புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்மவீரரின் ஆட்சியும்.. மாட்சியும்..! ஜூலை 15 பெருந்தலைவர் பிறந்த நாள் Poll_c10கர்மவீரரின் ஆட்சியும்.. மாட்சியும்..! ஜூலை 15 பெருந்தலைவர் பிறந்த நாள் Poll_m10கர்மவீரரின் ஆட்சியும்.. மாட்சியும்..! ஜூலை 15 பெருந்தலைவர் பிறந்த நாள் Poll_c10 
92 Posts - 61%
heezulia

38 Posts - 25%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

7 Posts - 5%
sureshyeskay
கர்மவீரரின் ஆட்சியும்.. மாட்சியும்..! ஜூலை 15 பெருந்தலைவர் பிறந்த நாள் Poll_c10கர்மவீரரின் ஆட்சியும்.. மாட்சியும்..! ஜூலை 15 பெருந்தலைவர் பிறந்த நாள் Poll_m10கர்மவீரரின் ஆட்சியும்.. மாட்சியும்..! ஜூலை 15 பெருந்தலைவர் பிறந்த நாள் Poll_c10 
1 Post - 1%
viyasan

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்

284 Posts - 45%

235 Posts - 37%

32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கர்மவீரரின் ஆட்சியும்.. மாட்சியும்..! ஜூலை 15 பெருந்தலைவர் பிறந்த நாள் Poll_c10கர்மவீரரின் ஆட்சியும்.. மாட்சியும்..! ஜூலை 15 பெருந்தலைவர் பிறந்த நாள் Poll_m10கர்மவீரரின் ஆட்சியும்.. மாட்சியும்..! ஜூலை 15 பெருந்தலைவர் பிறந்த நாள் Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
கர்மவீரரின் ஆட்சியும்.. மாட்சியும்..! ஜூலை 15 பெருந்தலைவர் பிறந்த நாள் Poll_c10கர்மவீரரின் ஆட்சியும்.. மாட்சியும்..! ஜூலை 15 பெருந்தலைவர் பிறந்த நாள் Poll_m10கர்மவீரரின் ஆட்சியும்.. மாட்சியும்..! ஜூலை 15 பெருந்தலைவர் பிறந்த நாள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்மவீரரின் ஆட்சியும்.. மாட்சியும்..! ஜூலை 15 பெருந்தலைவர் பிறந்த நாள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 13, 2015 12:43 am

கர்மவீரரின் ஆட்சியும்.. மாட்சியும்..! ஜூலை 15 பெருந்தலைவர் பிறந்த நாள் 11705124_901625689910529_8054325215001208363_n

காலங்கள் சில நேரங்களில் தம் தேவைக்கேற்ப தலைவர்களை உருவாக்குவது உண்டு. தலைவர்கள் சில நேரங்களில், காலத்தைக் கனிய வைப்பதற்காகத் தாமே தலையெடுத்து நிற்பதும் உண்டு. பெருந்தலைவர் காமராசர் காலத்தாலும் செதுக்கப்பட்ட சிற்பி. காலத்தையே செதுக்கிய சிற்பியும் ஆவார்.

தயாரிக்கப்பட்ட தலைவர்கள், அதிகாரப்பீடத்தின் அழுத்தம் குறைய ஆரம்பித்தவுடன், காலாவதியாகி விடுவார்கள். அவசரத்திற்காகத் தைக்கப்பட்ட தலைவர்கள், நாளடைவில் சாயம் வெளுத்துச் சோளக் கொல்லை பொம்மையாகிவிடுவார்கள். ஆனால், கர்மவீரர் காமராசர், புடம்போட்டு எடுக்கப்பட்ட தியாகத்தாலும், அப்பழுக்கில்லாத சாதனைகளாலும், தலைமுறைகள் தோறும் நிற்பார். அப்பெருமகனார் வாழ்ந்த காலத்தைவிட, நிகழ்காலத்தில்தான் நிறைந்து நிற்கிறார்.

55 ஆண்டு பொதுவாழ்க்கையில், 9 ஆண்டுகள் சிறைவாசம்– தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக 12 ஆண்டுகள்– தமிழக முதல்வராக 9 ஆண்டுகள்– அகில இந்திய காங்கிரசின் தலைவராக 12 ஆண்டுகள்– சட்டமன்ற உறுப்பினராக 16 ஆண்டுகள்– நாடாளுமன்ற உறுப்பினராக 12 ஆண்டுகள் திகழ்ந்த அவர், விட்டுச் சென்றது, நூற்றுச் சில்லரை ரூபாய்களும், 10 கதர் வேட்டி சட்டைகளும்தான்.

நகக்கண்களில்கூட அழுக்கேறாத அத்தலைவன் மறைந்த பொழுது, ‘‘அவர் இயற்கை எய்தியதும் அவர் குடியிருந்த வீட்டை, அதன் உரிமையாளர் எடுத்துக் கொண்டார். அவருடைய காரைக் கட்சி எடுத்துக்கொண்டது. அவருடைய உடலை அக்னி எடுத்துக் கொண்டது. அவருடைய பெயரை வரலாறு எடுத்துக் கொண்டது’’ என இளமதி என்ற எழுத்தாளர் எழுதியது, இன்றும் நெஞ்சக் கிடக்கையில் நிமிர்ந்து நிற்கின்றது.

1954–ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதி, புயலாலும், வெள்ளத்தாலும், பூகோள அமைப்பையே மாற்றியது. நிலைமையின் விபரீதத்தைக் கேட்ட முதலமைச்சர் காமராசர் உடனடியாகப் பரமக்குடிக்கு விரைகிறார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் பம்பரம்போல் சுற்றிச் சுழல்கிறார். வாகனங்கள் செல்ல முடியாத பாதைகளில், கொட்டும் மழையில் நடந்தே செல்கிறார். அதனால் அதிகாரிகளும், நிர்வாகிகளும் தொடர்ந்து செல்ல வேண்டிய துரித கதி. ராணுவ நடவடிக்கை போல் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பரமக்குடிக்கும், ராமநாதபுரத்திற்கும் இடையில் உள்ள ஆற்றில், வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. அங்கிருந்த பாலமும் உடைந்து உருத்தெரியாமல் போய்விட்டது. அதிகாரிகள் முன்வைத்த காலைப் பின் வைக்கிறார்கள். மறுகரையில் தவித்து நிற்கின்ற மக்களைப் பார்த்து, முதலமைச்சர் ‘‘அங்கிருந்து ஒரு சாரக்கயிற்றை வீசி எறியுங்கள்’’ என்று அலறுகிறார். அவர்களும் அவ்வாறு செய்யவே, காமராசர் அக்கயிற்றைப் பிடித்துக்கொண்டு, மார்பளவு தண்ணீரில் இறங்கி மறுகரைக்குச் செல்கிறார். அரசன் எவ்வழி குடிபடைகள் அவ்வழி ஆயிற்று.

இதனையடுத்து வரலாறு காணாத நிகழ்வு நிகழ்கிறது. பேரறிஞர் அண்ணா இதனை வெகுவாகப் பாராட்டி, திராவிட நாடு பத்திரிகையில் ‘‘தம்பிக்குக்’’ கடிதம் எழுதுகிறார்.

‘‘சேரிகள் – பரதவர் குடில்கள் – பாட்டாளிகளின் குடிசைகள் – உழவர்கள் உழன்று கிடக்கும் குடிசைகள் – இவையெல்லாம் நாசமாகிவிட்டன. நூற்றுக் கணக்கானோர் மாண்டு போயினர். மீதமிருப்போருக்கு வீடில்லை. வயலில்லை. உயிர் இருக்கிறது. உள்ளத்தில் திகைப்பின்றி எதுவும் இல்லை. ஆனால் தம்பீ! நம்முடைய முதலமைச்சர் காமராஜ் மத்தியில், இருக்கிறார். பொறுப்புணர்ந்த ஆட்சி முதல்வர் இருக்க வேண்டிய இடம்! ஆம், அங்குப் பெரிய அதிகாரிகள் புடைசூழ இருக்கிறார். பெருநாசத்துக்கு ஆளான மக்களின் கண்ணீரைத் துடைத்திடும் காரியத்தில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். அங்கு மக்கள் வடிக்கும் கண்ணீரைக்கண்டு, தமது கண்ணீரை வடிக்கின்றார். அழிவுசூழ் இடங்களில் ஆறுதலைத் தருகின்றார். கோட்டையிலே அமர்ந்துகொண்டு, உத்தரவுகள் போடும் முதலமைச்சர் அல்லர் இவர். தம்பீ, சொல்லத்தான் வேண்டும். முதலமைச்சர் பொறுப்புணர்ச்சி கண்டு நாம் பெருமைப்படுகிறோம். முதலமைச்சரின் இதயம் தூய்மையானது. ஏழை எளியோர் பால் காட்டும் அக்கறை தூய்மையானது, என்பதை எவரும் எந்நாளும் மறந்திடமாட்டார்கள்’’ என்று ஒரு பிற்கால முதலமைச்சர் தீட்டிய தகுதியுரையை – அங்கீகாரத்தை – சாசனத்தை, இன்றைக்கு இந்திய அளவில் யாரேனும் பெற முடியுமா? எனவேதான், கர்மவீரர் காமராசர், தலைமுறைதோறும் நிற்கும் தலைவராகிறார்.

அடுத்தத் தேர்தல் வெற்றியைப் பற்றி எண்ணாமல், அடுத்த தலைமுறையைப் பற்றிச் சிந்திப்பவர்தாம், சிறந்த தலைவர் என்பார்கள்.

காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கிக் கணிசமாகக் குறைந்து கொண்டே வருவதைப் பற்றிக் கவலைப்பட்ட கவிஞர் எஸ்.டி.சுந்தரம், ‘‘நம்முடைய சாதனைகள் – உன்னதமான திட்டங்கள் நாட்டு மக்களுக்குச் சரியாகப் போய்ச் சேரவில்லை. அதனால் நம்முடைய ஆட்சியின் சாதனைகளை எல்லாம் விளக்கி, ஓர் ஆவணப்படம் எடுத்து, அனைத்துத் தியேட்டர்களிலும், திரைப்படத்திற்கு முன்னர் காட்டச்செய்தால், மக்கள் உணர்வு பெறுவார்கள்’’ என்றார். அதற்குப் பெரியவர் ‘‘உங்களுடைய ஆலோசனை சிறப்பானதுதான். ஆனால், அதற்கு எவ்வளவு செலவு ஆகும்?’’ எனக் கேட்டார்.

உடனே கவிஞர், ‘மூன்று லட்சம் ரூபாய் ஆகும்’ என்றார். அதற்கு அப்பெருந்தகை, ‘‘மூன்று லட்சமா? அந்த மூன்று லட்சம் இருந்தால், நான் இன்னும் மூன்று பள்ளிக்கூடங்கள் கட்டிவிடுவேனே! படமெல்லாம் வேண்டாம். நாம் போட்ட சாலைகளில் தானே மக்கள் நடக்கிறார்கள். நாம் கட்டிய அணைக்கட்டு நீரைத்தானே குடிக்கிறார்கள். குளிக்கிறார்கள். இன்றைக்கு மின்விளக்கு இல்லாத கிராமமே இல்லையே! இதெல்லாம் அவர்களுக்கு தெரியாதா?’’ என்று, அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார். வீண் ஆடம்பரச் செலவுகளில் பாரதம் முழுவதும் விரயமாகும் தொகையை எண்ணிப் பார்த்தால்தான், அந்தச் சரித்திர நாயகனின் சாதனை தெரியும்.

கர்மயோகி காமராசர் ஆட்சிக்காலத்தில் குமரி மாவட்டத்தில் ‘‘சிற்றாறு அணை’’ கட்டுவதற்குத் திட்டம் தீட்டினார். இத்திட்டத்தை எஸ்டேட் முதலாளிகள் எதிர்த்தனர். ‘‘அணை கட்டப்படுமானால், ஆயிரக்கணக்கான ரப்பர் எஸ்டேட்டுகள் அழிந்துவிடும். எனவே அணைக்கட்டும் திட்டத்தைக் கைவிடும்படியாகக் காமராசரை அணுகி வேண்டினர். அதற்கு அந்த மாமனிதர் ‘‘மக்கள் அரிசிக்குப் பதிலாக ரப்பரைத் தின்று உயிர் வாழ முடியுமானால் சொல்லுங்கள். அணைக்கட்டும் திட்டத்தைக் கைவிடுகிறேன்’’ என்றார். வந்தவர்களும் அறிவார்ந்த தலைவனின் ஆலோசனையைக் கேட்டு, தெளிவு பெற்றனர். பிறகு, சிற்றாறு அணைக்கட்டுத் திட்டம் நிறைவேறியது.

நிலம் கையகப்படுத்துவதில் இன்றைக்கு எழுந்திருக்கின்ற சிக்கலை நினைக்கின்ற பொழுது, பெருந் தலைவரின் பேருள்ளம் தான் நினைவுக்கு வருகிறது. முதலமைச்சர் காமராசர் தம்முடைய ஆட்சிக்காலத்தில், ஒரு கையில் வேளாண்மை, மறு கையில் தொழில் உற்பத்தி ஆகிய லாகனைப் பிடித்தே ஆட்சிக் குதிரையைச் செலுத்தினார். தொழிற்சாலைப் பெருக்கத்தில் தமிழகத்தை, இந்தியாவின் முன் வரிசையில் நிறுத்தியவர், கர்மவீரர்.

இப்பொழுது மணலியில் காணப்படும் ‘‘மணலி ரீபைனரீஸ்’’, தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழில்திட்டம். அத்திட்டத்தைத் தமிழகத்திற்குக் கொண்டுவர, 600 ஏக்கர் நிலப்பரப்பு அவசியம் தேவைப்பட்டது. தொழில் வல்லுநர்கள் அத்தகைய இடம், மணலியில் இருப்பதாகவும், அது மணலி ராமகிருஷ்ண முதலியாரின் மூதாதையர் சொத்து என்பதாகவும் பெருந் தலைவருக்குத் தகவல் தந்தனர். முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து அறவாழி மணலி ராமகிருஷ்ண முதலியாருக்கு அழைப்பு வந்தது.

முதலமைச்சர், திட்டக்கமிஷனிடம் எப்படியெல்லாம் போராடி, தமிழகத்திற்கு அதனைப் பெற்று வந்ததை விலாவாரியாகச் சொன்னார். அதற்கு மணலியார், அந்த ஓரிடத்தில் மட்டும், தம் குடும்பத்திற்கு உள்ள உளரீதியான தன்மையை (சென்டிமென்ட்) எடுத்துச் சொல்லி, ‘‘அந்த இடத்தைத் தவிர, வேறு எதைக்கேட்டாலும் செய்யத் தயார்’’ என்றார்.

முதலமைச்சர் பொறுமையாகக் கேட்டுவிட்டு, ‘‘இந்த இடம்தான் பொருத்தமான இடம் என்று தொழில் வல்லுநர்கள் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். இந்த இடத்தில் இல்லை என்றால், மணலி ஆலை தமிழ்நாட்டுக்கு வராது. வேறு மாநிலத்திற்குப் போய்விடும். பரவாயில்லை. பார்க்கலாம், போய் வாருங்கள்’’ என்றார்.

அன்று இரவு முழுவதும் தீர ஆலோசித்த மணலியார், ‘‘இந்தத் திட்டம் வந்தால், வேளாண்மையும் தழைக்கும், தொழில் வளமும் ஓங்கும். முதலமைச்சர் நினைத்தால் எங்களுடைய சென்டிமென்ட் எல்லாம் வெற்றி பெறாது. அவர் நினைத்தால், அதிகாரத்தைப் பயன்படுத்திச் சாதிக்க முடியும். என்னே! அவருடைய மனிதாபிமானம். மற்றவர்களுடைய உணர்வுகளையும், உரிமைகளையும் மதிக்கும் முதல்வருடைய பெருங்குணத்துக்கு என்னை அர்ப்பணித்துவிட்டேன்” என்று மனதுள் எண்ணி, மறுநாளே முதல்வரிடம் இசைவு தெரிவித்தார்.

தேசியத்தை ஒரு தோளிலும், சோசலிசத்தை மறு தோளிலும் வாழ்நாள் முழுமையும் தூக்கிச் சுமந்த கர்மவீரர், சோசலிசத்தை வாயால் மட்டும் பேசவில்லை. வாழ்விலும் சோசலிசத்தையே கடைபிடித்தார். காமராசர் ஆட்சியும் மாட்சியும், தலைமுறைதோறும் வியந்து பேசக்கூடிய ஒன்றாகும்.

குறிஞ்சிப்பூ அடிக்கடி பூக்காது. பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறைதான்! பெருந்தலைவர்களும் அப்படித்தான். எப்போதாவது ஒருமுறை...!

–பேராசிரியர் தி.இராசகோபாலன், சென்னை.

கர்மவீரரின் ஆட்சியும்.. மாட்சியும்..! ஜூலை 15 பெருந்தலைவர் பிறந்த நாள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 13, 2015 12:49 am

//குறிஞ்சிப்பூ அடிக்கடி பூக்காது. பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறைதான்! பெருந்தலைவர்களும் அப்படித்தான். எப்போதாவது ஒருமுறை...!//

ரொம்ப சரி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 15, 2015 6:44 pm

இன்று அந்த தலைவரின் பிறந்த நாள், எனவே, இதை மேலே கொண்டு வருகிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jul 15, 2015 6:46 pm

krishnaamma wrote:இன்று அந்த தலைவரின் பிறந்த நாள், எனவே, இதை மேலே கொண்டு வருகிறேன் புன்னகை

அட அவரே மேலே தானே இருக்காரு

ஈகரை தமிழ் களஞ்சியம் கர்மவீரரின் ஆட்சியும்.. மாட்சியும்..! ஜூலை 15 பெருந்தலைவர் பிறந்த நாள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jul 15, 2015 7:12 pm

ஐயாவுக்கு ஒரு கும்பிடு. :வணக்கம்:

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 15, 2015 7:19 pm

balakarthik wrote:
krishnaamma wrote:இன்று அந்த தலைவரின் பிறந்த நாள், எனவே, இதை மேலே கொண்டு வருகிறேன் புன்னகை

அட அவரே மேலே தானே இருக்காரு
மேற்கோள் செய்த பதிவு: 1151175

அட, அதத்தான் அண்ணாந்து பார்த்து சரவணன் போல ஒரு கும்பிடு போட சொல்லறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jul 15, 2015 7:21 pm

krishnaamma wrote:அட, அதத்தான் அண்ணாந்து பார்த்து சரவணன் போல ஒரு கும்பிடு போட சொல்லறேன் புன்னகை

எதுக்கு காமராஜர் போரந்தனாலுல அண்ணாவை பார்த்து கும்புடணும் நான் காமராஜைரையே கும்புடுறேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் கர்மவீரரின் ஆட்சியும்.. மாட்சியும்..! ஜூலை 15 பெருந்தலைவர் பிறந்த நாள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 15, 2015 7:25 pm

balakarthik wrote:
krishnaamma wrote:அட, அதத்தான் அண்ணாந்து பார்த்து சரவணன் போல ஒரு கும்பிடு போட சொல்லறேன் புன்னகை

எதுக்கு காமராஜர் போரந்தனாலுல அண்ணாவை பார்த்து கும்புடணும் நான் காமராஜைரையே கும்புடுறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1151206

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது கர்மவீரரின் ஆட்சியும்.. மாட்சியும்..! ஜூலை 15 பெருந்தலைவர் பிறந்த நாள் 433338962 கர்மவீரரின் ஆட்சியும்.. மாட்சியும்..! ஜூலை 15 பெருந்தலைவர் பிறந்த நாள் 433338962 கர்மவீரரின் ஆட்சியும்.. மாட்சியும்..! ஜூலை 15 பெருந்தலைவர் பிறந்த நாள் 433338962 கர்மவீரரின் ஆட்சியும்.. மாட்சியும்..! ஜூலை 15 பெருந்தலைவர் பிறந்த நாள் 433338962 கர்மவீரரின் ஆட்சியும்.. மாட்சியும்..! ஜூலை 15 பெருந்தலைவர் பிறந்த நாள் 433338962

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக