புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ஏர்வாடியாரின் படைப்புலகம் ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு ஓர் பார்வை பகுதி 2 கவிஞர் இரா. இரவி. Poll_c10ஏர்வாடியாரின் படைப்புலகம் ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு ஓர் பார்வை பகுதி 2 கவிஞர் இரா. இரவி. Poll_m10ஏர்வாடியாரின் படைப்புலகம் ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு ஓர் பார்வை பகுதி 2 கவிஞர் இரா. இரவி. Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏர்வாடியாரின் படைப்புலகம் ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு ஓர் பார்வை பகுதி 2 கவிஞர் இரா. இரவி. Poll_c10ஏர்வாடியாரின் படைப்புலகம் ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு ஓர் பார்வை பகுதி 2 கவிஞர் இரா. இரவி. Poll_m10ஏர்வாடியாரின் படைப்புலகம் ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு ஓர் பார்வை பகுதி 2 கவிஞர் இரா. இரவி. Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
ஏர்வாடியாரின் படைப்புலகம் ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு ஓர் பார்வை பகுதி 2 கவிஞர் இரா. இரவி. Poll_c10ஏர்வாடியாரின் படைப்புலகம் ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு ஓர் பார்வை பகுதி 2 கவிஞர் இரா. இரவி. Poll_m10ஏர்வாடியாரின் படைப்புலகம் ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு ஓர் பார்வை பகுதி 2 கவிஞர் இரா. இரவி. Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
ஏர்வாடியாரின் படைப்புலகம் ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு ஓர் பார்வை பகுதி 2 கவிஞர் இரா. இரவி. Poll_c10ஏர்வாடியாரின் படைப்புலகம் ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு ஓர் பார்வை பகுதி 2 கவிஞர் இரா. இரவி. Poll_m10ஏர்வாடியாரின் படைப்புலகம் ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு ஓர் பார்வை பகுதி 2 கவிஞர் இரா. இரவி. Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏர்வாடியாரின் படைப்புலகம் ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு ஓர் பார்வை பகுதி 2 கவிஞர் இரா. இரவி. Poll_c10ஏர்வாடியாரின் படைப்புலகம் ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு ஓர் பார்வை பகுதி 2 கவிஞர் இரா. இரவி. Poll_m10ஏர்வாடியாரின் படைப்புலகம் ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு ஓர் பார்வை பகுதி 2 கவிஞர் இரா. இரவி. Poll_c10 
21 Posts - 4%
prajai
ஏர்வாடியாரின் படைப்புலகம் ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு ஓர் பார்வை பகுதி 2 கவிஞர் இரா. இரவி. Poll_c10ஏர்வாடியாரின் படைப்புலகம் ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு ஓர் பார்வை பகுதி 2 கவிஞர் இரா. இரவி. Poll_m10ஏர்வாடியாரின் படைப்புலகம் ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு ஓர் பார்வை பகுதி 2 கவிஞர் இரா. இரவி. Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஏர்வாடியாரின் படைப்புலகம் ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு ஓர் பார்வை பகுதி 2 கவிஞர் இரா. இரவி. Poll_c10ஏர்வாடியாரின் படைப்புலகம் ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு ஓர் பார்வை பகுதி 2 கவிஞர் இரா. இரவி. Poll_m10ஏர்வாடியாரின் படைப்புலகம் ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு ஓர் பார்வை பகுதி 2 கவிஞர் இரா. இரவி. Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஏர்வாடியாரின் படைப்புலகம் ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு ஓர் பார்வை பகுதி 2 கவிஞர் இரா. இரவி. Poll_c10ஏர்வாடியாரின் படைப்புலகம் ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு ஓர் பார்வை பகுதி 2 கவிஞர் இரா. இரவி. Poll_m10ஏர்வாடியாரின் படைப்புலகம் ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு ஓர் பார்வை பகுதி 2 கவிஞர் இரா. இரவி. Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஏர்வாடியாரின் படைப்புலகம் ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு ஓர் பார்வை பகுதி 2 கவிஞர் இரா. இரவி. Poll_c10ஏர்வாடியாரின் படைப்புலகம் ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு ஓர் பார்வை பகுதி 2 கவிஞர் இரா. இரவி. Poll_m10ஏர்வாடியாரின் படைப்புலகம் ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு ஓர் பார்வை பகுதி 2 கவிஞர் இரா. இரவி. Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஏர்வாடியாரின் படைப்புலகம் ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு ஓர் பார்வை பகுதி 2 கவிஞர் இரா. இரவி. Poll_c10ஏர்வாடியாரின் படைப்புலகம் ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு ஓர் பார்வை பகுதி 2 கவிஞர் இரா. இரவி. Poll_m10ஏர்வாடியாரின் படைப்புலகம் ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு ஓர் பார்வை பகுதி 2 கவிஞர் இரா. இரவி. Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஏர்வாடியாரின் படைப்புலகம் ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு ஓர் பார்வை பகுதி 2 கவிஞர் இரா. இரவி. Poll_c10ஏர்வாடியாரின் படைப்புலகம் ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு ஓர் பார்வை பகுதி 2 கவிஞர் இரா. இரவி. Poll_m10ஏர்வாடியாரின் படைப்புலகம் ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு ஓர் பார்வை பகுதி 2 கவிஞர் இரா. இரவி. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏர்வாடியாரின் படைப்புலகம் ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு ஓர் பார்வை பகுதி 2 கவிஞர் இரா. இரவி.


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Jun 21, 2015 8:59 am

ஏர்வாடியாரின் படைப்புலகம்
ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு ஓர் பார்வை பகுதி 2
கவிஞர் இரா. இரவி.
ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு மட்டும் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெறலாம். அந்த அளவிற்கு கருத்துச் சுரங்கமாக நூல் மதிப்பீடு உள்ளது. கவிதை உறவு மாத இதழில் நூல் மதிப்பீடு வராத மாதம் இல்லை என்று சொல்லலாம். மாதந்தோறும் சில நூல்களை எடுத்துக்கொண்டு அந்த நூலில் உள்ள சிறப்பை மட்டுமே எடுத்து எழுதுவதை தமது கொள்கையாகக் கொண்டவர் ஏர்வாடி.
முன்னோரு காலத்தில் அன்னம் என்று ஒரு பறவை இருந்ததாம். அப்பறவை பாலில் தண்ணீர் கலந்து இருந்தால் தண்ணீரை விட்டு விட்டு பாலை மட்டும் பிரித்து அருந்துமாம். அது போல ஏர்வாடியார் நூலில் உள்ள நல்லவை பற்றி மட்டுமே எழுதுவார். அல்லவை இருந்தால் அது பற்றி எழுத மாட்டார். அன்னப்பறவை போன்ற குணம் படைத்தவர் ஏர்வாடியார்.
ஏர்வாடியார் அவர்கள் கதை, கவிதை, கட்டுரை எழுதிடும் படைப்பாளி என்பதால், படைப்பாளியின் மனதை காயப்படுத்தி விடக்கூடாது என்பதில் மிக கவனமாக எழுதுவார்கள். சில ஆயிரங்கள் செலவழித்து நூல் அச்சிட்ட படைப்பாளிக்கு ஏர்வாடியார் கவிதை உறவு மாத இதழில் கோடி ரூபாய் கிடைத்தாலும் வராத மகிழ்ச்சி கவிதை உறவில் அச்சில் பார்த்தால் வந்து விடும்.
அப்துல்கலாம் அவர்களுக்கு அடுத்தபடியாக, இன்றைய இளைஞர்கள் அதிகம் நேசிக்கும் சிறந்த சிந்தனையாளர், சிறந்த பேச்சாளர், சிறந்த எழுத்தாளர், முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் 40-க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதி உள்ளார்கள். நாடு அறிந்த நல்ல எழுத்தாளர் மட்டுமல்ல, நேர்மையான அதிகாரி. அவருடைய 'நெஞ்சைத் தொட்டதும், சுட்டதும்' நூலை நான் படித்தேன். ஆனால் கவிதை உறவில் ஏர்வாடியார் நூல் மதிப்பீடு எழுதிய பின்பு திரும்பவும் அந்த நூலை எடுத்து வாசித்து மகிழ்ந்தேன். காரணம் நூலின் சிறப்பினை மிக நுட்பமாக உணர்த்திடும் ஆற்றல் பெற்றவர் ஏர்வாடியார்.
நூல் மதிப்பீட்டிலிருந்து சிறு துளிகள் உங்கள் பார்வைக்கு இதோ!
இந்தக் கட்டுரைகள், பெண்கள் பெருமை, சுற்றுலாச் சிறப்புகள், தம் இளமை, தாம் வியந்த தாய்மை குறித்தவையாக நம்மைப் பெரிதும் ஈர்க்கின்றன. பார்க்கும் காட்சிகளில் முப்பட்டை வடிவம் (3டி) என்பது போல் படிக்கும் போதே நமக்குப் பார்க்கும் நெகிழ்வையும், நிறைவையும் ஏற்படுத்துகின்றன. கட்டுரைகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கான இவரது இன்னுமோர் எடுத்துக்காட்டு இந்நூல். எழுத்தும் எழுத்தாளரும் பாராட்டுப் பட்டியலில் வருகிற பெருமைக்குரியராதல் இதன் சிறப்பு.
ஆம், நல்ல எழுத்து என்பது ஒரு வாசகன் படிக்கும் போதே நூலில் வருபவை வாசகனின் மனக்கண்ணில் காட்சியாக விரிய வேண்டும். முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் நூலான நெஞ்சைத் தொட்டதும் சுட்டதும் நூல் படிக்கும் போது நாம் உணரும் அனுபவத்தை ஏர்வாடியார் நூல் மதிப்பீட்டில் மிக நுட்பமாக உணர்த்தி உள்ளார். பாராட்டுக்கள்.
ஒரு நூல் விமர்சனம் படித்தால் அந்த நூலை உடன் வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டும் விதமாக இருக்க வேண்டும். ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு படித்தால் அந்த நூலை படிக்க வேண்டும் என்ற ஆவல் பிறக்கும்.
சுற்றுலாத் துறையின் செயலராக முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் இருந்த போது சுற்றுலாத் துறையின் ஆணையராக இருந்தவர் முனைவர் மூ. இராசாராம் இ.ஆ.ப. அவர்கள். இருவரின் காலம் சுற்றுலாத் துறையின் பொற்காலம் என்று சொல்லுமளவிற்க்கு பல நல்ல திட்டங்கள் நிறைவேறின. இவர்கள் இருவரும் அரசுப்பணியோடு நின்று விடாமல் , எழுத்துப் பணியிலும் முத்திரை பதித்து வருபவர்கள். முனைவர் மூ. இராசாராம் இ.ஆ.ப. அவர்களின் 'கல்வி பூங்காவில் சிந்தனைப் பூக்கள்' நூலை நான் படித்து இருக்கிறேன். நூல் விமர்சனம் எழுதி எனது இணையத்தில் www.eraeravi.com பதிவு செய்துள்ளேன். ஆனால் ஏர்வாடியார் அவர்கள் கவிதை உறவு இதழில் இந்த நூலின் மதிப்பீடு எழுதி இருந்தார்கள், படித்து வியந்து போனேன்.
ஓர் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதை பவணந்தி அடிகளின் பாடல் வரிகளால் புகட்டியுள்ளார். நூலாசிரியர் 3-ஆவது பகுதி இளைஞர்கள் குறித்தது. நம்பிக்கைச் சிந்தனைகளை இதில் நிரம்பத் தந்துள்ளார். அன்பு, உழைப்பு, நிதானம் போன்றவற்றின் அவசியத்தை நல்ல எடுத்துக்காட்டுகளுடன் நிறுவுதல் அருமை. பெண்கள் குறித்தும் ஒரு பகுதி பயன் தருகிறாது. நிறைவாக கல்வி தொடர்பான செய்திகள், மேனாட்டார் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன. சுவையான சின்னச்சின்ன கதை வெளிச்சங்கள், கருத்துச் சிதறல்கள் இயல்பான நடை யாவும் இந்நூலை வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துவதால் நூல் இலகுவாக வெற்றி பெற்று விடுகிறது.
கல்வியின் மேன்மை குறித்து சிறப்பாக விளக்கிய நூலின் ஆசிரியரான முனைவர் மூ. இராசாராம் அவர்கள் தமிழ்த்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை செயலராக இருந்து தனிமுத்திரை பதித்து வருகிறார்கள். குறிப்பாக மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் நிறுவி மாதாமாதம் தமிழ் வளர்ச்சி தொடர்பான கருத்தரங்கம் தொடர்ந்து நடைபெறுவதற்கு காரணமாக இருந்து வருகிறார்கள்.
ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் 80வது பிறந்த நாள் விழா சென்னையில் சீரும் சிறப்புமாக நடந்தது. கவிஞர் கவிமுகில் அவர்களும் விழிகள் பதிப்பக நடராசன் அவர்களும் இணைந்து பிரமாண்ட விழா ஏற்பாடு செய்து இருந்தார்கள். அந்த விழாவில் எனக்கு எழுத்தோலை விருதும் கவிதை உறவு இதழுக்காக ஏர்வாடி யாருக்கும் விருது வழங்கினார்கள்.
ஹைக்கூ கவிதைகளை தமிழகத்தில் பிரபலப்படுத்தியதில் ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு சிறந்த இடம் உண்டு. அவருடைய நூலான தத்து பித்துவம் நூல் மதிப்பீடு ஏர்வாடியார் அவர்களால் கவிதை உறவு இதழில் எழுதப்பட்டது. படித்து விட்டு பிரமித்துப் போனேன். எல்லோருக்கும் போல ஏர்வாடியாருக்கு 24 மணி நேரம் தானா? அல்லது இவருக்கு மட்டும் கூடுதலாக நேரம் உண்டோ! என்று வியந்து போனேன்.
ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளின் மேல் இலாவகமாக பயணிப்பது போல, ஏர்வாடியார் படிப்பு, விமர்சனம் என்ற இரண்டு துறையிலும் பயணித்து தனி முத்திரை பதித்து வருகிறார். நூல் மதிப்பீட்டிலிருந்து சிறு துளிகள் இதோ!
தமிழன்பன் அவர்களின் பேனா வித்தகம் வாழ்வியலை உணர்த்துகிறது. எளிமையாக இருப்பதே கவிதை. இனிமையாக சுவைக்கவே கவிதை என்ற கவிதையின் எதிர்பார்ப்பை தமிழன்பன் அவர்களும் கற்றுத் தருகிறார். எல்லோரும் இனிதாகப் புரிந்து கொள்ள எளிதாகப் புல்லான சொல் மேலே புனையுன்னைக் கவிதையிலே என்ற வரிகளில் முத்து முத்தான கவிதைகள் தத்துவமாகவும் பித்துவமாகவும் அருமை!
ஆம், ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் வாழ்வியல் கருத்துக்களை எளிமையாகவும் இனிமையாகவும் வடித்து உள்ளார்கள்.
இனிய நண்பர் எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் தான் ஒரு பெரிய எழுத்தாளர் என்பதை தலையில் எப்போதும் ஏற்றிக் கொள்ளாதவர். மதுரையின் பெருமைகளில் ஒன்றாக விளங்குவார். பரபரப்பான சூழ்நிலையிலும் நான் எனது நூல் கொடுத்தால் உடன் மதிப்புரை எழுதிக் கொடுத்து வியப்பில் ஆழ்த்திடும் விந்தை மனிதர். அவருடைய நூலான, மனம் ஒரு மர்ம தேசம் பற்றி கவிதை உறவு இதழில் ஏர்வாடியார் எழுதி இருந்த நூல் மதிப்பீடு படித்தேன். நூலின் மதிப்பை மேலும் உயர்த்துவதாக இருந்தது. பொதுவாக படைப்பாளிகளைப் பாராட்டுவதில் ஏர்வாடியார் பாரி வள்ளல் என்றே சொல்லலாம். பாராட்டுவதில் அவருக்கு கஞ்சத்தனம் பிடிக்காது. யாரையும் மனம் திறந்து பாராட்டுவது ஏர்வாடியாரின் சிறப்பியல்பு.
மனம் ஒரு மர்ம தேசம் நூலை விமர்சனம் செய்ய வேண்டும் என்று என்னிடம் ஏர்வாடியார் அலைபேசியில் சொன்ன அன்றே நூலை வாங்கி அனுப்பி வைத்தேன். அந்த மாத கவிதை உறவில் சுடச்சுட விமர்சனம் பதிவு செய்து இருந்தார்கள். கவிதை உறவில் நூல் மதிப்புரை படித்து விட்டு இனிய நண்பர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களும் அலைபேசியில் என்னை அழைத்து ஏர்வாடியாரின் எழுத்தாற்றல் பற்றி குறிப்பிட்டு வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்தார்கள். இது போன்ற பல மலரும் நினைவுகளை மகிழ்வித்தது இந்த நூல் மதிப்பீடு.
வானத்தைப் போன்று மனம், வானம் எப்படி எல்லா அளவுகளுக்கும் பரவிக் கிடக்கிறதோ, அப்படித்தான் மனம். அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்றும் மறவாமல் பல எடுத்துக்காட்டுகளோடு எழுதி இருக்கிறார். நூலாசிரியர் மனம் குறித்துச் சிந்திக்கிற போது கட்டுப்பாடற்ற இளமைப் பருவத்தின் பொறுப்பை விவரிக்காமல் தொட்டிருக்கிறார். மனத்தை மர்மதேசத்திலிருந்து தர்ம தேசமாக மாற்றிக் கொண்டால் கவலை, வருத்தம், வலி, வேதனை இல்லை என்று நூல் நிறைகிறது. நம் மனமும் நிறைந்து வழிகிறது. திரும்பத் திரும்ப படிக்க வேண்டிய, இன்றைக்கு மிகவும் தேவையான நூல்.
ஏர்வாடியார் கவிதை உறவு இதழில் பல்லாண்டுகளாக நூல் மதிப்பீடு எழுதி வருகிறார்கள். கடல் போன்றது அவருடைய நூல் மதிப்பீடு. கடலை குவலயத்தில் அடைக்கும் முயற்சி தான் இந்த நூல் மதிப்பீடு குறித்த மதிப்பீடு. மலை அளவிற்கு அவர்கள் எழுதி குவித்து இருந்தாலும் மடு அளவிற்கு எடுத்து இயம்பிட முயன்றுள்ளேன். ஏர்வாடியார் நூல் மதிப்பீடு என்று வழங்கிய சாரத்தின் சாரத்தை நான் எழுதிட முயன்று உள்ளேன். எனவே பதச்சோறாக சில நூல் மதிப்பீடுகள் மட்டுமே இங்கே மேற்கோள் காட்டி உள்ளேன். அவருடைய அனைத்து நூல் மதிப்பீடுகளும் நான் படித்த போதும் அனைத்தையும் மேற்கோள் காட்டினால் இந்த நூலில் மற்றவருக்கு இடம் இருக்காது.
தன்னம்பிக்கை, எழுத்து, பேச்சு இரண்டிலும் முத்திரை பதித்து வருபவர். கோவையின் பெருமைகளில் ஒன்றாகத் திகழ்பவர் கவிதாசன். எல்லோரிடத்திலும் தன்னம்பிக்கை என்ற சுடர் எரிந்து கொண்டு இருந்தாலும் அச்சுடரை தூண்டி விடும் எழுத்துக்கும், பேச்சுக்கும் சொந்தக்காரரான கவிஞர் கவிதாசன். மதுரையில் உலகத்தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழ் இலக்கியங்களில் தன்னம்பிக்கை என்ற தலைப்பில் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் சிறப்புரையாற்றி மாணவர்களின் கைதட்டலை பரிசாகப் பெற்றவர் கவிஞர் கவிதாசன்.
கவிஞர் கவிதாசன் நூலான திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் நூல் மதிப்பீடு கவிதை உறவு இதழில் ஏர்வாடியார் எழுதி இருந்தார்கள். மிகச்சிறப்பாக இருந்தது. உப்பில்லாமல் கூட உயிர் வாழலாம். ஆனால் நட்பில்லாமல் உயிர் வாழ முடியாது இந்த வைர வரிகளுக்கு சொந்தக்காரர் கவிஞர் கவிதாசன். நட்பின் மேன்மை பற்றி ரத்தினச் சுருக்கமாக விதைத்த வரிகள். மதுரையில் பேசும் போது மட்டுமன்றி அவர் பேசிடும் எல்லா மேடைகளிலும் இந்த வைர வரிகளை மேற்கோள் காட்டி பேசுவார்கள். அதனை மேற்கோள் காட்டி எழுதிய நூல் மதிப்பீடு மிக நன்று.
நூல் முழுவதும் நிகழ்ச்சிகள், நண்பர்கள், நல்ல அனுபவங்கள், கற்றுக் கொண்ட பாடங்கள், சாதனைகளைத் தந்திருக்கிறார். படிக்க இதமான தமிழ். கவிதாசன் அவர்களின் வாழ்க்கை தான் இந்நூல் என்றாலும் நமது வாழ்க்கைக்கான செய்திகளும் நூலில் நிரம்ப உள்ளன. பயனுள்ள நூல். கவிதாசன் அவர்களைப் பாராட்டிற்குரியவராக்குகிறது நூல்.
ஏர்வாடியார் ஒவ்வொரு நூலின் மதிப்பீடு எழுதும் போது முடிப்பு என்பது மிகவும் முத்தாய்ப்பாக இருக்கும். நூல் ஆசிரியர் படித்தால் பூரித்து மகிழ்வார். இன்னும் தொடர்ந்து நூல்கள் எழுத வேண்டும். ஏர்வாடியாரின் பாராட்டைப் பெற வேண்டும் என்றா உத்வேகத்தை படைப்பாளிக்கும் விதைக்கும் ஆற்றல் ஏர்வாடியாரின் எழுத்துக்கு உண்டு. ஏர்வாடியார் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பது பெருமை. ஏர்வாடியார் நூல் மதிப்பீடு எழுதும் வண்ணம் நாம் நூல் எழுதுகிறோம் என்பது படைப்பாளிகளுக்கு பெருமை.
தோன்றின் புகழோடு தோன்றுக என்ற உலகப் பொதுமறைக்கு இலக்கணமாக வாழ்ந்து வருபவர் ஏர்வாடியார். பெரியவர், சிறியவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர், பணக்காரர், ஏழை என்ற எந்தப் பாகுபாடும் இன்றி எல்லோருடனும் சமமாகப் பழகிடும் பண்பாளர். கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்ற திருக்குறள் போல என்றும் வன்சொல் பயன்படுத்தாதவர். இன்சொல் பேசி எல்லோருடனும் அன்பாகப் பழகி வரும் நல்லவர். சென்னைவாழ் மக்களுக்குரிய பரபரப்பு இல்லாதவர்.
ஏர்வாடியாரை மதுரையில் சந்தித்தாலும் சென்னையில் சந்தித்தாலும் பரபரப்பு இன்றி எப்போதும் ஒரே மாதிரியாக இன்முகத்துடன் உரையாடும் பண்பாளர்.அவருக்கு சினம் வந்து யாரும் பார்த்து இருக்க முடியாது .சினம் கொள்ளாத சீரான மனதிற்கு உரியவர் .பண்பாளார் .பலருக்கு பாடமாக விளங்குபவர்.முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் சொல்வது போல எப்போதும் இயங்கிக் கொண்டே இருப்பவர். பாரத மாநில வங்கியில் இருந்து ஒய்வு பெற்ற பின் ஒய்வுக்கு ஒய்வு தந்து விட்டு ஓய்வின்றி இலக்கிய உலகில் இயங்கி வரும் இனியவர் .
விளம்பர மொழிகள் எழுதி விளம்பரமானவர் கவிஞர் தியாரூ. இவரை எனக்கு அறிமுகம் செய்தவரும் ஏர்வாடியாரே. அவரது நூலான் இரவு 10 மணிக்கு மேல் என்ற சிறுகதைகள் நூல் மதிப்பீடு கவிதை உறவு இதழில் படித்த போது கவிஞர் தியாரூ அவர்களின் மீதான மதிப்பு மேலும் உயர்ந்தது. கவிஞர் தியாரூ அவர்கள் கவிஞர் மட்டுமல்ல சிறந்த சிறுகதை ஆசிரியர் என்பதை பறைசாற்றியது ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு.
எழுத்தின் எல்லாப் பரிமாணங்களிலும் மிளிர்கிறார் கவிஞர் தியாரூ அவர்கள். கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றுடன் கதைக்கலையும் அவருக்குக் கைவந்திருக்கிறது என்பதற்கான சான்று இந்நூல். ஒவ்வொரு கதையிலும் ஒரு உணர்ச்சி திருப்பம் என்று நம்மை எல்லாக் கதைகளும் ஈர்க்கின்றன. ஒரு நல்ல கவிஞர் நல்ல சிறுகதையாசிரியராகியிருப்பதைப் புலப்படுத்துகிற நல்ல தொகுப்பு இந்நூல்.
தமிழறிஞர் மட்டுமன்றி நல்ல கவிஞராகத் திகழும் குலோத்துங்கன் அவர்களின் படைப்புகளில் இருந்து தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் தொகுத்து வழங்கிய குலோத்துங்கப் பண்ணையில் கொய்த கதிர்கள் என்ற இந்த நூலின் விமர்சனம் கவிதை உறவில் படித்து விட்டு நூலினை தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களிடமிருந்து பெற்று விமர்சனம் இணையத்தில் பதிவு செய்தேன். அதனைப் படித்து விட்டு தமிழறிஞர் கவிஞர் குலோத்துங்கன் அவர்கள் படித்து விட்டு பாராட்டி நன்றி சொல்லி எனக்கு மின்னஞ்சல் அனுப்பி வைத்தார்கள். இந்த மகிழ்வான தகவலை தமிழ்த்தேனீ இரா. மோகன் அய்யாவுடன் பகிர்ந்து மகிழ்ந்தேன்.
ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு படித்து மகிழுங்கள்.
அறிவு சார்ந்த ஒரு மனிதர், சமூக அக்கறை மிகுந்த ஒரு தமிழர் அறிவுறுத்தத் தகுதியுள்ள ஒரு கவிஞர் எனும் நிலைகளில், கவிஞர் குலோத்துங்கன் விளங்குகிறார். கலப்பையில் தொடங்கி இன்று கணிப்பொறி இணையம் என்ற அளப்பெரும் வெற்றி போற்ற ஆயிரம் கவிஞர் வேண்டும் என்ற ஆவலின் முதற்கவிஞராகவே அவர் துலங்குகிறார். கவிஞரின் எல்லா நூல்களையும் படித்த நிறைவு மட்டுமல்ல, எல்லா நூல்களையும் படிக்க வேண்டும் என்கிற ஆவலையும் தூண்டுகிற நூல்.
கவிஞர்களை கவிஞர்களாகவே பார்ப்பவர் ஏர்வாடியார். கவிஞர் சார்ந்துள்ள கட்சிகள் பற்றிய கவலை என்றும் கொள்ளாதவர். எந்தக் கட்சியில் இருந்தாலும் படைப்பை மனதார பாராட்டும் உயர்ந்து உள்ளம் பெற்றவர் .
50 நூல்களை விமர்சனம் செய்து புத்தகம் போற்றுதும் என்ற பெயரில் புகழ்பெற்ற வானதி பதிப்பகத்தின் வெளியீடாக எனது 13-ஆவது நூல் வந்தது. ஏர்வாடியாருக்கு அனுப்பி வைத்தேன். உடன் அந்த நூலிற்கும் நூல் மதிப்பீடு கவிதை உறவு இதழில் பதிவு செய்து வளரும் படைப்பாளியான என்னையும் ஊக்கப்படுத்தியவர் ஏர்வாடியார். கவிதை உறவு இதழில் நூல் மதிப்பீடு படித்து விட்டு நான் அடைந்த மகிழ்ச்சியை சொற்களால் எழுதி விட முடியாது. அளப்பரிய ஆனந்தம் அடைந்தேன். நான் மட்டுமல்ல, உள்ளடக்கத்தில் இடம் பெற்ற 50 நூல்களின் ஆசிரியர்களும் அடைந்து இருப்பார்கள்.
கவிஞர் இரா. இரவி சிறந்த கவிஞர் என்பது போலவே சிறந்த சுவைஞரும் கூட. அவரது இணையதளத்தில் தாம் வாசித்த சிறந்த நூல்களை மதிப்பீடு செய்து வெளியிடுவது அவரது பழக்கம் மட்டுமல்ல, பண்பு நலனும் கூட. நல்ல நூல்களை மதிப்பீடு செய்கிறவர்கள் தம்மை இரண்டு வகைகளில் வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். ஒன்று நிறைய வாசிக்கிறார்கள் என்பது, அடுத்தது அவற்றை மதிப்பீடு செய்வதின் மூலம் தம் பெருந்தன்மையைப் புலப்படுத்துகிறார்கள் என்பது இவ்விரண்டு பண்புகளும் கவிஞர் இரவி அவர்களிடம் உள்ளதால் இந்நூல் சாத்தியமாகி இருக்கிறது. இந்நூலில் 50 சிறந்த நூல்களின் கவிஞர் இரா. இரவி பார்த்த கண்ணோட்டம் இடம் பெற்றுள்ளது.
ஏர்வாடியார் பெருந்தன்மை எல்லா நூல் மதிப்பீட்டிலும் வெளிப்படும் என்பது உண்மை. சக படைப்பாளிகள் மீது எந்தவித பொறாமையும் கொள்ளாமல், திறந்த மனதுடன் பாராட்டும் தாயுள்ளத்திற்கு சொந்தக்காரர் ஏர்வாடியார். நூல் மதிப்பீடு என்று பெயரில் படைப்பாளியை காயப்படுத்துவதற்கும் ஒரு கூட்டம் உள்ளது. ஆனால் ஏர்வாடியார் ஒரு நூல் படித்து விட்டால், பிடித்து விட்டால் ஒளிவு மறைவு இன்றி உள்ளது உள்ளபடியே உணர்ந்த உணர்வுகளை எழுத்தாக வடித்து கவிதை உறவில் பிரசுரம் செய்து கௌரவப்படுத்துவார்கள்.
நாடறிந்த கவிஞர் நா. காமராசன் அவர்கள், இப்படி புகழ்பெற்ற கவிஞர் தொடங்கி முதல் நூல் வெளியிட்ட வளரும் கவிஞர் வரை பாரபட்சமின்றி நூல் மதிப்பீடு செய்திடும் உயர்ந்த உள்ளத்திற்கு சொந்தக்காரர். கவிதை உறவு இதழில் அவரது நா. காமராசன் கவிதைகள்-ஒரு திறனாய்வு நூல் விமர்சனம் படித்த போது, மதுரையில் கவிஞர் நா. காமராசன் அவர்களுக்கு பார்ச்சூர் பாண்டியன் விடுதியில் இனிய நண்பர் பொறியாளர் ரத்னவேல் அவர்கள் பாராட்டு விழா ஏற்பாடு செய்து இருந்தார்கள். அந்த விழாவில் கவிஞர் நா. காமராசன் அவர்களை பாராட்டிப் பேசி பொன்னாடை போர்த்திய நிகழ்வு என் நினைவிற்கு வந்தது.
நா. காமராசன் கவிதைகள் ஒரு திறனாய்வு (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் திறனாய்வுச் செம்மல் எம்.எஸ். தியாகராஜன் அவர்கள். நாடறிந்த கவிஞர் நா. காமராசன் கவிதைகள் திறனாய்வு செய்தது. திறனாய்வு செய்து பரிசு பெற்றவர் திறனாய்வுச் செம்மல் எம்.எஸ். தியாகராஜன். கவிஞர் பாசந்தி அவர்களின் ஹைக்கூ நூல் திறனாய்வு போட்டி மின்மினி இதழால் நடத்தப்பட்டது. அப்போட்டியில் முதல் பரிசு பெற்றவர் எம்.எஸ். தியாகராஜன் அவர்கள். நான் இரண்டாம் பரிசு பெற்றேன். இந்த விழாவிற்காக சென்னை சென்று மின்மினி ஆசிரியர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் விழா ஏற்பாடு செய்து இருந்தார். இப்படி பல நினைவுகளை மலர்வித்தது இந்த விமர்சனம்.
நா. காமராசன் அவர்கள் புதுக்கவிதைப் பிதாமகர்களில் ஒருவரென்றாலும் மரபறிந்து மீறியவர் என்பதையும் மறவாமல் குறிப்பிட்டுள்ளார் தியாகராஜன். பலவேறு அறிஞர் பெருமக்களின் கருத்துரைகளும் நூலில் இடம் பெற்றுள்ளன. நா. காமராசன் அவர்களை முழுமையாக வெளிப்படுத்தியிருக்கிற நூலாசிரியர் நா. காமராசன் அவர்களை மதிப்பீடு செய்திருக்கிறார் என்பதோடு மதிக்கவும் செய்கிறார் என்பதை இந்நூல் நமக்கு உணர்த்துகிறது.
ஒரே விமர்சனத்தில் கவிஞர் நா. காமராசர் மற்றும் அவரை ஆய்வு செய்து கட்டுரைகள் வடித்த எம்.எஸ். தியாகராஜன் இருவரையும் மனதாரப் பாராட்டி நூல் மதிப்பீடு செய்துள்ளார் ஏர்வாடியார்.
வானொலி நிலையத்தில் இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற்று பேச்சு, எழுத்து இரண்டு துறையில் முத்திரை பதித்து சமீபத்தில் தமிழ்த்துறையின் மகாகவி பாரதியார் விருது பெற்ற இளசை சுந்தரம் அவர்கள் எழுதிய நீங்களும் மகுடம் சூட்டலாம் நூல் மதிப்பீடு கவிதை உறவு இதழில் படித்தேன், வியந்தேன், மகிழ்ந்தேன்.
தலைமைப் பண்பை உருவாக்கிக் கொள்ளுதல் என்ற உயர்ந்தோங்கும் செயலுக்கென உன்னதப் பண்புகளைப் பட்டியலிட்டுப் பெரிதும் விளக்கமாய் எழுதி, வெற்றிமாலை சூடவும், மகுடம் சூடி மகிழவும் இந்நூல் வழியே நல்ல செய்திகளைக் சொல்லியிருக்கிறார் இளசை சுந்தரம். செய்திகளோடு சிறு சிறு கதைகள், நகைச்சுவை என்பனவெல்லாம் நூலை வாசிக்கும் போது நம்மைச் சிலிர்க்கவும், சிரிக்கவும் வைக்கின்றன. வெற்றியாளர்கள் வாசிக்க வேண்டிய நூல்.
ஏர்வாடியார் முதலில் கவிஞர் பிறகு தான் எழுத்தாளர், கட்டுரையாளர் என்பதால் அவர் எழுதிடும் நூல் மதிப்பீடு கவித்துவமாக இருக்கும். சொற்களில் களி நடனம் புரியும். நம்மைச் சிலிர்க்கவும், சிந்திக்கவும் வைக்கின்றன. முதல்எழுத்து ஒன்றி வரும் மோனை, இரண்டாம் எழுத்து ஒன்றி வரும் எதுகை, இறுதி எழுத்து ஒன்றி வரும் இயைபும் நூல் மதிப்பீடு முழுவதும் ஒன்றி வருவதை உணர முடியும்.
ஏர்வாடியாரின் எழுத்துக்களில் புரியாத மாதிரி எதுவுமே இருக்காது.. மிகவும் படித்த பண்டிதர்கள் முதல் அதிகம் படிக்காத பாமரர்கள் வரை படிக்கும் அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிமையாகவும், இனிமையாகவும் இருக்கும். தெளிந்த நீரோடை போல கண்ணாடியாக இருக்கும். எழுத்துக்கு ஆற்றல் உண்டு என்பதை ஏர்வாடியாரின் எழுத்தின் மூலம் உணர முடியும்.
இனிய நண்பர் நம்பிக்கைவாசல் மாத இதழ் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன். பொதுவாக சில பத்திரிகைகள் வேறு பத்திரிகை ஆசிரியர் அந்த விழாவில் பங்கு பெற்றால் அந்தச் செய்தி தம் பத்திரிக்கையில் வருவதை தவிர்த்து விடுவார்கள். இந்த நிலை இன்றைக்கும் பல பிரபல பத்திரிகைகள் கடைபிடித்து வருகின்றன. சில சிற்றிதழ்களுக்கும் இந்த குணம் உண்டு. ஆனால் ஏர்வாடியாருக்கு அத்தகைய குணம் கிடையாது. கவிதை உறவு இதழ் ஆசிரியராக இருந்த போதும் நம்பிக்கை வாசல் இதழ் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் நூல் பற்றியும் நூல் மதிப்பீடு எழுதிடும் உயர்ந்த உள்ளத்திற்கு சொந்தக்காரர் ஏர்வாடியார்.
குறையொன்றுமில்லை வாழ்வியல் சிந்தனைகள் நூலாசிரியர் கவிஞர் ஏகலைவன்.
நம்பிக்கை நாற்றுகளை நாளும் நம் நெஞ்சில் பதித்த பெரியோர் தம் வரலாற்று செய்திகள் நூலின் சிறப்பை மேம்படுத்துகின்றன. இந்நூலைப் படிக்கிற எவருக்கும் வாழ்க்கையில் குறையொன்றுமில்லை என்றே கூறத் தோன்றும். அளவில் சிறிய ஆலமரம், ஆனால் நல்ல நிழல் தரும்.
ஏர்வாடியார் உவமைகள் இனிக்கும் .ஆலமரம். ஆனால் நல்ல நிழல் தரும். ஏர்வாடியாரின் எழுத்தாற்றல் பற்றி நூல் மதிப்பீடுகளின் சிறப்புகள் பற்றி எழுதிக் கொண்டே போகலாம்.
இறுதியாக, நூல் வெளியிடும் ஒவ்வொரு படைப்பாளிக்கும் கவிதை உறவில் நூல் மதிப்பீடு செய்து மகுடம் சூட்டி வரும் மகத்தான பணியினை ஏர்வாடியார் செய்து வருகின்றார். அவர் வாழ்க பல்லாண்டு.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக