ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

Top posting users this week
ayyasamy ram
மனித நேயத்துக்கு வயது நூறு ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! மின்னஞ்சல் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மனித நேயத்துக்கு வயது நூறு ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! மின்னஞ்சல் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மனித நேயத்துக்கு வயது நூறு ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! மின்னஞ்சல் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
heezulia

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித நேயத்துக்கு வயது நூறு ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! மின்னஞ்சல் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Go down

மனித நேயத்துக்கு வயது நூறு ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! மின்னஞ்சல் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Empty மனித நேயத்துக்கு வயது நூறு ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! மின்னஞ்சல் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi Tue Jun 16, 2015 5:10 pm

மனித நேயத்துக்கு வயது நூறு !
நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை !
மின்னஞ்சல் thirugeetha@gmail.com
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
சோக்கோ அறக்கட்டளை ,நீதிபதி பகவதி பவன் ,143.ஏரிக்கரை சாலை ,கே .கே .நகர் ,மதுரை .625020
மின்னஞ்சல் socotrust82@gmail.com

விலை ரூபாய் 100
*****
இந்த நூலை வெளியிட்டவுடன் விமர்சனத்திற்காக எனக்கு அனுப்பியமைக்கு நன்றி . நூலின் பெயர் பொருத்தம் மிக நன்று மனிதநேயத்தின் மறுபெயர்தான் நீதியரசர் கிருஷ்ணய்யர். அக்கிரகாரத்து அதிசய மனிதர்கள் வெகு சிலர் தான்.அவர்களில் ஒருவர் நீதியரசர் கிருஷ்ணய்யர். காந்தியடிகள் -தந்தை பெரியாரிடம், கோபாலகிருஷ்ண கோகலே போன்ற நல்லவர்கள் பிராமண சமூகத்தில் இருக்கின்றனர். நீங்கள் ஏன் அவர்களை திட்டுகிறீர்கள் என்றாராம். அதற்கு தந்தை பெரியார் சொன்னாராம், நீங்கள் மகாத்மா, உங்கள் கண்களுக்கே கோபாலகிருஷ்ண கோகலே ஒருவர் தான் நல்லவராகத் தெரிந்து இருக்கிறார். நான் சாதாரண ஆத்மா, எனக்கு யாரும் தெரியவில்லை என்றாராம். ஆனால் பெரியார், நான் பார்ப்பனியத்தைத் தான் வெறுக்கிறேன். பார்ப்பனர்களை அல்ல என்று சொல்லி ராஜாஜியோடு நட்பொடு வாழ்ந்தார். எனக்கும் பிராமண நண்பர்கள் உண்டு. நாத்திகர் கமல் மீதும் மரியாதை உண்டு.
ஆம்.நீதியரசர் கிருஷ்ணய்யர் அக்கிரகாரத்தில் பிறந்த அதிசய மனிதர். மரணதண்டனைக்கு எதிராக அன்று முதல் இன்று வரை குரல் கொடுத்து வரும் மனிதநேயர். அந்த மாமனிதர் பற்றி எழுதுவதற்கு பிராமணர் அல்லாத இனிய நண்பர் மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை அவர்களுக்கு வாய்ப்பு வழங்கியமைக்கு நீதியரசருக்கு முதற்கண் நன்றி. இந்த நூலை மிகத்தரமாக அச்சிட்டு வெளியிட்டுள்ள சோக்கோ அறக்கட்டளைக்கும் நன்றி.

வாழும் வரலாற்று நாயகர் நீதியரசர் கிருஷ்ணய்யர் பற்றி இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள ஆவணமாக வந்துள்ள நூல். இந்த நூல் அவரது 100வது பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது அரிய செயல். எல்லோருக்கும் வாழும் காலத்திலேயே இப்படி ஒரு பெருமை, புகழ் கிடைப்பதில்லை. இந்த நூல் வெளிவரக் காரணமாக இருந்த சோக்கோ அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் திரு. அ. மகபூப் பாட்சா அவர்கள் நீதியரசரோடு தொடர்பில், நட்பில் இருந்தவர். அவர் பற்றி ஏற்கனவே “நீதிவானில் ஒரு செந்தாரகை” என்ற நூலை எழுதியவர். அவரின் அணிந்துரை நூலிற்கு மிகப் பொருத்தம். இந்த நூல் எழுதிட நூலாசிரியருக்கு ஊக்கம் தந்துள்ளார்.

நீதியரசர் கிருஷ்ணய்யர் திருவள்ளுவரின் திருக்குறள் போல ‘வாழ்வாங்கு வாழ்ந்து வரும் மிகச்சிறந்த ஆளுமையாளர். இவர் வழக்கறிஞர், சட்டமன்ற உறுப்பினர், மாநில அமைச்சர், உயர்நீதிமன்ற நீதியரசர், உச்சநீதிமன்ற நீதியரசர், சட்ட ஆணையத்தின் உறுப்பினர், மனித உரிமைச் செயல்பாட்டாளர். இப்படி படிப்படியாக ஒவ்வொரு பதவியிலும் தனக்கென தனி முத்திரை பதித்திட்ட போதும், மரண தண்டனையை எதிர்ப்பதில் முனைப்புக் காட்டிய மனித உரிமைச் செயல்பாட்டாளராக உலகம் முழுவதும் அறியப்பட்டார். அவருடைய வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகவும், மிகத் தெளிவாகவும் வடித்துள்ள நூலாசிரியருக்கு பாராட்டுக்கள்.

நீதியரசர் கிருஷ்ணய்யர் இந்த நூலைப் படித்தால் நீதியரசரின் வாழ்நாளில் மேலும் பத்து ஆண்டுகள் கூடி விடும் என்று உறுதி கூற முடியும். நீதியரசரின் தந்தை இராமய்யர் சாதிகள் கடந்து, ஏழைகளை நேசித்து பலரின் பாராட்டைப் பெற்றவர். அவரது வளர்ப்பால் வளர்ந்த மகன் கிருஷ்ணய்யரும் மனிதநேயராய் மலர்ந்துள்ள செய்தி நூலில் உள்ளது.

இராமய்யரும் வழக்கறிஞர். புலிக்குப் பிறந்த புலியாகவே கிருஷ்ணய்யர் வளர்ந்துள்ளார். இராமய்யரிடம் ஒரு ஏழை என் வழக்கை நீங்கள் எடுத்து வாதாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். உடன் கிருஷ்ணய்யர் "அப்பா இந்த வழக்கை நீங்கள் எடுத்து வாதாடவில்லை என்றால் நான் சாப்பிட மாட்டேன்." என்று சொல்லி, குழந்தையாக இருந்த போதே ஏழைகளை நேசிக்கத் தொடங்கியவர் கிருஷ்ணய்யர். இப்படி பல தகவல்கள் பரவசம் தந்தன.
உலகில் பிறந்த மனிதர்கள் யாவரும் சமம். ஏற்றத்தாழ்வில் நம்பிக்கை இல்லாதவர் கிருஷ்ணய்யர். தான் உயர்ந்த சாதி என்ற செருக்கு என்றும் வந்ததில்லை அவருக்கு. ஒவ்வொரு வெற்றி பெற்ற மனிதனுக்கு பின்னால் ஒரு பெண் நிற்கிறாள் என்பது முற்றிலும் உண்மை. நீதியரசர் கிருஷ்ணய்யர் என்ற மாமனிதரின் வெற்றிக்கு துணை நின்றவர் அவரது மனைவி சாரதா அவர்கள். பல நேரங்களில் கிருஷ்ணய்யருக்கு ஆலோசனை சொல்பவராகவும், சுமைதாங்கியாகவும் இருந்துள்ளார் என்ற செய்தி பெண்குலத்தை பெருமைப்படுத்தும் தகவல்.

மரணதண்டனையை புரியாமல் ஆதரிக்கும் சிலர் நம்மில் உளர். அவர்களுக்கான விளக்கம் நீதியரசர் கிருஷ்ணய்யர் மொழியில்,

“மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களை அதிலிருந்து காப்பாற்றுவது எனது பணிகளில் ஒன்றாக இருந்தது, இன்னும் சொல்வதானால் மரணதண்டனை என்பது அகிம்சை கொள்கைக்கு எதிரானது. எல்லாக் குற்றங்களும் நோய்களே ; அதற்கு தகுந்த சிகிச்சை தான் தேவை”.சமீபத்தில் இது புரியாமல் இந்தியா அய்.நா.மன்றத்தில் மரணதண்டனைக்கு ஆதரவாக வாக்களித்தது வேதனை.

ஆரம்பத்தில் முப்பது நாட்கள் கண்ணனூர் சிறையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது சிறை குறித்தான விசயங்களை உள்வாங்கினார். பின்னாளில் அவருக்கு மனித உரிமைக்கு குரல் தர உதவியாக இருந்தது. நேர்மையான அரசியல்வாதியாகவும், அமைச்சராகவும் இருந்து உள்ளார். அரசியலில் இருந்து நீதித்துறைக்கு மாறி அங்கும் நேர்மையில் முத்திரை பதிக்கிறார். இங்கிலாந்துக்காரர்கள் ஏற்படுத்திய நீதிபதி வரும்போது செங்கோல் ஏந்தும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தூக்குத் தண்டனையை மாநில அரசால் கூட தடுத்து நிறுத்த முடியும் என்பதை ஆணித்தரமாகச் சொன்னவர் நீதியரசர் கிருஷ்ணய்யர். மனிதனை தூக்கிலிடக் கூடாது. தூக்கைத் தூக்கிலிடுங்கள் என்று முழங்கிய மனித நேயர். பழிவாங்குவது மிருக குணம் என்பதை உணர்த்தியவர். எனக்கு நீதியரசர் கிருஷ்ணய்யர் பற்றி முழுமையாகத் தெரியாது. மரணதண்டனையில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனை எதிர்த்து கவிதைகள் எழுதி உள்ளேன். நீதியரசர் கிருஷ்ணய்யர் அவர்களும் மரணதண்டனைக்கு எதிரான்வர் என்பதால் அவர் மீது எனக்கு மதிப்பும் ,மரியாதையும் உண்டு. இந்த நூல் படித்து அவர் பற்றி முழுமையாக அறிந்து கொண்ட பின் அவர் மீதான மதிப்பு மேலும், மேலும் உயர்ந்தது. நூலாசிரியர் ப. திருமலை அவர்களுக்கு நன்றி.

நீதியர்சர் கிருஷ்ணய்யர் பற்றி முழுமையான புரிதலை உண்டாக்கும் நூல் இது. நீதியரசர்கள் எப்படி? இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்தவர் கிருஷ்ணய்யர்.

தற்போது நீதிபதி மீது நீதிபதியே குற்றம் சுமத்தும் அவலங்கள் நாட்டில் அரங்கேறி வருகின்றது. ‘இவர் போல யாரு? என்று ஊர் சொல்ல வேண்டும்’ என்ற பொன்மொழிக்கு ஏற்ப இவர் போல நீதியரசர் வேறு யாரு? என்று சொல்லுமளவிற்கு தனிப்பெரும் மனிதராக வாழ்ந்து வருகிறார். இவர் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பது நமக்கு பெருமை.

நூல் ஆசிரியர் மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை அவர்கள் நீதியர்சர் கிருஷ்ணய்யர் அவர்களை நேரடியாக சந்தித்து உரையாடி அவரிடம் உண்மைகளை கேட்டறிந்து நூலாக்கி உள்ளார் .அல்ல ஆவணமாக்கி உள்ளார். பாராட்டுக்கள் . வாழும் காலத்திலேயே ஒருமாமனிதர்க்கு செய்த மரியாதை இந்நூல .

தூக்குத் தண்டனையை இந்தியாவிலிருந்து ஒழிப்பது ஒன்றே நாம் அவருக்கு செய்யும் மரியாதையாகும். சமூக நீதிக்காக குரல் கொடுத்து வருபவர். திருச்சூரில் 5.08.1990 அன்று “நாயாடி” சமூகத்தினருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பதவி வழங்க வேண்டும் என்று பேசினார் என்ற தகவலும் நூலில் உள்ளது. இதற்காக பலர் கண்டனம் செய்த தகவலும் உள்ளது.

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் நீதியர்சர் கிருஷ்ணய்யர். சாதி, மத, மொழி, இன வேறுபாடுகள் கடந்து மனிதர்களை நேசிக்கும் மாமனிதர் கிருஷ்ணய்யர் வாழ்க பல்லாண்டு. அவர் பற்றி அரிய நூல் வடித்த நூலாசிரியர் மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை வாழ்க பல்லாண்டு.

.
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

Back to top

- Similar topics
» மனித நேயத்துக்கு வயது நூறு ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நீயென உறுதி செய் ! (சாதனைப் பெண்களின் நிகழ்காலப் பேராற்றல்) நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! . நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» நீயென உறுதி செய் ! (சாதனைப் பெண்களின் நிகழ்காலப் பேராற்றல்) நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! . நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» குற்றங்களே நடைமுறைகளாய் ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நீர் மேலாண்மையைத் தேடி ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum