புதிய பதிவுகள்
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:26

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிமணி தமிழ் கவிதை கண்மணி:இன்று 27-07- பிறந்த நாள்! Poll_c10கவிமணி தமிழ் கவிதை கண்மணி:இன்று 27-07- பிறந்த நாள்! Poll_m10கவிமணி தமிழ் கவிதை கண்மணி:இன்று 27-07- பிறந்த நாள்! Poll_c10 
27 Posts - 46%
heezulia
கவிமணி தமிழ் கவிதை கண்மணி:இன்று 27-07- பிறந்த நாள்! Poll_c10கவிமணி தமிழ் கவிதை கண்மணி:இன்று 27-07- பிறந்த நாள்! Poll_m10கவிமணி தமிழ் கவிதை கண்மணி:இன்று 27-07- பிறந்த நாள்! Poll_c10 
26 Posts - 44%
mohamed nizamudeen
கவிமணி தமிழ் கவிதை கண்மணி:இன்று 27-07- பிறந்த நாள்! Poll_c10கவிமணி தமிழ் கவிதை கண்மணி:இன்று 27-07- பிறந்த நாள்! Poll_m10கவிமணி தமிழ் கவிதை கண்மணி:இன்று 27-07- பிறந்த நாள்! Poll_c10 
3 Posts - 5%
Anthony raj
கவிமணி தமிழ் கவிதை கண்மணி:இன்று 27-07- பிறந்த நாள்! Poll_c10கவிமணி தமிழ் கவிதை கண்மணி:இன்று 27-07- பிறந்த நாள்! Poll_m10கவிமணி தமிழ் கவிதை கண்மணி:இன்று 27-07- பிறந்த நாள்! Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
கவிமணி தமிழ் கவிதை கண்மணி:இன்று 27-07- பிறந்த நாள்! Poll_c10கவிமணி தமிழ் கவிதை கண்மணி:இன்று 27-07- பிறந்த நாள்! Poll_m10கவிமணி தமிழ் கவிதை கண்மணி:இன்று 27-07- பிறந்த நாள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிமணி தமிழ் கவிதை கண்மணி:இன்று 27-07- பிறந்த நாள்!

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 28 Jul 2015 - 12:05

கவிமணி தமிழ் கவிதை கண்மணி:இன்று 27-07- பிறந்த நாள்! LuUw5rMzSmCrJffeTA4D+Tamil_News_large_130508920150727051529

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை உலகில் தடம் பதித்த கவிஞர்கள் நால்வர். இவர்கள் ஒவ்வொருவாருக்கும் தனிச்சிறப்பு உண்டு. நால்வருள் மோனையைப் போல் முன்னிற்பவர் பாரதியார். இவர் 39 ஆண்டுகளே வாழ்ந்து கவிதை உலகில் சாதனை படைத்தவர். பாரதியாருக்கு அடுத்த நிலையில் புகழ் பெற்று விளங்கியவர் பாரதிதாசன்; பாரதியாருக்கு ஒன்பது ஆண்டுகள் இளையவரான இவர் 73 ஆண்டுகள் வரை வாழ்ந்தவர்.

கவிமணி சி.தேசிக விநாயகம் பிள்ளை (1876--1954) பாரதியாரை விட ஆறு ஆண்டு மூத்தவர். தமிழில் குழந்தைப் பாடல் என்னும் இலக்கிய வகையைத் தொடங்கி வைத்த பெருமை இவருக்கு உரியது; எனவே 'குழந்தைக் கவிஞர்' என்னும் சிறப்புப் பெயர் வாய்த்தது. பாரதியாருக்கு ஆறு ஆண்டுகள் பின்னவரான நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை 84 ஆண்டுக் காலம் வாழ்ந்தார்.

பாரதியும் கவிமணியும் : பாரதிக்கு நிகரான சொல்லாற்றல் படைத்தவராகக் கவிமணி விளங்கினார். எனினும் இருவருக்கும் இடையே பெரிய வேறுபாடும் இருந்தது. அறிஞர் சி.தில்லைநாதன் இப்படி கூறுகிறார்... “பாரதியின் சொற்கள் பகைவர்களைத் தாக்கும் போர் வீரர்களைப் போலவோ வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகளைப் போலவோ செயலாற்றுகின்றன. கவி
மணியின் சொற்கள் சாத்வீக நெறியில் சேவை செய்யப் புகுந்த தொண்டர்களைப் போல அமைதியாகவும் சாந்தமாகவும் தம் பணியைச் செய்கின்றன”.

கவிமணி எந்த ஒரு கருத்தினையும் மென்மையான சொற்களைக் கையாண்டு அமைதியாகவும் சாந்தமாகவுமே பாடுவார். 'ஐயா' 'அப்பா' 'அம்மா' என்பன போன்ற சொற்களே அவரது மொழி நடையில் பயின்று வரும். “பாடுபடுவருக்கே இந்தப் பாரிடம் சொந்தம் ஐயா!” என்றும் “ஏழை என்று ஒருவர் உலகில் இருக்கல் ஆகாது ஐயா!” என்றும் “மங்கைய ராகப் பிறப்பதற்கே - நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா!” என்றும் “ஊக்கம் உடையவர்க்குத் - துன்பம் உலகில் இல்லை அம்மா!” என்றும் பாடுவது கவிமணியின் முத்திரைப் பண்பு.

கவிமணியின் வாழ்க்கை அமைதி, இனிமை, இரக்கம், எளிமை, கருணை, பொறுமை ஆகிய நற்பண்புகள் பொருந்தியது. அவர் பாடிய கவிதைகளிலும் இப் பண்புகள் கொலுவிருக்கக் காணலாம். “நீண்ட காலமாகப் பெண்கள் கலாசாலையில் ஆசிரியராக இருந்தமையால் இக் குணங்கள் சிறந்து விளங்குவதற்கு இடமிருந்தது.

ஆவேசம் பரபரப்பு முதலியன சிறிதளவும் கிடையாது. கவிமணியோடு நாற்பது ஆண்டுகளாகப் பழகியுள்ளேன்; என்றாலும் ஒரு முறையாவது யாரோடும் அவர் கோபங்கொண்டதை நான் பார்த்ததே இல்லை” எனக் குறிப்பிடுவார் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை.

'உள்ளத்தில் உள்ளான் இறைவன்!': முற்போக்கான சீர்திருத்தக் கருத்தினையும் இனிய வடிவில் படைத்துத் தரும் வல்லமை பெற்றவர். இதனை விளக்க 'கோயில் வழிபாடு' என்னும் கவிதை ஒன்றே போதும்.

“கோயில் முழுதும் கண்டேன் - உயர்
கோபுரம் ஏறிக் கண்டேன்
தேவாதி தேவனை யான் - தோழி!
தேடியும் கண்டிலனே”

எனத் தொடங்கும் அக் கவிதை அற்புத மூர்த்தியினை, -ஆபத்தில் காப்பவனை - கோயில் முழுவதும் தேடி அலைவதைச் சொல்கிறது. தெப்பக் குளத்திலோ சுற்றித் தேரோடும் வீதியிலோ சிற்பச் சிலையிலோ நல்ல சித்திர வேலையிலோ இறைவனைக் காண முடியவில்லையாம். இறைவன் உண்மையில் எங்கே தான் இருக்கிறான்? அவனை எப்படி காண்பது? இவ்வினாக்களுக்கு கவிமணி இக் கவிதையின் நிறைவுப் பகுதியில் தரும் விடை:

“ உள்ளத்தில் உள்ளான் அடி! -அது நீ
உணர வேண்டும் அடி
உள்ளத்தில் காண்பாய் எனில் - கோயில்
உள்ளேயும் காண்பாய் அடி!”

தொடரும்....................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 28 Jul 2015 - 12:08

'இறைவன் உண்மையான அன்பு கொண்ட அடியவர்களின் உள்ளத்தில் உள்ளான்; இந்த அடிப்படையான உண்மையை உணர்ந்து கொண்டால் போதும். உள்ளத்தில் இறைவனைக் காணக் கற்றுக் கொண்டால் கோயில் உள்ளேயும் அவனைக் கண்டு கொள்ளலாம்' என்ற முற்போக்கான ஆன்மிகச் சிந்தனையை எவ்வளவு எளிய தமிழில் தெளிவாகச் சொல்லி விட்டார் என்று பாருங்கள்!

குழந்தைப் பாடல்: கவிமணி குழந்தைகளுக்கு என்றே பல பாடல்களை எழுதியுள்ளார். அவை 'குழந்தைச் செல்வம்' என்ற பெயரால் தனி நூலாக வெளியிடப் பெற்றுள்ளன. அதில் மிகச் சிறந்தது 'பசுவும் கன்றும்' பாடல்:

“தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு - அங்கே
துள்ளிக் குதிக்குது கன்றுக் குட்டி.
அம்மா என்குது வௌ்ளைப் பசு - உடன்
அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி.
நாவால் நக்குது வள்ளைப் பசு - பாலை
நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி.
முத்தம் கொடுக்குது வெள்ளைப் பசு - மடி
முட்டிக் குடிக்குது கன்றுக்குட்டி.”

இதில் கடினமான சொல் ஒன்று கூட இல்லை. பாடலின் தொடக்கமும் முடிவும் அற்புதமாக அமைந்துள்ளன.

மொழிபெயர்ப்புத் துறைக்கும் நிலையான பங்களிப்பினை நல்கியுள்ளார். 'ஆசிய ஜோதி'யும் 'உமார் கய்யாம் பாடல்களும்' அவரது மொழி பெயர்ப்புத் திறனுக்கு சான்று.

“வெய்யிற் கேற்ற நிழலுண்டு;
வீசும் தென்றல் காற்றுண்டு;
கையில் கம்பன் கவியுண்டு;
கலசம் நிறைய மதுவுண்டு;
தெய்வ கீதம் பலவுண்டு;
தொடர்ந்து பாட நீயுமுண்டு;
வையந் தரும்இவ் வனமன்றி
வாழும் சொர்க்கம் வேறுண்டோ?”

இத்தகைய பாடல்களைப் படிக்கும் போது மொழி பெயர்ப்பு தழுவல் என்ற எண்ணங்களே தோன்றாது; தமிழ் மொழி கவிதைகளைப் பாடி இன்புறுவது
போன்ற உணர்வே ஏற்படும். இதுவே மொழி பெயர்ப்பாளர் என்ற
முறையில் கவிமணி பெற்ற இமாலய வெற்றி.

வெண்பாவிற்கோர் கவிமணி:வெண்பா இயற்றுவதிலும் வல்லவர் கவிமணி. அவரது வெண்பாக்களின் நடையும் எவ்வகையான சிக்கலும் இல்லாமல் உணர்ச்சியும் ஓசையும் கருத்தும் கற்பனையும் கை கோத்துச் செல்லும்; படிப்பவர் நெஞ்சில் நேரடியாகச் சென்று தெளிவாகப் பதியும். ரசிகமணி டி.கே.சி.யின் ஒரே மகனான தீபன் என்னும் தீக்காரப்பன் 32 வயதிலேயே மறைந்த போது கவிமணி டி.கே.சி-க்கு அனுப்பிய வெண்பா இவ் வகையில் குறிப்பிடத்தக்கது.

“ எப்பாரும் போற்றும் இசைத்தமிழ்ச் செல்வா! என்அப்பா! அழகியசெல்லையா! - இப்பாரில்
சிந்தை குளிரச் சிரித்தொளிரும்
நின்முகத்தை
எந்தநாள் காண்பேன் இனி?”

இவ் வெண்பாவைப் படித்து உள்ளம் உருகிய ரசிகமணி “தங்கள் உள்ளத்தின் கனிவு வெண்பாவில் தெளிந்து கிடக்கிறது. தமிழுலகில் இந்த வெண்பா எழுத ஒருவர்தான். அது தாங்கள் தான்... கவிக்கு உயிரையே கொடுக்கலாம் என்று சொல்லுவது நம்மவர் மரபு.

தங்கள் கவி உயிரைக் கொடுத்து வந்த மாதிரியே இருக்கிறது. தாங்களும் தமிழுமாகச் சேர்ந்து எவ்வளவோ ஆறுதலைத் தருகிறீர்கள்” எனக் கவிமணிக்கு மறுமொழி எழுதினார். 'இப்படி ஒரு அற்புதமான கவிதை தமிழுக்குக் கிடைக்குமானால் உயிரைக் கொடுத்துக்கூட அதைப் பெறலாம்' என ரசிகமணியைச் சொல்ல வைத்த அற்புதமான வெண்பா இது!

“மக்களுக்கு நல்வாழ்வு வாழும்
வழிகள்எல்லாம்
சிக்கலறக் காட்டும் தினமலர் -எக்கணமும்
வாடாது தெய்வ மலர்போல வாழ்ந்திடுக
நீடாழி சூழும் நிலத்து”
என்பது 'தினமலர்' இதழை வாழ்த்திக் கவிமணி படைத்த அழகிய வெண்பா.
'எது கவிதை?' என்ற வினாவுக்குக் கவிமணி தரும் விடை...
“ உள்ளத்து உள்ளது கவிதை - இன்பம்
உருவெடுப்பது கவிதை;
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
தெரிந்து உரைப்பது கவிதை”
கவிதைக்கு இங்ஙனம் வரைவிலக்கணம் வகுத்துத் தந்ததோடு நின்றுவிடவில்லை; அதன் படியே தெள்ளத் தெளிந்த தமிழில் - கவிதைகளைப் படைத்துத் தந்து நம் உள்ளத்தில் நிலைத்த இடத்தினைப் பெற்றவர் கவிமணி.

முனைவர் இரா.மோகன்
எழுத்தாளர், பேச்சாளர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 28 Jul 2015 - 13:23

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பற்றிய அரிய தகவல்கள் .

நன்றி முனைவர் இரா மோகன் / மறு பதிவிட்ட கிருஷ்ணம்மா .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 28 Jul 2015 - 16:16

பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றிமா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue 28 Jul 2015 - 16:19

இன்னும் படிக்கவில்லை. என்றாலும் நேற்று கவிமணியின் பிறந்தநாள். பதிவுக்கு நன்றி கிருஷ்.

கவிமணி தமிழ் கவிதை கண்மணி:இன்று 27-07- பிறந்த நாள்! Aகவிமணி தமிழ் கவிதை கண்மணி:இன்று 27-07- பிறந்த நாள்! Aகவிமணி தமிழ் கவிதை கண்மணி:இன்று 27-07- பிறந்த நாள்! Tகவிமணி தமிழ் கவிதை கண்மணி:இன்று 27-07- பிறந்த நாள்! Hகவிமணி தமிழ் கவிதை கண்மணி:இன்று 27-07- பிறந்த நாள்! Iகவிமணி தமிழ் கவிதை கண்மணி:இன்று 27-07- பிறந்த நாள்! Rகவிமணி தமிழ் கவிதை கண்மணி:இன்று 27-07- பிறந்த நாள்! Aகவிமணி தமிழ் கவிதை கண்மணி:இன்று 27-07- பிறந்த நாள்! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue 28 Jul 2015 - 16:21

ம்ம் இந்தக் கட்டுரையை புதுகைத் தென்றல் இதழில் படித்தேன் கிருஷ். அழகு

கவிமணி தமிழ் கவிதை கண்மணி:இன்று 27-07- பிறந்த நாள்! Aகவிமணி தமிழ் கவிதை கண்மணி:இன்று 27-07- பிறந்த நாள்! Aகவிமணி தமிழ் கவிதை கண்மணி:இன்று 27-07- பிறந்த நாள்! Tகவிமணி தமிழ் கவிதை கண்மணி:இன்று 27-07- பிறந்த நாள்! Hகவிமணி தமிழ் கவிதை கண்மணி:இன்று 27-07- பிறந்த நாள்! Iகவிமணி தமிழ் கவிதை கண்மணி:இன்று 27-07- பிறந்த நாள்! Rகவிமணி தமிழ் கவிதை கண்மணி:இன்று 27-07- பிறந்த நாள்! Aகவிமணி தமிழ் கவிதை கண்மணி:இன்று 27-07- பிறந்த நாள்! Empty
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82778
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 28 Jul 2015 - 16:22

T.N.Balasubramanian wrote:கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பற்றிய அரிய தகவல்கள் .

நன்றி முனைவர் இரா மோகன் / மறு பதிவிட்ட கிருஷ்ணம்மா .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1153762
-
கவிமணி தமிழ் கவிதை கண்மணி:இன்று 27-07- பிறந்த நாள்! 1571444738

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed 29 Jul 2015 - 4:52

நல்ல பதிவு . நன்றி .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 29 Jul 2015 - 11:55

T.N.Balasubramanian wrote:கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பற்றிய அரிய தகவல்கள் .

நன்றி முனைவர் இரா மோகன் / மறு பதிவிட்ட கிருஷ்ணம்மா .

ரமணியன்

நன்றி ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 29 Jul 2015 - 11:56

ஜாஹீதாபானு wrote:பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றிமா

நன்றி பானு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக