Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனிதமூளையில் திணிக்கப்பட்ட விஷவிதை கடவுள்!!!!
4 posters
Page 1 of 1
மனிதமூளையில் திணிக்கப்பட்ட விஷவிதை கடவுள்!!!!
மனிதமூளையில் திணிக்கப்பட்ட விஷவிதை
கடவுள்!!!!
வண்டியிழுக்கும் எருது, அதிகச் சுமை
வண்டியில் ஏற்றப்படும் பொழுது வாயில்
நுறைதள்ள, மூச்சிறைக்க, கண்ணீர் வழிய
திணறி இழுக்குமே தவிர தனக்கு ஏன்
வலிக்கிறது, நான் ஏன் இச்சிரமத்துக்கு
ஆளானேன் என்று சிந்திக்காது. காரணம்
இயற்கை அதன் தன்மையை அப்படி நிர்ணயம்
செய்து வைத்திருக்கிறது.
ஆனால் சிந்திக்கும் திறன் கொண்ட மனிதன்,
தனக்கு வரும் துன்பங்களை ஆராய்ந்து அதில்
இருந்து விடுபட அல்லது அதன்
காரணங்களையாவது தெரிந்து
கொள்ளமுடியும். ஆனால் அப்படிச் செய்யாமல்
சிந்திக்க மறுத்தோ, அவகாசம் இல்லாமையாலோ
அந்தப் பொறுப்பை வேறொரு இடத்தில்
ஒப்படைக்க நினைப்பதும், அந்தப் பொறுப்பை
ஏற்பவர் கடவுள் என்று நம்புவதும் நகைப்புக்கு
இடமளிக்கிறது.
இறை என்ற ஒன்றை நம்புகின்ற பொழுது
நேரடிப் பலன் கிடைக்கிறதோ இல்லையோ,
உளவியல் ரீதியான பிரச்சினைகளுக்கு ஒரு
தற்காலிக தீர்வாக மட்டுமே அது இருக்கும்.
வருகிற துன்பம் எத்தகையதாயினும் அதை
நீங்களே அனுபவம் செய்கிறீர்கள். இதில் கடவுள்
பங்கு என்று எதைச் சொல்வது.
துன்பம் வருகிற போதுதான் கடவுளையே
நீங்கள் அறிந்து கொள்ள முடியும் (குந்தி
மஹாபாரதத்தில் கண்ணனிடம் சொன்னது,
மேலும் துன்பங்களைத் தந்து எப்பொழுதும்
கண்ணனையே நினைக்கும்படி வரம்
தரும்படியும் கண்ணனைக் கேட்டதாகக் கதை
சொல்கிறது) என்ற வாசகத்தைப் படிக்கிற போது
எனக்குச் சிரிப்புத் தான் வரும்.
துன்பத்தைக்
கொடுத்துத் தான் தன் இருப்பை நிரூபிக்கும்
இறைவனை விட நான் இவ்வுலகத்தின்
அணைத்து இன்பத்தையும் தருகிறேன் என்னைப்
பணிவாயா என இயேசுவைக் கேட்ட சாத்தான்
இறைவனை விட மேலானது என்று நான்
நினைக்கிறேன்.
நீ எங்கள் கடவுளை மறுக்கிறாய், நிந்திக்கிறாய்
என்கிறீர்களா? நான் அப்படி ஒன்று இருக்கிறதா
இல்லையா என்று தெரியாதவன். நான்
கேள்விகேட்டாள் நான் நிந்திக்கிறேன் என்று
எடுத்துக் கொள்வீர்களா?
நீங்கள் இறையை ஏற்பவர்கள்தானே? உங்கள் கடவுள்
உங்களை சோதிக்கிற போது, அதை ஏன்
அப்படியே அது அவன் செயல் என்று ஏற்க
மறுக்கிறீர்கள். உதாரணமாக உங்களுக்கு நோய்
வந்தால் அதுவும் இறைவன் செயல்தானே, அதை
அப்படியே அதன் போக்கில் விட்டு விடாமல்
அதற்கு எதிராக செயலாற்றி உங்களை அந்த
நோயில் இருந்து விடுபட முயற்சிப்பதென்பது,
நீங்கள் கடவுளின் செயலை எதிர்க்கிறீர்கள்
அல்லது கடவுள் இல்லை என்று
எதிர்வினையாற்றி நிரூபிக்கிறீர்கள்.
இது நீங்கள் இயற்கையையும் இறைவனையும்
ஒன்றாக நினைப்பதன் விளைவே. இயற்கையும்
இறைவனும் ஒன்றாக இருக்கவே முடியாது.
இயற்கை இறைவனுக்கு கட்டுப்பட்டதாக நான்
நினைக்கவில்லை, மாறாக நீங்கள் குறிப்பிடும்
இறைவனானவர் இயற்கைக்கு கட்டுப்பட்டவராகவே
இருக்க முடியும்.
வேண்டுமென்றால் இப்படி
வைத்துக்கொள்ளலாம், இயற்கையும்
இறைவனும் அவனே, கடவுளும் சாத்தானும்
அவனே, ஆழிலைக் கண்ணனும் அரக்கனும்
அவனே என்று ஏற்றுக் கொள்கிறபோது, எது
நடந்தாலும் அது அவன் செயல் என்று திருப்திப்
பட்டுக்கொள்ளலாம்.
ஆனால் அப்படி ஏற்கிறபோது அனைத்து
மதங்களும் கட்டமைத்து வைத்திருக்கும்
இறைவன் மிகவும் நல்லவன் என்ற நம்பிக்கையில்
பாதிப்புவரும்.காரணம் துன்பத்தில் இருந்து
விடுதலை அழிப்பவரே தேவைப்பட்டால் இயற்கை
சீற்றங்களின் மூலியமாக பலரை கொல்லுவார்
என்றும் ஏற்கிறபோது அது மதங்கள் கட்டமைத்து
வைத்திருக்கும் கடவுள் பெயருக்கு
இழுக்குத்தானே.
இங்கே பிரச்சினையே மதங்கள் ஏற்படுத்தி
இருக்கும் கடவுள் கோட்பாடுகளே காரணமென
நினைக்கிறேன்.
நடக்கின்ற நல்லதுக்கெல்லாம்
கடவுளின் செயலென்றும் கெட்டதுக்கெல்லாம்
சாத்தான் என்றும் கிறித்துவ மதம் சொல்கிறது.
கர்த்தரே உலகைப் படைத்தார் என்று வைத்துக்
கொண்டாலும் சாத்தானையும் சேர்த்தே
படைத்தாரா? இல்லை சாத்தானும் கடவுள் போல்
தான் தோன்றியா என்ற கேள்வி எழவே
செய்கிறது.
முற்பிறவியில் செய்த பாவ புண்ணியத்திற்கே
ற்ப தண்டனையும் பலனையும் தருபவர் ஏதோ ஒரு
இந்துக் கடவுள் என்றால், பாவமும்
புண்ணியமும் மனிதர்கள் செய்கிற போது
அவர்களை படைத்த படைப்பாளியான
கடவுளுக்குத் தானே பலனும், தண்டனையும்
போய்ச் சேரவேண்டும்?.
அதை விடுத்து இது கலிகாலம், மனிதர்கள்
பாவம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் அவர்களை
அழித்து மீண்டும் உலகத்தை படைக்கப் போகிறார்
என்றும், பைபிளில் கூறப்பட்டுள்ள படி கர்த்தரே
உலகையும் அதில் மனிதர்களையும் படைத்து
பிறகு மாமிசமான மனிதன் தவறு செய்ய
ஆரம்பித்து விட்டதால் அவர்களை அழித்து
மீண்டும் ஒரு உலகைப் படைத்தார் என்பதையும்
ஏற்பதற்கில்லை. ஏனெனில் இதில் அடிப்படையாக
பார்த்தால் படைப்பே தவறாக இருப்பதால் தானே
மனிதர்கள் தவறு செய்ய நேரிடுகிறது.
இது
தன்னால் நிகழ்ந்த தவறு தானே என்ற
உணரக்கூடிய பொது அறிவுகூட இல்லாதவரா
உங்கள் கடவுள் என்று கேட்கத்தோன்றுகிறது.
ஈராயிறத்துப் பணிரெண்டில் உலகம் அழியும் என
சொல்லி வருகிறார்கள். பைபிள்படி
நல்லவர்களான நோவாவும் அவர்
குடும்பத்தினரையும் தவிர்த்து மற்ற
எல்லோரையும் கர்த்தர் அழித்துவிட்டார் என்றே
வைத்துக் கொண்டால், இன்றைக்கு இருக்கும்
உலக மக்கள் அனைவரும் நல்லவர்களான நோவா
குடும்பத்தவர்களே என்கிற போது எல்லோரும்
தவறு செய்ய நேரிட்டது எப்படி?
நம்புங்கள் நடக்கும், கேளுங்கள் கொடுக்கப்படும்
என்கின்ற கடவுள் கோட்பாடுகளை சந்தேகமாகக்
கேள்வி கேட்டாள் நான் நாத்திகனாம். முதலில்
அதைச் சொல்ல (மதவாதி) உங்களுக்கு என்ன
யோக்கிதை இருக்கிறது. இஸ்லாத்தில் எல்லாம்
வல்ல இறைவனே (அல்லா) உலகைப் படைத்தார்
என்கிறது,
கிறிஸ்துவர்களுக்கு கர்த்தரே
உலகைப் படைத்தார், நீங்கள் கிறிஸ்துவாகப்
பிறப்பதற்கும், இஸ்லாமியராகப் பிறப்பதற்கும்
ஏற்கனவே இந்துக் கடவுள் விதி எழுதிவிட்டார்
என்கிறது இந்து மதம்.
இதில் எந்த மதத்தினரும் அடுத்த மதத்தினரின்
கடவுள் கொள்கைகளையோ
கட்டமைப்புகளையோ ஏற்க மாட்டார்கள்.
ஆக
கோவியார் சொன்னது போல் ஒவ்வொரு
மதத்தினரும் அடுத்த மதத்தினருக்கு அவர்கள்
கடவுள் பெயராலும் கட்டமைப்பாளும் நாத்த்கரே.
வெறும் தன்னலம் கருதியே பக்தியாளர்களாக
இருந்து கொண்டு தங்களை ஆண்மீகவாதிகள்
என்றும் ஆண்மீகம் பேசுபவர்கள் என்போர்
அவர்களை அவர்களே சீர்தூக்கிப்பார்த்துக்
கொள்வது நல்லது.
இறை அச்சம் அல்லது சொர்கம்
பற்றிய கணவில் நல்லவர்களாக இருப்பவர்களைவிட
இப்படிப்பட்ட எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தனக்கு
எதல்லாம் துன்பமோ அதை மற்றவர்களுக்குச்
செய்யாமலும் கடவுள், மத, சாதி பேரைச்
சொல்லி சக மனிதனிடம் ஏற்றத் தாழ்வு
பாராட்டாமல் கடவுளை மற மனிதனை நினை
என்று வலியுறுத்தும் நாத்திகனே
ஆத்திகனைவிட மேலானவன்.
எத்தனை எத்தனை மதங்களடா?
அதில் எத்தனை எத்தனை கடவுளடா?
எத்தனை எத்தனை கொள்கைகளடா?
அனைத்திலும் அடிப்படைக் கொள்கை
என்றாலோ
அடுத்த மதத்தினரை அழிப்பதுதானோடா?
(இல்லாத) கடவுளே உங்களைக் கேட்பதெல்லாம்
இதுதான்,
இனி ஒரு அவதாரம் வேண்டாம்,
இன்னுமொறு மதத்தை பூமி தாங்காது.சிந்தி
ப்பீர் புறக்கணிப்பீர்!
-குரங்கின் தூதுவன்
கவின்- பண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013
Re: மனிதமூளையில் திணிக்கப்பட்ட விஷவிதை கடவுள்!!!!
-
விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்.
நாமும் பிழைத்துக்கொள்வோம்.
விழிப்பே உயர்வு.
விழிப்புடன் மனதை சிக்கெனப் பிடித்துக்கொண்டால்
மட்டுமே உயர்வு.
-
Re: மனிதமூளையில் திணிக்கப்பட்ட விஷவிதை கடவுள்!!!!
மத மூடர்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிரோம்
nimal- பண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 21/05/2015
Re: மனிதமூளையில் திணிக்கப்பட்ட விஷவிதை கடவுள்!!!!
மேற்கோள் செய்த பதிவு: 1149339கவின் wrote:
மனிதமூளையில் திணிக்கப்பட்ட விஷவிதை
கடவுள்!!!!
-குரங்கின் தூதுவன்
இந்தப் பதிவின் நோக்கமும் தெரியவில்லை. பதிவாளரின் சொந்த அனுபவமும் இல்லை.
கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர்
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Similar topics
» விஷவிதை தூவுகிறார்கள்!
» கடவுள் வாழ்த்து ..இன்று சனிக்கிழமை 19.09.2009,கடவுள் வாழ்த்துடன் ஆரம்பம் ..
» கடவுள் இல்லையா?அல்லது இவள் கடவுள் குழந்தையா?
» கடவுள் கிட்ட பேசணும் - தென்கச்சி கோ சுவாமிநாதன் கடவுள் கிட்ட பேசணும் ? எந்த மொழியிலே பேசறது ?
» "கடவுள் வேறு..கடவுள் சிலைகள் வேறு...!"
» கடவுள் வாழ்த்து ..இன்று சனிக்கிழமை 19.09.2009,கடவுள் வாழ்த்துடன் ஆரம்பம் ..
» கடவுள் இல்லையா?அல்லது இவள் கடவுள் குழந்தையா?
» கடவுள் கிட்ட பேசணும் - தென்கச்சி கோ சுவாமிநாதன் கடவுள் கிட்ட பேசணும் ? எந்த மொழியிலே பேசறது ?
» "கடவுள் வேறு..கடவுள் சிலைகள் வேறு...!"
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum