ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

யோகக் கலையின் ஆச்சாரியார்கள்!

2 posters

Go down

யோகக் கலையின் ஆச்சாரியார்கள்! Empty யோகக் கலையின் ஆச்சாரியார்கள்!

Post by ayyasamy ram Wed Jul 08, 2015 4:05 am



--
இந்தியாவில் தோன்றிய யோகக் கலை இப்போது உலக சொத்து. ஐக்கிய நாடுகள் அமைப்பு இந்த ஆண்டு ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அனுசரித்ததே இதற்குச் சான்று. யோகக் கலையை உலகம் முழுவதும் பரப்பியதில் சித்தர்கள், முனிவர்களுக்கு மக்கியப் பங்கு உண்டு. ஆனால் சாமானிய மனிதர்களுக்கும் இவற்றைக் கற்றுத் தந்தர் ஆச்சார்யார்கள் வெகு சிலரே... அவர்களில் முதன்மையானவர் யோகாச்சார்யா ஸ்ரீ திருமலை கிருஷ்ணமாச்சாரியார்.
-
1888-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் முசுகுந்தே என்ற கிராமத்தில் பிறந்த கிருஷ்ணமாச்சாரியா தன் தந்தையாரிடம் வேத சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்தார். வைணவ ஆச்சாரியாரும், யோகியுமான நாத முனியின் பரம்பரையைச் சேர்ந்த இவர், யோகக் கலையைப் பயில வேண்டுமென்ற தீராத ஆர்வத்தால், இமயமலைக்குச் சென்று கைலாஷ் மானசரோவர் அடியில் வாழ்ந்த யோகி ராம மோஹன பிரம்மச்சாரியிடம் ஏழரை ஆண்டுகள் யோகாசனத்தை குருகுல முறைப்படி கற்றுத் தேர்ந்தார்.
-
பின்னர் குருவின் கட்டளைப்படி சொந்த மாநிலத்துக்குத் திரும்பி, மைசூர் அரசவையில் ஒரு யோகசாலையை நிறுவி, அனைவருக்கும் யோகா கற்றுக் கொடுத்து வந்தார். தன் குருவின் கட்டளைப்படி திருமணம் செய்துகொண்டு குடம்ப வாழ்க்கையிலும் ஈடுபட்டார். தன்னை நாடி வந்தவர்களுக்கு யோகாசனங்களைக் கற்றுக் கொடுத்தார். 101 வயதுவரை நிறைந்த வாழ்க்கை வாழ்ந்த அவரால் உருவாக்கப்பட்ட மாணவர்களும், அந்த மாணவர்களால் உருவாக்கப்பட்ட சிஷ்யர்களுமாக வாழையடி வாழையாக பலர் நாடு முழுவதிலும் யோகக் கலையை கற்பித்து வருகிறார்கள்.
-
அவர்களில் முக்கியமானவர்,

-
கிருஷ்ணமாச்சாரியாரின் மகன் தேசிகாச்சாரியார். பொறியியல் பட்டதாரியான தேசிகாச்சாரியார் பெரிய நிறுவனங்களில் வேலை பார்த்தவர். ஆயினும் தந்தையின் யோக அறிவையும், யோக சிகிச்சை மூலம் நோய்களுக்குத் தீர்வு காணும் அவரது ஆற்றலையும் பிரமிப்புடன் கண்டு தன்னையும் யோகத்தில் ஈடுபடுத்திக் கொண்டார். தந்தையிடமே பல ஆண்டுகள் முறைப்படி யோகாசனங்களைக் கற்றுத் தேர்ந்தார்.
-
தந்தையும், குருவுமான கிருஷ்ணமாச்சாரியார் தனக்கு கற்றுக் கொடுத்த யோகக் கலைக்கு குருதட்சிணையாக 1976ல் "கிருஷ்ணமாச்சார்யா யோக மந்திரம்' என்ற அமைப்பை சென்னையில் நிறுவி, பலருக்கும் யோகாசனங்களைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். உலகப் புகழ் பெற்ற இந்த நிறுவனத்தில் தற்போது யோகா சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தேர்ந்த ஆசிரியர்களால் பலதரப்பட்ட மக்களுக்கும் யோகாசனம் கற்றுத் தரப்படுகிறது.
-
கிருஷ்ணமாச்சாரியாவுக்கு பல சீடர்கள் இருந்தபோதிலும், முக்கியமாக நான்கு பேர் உலகப் புகழ் பெற்றவர்கள். அவர்கள்... பி.கே.எஸ். ஐயங்கார் (சமீபத்தில் காலமானார்), பட்டாபி ஜோஸ், இந்திரா தேவி (வெளிநாட்டுப் பெண்மணி), மகன் டி.கே.வி. தேசிகாச்சாரியார்.
-
யோகக் கலையில் கிருஷ்ணமாச்சாரியார் வகுத்துக்கொண்டு, கையாண்ட வழி முறைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. அவற்றில் முக்கியமான சில:
-
* யோகாவை வயதுக்கேற்ப பிரித்து அளித்தல், அதாவது சிறுவர்களுக்கு,
நடுவயதினருக்கு, முதியோருக்கு என்று.
-
* யோகாவை ஒவ்வொருவருக்கும் ஏற்றபடி தனித்து மாற்றி அமைத்து
வழங்கும் முறை.
-
* பெண்களுக்கு சிறப்பான யோகப் பயிற்சி.
-
* யோகா சிகிச்சையில் புதிய உத்திகள்.

-
யோகி கிருஷ்ணமாச்சாரியார் வகுத்துத் தந்த நெறிமுறைகளின்படி அமைந்த பல்வேறு யோகாசனங்களை நாம் இந்த தொடரில் பார்க்க போகிறோம். கிருஷ்ணமாச்சாரியா யோக மந்திரத்தில் யோகாசனம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும், அறிஞர்களும் நம் வாசகிகளுக்கு வழி காட்டப் போகிறார்கள்.
-
சாதாரண உடற்பயிற்சிக்கும், யோகாவுக்கும் என்ன வித்தியாசம்?

-
சென்னையிலுள்ள கிருஷ்ணமாச்சார்யா யோக மந்திரத்தின் யோகா டீச்சர் ஆண்டாள்: யோகத்தில் உடம்பும், மனசும், மூச்சும் ஒன்றிணைந்து செயல்படுகிறது. மனக் கட்டுப்பாடு யோகத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. மூச்சை உள்ளுக்கு இழுத்து, வெளியே விட்டு மனம் ஒன்றி யோகாசனங்களைச் செய்யும்போது, ஒரு ஃபோகஸ் கிடைக்கிறது. மனது அலைபாயாது. நாம் என் செய்கிறோம் என்கிற விழிப்புணர்வுடன் ஆசனங்களைச் செய்யும்போது, மனதுக்குள் ஒரு அமைதியும், நிறைவும் ஏற்படுகிறது.
-
மற்ற உடற்பயிற்சிகளை நாம் இயந்திரத்தனமாக செய்து கொண்டே போகலாம். அதில், மனசுக்கோ, மூச்சுப் பயிற்சிக்கோ இடமில்லை. உடம்பு மட்டும் ஒரு இடத்தில் இருக்கும்; பயிற்சி செய்து கொண்டே இருப்போம். மனசு எங்கேயோ அலை பாயும். யோகாவில் அதற்கெல்லாம் இடமேயில்லை. செய்யும்போது, மனதுக்கு ஒரு கட்டுப்பாடு வந்துவிடும்.
-
எந்த நேரத்தில் யோகா செய்வது நல்லது?

-
அதிகாலை நேரத்தில் யோகா செய்வது சிறந்தது. இரவில் நன்றாக உறங்கிவிட்டு காலையில் எழுந்தவுடன் யோகா செய்யும்போது, மனம் மிகவும் ஃப்ரெஷ்ஷாக இருக்கும். விடியற்காலை காற்று மாசில்லாமல் தூய்மையாக இருக்கும். வீட்டு வேலைகள், குழந்தைகளை கவனிப்பது, அலுவலகத்துக்குச் செல்லும் அவசரம் என்று பரபரப்பாக இயங்கும் பெண்களால், காலை நேரத்தில் யோகா செய்வது சாத்தியமாகாது. அதனால் மாலையில் செய்யலாம். அதுவும் முடியவில்லை என்றால் எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது செய்யலாம்.
-
காலையில் லைட்டாக டிபன் சாப்பிட்டு விட்டு, ஒரு மணி நேரம் கழிந்தபிறகு யோகா செய்யலாம். வயிறு முட்ட சாப்பிட்ட பிறகு யோகாசனங்களைச் செய்யக்கூடாது. குறிப்பாக அரிசி சாப்பாடு சாப்பிட்டபிறகு யோகா செய்வதைத் தவிர்க்க வேண்டும். அரிசி சாப்பாடு ஜீரணமாக நீண்ட நேரம் ஆகும் என்பதே இதற்குக் காரணம்.
-
அரை வயிறு சாப்பாடு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காலியாக இருக்க வேண்டும் என்பதுதான் சரியான உணவுமுறை. யோகா செய்பவர்கள் பால், பழங்கள் போன்ற சாத்வீக உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
-
யோகாசனப் பயிற்சிகளை செய்தவுடனே சாப்பிடக் கூடாது அல்லது ஒன்றிரண்டு மணி நேரங்கள் கழிந்தபிறகுதான் சாப்பிடவேண்டும் என்று சிலர் கூறுவார்கள். ஆனால், யோகப் பயிற்சிகளை முடித்தவுடனேயே சாப்பிடலாம். தவறில்லை.
-
-----------------
- ஜி. மீனாட்சி
மங்கையர் மலர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

யோகக் கலையின் ஆச்சாரியார்கள்! Empty Re: யோகக் கலையின் ஆச்சாரியார்கள்!

Post by shobana sahas Thu Jul 09, 2015 9:45 pm

நல்ல பயனுள்ள பதிவு . நன்றி அய்யா .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum