ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்….

+12
உமா
கோவை. மு. சரளா
அப்புகுட்டி
megastar
அருண்
gunashan
தாமு
sham
அபிராமிவேலூ
sathy
மீனு
balakarthik
16 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 4 Empty ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்….

Post by balakarthik Thu Nov 12, 2009 12:35 pm

First topic message reminder :

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருக்கிறாள் என்பதே உண்மை. இந்த கேள்விக்கு இன்னொரு எதிர் கேள்வி கேட்டால் உங்களின் சந்தேகத்திற்கு விடை கிடைக்க வாய்ப்புண்டு என்று எண்ணுகிறேன். பெண்களின் வெற்றிக்கு எந்த ஆணாவது உதவி புரிந்திருக்கின்றானா? அவளை வெற்றியடையவைத்து எந்த ஆணாவது சந்தோஷப்பட்டிருக்கின்றானா ?. பெண்கள் வென்றுவிட்டால் தன்னுடைய மானமே போய்விட்டதாக கருதும் ஆண் இனத்தால் பெண்களின் வெற்றியை எவ்வாறு பொறுத்துக்கொள்ள இயலும்? பெண்கள் ஆண்களை வென்றுவிடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு பெண்களின் தோல்விக்கு வழிவகுக்கும் ஆண்களை நான் கண்டிருக்கிறேன். பெண்ணின் வெற்றியை சகித்துக்கொள்ள முடியாதவர்கள் ஆண்கள். பெண்களுக்கு திறமை இருக்க கூடாதா?. எத்தனை பெண் சங்கீத கலைஞர்கள், பெண் நடனக்கலைஞர்கள் அவர்களின் அற்புதமான கலைகளை தங்களின் திருமணத்திற்கு பிறகு துறக்க வேண்டி வந்திருக்கிறது என்பதை நினைக்கும்போது என் நெஞ்சம் பதைக்கிறது. அவர்கள் செய்த தவறு என்ன? திருமணம் செய்துகொண்டதா? எதற்காக அவர்களின் கலையை திருமணத்திற்கு பிறகு துறக்கவேண்டும். அவர்கள் கற்றுக்கொண்ட கலை அவர்களோடு அழிந்துபோக வேண்டுமா? இதற்கெல்லாம் காரணம் என்ன? ஆணாதிக்கம்.

இந்நிலையிலும் பெண் என்பவள், தான் சார்திருக்கும் ஆணின் வெற்றியை தான் அடையும் வெற்றியாக கருதி அவனின் ஒவ்வொரு முயற்சியிலும் அவனோடு கூடவே நிற்கிறாள். அப்படி செய்வது அவளின் இயலாமையால் அல்ல. மாறாக அவன் மீதுகொண்ட அன்பினால். அதுபோன்ற பெண்கள் ஆண்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து அவனை ஊக்குவித்து உறுதுணையாக இருந்து சிறப்பான வெற்றிகளை அடைய வழிவகுக்கிறார்கள். அதனாலயே ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்ற கருத்தை ஆண்களே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப்பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள். அவள் அவனது சகோதரியாக இருக்கலாம், தோழியாக இருக்கலாம், காதலியாக இருக்கலாம், துணைவியாக இருக்கலாம் அல்லது தனது தாயாக இருக்கலாம்.

சகோதரியின் அன்பு, தோழியின் அரவணைப்பு, துணைவியின் காதல், தாயின் பாசம், இந்த ஈடு இணையில்லா அன்பு ஒரு பெண்ணிடமிருந்தே ஆணுக்கு கிடைக்கிறது. அவளால் மட்டுமே அத்தகைய அன்பை பொழிய முடியும். தோல்வி அடைந்த ஒரு ஆணின் இதயத்திற்கு காதலியின் மார்பும், தாயின் மடியும் கொடுக்கும் ஆறுதலை உலகில் இருக்கும் வேறு எந்த பொருளாலும் கொடுக்க இயலாது. ஒரு பெண்ணால் ஆணின் இரும்பாலான இதயத்தை உடைக்கவும் முடியும், அவனின் உடைந்தபோன இதயத்தை உயிர்ப்பிக்கவும் முடியும். தோல்வியால் துவண்ட ஒருவனை நிலைநிறுத்தி அவனுக்கு ஊக்கம் அளித்து களத்தில் இறக்கி வெற்றியடையச் செய்ய ஒரு பெண்ணால் முடியும்.

"காரிகைகள் கண்ணசைத்தால் மாமலையும் சிறு கடுகாம்" என்று கூறினானே பாவேந்தர் பாரதிதாசன். இந்த வார்த்தையை அவன் கவிதைக்காக சொல்லவில்லை. அது வாழ்கையின் உண்மை. காதலி ஊக்கப்படுத்தினால் காதலனால் ஒரு பெரிய மலையை கூட சிறிய கடுகை தூக்குவது போன்று பெயர்த்து எடுக்க முடியும் என்பதை அப்பெரும் கவிஞனே ஒப்புக்கொண்டு விட்டான். இது அந்த காதல் அவனுக்கு கொடுக்கும் சக்தி. இந்த சக்தியை ஒரு பெண்ணால் மட்டுமே அவனுக்கு வழங்க முடியும்.

பெண்கள் ஏதோ திறமை இல்லாதவர்கள், அவர்கள் ஆண்களை அண்டி பிழைத்து வாழ்பவர்கள் பெண்கள் என்றெல்லாம் தயவுசெய்து எண்ணிவிடாதீர்கள். ஆண்களின் அறிவிற்கும் திறமைக்கும் சற்றும் குறைவில்லாதது பெண்களின் அறிவும் ஆற்றலும். இந்த இயற்கையே பெண் இனத்தை நம்பித்தான் இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். பெண்ணே சக்தி. அவள் இல்லையென்றால் இந்த உலகம் இல்லை. நான் இப்படி சொல்வதை ஒரு சராசரி ஆணால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆண் தன்னுடைய கர்வத்தை விட்டு சிந்திப்பானேயானால் இந்த உண்மையை அவனால் புரிந்துக்கொள்ள முடியும். வாழ்வில் வெற்றி பெற்ற ஆண்களை தேடி அவர்கள் பின்னால் நிற்க்கின்றார்கள் பெண்கள் என்று கொஞ்சம் கூட நாகூசாமல் ஆண்களால் எப்படி பேசமுடிகிறது என்று தெரியவில்லை. ஒரு பெண்ணாள் தன்னுடைய ஈகோ-வை விட்டு ஆணின் பின்னால் நின்று வாழ முடியும். அவளுக்கு வேண்டியதெல்லாம் அவனுடையே அன்பு மட்டுமே. அது கிடைத்துவிட்டால் போதும் அவளுக்கு. தனக்கென்று கர்வம் ஏதும் இல்லாமல் அவன் பின்னால் ஆயுள் முழுதும் நிற்ப்பாள் பெண். ஆனால் ஒரு ஆணால் தன் EGO-வை விட்டு ஒரு பெண்ணின் பின்னால் நிற்கமுடியுமா? நிச்சயமாக முடியாது. அவனுடைய கவுரவமும் அவனது கர்வமும் தடுக்கும். ஏனென்றால் அவனுக்கு அவனது அன்பைவிட கவுரவம் முக்கியம்.. ஒரு பெண் ஆணின் பின் நிற்பது அவன் அவளுக்கு போடும் சோற்றுக்காகவோ அல்லது அவன் அவளுக்காக செலவழிக்கும் பணத்திற்காகவோ இல்லை என்பதை ஆண்கள் புரிந்துக்கொள்ளவேண்டும் . அவன் பின்னால் அவள் நிற்பது அவன் மீதுகொண்ட அழியா அன்பினால் மட்டுமே. இதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும் ஆண்கள். தயவுசெய்து அந்தஅன்பை கொச்சை படுத்தாதீர்கள். அத்தகைய அன்பை ஆண்களால் புரிந்துகொள்ள இயலாது. அவ்வன்பை புரிந்துகொள்ள இயலாமல் போனது ஆண்களின் துரதிர்ஷ்டம்.

ஆண்கள் செய்யும் அத்துணை வேலைகளையும் பெண்களாலும் செய்ய இயலும். ஆனால் ஒரு குழந்தையை தன் வயிற்றில் சுமந்து தன் சுகங்களை எல்லாம் தாரைவார்த்து ஒரு ஆணுக்கு பிள்ளை பெற்று கொடுக்கின்றாளே பெண், அந்த ஒரு செயலுக்காக ஒவ்வொரு ஆணும் அவளை தெய்வமாக கருதவேண்டும் . தன் வயிற்றில் ஒரு கரு வளர்வதாக ஆண் கற்ப்பனை செய்து பார்க்கமுடியுமா? பைத்தியம் பிடித்துவிடும் அவனுக்கு. பெண்ணின் உண்ணதத்தை ஆண்கள் உணர்ந்துகொள்ள மறுப்பது ஏன்? தான் சிறுமை ஆகிவிடுவோம் என்பதாலா?

எந்தப்பெண்ணாவது படிப்பில் குறைவாக பணத்தில் ஏழையாக வாழ்வில் கோழையாக இருக்கும் எந்த ஆண் பின்னாலாவது நின்று அவனை வாழ்வில் உயர்த்தியதாக சரித்திரம் உண்டா? என்று ஆண்கள் கேட்கிறார்கள். இந்த கேள்விக்கான என்னுடய பதில் இனிவரும் கேள்விகளே. படிப்பில் குறைவாக பணத்தில் ஏழையாக இருக்கும் ஆண்களுக்கு திருமணம் நடப்பதில்லையா? அல்லது அவர்களின் வாழ்வில் காதல் என்ற அனுபவமே வருவதில்லையா? ஆண்கள் படிப்பில் குறைவாக பணத்தில் ஏழையாக இருக்கலாம். அவர்களை பெண்கள் ஏற்றுக்கொள்ளத்தான் செய்கிறார்கள். ஆனால் கோழைகளை பெண்கள் விரும்பவேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்கிறார்களே. இது எந்தவகையில் நியாயம்? . ஒரு ஆண் நிலையிலிருந்து இது பற்றி சிந்தித்தால் இதற்க்கு பதில் கிடைப்பது அரிது. ஒரு பெண்ணின் நிலையிலிருந்து யோசித்துப் பாருங்கள். அறிவுள்ள யாரும் ஒரு கோழையை விரும்புவதில்லை. பெண்களுக்கு அறிவு இருக்க கூடாதென்று எதிர்பார்கிறார்களா ஆண்கள்? பெண்ணுக்கு பாதுகாப்பு அவசியம். ஒரு பெண்ணை ஆணிடமிருந்து காப்பாற்ற இன்னொரு ஆணால் மட்டுமே முடியும். இந்த அடிப்படை விஷயத்தை மறந்துவிட்டு தனது பாதுகாப்பிற்கு உலை வைத்துக்கொல்லும்படியாக பெண்கள் கோழைகளை விரும்பமுடியுமா? பெண்கள் சிந்திக்க கூடாதா?.. ஆனால், அப்படி இருந்தும், கோழையை மணந்துகொண்டு வாழ்கை நடத்தும் பெண்களும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அக்கோழைகளை வாழ்கையில் சோபிக்க செய்கிறார்கள் அவகளது துணைவியர். இவையெல்லாம் பெண்களை குறைசொல்லும் ஆண்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

ஒரு ஆணிடம் ஏற்கனவெ எதாவது ஓர் திறமை இருந்திருக்கலாம். ஆனால் அவனுக்கு சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்து இருக்காது. எப்போது ஒரு பெண்ணை பார்கின்றானோ அப்போது அவளின் மனதை வெற்றிகொள்வதற்க்காக அவன் தனது முழு திறமைகளையும் உபயோகித்து வெற்றி அடைகின்றான் என்று ஆணின் சிறப்பு பேசுகிறார்கள். இந்த வாக்கியத்திலேயே இருக்கிறது அதற்கான பதில். விறகுக்கு எரியும் சக்தி இருந்தாலும் அதனை பற்றவைக்க ஒரு தீக்குச்சி தேவைபடுகிறது. இந்த சிறிய தீக்குச்சி இல்லையென்றால் அவவிறகினால் பயனுண்டா? அவ்விறகு என்னத்தை சாதித்துவிடமுடியும் என்று நினைக்கிறீர்கள்?. பெண் என்பவள் தீக்குச்சியாக இருந்து செயல்படுகிறாள் என்பதை ஆண்கள் இதிலிருந்தே புரிந்துகொள்ளவேண்டும்.

பெண் இருந்தால் அங்கு காதல் இருக்கும். காதல் இருந்தால் அதில் வெற்றியும் இருக்கும் தோல்வியும் இருக்கும். இதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். காதல் தோல்விக்கு பெண்கள் மட்டும்தான் காரணமா? பெண்ணின் பெற்றோர்கள் காரணமாக இருக்கலாம், அல்லது அவளது சூழ்நிலை அவளது காதலை நிறைவேறாமல் பண்ணி இருக்கலாம். ஒரு ஆண் கண்ணீர் சிந்துகிறான் என்று இவ்வளவு கரிசனம் கொள்ளும் ஆண்கள், இதே காதல் தோல்வியால் கண்ணீர் வடிக்கும் பெண்களை பற்றி பேச மறுக்கிறார்களே ஏன்?. ஆண்களால் ஏமாற்றப்பட்டு தன் வாழ்வை இழந்து தெருவில் நிற்கும் பெண்களுக்கு இவர்கள் சொல்லும் பதில் என்ன? ஆண் வெளியில் சொல்லி அழுகிறான். அவனது வேதனை வெளியில் தெரிகிறது. வெளியில் சொல்லமுடியாமல் தன் சோகத்தை மனசுக்குள்ளேயே பூட்டி கண்ணீர் வடிக்கிறாளே பெண் , அந்த பாவத்தை யார் சுமப்பார்கள்? ஒரு ஆணாக இருந்து பெண்களை பற்றி பேசாதீர்கள்.. ஒரு பெண்ணாக இருந்து எண்ணிப்பாருங்கள்..அப்போது புரியும் அவர்களின் கஷ்டம் என்னவென்று.

தாயிற்சிறந்த கோவில் இல்லை
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
மாதா பிதா குரு இம்மூவரும் தெய்வத்திற்கு சமம்
ஒரு குழந்தையின் முதல் ஆசான் அதன் தாய்
தாய் சொல்லை தட்டாதே
இல்லாள் அகத்திருக்க இல்லாததொன்ருமில்லை
மனைவி ஒரு மந்திரி
மனைவி சொல்லே மந்திரம்

என்று பெண் பெருமை பேசிவிட்டு ... அவள் துவைத்துக்கொடுத்த துணி உடுத்தி, அவள் செய்த உணவை சாப்பிட்டு ...இப்படி வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் ஏதாவது ஒரு பெண்ணை சார்ந்து இருந்து அவளின் அன்பு, வழிகாட்டுதல், உழைப்பு இவற்றை அனுபவித்துவிட்டு, இன்று வெற்றி வந்தவுடன் அது என்னவோ தன்னால் மட்டுமே நடந்தேறியது என்று மார்தட்டி கொண்டு இவ்வெற்றியில் பெண்களின் பங்கு ஒன்றுமே இல்லை என்று காட்ட முனைவது எந்தவகையில் நியாயம்?



மாதர் தம்மை இழிவுபடுத்தும்
மடமையை கொளுத்துவோம்
-- பாரதியார்

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 4 539w
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 4 KnGATES_wideweb__470x358,0
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 4 2008-9-22-1-35-46-31cb853e65a54d6380c8aaed35b83577-31cb853e65a54d6380c8aaed35b83577-2
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 4 LATHA
balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 4 Empty Re: ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்….

Post by balakarthik Sat Aug 07, 2010 11:44 am

ரபீக் wrote:அருமையான் அக்கட்டுரையை பகிர்ந்தமைக்கு முத்தம் முத்தம்

நன்றி நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum