ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
தங்க டெபாசிட் திட்டம் பலன் தருமா? Poll_c10தங்க டெபாசிட் திட்டம் பலன் தருமா? Poll_m10தங்க டெபாசிட் திட்டம் பலன் தருமா? Poll_c10 
Dr.S.Soundarapandian
தங்க டெபாசிட் திட்டம் பலன் தருமா? Poll_c10தங்க டெபாசிட் திட்டம் பலன் தருமா? Poll_m10தங்க டெபாசிட் திட்டம் பலன் தருமா? Poll_c10 
heezulia
தங்க டெபாசிட் திட்டம் பலன் தருமா? Poll_c10தங்க டெபாசிட் திட்டம் பலன் தருமா? Poll_m10தங்க டெபாசிட் திட்டம் பலன் தருமா? Poll_c10 
i6appar
தங்க டெபாசிட் திட்டம் பலன் தருமா? Poll_c10தங்க டெபாசிட் திட்டம் பலன் தருமா? Poll_m10தங்க டெபாசிட் திட்டம் பலன் தருமா? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்க டெபாசிட் திட்டம் பலன் தருமா?

2 posters

Go down

தங்க டெபாசிட் திட்டம் பலன் தருமா? Empty தங்க டெபாசிட் திட்டம் பலன் தருமா?

Post by krishnaamma Sun Jun 14, 2015 1:19 am

தங்க டெபாசிட் திட்டம் பலன் தருமா? XkjZo8AvT6C0gEwzdLlA+E_1433760732

நகையாகவோ, நாணயமாகவோ, நீங்கள், வீட்டில் வாங்கி வைத்திருக்கும் தங்கம் கொஞ்சம் வருமானத்தையும் ஈட்டித்தந்தால் எப்படி இருக்கும்? தங்க டெபாசிட் திட்டம் இதை சாத்தியமாக்கும் நோக்கத்துடன் தான் சமீபத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில், ஏறத்தாழ, 20 ஆயிரம் டன் தங்கம் மக்களிடம் உள்ளது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு, 51 லட்சம் கோடி ரூபாய். இவ்வளவும், நிதி சந்தைக்கு வராமல், வீடுகளில் முடங்கிக் கிடக்கிறது. இதில் ஒரு பகுதியையாவது நிதி சந்தைக்குள் வரவழைத்து, தொழில் முதலீடுகளுக்கு கிடைக்கச் செய்வது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று.
அதே போல், வீடுகளில் உள்ள தங்கத்தை சந்தைக்கு கொண்டு வந்து, சுழற்சி ஏற்படுத்தினால், தங்க இறக்குமதிக்கான தேவையும் குறையும் என, மத்திய அரசு எதிர்பார்க்கிறது.
இதில் தங்கம் வைத்திருப்போருக்கும் நல்ல லாபம் உள்ளது. வங்கிகளில், இந்த திட்டத்தின்படி, தங்கம் டெபாசிட் செய்யப்பட்டால்...
* தங்கம் டெபாசிட் செய்யப்படும் நாளில் உள்ள அதற்கான சந்தை மதிப்பின் படி, டெபாசிட் தொகை கணக்கிடப்படும். அதற்கு குறைந்தபட்சம் ஒரு சதவீதம் வட்டி வழங்கப்பட வேண்டும் என, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால், இதற்கு மேலும் வங்கிகள் எவ்வளவு வேண்டுமானாலும் வழங்கலாம். வல்லுனர்களின் கருத்துப்படி, இது, 3ல் இருந்து 4 சதவீதமாக வங்கிகள் நிர்ணயிக்க வாய்ப்பு உள்ளது.
* அதன்படி, ஒருவர், 10 சவரன் ஆபரண தங்கத்தை (குறைந்தபட்சம், 30 கிராமாவது டெபாசிட் செய்யப்பட வேண்டும் என்பது திட்டத்தின் விதி), சவரனுக்கு, 20 ஆயிரம் ரூபாய் என்ற சந்தை மதிப்பில், இந்த திட்டத்தின் படி, வங்கியில் டெபாசிட் செய்தால், அவருக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம், 2,000 ரூபாய் வட்டி கிடைக்கும். வங்கிகளின் வட்டி விகித நிர்ணயம், 4 சதவீதமாக இருக்கும் பட்சத்தில், இது, 8,000 ரூபாயாக இருக்கும்.
* தங்க டெபாசிட் விதிகள் படி, குறைந்தபட்சம் ஓராண்டிற்கு தங்கத்தை டெபாசிட் செய்ய வேண்டும். அது முதிர்ச்சி அடையும் போது, அன்றைய நிலையில் தங்கத்தின் சந்தை மதிப்பு எவ்வளவு உள்ளதோ அதற்கேற்ப தங்கமாகவோ, ரொக்கமாகவோ திருப்பிப் பெற்றுக் கொள்ளலாம்.
* எப்படி திருப்பிப் பெற்றுக் கொண்டால் லாபம்? மேற்குறிப்பிடப்பட்ட உதாரணத்தின் படி, முதிர்ச்சி நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு, 18 ஆயிரம் ரூபாய் என, குறைந்திருந்தால், ரொக்கமாக பெறுவதில் மூலதன நஷ்டம் ஏற்படும். அதனால், அப்போது தங்கமாகவே பெற்றுக்கொண்டால், இந்த திட்டத்தின் விதிப்படி, 10 சவரன் தங்கமும், அதற்கு மேலதிகமாக வட்டிக்கான தங்கமும் திருப்பிக் கிடைக்கும். இதுவே தங்கத்தின் விலை சவரனுக்கு, 22 ஆயிரம் ரூபாய் என, அதிகரித்து இருந்தால், அதை ரொக்கமாக பெற்றுக் கொண்டு, தங்கத்தின் விலை மீண்டும் குறையும் போது, தங்கத்தை வாங்குவது லாபகரமாக இருக்கும். எப்படி பார்த்தாலும் லாபம் தான்.
* ஆனால், இதில் ஒரு கொக்கி இருக்கிறது. டெபாசிட் செய்யப்பட்ட தங்கத்தை நாம் எப்படி திருப்பிப்பெற விரும்புகிறோம் என்பதை டெபாசிட் செய்யும் போதே குறிப்பிட வேண்டும்! ஆனால், டெபாசிட்டை நீட்டித்துக் கொள்ளும் வசதி உள்ளதால், இதில் உள்ள இழப்பிற்கான வாய்ப்பு பெரும்பாலும் குறைக்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் சேர ஆர்வமாக இருந்தால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை;

* குறைந்தபட்சம், 30 கிராம் தங்கம் டெபாசிட் செய்ய வேண்டும்.

* குறிப்பிட்ட, 'ஹால்மார்க்' மையங்களில் இருந்து உங்கள் தங்கத்திற்கான தர சான்றிதழை பெற வேண்டும்.

* அசல் மற்றும் வட்டி தங்கத்திலேயே மதிப்பீடு செய்யப்படும்.

* நீங்கள் கொடுக்கும் தங்கத்தை, வங்கிகள் உருக்கி, நகைக்கடைகளுக்கு விற்கவோ, லீசுக்கு விடவோ செய்யும். அதனால், நீங்கள் கொடுக்கும் ஆபரணங்கள் அப்படியே திருப்பிக் கிடைக்காது.

தினமலர் - நிதி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தங்க டெபாசிட் திட்டம் பலன் தருமா? Empty Re: தங்க டெபாசிட் திட்டம் பலன் தருமா?

Post by விமந்தனி Sun Jun 14, 2015 6:11 pm

நல்ல பகிர்வு. தங்க டெபாசிட் திட்டம் பலன் தருமா? 1571444738


தங்க டெபாசிட் திட்டம் பலன் தருமா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதங்க டெபாசிட் திட்டம் பலன் தருமா? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தங்க டெபாசிட் திட்டம் பலன் தருமா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

தங்க டெபாசிட் திட்டம் பலன் தருமா? Empty Re: தங்க டெபாசிட் திட்டம் பலன் தருமா?

Post by krishnaamma Sun Jun 14, 2015 10:42 pm

நன்றி விமந்தனி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தங்க டெபாசிட் திட்டம் பலன் தருமா? Empty Re: தங்க டெபாசிட் திட்டம் பலன் தருமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum