ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள அப்பா..!

+6
மாணிக்கம் நடேசன்
rajaalways
T.N.Balasubramanian
விமந்தனி
ssgeegarai
bparthasarathi
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அன்புள்ள அப்பா..! - Page 2 Empty அன்புள்ள அப்பா..!

Post by bparthasarathi Sun Jun 21, 2015 9:48 pm

First topic message reminder :

அன்புள்ள அப்பா..!

அன்புள்ள அப்பா..! - Page 2 MH8B664gQwuiNxSXMFVD+appa


எந்தையே என்றும்
நீர் எமக்கு விந்தையே..!
உம்மை எண்ணியே
நிற்கிறது எம் சிந்தையே..!

எம் தந்தையே...
எமக்காக நீர் பட்ட பாடு...
அப்பப்பா...
காண்கையில்
எம் கண்கள் பனித்தது;
என்னை கடமை செய்ய பணித்தது..!

வாழ்க்கைக்கு நீர் ஆதாரம்...
ஆம்!
எம் வாழ்க்கைக்கு நீர் ஆதாரம்..!

நீவிரறியா உலகை
எமக்கு காட்டினீர்...
தோளிலேற்றி யல்ல‌
நும் தலையிலேற்றி..!

இன்று உருவாய்
நீவிரில்லை எம் அருகில்..
ஆயினும்...
எம்மோடே நீவிர் இருப்பதாய்,
வசிப்பதாய்,வாழ்த்துவதாய் உணருகிறோம்...
அவ்வெண்ணத்திலேயே
எம் பயணம் தொடர்கிறது...

உம் எண்ணங்களை
அன்றன்றி இன்றும்...
இன்னும் அதிகமாய் சுவாசிக்கிறோம்...

என்றும் நும் சிரந்தாழ்ந்ததில்லை
நானறிவேன்...
யாமும் அதை காத்திடுவோம்
நும் வழியில்...

‍‍என்றும் மாறா அன்புடன்,
உங்கள் மகன்,
பா.பார்த்தசாரதி,
bparthasarathi
bparthasarathi
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 26/11/2010

Back to top Go down


அன்புள்ள அப்பா..! - Page 2 Empty Re: அன்புள்ள அப்பா..!

Post by bparthasarathi Mon Jun 22, 2015 10:28 pm

மிக்க நன்றி..!

-பா.பார்த்தசாரதி,
bparthasarathi
bparthasarathi
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 26/11/2010

Back to top Go down

அன்புள்ள அப்பா..! - Page 2 Empty Re: அன்புள்ள அப்பா..!

Post by bparthasarathi Tue Jun 23, 2015 8:40 pm


சிங்கம் என்றால் என் தந்தைதான்
செல்லம் என்றால் என் தந்தைதான்
கண் தூங்கினால் துயில் நீங்கினால்
எம் தந்தைதான் என் தந்தைதான்
எல்லோருக்கும் அவர் விந்தைதான்

விண் மீன்கள் கடன் கேட்கும் அவர் கண்ணிலே
வேல் வந்து விளையாடும் அவர் சொல்லிலே
அவர் கொண்ட புகழ் எங்கள் குலம் தாங்குமே
அவர் பேரை சொன்னாலே பகை நீங்குமே
அழியாத உயிர் கொண்ட எம் தந்தையே
அழியாத உயிர் கொண்ட என் தந்தையே
ஆண் வடிவில் நீ என்றும் எம் அன்னையே

வீரத்தின் மகன் என்று விழி சொல்லுமே
வேழத்தின் இனம் என்று நடை சொல்லுமே
நிலையான மனிதன் என பேர் சொல்லுமே
நீதானே அசல் என்று ஊர் சொல்லுமே
உன் போல சிலர் இன்று உருவாகலாம்
உன் உடல் கொண்ட அசைவுக்கு நிகராகுமா

எப்போதும் தோற்காது உன் சேனை தான்
இருந்தாலும் இறந்தாலும் நீ யானைத்தான்
கண்டங்கள் அரசாளும் கலைமூர்த்தி தான்
கடல் தாண்டி பொருள் ஈட்டும் உன் கீர்த்திதான்
தலைமுறைகள் கழிந்தாலும் உன் பேச்சு தான்
தந்தை எனும் மந்திரமே என் மூச்சுதான்

-அசல் திரைப்படத்திலிருந்து...
bparthasarathi
bparthasarathi
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 26/11/2010

Back to top Go down

அன்புள்ள அப்பா..! - Page 2 Empty Re: அன்புள்ள அப்பா..!

Post by bparthasarathi Tue Jun 23, 2015 8:50 pm


அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன் போல் இல்லை
மண் மேலே

அன்புள்ள அப்பா அப்பா…

அன்புள்ள அப்பா அப்பா
தாயையும் உன்னில் கண்டேன்
அன்பிலே

எனக்கெது தேவை
உலகிலே
கொடுத்திடுவாய் நீ
முதலிலே

வேண்டாமலும் தரும் தெய்வம்
நீ தானே உண்மையிலேயே

அன்புள்ள அப்பா அப்பா…

மாதக் கணக்கில்
தாயும் சுமந்து
வந்தது தான்
இவனது உயிரே

காலம் முழுக்க
என்னை சுமந்து
காத்திருக்கும் உனக்கு
இல்லை நிகரே

தூசி என்னை தொடவும்
விட மாட்டாய்
தோளில் என்னை சுமந்தே
நடை போட்டாய்
வந்தாயே நீ
என் வரமாய்

அன்புள்ள அப்பா அப்பா…

தோழனென நீ
தோளும் கொடுத்து
தோல்விகளை ஜெயித்திட
வருவாய்

சோகமெதையும்
உன்னுள் மறைத்து
புன்னகையை எனக்கென
தருவாய்

கண்ணிமையில் என்னை
நீ அடைகாத்து
தூங்கிடவும் மறப்பாய்
என்னை பார்த்து
வாழ்வாயே நீ
என் நிழலாய்

அன்புள்ள அப்பா அப்பா…


-சிகரம் தொடு திரைப்படத்திலிருந்து...

bparthasarathi
bparthasarathi
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 26/11/2010

Back to top Go down

அன்புள்ள அப்பா..! - Page 2 Empty Re: அன்புள்ள அப்பா..!

Post by சரவணன் Tue Jun 23, 2015 10:57 pm

அப்பாவை பற்றி தங்களது பாடல் தேடல் , மற்றும் பதிவு அருமை....மேலும் அப்பா பாடல்கள் உள்ளதா??


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அன்புள்ள அப்பா..! - Page 2 Empty Re: அன்புள்ள அப்பா..!

Post by bparthasarathi Sun Jun 28, 2015 3:14 pm

இருக்கிறது நண்பரே...


“ மரத சரவௌக்கு – எப்பா
நம்மவாச மங்காத நெய்வௌக்கு
சீம சரவௌக்கு -எப்பா
சிந்தாத நெய்வௌக்கு”

இப்பாடல் வரிகளில், விளக்கு எவ்வாறு இருளை அகற்றி நமக்கு ஒளி கொடுத்து வழிகாட்டுகிறதோ அதுபோல ஜெக ஜோதியாகவும் சீரும் சிறப்புமாகவும் இருந்த நம் வீடானது, என் அப்பா நீ இல்லாததால் இப்பொழுது இருண்டு கிடக்கிறதே என்ற மறைபொருளில் உணர்த்தும் விதமே இப்பாடலடி.

* கருப்புக் கொட புடுச்சு
காட்டுப் பக்கம் போனாலும்
காடும் பயிராகும் நீங்க
பாத்தெடமும் தோப்பாகும்.
* நீலக் கொட புடுச்சு
நெலம் பாக்கப் போனாலும்
நெலமும் பயிராகும் – நீங்க
நின்ட எடமும் தோப்பாகும்

அப்பாவின் மீதுள்ள அபரிமிதமான அன்பினால் இவ்வரி பாடப்படுகிறது. இவர் எங்கெங்கு செல்கிறாரோ அங்கெல்லாம் செல்வம் பொழியும் என்றும், இப்படிப்பட்ட ஒங்கள தவறவிட்டு வாழறோமே என புலம்பி பாடப்படுகிறது.

* நாரத்தான் பண்ண
நடக்கயில வந்த சீக்கு
நாலு லட்சம் பணம் கொடுத்து
நடந்த அலச்சம் வைத்தியர
பணமும் செல்வாச்சு – நாங்க
செஞ்ச பாவம் தொலையலப்பா
* இலுமிச்சம் பண்ண
ஏழு லட்சம் பணம் கொடுத்து
இருந்த அலச்சம் வைத்தியர
பணமும் செலவாச்சு – நாங்க
செஞ்ச பாவம் தொலையலப்பா

என் அம்மாவின் அப்பா மொக்கையன் என்பவர் முடக்குவாத நோயினால் பாதிக்கப்பட்டு பதினெட்டு வருடம் படுத்த படுக்கையாகக் கிடந்தார். இதைக் குணப்படுத்த பண்ணாத வைத்தியமில்லை. போகாத இடமில்லை. வைத்தியம் பாக்கச் சென்ற இடங்களில் பணம் மட்டுமே செலவானது குணப்படுத்த முடியவில்லை. இறுதியில் இறந்தார்.
இக்கதையை படிக்காத என் அம்மா இட்டுக்கட்டி, தமிழ் இலக்கண முறைப்படி எதுகை, மோனையுடன் பாடுவது என்னை ஆச்சரியப்படுத்தியது.

* மாங்கா அடுப்புக் கூட்டி
மல்லிகப்பூச் சோறாக்கி
மல்லிகப்பூச் சோறுதிங்க – யப்பா
மந்தையெல்லாம் தேடுறேனே
* தேங்கா அடுப்புக் கூட்டி
தென்னம்பிள்ள சோறாக்கி
தென்னம்புல்லு சோறுதிங்க
தெருவெல்லாம் தேடுறேனே

தந்தை தன் மகளுக்கு மல்லிகைப் பூப்போன்ற சோற்றை ஊட்டி வளர்த்தார். அவர் மறைந்த பின் அதுபோன்ற சோற்றை மகள் ஆக்கி, மறைந்து போன தந்தைக்கு ஊட்ட ஆசைப்படுவதாக அமைந்துள்ளது இப்பாடல் அடிகள்.

* வெள்ளப் பட்டுடுத்தி
விதி வழி போனாலும் -என்ன
வெள்ளால பிள்ளை என்பார்
வீமனோட தங்கை என்பார்
* பச்சப் பட்டுடுத்தி
பாதவழி போனாலும் -என்னப்
பாப்பாரப் பிள்ளை என்பார்
பரமனோட தங்கை என்பார்.

தாழ்ந்த குடியில் பிறந்த தந்தை, தன் மகளுக்குச் சிறுவயதில் பட்டுப் பாவடை சட்டை வாங்கி அணிவித்து வீதிவழி நடக்கவிட்டு அழகு பார்த்த போது, பார்த்த மக்களெல்லாம் நீ வெள்ளாளப் பிள்ள மாதிரி இருக்க, பாப்பாரப் பிள்ள மாதிரி இருக்க, பரமசிவனோட தங்க மாதிரி இருக்க எனக்கூறிய அந்த வார்த்தைகளை இத்தனை வயதிற்குப் பிறகு நினைவூட்டி,இப்படியெல்லாம் எண்ணக் கொஞ்சினியே . . . .என தன் தந்தையை நினைத்துப் பாடப்படுவதே இப்பாடலடிகள்.

* கள்ளிக்கடியில -நாங்க
கரும்பா வளந்த மக்க -இப்போ
கையேந்தி நிக்கிறமே
* கருமணல் சோங்குல
கரும்பா வளந்த மக்க -இப்போ
கையேந்தி நிக்கிறமே

ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆனதும், அவள் பிள்ளை பெற்று பாடை ஏறுவது வரை பிறந்த வீட்டுச் சீதனம் என்ற பெயரில் தன் மகளுக்கு தந்தை செய்யக் கூடிய சீர் செனத்திகள் நிறைய உண்டு. தந்தை தவறியதிற்குப் பின்பு அந்த உதவிகள் கிட்டாமல் நொந்து போய் அப்பெண் தந்தையை நினைத்து பாடப்படும் அடிகளே இவை.

* சரளக்கல்லுப் பாதயில -நாங்க
சலிக்காம வழி நடந்தம்பே
சரளக்கல்லு குத்துதுன்னு – நாங்க
சலிச்சோம் பெறந்த எடத்த
* வெள்ளக்கல்லுப் பாதயில – நாங்க
வெரசா வழி நடந்தம்பே
வெள்ளக்கல்லு குத்துதுன்னு – நாங்க
வெறுத்தோம் பெறந்த எடத்த...

இதில் தந்தை இருக்கும்போது வாக்கப்பட்டு போன மகள், தந்தையைக் காண வரும் மகிழ்ச்சியில் நடந்து வரும் போது சாலையில் இருந்த சரளக்கல்லில் சளைக்காமலும், வெள்ளக்கல்லில் வெரசாகவும் (விரைவாகவும்) நடந்து வருகிறாள். தந்தை இறந்த பிறகு அதே கற்சாலையில் நடந்து போனாலும் தந்தை இல்லாததால் பிறந்த இடத்தை வெறுத்தோம் எனப் பாடுகின்றனர்.


-சித்திர சேனன் அவர்கள், சிறகு தளத்தில் ...



bparthasarathi
bparthasarathi
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 26/11/2010

Back to top Go down

அன்புள்ள அப்பா..! - Page 2 Empty Re: அன்புள்ள அப்பா..!

Post by bparthasarathi Sun Jun 28, 2015 3:23 pm

படம்: தெய்வத் திருமகள்
பாடியவர்: விக்ரம், சிரிங்கா
இசை: ஜி வி பிரகாஷ் குமார்
இயக்குநர்: விஜய்

கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன்..
என்ன கதைப்பா..

ராஜ ராணி கத சொல்லப்போறேன்
காக்கா குருவி கத சொல்ல போறேன்

ராஜா கதைய! காக்கா கதையா!

என்ன கத! என்ன கத!
கதையா! அதெல்லாம் எதுக்கு..
சொல்லாத சொல்லாத..
யாரவது திருடி படமா எடுதுதாங்கனா?

காக்கா கத சொல்லு.. காக்கா கத சொல்லு..
ராஜா கத சொல்லு.. ராஜாதி ராஜா.. இளையராஜா கத சொல்லு..!!

ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரே ஒரு ராஜாவாம்
ஒரே ஒரு ராஜாவா? ஊர்ல வேற யாரும் இல்லையா?
ஹ்ம்ம்.. இருக்காங்க..

ராஜாவோட மந்திரிங்க நாலு பேரும் கூஜவாம்
கூஜாவா??

ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரே ஒரு ராஜாவாம்
ராஜாவோட மந்திரிங்க நாலு பேரும் கூஜவாம்
நாட்டிலே போர் வந்தது..
போரிலே சண்ட நடக்குது..
நாட்டிலே போர் வந்தது..
போரிலே சண்ட நடக்குது..
சண்டையில் குண்டு வெடிக்குது..
டோம்.. டோம்.. டோம்..

சண்டையா.. எதுக்கு?

சண்ட தான் எதுக்கு நடந்துச்சு
சண்ட தான் எதுக்கு நடந்துச்சு
காக்கா வடிய திருடிச்சுல.. அதான் அதான்..

சண்ட தான் எதுக்கு நடந்துச்சு
காக்காதான் வடிய திருடிச்சு..
நரியும்தான் பாட சொல்லிச்சு..
ச ரி க ம பா..

காக்கா பாடிச்சா??

ஒ.. பாடாதா? சரி..
கா… கா.. கா..

ஐயோ வாடா போச்சே… காக்கா பாவம்ல..

ராஜா விடுவாரா??
ராஜா பாட்டு பாட.. நரி வடிய போடா..
நம்ம ராஜாகிட்ட காக்கா தேங்க்ஸ் சொல்லிச்சு..
ஊரெல்லாம் சேர்ந்து கொண்டாட்டம்தான்
நரியோட திட்டம் திண்டாட்டம்தான்
நாடெல்லாம் வாழ்த்துது ராஜ வாழ்க்ஹா..

ராஜ வாழ்க.. ராஜ வாழ்க..

இது ராஜ கதையா? காக்கா கதைய?
காக்கா ராஜா கத..

காக்கா ராஜா வாழ்க்ஹா.. காக்கா ராஜா வாழ்க்ஹா..

நெனச்சு நெனச்சுதான் கத சொல்ல..
சிரிச்சு சிரிச்சு நீ அத கேட்க..
இன்னும் கத இருக்கு என்கிட்டே..
கேட்டு கேட்டு நீ பாராட்ட..

ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரே ஒரு ராஜாவாம்
ராஜாவோட மந்திரி நாலு பேரும்..

ஐயோ.. திரும்பவும் அதே ராஜா கதையா?
இது அந்த ராஜா இல்ல.. வேற ராஜா..
இந்த ராஜாக்கு என்ன கத..

சூப்பர்மேன் சூப்பர்மேன் அத சொல்லாத.. அத சொல்லாத..
அனகோண்டா கத சொல்லு.. அனகோண்டா கத சொல்லு..
யார் சார்.. யார் சார்.. ஆ.. டைனோசர்..

நாட்டுல ரொம்ப நாளா டைனோசர் தொல்லன்னு
மக்கள் ராஜாகிட்ட போனாங்க..
டைனோசர வேட்டையாட சூப்பர்மேன் போல மாறி
ராசாவ போக சொல்லி கேட்டாங்க..

வழில்லாம் அனகோண்டா பயம் காட்டுது..
அத தாண்டி போனாரு.. புயல் தாக்குது..
வழில்லாம் அனகோண்டா பயம் காட்டுது..
அத தாண்டி போனாரு.. புயல் தாக்குது..
புயல் தாண்டிப்போனாறு.. புலி உறுமுது..
ராஜாவின் சத்தத்தில் புலி பதுங்குது..
டைனோசர்தான சாகனும்.. புலி ஏன் செத்துச்சு..

நாடெல்லாம் வாழ்த்துது ராஜா வாழ்க..
காக்கா ராஜா வாழ்க.. காக்கா ராஜா வாழ்க..
அப்பா.. போதும்பா.. விட்டுடுப்பா..

முழிச்சி முழிச்சி நான் கத சொல்ல..
மடக்கி மடக்கி நீ அத கேட்க
இன்னும் கத இருக்கு என்கிட்டே..
கேட்டு கேட்டு நீ பாராட்ட..

ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரு ராஜாவாம்
ராஜாவோட கத கேட்டு தூங்குது நிலாவாம்..

லாலலே லாலலே..

திரும்ப திரும்ப நா கத சொல்ல..
தூங்கி தூங்கி நீ அத கேட்க
இன்னும் கத இருக்கு என் கிட்ட..
கேட்டு கேட்டு நீ பாராட்ட..
bparthasarathi
bparthasarathi
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 26/11/2010

Back to top Go down

அன்புள்ள அப்பா..! - Page 2 Empty Re: அன்புள்ள அப்பா..!

Post by bparthasarathi Sun Jun 28, 2015 3:39 pm


படம் : தவமாய் தவமிருந்து
பாடல் : சா.பெருமாள்
இசை : சபேஷ் - முரளி
பாடியது : ஜெயமூர்த்தி

அந்த உருண்ட மலை ஓரத்துல...
உருண்ட மலை ஓரத்துல
உருண்ட மலை ஓரத்துல
உளுந்து காயப் போட்டிருந்தேன்...
அந்த உளுந்தைக் கூட்டி அள்ளும் முன்னே...
அந்த உளுந்தைக் கூட்டி அள்ளும் முன்னே
இந்த சண்டாளச் சீமையிலே இன்னைக்கு
உருமிச்சத்தம் தான் கேட்டதென்ன...

ஏ...ஆக்காட்டி ஆக்காட்டி
எங்கெங்கே முட்டையிட்டே?
எங்கெங்கே முட்டையிட்டே?
எங்கெங்கே முட்டையிட்டே...?
நாங் கல்லத் தொளைச்சி
கருமலையில் முட்டையிட்டேன்
கருமலையில் முட்டையிட்டேன்
கருமலையில் முட்டையிட்டேன்...

நான் இட்டது நாலு முட்டை
பொரிச்சது மூனு குஞ்சு
ஐயா நான் இட்டது நாலு முட்டை
பொரிச்சது மூனு குஞ்சு
அந்த மூனு குஞ்சுல
மூத்த குஞ்சிக்கெரை தேடி
மூனு மலை சுத்தி வந்தேன்
நடு குஞ்சிக்கெரை தேடி
நாலு மல சுத்தி வந்தேன்
இளைய குஞ்சிக்கெரை
தேடப் போகையிலே...போகையிலே...போகையிலே...

என்னை கானாங்குறத்தி மகன்,
ஐயா என்ன கானா...கானா...ங்
குறத்திமயன் கண்டிருந்து கண்ணி போட்டான்
என்னை கானாங்
குறத்திமயன் கண்டிருந்து கண்ணி போட்டான்

எங் காலு ரெண்டும் கண்ணிக்குள்ளே
றெக்க ரெண்டும் மாரடிக்க
றெக்க ரெண்டும் மாரடிக்க
றெக்க ரெண்டும் மாரடிக்க
நான் பெத்த மக்கா
நான் அழுத கண்ணீரு
ஆறாப் பெருகி ஆனை குளிப்பாட்ட
குளமாப் பெருகி குதுர குளிப்பாட்ட
ஏரி பெருகி எருது குளிப்பாட்ட
பள்ளம் பெருகி பன்னி குளிப்பாட்ட
நான்... பெத்த... மக்கா...
நான் பெத்த மக்கா
உங்கள பாதியில விட்டு
நான் இப்போ பரலோகம்
போறேனே...போறேனே...போறேனே...

(வேகமாய்)
ஏ...ஏழைக்குருவியே நீ ஏங்கி அழக் கூடாது
கத்துங்குருவியே நீ கதறி அழக் கூடாது (2)

வலை என்ன பெருங்கனமா?
அதையறுக்க வழிகளும் இருக்குதம்மா (2)

சின்னக்குருவியே நீ சிணுங்கி அழக் கூடாது
நொய்க்குருவியே நீ நொந்து அழக் கூடாது (2)

அலகெனும் அரிவாளால் இந்த வலையினை அறுத்தெறிவோம்
அலகெனும் அரிவாளால் இந்த வலையினை அறுத்தெறிவோம்

வலியும் வேதனையும் வலையோடு போயிடுச்சி
வாழ்க்க என்னான்னு போராடி தெரிஞ்சிடுச்சி (2)

வாங்க பறந்திடுவோம் எங்குஞ்சுகளா வாங்க பறந்திடுவோம்
வாங்க பறந்திடுவோம் எங்குஞ்சுகளா வாங்க பறந்திடுவோம்

bparthasarathi
bparthasarathi
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 26/11/2010

Back to top Go down

அன்புள்ள அப்பா..! - Page 2 Empty Re: அன்புள்ள அப்பா..!

Post by T.N.Balasubramanian Sun Jun 28, 2015 5:09 pm

தெய்வ திருமகள் /தவமாய் தவமிருந்து பட பாடல்களா ?
சொந்தக் கவிதை பகுதியில் வந்துள்ளதே !
சினிமா பகுதிக்கு மாற்றி விடலாமா ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அன்புள்ள அப்பா..! - Page 2 Empty Re: அன்புள்ள அப்பா..!

Post by ayyasamy ram Sun Jun 28, 2015 5:32 pm

T.N.Balasubramanian wrote:தெய்வ திருமகள் /தவமாய் தவமிருந்து பட பாடல்களா ?
சொந்தக் கவிதை பகுதியில் வந்துள்ளதே !
சினிமா பகுதிக்கு மாற்றி விடலாமா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1148357
-
அன்புள்ள அப்பா..! - Page 2 P0IazyfjRM6oLWMAK8xM+ThavamaiThavamirundhu
-
சினிமா பகுதிக்கு மாற்றி விடலாம்...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அன்புள்ள அப்பா..! - Page 2 Empty Re: அன்புள்ள அப்பா..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum