ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மட்டை விளையாட்டு தேவையா? கவிஞர் இரா. இரவி.

3 posters

Go down

மட்டை விளையாட்டு தேவையா? கவிஞர் இரா. இரவி. Empty மட்டை விளையாட்டு தேவையா? கவிஞர் இரா. இரவி.

Post by eraeravi Sun Jun 21, 2015 9:03 am

மட்டை விளையாட்டு தேவையா? கவிஞர் இரா. இரவி.
தலைக்கவசம் அணிந்திருந்த போதும் கிரிக்கெட் வீரர் ஹீயூஸ் காயம் ஏற்பட்டு உயிரை இழந்து விட்டார். ஆஸ்திரேலியாவில் அவர்களுக்குள் நடந்த போட்டி. அதனால் பிரச்சனை இல்லை. இதுவே இந்தியா, பாகிஸ்தான் போட்டியாக இருந்து, யாராவது ஒருவர் இறந்து இருந்தால் மிகப்பெரிய பிரச்சனையாக மாறி இருக்கும். கெட்டதிலும் ஒரு நல்லது என்பது இது தான்.
மட்டையாட்டத்தில் பயன்படுத்தும் பந்து மிக கனமான பந்து. அந்தப்பந்து நெஞ்சில், நெற்றியில், பொட்டில் பட்டாலும் ஆபத்து. ஹீயூஸ்க்கு கழுத்துப் பகுதியில் தாக்கியதில் உயிர் இழந்துள்ளார். இந்த விளையாட்டில் உள்ள ஆபத்தை உணராமல் குழந்தைகள் விளையாடி வருகின்றனர். மட்டை விளையாட்டு விளையாடும் போதும் ஏற்பட்ட சண்டையின் காரணமாக உயிர்பலி நேர்ந்து உள்ளது. மதுரையிலும் மட்டை விளையாட்டு சண்டையில் ஒரு மாணவன் இறந்தான்.
குளிர்பிரதேசத்தில் உடம்பெல்லாம் மூடி வெயில் காணாதவர்கள் ஆசையோடு வெயிலில் விளையாடிய விளையாட்டு இது. வெப்ப பூமியிலும் அதுபோன்ற உடை அணிந்து வெயிலில் விளையாடி வருகின்றனர். ஊடகங்களில் பெருமளவு விளம்பரம் செய்வதால் இந்த விளையாட்டு குழந்தைகள் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விளையாட்டில் அளவிற்கு அதிகமான ஊழல் நடந்து வருகின்றது. விளையாட்டு வீரர்களும் கோடிக்கணக்கில் குறுக்கு வழியில் சம்பாதிக்கின்றனர்.விளம்பரப் படங்களில் நடித்து கோடிகள் ஈட்டுகின்றனர் .
யார் வெல்வது? யார் தோற்பது? என்பதை பணத்திற்காக முதலில் முடிவு செய்து கொண்டு விளையாடுகின்றனர். பந்தயம் கட்டுபவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, தொகைக்கு ஏற்ப விளையாட்டின் முடிவை முடிவு செய்கின்றனர். இந்த பித்தலாட்டம் பற்றி எதுவும் அறியாமல் கொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நேரலைகளில் விளையாட்டை ரசித்து நேரத்தை விரையம் செய்து வருகின்றனர்.விளையாட்டை தொலைக்காட்சியில் பார்க்க வேண்டும் என்று அதற்கும் வீட்டில் சண்டை .
மட்டை விளையாட்டு வீரர் ஹீயூஸ் காயப்பட்டவுடன் கோமா நிலைக்கு சென்று நினைவு திரும்பாமலே இறந்து விட்டார். மிகவும் குறைந்த வயது. 25 வயதிலேயே அவர் உயிரை இழந்திட காரணமாக அமைந்தது மட்டை விளையாட்டு. ஆபத்து இல்லாத எத்தனையோ விளையாட்டுகள் உள்ளன. ஆனால் அவைகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் தரவதில்லை. அதனால் அந்த விளையாட்டுகள் குழந்தைகளிடம் பிரபலம் அடையவில்லை. கபடி போன்ற விளையாட்டுகளில் இப்படி உயிர் போகும் ஆபத்து இல்லை.
மாணவர்கள் மட்டை விளையாட்டு விளையாடும் போது சண்டை வந்தால் மட்டையால் அடித்துக் கொள்ளும் நிகழ்வுகளும் நிறைய நடந்துள்ளன.
மட்டை விளையாட்டு போட்டிகளில் வீரர்களை ஏலம் விடுவதும் அவர்களை விலைக்கு வாங்குவதும் நல்ல செயல் அன்று. ஒரு மனிதனை ஏலம் விடுவது நாகரீக உலகில் ஏற்புடைய செயல் அன்று. மேலும் ஏலம் எடுத்து சம்பாதிக்கும் வணிகத்தில் திரைப்பட நட்சத்திரங்கள் பங்கு பெறுகின்றனர். அவர்களும் வந்து விளையாட்டு அரங்கில் நிற்பதால் தொலைக்காட்சிகளில் அதிக முக்கியத்துவம் தந்து அவர்களை காட்டுகின்றனர். இதன் காரணமாகவும் இந்த விளையாட்டு பிரபலமாகி வருகிறது.
அரசியல் தலைவர்கள் சிலரும் இந்த விளையாட்டை ஆர்வமாக பார்த்து வருகின்றனர். பார்த்து வருவதோடு நில்லாமல் அது பற்றி ஊடகத்திலும் சொல்லி வருகின்றனர். விளையாட்டு வீரர் புத்தகத்தை படிப்பதாக விளம்பரம் வேறு செய்கின்றனர் . இதன் காரணமாகவும் இந்த விளையாட்டு குழந்தைகளிடையே பிரபலமாக வருகின்றது.
அன்றே பெர்னாட்சா என்ற பேரறிஞர் சொன்னார். 11 முட்டாள்கள் விளையாட பதினோறாயிரம் முட்டாள்கள் பார்க்கும் விளையாட்டு மட்டை விளையாட்டு என்றார்.
மட்டை விளையாட்டின் காரணமாக சாதிக் கலவரங்கள் வன்முறைகள் நடந்த நிகழ்வுகளும் உண்டு. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மீது உண்மையான அன்பு இருந்தால் மட்டை விளையாட்டு விளையாடுவதற்கு தடை செய்யுங்கள். நாம் தான் எடுத்து கூறி அந்த விளையாட்டில் உள்ள ஆபத்தை புரிய வைக்க வேண்டும். மேலும் மட்டை விளையாட்டுக்கு பயன்படும் மட்டை பந்து இவற்றை வாங்கி கொடுப்பதை நிறுத்த வேண்டும்.
மட்டை விளையாட்டு வீரர்கள் தேர்ந்தெடுப்பதிலும் ஊழல் உள்ளது. அரசியல் தலையீடு உள்ளது. உண்மையான திறமை மிக்க விளையாட்டு வீரர்களை தேர்வு செய்யாமல் தவிர்த்து விடுகின்றனர்.
ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர் ஹீயூஸ் விளையாடிய போது அவரது தாயாரும், சகோதரியும் இருந்து உள்ளனர். அவர்கள் கண் முன்னிலையில் பந்தால் அடிப்பட்டு சுருண்டு விழுந்த காட்சி சோகம்.விழுந்தவுடன் கோமா நிலை அடைந்து கடைசியில் இறந்த சோகம் சொல்லில் அடங்காது. அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு வழங்கும் நிதி உதவி எதுவும் அவரை ஈடு செய்ய முடியாது.
1998ஆம் ஆண்டு ராமன் லம்பா தலையில் பலமாக பந்து விழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். பாகிஸ்தனை சேர்ந்த விளையாட்டு வீரர் அப்துல் அஜீஸ் மார்பில் பந்து விழுந்து அவரும் உயிரிழந்தார். தென் ஆப்பிரிக்கா வீரர் மார்க் பௌச்சருக்கு மட்டை விளையாட்டு குச்சி எகிறி இடது கண்ணில் பாய்ந்து பார்வை குறைபாடு ஏற்பட்டது.
இப்படி மட்டை விளையாட்டால் உயிர் இழந்தவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் காய்முற்றவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். உயிர்க்கொல்லி விளையாட்டை புறக்கணிப்போம்.
ஆபத்தான மட்டை விளையாட்டை புறக்கணிக்க முன்வர வேண்டும். ஆசையோடு ,அன்போடு ,பாசத்தோடு நாம் வளர்க்கும் குழந்தைகள் மட்டை விளையாட்டு விளையாடி பாதிப்பு அடையாமல் காக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. மட்டை விளையாட்டால் உயிர் இழந்தது ஹீயூஸ் அவர்களோடு முற்றுப்பெறட்டும். இனி எந்த உயிரும் பறிபோகாமல் இருக்க மகா மட்டமான ஆபத்து நிரம்பிய மட்டை விளையாட்டை புறக்கணிப்போம்.
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

மட்டை விளையாட்டு தேவையா? கவிஞர் இரா. இரவி. Empty Re: மட்டை விளையாட்டு தேவையா? கவிஞர் இரா. இரவி.

Post by ராஜா Sun Jun 21, 2015 11:12 am

எல்லாவிளையாட்டுளையும் தான் ஆபத்து இருக்கு அதனால் யாரும் இனி விளையாட போகாம , வீட்டில் இருந்தபடியே.

Playstaion , Android போனில் விளையாடுவது என்று இருந்தால் போதும்

உடனடியா நம்ம பிரதமர் கிட்ட சொல்லி சர்வதேச video games தினம் ஒன்று ஆரம்பிக்க சொல்ல வேண்டும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மட்டை விளையாட்டு தேவையா? கவிஞர் இரா. இரவி. Empty Re: மட்டை விளையாட்டு தேவையா? கவிஞர் இரா. இரவி.

Post by eraeravi Sun Jun 21, 2015 3:53 pm

இனி எந்த உயிரும் பறிபோகாமல் இருக்க மகா மட்டமான ஆபத்து நிரம்பிய மட்டை விளையாட்டை புறக்கணிப்போம்.
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

மட்டை விளையாட்டு தேவையா? கவிஞர் இரா. இரவி. Empty Re: மட்டை விளையாட்டு தேவையா? கவிஞர் இரா. இரவி.

Post by ராஜா Sun Jun 21, 2015 4:03 pm

eraeravi wrote:இனி எந்த உயிரும் பறிபோகாமல் இருக்க மகா மட்டமான ஆபத்து நிரம்பிய மட்டை விளையாட்டை புறக்கணிப்போம்.
மேற்கோள் செய்த பதிவு: 1146643

தங்கள் பின்னூட்டங்களுக்கு பதிலளித்தமைக்காக முதலில் நன்றி கூறிகொள்கிறேன்.


ஆபத்து இல்லாத விளையாட்டு என்று ஒன்று உள்ளதா ?! இப்பல்லாம் indoor games ல கூட விளையாடும் பொது விபத்து ஏற்படுகிறது, இதற்காக ஒரேயடியாக விளையாட்டே கூடாது என்று சொல்ல கூடாது புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மட்டை விளையாட்டு தேவையா? கவிஞர் இரா. இரவி. Empty Re: மட்டை விளையாட்டு தேவையா? கவிஞர் இரா. இரவி.

Post by eraeravi Sun Jun 21, 2015 5:12 pm

மதுரையில் மிகவும் சிரமப்பட்டு தன் மகனை M.E.படிக்க வைத்தார் .அவர் கிரிக்கெட் விளையாண்டு அடிபட்டு கோமாவில் உள்ளார் .அறுவை சிகிச்சை என்ற பெயரி பல லட்சம் பிடிங்கி விட்டனர் .மற்ற விளையாட்டுகளில் இது போன்ற ஆபத்து .இல்லை பெற்ற குழந்தைமீது அன்புள்ள யாரும் அவர்களை கிரிக்கெட் விளையாட அனுமதிக்காதீர்கள் .பால் பட்டு , மட்டை பட்டு பலர் இறந்துள்ளனர் .
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

மட்டை விளையாட்டு தேவையா? கவிஞர் இரா. இரவி. Empty Re: மட்டை விளையாட்டு தேவையா? கவிஞர் இரா. இரவி.

Post by ayyasamy ram Tue Jun 23, 2015 1:04 pm

கடன் வாங்கி டிகிரி முடித்து வேலைக்கு போன
இளைஞன், வாராந்திர லீவில் சொந்த ஊருக்கு
வந்து நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி
கட்டை விரலில் அடி பட்டு, அறுவை சிகிச்சை
வரை சென்று, உடல் நலம் மீண்டார்...!
-
அறுவை சிகிச்சைக்கு சுமார் ரூ12,000 செலவு
ஒரு மாதம் சம்பளமும் போச்சு....!!
-
ஆக அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏதாவது
சம்பவம் நடந்து கொண்டுதான் இருக்கிறது...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மட்டை விளையாட்டு தேவையா? கவிஞர் இரா. இரவி. Empty Re: மட்டை விளையாட்டு தேவையா? கவிஞர் இரா. இரவி.

Post by eraeravi Tue Jun 23, 2015 9:11 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

மட்டை விளையாட்டு தேவையா? கவிஞர் இரா. இரவி. Empty Re: மட்டை விளையாட்டு தேவையா? கவிஞர் இரா. இரவி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தெரிந்தும் தெரியாமலும் நூல் ஆசிரியர் : கவிஞர் செல்வக்குமார் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
» கவிதைக்கூத்து நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நினைவெல்லாம் உன்னோடு நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum