ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாபநாசம் – திரை விமர்சனம்

+3
T.N.Balasubramanian
வேல்முருகன்
ayyasamy ram
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பாபநாசம் – திரை விமர்சனம்  Empty பாபநாசம் – திரை விமர்சனம்

Post by ayyasamy ram Sat Jul 04, 2015 3:30 am

பாபநாசம் – திரை விமர்சனம்  PKJr8gSTFuZADAyWM1g7+Papanasam-Movie-Release-On-July-3rd-Poster-11
-

அந்தக் கண்களைத் தான் முதலில் கேமராவில் பார்க்கிறோம்.
அதில் கடலளவு கனவு, கரை காணாத சந்தோஷம், ஆகப்
பெரிய துயர், ஆனால் அதில் ஒன்று மட்டும் நிச்சயம் இருப்பதில்லை.
அது பயம்.

சுயம்புலிங்கம் (கமல்) ஒரு சாமானியன். அவனுக்கு இரண்டு
கண்களாக விளங்குவது தன் குடும்பம் மற்றும் தொழில்.
சிறு வயதில் தாய் தந்தையரை இழந்த சுயம்புலிங்கம் பெயரைப்
போலவே தன்னை செதுக்கிக்கொண்டவன். அன்பு மனைவி
ராணி (கவுதமி) மற்றும் இரண்டு மகள்களுடன் செல்வி (நிவேதா)
மீனா (எஸ்தர்) அமைதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து
கொண்டிருப்பவன்.

சுயம்புலிங்கத்தின் பலம் மற்றும் பலவீனம் இரண்டுமே
சினிமாதான். அந்த ஊரின் கேபிள் டிவி உரிமையாளரான சுயம்புவின்
முழு நேர வேலை படம் பார்ப்பதுதான். அது பாசமலராகட்டும்,
பனிரெண்டு மணிக்கு மேல் காண்பிக்கப்படும் ஏடாகூடமான
படங்களாகட்டும் சினிமா தான் அவனது உயிர் மூச்சு. கேபிள்
அலுவலகமே கதி என்று இருக்கும்போது திடீரென்று வீட்டு நினைவை
வரவழைப்பதும் திரைப்பட காதல் காட்சியொன்றுதான். அந்த அளவுக்கு
சினிமா அவனுக்குள் கலந்திருக்கும் ஒன்று.

ஊர் என்று இருந்தால் டீக்கடை எப்படி இல்லாமல் இருக்கும்.
அரசியல் முதல் சினிமாவரை அலசிக் காயப்போடும் அந்த
டீக்கடைக்கு தினமும் செல்லும் வழக்கமுடையவன் சுயம்பு. கடை
முதலாளி பாய் (எம்.எஸ்,பாஸ்கர்) சுயம்பு இருவருக்குமிடையே
விளக்கப்படாத ஒரு நட்பு இழைந்தோடும்.

டீக்கடைக்கு எதிரேயுள்ள போலீஸ் ஸ்டேஷனில் கான்ஸ்டபிளுக்கு
(கலாபவன் மணி). சிலருக்கு சிலரை பிடிக்காது. அவ்வகையில்
நேர்மையாக வாழும் சுயம்புவிற்கு சிறிய வியாபாரிகளிடம் பணம்
பறிக்கும் கான்ஸ்டபிள் மீது நியாயமான கோபம். ஆனால் அதை
நேரிடியாகக் காண்பிக்காமல் நையாண்டிப்பேச்சின் மூலம்
வெளிப்படுத்துவான். இதனால் எரிச்சல் அடையும் கான்ஸ்டபிள்  
சுயம்புவைப் பழிவாங்க சரியான நேரத்திற்காகக் காத்திருக்கிறான்.

ஆர்ப்பாட்டம் இல்லாத அந்தக் குடும்பத்தில் மூத்த
மகள் செல்வி் பள்ளி இயற்கை சுற்றுலா கிளம்பிச்
செல்ல,பிரச்னை அங்கு ஆரம்பமாகிறது.
அவளை அங்கு பார்க்கும் பணக்கார மாணவன் வருண்
அவளுக்கே தெரியாமல் அவள் குளிப்பதை படமெடுத்து
விடுகிறான். அடுத்த நாள் அதை அவளிடம் காண்பித்து
மிரட்டி வரவழைக்க அவன் செய்யும் முயற்சியில் அவனே
சிக்கி கொலையாகிறான்.

இந்தச் சம்பவங்களின் பின்னனியில் கதையை இழை
இழையாக பின்னியிருக்கிறார்கள். தன்னுடைய
குடும்பத்திற்கு சிறு பாதிப்புக் கூட நேரக் கூடாது என்று
துடிக்கும் சுயம்புவின் ஒவ்வொரு அசைவும் ஆயிரம்
கதைகள் சொல்கின்றன.

ஒவ்வொரு காட்சியும் துல்லியமாகவும் விறுவிறுப்பாக
மலையாள மூலம் த்ரிஷ்யம் படத்திற்கு நிகராக சில
சமயங்களில் அதைவிடவும் நேர்த்தியாக படம்
எடுத்துள்ளார்கள். ஐஜி கீதா பிரபாகர் (ஆஷா சரத்) மற்றும்
அவரது கணவர் ஐஏஎஸ் அதிகாரி பிரபாகர்
(அனந்த் மகாதேவன்) இருவரின் நடிப்பும் படத்திற்கு பக்க
பலம். அதுவும் மகனை இழந்து தவிக்கும் ஒரு தாயாக
அதைக் கண்டுபிடித்தே தீர வேண்டும் என்ற வெறியுடன்
இருக்கும் அதிகாரியாக இரண்டு வகையிலும் நடிப்பில்
அசத்தியுள்ளார் ஆஷா சரத்.

கலாபவன் மணி சுயம்புவின் இளைய மகளை அடித்து
மிதித்து உண்மையை வரவழைக்கும் காட்சியில் தியேட்டரே
அதிர்ந்து கலங்கும் அளவிற்கு நடிப்பில் மிரட்டிவிட்டார்.
இளவரசு, அருள்தாஸ், டெல்லி கணேஷ், சாந்தி வில்லியம்ஸ்
போன்ற துணைப்பாத்திரங்கள் கதைக்கும் தங்கள்
பங்களிப்பை கச்சிதமாக செய்துள்ளனர்.

கஞ்சத்தனமும், கறார்த்தனமுமாக ஒரு நடுத்தர அப்பாவி
கிராமத்தானாக கமல் முதல் பாதியில் அந்தளவுக்கு
தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், இடை
வேளைக்குப் பின் குடும்பத்துக்காக போராடும் ஒருவனாக,
தான் பார்த்தப் படங்களிலிருந்து சூழலுக்குத் தேவையான
விஷயங்களை கிரகித்து, தன் மூளையையும்
அனுபவத்தையும் பயன்படுத்தி இறுதிவரை விட்டுக்
கொடுக்காமல் இருக்கும் புத்திசாலியாக, உணர்வுரீதியாக
ஒரு தகப்பன்சாமியாக திரையில் ஜெயித்துவிடுகிறார்.

உலகம் முழுவதும் நடந்து கொண்டேயிருக்கும் ஒரு விஷயம்
நல்லவைக்கு அல்லாதவைக்கும் இடையே நிகழும் துவந்தம்.
மகாபாரதம், ராமாயணக் கதைகளிலிருந்து தற்காலம் வரை
நடக்கும் சமர்களுக்கான காரணம் நல்லவன் கெட்டவன்,
கடவுள் சாத்தான் கருத்தியல் இதற்கிடையே நிகழும்
போராட்டங்கள் தான். மனித மனத்துக்குள கடவுளும்
இருக்கிறான, சாத்தானும் உள்ளான். திட்டமிட்டுச் செய்யப்
படவில்லை எனிலும் அது உயிர் பறித்தல், கொலையையே
செய்துவிட்டு மறைக்கும் ஒரு குடும்பத்தின் மீது நிச்சயம்
யாருக்கும் கோபம் வரும். ஆனால் அதன் காரணம், பின்னனி
தெரிகின்ற போது அவர்கள் பிடிபட்டுவிடக்கூடாது என்று
தான் நினைக்கிறோம். பிரார்த்திக்கிறோம்.

பாபநாசம் க்ளைமேக்ஸ் காட்சிகள் தமிழுக்காக சிறிது
மாற்றம் செய்யப்பட்டுள்ளது உண்மையில் தமிழ்
ரசிகர்களுக்கான பிரத்யேக கவனம் எனக் கொள்ளலாம்.
நெகிழ்ச்சியாக கமல் பேசும் வசனங்கள் மகாநதியை
நினைவுப்படுத்தினாலும் ஒரு கலைஞனாக அவரது பயணம்
முழுக்க பார்க்கும் ஒரு ரசிகனை ஒருபோதும் அவர்
ஏமாற்றுவதில்லை.

கண்கள் மட்டுமல்ல,உடல் மட்டுமல்ல கமலின் ஒவ்வொரு
அங்கமும் குற்றவுணர்விலும் துயரத்திலும் மிகையற்ற
நடிப்பை காண்பிக்கிறது. தமிழ் சினிமாவின் பெருமை
சகாப்தம் ஆகச் சிறந்த கலைஞன் கமல் என்றால் இதில்
ஒரு சொல் கூட பொய்யில்லை. அவரது அற்புதமான
நடிப்பிற்கு மற்றொரு உதாரணம் போலீஸ் அவர்கள் வீட்டில்
குழி தோண்டிக்கொண்டிருக்க அனைவரும் பதற்றத்தின்
உச்சியில் இருக்க கமல் மட்டும் சின்னதாக ஒரு கெத்துடன்
இருப்பார். உண்மை தெரிந்ததும் அவர் முகத்தில் தென்படும்
மிக மிகச் சிறிய புன்னகை. இதுவொன்றே போதும் நம்
நாயகன் பல இடங்களில் சிகரம் தொட்டுள்ளார் என்பது.

கமலின் முந்திய சில படங்களின் சாயல் இதில் லேசாகத்
தெரிந்தாலும் இது முற்றிலும் புதிய களம். மகாநதியில்
பாசமுள்ள தகப்பனாக வாழ்ந்திருப்பார். தேவர் மகனில்
ரயில்வே ஸ்டேஷனில் ஆரம்பித்து ரயில்வே ஸ்டேஷனில்
படம் முடியும். அதுபோலவே பாபநாசத்தில் போலீஸ்
ஸ்டேஷனில் ஆரம்பித்து போலீஸ் ஸ்டேஷனில் படத்தை
முடித்திருக்கும் உத்தி உருத்தாமல் இயல்பாகவே உள்ளது.
படத்தின் முக்கியமான மற்றொரு அம்சம் இதில் பிரச்சார
நெடி துளியும் இல்லை.

நினைத்திருந்தால் தொழில்நுட்ப வளர்ச்சி எப்படி
ஆபத்தானது என்பதில் தொடங்கி இயற்கை விவசாயம்,
குழந்தைகள் வளர்ப்பு என பல விஷயங்களை விலாவரியாகச்
சொல்லியிருக்கலாம். ஆனால் மையக் கருவிலிருந்து இம்மி
பிசகாமல் கதையை நேர்க்கோட்டில் சொல்லியிருப்பது
சிறப்பு. மூன்றுமணி நேரப்படம் என்பதை ஒரு நொடியும்
உணர வைக்காமல் தொய்வின்றி எழுதப்பட்ட திரைக்கதை
இதை சாத்தியப்படுத்தியுள்ளது.

ந.முத்துகுமார் பாடல்களை எழுதியுள்ள இப்படத்தின்
இசையமைப்பாளர் கிப்ரான். மழை ஒரு கதாபாத்திரம்
என்று சொல்லும் அளவிற்கு வலுவாகக் காட்சிப்படுத்தப்
படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவன்.

குக்கிராமத்தை ஆகட்டும் குழந்தைகளின் பயம் கலந்த
உடல்மொழியை, கண்களை என நுணுக்கமாக அதே
சமயம் உறுத்தலில்லாமல் கதையின் நகர்வை பதிவு
செய்துள்ளார். மலையாளத்தில் த்ருஷ்யம் படத்தின்
இயக்குநர் ஜீத்து ஜோசஃப் தான் தமிழிலும் இயக்கியுள்ளார்.
அவருக்கு பக்கபலமாக மலையாள தமிழ் இருமொழிகளில்
விற்பன்னரான எழுத்தாளர் ஜெயமோகன் வசனம்
எழுதியுள்ளார்.

கமலுக்கு நெல்லைத் தழிழைப் பயிற்றுவித்திருப்பவர்
எழுத்தாளர் / இயக்குநர் சுகா. மண்டையிடிக்கி…ஏளா என்று
சின்ன வார்த்தைகளில் கூட அசல் நெல்லைத் தமிழை
திரையில் பேச வைத்ததற்கு நிச்சயம் பாராட்டவேண்டும்.
வழக்கமான ஹீரோவாக இல்லாமல் கமலை அவரின்
நட்சத்திர ஜொலிப்பிலிருந்து சற்று கீழ் இறக்கி சுயம்புவாகவே
முதல் காட்சியிலிருந்து கடைசிவரை ஜித்து ஜோசப்
இயக்கியுள்ளார்.

சிவாஜி ரசிகனாக தன்னை ஒரு காட்சியில் பெருமையாகச்
சொல்லிக் கொள்ளும் கமல் படத்தில் சில இடங்களில்
சிவாஜியின் உடல்மொழியை திரையில் நுட்பமாகப் பதிவு
செய்துள்ளார்.

படத்தில் சின்ன சின்ன குறைகள் இருக்கத்தான் செய்கின்றன.
கெளதமிக்கு குரல் கொடுத்த சரண்யா பொன்வண்ணனுக்கு
நெல்லைத் தமிழ் சரளமாகப் பேச வரவில்லை. எப்படியோ
சமாளித்திருக்கிறார். கமல் கெளதமி க்ளோசப் காட்சிகள்.
காதல் மன்னன் என்று தன்னையே பாராட்டிக் கொள்ளும்
சில காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம். காதல் காட்சிகளையே
கூட தவிர்க்கலாம்.

மலையடிவாரம், மழை மற்றும் மண்வாசத்துடன் அசலான
ஒரு தமிழ்ப்படம் பார்த்த நிறைவு ஏற்பட்டது மலையாளத்தில்,
இந்தியில், தெலுங்கில்,கன்னடத்தில் என எந்த இந்திய
மொழியிலும் இத்திரைப்படம் நிச்சயம் வெல்லும். காரணம்
நாமெல்லாம் இன்னும் குடும்பங்களை நம்புகிறோம்.
முற்றிலும் அந்நியமாகிவிடவில்லை. இதுபோன்ற திரைப்
படங்கள் வாழ்க்கையின் மீதும் மனிதர்கள் மீதும் நம்பிக்கையை
ஏற்படுத்துகின்றன.
-
---------------------------------
-By உமா ஷக்தி----தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பாபநாசம் – திரை விமர்சனம்  Empty Re: பாபநாசம் – திரை விமர்சனம்

Post by வேல்முருகன் Sat Jul 04, 2015 9:44 pm

ஜாலி ஜாலி ஜாலி


விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

பாபநாசம் – திரை விமர்சனம்  Empty Re: பாபநாசம் – திரை விமர்சனம்

Post by ayyasamy ram Sun Jul 05, 2015 8:12 am

பாபநாசம் – திரை விமர்சனம்  71tnOA6VQ9qbgAuPsyFy+papanasam_2461035f
-
'பாபநாசம்' படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் கருத்துக்களை ட்வீட்டாம்லேட்டில் பார்ப்போம்.

வளவன் ‏@RIDERAMAL - #பாபநாசம் கமல் என்னும் நடிகன் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறான். படம் பக்கா பிண்ணனி இசை பலம்.

ஓலைக்கணக்கன் ‏@Nattu_G - பாபநாசம்.. சொதப்பாத ரீமேக்.. கமல்.

நாயோன் ‏@writernaayon - மூளைக்குள்ள இருக்குற த்ரிஷ்யத்த டெலீட் பண்ணிட்டுப் பார்க்கணும்.

தேவர்மகன் ‏@Thevarmagan1991 - நம்மவரின் பாபநாசம் பாக்ஸ் ஆபீஸை நாசம் செய்யும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை!! தவறாமல் காணுங்கள் நம்மவரின் தரமான படம்!!

பேட்மேன் ‏@Narensach - கமல் கலக்கிட்டார்....நெல்லை வட்டார மொழியை இவ்வளவு கச்சிதமாய் பேச கமலை தவிர யாரும் செய்யமுடியாது.

அசோக் ‏@ashokcommonman - கமல் ரசிகனுக்கு மட்டும் அல்ல. அனைத்து தரப்பினருக்கும். கமல் பேக் வித் எமோஷன்ஸ்..

ட்விட்டர்MGR ‏@RavikumarMGR - இன்றைய சந்தோசம்! பரவலாகத் தென்படும் பாசிட்டிவ் விமர்சனங்கள்#பாபநாசம்

நாசூக்கு நாராயணன் ‏@vtviji - திர்ஷ்யத்துல அந்த போலீஸ்காரன ஒரு அப்பு அப்புவானுங்ளே.. அப்டி ஒன்னும் இதுல இல்ல.. #பாபநாசம் ரீமேக் இல்லதான்.

Jesu balan ‏@JESUBLN - நல்ல குடும்ப கதையில் திருநெல்வேலி அண்ணாச்சியாக கமல் வாழ்ந்திருக்கிறார் சமீபமாக வந்த கமல் படங்களில் இதுதான் நல்லபடம்.

Antony ‏@antony_tweetz - த்ரிஷ்யம் பல தடவை பார்த்த என்ன மாதிரி ஆட்களுக்கும் பாபநாசம் புடிச்சிருக்கு..:-))) #கமல் டா

மாடர்ன் தமிழன் ‏@gowtwits - த்ரிஷ்யமுக்கு எந்த விதத்துலயும் குறைவில்லாம இருக்கு!

HBD THALAPATHY ‏@oduvas81 - கமல் ஜோடியாக கௌதமி படத்தில் பொருத்தமாக இருப்பாரா என்ற சந்தேகங்களையெல்லாம் தவிடு பொடியாக்கியிருக்கிறார்! Gowthami shines!!

தமிழ் குடிமகன் ‏@Tamiltwits - பாபநாசம் ரொம்ப நாள் அப்புறம் கமல் படம் எல்லா தரப்பும் பாத்து ரசிக்கிர அருமையான படம் கண்டிப்பா எல்லாருக்குமே புடிக்கும் 100% கேரண்டி

நாகராஜ சோழன் ‏@kandaknd - பாபநாசம் பாருங்க மலையாள த்ரிஷ்யத்தையும் மோகன்லாலையும் மறந்துடுவீங்க

Megamind ‏@imohan - நண்பர்களே பாபநாசம் படத்தோட இயக்குநர் ஜித்தன் ரமேஷ் இல்ல, ஜீத்து ஜோசப்.

பேராசிரியர் நாதஸ்® ‏@mpgiri - த்ரிஷ்யம் பார்க்காத நான் பாக்கியசாலி..

உத்தமர் வில்லர் ‏@TukkerDoi - கிளைமேக்ஸ் காட்சிகளில் மோகன்லால் நடிப்பை விட உத்தம வில்லர் நூறு படி மேல்.. #உலகநாயகன்.

உத்தமர் வில்லர் ‏@TukkerDoi - கலாபவன் மணிக்கு கீது.. இன்னக்கு தியேட்டர் பக்கம் வந்தார்நா அடி விழுந்தாலும் விழும். #பாபநாசம்.

ஓலைக்கணக்கன் ‏@Nattu - பாபநாசம்.. சொதப்பாத ரீமேக்.. கமல்.

ℳr மைல்ஸ் தேவா © ‏@Dev2Deva - பாபநாசம் படத்துக்கு பாசிட்டிவ் ரிவ்யூ வருது சந்துல கம்பு சுத்தாம எங்க போனிங்க?

S.K Soundhararajan ‏@SkSoundhar - பாபநாசம்# கமல் பேசும் வார்த்தைகள் எல்லாம் வருங்கால தமிழ்மொழி வளர்ச்சிக்கு உதவுமா?
=
தமிழ் தி இந்து காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பாபநாசம் – திரை விமர்சனம்  Empty Re: பாபநாசம் – திரை விமர்சனம்

Post by வேல்முருகன் Sun Jul 05, 2015 2:58 pm

பாபநாசம் – திரை விமர்சனம்  3838410834 பாபநாசம் – திரை விமர்சனம்  3838410834


விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

பாபநாசம் – திரை விமர்சனம்  Empty Re: பாபநாசம் – திரை விமர்சனம்

Post by T.N.Balasubramanian Sun Jul 05, 2015 5:53 pm

"பாபநாசம் " நேற்று AVM ராஜேஸ்வரியில் பார்த்தேன் .
மூன்று மணி நேரம் கொஞ்சம் கூட தொய்வில்லாமல் எடுத்து சென்றுள்ள விதம் ,
கமல்ஹாசன் , கலாபவன் மணி ,இளவரசு , ஆஷா சரத் ,நிவேதா ,எஸ்தர் நடிப்பு
எல்லாம் மனதை மிகவும் தொடும்வண்ணம் இருந்தது .

பார்த்தேன் ரசித்தேன்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பாபநாசம் – திரை விமர்சனம்  Empty Re: பாபநாசம் – திரை விமர்சனம்

Post by வேல்முருகன் Sun Jul 05, 2015 6:19 pm

T.N.Balasubramanian wrote:"பாபநாசம் " நேற்று AVM ராஜேஸ்வரியில் பார்த்தேன் .
மூன்று மணி நேரம் கொஞ்சம் கூட தொய்வில்லாமல் எடுத்து சென்றுள்ள விதம் ,
கமல்ஹாசன் , கலாபவன் மணி ,இளவரசு , ஆஷா சரத் ,நிவேதா ,எஸ்தர் நடிப்பு
எல்லாம் மனதை மிகவும் தொடும்வண்ணம் இருந்தது .

பார்த்தேன் ரசித்தேன்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1149561

ஐயா திருநெல்வேலி -ய் மையமாக கொண்டு படம் எடுத்தாலே பெரும்பாலும் அது வெற்றி தான்... அருமையிருக்கு சூப்பருங்க


விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

பாபநாசம் – திரை விமர்சனம்  Empty Re: பாபநாசம் – திரை விமர்சனம்

Post by T.N.Balasubramanian Sun Jul 05, 2015 6:25 pm

அது சரி வேல்முருகன் !
பாபநாசம் என்ற பெயருக்கு பதிலாக
ராமேஸ்வரம் என்று வைத்து இருந்தால் ,
வெற்றி அடைந்திருக்காதா ? சிரி சிரி ஜாலி ஜாலி
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பாபநாசம் – திரை விமர்சனம்  Empty Re: பாபநாசம் – திரை விமர்சனம்

Post by ayyasamy ram Sun Jul 05, 2015 7:58 pm

இந்த படத்திலிருந்து ஒரு பாடலை டி.வி.யில்
இன்று ஒளிபரப்பினார்கள்....
-
படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டும்
விதமாக இருந்தது....
-
ஒரு காட்சியில் கௌதமியின் கன்னத்தில்
முத்தமிடுகிறார் கமல்....அதை கௌதமி ரசித்து
மறு கன்னத்தையும் காட்டுவுது இயல்பான
காட்சியாக படமாக்கப்பட்டிருக்கிறது....
-
விரசமில்லாமல் திரைப்பட பாடலை ரசிக்கம்படி
இருந்தது சிறப்பு...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பாபநாசம் – திரை விமர்சனம்  Empty Re: பாபநாசம் – திரை விமர்சனம்

Post by வேல்முருகன் Sun Jul 05, 2015 8:37 pm

T.N.Balasubramanian wrote:அது சரி வேல்முருகன் !
பாபநாசம் என்ற பெயருக்கு பதிலாக
ராமேஸ்வரம் என்று வைத்து இருந்தால் ,
வெற்றி அடைந்திருக்காதா ? சிரி சிரி ஜாலி ஜாலி
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1149566

ரெண்டுமே புண்ணிய தளங்கள் தானே கண்டிப்பாக வெற்றி அடைந்திருக்கும் .... குதூகலம்


விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

பாபநாசம் – திரை விமர்சனம்  Empty Re: பாபநாசம் – திரை விமர்சனம்

Post by krishnaamma Mon Jul 06, 2015 7:22 pm

ரொம்ப எக்சலண்ட் படம்..............ரொம்ப நாளுக்கு அப்புறம் தரமான ஒரு 'தமிழ்' படம் பார்த்த நிறைவு..........baalaaji இன்னும் படம் பார்க்கலையா?.....கமல் சூப்பர் போங்கோ!................. சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
.
.
எனக்கு மோகன்லாலும் பிடிக்கும் என்றாலும், த்ரிஷ்யம் விட இது தான் சூப்பர் புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பாபநாசம் – திரை விமர்சனம்  Empty Re: பாபநாசம் – திரை விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum