புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பில்லா , ரங்கா  Poll_c10பில்லா , ரங்கா  Poll_m10பில்லா , ரங்கா  Poll_c10 
165 Posts - 76%
heezulia
பில்லா , ரங்கா  Poll_c10பில்லா , ரங்கா  Poll_m10பில்லா , ரங்கா  Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
பில்லா , ரங்கா  Poll_c10பில்லா , ரங்கா  Poll_m10பில்லா , ரங்கா  Poll_c10 
9 Posts - 4%
prajai
பில்லா , ரங்கா  Poll_c10பில்லா , ரங்கா  Poll_m10பில்லா , ரங்கா  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பில்லா , ரங்கா  Poll_c10பில்லா , ரங்கா  Poll_m10பில்லா , ரங்கா  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பில்லா , ரங்கா  Poll_c10பில்லா , ரங்கா  Poll_m10பில்லா , ரங்கா  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
பில்லா , ரங்கா  Poll_c10பில்லா , ரங்கா  Poll_m10பில்லா , ரங்கா  Poll_c10 
2 Posts - 1%
Barushree
பில்லா , ரங்கா  Poll_c10பில்லா , ரங்கா  Poll_m10பில்லா , ரங்கா  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பில்லா , ரங்கா  Poll_c10பில்லா , ரங்கா  Poll_m10பில்லா , ரங்கா  Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
பில்லா , ரங்கா  Poll_c10பில்லா , ரங்கா  Poll_m10பில்லா , ரங்கா  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பில்லா , ரங்கா


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jul 13, 2015 7:27 pm

பக்கத்து ஊரில் நடைபெறும் ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக பரமசிவ முதலியார் கிளம்பினார். தன் வீட்டில் வேலை செய்யும் பில்லா, ரங்கா ஆகிய இரண்டு வேலையாட்களையும் துணைக்கு அழைத்துக்கொண்டார்.

முதலியார் ,வீட்டைப் பூட்டும் சமயத்தில் ரங்கா , முதலியாரைப் பார்த்து," ஐயா ! செல்போன், ATM கார்டு ஆகியவற்றை எடுத்துக் கொண்டீர்களா? சமயத்தில் உதவும்; கையோடு குடையையும் எடுத்துக் கொள்ளுங்கள் ! மழை வரும்போல இருக்கிறது." என்று சொன்னான்.

" சரியாகச் சொன்னாய் ரங்கா!" என்று சொல்லிவிட்டு , முதலியார் வீட்டினுள் சென்று செல்போன், ATM கார்டு,குடை ஆகியவற்றை எடுத்துக்கொண்டார். வீட்டைப் பூட்டிவிட்டு மூவரும் கிளம்பினர்.

பேருந்து நிலையம் அடைந்தனர்.

திடீரென முதலியாருக்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டது. வீட்டைச் சரியாகப் பூட்டவில்லையோ என்று சந்தேகப்பட்டார்.

" பில்லா !, ரங்கா ! வீட்டைச் சரியாகப் பூட்டினேனா இல்லையா என்ற சந்தேகம் வந்துவிட்டது. " என்றார் முதலியார்.

உடனே ரங்கா, " ஐயா ! கொஞ்சமும் கவலைப்படவேண்டாம். நீங்கள் வீட்டைப் பூட்டும்போது நான் கவனித்தேன்; சரியாகத்தான் பூட்டினீர்கள். பூட்டை நான் இழுத்துப் பார்த்தேன். எனவே சந்தேகம் வேண்டாம். " என்று சொன்னான்.

ஆனாலும் முதலியாருக்கு சந்தேகம் தீர்ந்தபாடில்லை. தயக்கத்துடன் நின்றுகொண்டு இருந்தார். உடனே ரங்கா,

" ஐயா ! சாவியைக் கொடுங்கள் ; வேண்டுமானால் தங்களுடைய திருப்திக்காக நான் போய் பார்த்துவிட்டு வருகிறேன். " என்று சொன்னான்.

ரங்காவை நம்பி வீட்டு சாவியைக் கொடுக்க முதலியார் தயங்கினார். ஆறு மாதங்களுக்கு முன்புதான் ரங்காவை , முதலியார் வீட்டு வேலைக்கு சேர்த்துக்கொண்டார். பில்லா அந்த வீட்டில் ஐந்து ஆண்டுகளாக வேலை செய்கிறான். ரங்காவை நம்பி வீட்டு சாவியைக் கொடுத்தால், அவன் வீட்டில் உள்ளதை எல்லாம் சுருட்டிக்கொண்டு கம்பி நீட்டிவிட்டால் என்ன செய்வது என்று யோசித்தார். உடனே பில்லாவைப் பார்த்து,

" பில்லா! நீ போய் பார்த்துவிட்டு வா ! " என்றார்.

" சரி ஐயா ! " என்று சொல்லிவிட்டு பில்லா கிளம்பினான். அவன் சிறிதுதூரம் சென்றவுடன் முதலியார்,

" முட்டாளே ! சாவி வாங்காமல் போகிறாயே ! பூட்டு சரியாகப் பூட்டாமல் இருந்தால் என்ன செய்வாய் ?" என்று கோபித்தார் முதலியார்.

" ஐயா ! மறந்துவிட்டேன். " என்று சொல்லித் தலையைச் சொறிந்தான் பில்லா.

பில்லா வீட்டை நெருங்கும் சமயத்தில் மழை பிடித்துக்கொண்டது. அருகிலிருந்த ஒரு மரத்தின் கீழே ஒதுங்கினான் பில்லா.

அப்போது அங்குவந்த வழிப்போக்கன் ஒருவன் பில்லாவைப் பார்த்து,

" தம்பி ! இது உங்க வீடா ? "என்று கேட்டான்.

" இல்லை ; என் முதலாளி வீடு. பஸ் ஸ்டாண்டில் முதலாளி காத்துக்கொண்டு இருக்கிறார். வீடு சரியாகப் பூட்டி இருக்கிறதா என்று என்னைப் பார்த்துவிட்டு வரச் சொன்னார். அதான் வந்தேன். அதற்குள் இப்படி மழை பிடித்துக்கொண்டது." என்றான் பில்லா.

உடனே வழிப்போக்கன்," அவ்வளவுதானே ! நீ இங்கேயே இரு தம்பி ! சாவியைக் கொடு. நான் போய் பார்த்துவிட்டு வருகிறேன். பூட்டாமல் இருந்தால் நான் போய் சரியாகப் பூட்டிவிட்டு வருகிறேன்; வீணாக நீ ஏன் மழையில் நனையவேண்டும் ?" என்று சொன்னான்.

உடனே பில்லா , வழிப்போக்கனிடம் சாவியைக் கொடுத்தான்.

சாவியை வாங்கிக்கொண்ட வழிப்போக்கன் வீட்டின் கதவருகில் சென்றான். பூட்டை இழுத்துப் பார்த்தான். சரியாகப் பூட்டி இருந்ததைக் கண்டான். உடனே சாவியைப் பூட்டில் செருகி பூட்டைத் திறந்தான். பூட்டைத் திறந்த நிலையில் வைத்துவிட்டு பில்லாவிடம் வந்து,

" தம்பி ! நீ இங்கு வந்தது நல்லதாப் போச்சு ! பூட்டு சரியாகப் பூட்டப்படாமல் இருந்தது. நான் சரியாகப் பூட்டிவிட்டேன்." என்று சொல்லி சாவியை பில்லாவிடம் கொடுத்தான்.

" ரொம்பவும் நன்றி ஐயா !" என்று சொல்லிவிட்டு பில்லா முதலியாரிடம் சென்றான். மழையும் விட்டிருந்தது.

பில்லாவைப் பார்த்த முதலியார், " என்ன பில்லா! வீடு பூட்டியிருந்ததா ?"

" இல்லை ஐயா ! பூட்டு சரியாக பூட்டப்படாமல் இருந்தது. "

" நான் நினைத்தது சரியாப் போச்சு. உன்னை அனுப்பினது நல்லதாப் போச்சு. இப்ப பூட்ட சரியாப் பூட்டுனியா ?"

" ஆம் ஐயா! சரியாகப் பூட்டிவிட்டான். "

" பூட்டிவிட்டானா ! அப்ப நீ பூட்டவில்லையா ?"

பில்லா நடந்ததைச் சொன்னவுடன், முதலியார் தீயை மிதித்தவர் போல ஆனார்.

" மூளையில்லா முண்டமே ! முன்பின் தெரியாத ஒருவனிடம் சாவியைக் கொடுத்து வீட்டைப் பூட்டச் சொல்லியிருக்கியே ! அவன் என்ன செஞ்சானோ ஏது செஞ்சானோ தெரியலையே " என்று பதறி அடித்துக்கொண்டு வீட்டை நோக்கி ஓடினார் முதலியார். அங்கே

வீடு திறந்துகிடந்தது. வீட்டின் உள்ளே நுழைந்த முதலியார் பீரோவைப் பார்த்தார். பீரோவிலிருந்த நகைகள், ரொக்கப் பணம் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டு சுத்தமாக துடைத்து வைக்கப்பட்டு இருந்தது.

' அய்யய்யோ ! எல்லாம் போச்சே ! ' என்று முதலியார் தலையில் அடித்துக்கொண்டார்.

குறள்:
=====

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும். ( தெரிந்து தெளிதல்-510 )


கருத்து:
=======
ஒருவனை ஆராயாது தெளிதலும், ஆராய்ந்து தெளிந்தவன் மாட்டு ஐயப்படுதலும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.




shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jul 14, 2015 11:19 pm

நல்ல கதை அய்யா . நன்றி . மகிழ்ச்சி மகிழ்ச்சி

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jul 15, 2015 8:22 am

ஷோபனா அவர்களின் பாராட்டுக்கு நன்றி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 15, 2015 5:43 pm

நல்ல கதை ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jul 15, 2015 6:43 pm

வீட்ட கொள்ளை அடிச்சதோட போனானே யாருக்காவது வித்திருந்தா அம்போதான்

இதுக்குத்தான் பூட்ட ஒழுங்கா வீட்டனும் ச்சே வீட்ட ஒழுங்கா பூட்டனும்



ஈகரை தமிழ் களஞ்சியம் பில்லா , ரங்கா  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 19, 2015 7:46 pm

balakarthik wrote:வீட்ட கொள்ளை அடிச்சதோட போனானே யாருக்காவது வித்திருந்தா அம்போதான்

இதுக்குத்தான் பூட்ட ஒழுங்கா வீட்டனும் ச்சே வீட்ட ஒழுங்கா பூட்டனும்
மேற்கோள் செய்த பதிவு: 1151171


சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jul 19, 2015 8:04 pm

ஷோபனா , கிருஷ்ணம்மா , பாலாகார்த்திக் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக