ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களின் அழகு, ஆரோக்கியத்திற்கு கற்றாழை உணவுகள்

4 posters

Go down

பெண்களின் அழகு, ஆரோக்கியத்திற்கு கற்றாழை உணவுகள் Empty பெண்களின் அழகு, ஆரோக்கியத்திற்கு கற்றாழை உணவுகள்

Post by சிவா Mon Jun 15, 2015 12:40 am


கற்றாழையில் பல வகைகள் இருக்கின்றன. அவை: சிறு கற்றாழை, பெருங்கற்றாழை, பேய்கற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை! இப்படி வகைகள் பல இருந்தாலும், அவைகளில் மருத்துவ குணங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கின்றன.

கற்றாழைக்கு ‘குமரி’ என்ற இன்னொரு பெயரும் உண்டு. அதற்கு இளம் பெண் என்று பொருள். இதனை முறையாக பயன்படுத்தினால் பெண்களுக்கு இளமையும், ஆரோக்கியமும், அழகும் கிடைக்கும்.

பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பத்தடை தொடர்புடைய பல்வேறு சிக்கல்களை தீர்க்கும் மருந்துகள் கற்றாழையில் தயாராகிறது. வேறு பல மருந்துகளும் இதில் தயாரிக்கப்படுகிறது.

கற்றாழையில் தண்ணீர் சத்து அதிகம் உள்ளது. அதில் இருக்கும் கொழகொழப்பான தன்மை ‘கிளைக்கோ புரோட்டின்’ என்ற ஒரு வகை புரதத்தால் உண்டாகிறது. இந்த புரதம் வலிகளையும், வீக்கத்தையும் நீக்கும் சக்தி வாய்ந்தது.

கற்றாழையில் உள்ள சர்க்கரை சத்துகள் உடல் திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. சருமத்தை மென்மையாக்கும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, புது செல்களை உருவாக்கும்.

கோடைக்காலத்தில் சருமத்தில் தோன்றும் வியர்க்குரு, அரிப்பு மற்றும் தேமல்களுக்கு கற்றாழை மருந்தாகிறது. அதில் இருக்கும் கொழகொழப்பான புரதப்பகுதியை எடுத்து, சருமத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவவேண்டும்.

தோலில் உண்டாகும் சோரியாஸிஸ் நோய்க்கு கற்றாழையின் தசைப் பகுதியை எடுத்து, தினமும் பூசி அரை மணி நேரம் வைத்திருக்கவேண்டும். கற்றாழையில் உள்ள நீர் சத்தை சருமம் வேகமாக உள்ளிழுத்துக் கொள்ளும். அதனால் சருமத்தில் ஈரப்பதம் அதிகரித்து, சருமம் மென்மையடையும்.

கற்றாழை தசைப் பகுதியை முகத்தில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும். முகசுருக்கம் நீங்கும். கரும்புள்ளிகள் அகலும். வெயிலில் செல்வதால் முகத்தில் உண்டாகும் நிறமாற்றங் களும் சீராகும்.

தீக் காயங்களில் கற்றாழை தசைப் பகுதியை வைத்துகட்டினால் புண்கள் விரைவாக ஆறும். கற்றாழையில் உள்ள புரதம், சருமம் நார்திசுக்களை உற்பத்தி செய்யவும் துணைபுரியும்.

கற்றாழை மேல்தோலை நீக்கிவிட்டு, அதன் தசைப் பகுதியை எடுத்து தண்ணீரில் ஐந்து முறை நன்கு கழுவி 30 கிராம் அளவு தினமும் சாப்பிட்டு வரவேண்டும். சாப்பிட்டால் உடல் சூடு நீங்கும். மலச்சிக்கல் தீரும். மூலநோய்கள் மற்றும் மூலத்தில் உள்ள சூடு கட்டுப்படும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளில் நிவாரணம் கிடைக்கும். வயிற்றுப் புண் கட்டுப்படும். உடலில் உள்ள சர்க்கரையின் அளவும், கெட்ட கொழுப்பின் அளவும் குறையும். மலச்சிக்கல் உள்ளவர்கள் கற்றாழை சோற்றை 50 கிராம் அளவு சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும்.

கோடைக்காலத்தில் வைரஸ் கிருமிகளின் தாக்கத்தால் கண் வீக்கம், கண்சிவப்பு, கண்எரிச்சல் போன்றவை ஏற்படும். இதற்கு கற்றாழையின் தசைப் பகுதியில் படிகார தூள் தூவி, கண்களை மூடிக்கொண்டு கண்களில் வைத்துக் கட்டவேண்டும். வலி, வீக்கம், எரிச்சல் நீங்கும்.

கற்றாழை கூந்தல் தைலம் தயாரிப்பதற்கும், உடல் அழகுக்கு பயன்படுத்தும் பல்வேறு கிரீம் வகைகள் தயாரிப்பதற்கும் பயன்படுகிறது.

கற்றாழையை இதய நோய்களுக்கு மருந்து உட்கொள்பவர்கள் மற்றும் சிறுநீரக நோய்களுக்கு மருந்து சாப்பிடுபவர்கள் பயன்படுத்த கூடாது.

தீக் காயங்களுக்கு சிறந்த முதல் உதவி மருந்து, கற்றாழை. இதனை மிக எளிதாக வீடுகளில் சிறு தொட்டிகளில் வளர்க்கலாம்.

கற்றாழையை மருந்தாக மட்டுமின்றி, உணவாகவும் சாப்பிடலாம். அதன் விவரம் கீழே தரப்படுகிறது.


பெண்களின் அழகு, ஆரோக்கியத்திற்கு கற்றாழை உணவுகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்களின் அழகு, ஆரோக்கியத்திற்கு கற்றாழை உணவுகள் Empty Re: பெண்களின் அழகு, ஆரோக்கியத்திற்கு கற்றாழை உணவுகள்

Post by சிவா Mon Jun 15, 2015 12:41 am

கூட்டு

கற்றாழை – 2 மடல்
பெ. வெங்காயம் – 1 (சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்)
தக்காளி – 1
இஞ்சி விழுது – 1 தேக்கரண்டி
மிளகாய் – 2
மிளகு பொடி – ½ தேக்கரண்டி
தனியா பொடி – 1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி – ½ தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு

வறுத்து அரைக்க:

சீரகம் – 1 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி
கசகசா – 1 தேக்கரண்டி
மிளகு – ½ தேக்கரண்டி
கிராம்பு – 3
ஏலக்காய் – 3
பட்டை – சிறுதுண்டு
வேர்கடலை பருப்பு – 2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் – 3 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 2

தாளிக்க:

கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1/2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை:

கற்றாழையை தோல் சீவி அதன் தசைப் பகுதியை எடுத்து நீரில் கழுவி, வேகவைத்துக் கொள்ளவும்.

வாணலியில் அரைப்பதற்கான பொருட்களை இட்டு லேசாக வறுத்து பொடி செய்துகொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிவைத்திருக்கும் வெங்காயத்தை கொட்டுங்கள். தக்காளி, மிளகாய் போன்றவைகளை நறுக்கிப்போட்டு தாளியுங்கள். மிளகாய் பொடி, தனியா பொடி, மஞ்சள் பொடி போன்றவைகளை கொட்டி நன்றாக கிளறுங்கள்.

அதில் வேக வைத்துள்ள கற்றாழை துண்டுகள், அரைத்து வைத்திருக்கும் மசாலா பொருட்கள், உப்பு போன்றவைகளை சேருங்கள். ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

இதை சாதம், சப்பாத்தியுடன் சாப்பிடலாம். ராஜஸ்தான் மாநிலத்தில் இது பிரபலமான உணவாகும்.


பெண்களின் அழகு, ஆரோக்கியத்திற்கு கற்றாழை உணவுகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்களின் அழகு, ஆரோக்கியத்திற்கு கற்றாழை உணவுகள் Empty Re: பெண்களின் அழகு, ஆரோக்கியத்திற்கு கற்றாழை உணவுகள்

Post by சிவா Mon Jun 15, 2015 12:41 am

ஜாம்

கற்றாழை தசைப் பகுதி துண்டுகள் – 250 கிராம்
சர்க்கரை – 200 கிராம்
சாரைப் பருப்பு – 10 கிராம்
வெள்ளரி விதை – 10 கிராம்
பாதாம் பருப்பு – 10 கிராம்
பிஸ்தா பருப்பு – 10 கிராம்
நீர்முள்ளி விதை – 10 கிராம்
சலாமிசிறி – 10 கிராம்
ஜாதிக்காய் – 5
நெய் – 50 மி.லி

செய்முறை:

கற்றாழை துண்டுகளை மிக்சியில் இட்டு ஒரு சுற்று அரைத்துக் கொள்ளவும். பருப்பு வகைகளை தனியாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.

பாத்திரத்தில் சர்க்கரையை கொட்டி சிறிது நீர் சேர்த்து பாகு ஆக்கவும். பதத்திற்கு வந்ததும் அரைத்து வைத்துள்ள கற்றாழையை சேர்த்து கிளறவும். பின்பு பொடித்து வைத்துள்ள பருப்பு வகைகளை கலந்து கிளறி, நெய் சேர்க்கவும். நன்றாக கிளறிவிட்டு, பாத்திரத்தில் ஒட்டாத நிலைக்கு வரும்போது அடுப்பை அணைத்து விடவும். ஆறிய பின்பு இதனை கண்ணாடி பாட்டில்களில் அடைத்துவைத்து பயன்படுத்தவும்.

இதை காலை, இரவு 1 தேக்கரண்டி வீதம் இளம் பெண்கள் உண்டு வந்தால், மாதவிடாய் தொடர்புடைய கோளாறுகள் நீங்கும். கருப்பை கோளாறு உடையவர்களும், குழந்தைப் பேறு இல்லாதவர்களும் இதை சாப்பிட்டுவரலாம்.

(குறிப்பு: நீர் முள்ளிவிதை மற்றும் சலாமிசிறி போன்றவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்)


பெண்களின் அழகு, ஆரோக்கியத்திற்கு கற்றாழை உணவுகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்களின் அழகு, ஆரோக்கியத்திற்கு கற்றாழை உணவுகள் Empty Re: பெண்களின் அழகு, ஆரோக்கியத்திற்கு கற்றாழை உணவுகள்

Post by சிவா Mon Jun 15, 2015 12:46 am

சாறு

கற்றாழை மடல் – 1
தண்ணீர் – 1 லிட்டர்
எலுமிச்சைசாறு – 1 தேக்கரண்டி
சர்க்கரை – தேவைக்கு

செய்முறை:

கற்றாழை தசைப் பகுதியை எடுத்து நன்றாக கழுவி, மிக்சியில் அரைத்து அதில் சர்க்கரையை சேருங்கள். சுவைக்கு தக்கபடி எலுமிச்சை சாறு கலந்து கொள்ளுங்கள். இந்த சாறு 100 மி.லி. வரை அருந்தலாம். வயிற்று புண், வாய்புண், சரும நோய் மற்றும் மாதவிடாய் கோளாறுகளை இது சரி செய்யும்.


பெண்களின் அழகு, ஆரோக்கியத்திற்கு கற்றாழை உணவுகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்களின் அழகு, ஆரோக்கியத்திற்கு கற்றாழை உணவுகள் Empty Re: பெண்களின் அழகு, ஆரோக்கியத்திற்கு கற்றாழை உணவுகள்

Post by krishnaamma Mon Jun 15, 2015 12:53 am

இந்த கத்தாழை செடியை நான் பார்த்தது படத்தில் மட்டுமே சிவா புன்னகை.அதற்கு இவ்வளவு உபயோகமா? ............. சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்களின் அழகு, ஆரோக்கியத்திற்கு கற்றாழை உணவுகள் Empty Re: பெண்களின் அழகு, ஆரோக்கியத்திற்கு கற்றாழை உணவுகள்

Post by சிவா Mon Jun 15, 2015 1:33 am

krishnaamma wrote:இந்த கத்தாழை செடியை நான் பார்த்தது படத்தில் மட்டுமே சிவா புன்னகை.அதற்கு இவ்வளவு உபயோகமா? ............. சூப்பருங்க

இதன் காற்றைச் சுவாசித்தாலே ஆரோக்கியம் ! அதனால் தான் இதை வீட்டிற்கு முன் வைத்தால் திருஷ்டி படாது என்று கூறி வீட்டிற்கு முன் கட்டி வைக்கிறார்கள்.

கற்றாழை - Aloe vera


பெண்களின் அழகு, ஆரோக்கியத்திற்கு கற்றாழை உணவுகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்களின் அழகு, ஆரோக்கியத்திற்கு கற்றாழை உணவுகள் Empty Re: பெண்களின் அழகு, ஆரோக்கியத்திற்கு கற்றாழை உணவுகள்

Post by shobana sahas Mon Jun 15, 2015 7:16 am

நான் இதை கட்டாயம் பயன் படுத்த போகிறேன் . இங்கு நெறைய கிடை கிறது . சமைத்து சாப்பிடலாம் என்பது எனக்கு புதிய தகவல் .
யாராவது அதன் சுவை எப்படி இருக்கும் நு சொன்ன நல்ல இருக்கும் ...
பெண்களின் அழகு, ஆரோக்கியத்திற்கு கற்றாழை உணவுகள் 103459460 பெண்களின் அழகு, ஆரோக்கியத்திற்கு கற்றாழை உணவுகள் 3838410834 பெண்களின் அழகு, ஆரோக்கியத்திற்கு கற்றாழை உணவுகள் 1571444738 சிவா அண்ணா
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

பெண்களின் அழகு, ஆரோக்கியத்திற்கு கற்றாழை உணவுகள் Empty Re: பெண்களின் அழகு, ஆரோக்கியத்திற்கு கற்றாழை உணவுகள்

Post by krishnaamma Mon Jun 15, 2015 11:34 pm

சிவா wrote:
krishnaamma wrote:இந்த கத்தாழை செடியை நான் பார்த்தது படத்தில் மட்டுமே சிவா புன்னகை.அதற்கு இவ்வளவு உபயோகமா? ............. சூப்பருங்க

இதன் காற்றைச் சுவாசித்தாலே ஆரோக்கியம் ! அதனால் தான் இதை வீட்டிற்கு முன் வைத்தால் திருஷ்டி படாது என்று கூறி வீட்டிற்கு முன் கட்டி வைக்கிறார்கள்.

கற்றாழை - Aloe vera
மேற்கோள் செய்த பதிவு: 1145192

கொசு வரக் கூடாது என்று சொல்லி கட்டிவைப்பர்களே அது வா சிவா? .....................தப்பா கேட்டுட்டேனோ?................ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்களின் அழகு, ஆரோக்கியத்திற்கு கற்றாழை உணவுகள் Empty Re: பெண்களின் அழகு, ஆரோக்கியத்திற்கு கற்றாழை உணவுகள்

Post by சரவணன் Tue Jun 16, 2015 12:05 am

அது கள்ளி செடி என்று நினைக்கிறன் அம்மா.....இது மருந்து சாப்பிடலாம், தலைக்கு தேய்த்து குளிக்கலாம்...


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பெண்களின் அழகு, ஆரோக்கியத்திற்கு கற்றாழை உணவுகள் Empty Re: பெண்களின் அழகு, ஆரோக்கியத்திற்கு கற்றாழை உணவுகள்

Post by krishnaamma Tue Jun 16, 2015 12:12 am

சரவணன் wrote:அது கள்ளி செடி என்று நினைக்கிறன் அம்மா.....இது மருந்து சாப்பிடலாம், தலைக்கு தேய்த்து குளிக்கலாம்...
மேற்கோள் செய்த பதிவு: 1145502

ஒ... எனக்கு தெரியலை சரவணன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்களின் அழகு, ஆரோக்கியத்திற்கு கற்றாழை உணவுகள் Empty Re: பெண்களின் அழகு, ஆரோக்கியத்திற்கு கற்றாழை உணவுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum