புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Poll_c10ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Poll_m10ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Poll_c10 
15 Posts - 75%
heezulia
ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Poll_c10ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Poll_m10ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Poll_c10 
2 Posts - 10%
kavithasankar
ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Poll_c10ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Poll_m10ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Poll_c10ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Poll_m10ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Poll_c10 
1 Post - 5%
Barushree
ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Poll_c10ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Poll_m10ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Poll_c10ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Poll_m10ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Poll_c10 
69 Posts - 82%
mohamed nizamudeen
ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Poll_c10ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Poll_m10ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Poll_c10ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Poll_m10ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Poll_c10 
2 Posts - 2%
prajai
ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Poll_c10ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Poll_m10ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Poll_c10ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Poll_m10ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Poll_c10 
2 Posts - 2%
heezulia
ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Poll_c10ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Poll_m10ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Poll_c10 
2 Posts - 2%
Shivanya
ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Poll_c10ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Poll_m10ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Poll_c10 
1 Post - 1%
Barushree
ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Poll_c10ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Poll_m10ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Poll_c10ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Poll_m10ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ?


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Jul 02, 2015 12:01 pm

இனிமேல் பைக்கில் கிளம்பும்போது லைசென்ஸ், ஆர்.சி புத்தகம், இன்ஷூரன்ஸ் - இவற்றோடு ஹெல்மெட்டையும் மறக்காமல் எடுத்துக் கொள்ளுங்கள். எடுத்த ஹெல்மெட்டை தலையில் மாட்டிய பிறகே, பைக்கை ஸ்டார்ட் செய்யுங்கள். டேங்க்கில் தொடையிடுக்கில் வைத்துக்கொண்டோ, ரியர்வியூ மிரரில் சொருகியபடியோ ஹெல்மெட்டை வைத்துக்கொண்டு பயணிப்பது - சட்டத்தை மட்டுமல்ல; உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஏமாற்றுவதற்குச் சமம்!

‘ஹெல்மெட் இல்லையென்றால் லைசென்ஸ் பறிக்கப்படும்; வாகனம் சீஸ் செய்யப்படும்’ போன்ற கடுமையான சட்ட திட்டத்தையெல்லாம் விட்டுத்தள்ளுங்கள்; ‘ஹெல்மெட் போட்டா காது கேட்கவில்லை... வேர்த்துக் கொட்டுது பாஸ்... முடி போச்சுன்னா மொத்தமும் போச்சு’ என்று ஃபீலிங் டேக்கா விடுபவர்கள் அனைவருக்கும், ஹெல்மெட் விஷயத்தில் ஆப்ஷன் இருக்கிறது.

ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? P66a

ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?

எல்லோருக்கும் பொதுவான பயம் இதுதான். தலைவலி, நீர் கோர்த்தல், காது கேட்கவில்லை போன்ற உடல் உபாதைகள் வருவதாகச் சொல்லித்தான் பலர் ஹெல்மெட்டைத் தவிர்க்கின்றனர். ஆனால், இவை எல்லாமே பொய் இல்லை. பல நாள் துவைக்காத அழுக்குச் சட்டை போட்டால், எப்படி நம் உடம்பில் அரிப்பு ஏற்படுமோ, அதுபோலத்தான் ஹெல்மெட்டும். தினசரி துவைத்த காட்டன் கேப் அல்லது கர்ச்சீஃப்பைத் தலையில் கட்டிக்கொண்டு ஹெல்மெட் அணிந்தால், எந்தப் பிரச்னையும் வராது. சேவியர், ஆக்ஸர், வேகா போன்ற பிராண்டுகளில் ஹெல்மெட்டின் உள்பக்கத்தை அகற்றி, துவைத்துப் பயன்படுத்தலாம். துவைத்த இன்டீரியரை வெயிலில் அரை நாள் காயவைத்து அணிந்தால், தலையில் அரிப்பு ஏற்படுவது நிற்பதுடன், முடி உதிர்தலும் தடைப்படும். அகற்ற முடியாத உள்பக்கம் கொண்ட ஹெல்மெட் வாங்குபவர்கள், தினசரி கர்ச்சீப் அல்லது கேப் மாற்ற வேண்டும். மேலும், வாரம் ஒருமுறை ஹெல்மெட்டின் உள்பக்கம் வெயிலில் படுவதுபோல அரை மணி நேரம் வைக்க வேண்டும்.

‘ரொம்ப வேர்க்குதுங்க’ என்று சாக்கு போக்கு சொல்பவர்கள், வென்ட்டிலேஷன் உள்ள ஹெல்மெட்டுகள் பயன்படுத்தலாம். 6 முதல் 8 ஏர் வென்ட்டுகள் உள்ள ஹெல்மெட்டுகள் இப்போது மார்க்கெட்டில் இருக்கின்றன. ஏர் வென்ட் என்றவுடன், குபுகுபுவென காற்று அடிக்கும் என்று கற்பனை செய்ய வேண்டாம். உள்ளே வரும் சூடான காற்றை வெளியே தள்ளும் வசதிதான் இது. பைக் ஓட்டும்போது, மறக்காமல் ஹெல்மெட் வென்ட் திறந்திருக்கிறதா என்று கவனியுங்கள். அதேபோல், மழை நேரங்களில் பைக் ஓட்டுபவர்களுக்கும் வசதியான ஹெல்மெட்டுகள் இருக்கின்றன. வேகா, ஸ்டட்ஸ் போன்ற பிராண்டுகளில், ஹெல்மெட்டின் முன் பக்கம் நீண்டுள்ள ஷேட் வழியாக மழை நீர் வடிந்துவிடும் என்பதால், மழை நீர் நேராக வைஸரில் அறைந்து பார்வையை மறைப்பதை இது தவிர்க்கும். இவற்றுக்கு ‘ரெயின் ரெசிஸ்ட் ஹெல்மெட்’ என்று பெயர்.

ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? P66b

ஹெல்மெட்டுகளில் எத்தனை வகை உள்ளன?

இந்தியாவின் தரம் வாய்ந்த ஹெல்மெட்டுகளான ஸ்டீல்பேர்டு, வேகா, ஸ்டட்ஸ், சேவியர் போன்ற ஹெல்மெட்டுகளின் சென்னை டீலர்களான ஜவஹர் அரோரா-வித்யா தம்பதியர், ஹெல்மெட்டுகளில் உள்ள வகைகள் பற்றிச் சொன்னார்கள்.

“உலகம் முழுக்க ஃபுல்ஃபேஸ், ஓப்பன் ஃபேஸ், ஃப்ளிப்-அப், டூயல் பர்பஸ், த்ரீ குவார்ட்டர், மாடுலர், ஹாஃப், மோட்டோகிராஸ் என்று 8 வகைகள் ஹெல்மெட்டில் இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் புழக்கத்தில் இருப்பவை நான்கு வகைகள்தான்.

1. ஓப்பன் ஃபேஸ் - அதாவது திறந்த வகை ஹெல்மெட். இதுதான் பேஸிக் மாடல். பெண்களிடம் இதற்கு நல்ல வரவேற்பு இருப்பதால், இதை லேடீஸ் ஹெல்மெட் என்கிறார்கள். ஆனால், இதை ஆண்களும் பயன்படுத்தலாம். வேகமாகப் பயணிக்காத வர்களுக்கு, இது பெஸ்ட். தலைப் பகுதி முழுவதையும் இது பாதுகாத்தாலும், முகத்துக்கு வைஸர் மட்டுமே பாதுகாப்பு.

2. ஃபுல் ஃபேஸ் -
பொதுவாக, நாம் அனைவரும் பயன்படுத்தும் ஹெல்மெட் இது. தாடை முதல் தலை முழுவதையும் பாதுகாக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பழைய ஃபுல் ஃபேஸ் மாடலில், ஏர் வென்ட்டுகள் இல்லாமல் இருந்தன. இப்போது வரும் அனைத்து மாடல்களிலும் ஏர் வென்ட்டுகள் இருப்பதால், வியர்க்குமோ என்று பயப்படத் தேவை இல்லை

ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? P66c

3. ஃப்ளிப் அப் - இதுவும் ஃபுல் பேஸ் மாடல்தான். ஆனால், வெயிலில் முகம் வியர்க்கக் கூடாது என்று விரும்புபவர்கள், கீழே உள்ள பட்டனைப் பயன்படுத்தி, தாடைப் பகுதியை மேலே ஏற்றிக்கொள்ளலாம். இது, பார்ப்பதற்கு ஓரளவு ஓப்பன் ஃபேஸ் மாடல் போல இருக்கும். இதிலேயே ஆட்டோ கூலிங் ஆப்ஷனும் உண்டு. அதாவது, வெயிலில் செல்பவர்களுக்கு வைஸர் இல்லாமல், கண்களை மட்டும் கவர் செய்யுமாறு கூலிங் கிளாஸை இறக்கிக்கொள்ளலாம். இரவில் வெளிச்சமாகவும், பகலில் கூலிங்காகவும் இது இருப்பதால், ஓட்டுவதற்கு சுகானுபவமாக இருக்கும். ஆனால், ஆபத்து நேரத்தில் இதில் முழுப் பாதுகாப்பு கிடைக்காது.

4. மோட்டோ கிராஸ் -
இதுவும் ஒரு வகையில் ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட்தான். இதில் தாடைப் பகுதிக்கென்று சிறப்புப் பாதுகாப்பு இருக்கும். இதை ‘ஸ்கெலிட்டன் ஹெல்மெட்’ என்றும் சொல்கிறார்கள். பைக் ஓட்டும்போது கீழே விழ நேர்ந்தால், முகம் தரையில் அடிபட வாய்ப்பு இருக்கிறது. அந்த மாதிரி நேரங்களில், இந்த மோட்டோ கிராஸ் ஹெல்மெட் உங்களுக்கு உற்ற நண்பனாக இருக்கும். முன்பு டர்ட் பைக் ரேஸ்களில்தான் இதைப் பெரிதும் பயன்படுத்தினார்கள். இது, பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதால், இப்போதைய இளைஞர்களை இது மிகவும் கவரும். இதில், தலைக்கு மேலே சன் ஷேடு இருப்பதால், வெயில் மற்றும் மழை உங்களை நேரடியாகத் தாக்காது!” என்றனர்.

ஹெல்மெட்டுகள் எப்படித் தயாராகின்றன?

இந்தியாவில், முழுக்க முழுக்க பாலி கார்பனேட் கலவையால் ஹெல்மெட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. அதாவது, பிளாஸ்டிக் மற்றும் தெர்மோகோல் சேர்ந்த கலவைதான் பாலிமர். தரமான ஹெல்மெட்டுகளில் இந்தத் தடிமனான பகுதிக்குக் கீழே 7 அடுக்குகளால் ஆன ஃபைபர் லேயர்கள் இருக்கும். இவை தரையில் மோதும்போது கிடைக்கும் அழுத்தத்தை ஈஸியாக்கும். லைட் வெயிட்டுக்கும், ஃப்ளெக்ஸிபிளிட்டிக்கும் பாலிமர்தான் பெஸ்ட். இதற்கு அடுத்த தரம், ஃபைபர் கிளாஸ் மெட்டீரியல். MT, AGV போன்ற இத்தாலியன் ஹெல்மெட்டுகளில் ஃபைபர் கிளாஸ் பயன்படுத்தப்படுகின்றன. இது, மோதும்போது ஏற்படும் வேகத்தைக் குறைக்கும் தன்மைகொண்டவை. உச்சபட்சமாக, கார்பன் ஃபைபர் மெட்டீரியல் கொண்டு தயாரிக்கப்படும் ஹெல்மெட்டுகள்தான் உலகத் தரம் வாய்ந்தவை. மோட்டோ ஜீபி, ஃபார்முலா-1 போன்ற ரேஸ்களில் பயன்படுத்தப்படும் ஹெல்மெட்டுகள் அனைத்தும் கார்பன் ஃபைபர் கொண்டு தயாரிக்கப்பட்டவை. சில கார்பன் ஃபைபர் ஹெல்மெட்டுகளின் எடை 1.3 கிலோ அளவுதான் இருக்கும். ஆனால், பாதுகாப்பில் இவைதான் பெஸ்ட். நம் நாட்டில் நெக்ஸ், AGV போன்ற கார்பன் ஃபைபர் ஹெல்மெட்டுகள் 28,000 ரூபாய் முதல் கிடைக்கின்றன.

எப்படி வாங்க வேண்டும்?

ஹெல்மெட், நம் தலையோடு மிக இறுக்கமாகவும் இருக்கக் கூடாது; மிகத் தளர்வாகவும் இருக்கக் கூடாது. ஹெல்மெட் போட்டுக்கொண்ட பிறகு, தலையை இட வலமாக அசைத்துப் பாருங்கள். லேசாக நகர்ந்தால், அது உங்களுக்குச் சரியான ஹெல்மெட். அதிகமாக நகர்ந்தால், மிகவும் தளர்வாக இருக்கிறது என்று பொருள். காது கேட்க வேண்டும்; காற்று வர வேண்டும் என நீங்கள் தளர்வாக ஹெல்மெட் அணிந்தால், ஸ்பீடு பிரேக்கர்களில் ஹெல்மெட் திரும்ப வாய்ப்பு உண்டு. அதேபோல், இறுக்கமாகவும் இருக்கக் கூடாது. ஹெல்மெட் அணியும்போது, இரு பக்கமும் உள்ள ஸ்ட்ராப்புகளை நன்கு இழுத்து லாக் செய்ய வேண்டும். இதுதான் ஹெல்மெட் அணிய வேண்டிய சரியான முறை.

ஹெல்மெட் ஏன் அணிய வேண்டும்?

இந்தியாவில் 45 சதவிகித விபத்துகள், ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் விபத்துகளே! தலையில் மட்டும் அடிபட்டு மூளைச் சாவு ஏற்பட்டு வாழ்வை இழப்பவர்களின் நிலை மிகவும் பரிதாபம். ஹெல்மெட் அணிந்து பைக்கில் சிக்னலில் நின்றுகொண்டிருந்த ஒருவர், தலைக்கு மேலே சாய்ந்து விழுந்த மின் கம்பத்தில் இருந்து உயிர் தப்பிய கதையும் உண்டு. எனவே, சாலை விபத்துகளில் மட்டுமின்றி, பொதுவாகவும் நம் அழகான முகம் பாதுகாப்பாக இருக்க ஹெல்மெட் அவசியம்! ஹெல்மெட்டை சுமையாக நினைக்காதீர்கள்; சுகமாக அனுபவியுங்கள்!

தரமான ஹெல்மெட்டை எப்படிக் கண்டுபிடிப்பது

ஹெல்மெட் அணிவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட ஹெல்மெட்டைத் தேர்ந்தெடுப்பது ரொம்ப முக்கியம். காஸ்ட்லியாக வாங்க விரும்புபவர்கள் ஜெர்மன், அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த இம்போர்ட்டட் ஹெல்மெட்டுகள் வாங்கலாம். ஐரோப்பா பிராண்டுகளில் ECE குறியீடு இருக்கும். Economic Commissions for Europe என்பதுதான் இதன் சுருக்கம். இதை கவர்ன்மென்ட் ஆஃப் யுகே வெப்சைட்டில் செக் செய்து கொள்ளலாம். வட, தென் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளைச் சேர்ந்த ஹெல்மெட்டுகளில் DOT (Department of Transportation) எனும் கோட் நம்பரும் சர்ட்டிஃபிகேட்டும் இருக்கிறதா என்று செக் செய்துகொள்ளுங்கள்.

நம் ஊர்களில் DOT ஸ்டிக்கர்கள் டூப்ளிகேட்டாகக் கிடைக்கின்றன. ஆனால் ஒரிஜினல் ஹெல்மெட்களில் DOT கோடு, மோல்டு செய்யப்பட்டிருப்பதை வைத்துக் கண்டுபிடிக்கலாம். ஜெர்மன் தயாரிப்பில் SCHNELL என்ற குறியீட்டை வைத்துக் கண்டுபிடிக்கலாம். இதில் கவனமாக இருக்க வேண்டும். இந்தியாவுக்கு ISI முத்திரை. இதிலும் நிறைய போலியான ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுவதால், கவனம் தேவை.

ISI முத்திரை உண்மைதானா என்பதைக் கண்டறிய, 044-22541442, 22541216 ஆகிய எண்ணில் தொடர்புகொள்ளுங்கள்.

அல்லது
www.bis.org.in

என்ற இணையதளத்தில், ISI மற்றும் CM/L நம்பரை வைத்துச் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 02, 2015 12:13 pm

ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? 103459460 ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? 3838410834
-
ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Vz82LddYRNiUOPcbQKXV+securedownload(5)
-
நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளக்கூடாது..!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Jul 02, 2015 12:52 pm

‘முடி கொட்டுது, தலை வியர்க்குது, ஹேர்ஸ்டைல் கலையுது, கழுத்து வலிக்குது, பெரிய பாரத்தைத் தலையில சுமக்கிற மாதிரி இருக்குது, சைடுல வர்ற வண்டி தெரியலை’ இவை எல்லாம் ஹெல்மெட் அணியாமல் இருக்க நாம் சொல்லும் காரணங்கள். ஆனால், ஹெல்மெட் அணிவதற்கு ஒரே ஒரு காரணம்போதும். ஒரு கணம், உங்கள் குடும்ப உறுப்பினர்களின் முகங்களை நினைத்துப்பாருங்கள். நீங்கள் இல்லாமல்போனால், அந்த வேதனையை அவர்களால் தாங்க முடியுமா?

‘நேத்து பைபாஸ் ரோட்டுல ஒரு ஆக்ஸிடென்ட். நல்லவேளை, ஹெல்மெட் போட்டிருந்ததால தலையில எதுவும் அடி இல்லே’ என்று யாரோ ஒருவர் அடிக்கடி நம்மிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அரசு மருத்துவமனையின் விபத்துப் பிரிவுக்குச் சென்று பார்த்தால், விபத்தின் கோரத்தையும், ஹெல்மெட்டால் உயிர் தப்பிய மனிதர்களின் கதைகளையும் ஏராளமாகக் கேட்கலாம். ஒரு செல்போன் வாங்கினால்கூட அதற்கு மறக்காமல் ஒரு ஸ்க்ராட்ச் கார்டு போடுகிறோம். மதிப்புமிக்க நம் உயிரை எத்தனை அக்கறையுடன் பாதுகாக்க வேண்டும்? ஆனால், நம் ஆட்கள் செய்வது என்ன?

சட்டையைக் கழற்றி ஹேங்கரில் மாட்டுவதைப் போல, ஹெல்மெட்டை வண்டியின் கண்ணாடி கம்பியில் மாட்டிக்கொள்கிறார்கள். சிலர், பேப்பர் வெய்ட் போல பெட்ரோல் டேங்கின் மீது வைத்துக்கொள்கிறார்கள். வேறு சிலர், வண்டியின் பின்பக்க லாக்கரில் பூட்டி வைத்துக்கொள்கின்றனர். தூரத்தில் போலீஸ் சோதனை செய்வதைப் பார்த்ததும் அவசர, அவசரமாக ஹெல்மெட்டை எடுத்து மாட்டிக்கொண்டு செல்கிறார்கள். இப்படி, சைக்காலஜியின் சந்துபொந்தில் நுழைந்து தப்பிக்கப்பார்க்கும் நபர்கள் இருப்பதால்தான் ‘ஹெல்மெட் அணிவது கட்டாயம்’ என நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டியிருக்கிறது.

இந்தியாவில் அதிக விபத்துக்கள் நடப்பது தமிழ்நாட்டில்தான். அதில், ஹெல்மெட் அணியாததால் உயிரிழப்போரின் எண்ணிக்கை மிக அதிகம். கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 6,000-க்்கும் அதிகமானோர் ஹெல்மெட் அணியாததால் உயிரிழந்திருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனித உயிர்களை ஹெல்மெட் அணியாததால் இழந்திருக்கிறோம் என்கிறார் தமிழக டி.ஜி.பி. மோசமான சாலைகள், போதையில் வண்டி ஓட்டும் குடிகாரர்கள் என விபத்துக்கு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும், அது நிகழும் நேரத்தில் நம்மிடம் இருக்க வேண்டிய ஹெல்மெட் என்ற பாதுகாப்புச் சாதனம் இல்லாமல் போவதால், உயிரிழப்பின் விகிதம் அதிகரித்துவிடுகிறது.

சென்னையைச் சேர்ந்த நரம்பியல் அறுவை சிகிச்சைநிபுணர் ரூபேஷ் குமார் விபத்தில் ஏற்படும் தலைக்காயங்கள், விளைவுகள் குறித்து, விரிவாகப் பேசினார்.

“மனிதனின் தலையில் முக்கியப்பகுதி மூளை. அதைச் சுற்றி ஓர் உறை, அதற்கு மேல் அரண் போல மண்டை ஓடு, அதைச் சுற்றி தோல் என மூன்று அடுக்குகளாகப் பாதுகாக்கப்படுகிறது. ஆனால், ஓர் விபத்து நடந்து தலையில் அடிபட்டால், உயிருக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக, ஹெல்மெட் அணியாதபோது காயத்தின் தீவிரம் பல மடங்கு அதிகரிக்கிறது. ஹெல்மெட் அணிந்திருந்தால் தலைக்காயம் ஏற்படும் வாய்ப்பு பெருமளவு தவிர்க்கப்படும் அல்லது குறைக்கப்படும்.

அதிக வேகம்! அதிக ஆபத்து!

ஹெல்மெட் அணிந்திருப்பது பாதுகாப்புதான் என்றாலும் தினசரி பயணத்தில் நாம் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய விஷயங்கள் எத்தனையோ இருக்கின்றன. குறிப்பாக, தமிழக சாலைகளின் நிலை குறித்து நமக்கே தெரியும். குண்டும் குழியும் நிறைந்த சாலையில் அதிவேகம் அதிக ஆபத்தைத்தான் கொண்டுவரும். நமக்கு முன்னே செல்லும் ஒரு கார், சாலையின் நடுவில் இருக்கும் பெரிய குழியை நம் கண்ணுக்குக் காட்டாது. குழியை நடுவில்விட்டு கார் சல்லென்று போய்விடும். ‘அதான் நமக்கு முன் கார் செல்கிறதே’ என்ற மிதப்பில் நாம் வேகமாகச் சென்றால், எதிர்பாராமல் குழியில் விழுந்து குப்புற சரிய வேண்டியிருக்கும்.

டூ வீலர் என்றால், 40 கி.மீ. வேகம் நார்மல். அதிகபட்சம் 60-ஐ தாண்டக் கூடாது. கார் என்றால், அதிகபட்சம் 80 கி.மீ வேகத்தைத் தாண்டக் கூடாது. இப்படிச் சொல்வதன் நோக்கம் வண்டி ஓட்டுபவரின் பாதுகாப்பைக் கருதி மட்டும் அல்ல. சாலையில் உங்கள் அருகே வண்டி ஓட்டும் மற்றவர்களின் பாதுகாப்பும் உங்கள் கையில்தான் இருக்கிறது. மனைவி பின்னால் அமர்ந்திருக்க, குழந்தையை முன்னால் அமரவைத்து, மெதுவாக வண்டி ஓட்டிச் செல்லும் ஒருவரின் அருகே, புயல்வேகத்தில் ஒரு காரோ டூ வீலரோ கடக்கும்போது அவர் ஒரு கணம் அதிர்ந்து போக மாட்டாரா? அந்த அதிர்வில் கை விலகலாம். கால் நடுங்கலாம். ஒரு விபத்தும் நடக்கலாம். யாரோ ஒருவரின் வாழ்க்கையை சூனியத்தில் தள்ள நமக்கு என்ன உரிமை இருக்கிறது?

சாலைகளில் வேண்டாமே ரேஸ்!

சமீபத்தில் சென்னை, பாரிமுனையில், நள்ளிரவில் சாலையோர பிளாட்பாரத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது, திடீரென சில ரேஸ் வண்டிகள் ஏறின. அந்த வேகமும் பாரமும் தாங்காமல், மூன்று பேர் உடல் நசுங்கி செத்துப்போனார்கள். அந்த இளைஞர்கள் ரேஸ் வண்டி ஓட்டியவர்கள். இது ஒருநாள் கதை அல்ல. சென்னையில் இது அடிக்கடி நடக்கிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தில்கூட பைக் ரேஸ் செல்கிறார்கள். அவர்கள் செல்லும் வேகத்தையும் வண்டியை பக்கவாட்டில் சரிப்பதையும் பார்த்தால், நமக்குக் குலை நடுங்குகிறது. கடைசியில் யாரோ சிலர் மீது விட்டு ஏற்றி உயிரைப் பறிக்கின்றனர் அல்லது பக்கத்தில் உள்ளவர்களை அச்சத்தில் உறையவைத்து விபத்தில் தள்ளுகின்றனர். பிள்ளைகளுக்கு ரேஸ் பைக் வாங்கித் தரும் பெற்றோர்கள் இதைச் சிந்திக்க வேண்டும். அதையும் தாண்டி ரேஸ் அவசியம் எனக் கருதினால், அதற்கு உரிய இடத்தில் ரேஸ் நடத்திக்கொள்ள வேண்டும்.

குடி ஆட்டம்!

உடல் சமநிலையில் இருக்கக் காரணம் சிறுமூளை (செரபெல்லம்). குடித்த பிறகு, சிறுமூளையில் பாதிப்புகள் ஏற்படுவதால், தள்ளாட்டம் ஏற்படுகிறது. வண்டியை ஆக்ரோஷமாக ஓட்டத் தூண்டுவது சிறுமூளையின் பாதிப்பினால்தான். 70 சதவிகித விபத்துகளுக்கு, குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதுதான் காரணம். ஆனால் யார் கேட்கிறார்கள்? இரவு 10 மணிக்கு மேல் வண்டியோட்டிகளை மறித்து, ஊதச் சொன்னால் நிறையப் பேரிடமிருந்து போதைக்காற்றுதான் வருகிறது. உடலும் மனமும் அலைபாய்ந்து, எங்காவது ஏற்றி மடிகின்றனர் அல்லது யார் மீதாவது மோதிவிட்டு, தான் செய்தது இன்னதென்று தெரியாமல் மயங்கிக்கிடக்கின்றனர்.

செல்போன் எமன்!

‘வார்த்தைகள் கொல்லக்கூடும். வண்டி ஓட்டும்போது போன் பேசாதீர்கள்’. ‘அழைப்பது எமனாகவும் இருக்கலாம். வண்டி ஓட்டும்போது செல்போனை எடுக்காதீர்கள்’ - என விதவிதமாக விளம்பரம் செய்துதான் பார்க்கிறார்கள். ஆனால், இயர்போன் மாட்டிக்கொண்டு பேசுவது, ஹெல்மெட்டுக்கும் காதுக்கும் இடையிலான இடுக்கில் செல்போனை செருகிவைத்துப் பேசுவது எனப் பல நூதன முறைகளை நம் ஆட்கள் கையாள்கின்றனர். ஹெல்மெட் போடாதோர் கழுத்துக்கும் காதுக்கும் இடையில் செல்போனை வைத்து ஒரு பக்கமாகச் சாய்ந்துகொண்டே வண்டியை ஓட்டி, சாலையில் செல்லும் மற்றவர்களைக் கலவரப்படுத்துகின்றனர். வண்டி ஓட்டும் போது ப்ளூடூத் மாட்டிப் பேசுவது அந்த நேரத்து வசதியாக உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், அது கவனச் சிதறலை ஏற்படுத்தி விபத்துக்கு வழிவகுக்கும்.

ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?

இப்படித்தான் பலர் சொல்கிறார்கள். ஆனால், இது முழுப் பொய். பொதுவாக நம் தலையில் தினசரி சில முடிகள் வளரும், சில முடிகள் உதிரும். ஹெல்மெட் அணியும்போது உதிரும் முடிகள் அதில் ஒட்டிக்கொள்வதால், பலரும் அந்தப் பழியை ஹெல்மெட் மீது போட்டுவிடுகின்றனர். உண்மையில், ஹெல்மெட் அணிவதன் மூலம் அலர்ஜி, கண் பாதிப்பு போன்றவற்றைக்கூட தடுக்க முடியும்.

முக்கியமாக, ஹெல்மெட்டை நேரடியாகத் தலையில் அணியாமல், நல்ல பருத்தித் துணியைத் தலையில் கட்டிய பிறகே அணிய வேண்டும். அப்படித் தலையில் கட்டும் துணியை, அடிக்கடி சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும். நீண்ட நாட்கள் துவைக்காமல் ஒரே துணியை பயன்படுத்தினால் வியர்வை, அழுக்கு சேர்ந்து தலை அரிக்கும்; பொடுகு வரும். ஹெல்மெட் பயன்படுத்துபவர்கள், வாரம் மூன்று முறை மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைக்குக் குளிப்பது நல்லது. வாரத்துக்கு இருமுறை, ஹெல்மெட்டைத் திருப்பி, உட்புறம் வெயிலில் படுமாறு ஒரு மணி நேரம் வைத்தால் உள்ளே கிருமிகள் தங்காது. அதேபோல ஒருவர் பயன்படுத்தும் ஹெல்மெட்டை மற்றொருவர் பயன்படுத்தக் கூடாது.

பொதுவாக மனிதர்களுக்கு தலைக்கனம் தேவையற்றது. தவிர்க்கப்பட வேண்டியது. ஆனால், இந்த ‘தலைக்கனம்’ நல்லது. எல்லோருக்கும் தேவையானது!

சட்டம் என்ன சொல்கிறது?

ஜூலை 1-ம் தேதி முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம். ஓட்டுபவர் மட்டுமல்ல, பின்புறம் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.அப்படி அணியவில்லை என்றால், ஓட்டுநர் உரிமம் மற்றும் வண்டியின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும். நல்ல தரமான ஹெல்மெட் வாங்கியதற்கான ரசீதைக் காண்பித்த பின்னரே, அவை திருப்பித் தரப்படும். மீண்டும், ஹெல்மெட் அணியாமல் இருந்தால், ஒட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.

கார் ஓட்டுபவர், சீட் பெல்ட் அணியாவிட்டால், 100 ரூபாய் அபராதம்.



எது நல்ல ஹெல்மெட்?

தலைக்கு மட்டும் அணியும் ஹெல்மெட் பாதுகாப்பற்றது. தாடைப் பகுதியையும் மறைக்கும் ஹெல்மெட்தான் சிறந்தது.

ஃபைபர், பாலிகார்பனேட் ஆகியவற்றால் தயாரிக்கப்படும் ஹெல்மெட்டின் உட்பகுதியில், ஃபைபர் கண்ணாடி, ஃபிட்டிங்க்ஸ், ஸ்குரூ போன்ற அனைத்தும் சரியாகப் பொருந்தியிருக்கும். ஒருவேளை தலையில் அடிபட்டாலும் இவை பாதுகாக்கும்.

ஃபைபர், வளைந்து கொடுக்கும் தன்மை உடையது. பாலிகார்பனேட் ஹெல்மெட்கள் திடமானவை. இவை இரண்டும் தலைப்பகுதியைப் பாதுகாக்கும்.

பெண்களுக்கு, ஆண்களுக்கு எனத் தனித் தனி ஹெல்மெட் கிடையாது. தலைக்குத்தான் ஹெல்மெட். ஆகையால் அழகு, நிறம், தோற்றம் போன்ற காரணங்களுக்காக, பாதுகாப்பில்லாத ஹெல்மெட்டைத் தேர்ந்தெடுப்பது தவறு.

ஐ.எஸ்.ஐ முத்திரை போலிகளிலும் அச்சிடப்பட்டுள்ளது. கடைகளில் விற்கப்படும் ஹெல்மெட்களை அணிந்துபார்த்து, அதன் உறுதித்தன்மையைப் பரிசோதித்த பி்றகு வாங்கலாம்.

கேப் வகை ஹெல்மெட், தலை மற்றும் காதுகளை மட்டும் பாதுகாக்கும் ஹெல்மெட், பிளாஸ்டிக் ஹெல்மெட் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது. இவை பாதுகாப்பானவை அல்ல.

இரவில் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது, கறுப்பு நிற ஹெல்மெட்களைவிடவும் ஃபுளோரசன்ட் நிற ஹெல்மெட்களே பாதுகாப்பானவை. இரவில், எதிரிலோ பின்புறமோ வேகமாக வரும் வண்டியோட்டிக்கு ஃபுளோரசன்ட் வண்ணம் நன்றாக கண்ணுக்குத் தெரியும் என்பதால், விபத்து தவிர்க்கப்படும்.

தலைக்காயத்தின் வகைகள்

எக்ஸ்ட்ராடியூரல் ஹெமடோமா (Extradural haematoma)

மூளைக்கும் மண்டை ஓட்டுக்கும் இடையில் இருப்பது மூளை உறை. விபத்தில் அடிபடும்போது மண்டை ஓடு உடைந்தால், மூளை உறையில் இருக்கும் ரத்தக் குழாய்களில் விரிசல் ஏற்பட்டு ரத்தம் கசியும். அளவுக்கு அதிகமாக ரத்தம் கசியும்போது, மூளையின் மீது அதிக அழுத்தம் ஏற்படும். இதனால், மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்கள் துண்டிக்கப்பட்டு, மூளை செயல் இழந்துவிடும். இதைத்தான் ‘மூளைச்சாவு’ என்கிறோம். பாதிப்பு ஏற்பட்ட சில மணி நேரங்களுக்குள் அறுவைச்சிகிச்சை செய்து மூளைக்குச் செல்லும் அழுத்தத்தைக் குறைக்காவிடில் உயிரிழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. ஹெல்மெட் அணியும்போது, மண்டை ஓட்டுக்கு ஏற்படும் பாதிப்பை அது தாங்கிக்கொள்ளும் என்பதால், இந்தப் பிரச்னையைத் தவிர்க்க முடியும்.

கூ அண்ட் கான்ட்ராகூ (Coup-Contrecoup Injury)

விபத்தில் சிக்கியவர்கள், பெரும்பாலும் இந்தக் காயத்தால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். விபத்தில் தலை வேகமாக ஒரு பொருளின் மீது மோதும்போது, அதன் தாக்கம் காரணமாக மூளையின் எதிர்புறம் பாதிக்கப்படும். அதாவது, மோதும்போது தலையின் முன்பக்கம் அடிபட்டால், பின்பக்க மூளை பாதிக்கப்படலாம். அடிபட்ட இடமும் அடிபடாத இடமும் சேர்ந்து, பாதிக்கப்படும் சிக்கலான காயம் இது.

டிப்ரஸ்டு ஃப்ராக்சர் (Depressed Fracture)

கூர்மையான பொருள் ஏதேனும் மண்டை ஒட்டைத் தாக்கினால், மண்டை ஓட்டின் எலும்புகள் நொறுங்கி, மூளையைக் குத்திக் கிழித்துவிடும். இதனால் மூளையில் சீழ் பிடிக்கும்.

மண்டை ஓடு சார்ந்த முறிவுகள் (Skull based fractures)

மண்டை ஓட்டின் அடிப்பகுதி உடைந்தால் மூளை உறை, மூளைத்தண்டு இரண்டும் கிழிந்து, மூளையில் சுரக்கும் செரப்ரோஸ்பைனல் (Cerebrospinal fluid) என்ற திரவம் மூக்கு, காது வழியாக ரத்தத்துடன் வெளியேறும். திரவம் மட்டுமின்றி காது, மூக்கு போன்றவற்றில் இருக்கும் அழுக்குகள்கூட மூளையைப் பாதித்து, மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும். இதற்கு உடனடி சிகிச்சை மிக முக்கியம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 02, 2015 1:12 pm

அவசியமான, அருமையான, இந்த நேரத்துக்கு தேவையான,நல்ல விரிவான பதிவு நேசன்..மிகக் நன்றி !................ சூப்பருங்க அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 02, 2015 3:32 pm

எப்படி வாங்க வேண்டும்?

ஹெல்மெட், நம் தலையோடு மிக இறுக்கமாகவும் இருக்கக் கூடாது; மிகத் தளர்வாகவும் இருக்கக் கூடாது. ஹெல்மெட் போட்டுக்கொண்ட பிறகு, தலையை இட வலமாக அசைத்துப் பாருங்கள். லேசாக நகர்ந்தால், அது உங்களுக்குச் சரியான ஹெல்மெட். அதிகமாக நகர்ந்தால், மிகவும் தளர்வாக இருக்கிறது என்று பொருள். காது கேட்க வேண்டும்; காற்று வர வேண்டும் என நீங்கள் தளர்வாக ஹெல்மெட் அணிந்தால், ஸ்பீடு பிரேக்கர்களில் ஹெல்மெட் திரும்ப வாய்ப்பு உண்டு. அதேபோல், இறுக்கமாகவும் இருக்கக் கூடாது. ஹெல்மெட் அணியும்போது, இரு பக்கமும் உள்ள ஸ்ட்ராப்புகளை நன்கு இழுத்து லாக் செய்ய வேண்டும். இதுதான் ஹெல்மெட் அணிய வேண்டிய சரியான முறை.
நல்ல வழிகாட்டல் இதையும் சேர்த்துக்கோங்க புன்னகை

நமது கைப்பேசியை காதுக்கும் ஹெல்மெட்டுக்கும் நடுவில் சொருகினால் கீழே விழாமல் அப்படியே பொருந்திக்கொள்ள வேண்டும்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 02, 2015 4:23 pm

நல்ல பதிவு தமிழ் பகிர்வுக்கு நன்றி புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Jul 02, 2015 8:33 pm

நல்ல பகிர்வு தமிழ் நேசன் . ஹெல்மெட் பற்றிய தகவல் களஞ்சியம் இது ...நன்றி ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? 103459460 ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? 3838410834 ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? 1571444738

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 02, 2015 9:14 pm

இன்றைய தலையாய பதிவு இதுதான் என்றால்  
மிகையில்லை ,தமிழ்நேசன் அவர்களே ! அன்பு மலர்  அன்பு மலர்

நன்றி ,அனைத்தும் அருமையான தகவல்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jul 02, 2015 11:17 pm

T.N.Balasubramanian wrote:இன்றைய தலையாய பதிவு இதுதான் என்றால்  
மிகையில்லை ,தமிழ்நேசன் அவர்களே ! அன்பு மலர்  அன்பு மலர்

நன்றி ,அனைத்தும் அருமையான தகவல்கள் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1149254

ஆமோதித்தல் ஆமோதித்தல்
நல்ல பதிவுக்கு நன்றியும் வாழ்த்துகளும்



ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Aஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Aஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Tஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Hஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Iஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Rஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Aஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? Empty
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Jul 03, 2015 9:43 am

ஹெல்மெட் ஸ்டார்ட்!



'படிக்கும் காலத்தில் ஏதாவது ஒரு சாதனையைச் செய்ய வேண்டும்’ என்ற துடிப்பு இருப்பது மாணவர்களுக்கு இயல்புதான். அதுவும் படிப்பு சார்ந்த புராஜெக்ட் என்றால், ஆலோசனைகளும் உதவியும் தாராளமாகக் கிடைக்கும். 'நம்முடைய கண்டுபிடிப்பு அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்’ என்ற முனைப்புடன் ஒரு ஹெல்மெட் உருவாக்கியுள்ளார், தூத்துக்குடி மாவட்டம் கோயில்பட்டி பி.எஸ்.ஆர் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் ஸ்ரீதர். இவர் ஒரு டிப்ளமோ மாணவர். பைக் திருட்டைத் தடுக்கும் நோக்கத்துடன் மட்டுமல்ல... ஹெல்மெட் அணிந்தால்தான் பைக்கே ஸ்டார்ட் ஆகும் வகையிலும் உருவாக்கியுள்ளார்.
ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ? P91
''பள்ளியில் படிக்கும்போதே சயின்ஸ்ல ரொம்ப இன்ட்ரஸ்ட். எட்டாவது படிக்கும்போது மெட்டல்ல
ரோபோ செஞ்சு, மாநில அளவுல நடந்த எக்ஸ்பிஷன்ல கலந்துகிட்டு மூணாவது இடத்தையும் 'இளம் விஞ்ஞானி’ விருதும் வாங்கினேன். டிப்ளமோ படிச்சுக்கிட்டு இருக்கும் போது, சாலைப் பாதுகாப்பு வாரம் பற்றிய செய்திக் குறிப்பை பேப்பர்ல படிச்சேன். ஹெல்மெட் போடாம நெறைய பேர் விபத்துல இறக்குறாங்கன்னு தெரிஞ்சதும், பைக் சம்பந்தமா ஏதாவது கண்டு பிடிக்கலான்னு நினைச்சதுதான் இந்த ஹெல்மெட் உருவாக்கக் காரணம்’' என்கிறார் ஸ்ரீதர். ஹெல்மெட் இயங்கும் விதம் பற்றிக் கூறும் போது, ''ஹெல்மெட்டின் பின்புறம் ஆர்.எஃப் டிரான்ஸ்மீட்டர், ஹெல்மெட்டுக்கு உள்பக்கம் டைட்டானிக் சுவிட்ச் பொருத்தியுள்ளேன். பைக்கின் சீட்டுக்குக் கீழே ஆர்.எஃப் ரிசீவர் இருக்கிறது. ஹெல்மெட்டைத் தலையில் பொருத்தியதும் தானாகவே ஆர்.எஃப் டிரான்ஸ் மீட்டரில் இருந்து ஆர்.எஃப் ரிசீவருக்கு சிக்னல் கிடைக்கும். உடனே 'ரிலே’ ஆன் ஆகிவிடும். பின்புதான் பைக் ஸ்டார்ட் ஆகும். ஹெல்மெட்டைக் கழற்றினால் பைக் ஆஃப் ஆகிவிடும்'' என்று விளக்கியவர், ''ஒவ்வொரு ஹெல்மெட்டுக்கும் தனித் தனி கோடிங் நம்பர் கொடுக்க முடியும். இதனால், அந்தந்த பைக்கின் ஹெல்மெட் அணிந்தால்தான் பைக் ஸ்டார்ட் ஆகும். இதனால், பைக் திருட்டையும் தடுக்க முடியும்'' என்றார்.

தற்போது கோவையில் எலெக்ட்ரானிக்ஸ் சாஃப்ட்வேர் சம்பந்தமான படிப்பை படித்துக் கொண்டு இருக்கும் ஸ்ரீதர், ''ராணுவத்துக்கு உதவுவது போன்ற ரோபோ உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கேன். எதிர்காலத்துல சயின்டிஸ்ட் ஆகணுங்கிறதுதான் என்னோட இலட்சியம்!'' என்கிறார் உறுதியான குரலில்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக