புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கயிற்றுக் கட்டில்! Poll_c10கயிற்றுக் கட்டில்! Poll_m10கயிற்றுக் கட்டில்! Poll_c10 
32 Posts - 50%
heezulia
கயிற்றுக் கட்டில்! Poll_c10கயிற்றுக் கட்டில்! Poll_m10கயிற்றுக் கட்டில்! Poll_c10 
28 Posts - 44%
mohamed nizamudeen
கயிற்றுக் கட்டில்! Poll_c10கயிற்றுக் கட்டில்! Poll_m10கயிற்றுக் கட்டில்! Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
கயிற்றுக் கட்டில்! Poll_c10கயிற்றுக் கட்டில்! Poll_m10கயிற்றுக் கட்டில்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கயிற்றுக் கட்டில்! Poll_c10கயிற்றுக் கட்டில்! Poll_m10கயிற்றுக் கட்டில்! Poll_c10 
32 Posts - 50%
heezulia
கயிற்றுக் கட்டில்! Poll_c10கயிற்றுக் கட்டில்! Poll_m10கயிற்றுக் கட்டில்! Poll_c10 
28 Posts - 44%
mohamed nizamudeen
கயிற்றுக் கட்டில்! Poll_c10கயிற்றுக் கட்டில்! Poll_m10கயிற்றுக் கட்டில்! Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
கயிற்றுக் கட்டில்! Poll_c10கயிற்றுக் கட்டில்! Poll_m10கயிற்றுக் கட்டில்! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கயிற்றுக் கட்டில்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 12, 2015 2:06 pm

கந்தசாமி கயிற்றுக் கட்டிலிலிருந்து எழுவதைப் பார்க்கும் போதெல்லாம், சாகசக்காரனைப் போன்று இருக்கும். தள்ளாடியபடி தரையில் கால் ஊன்றி, தட்டுத்தடுமாறி தன் மூக்குக்கண்ணாடியை அணிவிக்கும் முன்னரே, அது தவறி கீழே விழும். மீண்டும் தேடல் ஆரம்பமாகும். இது ஒவ்வொரு நாளும் அரங்கேறும் காட்சி.

வெகுநேரமாய் வீட்டுக்குள்ளிருந்து வரும் கறிக்குழம்பு வாசம், கந்தசாமியின் மூக்கை துளைத்து, பசியை தூண்டியது. ஆனாலும், நினைச்சதும் சாப்பிட முடியாது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். மனைவி இருந்தவரைக்கும், பசி என்றால் என்னவென்றே தெரியாது; மனைவி இறந்த பின் சாப்பாட்டைத் தவிர, வேறு எதையும் அதிகமாக நினைப்பதில்லை.

முதுமையின் தனிமையை, கயிற்றுக் கட்டிலில் உறங்கிக் கழித்தார்.
''மாமா... உங்க புள்ள கருவேப்பில வாங்க மறந்துட்டாரு... கொஞ்சம் கடைக்குப் போயிட்டு வர்றீங்களா...'' என்றாள் மருமகள். வீட்டிற்குள் எட்டிப் பார்த்தார். பொம்மை படம் பார்த்தபடி இருந்தாள் பேத்தி. ஓடி விளையாடத் தெரியாத பேரன், மொபைல் போனில் கிரிக்கெட்டில் மூழ்கியிருந்தான்.

அன்றைய தினசரி பேப்பரில், படிக்க மறந்ததை தேடித் தேடி படித்துக் கொண்டிருந்தான் மகன்.
''சரி... கொடும்மா,'' என்று முகம் சுளிக்காமல் காசை வாங்கிக் கொண்டார். தினமும், நடைப்பயிற்சி கொடுக்கும் மருமகளை பற்றி அவருக்கு நன்றாகத் தெரியும். வேலை வாங்கும் நேரங்களில் கெஞ்சலாகவும், மற்ற நேரங்களில் முதலாளி போன்ற தோரணையில் அதட்டலாகப் பேசுவாள்.

அரை கிளாஸ் டீக்கு மேல், ஒரு இஞ்ச் கூடி விடாமல் பார்த்துக் கொள்வாள். ரசத்தைக் கூட அளந்து தான் ஊற்றுவாள். 'பெற்ற பிள்ளைகளே புரிந்து கொள்ளாத போது, எங்கிருந்தோ வந்த மருமகளை கோபித்து என்ன பயன்...' என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொள்வார்.

இடுப்பு வேட்டியை அவிழாதபடி இறுகக் கட்டி, காசை முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்து திருப்தியடைந்தார். ஒருமுறை கடைக்காரரிடம், கிழிந்த ரூபாய் நோட்டை கொடுத்து, ஏகவசனத்தில் திட்டு வாங்கியதிலிருந்து, காசை சரி பார்த்த பின்தான் கடைக்குச் செல்வார்.

காசிநாதர் மளிகைக் கடை வந்தது. அந்த மனுஷன் என்ன தான் விற்பாரோ கடையில் எப்போதுமே திருவிழாக் கூட்டமாக வாடிக்கையாளர்கள் குவிந்து கிடப்பர். முட்டி மோதி நிற்கும் இளசுகளுக்கு விட்டுக் கொடுத்து, பொறுமையாக வாங்கிக் கொண்டு நடந்தார்.

வழியில், டீக்கடையிலிருந்த கூரி கிழவனைப் பார்த்தவர், ''என்னப்பா கூரி... மக வீட்டுக்கு போனதா சொன்னாங்களே... ஊர்லயிருந்து எப்போ வந்த?'' என்று கேட்டார்.

''அந்தக் கொடுமைய ஏன்பா கேக்குற... அவளுக்கு, அவ அம்மா கூட இருந்தது சந்தோஷமா இருந்துச்சு; ஆனா, நமக்குத் தான் வீட்டு வேலை செய்யத் தெரியாதே... முகத்த சுளிக்க ஆரம்பிச்சா... அதான், எதுக்கு அங்க பாரமா உட்காந்துருக்கணும்ன்னு மகன்கிட்ட வந்தேன்.

இங்க என்னடான்னா... 'எங்கள குறை சொல்லி, மக கிட்ட போனீங்களே... இப்ப எதுக்கு திரும்பி வந்தீங்க. இங்க என்ன கொட்டியா கிடக்கு... வேலை பாத்தால் தான் சோறு'ன்னு சொல்லிட்டா மருமக.

''சாகுற வரைக்கும் பசிக்குமே... அதான், எச்சி கிளாஸ் கழுவிட்டு இருக்கேன். கந்தசாமி... மறந்து கூட உன் மகளுங்க வீட்டுக்குப் போயிடாத. அப்புறம் உள்ள மரியாதையும் காணாமப் போயிடும்,'' என்றார்.
''நீ எச்சி கிளாஸ் கழுவுறத உன் மகன் பாக்க மாட்டானா?''

''பாப்பான்... பாத்துட்டு பாக்காத மாதிரி போயிடுவான். வந்தவ கையில நிர்வாகத்தை தந்திருக்கான்ல... இன்னும், கொஞ்ச நாள்ல அவனுக்கும், இதே நிலைம தான்,'' என்றவர், ''நம்ம பொழப்ப பாத்தியா... ஜல்லிக்கட்டுல எத்தனை காளைகள அடக்கியிருப்போம்; இப்போ வீட்ல நடக்குற அநியாயத்த அடக்க முடியுதா...'' என்றவர், வாயில் துண்டைப் பொத்தி கண்ணீர் விட்டார்.

''டேய் கூரி... ஏன்டா கொழந்த மாதிரி அழறே... ரோட்டில எல்லாரும் பாக்குறாங்கடா,'' என்று ஆசுவாசப்படுத்திய பின், கனத்த இதயத்தோடு வீட்டிற்குள் நுழைந்தார்.

இடுப்பில் கை வைத்து, சூலாயுதம் இல்லாத பத்ரகாளியாய் நின்று கொண்டிருந்தாள் மருமகள்.
''பக்கத்து தெருவுல இருக்கிற கடைக்கு போயிட்டு வர இம்புட்டு நேரமா...'' என்று, கோபப் பெருமூச்சு விட்டபடியே கேட்டாள்.

வாய் திறந்து ஏதாவது பதில் சொன்னால் சண்டை வருமோ என நினைத்தவர், மன்னிப்பு கேட்டு தாழ்வாரத்தில், தன்னைப் போல் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முரட்டுக்காளையை அடக்கியதற்கு பரிசாகக் கிடைத்தது அந்தக் கயிற்றுக் கட்டில். மணமானதும், இல்லற வாழ்க்கையை. இக்கட்டிலில் தான் துவக்கினார். பின், ஐந்து குழந்தைகளை பெற்று, வளர்த்து ஆளாக்கியதில் இக்கட்டிலுக்கும் பங்கு உண்டு. ஊரில் நடக்கும் நல்ல காரியங்களுக்கு முன் நின்று உதவும். இருபது பேர் அமர்ந்தாலும், சிங்கம் போல அசையாமல் நிற்கும்.

ஒருமுறை, வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது, பசு மாடு ஒன்று, கிணற்றில் தவறி விழுந்து விட்டது. ஊர் மக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர். தகவல் அறிந்து ஓடி வந்தார் கந்தசாமி.

'ஏம்பா கந்தசாமி... அன்னிக்கு குழந்தைய காப்பாத்த தண்ணிக்குள்ள குதிச்ச... இன்னிக்கும் குதிக்க வேண்டியது தானே...' என்று கிண்டலடித்தான் கூட்டத்தில் ஒருவன்.

'பெத்தவங்களே, சும்மா நின்னு அழுதுகிட்டு இருந்தப்போ, அவன், வீரத்தைக் காட்ட அன்னைக்கு குதிச்சான். அது மாதிரி இன்னைக்கு முடியுமா...' என்றான் இன்னொருவன்.

என்ன செய்வதென்று தெரியாமல் சிறிது நேரம் யோசித்த கந்தசாமி, கட்டிலின் நான்கு மூலைகளிலும் கயிற்றைக் கட்டி கிணற்றுக்குள் இறக்கியவர், தானும் கிணற்றுக்குள் குதித்து, பசு மாட்டை உயிருடன் மீட்டார்.

பின் கேலி செய்தவர்களை நோக்கி, 'எனக்கு எல்லா உசிரும் ஒண்ணு தான்...' என்றார். அன்றிலிருந்து, அவரின் புகழ், சுற்று வட்டாரம் முழுவதும் பரவியது. மனைவியின் இழப்பால், விவசாயத்தில் நாட்டமில்லாமல் போனது. இருந்த நிலத்தை ஐந்தாக பிரித்து, நான்கு பெண் பிள்ளைகளுக்கும், மகனுக்கும் கொடுத்துவிட்டு, ஒருவேளைச் சோற்றுக்கு அவர்களிடம் கையேந்தி நிற்கிறார்.

இவ்வுலகில் அவருக்கென்று இருப்பது அந்தக் கட்டில் மட்டும் தான். செழிப்பாக இருந்தால் அழையா விருந்தாளிகள் கூட நலம் விசாரிப்பர்; ஒன்றுமில்லாதவரைத் தேடி யார் வருவர். கூரி கிழவனைப் போல கந்தசாமிக்கு பெற்ற பிள்ளைகளை சபிக்கத் தெரியாது. ஆயிரம் பேருக்கு நடுவுல அநாதையா ஆஸ்ரமத்தில் வாழ்றதை விட, பேரக் குழந்தைகளை கண்ணால பார்த்தபடி இருந்தால் போதும் என்று தாழ்வாரத்தில் தவம் கிடக்கிறார்.

வாசலில் கார் சத்தம் கேட்டது. வாயெல்லாம் பல்லாக, அவர்களை வரவேற்று அழைத்துச் சென்றாள் மருமகள். அவள் சிரித்து உபசரிக்கிறாள் என்றால், அவளுக்கு வேண்டியவர்களாகத் தான் இருக்கும். விருந்து தடபுடலாக நடந்தது. வந்தவர்கள் பேருக்கு நலம் விசாரித்து விட்டு சென்றனர்.

''அப்பா சாப்பிட வாங்க,'' என்ற மகனின் குரல் கேட்டு எழுந்தார். வீட்டிற்குள் ஏராளமான பரிசுப் பொருட்கள் குவிந்திருந்தது. மேஜையில், வெட்டிய நிலையில் பாதி, 'கேக்' இருந்தது.

தொடரும் ....................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 12, 2015 2:07 pm

''என்னப்பா விசேஷம்?'' என்று கேட்டார் கந்தசாமி.

''உங்க பேரனுக்கு பிறந்த நாள்ப்பா; அதுக்கு வாழ்த்து சொல்ல, உன் மருமக வீட்டில இருந்து வந்திருந்தாங்க,''என்றான் மகன்.

''தொலைவில இருக்கிறவங்களுக்கு எல்லாம் போன் செய்து சொல்லியிருக்கீங்க... வாசல்லதானே இருக்கேன்... என்கிட்ட சொல்லாட்டியும் சுவர்கிட்ட நின்னாவது சொல்லியிருந்தா, எனக்கு கேட்டுருக்கும்லே... என் பேரனை வாழ்த்த கூட உரிமையில்லாதவனா போயிட்டேனா...'' என்றார்.

''அப்பா...'' என்று பேச ஆரம்பித்தவனை இடைமறித்து, ''இந்த செயின் உங்க அம்மாவோடது; அவ நினைவா இத மடியில முடிஞ்சு வச்சிருந்தேன்...'' என்று கூறி, பேரனை அழைத்து, அவன் கழுத்தில் செயினைப் போட்டு, ''என் பிறந்த நாள் பரிசு,'' என்றார்.

வாழை இலையில் கறித்துண்டும், எஞ்சிய மீன் வறுவலுடன் சாப்பாடு பரிமாறினாள் மருமகள். பசி குறைந்து இருந்ததால், விருந்து சாப்பாட்டை மருந்தாக உண்டு முடித்து, சுவரைப் பிடித்துக் கொண்டே படியிறங்கினார்.

பெத்த பிள்ளைகள் தம்மை காப்பாற்றும் என்று, பெற்றோர் நினைப்பது தவறு. பிள்ளைகளுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்த பெற்றோர், வயசானதும், பிள்ளைகளுக்கு சுமையாக போவது தான் நிதர்சனம். மூன்று வேளை சாப்பாடு, தங்க இடம், இதைத் தவிர அவர்கள் என்ன எதிர்பார்க்கின்றனர். இப்படிப்பட்ட குழந்தைகளை பெற்று வளர்த்ததுக்கு, தண்டனையைத் தான் கந்தசாமியும் அனுபவிக்கிறார்.

மாலையில் தோட்டத்திற்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார் கந்தசாமி. மருமகளின் பேச்சுக் குரல் ஜன்னல் வழியே கேட்டது.
''என்னங்க... நாம இம்புட்டு செலவழிச்சு வீடு கட்டி என்ன புண்ணியம்... வீட்டுக்கு முன் உங்கப்பாவோட கயித்துக் கட்டில் அசிங்கமா இருக்கு; அதை பழைய சாமானுக்கு போடலாமா?'' என்று கேட்டாள்.

''ஏன் எங்க அப்பனையும் சேர்த்து போட வேண்டியது தானே...'' என்றான் கோபமாக!
''கட்டிலுக்காவது நாலு பேரீச்சம்பழம் கிடைக்கும்; உங்க அப்பாவுக்கு என்ன கிடைக்கும்...'' என்றாள்.

அதற்கு அவனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
''இப்படி மவுனமா இருந்தா என்ன அர்த்தம்... ஒரு நாளைக்கு உங்கப்பாவோட சேர்த்து கட்டிலைத் தூக்கி, ஊர் பொதுமடத்துல போடப் போறேன்.''
''எதுக்குடி?''

''ஊருக்காக உழைச்சக் கட்டில், பிணங்களை தூக்க உதவட்டுமே...'' என்றாள்.
இதைக் கேட்டதும், கந்தசாமிக்கு நெஞ்சு அடைத்தது. உயிருள்ள பொருளோ, உயிரில்லாத பொருளோ மனிதனுக்கு உபயோகமில்லை என்று ஆகிவிட்டால் இப்படித்தான் பேசுவர்.

இரவு சாப்பாட்டின் போது, ''அப்பா... உங்க கட்டில் பழசா போயிடுச்சு; புதுக்கட்டில் வாங்கித் தரட்டுமா?''

''நானும் தான் பழசாயிட்டேன்; எனக்குப் பதிலா புது அப்பாவை வாங்க முடியுமா... என்னடா பேசுறே... என் வீரத்துக்கு கிடைச்ச கட்டில, பிணங்களை தூக்கிச் செல்ல அன்பளிப்பா கொடுக்கப் போறீங்களா... நீங்க பேசுனதை நான் ஒட்டுக் கேக்கல. உன் மனைவி சத்தமா பேசினது தான் என் காதில் விழுந்தது,'' என்றார்.

''வயசானவங்க, வாழுறவங்களுக்கு வழி விடணும்; சகுனி வேலை பாத்து எங்கள பிரிச்சுடாதீங்க,'' என்றாள் மருமகள்.

''யாரும்மா சகுனி... என் உழைப்புல சம்பாதிச்ச சொத்துகளை எனக்குன்னு வச்சுக்காம, பிள்ளைகளுக்குக் கொடுத்துட்டு ஆண்டியா நிக்குறேனே... நீங்க அனுபவிக்கிற வசதி எங்கிருந்து வந்துச்சு... நாங்க வளக்காமலா உன் புருஷன் வானத்துலயிருந்து குதிச்சு வந்தான்... நாங்க அமைதியாக விட்டுக் கொடுத்தா, எங்க பல்லை புடுங்கி பதம் பாப்பீங்களா... என் மகனோட சந்தோஷத்துக்காகத் தான் இத்தனை நாள் பொறுமையா இருந்தேன்; அவனே என்னை ஒதுக்கி வைக்கும் போது நான் யாருக்காக வாழணும்,'' என்று பொங்கி எழுந்தார்.

''இதுதான் நான் உங்ககிட்ட பேசுற கடைசி வார்த்தை... எனக்கு யாரும் தேவையில்ல,'' என்று முகத்தைப் பொத்தி அழுதார்.

அன்றிரவு தூங்காமல் வானத்து நட்சத்திரங்களில், தன் மனைவியின் முகத்தை தேடி, தோற்றுக் கொண்டிருந்தார்.

விடிந்தது.

''மாமா... என்னை மன்னிச்சுடுங்க; நான் திருந்திட்டேன்,'' என்று, அவரின் தலைமாட்டில் நின்று கூறினாள் மருமகள்.

கந்தசாமி கண்களைத் திறக்கவில்லை. தினம் நிகழும் சாகச போராட்டத்திற்கு விடுதலை கொடுத்திருந்தார்.

''என்னங்க... மாமாவை வந்து பாருங்க,'' என்ற மனைவியின் குரல் கேட்டு ஓடி வந்தான்.
கந்தசாமியின் கைகள், கட்டிலை இறுகப் பிடித்திருந்தது. உயிருடன் இருந்த வரை, பார்க்க வராத உறவுகள் கட்டிலைச் சுற்றிலும் கூடியிருந்தது. மகன் வாய் விட்டு அழவில்லை; அவன் மனைவி ஒப்புக்காக அழுது கொண்டிருந்தாள். பேரன், தன் கழுத்தில் இருந்த செயினை தடவியபடி நின்றிருந்தான்.

''கட்டிலு மேல நீ வச்ச பாசத்தைக் கூட, உம் புள்ளைங்க உன் மேலே வைக்காம போய்ட்டாங்களே... பிள்ளைகள பெத்து வளக்குறது இதுக்குத் தானா...'' என்று உண்மையாக ஒப்பாரி வைத்து அழுதவர் கூரி கிழவன் மட்டுமே!

தன் மரணத்தையும் கட்டிலில் நிகழ்த்தி சாதித்து விட்ட கந்தசாமியின் இறுதிச் சடங்குகள் முடிந்து, கட்டிலில் வைத்தே எடுத்துச் செல்லப்பட்டார்.

''டேய் பாண்டி... கட்டில்ன்னா உங்கப்பனுக்கு உசிருடா; அதையும் அவன் கூட சேர்த்து எரிச்சுடு... அப்ப தான் அவன் ஆத்மா சாந்தியடையும்,'' என்றார் கூரி கிழவன்.
''எங்க தாத்தா கட்டிலை எரிக்காதீங்க; எங்க அப்பா வயசானதும் அவருக்கு உதவும்,'' என்றான் பேரன்.

அவன் விளையாட்டாய் கூறிய வார்த்தைகள், கன்னத்தில் ஓங்கி அறைந்ததைப் போல் உணர்ந்தான் கந்தசாமியின் மகன்!

சுகன்யா நடராஜன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 12, 2015 4:39 pm

எங்க தாத்தா கட்டிலை எரிக்காதீங்க;
எங்க அப்பா வயசானதும் அவருக்கு உதவும்,'' என்றான் பேரன்.
-
அருமையிருக்கு அருமையிருக்கு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 15, 2015 4:21 pm

ayyasamy ram wrote:எங்க தாத்தா கட்டிலை எரிக்காதீங்க;
எங்க அப்பா வயசானதும் அவருக்கு உதவும்,'' என்றான் பேரன்.
-
அருமையிருக்கு அருமையிருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1150464

எஸ்...எஸ்....எஸ்..........புன்னகை முற்பகல் செய் இன் பிற்பகல் விளையும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக