புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெருசு  Poll_c10பெருசு  Poll_m10பெருசு  Poll_c10 
91 Posts - 61%
heezulia
பெருசு  Poll_c10பெருசு  Poll_m10பெருசு  Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
பெருசு  Poll_c10பெருசு  Poll_m10பெருசு  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பெருசு  Poll_c10பெருசு  Poll_m10பெருசு  Poll_c10 
6 Posts - 4%
eraeravi
பெருசு  Poll_c10பெருசு  Poll_m10பெருசு  Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
பெருசு  Poll_c10பெருசு  Poll_m10பெருசு  Poll_c10 
1 Post - 1%
viyasan
பெருசு  Poll_c10பெருசு  Poll_m10பெருசு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெருசு  Poll_c10பெருசு  Poll_m10பெருசு  Poll_c10 
283 Posts - 45%
heezulia
பெருசு  Poll_c10பெருசு  Poll_m10பெருசு  Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
பெருசு  Poll_c10பெருசு  Poll_m10பெருசு  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெருசு  Poll_c10பெருசு  Poll_m10பெருசு  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பெருசு  Poll_c10பெருசு  Poll_m10பெருசு  Poll_c10 
19 Posts - 3%
prajai
பெருசு  Poll_c10பெருசு  Poll_m10பெருசு  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பெருசு  Poll_c10பெருசு  Poll_m10பெருசு  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பெருசு  Poll_c10பெருசு  Poll_m10பெருசு  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பெருசு  Poll_c10பெருசு  Poll_m10பெருசு  Poll_c10 
7 Posts - 1%
mruthun
பெருசு  Poll_c10பெருசு  Poll_m10பெருசு  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெருசு


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jul 13, 2015 6:35 pm

நமச்சிவாய முதலியார் ஊரிலே பெரிய மனிதர்.செல்வந்தர்.ஆன்மீகத்தில் பற்றுடையவர்.சிறந்த சிவபக்தர்.செக்கச் சிவந்த மேனி.நெற்றி நிறைய திருநீறு.கழுத்தில் ருத்ராட்சம்.கட்டுக்குடுமி.பஞ்சகட்சம் வைத்து வேட்டி கட்டுவார்.வெளியில் போவதென்றால் மட்டும் கோட்டும் தோளில் அங்கவஸ்திரமும் அணிந்து செல்வார்.அடிக்கடி முருகா! முருகா! என்று அவருடைய வாய் முணுமுணுத்துக் கொண்டிருக்கும்.சுருக்கமாகச் சொல்வதானால் அவர் ஒரு சிவப்பழம்.சைவ சித்தாந்தம்,ஆகமங்கள்,திருமுறைகள்,திருக் கோயில்கள் பற்றிய விவரங்களை எல்லாம் விரல்நுனியில் வைத்திருப்பார்.இசையிலும் நல்ல தேர்ச்சி உண்டு.பூஜை அறையில்"பொன்னார் மேனியனே"என்று குரலெடுத்துக் கணீரென்று பாடினால் அனைவரும் மெய்மறந்து கேட்டுக் கொன்டிருப்பர்.கோவில் திருவிழா,கும்பாபிசேகம் போன்ற ஆன்மீகக் காரியங்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுப்பார்.தன்னுடைய வீட்டிற்கு"சிவமயம்" என்று பெயர் வைத்திருந்தார்.தன்னுடைய ஒரே மகளுக்குத்"தில்லை நாயகி"என்று பெயர் சூட்டியிருந்தார்.மகள் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள். தன அருமை மனைவி சிவகாமி காலமானதிலிருந்து, தாய்க்குத் தாயாகவும்,தந்தைக்குத் தந்தையாகவும் இருந்து மகளை வளர்த்து வந்தார்.

முதலியாரின் வீடு எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும்.ஊர்ப்பெரிய மனிதர்கள்,அரசியல்வாதிகள்,காவல்துறை அதிகாரிகள் என்று அவரைப் பார்ப்பதற்காக வந்து கொண்டிருப்பார்கள்.வீட்டிலே பணியாட்கள் என்று இரண்டுபேர் மட்டும் இருந்தனர்.சமையல் வேலைகளைக் கவனிப்பதற்காக ஒரு சமையல்கார அம்மாள் இருந்தாள்.தோட்டவேலை மற்றும் வாட்ச்மேன் வேலைக்காகப் பெரியவர் ஒருவர் இருந்தார்.அவர் பெயர் முனுசாமி.எடுபிடி வேலைகளைக் கவனிப்பதற்காக அவருக்கு ஒரு பணியாள் தேவைப்பட்டது.பேப்பரில் விளம்பரம் செய்து சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவரை வேலைக்கு அமர்த்திக் கொண்டார்.அவர் பெயர் பெரியசாமி.முதலியார் செல்லமாகப் "பெருசு"என்று கூப்பிடுவார்.அதனால் எல்லோருமே அவரைப் "பெருசு"என்றே கூப்பிடத் தொடங்கினர்.

பெருசு தலையில் முண்டாசு கட்டியிருப்பார்.சட்டை அணிவதில்லை.கைவைத்த பனியன் மட்டும் அணிவார்.வேட்டியை முழங்காலுக்கு மேலே தூக்கி கட்டியிருப்பார்.பெருசு, முதலியார் வீட்டில் எல்லா வேலைகளையும் செய்து வந்தார்.வீடு பெருக்குவது,காய்கறி,மளிகை சாமான்கள் வாங்குவது,கரண்ட் பில் மற்றும் டெலிபோன் பில் கட்டுவது டோபிக்குத் துணி போடுவது,முதலியாருக்கு பணிவிடை செய்வது போன்ற எல்லா வேலைகளையும் பெருசு செய்து வந்தார்.வீட்டில் காலண்டர் தேதி கிழிப்பது கூட பெருசுவின் வேலையாகிவிட்டது.சுருக்கமாகச் சொன்னால் அந்த வீட்டில் பெருசு இல்லாவிட்டால் எந்த வேலையும் ஓடாது என்ற நிலையேற்பட்டது.

பெருசு எப்போதாவது ஒன்று அல்லது இரண்டு நாட்கள் லீவு எடுப்பார்.சொந்த ஊரிலுள்ள மனைவியையும்,குழந்தைகளையும் பார்த்துவிட்டு உடனே வந்து விடுவார்.பெருசு முதலியார் வீட்டுக்கு வந்து ஒரு வருடம் ஆயிற்று..ஒருநாள் பெருசு, முதலியாரிடம் வந்து"ஐயா! ஊருக்குப் போகணும்"என்றார்.
"அதுக்கென்ன தாராளமாய் போய்விட்டு வா! பணம் ஏதும் வேண்டுமா?"
"இல்லை ஐயா! மனைவிக்கு பிரசவ நேரம் ஒரு வாரம் லீவு கொடுத்தால் நன்றாக இருக்கும்"
"ஒரு வாரமா?என்ன பெருசு! நீ இல்லாட்டி ஒருநாள் கூடத் தள்ளமுடியாது என்பது உனக்குத் தெரியாதா?"என்ற முதலியார் சிறிது நேரம் யோசித்து"சரி! பொண்டாட்டிக்குப் பிரசவம்னு சொல்றே! போயிட்டு பிரசவம் முடிஞ்ச கையோடுதிரும்பிடணும்"என்று சொன்னார்.பெருசு,சந்தோசமாக"ரொம்ப நல்லது எஜமான்!"என்று சொல்லிவிட்டு ஊருக்கு கிளம்பினார்.

ஒருவாரம் கழிந்தது.பெருசு எப்ப வரும் என்று காத்துக் கொண்டிருந்தார்.தோட்டக்கார முனுசாமி அவசரமாக வந்தார்.முதலியாரைப் பார்த்து"ஐயா!நம்ம பெருசு வந்திருக்கார்.ஆளே மாறிட்டார்,அடையாளமே தெரியல"என்று சொன்னார்.
"என்ன உளர்றே? பெருசுவை சீக்கிரம் வரச்சொல்"என்று முதலியார் சொல்லி முடிப்பதற்குள் பெருசு உள்ளே நுழைந்தார்.பெருசுவின் தோற்றம் அடியோடு மாறியிருந்தது.கோட்டு,சூட்டு ,டை அணிந்து கம்பீரமாகக் காட்சி அளித்தார்.
"என்ன பெருசு? என்ன வேஷம் இது?" என்று முதலியார் கேட்டார்.
"சாரி! மிஸ்டர் நமச்சிவாயம்! நான் இப்ப பெருசு இல்ல.C.B.I ஆபீசர் பெரியசாமி,இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இன்ஸ்பெக்டர் கோவிந்தன் கொலை சம்பந்தமாக உங்களை கைது பண்ண வந்திருக்கோம்என்று சொல்லி அருகிலிருந்த அந்த ஊர் இன்ஸ்பெக்டர் ஜோசப்பைப் பார்த்து "carry on"என்றார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் முதலியாரிடம் கைது வாரண்டைக் காட்டினார்.முதலியார் பேய் அறைந்தது போல இருந்தார்.எதுவும் பேசவில்லை.
"போகலாமா?'என்று பெரியசாமி சொன்னவுடன் முதலியார் பின் தொடர்ந்தார்.

முதலியார், கைது செய்யப்பட விவரம் காட்டுத் தீ போல பரவியது.ஊர் முழுவதும் ஸ்டேசன் முன்பாகக் கூடிவிட்டது.அசம்பாவிதம் ஏதும் நடந்து விடக்கூடாது என்பதற்காகச் சென்னையிலிருந்து சிறப்பு போலீஸ் படை தருவிக்கப்பட்டிருந்தது.போலீஸ் படை அந்த ஊரையே தன் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தது.பொது மக்கள் யாரும் முதலியாரை நெருங்க முடியவில்லை.பத்திரிக்கை நிருபர்களும் கூடிவிட்டனர்.அவர்களைப் பார்த்து இன்ஸ்பெக்டர்,"பிரஸ் மீட்டிங் காலைல, தயவு செய்து நாளை காலை பத்து மணிக்கு வாங்க! முதலியாரை விசாரிக்க வேண்டியுள்ளது"என்று சொன்னவுடன் நிருபர்கள் களைந்து சென்றனர்.விடிய விடிய முதலியாரிடம் விசாரணை நடந்தது.

மறுநாள் காலை பத்து மணி.போலீஸ் ஸ்டேசன் முன்பாக நிருபர்கள் கூடி இருந்தனர்.சிறிது நேரத்தில் சி,பி,ஐ ஆபீசர் பெரியசாமி உள்ளே நுழைந்தார்.நிருபர்கள் உள்ளே சென்றனர்.

பெரிசாமி பேச ஆரம்பித்தார்."கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஊர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தன் கொலை செய்யப்பட்டது உங்கள் எல்லோருக்கும் தெரியும்.கொலை நடந்து ஒரு வருடம் வரையில் கொலையாளி யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.இது போலீஸ் டிபார்ட்மெண்டுக்கு ஒரு சவாலாக இருந்தது.கொலை நடந்த இடத்தில் எங்களுக்கு இரண்டு தடயங்கள் மட்டுமே கிடைத்தன.ஒன்று,கொலை செய்யப் பயன்படுத்திய கத்தி. மற்றொன்று கோட்டுப் பித்தான்.இந்த இரண்டு தடயங்கள் மட்டும் வைத்துக் கொண்டு எந்த முடிவுக்கும் வர இயலவில்லை.கத்தியில் படிந்துள்ள கைரேகையை எங்க லிஸ்டில் இருந்த குற்றவாளிகளின் கைரேகையோடு ஒப்பிட்டுப் பார்த்தோம்.ஒன்றுகூடப் பொருந்தவில்லை.அடுத்துக் கோட்டுப் பித்தான்.அதை வைத்து எதுவும் செய்ய இயலவில்லை.கொலையாளியோடு நடந்த போராட்டத்தில்,இன்ஸ்பெக்டர் கோவிந்தன் கைபட்டு,இந்த பித்தான் அறுந்து விழுந்திருக்க வேண்டும் என்பது எங்கள் முடிவாக இருந்தது.இது இப்படியிருக்க கொலையுண்ட கோவிந்தனின் மனைவி அவருடைய பர்சனல் டைரி ஒன்றைக் கொண்டுவந்து கொடுத்தார்.

அதில் காணப்பட்ட ஒரு குறிப்பே எங்களுக்கு குற்றவாளியைக் கண்டுபிடிக்க உதவியது.அது இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு எழுதப்பட்டது."நமச்சிவாயம் ஒரு சமூக விரோதி,பசுத்தோல் போர்த்திய புலி.அவன் செய்யும் குற்றங்களை நான் கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக லஞ்சம் கொடுக்க முன்வந்தான்.நான் வாங்க மறுத்தேன்,அவன் வழியில் குறுக்கே வந்தால் கொன்று விடுவதாக மிரட்டினான்"என்று எழுதப் பட்டிருந்தது.உடனே எங்களுடைய கவனம் முதலியார் மீது திரும்பியது.ஆனால் அவரை ஓரளவுக்கு மேல் எங்களால் நெருங்க முடியவில்லை.சமூகத்தில் அவருக்கிருந்த செல்வாக்கே இதற்குக் காரணம்.என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில்தான்,பத்திரிகையில் "வீட்டு வேலை செய்வதற்கு ஆள் தேவை"என்று முதலியார் விளம்பரம் செய்திருந்தார்.இது எங்களுக்கு மிகவும் வசதியாகப் போய்விட்டது.விளம்பரம் வந்த சிலநாட்களில் நான் முதலியார் வீட்டில் வேலைக்குச் சேர்ந்தேன்.என்னுடைய தோற்றத்தை முற்றிலுமாக மாற்றி அமைத்துக் கொண்டேன்.முதலியாருக்கு நம்பிக்கை உள்ள வேலைக்காரனாக நடந்து கொண்டேன்.முதலியார் என்னைப் "பெருசு" என்று அழைத்து வந்தார்.

முதலியாருடைய நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து வந்தேன்.ஒருநாள் டோபிக்குத் துணி போடும்போது அவருடைய கோட்டில் ஒரு பித்தான் இல்லாமல் இருந்தது.என் சந்தேகம் வலுத்தது.அந்தக் கோட்டிலிருந்த மற்றொரு பித்தானை அகற்றினேன்.அதை இன்ஸ்பெக்டர் ஜோசப்பிடம் கொடுத்து அவரிடம் இருந்த பித்தானுடன் ஒப்பிட்டுப் பார்க்கச் சொன்னேன்.இரண்டும் ஒரே வகையானது என்று தெரிவித்தார்.

முதலியாருக்குத் தினமும் நான்தான் காப்பி கொடுப்பேன்.அவருடைய ரேகை படிந்த டம்ளரையும், கொலையாளிப் பயன்படுத்திய கத்தியின் மீதிருந்த ரேகையையும் தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பியதில்,இரண்டு ரேகைகளும் ஒன்றுதான் என்பதைத் தெரிந்து கொண்டோம்.அதன் பிறகுதான் கைது நடவடிக்கை எடுத்தோம்.

முதலியாருடைய மறுபக்கம் பயங்கரமானது.ரேசன் அரிசியை வெளிமாநிலங்களுக்குக் கடத்துவது,போதைப்பொருள் விற்பனை,கோவில் சிலைகளை வெளிநாடுகளுக்குக் கடத்துவது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வந்தார்.காவல் துறையோடு இணக்கமான உறவு வைத்துக் கொள்வார்.பணம் கொடுத்து அதிகாரிகளை சரிக்கட்டி விடுவார்.

சம்பவம் நடந்த அன்று ரேசன் அரிசி மூட்டைகளை ஆந்திராவுக்கு கடத்திச் சென்று கொண்டிருந்த லாரியை இன்ஸ்பெக்டர் கோவிந்தன் தடுத்து நிறுத்தினார்.அவர் தனி ஆளாக மோட்டார் சைக்கிளில் சென்று மடக்கினார்.அப்போது லாரியில் முதலியாரும் இருந்தார்.தன்னை விட்டுவிடும்படி கோவிந்தனிடம் முதலியார் பேரம் பேசினார்.அதற்கு கோவிந்தன் ஒத்துவராமல் போகவே வேறு வழியில்லாமல் முதலியார் தன் கையிலிருந்த கத்தியால் இன்ஸ்பெக்டரின் வயிற்றில் குத்தினார்.கோவிந்தனும் முதலியாருடன் போராடினார்.ஆனால் முதலியார்,மீண்டும் மீண்டும் வயிற்றில் குத்தவே,இன்ஸ்பெக்டர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.அப்போது மணி இரவு எட்டு இருக்கும்.கோவிந்தனின் அலறல் சத்தம் கேட்டு,அக்கம் பக்கத்திலிருந்த பொது மக்கள் ஓடிவரவே,முதலியார்,கத்தியை அங்கிருந்த ஒரு புதரில் வீசி எறிந்துவிட்டு லாரியுடன் ஓட்டம் பிடித்தார்.இதுதான் அன்றைய தினம் நடந்தது"என்று சொல்லி முடித்தார் பெரியசாமி.

நிருபர்கள் கூட்டத்தில் இருந்து ஒருவர்"வெல்டன் பெருசு"என்று சொன்னவுடன் அனைவரும் சிரித்தனர்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 15, 2015 5:41 pm

அடப்பாவி..............'படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில்' என்பது போல இருக்கே?........வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் நம்ப முடியாது என்பதற்கு மற்றும் ஒரு எடுத்துக்காட்டு இந்த கதை........மிகவும் அருமை ஜெகதீசன் ஐயா புன்னகை ................ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக