ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதமா? மனிதமா? – – வைரமுத்து

3 posters

Go down

 மதமா? மனிதமா? – – வைரமுத்து Empty மதமா? மனிதமா? – – வைரமுத்து

Post by ayyasamy ram Fri Jul 10, 2015 9:40 am

அவன் பெயர் ராமன். ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியன். கம்பராமாயணத்தில் தோய்ந்து பாடம் எடுப்பான் என்பதனால் அவனைக் “கம்பராமன்’ என்றே அடைமொழி கூட்டி அழைத்துப் பழகிவிட்டது பள்ளி.

அவன் கம்பராமன் என்று அழைக்கப்படுவதில் மண்ணுளிப்பாம்புக்கு இரண்டுபக்கம் தலை இருப்பதுபோல் இருதரப்புக்குமே மகிழ்ச்சிதான். அழைக்கப்பட்ட ராமன் அதைப் பெருமை என்று கருதி மகிழ்ச்சி கொள்கிறான்.

அழைக்கிறவர்கள் அதில் தொனிக்கு கேலியில் கள்ளக்காதலைப்போல் ஒரு ரகசிய சந்தோஷத்தை அனுபவிக்கிறார்கள்.

இது எழுதப்பட்டுக் கொண்டிருக்கும்போது ராமனுக்க வயது நாற்பது. ஆனால் அவனது 27 வயதுக் கதையறியாமல் இந்த நாற்பதைப் புரிந்துகொள்வது சாத்தியமில்லை. அதனால் 13 ஆண்டுகளுக்கு முன்னால் அடித்த மழையில் நனையப் போகிறோம் நாம் எல்லாரும்.

ஒரே ஒரு கேள்விதான்.. ஒரே ஒரு பதில்தான். அந்தத் தமிழாசிரியன் வாழ்வைத் தலைகீழாய்ப் புரட்டிப் போட்டுவிட்டுப் போய்விட்டது.

எல்லாக் கேள்விகளுக்கும் இரண்டு பதில்கள் உண்டு. ஒன்று சத்தியமானது; இன்னொன்று சாமர்த்தியமானது. இந்த உலகம் சத்தியத்தை விரும்புகிறதோ இல்லையோ சத்தியம்போல் தொனிக்கும் சாமர்த்தியத்தை ரசிக்கிறது.

பத்தாம் வகுப்புப் பையனொருவன் வகுப்பில் ஒரு கேள்வி கேட்டான்.

“ராமன் ரகுவம்சத்தைச் சேர்ந்தவன்தானே? ரகு வம்சம் சூரிய வம்சம் தானே? அப்படியானால் அவன் ராமசூரியன் என்றுதானே அழைக்கப்பட்டிருக்க வேண்டும். பிறகு ஏன் அவனை ராமச்சந்திரன் என்று அழைத்தார்கள்?’

அடிப்போனான் கம்பராமன். கேட்டது மாணவனின் சொந்தக் கேள்வியா இல்லை மண்டபத்தில் யாராவது எழுதிக் கொடுத்தனுப்பினார்களா தெரியாது. கேள்வி மெய்யானது; அதிலிருக்கும் நியாயத்தின் பிடி இறுக்கமானது. காற்று கடந்தோடிய பிறகு நிலைகொள்ளும் மரம் போல் நிதானித்து, யோசித்து, பிறகு ஒரு பதில் சொன்னான்:

“தம்பி! சூரியன் சூடானது; சந்திரன் குளிர்ச்சியானது. ராமன் சினம் கடந்தவன்; சுடுசொற்கள் சொல்லாதவன். அவன் “சாந்த சொரூபி’ அந்தக் குணச்சிறப்பு கருதியே அவன் ராமச்சந்திரன்’ என்று அழைக்கப்படுகிறான்.

பள்ளி வளாகம் முழுக்க அது பரவிவிட்டது.

“கம்பராமன் கம்பராமன்தான்’ என்று கட்டியங்கூறத் தொடங்கி விட்டார்கள் சக ஆசிரியர்களும் மாணவர்களும். நல்ல தமிழாசிரியர் வாய்த்திருக்கிறார் என்று நிர்வாகம் கூட ஆளில்லாத வேளைகளில் பாராட்டிச் சொன்னது.

ஆனால் புகழ் என்பது எதுவரைக்கும்? ஒப்பீட்டுக்கு இன்னொன்று வரும் வரைக்கும். கம்பராமன் கீர்த்தியும் கித்தாப்பும் எதுவரைக்கும்? அருள்மேரி அந்தப் பள்ளிக்கு வந்துசேரும் வரைக்கும். அருள்மேரி என்பவள் யார்? தெற்கிலிருந்து வந்தவளாம்; கன்னியாகுமரிக்காரியாம்; தக்கலையாம்; பாளையங்கோட்டையில் படித்தவளாம்; பளிச்சென்ற தோற்றம் கொண்டவளாம்; கஞ்சி போட்ட காட்டன் புடவை கடிடவந்தால் அவள் பருத்தியில் பூத்த தாமரையாம்; செப்புச்சிலை முகமாம்; நல்ல உயரமாம்; காயிலிருந்து பழத்துக்கு மாறத்தொடங்கும் தக்காளியின் முதல் சிவப்பாம்; கண்ணிலே தமிழ் ஒளியாம்; சொல்லிலே தேவாலயமணிச் சத்தமாம்; இருபதுகளின் எல்லாத் திரட்சியும் உள்ளவளாம்.

வந்து சேர்ந்த இரண்டே மாதத்தில் இலக்கணத்தில் புலி என்று பேரெடுத்துவிட்டாள். ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் வல்லெழுத்து மிகும்; வினைத்தொகையில் மிகாது. இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லெழுத்து மிகாடு ஆனால் இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லெழுத்து மிகும். உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும். வெண்பாவுக்குச் செப்பலோசை அது நாள்… மலர்… காசு… பிறப்பு என்ற வாய்பாடுகளுள் ஒன்றால்தான் முடியவேண்டும் என்ற அளவோடு அவள் நிறுத்திக் கொண்டிருந்தால் கம்பராமன் வாழ்வில் எந்த எழுத்துப்பிழையும் நேர்ந்திருக்காது. அவனைக் கேட்ட அதே கேள்வியை அதே மாணவன் அருள்மேரியைக் கேட்டதும் அதற்கு அவள் சொன்ன பதிலும்தான் கம்பராமனின் மனதையும் வாழ்வையும் தடம் மாற்றிப் போட்டுவிட்டது.

“ராம சூரியன் என்று அழைக்கப்படாமல் ராமச்சந்திரன் என்று ராமன் ஏன் அழைக்கப்பட்டான் தெரியுமா? சூரியன் களங்கமில்லை. சந்திரன் களங்கமுண்டு. வாலியை வனத்தில் மறைந்து நின்று அம்பெய்திக் கொன்றும், மாசற்ற சீதையைத் தீக்குளிக்கச் சொல்லியும் களங்கமுற்றதால் அவன் ராமச்சந்திரன் என்று அழைக்கப்பட்டான். அழைக்கவும் படுகிறான்; மற்றும் படுவான்.’
ஒட்டுமொத்த வகுப்பே எழுந்து நின்று கைதட்டியது. அது அலையலையாய்க் காற்றி பரவி மொத்தப் பள்ளியையும் அருள்மேரியின் வகுப்பறைக்குள் அழைத்து வந்துவிட்டது.

நல்ல விடைகிடைத்த மகிழ்ச்சிக்கும் தோற்றுப்போன துயரத்துக்கும் மத்தியில் முகத்தை வைத்துக் கொண்டு கம்பராமனும் கைதட்டினான். எல்லாக் கரவொலியும் அடங்கியபிறகும் அவனது இருகை ஓசைமட்டும் தனியாகக் கேட்டுக் கொண்டே இருந்தது; அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் மீது விழுந்த பார்வை நதியில் விழுந்த மழை பிரித்தெடுக்க முடியவில்லை.

“அமுதா! இவங்க எங்க பள்ளிக்கு வந்திருக்கிற புதுத் தமிழ் வாத்தியாரம்மா.. ரொம்ப அறிவாளி. அளிவாளின்னா.. என்னை விட…’

சீக்காளியான தன் மனைவிக்கு அருள்மேரியை அறிமுகம் செய்துவைத்தான் கம்பராமன். போர்வையை விலக்கிப் புடவையைச் சரிசெய்து இருமல் தமிழில் வணக்கமென்றாள் அமுதா. அவள் கைகளை ஆதரவாய்ப் பற்றிக் கொண்டாள் அருள்மேரி.

“உடம்புக்கு என்ன?’

“ஒண்ணு ரெண்டுன்னா சொல்லலாம். ஆஸ்பத்திரிக்குத் தேவையான அத்தன வியாதியும் இருக்கு ஒடம்புல. கல்யாணமாகி ஆறு மாசந்தான் நல்லாயிருந்தேன். பாவம் இவரு. என்னைக் கட்டிக்கிட்டு என்ன சொகத்தக் கண்டாரு?’

இரண்டு பேருக்கும் தேநீர் தயாரித்து எடுத்து வந்தான் கம்பராமன்.
“ஒங்களுக்குத் தேநீர்கூடப் போடத் தெரியுமா?’ என்றாள் அருள்மேரி.
“சமையலே அவர்தான்’ என்றாள் அமுதா.

பாவம்! குறுக்குச் செத்தவள். குடித்த தேநீர்க் கோப்பையைக் கொடுத்துவிட்டுச் சாய்ந்துவிழுந்து படுக்கையில் தன்னைப் பரப்பிக் கொண்டாள்.

“கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும்’.
அமுதாவின் நெற்றியில் முத்தமிட்டாள் அருள்மேரி.

இரவு பின்ஜாமத்தில் வழிந்து வடியும்வரை, குரைத்த களைப்பில் தெருநாய்கள் உறங்கும்வரை கம்பராமன் வீட்டில் தமிழாடல் என்று பழகிப் போனாள் அருள்மேரி. இரவெல்லாம் இலக்கியம்தான்; விமர்சனம் தான்; விவாதம்தான். தமிழாசிரியர்கள் பெரும்பாலும் ஏன் பின்னோக்கியே பயணப்படுகிறார்கள் என்ற பட்டிமன்றம்தான். உலகமயமாதலில் தமிழ் மொழியின் இடம் எங்கே என்று தேடுவதைவிட மதுரையில் கண்ணகி திருகி ஏறிந்த முலைத்துண்டு எங்கே என்ற தேடல்குறித்தே நாம் அதிகம் கவலைப்படுகிறோமா என்று அவள் கோபத்தோடு கேட்பதும். இப்படியெல்லாம்கூடச் சிந்திக்க முடியுமா என்று கம்பராமன் அவளை வியப்பதும் ரசிப்பதும் வாய்விட்டுச் சிரிப்பதும் வேடிக்கையான வாடிக்கையாகிவிட்டது. அந்தச் சிரிப்பொலிக்குத் தெரியாது. அமுதாவின் தூக்கத்தின்மீது விழும் இடி அது என்று. அந்த விவாதத்தின் நெருப்புக்குத் தெரியாது ஒரு காசநோய்க்காரியின் நிம்மதி அதில் எரிக்கப்படுகிறது என்று.

அருள்மேரியே இப்போது சமைக்கவும் தொடங்கிவிட்டாள். பாத்திரங்களின் ஓசைதான் ஒரு வீட்டின் அநாகரிகம் என்றாள்; சப்தமில்லாத சமையலோடு நாகரிகத்தையும் பரிமாறினாள். நள்ளிரவானதும் அவள் வீடுவரை சென்று இவன் விட்டுவருகிறான். அவர்களோடு சேர்ந்து இவளது தூக்கமும் வெளியேறிவிடுகிறது.

அருள்மேரியின் வருகைக்குப்பிறகு அமுதா ஒவ்வொன்றாக இழக்கிறாள்.
பள்ளிக்கூடம் முடிந்ததும் ஓடோடிவந்து கட்டில் விளிம்பில் உட்காருவானே அந்த அணுக்கம் போயிற்று.
நான்கு விரல்களால் நெற்றிதொட்ட நீவி விடுவானே அந்த ஸ்பரிசம் போயிற்று!
பால் குடிக்கையில் புரை ஏறினால் தொண்டையை உருவி விடுவானே அந்த தடவல் போயிற்று.

கால் விரல்களைச் சொடுக்கெடுக்கும் கை தன் வினை முடித்து கெண்டைக்கால் சதைவரை ஏறி வந்து ஓர் இதம் செய்யும் அந்த “இது’ போயிற்று.
கூந்தலைக் கோதிவிடும் விரல், கழுத்தடியில் செல்லமாய்க் கபடியாடும்போது சொல்லத் தெரியாத ஒரு சுகம் பாடுமே! அந்த மயக்கம் போயிற்று.
தன் மார்பில் என்னைத் தாங்கிக் கொண்டு இருதயத்தின் சப்தக் கூட்டுக்குள் என் ஒரு காதை ஒன்றவைத்து அதன் துடிப்பை என் உயிரு”குள் ஒலிபரப்புவானே அந்த ஆண்தாய்மை போயிற்று.

எனக்கும் அவனுக்குமான இந்த தூரம் இயற்கையா? செயற்கையா?
தன்னை ஊற்றி நிரப்பிக் கொள்ள அந்தச் சிறுக்கியானவள் சிருஷ்டித்த தூரமா?
தொலைந்துபோகிறான் என்று விடமுடியவில்லை; என்னால் தொலையவும் முடியவில்லை.

இந்த ஏழெட்டுமாத நெருக்கத்தில் தொட்டும் தொடாமலும் சில நேரங்களில் தொடையில் அடித்தும் பேசிக் கொள்கிறார்கள் என்பதை ஓசைகளின் மொழி உணர்த்திக் கொண்டேயிருந்தது அமுதாவுக்கு.
ஒரு பின்னரவில் அவளை விட்டுவர அவள் வீடுவரை போனவன் வீடு திரும்பவில்லை. அவன் வீடு திரும்பாததற்கு மழைதான் காரணம் என்று சாட்சி சொல்லப்பட்டாலும் “இத்து’ப்போன தாம்பத்யம் அதை நம்பத் தயாராக இல்லை.

அதிகாலையில் வீடு திரும்பியவன் திகைத்துத் தெருவில் நின்றான். வீடு பூட்டியிருந்தது. பூட்டு என்ற கேள்விக்குறி கதவில் தொங்கியது. பக்கத்துவீட்டுக் கீரைக்காரியிடம் சாவி வாங்கித் திறந்தால் – நோய்ளி இல்லாமல் நோயுற்றுக் கிடந்தது வீடு. கொடியில் கிடந்த துணிமணிகளும் பீரோவில் கழற்றிவைத்திருந்த நகைகளும் அவள் நித்தம் பூப்போடும் மதுரை மீனாட்சி திருச்சிலையும் இருவருக்கும் பொதுவான ஒரே ஒரு கைப்பெட்டியும் மற்றும் அவளும் காணவில்லை. மருந்துப்புட்டிக்குக் கீழிருந்த வெள்ளைக் காகிதத்தில் ஒரே வரிதான் எழுதியிருந்தாள்;
“நீங்க நல்லாருங்க… நான் போரேன்.’

அவளது கருத்துப் பிழையிலும் போறேன் என்றெழுதாம் வல்லினத்துக்கு மாறாக இடையினம் இட்டெழுதிய எழுத்துப்பிழையிலும் நெஞ்சொடிந்தவன் நிலை குலைந்தான். அதன்பிறகு எந்த முயற்சியும் எடுபடவில்லை. விடுதலைப் பத்திரத்திலும் விவாகரத்திலும் முதல் மனைவியின் தாம்பத்யம் முடிந்தது.

இரண்டாம் மனைவி அருள்மேரிக்கு இப்போது இரண்டு குழந்தைகள். மூத்த மகனுக்கு அவள் பெயர் வைத்தாள். ஆண்டனி பாண்டியன் என்று இளைய மகளுக்கு அவன் பெயர் வைத்தான் ஆண்டாள் மேரி என்று ஓடி விழுந்த இடம் சொல்லாமல் 13 ஆண்டுகள் தொலைந்து போயின். இப்போது மகனுக்கு வயது பன்னிரண்டு. மகளுக்கு ஒன்பது. கம்பராமனுக்கு நாற்பது. இந்தப் பின்னணி தெரியாமல் அந்த இழவுச் செய்தியை எப்படி விளங்கிக் கொள்ள முடியும்?

இன்று காலை ஏழு மணிக்கு அமுதா இறந்துவிட்டாள்.

இருதயம் சில கணங்கள் நின்று மீண்டும் துடிக்கத் தொடங்கியது ராமனுக்கு.

வகுப்பறையைவிட்டு அவன் சொல்லாமல் வெளியேறினான். அவன் பகல் இருள்கட்டி நின்றது. கண்கள் நீர்கட்டி நின்றன.
“இறந்துவிட்டாயா அமுதா! நீ விவாகரத்து வேண்டியது உன்னை அழித்து என்னை வாழவைக்கத்தானா! நான் ஒரு பிழையும் செய்யவில்லையே பெண்ணே! என்னை ஏன் பிரிவால் கண்டித்து மரணத்தால் தண்டிக்கிறாய்? உனக்கு நேர்ந்தது மரணமா? என்னால் நேர்ந்த தற்கொலையா? கடவுளே! என் மாஜி மனைவியின் ஆன்மா அமைதியில் அடங்கட்டும்!’
சரஞ்சரமாய் வந்துவிழுந்த கண்ணீரில் அவனது கதர்சட்டை கஞ்சி கசித்து சல்லடையானது.

இழவுக்குப் போவதா? தவிர்ப்பதா? போனால் மதிப்பார்களா? சீ! மானம் பார்க்கிற நேரமா இது? அந்த உத்தமியின் மகத்தைக் கடைசியில் ஒருமுறை கண்டாக வேண்டும்.
அருள்மேரிக்கு இந்த தகவலை சொல்லலாமா? கூடாதா? இந்தப் பதின்மூன்று வருடத் தாம்பத்தியத்தில் “அக்கா என்னைச் சந்தேகப்பட்டு விட்டார்களே. அது என் வாழ்வின் வடு’ என்ற ஒரு வாக்கியத்திற்கு மேலே அவள் மறுவாக்கியம் பேசியதில்லை. இன்று நான் இழவுக்கு போகிறேன் என்றால் எப்படி எடுத்துக் கொள்வாளோ?
வேண்டாம் சொல்ல வேண்டாம்
அவன் வெளியேறினான்.

கருவேலங்காட்டுச் சரளைச்சாலை வழியே ஐந்து சதுர கிலோ மீட்டருக்கு தன் வருகையை அறிவித்துப்போகும் அந்த பழைய பஸ்ஸைவிட்டு இறங்கியபோது இழவு விழுந்ததற்கான எந்த அறிகுறியும் அந்த ஊரிலில்லை.
ஊர் அவனை வேடிக்கை பார்க்க அவன் யாரையும் பார்க்காதபடி அந்தப் பழைய தெருவில் நடந்தான். அவன் கையிலிருந்த இளைத்துப்போன ரோஜா மாலை தெருவெல்லாம் தன் இதழ்களை அழுதுகொண்டே வந்தது.

பூக்கள் கழிந்த நாராய் இளைத்து இறந்து கிடந்தாள் அமுதா. அவனை அங்கு வாவென்று கேட்க நாதியில்லை; பிணத்தருகில் யாருமில்லை; அங்குமிங்குமாய்ச் சிதறிக் கிடந்தன உறவுகள்.
மாலையை அவள் நெஞ்சில் உதிர்த்தவன் குலுங்கி விழுந்து அவள் கால்களைப் பற்றினான். பல ஆண்டுகளாய் அவன் பிடித்துவிட்ட கால்களில் இப்போது பிடிசதை இல்லை.

“உன் கடைசி நினைப்பில் நானிருந்தேனா அமுதா?’ என்று முனகிய சொற்களை வாயில் கைகுட்டை திணித்துத் தடுத்தான். அங்கு தொடர்ந்து உட்காரும் சூழலை அவன் உடல் உணரவில்லை. இழவு வீட்டின் பிசுக்கோடு அவமரியாதை வாசனையும் அடித்தது அவனுக்கு; திரும்பிவிட்டான். ஊர் எல்லையிலிருந்து ஊருணிக்கரையின் துவைக்கல்லில் உட்கார்ந்து வாய்விட்டுக் கதறி அழுதான்.
சூரியன் மேற்கே தகனமாகும் வரை அங்கேயே இருந்தான்.

இருட்டிய பிறகு வீடு திரும்பியவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
வீடு பூட்டியிருந்தது.

பதினான்கு ஆண்டுகளுக்குமுன் அமுதா பூட்டிப்போன அதே பூட்டு என்ன இது? ஒரு நாளுமில்லாத திருநாளாய் இருக்கிறதே! அருள்மேரி எங்கே? பிள்ளைகள் எங்கே?
கீரைக்கிழவியிடம் சாவி வாங்கி வீடு திறந்தான்; விளக்கேற்றினான். குழப்பத்தோடு குளிக்கப்போனான். இடுப்பில் கட்டிய ஈரவேட்டியோடு கூடத்திற்கு வந்தான். வெகுநேரம் கழித்து ஆளரவம் கேட்டது. வாசலிலிருந்து மூன்று நிழல்க் முன்னேறிவந்தன. விரைந்தோடி வெளியே வந்து நின்றவன் அதிர்ச்சியில் உறைந்துபோனான்.
அருள்மேரி தன் இரண்டு பிள்ளைகளையும் இரண்டு கைகளில் அணைத்து நின்றிருந்தாள். கசங்கிய உடைகளும் கசக்கிய கண்களுமாய் அழுது நின்றாள் ஆண்டாள் மேரி.
ஆண்டனி பாண்டியன் மொட்டையிட்டிருந்தான்.

என்ன இது விபரீதம் என்று ஏறிட்டுப் பார்த்தான் ராமன்.

“இந்துக்களின் சம்பிரதாயப்படி தலைமகன்தானே தாய்க்கு மொட்டையடிக்கணும்? அதான் அக்காவுக்காக சுடுகாட்டுல ஆண்டனி பாண்டியனை மொட்டைபோடச் சொன்னேன்.’
சொல்லிவிட்டு இரண்டு பிள்ளைகளையும் கட்டிக் கொண்டு கதறி கதறி அழுதாள் அருள்மேரி.

ஈரவேட்டியோடு தரையில் தாழ்ந்து மண்டியிட்டு அழுதுகொண்டே “ஆமென்’ என்றான் ராமன்.

————————————————-

– வைரமுத்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 மதமா? மனிதமா? – – வைரமுத்து Empty Re: மதமா? மனிதமா? – – வைரமுத்து

Post by T.N.Balasubramanian Fri Jul 10, 2015 12:17 pm

நெஞ்சில் பதிந்த கதை .
நன்றி ram

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 மதமா? மனிதமா? – – வைரமுத்து Empty Re: மதமா? மனிதமா? – – வைரமுத்து

Post by Thamaraiselvi Fri Jul 10, 2015 5:02 pm

அருள்மேரி 'அருள்' மேரி தான். கதை தான் ஆனால் கண்களை குளமாக்கிவிட்டது.
Thamaraiselvi
Thamaraiselvi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 10
இணைந்தது : 07/07/2015

Back to top Go down

 மதமா? மனிதமா? – – வைரமுத்து Empty Re: மதமா? மனிதமா? – – வைரமுத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum