புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  Poll_c10கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  Poll_m10கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  Poll_c10 
90 Posts - 77%
heezulia
கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  Poll_c10கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  Poll_m10கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  Poll_c10கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  Poll_m10கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  Poll_c10கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  Poll_m10கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  Poll_c10கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  Poll_m10கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  Poll_c10கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  Poll_m10கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  Poll_c10கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  Poll_m10கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  Poll_c10 
255 Posts - 77%
heezulia
கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  Poll_c10கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  Poll_m10கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  Poll_c10கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  Poll_m10கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  Poll_c10கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  Poll_m10கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  Poll_c10 
8 Posts - 2%
prajai
கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  Poll_c10கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  Poll_m10கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  Poll_c10கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  Poll_m10கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  Poll_c10கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  Poll_m10கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  Poll_c10கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  Poll_m10கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  Poll_c10கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  Poll_m10கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  Poll_c10 
2 Posts - 1%
Barushree
கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  Poll_c10கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  Poll_m10கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 08, 2016 8:03 pm

கவிதா காத்திருக்கிறாள்.................

மோகனும் ராதாவும் கல்யாணம் ஆகி பல வருடங்கள் கழித்து  அழகான மகளை பெற்றார்கள். அவளுக்கு கவிதா என்று பெயர் சூட்டி சீரும் சிறப்புமாக வளர்த்து வந்தார்கள். மோகனின் வேலை காரணமாக அவர்கள் சென்னைக்கு  குடிவந்தனர். ராதாவால் ஒரு நிமிடம் கூட கவிதாவை விட்டு இருக்க முடியாது. அவள் உலகமே கவிதாதான். ஒரு இளவரசியாய் அவளை நினைத்து தலை இல் தூக்கி வைத்து ஆடினார்கள் இருவரும். அவளை பள்ளிக்கு அனுப்பக் கூட அவர்களுக்கு  கலக்கமாய் இருந்தது.

ஆனாலும், குழந்தையை பள்ளி இல் சேர்க்கணுமே. எனவே, கவிதாவை நல்ல பள்ளி இல் சேர்த்தனர். அவளும் நல்லாவே படித்தாள். தினமும் மோகன் அலுவலகத்தில் இருந்து வந்ததும் அவனுடைய வண்டி இல் கவிதாவை அழைத்துக்கொண்டு ஒரு ரவுண்டு அடிப்பான். அது கவிதாவுக்கு ரொம்ப பிடிக்கும். அதற்காகவே மாலை அவள் காத்திருப்பாள்.

இப்படியே காலம் நல்லபடி ஓடிக்கொண்டிருந்தது. கவிதாவுக்கு ஒரு 7 - 8 வயது இருக்கும்போது, அபூர்வமாய் மீண்டும் கருத்தரித்தாள் ராதா. மோகனும் ராதாவும் அடைந்த சந்தோஷத்துக்கு ஒரு அளவே இல்லை. டாக்டர் ராதாவை நிறைய ஓய்வு எடுக்க சொன்னதால் அவளால் முன் போல கவிதாவை பின்னே அலைய முடியவில்லை. இவர்களை அப்படியே விட்டு விட்டு அம்மாவின் வீட்டுக்கு போகவும் அவளுக்கு விருப்பம் இல்லை. எனவே, உதவிக்கு தன் அம்மாவை மற்றும் மாமியாரை மாற்றி மாற்றி அழைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தார்கள்.

பாட்டி வந்ததும் ரொம்ப சந்தோஷம் கவிதாவுக்கு. ஆனால் அதெல்லாம் கொஞ்ச நேரம் தான், இவள் அம்மாவிடம் மேலே விழுந்து கொஞ்ச முதலில் தடை விதித்தாள் பாட்டி.............." கவி, அம்மா தொப்பை இல் ஒரு குட்டிப் பாப்பா இருக்கு மா, நீ இப்படி மேலே விழுந்து தொந்தரவு செய்யக் கூடாது அம்மாவை, சரியா".............என்றாள்..............அது கவிதாவுக்கு முதல் அதிர்ச்சி...........'நாம் இங்கே தானே இருக்கோம், எப்படி ஒரு குட்டிப் பாப்பா அம்மா தொப்பைக்கு போச்சு?' என்று குழம்பினாள். அது பற்றி அம்மா தனக்கு எதுவும் சொல்லலையே என்று வருந்தினாள்.

இதுபத்தி அவளிடம் பேசவும் விரும்பினாள்.  ஆனால் ராதா  எப்பவும் படுத்தபடி இருந்தால், பாட்டி தான் எல்லா வேலையும் செய்தாள். கவிதா தன் அம்மாவிடம் போகும்போதே பாட்டியும் கிட்டே வந்துவிடுவாள். ராதா  கூட சொன்னாள், " அம்மா நீ ரொம்ப பயப்படுகிறாய் அம்மா, கவிதா அப்படி எல்லாம் என் மேலே ஏறமாட்டாள்....இல்லையா கண்ணு?" என்று கவிதாவையே கேட்டாள்.  

ஆமாம் என்று தலை ஆட்டுவதைத் தவிர வேறு வழி இல்லை கவிதாவுக்கு. என்றாலும் அவளுக்கு இப்போவே அந்த குட்டிப் பாப்பாவை  பிடிக்காமல் போக ஆரம்பித்துவிட்டது. நாளொரு மேனியும் பொழுது ஒரு வண்ணமாய் ராதாவின் கரு வளர்ந்து வந்தது.

படுத்துக்கொண்டிருந்தாலும், கவிதாவின்  வீட்டு பாடங்களை செய்ய ராதா உதவினாள். தன் அருகே இருத்திக்கொண்டு உணவருந்தக் செய்தாள். முடிந்தவரை கவிதாவை கவனித்துக்கொண்டாள். ஆனாலும் அம்மா முன் போல் இல்லை, தன்னை கவனிக்காமல் இருக்கிறாள் என்று தப்பாக நினைத்துக் கொண்டாள் கவிதா.

இப்போ கவிதா கொஞ்சம் பெரிய பெண் தானே புரிந்து கொள்வாள் என்று நினைத்து, சின்ன சின்ன வேலைகளை அவளை செய்யச் சொன்னாள் பாட்டி. இது மேலும் கவிதாவை வருத்தத்துக்கு ஆளாக்கியது. அம்மா தனக்கு எதுவுமே செய்வது இல்லை, பாட்டி தன்னையே வேலை வாங்குகிறாள் என்று வருந்தினால். தன் இளவரசி  பதவி பறி போவது போல உணர ஆரம்பித்தாள்.

ராதா தன் பெண்ணிடம் மாற்றங்களை ஒருவாறு உணர்ந்தாள், தன் அம்மாவிடம், " என்னம்மா இது, ஏதோ 2 , 3 வயது உள்ள குழந்தை என்றல் 'சவலை' வரும் தான் இவளுக்குத்தான் வயசு 8 ஆகப்போகிறதே, இப்பவும் இப்படி வருமா என்ன?" என்று கவலையாக கேட்டாள்.

அதற்கு அவள் அம்மா, அடி அசடே, அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை, நாளையே குழந்தையை பார்த்ததும் அவளே ஓடி வந்து கொஞ்சுவா பாரு.......... இத்தனை நாளாய் நீஅவளையே  சுத்தி சுத்தி வந்தாய்............. .இப்போ படுத்துக் கொண்டே  இருக்கிறாய், பாவம் குழந்தை பயந்து இருப்பாள் , அவ்வளவு தான். நீ தேவை இல்லாமல் மனதை அலட்டிக்காதே !" என்று சொல்லவே ராதாவும் பேசாமல் இருந்து விட்டாள் .

ஒரு சுபயோக சுபதினத்தில் ராதா அழகான ஆண் குழந்தையை பெற்று எடுத்தாள். எல்லோரும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினர் கவிதாவைத் தவிர. அவளுக்கு குழந்தையை துளிக் கூட பிடிக்கலை. தன் சந்தோஷத்துக்கு போட்டியாக நினைத்தாள். அம்மா அப்பாவுக்கும் தனக்கும் இடையே  முளைத்த காளான் போல எண்ணினாள்.

அப்பா அம்மா இருவரும் தம்பிப் பாப்பாவை கொண்டாடினார்கள். வந்தவர்கள் எல்லோரும் அவனையே தூக்கிக் கொண்டார்கள். இவளை அக்கா அக்கா என்று சொல்லி பெரிய மனிஷியாக  நடத்தினார்கள். இது கவிதாவுக்கு பெரும் வருத்தத்தை தந்தது. ஆனால் அதை கவனிக்கக் கூட யாருக்கும் நேரம் இல்லை.

இப்படியாக கொஞ்ச காலம் போச்சு, பாட்டி ஊருக்கு போய்விட்டாள். 'அப்பாடா ' என்று இருந்தது கவிதாவுக்கு. இனி அம்மா என்னை மட்டும் பார்த்துப்பாள் , பாட்டி தம்பி பாப்பாவை கொண்டு போய்விடுவாள் என்று நினைத்து விட்டாள். ஆனால் பாட்டி தான் மட்டுமே கிளம்பிப் போனாள்.

தொடரும் ......................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 08, 2016 8:04 pm

இவள் கேட்டாள், "அம்மா பாட்டி ஏன் தம்பி பாப்பாவை கூட்டிக் கொண்டு போகலை?" என்று. அதற்கு , 'இடி இடி' என்று சிரித்த ராதா," அவன் எங்கேடி போவான்? எதுக்கு போகணும்? நம் தம்பி டி நம்முடன் தான் இருப்பான், பாட்டி உதவிக்கு வந்தார்கள் அவ்வளவு தான்" என்றாள். அதைக் கேட்ட கவிதாவுக்கு தன் தலை மேல் எதுவோ விழுந்தது போல இருந்தது.

'என்னது இவன் இனி இங்கே தான் இருப்பனா?, அப்போ அம்மா அப்பா எனக்கு மட்டும் இல்லையா?, இவனுக்கும் சேர்த்து தானா?'என்றெல்லாம் நினைத்தாள்.

இந்த நினைவுகளால் படிப்பில் நாட்டம் குறைந்தது, முன்பு போல ராதாவால் இவளை மட்டுமே பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை. மோகனுக்கும் ஷிபிட் வேலை ஆனதால் மாலை வெளியே போவதும் குறைந்து கொண்டே வந்தது. என்றாவது முடிந்தால் தம்பி பாப்பா இப்போது உட்கார   ஆரம்பித்ததால் அவனும் வண்டி இல் வரத்தொடங்கிவிட்டான்.

ஒரு வாரமாகவே மழை பெய்துக் கொண்டே இருந்தது, அதனால் மாலை இல் வண்டி சவாரியும் இல்லாமல் போச்சு  குழந்தைகளுக்கு. கவிதாவுக்கு அந்த கவலை. ஆனால் ராதாவுக்கோ,  குழந்தைக்கு துணி காயலை, வாசலில் கறிகாய்கள் வரலை,  பாலுக்குக் கூட தட்டுப்பாடாக இருந்தது. இதெல்லாம் போறது என்று ராதாவுக்கு உடம்புக்கு முடியவே இல்லை..கொஞ்சம் சளியாக இருந்தது...ரொம்ப சோர்வாக உணர்ந்தாள். இன்று  கணவன் வந்ததும் கொஞ்சம் வெளி இல் போய் தேவையானவைகளை வாங்கி வர சொல்லணும் என்று நினைத்துக்கொண்டாள்.

இன்று மாலை வரும் போதே  கவிதா நனைந்த  படி வந்தாள்.  " என்னடி இது ,  கொஞ்சம் பொறுத்திருக்கக் கூடாதா, நான் தான் குடையுடன் வருகிறேனே " என்றாள். அவள் எதுவும் பேசாமல் டெஸ்ட் எழுதிய பேப்பரிக் காட்டினாள். அதைப் பார்த்ததும், ராதா கோபித்துக் கொண்டாள் கவிதாவை.  " என்ன கவிதா இது, ஏன் இப்படி செய்கிறாய், நான்தான்  சொல்லிக்கொடுத்தேனே இந்த கணக்கு, ஏன் தப்பாய் போட்டாய்?, வர வர உனக்கு புத்தி இங்கே இருப்பது இல்லை..இப்படி இருந்தால் மார்க் வராது மா.......படிப்பில் கவனம் வேண்டும் "......... என்றாள்.

'எல்லாம் இவனால் தான்' என்று , தம்பிப் பாப்பாவின் தலை இல் ஒரு தட்டு தட்டினாள் கவிதா. 'சட்' என்று என்ன செய்கிறோம் என்றே அறியாமல் ராதா , 'ஏய்' என்று பதறியவாறே கவிதாவின்  முதுகில் ஒரு அடி வைத்து விட்டாள். குழந்தையை பாய்ந்து தூக்கிக் கொண்டாள்.

'என்னடி  இது, குழந்தையை போய் அடிக்கிறாய்?...........என்ன புது பழக்கம், நீ படிக்காததற்கு  குழந்தை என்ன செய்வான்?" என்று சத்தம் போட்டாள். பயந்து போனாள் கவிதா, அம்மா இப்படி இவளிடம் கோபப் பட்டதே இல்லை.....இதற்கும் குட்டித் தம்பி  தான் காரணம் என்று , தன் வெறுப்பை அதிகரித்துக் கொண்டே போனாள் கவிதா.

அன்று மாலை அலுவலகத்தில் இருந்து வந்த மோகன் வண்டி இல் ரவுண்டு அடிக்க குழந்தைகளைக்  கூப்பிட்டான், ராதா. " நீங்கள் தம்பியை மட்டும் கூட்டிக்கொண்டு போங்கள் இவள் இங்கேயே இருக்கட்டும்" என்று சொல்லி விட்டாள். அவனும் மேற்கொண்டு ஏதும் கேட்காமல் குழந்தையை தூக்கிக் கொண்டு போனான். வண்டி இல் போகும்போது எங்கே கவிதா குழந்தையை ஏதும் செய்து விடுவாளோ என்று
ராதாக்கு பயமாய் இருந்தது, ஒவ்வொருவராய் ரவுண்டு அடிக்கட்டும் என்று எண்ணினாள்.

கவிதாவுக்கு என்ன பிரச்சனை என்று யோசித்தாள்.  சரி இரவு இது பத்தி மோகனிடம் பேசணும் என்று நினைத்துக்கொண்டே உள்ளே போகத் திரும்பினாள் . ஏதோ இடி இடித்தது போல சத்தம் வாசலில் இருந்து, அவ்வளவு தான் தெரியும், இவளும் கவிதாவும் உள்ளே வந்த தண்ணீரால் தூக்கி எறியப்பட்டார்கள். இருவரும் மேசை அருகே போய் விழுந்தனர்.

பதறிப்போனாள் ராதா, கவிதா, கவிதா, என்று அவளை பிடித்து உலுக்கி தூக்கிக் கொண்டாள். வெளியே ஓட வழி இல்லை, வாசல் வழியாகத்தான் தண்ணீர் உள்ளே வந்து கொண்டிருக்கிறது, அதன் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியலை, வெளி இல் சில நிமிடங்களுக்கு முன்னே சென்ற கணவனும் குழந்தையும் என்ன ஆனார்களோ என்று நினைத்து பயந்தாள்.

கவிதாவைத்  தூக்கிக்கொண்டு, மேசை  மேல் ஏறப் போனாள்; அது தண்ணீர் வேகத்தில் நகருகிறது ஏறமுடியவில்லை. தண்ணீர் லெவல் ஏறிக்கொண்டே வருகிறது. யோசித்தாள், குழந்தையை ஜன்னல் மேல் நிற்க வைத்தாள். 'கவிதா, ஒரு நிமிடம் கம்பியை கெட்டியாக பிடித்துக்கொண்டு இங்கேயே நில்லு , அம்மா இதோ வருகிறேன்' என்று சொல்லி குழந்தையை கட்டி அணைத்து முத்தமிட்டாள்.

கவிதா, பயத்துடன் ,'அம்மா!. என்ன ஆச்சு ?" என்று கேட்டாள்.............

"தெரியலை மா,..........இதோ அம்மா என்னவென்று  பார்க்கிறேன்"........என்று சொல்லி, ஏதாவது தெரிகிறதா என்று பார்த்தாள். எங்கும் எதுவும் புலப்படவில்லை, வெளிச்சமே இல்லை, இருட்டு தான்  எங்கும் நிறைந்து இருந்தது, ஒரே  கூக்குரல்கள் , 'காப்பாத்துங்க, காப்பாத்துங்க' என்று................

இவளுக்கு என்ன செய்வது என்று தெரியலை, இப்போ இடுப்பளவு தண்ணீர் இருந்தது, கொஞ்சம் யோசித்தாள், கையைத்தூக்கி, மேலே  இருந்த கொடி கையிற்றை   அவிழ்த்தாள்.. ...ஜன்னலின் அருகே மகளிடம் போய் நின்று கொண்டு, " கண்ணு, மழையால் ஏதோ ஏரி உடைத்துக்கொண்டது என்று நினைக்கிறேன், அது தான் இவ்வளவு தண்ணி, நாம் இப்போ இங்கேயே இந்த கம்பியை  பிடித்துக்கொண்டு நிற்கலாம், தண்ணி ஏற ஏற நீ என் தோளின் மேலே ஏறி  நின்னுக்கோ, நாமளும் காப்பாத்துங்க என்று கத்தலாம், யாராவது வருவாங்க. சரியா? .....பயப்படாதே " என்று சொன்னாள்.

சொன்ன வண்ணமே செய்தாள். தண்ணீர், ராதாவின்  மார்பளவு வந்து விட்டது. இப்போது ராதாவுக்கு நிஜமாகவே பயம் வந்து விட்டது. இன்னும் தலைக்கு மேல் வர எவ்வளவு நேரம் ஆகப் போகிறது?...........அப்புறம்?.......

இந்த நினைவு வந்ததும், தன் பெண்ணை , " கவிதா கண்ணு, நான் இத்தனை நேரம் காப்பாத்துங்க காப்பாத்துங்க என்று கத்திக்கொண்டிருக்கேன் இல்லியா, எப்போ என் வாய் வரை தண்ணி வந்து விட்டதோ அப்போ அம்மாவால் கத்தமுடியாது தானே, எனவே , எப்போ என் குரல் கேட்கலையோ, என் வாய் வரை தண்ணீர் வந்து விட்டதோ நான் உன் கால்களை கெட்டியாக ப்டித்துக்கறேன், அது முதல் நீ காப்பாத்துங்க காப்பாத்துங்க என்று இடைவெளி விட்டு கத்திக்கொண்டே இரு, யாராவது அதைக் கேட்டு நம்மை காப்பாத்துவாங்க" என்றாள்.

இப்போது தான் முதன் முதலாய் வாய் திறந்து, "அம்மா, அப்பாவும் பாப்பாவும் எங்கேமா?"என்று கேட்டாள் கவிதா.  அவளை துக்கத்துடன் அணைத்துக்கொண்ட ராதா சொன்னாள், "அவங்க எங்காவது   ஒதுங்கி இருப்பாங்க கவிதா, அப்பாவிடம் தான் வண்டி இருக்குதே, தண்ணியை தாண்டி ஓடி போய் இருப்பாங்க "...........என்றாள்.....".நாம் அவங்களுக்காக காத்திருக்கலாம், தண்ணீர் வடிந்ததும் வந்து விடுவார்கள்".என்று சொன்னாள்.

இப்படி சொல்லி, தன் மகளைத் தன் தோள்கள் மேல் ஏற்றி நிற்க வைத்தாள். தன்னை ஜன்னளுடன் இருக்க கட்டிக்கொண்டாள். எக்காரணம்  கொண்டும் கிழே இறங்காமல் கம்பிகளை பிடித்தவண்ணம் இருக்க சொன்னாள் மகளிடம்.

ஆச்சு, கொஞ்சம் கொஞ்சமாய் தண்ணீர் ஏறி ஏறி ராதா மூழ்கிவிட்டாள்.....முழுகும் நேரம் அவள் தன் மகளின் காலை இறுக பற்றிக்கொண்டாள்.  இந்த  சைகை முலம் அம்மா தண்ணீருக்குள் மூழ்கிவிட்டாள் என்று புரிந்து கொண்டு, தான் கத்த ஆரம்பித்தாள் கவிதா.

எவ்வளவு நேரம் கத்தினாளோ  தெரியலை, யாரோ சிலர் வரும் ஓசை கேட்டது, அவர்கள் வந்து இவளை தூக்கிக்கொண்டு சென்றனர்.......அம்மாவையும் துக்கிக் கொண்டு வந்தனர். ஆனால் என்ன இது அம்மாக்கு என்ன ஆச்சு? , கவிதா பல முறை உலுக்கியும் ராதா அசைவற்றுக் கிடந்தாள்.

பார்த்த அனைவரும் கண் கலங்கினர். " பாவம் அந்த அம்மா  , குழந்தையாவது உயிரோட  இருக்கட்டும் என்று தன் மேலே ஏத்தி நிற்க வெச்சிருக்காங்க  பாரேன்" என்று யாரோ சொன்னது கவிதாவின் காதில் விழுந்தது, அப்போது தான் இவளுக்கு லேசாக புரிந்தது போல இருந்தது. ஒ.........தண்ணி இல் முழுகுவது என்றால், இப்படி இறந்து போவதா?............திரும்ப வரமாட்டாளா அம்மா? ........... இந்த அம்மாவைப் போய் தன் மேல் அன்பு குறைந்து விட்டது என்று கோபித்துக்கொண்டேனே என்று நினைத்தாள்.

அவளை அறியாமல் அவள் கண்களில் இருந்து கண்ணீர்  வந்தது......யாரோ கேட்டனர், "பாப்பா, உங்க வீட்டில்  வேற யாராவது இருக்காங்களா?"  என்று...இவள் சொன்னாள், " அப்பாவும் தம்பி பாப்பாவும் வெளியே போனாங்க" என்று ............சரி என்று அவளை பாதுகாப்பாக ஒரு மண்டபத்தில் கொண்டு விட்டனர்.

அங்கு அப்பாவையும் தம்பி பாப்பாவையும் காணாமல் தேடினாள் கவிதா. பக்கத்தில் இருப்பவரைக் கேட்டாள், அவர் இவளை பரிதாபமாக பார்த்து, காத்துக்கொண்டு இரும்மா , வந்து விடுவார்கள்" என்று சொன்னார்.............அது தான் , அவர்களுக்காக, '......எந்த தம்பி வேண்டவே வேண்டாம்   என்று இருந்தாளோ அவனுக்காகவே இப்போ, 'கவிதா காத்திருக்கிறாள்'.

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Feb 08, 2016 9:56 pm

சோகமான முடிவு அம்மா. ராதா இறந்து விட்டது கஷ்டமாக இருக்கிறது. ஆனால் கதைஅருமை. விவரம் தெரிந்த பிறகு தாயனால் இது போல் சங்கடங்கள் ஏற்படும். 
குழந்தைக்கான இடைவெளி மூன்று வருடங்கள்.
சசி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சசி



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 08, 2016 11:54 pm

நன்றி சசி புன்னகை........ நன்றி அன்பு மலர் அன்பு மலர் ...........
.
.
.
இங்கு ஒரு பின்னூட்டம்   வருவதற்குள் , இத கதையை எடுத்து தன்னுடைய தளத்தில் ஒருவர் போட்டுக்கொண்டு இருக்கிறார் சோகம்..................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Feb 09, 2016 7:36 pm

கதை அருமை அம்மா ....

மிகவும் உருக்கமான கதை .... சோகம் சோகம்



மெய்பொருள் காண்பது அறிவு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 10, 2016 10:03 am

K.Senthil kumar wrote:கதை அருமை அம்மா ....

மிகவும் உருக்கமான கதை .... சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1192781

மிக்க நன்றி செந்தில் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 10, 2016 3:27 pm

உருக்கமான கதைமா பகிர்வுக்கு நன்றீ



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 10, 2016 6:45 pm

ஜாஹீதாபானு wrote:உருக்கமான கதைமா பகிர்வுக்கு நன்றீ
மேற்கோள் செய்த பதிவு: 1192918

மிக்க நன்றி பானு புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Feb 10, 2016 6:50 pm

அழுகை அழுகை அழுகை அழுகை  கதை அழவைத்துவிட்டது கிருஷ்ணாம்மா. அருமை!



கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 10, 2016 7:01 pm

விமந்தனி wrote:அழுகை அழுகை அழுகை அழுகை  கதை அழவைத்துவிட்டது கிருஷ்ணாம்மா. அருமை!
மேற்கோள் செய்த பதிவு: 1192956

சோகம்... நன்றி விமந்தினி !.. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக