சொல்லவில்லை என்பது உண்மை . கம்ப இராமாயணதிலும் சொல்லவில்லை .
மனிதனுக்கு அழகு ! நன்றி மறக்காதது .அதை வலியுறுத்தும் அற்புத திருக்குறள் .
நன்றி மறப்பது நன்றன்று ; நன்றல்லது ( 108 )
அன்றே மறப்பது நன்று .
ஒருவர் உனக்கு செய்த நன்மையை ஒருபோதும் மறக்காதே .செய்த தீமையை உடன் மறந்து விடு .மனிதநேயம் கற்பிப்பது ஒப்பற்ற திருக்குறள் .வாழ்வியல் நெறி போதிப்பது உயர்ந்த திருக்குறள் .
இறுதி மூச்சு வரை தமிழ்ச் சமுதாயத்தின் எழுச்சிக்காகப் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் இலட்சியப் பாதைக்குக் காரணமாக இருந்தது திருக்குறள் .
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் ( 423)
மெய்ப்பொருள் காண்பது அறிவு .
எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் அப்பொருளின் மெய்யான பொருளை ஆராந்து அறிவதே அறிவு .
தந்தை பெரியார் சொல்வார் நான் சொல்வதற்காக எதையும் ஏற்க வேண்டாம் .உங்கள் அறிவுக்கு சரி என்று பட்டால் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் . தந்தை பெரியார் கம்ப இராமாயணத்தைச் சாடியவர் திருக்குறளைப் போற்றி திருக்குறள் மாநாடு நடத்தினார் .
மாமனிதர் அப்துல்கலாம் நேசிப்பது திருக்குறள் .அதனால்தான் எங்கு பேசினாலும் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசி வருகிறார் அவருக்கு மிகவும் பிடித்த திருக்குறள் .
வெள்ளத்து அனைய மலர்நீட்டம் ; மாந்தர்தம் ( 595 )
உள்ளத்து அனையது உயர்வு .
நீரின் உயரத்திற்கு ஏற்ப மலரின் காம்பு உயரும் .மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப வாழ்க்கை உயரும் .
வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் சாதனையாளர்கள் அனைவரும் திருக்குறள் வழி நடந்தவர்கள் .இறந்தும் மக்கள் மனங்களில் வாழும் நல்லவர்கள் அனைவரும் திருக்குறள் வழி நடந்தவர்கள் என்பது உண்மை . திருக்குறளில் இல்லாத கருத்துக்களை இல்லை என்று சொல்லும் அளவிற்கு வாழ்வில் உள்ள அனைத்து பொருள்களிலும் எழுதி உள்ளார்.
தமிழண்ணல் , இரா .இளங்குமரனார் ,முனைவர் இரா .மோகன் உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் யாவரும் மிகவும்நேசிப்பது திருக்குறளே. அவர்கள் நடப்பதும் திருக்குறள்வழியே. அதனால்தான் தமிழ் உலகம் போற்றுகின்றது .
சிறந்த சிந்தனையாளர் , பேச்சாளர் , எழுத்தாளர் முது முனைவர் வெ. இறையன்பு இ .ஆ .ப .அவர்கள் மிகவும் நேசிப்பது திருக்குறளே. அதனால்தான் முதல் முனைவர் பட்ட ஆய்வு திருக்குறளில் உள்ள மனிதவள் மேம்பாடு இரண்டாவது முனைவர் பட்ட ஆய்வு திருவள்ளுவரும் சேக்ஸ்பியரும் ஆகும் .முனைவர் பட்ட ஆய்வுகளுக்கு தேர்ந்தெடுத்த தலைப்புகளேஅவரது திருக்குறள் பற்றைப் பறை சாற்றும்.திருக்குறள் ஆய்வோடு நின்று விடாமல் திருக்குறள் வழி வாழ்ந்து வருகிறார் . வெற்றி பெறுகின்றார் .
செக்கோஷ்லேவியாவில் இருந்து தமிழ் படிக்க தமிழகம் வந்தார் . ஒரு அறிஞர் அவரிடம் உலக மொழிகள் பல இருக்க தமிழை தேர்ந்தெடுத்து படிக்க என்ன ? காரணம் என்று கேட்டபோது அவர் சொன்ன பதில் .
இனிய உளவாக இன்னாத கூறல் ( 100 )
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று .
இனிய சொற்கள் எனும் கனிகள் இருக்கும்போது இன்னாத சொற்களான கடும் சொற்களான காய்கள் எதற்கு ?
இந்த திருக்குறளை மொழி பெயர்ப்பில் படித்தேன் .இவ்வளவு நல்ல கருத்து உள்ள திருக்குறளை தமிழில் எழுதி உள்ளார்கள் என்ற காரணத்தால் தமிழைப் படிக்க விரும்பினேன் .
திருக்குறள் என்பது மூலம்.ஆனால் கம்ப இராமாயணம் என்பது வால்மீகி இராமாயணம் என்பதைத் தழுவி எழுதப்பட்ட நகல் .கம்ப இராமாயணத்தில் நம்ப முடியாத கற்பனைக் கருத்துக்கள் உள்ளன. திருக்குறளில் நம்ப முடியாத கருத்து எதுவும் இல்லை .
மதுரையில் இருந்த இங்கிலாந்து வெள்ளையர் எல்லீசர் திருக்குறளின் அருமை உணர்ந்து அன்றே திருவள்ளுவர் உருவம் பொறித்து பொற்காசு வெளியிட்டுள்ளார் .
திருக்குறளில் இன்பத்துப்பாலில் கூட இன்பம் உண்டு .ஆனால் ஆபாசம் இல்லை .ஆனால் கம்ப இராமாயணத்தில் ஆபாசம் உண்டு என்பதற்கு அறிஞர் அண்ணா எழுதிய கம்பரசம் நூலே சாட்சி .
இரசியாவில் பாதுக்காக்கப்பட்டு வைத்திருக்கும் உலக முக்கிய நூல்களில் திருக்குறள் உள்ளது .கம்ப இராமாயணம் இல்லை . திருக்குறளின் அருமை பெருமை உலகம் அறிந்து வைத்துள்ளது. ஆனால் தமிழர்கள்தான் திருக்குறளின் அருமை ,பெருமை இன்னும் உணரவில்லை .திருக்குறள் படிக்க மட்டுமல்ல வாழ்வில் கடைபிடிக்க வழி காட்டும் நூல். வாழ்வியல் இலக்கியம் .
தமிழ் இலக்கியத்தில் மிகவும் உயர்ந்தது திருக்குறளே என்பதை தமிழர்கள் யாவரும் உணர்ந்து திருக்குறள் வழி நடந்து வாழ்வில் வெற்றி பெறுவோம் .மனிதனை மனிதனாக வாழ வைப்பது திருக்குறள் .மகத்தான திருக்குறளைப் போற்றுவோம் . நம் குழந்தைகளுக்கும் திருக்குறளைப் பயிற்றுவிப்போம். எந்நாட்டவர்க்கும் , எந்த மத்தவர்க்கும் , எந்த இனத்தவர்க்கும் ,எந்த மொழியினருக்கும் எக்காலமும் பொருந்துவது திருக்குறள்.
ஒட்டுமொத்த மனித இனத்திற்காக எழுதப்பட்டது திருக்குறள் .ஈடு இணையற்ற இலக்கியம் திருக்குறள் .உலகப் பொதுமறை என்பது முற்றிலும் உண்மை .திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கத் தயங்குபவர்களுக்கு தமிழர்களின் வாக்கு இல்லை என்று அறிவிப்போம் .
தமிழ் இலக்கியத்தில் மிகவும் உயர்ந்தது திருக்குறளே ! திருக்குறளே !திருக்குறளே !

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jul 15, 2015 9:57 pm

தங்கள் கட்டுரையைப் பலமுறை படித்தேன் . திருக்குறளைப் பற்றி மிகவும் உயர்வாகக் கூறியுள்ளீர்கள் . அதற்கு மாற்றுக் கருத்து இல்லை . ஆனால் கம்ப இராமாயணம் என்ன பாவம் செய்தது ? அதன்மீது இவ்வளவு வெறுப்பு ஏன் ?

முதலில் திருக்குறளைக்,  கம்ப இராமாயணத்தோடு ஒப்பிட்டதே தவறு . திருக்குறள் ஒரு நீதி இலக்கியம். ஆனால் கம்ப இராமாயணம் ஒரு காவியம் . இராமனின் வரலாற்றைக் கூறுவது . ஒரு நீதி நூலை மற்றொரு நீதி நூலோடு ஒப்பிட்டால் அது ஏற்றுக்கொள்ளத் தக்கது . திருக்குறளை , நாலடியாரோடு ஒப்பிடலாம் அல்லது நன்னெறியுடன் ஒப்பிடலாம் அல்லது வேறு ஒரு நீதி இலக்கியத்துடன் ஒப்பிடலாம் . அதைவிடுத்து கம்ப இராமாயணத்துடன் ஒப்பிட்டு , இராமா யணத்தை விட , திருக்குறள் மேலானது என்று சொல்வது தகுமா ?

திருக்குறள் அளவுக்குக் கம்ப இராமாயணம் பிறமொழிகளில் பெயர்க்கப்படவில்லை என்று கூறியுள்ளீர்கள் . திருக்குறள் 1330 குறள் வெண்பாக்களால் ஆன ஒரு நூல் . ஆனால் இராமாயணமோ 10000 க்கும் மேற்பட்ட செய்யுட்களால் ஆக்கப்பட்ட ஒரு நூல் . அதை மொழி பெயர்ப்பது அவ்வளவு எளிதா ? சிலப்பதிகாரம் கூட பிற மொழிகளில் பெயர்க்கப் படவில்லை ! அதனால் அக்காவியம் சிறந்தது அல்ல என்று கூறமுடியுமா ?

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
...வள்ளுவனைப்போல் இளங்கோவைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
...உண்மை இது , வெறும் புகழ்ச்சியில்லை

என்று பாரதியார் கூறவில்லையா ?

காந்தியடிகள் திருக்குறளை நேசித்த அளவுக்குக் கம்ப இராமாயணத்தை நேசிக்கவில்லை என்று கூறுகிறீர்கள் . காந்தியடிகள் என்ன தமிழ்ப் புலவரா அல்லது பண்டிதரா ? அவர் திருக்குறளை நேசித்ததற்குக் காரணம் அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் . ஆகவே அதை முழுவதும் கற்கவேண்டும்  என்ற ஆவலினால் தமிழ் படிக்க விரும்பினார் . தமிழை அவர் ஐயம் திரிபறக் கற்றிருந்தால் நிச்சயமாகக் கம்ப இராமாயணத்தையும் விரும்பியிருப்பார் .

கம்ப இராமாயணத்தில் நம்ப முடியாத கற்பனைக் கருத்துக்கள் உள்ளன என்பது அடுத்த குற்றச்சாட்டு . அது வால்மீகி இராமாயணத்தின் வழிநூல் . கம்பன் நினைத்தாலும் காவியத்தின் கதியை மாற்றமுடியாது . தமிழ்ப் பண்பாட்டிற்குத் தக்கவாறு கம்பன் அந்த நூலை எழுதியுள்ளான் .
இதில் கம்பனுடைய தவறு எதுவும் இல்லை . அந்நூல் வழியே கம்பனுடைய புலமையை மட்டுமே நாம் பார்க்கவேண்டும் .

தமிழுக்குக் கதி கம்பனும் ,திருவள்ளுவரும் என்று கூறுவார்கள் . அதை நாம் மறந்துவிடலாகாது .

திருக்குறளை உயர்த்துவதில் இன்பம் காணுங்கள் ! தவறில்லை ; ஆனால் கம்பனை இகழ்வதன்மூலம் இன்பம் காணவேண்டாம் .ஏனெனில் கம்பனை இகழ்வது , தமிழை இகழ்வதற்கு
ஒப்பாகும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது .

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83759
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 15, 2015 10:45 pm

இலக்கியத்தில் மிகவும் உயர்ந்தது திருக்குறளே...
-
பெரும்பாலன தமிழனுக்கு பத்து குறளுக்கு மேல்
சொல்லத் தெரியாது என்பதும் உண்மை...!!!

-

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1818
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Jul 16, 2015 7:36 am

தமிழ் இலக்கியத்தில் மிகவும் உயர்ந்தது திருக்குறளா ? கம்ப இராமாயணமா ? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது .திருக்குறளே என்று நான் வாதிட்டேன் .அந்தக் கருத்துதான் இதில் பதிவு செய்துள்ளேன் .நீங்கள் எழுதிய கருத்து எதிரணிக்கு உதவும் .

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83759
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 16, 2015 12:15 pm

பட்டி மன்ற தலைவர் முடிவுரையாக என்ன சொன்னார்..?

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jul 17, 2015 12:25 pm

ayyasamy ram wrote:இலக்கியத்தில் மிகவும் உயர்ந்தது திருக்குறளே...
-
பெரும்பாலன தமிழனுக்கு பத்து குறளுக்கு மேல்
சொல்லத் தெரியாது என்பதும் உண்மை...!!!

-
மேற்கோள் செய்த பதிவு: 1151292

திருக்குறளும் உயர்ந்ததுதான் ! கம்ப இராமாயணமும் உயர்ந்ததுதான் !
இரண்டு கண்களில் எது உயர்ந்தது ? என்று கேட்டால் என்ன பதில் சொல்லமுடியும் ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக