ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ட்விட்டரில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:28 am

» ஆத்ம திருப்தி - கவிதை
by Dr.S.Soundarapandian Today at 9:23 am

» கவிதை என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 9:14 am

» தமிழகத்தில் புதிய வகை வைரஸ்; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
by Dr.S.Soundarapandian Today at 9:10 am

» ஒவ்வொரு உயிரினத்தின் ஆயுட்காலமும் வேறுபடுகிறது. இது எதன் அடிப்படையில் அமைகிறது?
by Dr.S.Soundarapandian Today at 9:08 am

» உடலில் குத்தப்படும் பச்சை எவ்வாறு பதிகிறது? அதனால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» மதமாற்ற தடை சட்டத்துக்கு பயப்படறாரு போல!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» அந்த நடிகை ஏன் டிரஸை கழட்டறாங்க!
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» அந்த நடிகை ஏன் டிரஸை கழட்டறாங்க!
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» நல்லா சாப்பிடற ஆளை வெச்சு படம் எடுக்க போகிறேன்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» "நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்?" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:07 pm

» கறுப்பு என்றால் வெறுப்பா?
by Dr.S.Soundarapandian Yesterday at 9:02 pm

» ஜெ.,வின் வேதா இல்லம் 28ல் மக்கள் பார்வைக்கு திறப்பு
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by ayyasamy ram Yesterday at 6:46 pm

» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by T.N.Balasubramanian Yesterday at 3:31 pm

» சசிகலாவுக்கு கொரோனா தொற்று
by T.N.Balasubramanian Yesterday at 3:29 pm

» ஓசூர் அருகே துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை
by T.N.Balasubramanian Yesterday at 3:22 pm

» அருணாச்சல் எங்களுடையது: மீண்டும் சீண்டுகிறது சீனா
by ayyasamy ram Yesterday at 2:47 pm

» கொரோனா கவச உடை அணிந்து 25 கிலோ தங்கம் திருட்டு!
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் ரத்து: தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 2:28 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» நாவல் தேவை
by Daniel Naveenraj Thu Jan 21, 2021 10:58 pm

» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by T.N.Balasubramanian Thu Jan 21, 2021 9:38 pm

» ஆவி- ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Thu Jan 21, 2021 9:31 pm

» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by T.N.Balasubramanian Thu Jan 21, 2021 9:26 pm

» தமிழ் எங்கள் உயிர்
by Dr.S.Soundarapandian Thu Jan 21, 2021 7:59 pm

» தந்திரம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Thu Jan 21, 2021 7:43 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Thu Jan 21, 2021 7:40 pm

» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by ரமணி Thu Jan 21, 2021 5:59 pm

» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
by Daniel Naveenraj Thu Jan 21, 2021 5:49 pm

» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by T.N.Balasubramanian Thu Jan 21, 2021 5:48 pm

» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by T.N.Balasubramanian Thu Jan 21, 2021 5:35 pm

» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Thu Jan 21, 2021 3:05 pm

» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Thu Jan 21, 2021 3:02 pm

» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
by krishnaamma Thu Jan 21, 2021 2:56 pm

» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
by krishnaamma Thu Jan 21, 2021 2:54 pm

» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by krishnaamma Thu Jan 21, 2021 2:51 pm

» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
by T.N.Balasubramanian Thu Jan 21, 2021 2:29 pm

» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
by krishnaamma Thu Jan 21, 2021 2:17 pm

» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
by krishnaamma Thu Jan 21, 2021 12:15 pm

» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by krishnaamma Thu Jan 21, 2021 11:41 am

» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by ayyasamy ram Thu Jan 21, 2021 8:52 am

» அடக்கமுடன் இரு!
by ayyasamy ram Thu Jan 21, 2021 8:51 am

» சிதறியமனம் வலிமை பெற்றது!
by ayyasamy ram Thu Jan 21, 2021 8:45 am

» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்
by velang Thu Jan 21, 2021 8:44 am

» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Wed Jan 20, 2021 9:08 pm

» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Wed Jan 20, 2021 9:03 pm

» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:48 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Wed Jan 20, 2021 6:47 pm

Admins Online

திட்டிக் கொண்டே இருக்கிறேன்

Page 1 of 2 1, 2  Next

Go down

திட்டிக் கொண்டே இருக்கிறேன் Empty திட்டிக் கொண்டே இருக்கிறேன்

Post by Aathira on Sat Jun 13, 2015 2:37 pm

செந்தமிழ்த்தேனி இரா. மதிவாணன் அவர்கள் பொறுப்பு வகிக்கின்ற எல்லா இலக்கிய அமைப்பிலும் என்னை எதாவது பொறுப்பில் போட்டு வைத்து விடுவார். நானும் பொறுப்பெல்லாம் வேண்டாம். வெளியிலிருந்து என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறேன் என்று சொல்வேன். ஆனால் அதெல்லாம் அவர் காதில் விழவே விழாது. அப்படித்தான் அலையன்ஸ் கிளப்பில் என்னை உறுப்பினர் ஆக்கினார். பிறகு சென்னை, தெற்குப் பகுதியின் எக்மோர் கிளையின் பொதுச்செயலாளர் ஆக்கினார்.  நான் ஓரிரு மீட்டிங் மட்டும் கலந்து கொண்டுள்ளேன்.

அன்று அப்படித்தான் “அம்மா அலையன்ஸ் கிளப்பின் இந்த ஆண்டின் முதல் மீட்டிங் திருப்பதியில்.ஒரு நாள்தான் வர முடியுமா?” என்றார். முடியாது என்று சொல்லத்தான் மனம். ஆனால் அப்படி சொல்ல வாய் வரவில்லை. ஞாயிற்றுக்கிழமை என்றால் வருகிறேன் என்றேன். மே 31 ஞாயிற்றுக்கிழமைதான் என்று சொன்னார். வேறு வழியின்றி சரி என்று கூறிவிட்டேன். மே 27 அன்று ஒரு மின்னஞ்சல். தொடர் வண்டி எண், பெட்டி எண், காலம் எல்லாம் போட்டு. முதல் நாள் இரவு அழைத்தும் சொல்லி விட்டார். காலையில் பேருந்தா தானியா என்று நினைத்துக் கொண்டே சாலிகிராமம் பேருந்து நிலையத்தில் இருந்து முதல் பேருந்தைப் பிடித்தேன். முதல் இருக்கையில் அமர்ந்தேன் சரியாக 5.55க்கு செண்ட்ரல் தொடர் வண்டி நிலையத்தில் அறிவிப்புப் பலகையைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மதிவாணன் ஐயாவின் அழைப்பு. நுழைந்து கொண்டே இருக்கிறேன் என்றேன். ஏழாவது தடம் வாருங்கள் என்றார். சென்று அமர்ந்தேன். அப்போது உடன் வர இருந்த மற்ற நால்வரில் ஒருவரும் வரவில்லை. இருக்கையில் அமர்ந்து நலம் விசாரித்து முடிந்ததும் கூறுகின்றார். “உங்களை தென் பகுதி அலையன்ஸ் கிளப்பின் பி.ஆர். ஓவாக போட்டுள்ளேன்!!!” புன்னகைத்துக் கொண்டேன். வேறு என்ன செய்ய?

இப்போது நான் கூற வந்த செய்தி இது அல்ல.

பேருந்தில் சென்று கொண்டிருக்கும் போது, பேருந்து வடபழனி வந்தவுடன் ஒரு பெரியவர் என் பேருந்தில் ஏறினார். முதல் இருக்கையாயிற்றே நான் அமர்ந்திருந்தது. அவரது குடை, , ஊன்று கோல், பை எல்லாவற்றையும் வாங்கி ஓரமாக வைத்து விட்டு நன்றாக அமருங்கள் நான் வேறு இருக்கையில் அமர்கிறேன் என்று கூறிவிட்டு எழுந்தேன் ஓக்காரும்மா. இங்கயே ஒக்காரும்மா என்று சொல்லி என்னைப் போக விடவில்லை.

சில்லரை பைசாவை வேட்டியின் முடிச்சிலிருந்து 5 ரூபாய் எடும்மா என்று என்னிடம் காட்டினார். எடுத்தேன். கையில் வைத்திருந்தேன். நடத்துநர் வந்தவுடன் கையைக் கையை நீட்டினார். நான் கையில் இருந்த காசைக் கொடுத்து விட்டேன். டிக்கட் வாங்கி விட்டு என்னிடம் ஏன் நீ வாங்கிக் கொடுக்கக் கூடாதா என்று ஒரு மிரட்டல். பின்பு பேச ஆரம்பித்தார்.

92 வயது. மூத்த மகள் சென்னையில் இருக்கிறாள். பார்க்க வந்தேன். மாப்பிள்ளை ரொம்ப நல்லவர். எப்ப வந்தாலும் இப்படி வந்து என்னை பஸ் ஏற்றி விட்டுச் செல்வார். (பத்து மணி வண்டிக்கு 5 மணிக்குப் பேருந்தில்)

விருது நகர் அருகில் ஒரு கிராமம். எனக்கு 10 இலட்சம் மதிப்புள்ள பெரிய வீடு. என் இரண்டாவது மகளை நெறைய செலவு பண்ணி எம். ஏ., பி.எட். படிக்க வைத்தேன். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்தாள். வாத்தியாரா வேலை பாக்கறா. வீட்டை சரியாக் கட்டறேன்னு சொன்னா. கட்டுன்னு சொன்னேன். கட்டிட்டு பத்தரத்துல கையெழுத்துப் போடுன்னு சொன்ன. வேற வழியில்லாம போட்டுக் கொடுத்துட்டேன். என்ன வீட்டை விட்டே வெளியில தொறத்திட்டா.

இப்ப தெருவுல யார் யார் வீட்டு வாசல்லயோ படுத்துக்கறேன். நாலு நாள் தொடர்ந்து படுத்தா ஒனக்குத்தான் வீடு இருக்கே. இங்க ஏன் படுக்கறன்னு ஊர்க்காரங்க படுக்கக் கூட விடமாட்டேங்கறாங்க. ரெண்டு பேரப் பசங்க இருக்காங்க. ஒருத்தனுக்குக் கல்யாணம் ஆயிடுச்சி. அவங்க வீட்ல படுக்கவெல்லாம் வசதி இல்ல. இன்னொருத்தன் வேலை தேடிகிட்டு இருக்கான். அவன் ஹாஸ்டல்ல தங்கி இருக்கான். இராத்திரி சாப்பாடு மட்டும் ஒரு வீட்டிலிருந்து வரும். அதைச் சாப்பிட்டுட்டு ஏதாவது கெடச்ச வேலை செய்துகிட்டு இருக்கேன் என்று சொல்லிக் கொண்டே வந்தவர் எக்மோரை கோட்டை விட்டு விட்டார். நான் செண்ட்ரல் செல்ல வேண்டும். அவர் நானும் எக்மோர் என்று நினைத்தாராம்.

பிறகு என்ன செய்ய. அடுத்த ஸ்டாப்பில் இறக்கி விட்டோம். இறங்கும் போது திரும்பவும் டிக்கட் எடுக்க என்னிடம் ஐந்து ரூபாய் இல்லையே என்று கூறிக் கொண்டே இறங்கினார். நானோ அவரது உடமைகளை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். ரூபாய் எடுத்துக் கொடுக்கும் அவகாசம் எனக்கு இல்லை.

அவர்களும் கூலிக்காரர்கள்தான். என் பின் இருக்கையில் அமர்ந்திருந்த இரு பெண்மணிகள். தாத்தா தாத்தா என்று அழைத்து ஒரு ஐந்து ரூபாயை அவர் கையில் கொடுக்கும் போது பேருந்து புறப்பட்டு விட்டது. அவரை விட்டை விட்டுத் துறத்திய அவரது மகளையும் அவருக்கு ஒரு ஐந்து ரூபாய் கொடுத்து உதவ முடியாத என்னையும் இன்னும் என் மனம் திட்டிக் கொண்டே இருக்கிறது.

அந்தப் பெரியவர் யார் என்று பார்க்க வேண்டுமா?
திட்டிக் கொண்டே இருக்கிறேன் 11391474_924469614261907_397047821981780867_n

இவர்தான்....
நானும் அவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட செல்பி சரியாக வரவில்லை. போட்டோவைப் பார்த்து விட்டு அனுப்பி வைப்பியா என்று குழந்தையாக அவர் கேட்டதும் இன்னும் என் மனக்கண்ணில்

Last edited by Aathira on Sat Jun 13, 2015 3:16 pm; edited 1 time in total

திட்டிக் கொண்டே இருக்கிறேன் Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன் Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன் Tதிட்டிக் கொண்டே இருக்கிறேன் Hதிட்டிக் கொண்டே இருக்கிறேன் Iதிட்டிக் கொண்டே இருக்கிறேன் Rதிட்டிக் கொண்டே இருக்கிறேன் Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14369
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

திட்டிக் கொண்டே இருக்கிறேன் Empty Re: திட்டிக் கொண்டே இருக்கிறேன்

Post by சரவணன் on Sat Jun 13, 2015 2:46 pm

என் உதிரத்திலிருந்து உதித்த வெண்ணிலாக்கள்,
சூரியனாய் சுட்டெரிக்குதே!
மனதில் சோகம் மேகமாய் மூடி,
மழையை கண்வழி கொட்டுதே!
அந்த மழை நீரை தேக்கிவைக்க அணையேதும் உண்டா...?
நான் மரணத்தை தழுவ வழி ஏதும் உண்டா?

-- அந்த அடிபட்ட அப்பாவி அப்பாவின் மனவலி!

------------------ சோகம் சோகம் சோகம் .......................................

இந்த பிள்ளைகளுக்கு ஏழேழு ஜென்மனும் நரக தண்டனை கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறோம்!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

திட்டிக் கொண்டே இருக்கிறேன் Empty Re: திட்டிக் கொண்டே இருக்கிறேன்

Post by Aathira on Sat Jun 13, 2015 2:48 pm

@சரவணன் wrote:என் உதிரத்திலிருந்து உதித்த வெண்ணிலாக்கள்,
சூரியனாய் சுட்டெரிக்குதே!
மனதில் சோகம் மேகமாய் மூடி,
மழையை கண்வழி கொட்டுதே!
அந்த மழை நீரை தேக்கிவைக்க அணையேதும் உண்டா...?
நான் மரணத்தை தழுவ வழி ஏதும் உண்டா?

-- அந்த அடிபட்ட அப்பாவி அப்பாவின் மனவலி!

------------------ சோகம் சோகம் சோகம் .......................................

இந்த பிள்ளைகளுக்கு ஏழேழு ஜென்மனும் நரக தண்டனை கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறோம்!
மேற்கோள் செய்த பதிவு: 1144750
நாட்டாமை........ எனக்கும்தான்

திட்டிக் கொண்டே இருக்கிறேன் Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன் Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன் Tதிட்டிக் கொண்டே இருக்கிறேன் Hதிட்டிக் கொண்டே இருக்கிறேன் Iதிட்டிக் கொண்டே இருக்கிறேன் Rதிட்டிக் கொண்டே இருக்கிறேன் Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14369
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

திட்டிக் கொண்டே இருக்கிறேன் Empty Re: திட்டிக் கொண்டே இருக்கிறேன்

Post by சரவணன் on Sat Jun 13, 2015 2:52 pm

உங்களுக்கும் சேர்த்து தான் பிரார்த்தனை பண்ணிருக்கோம்!........ சிரி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

திட்டிக் கொண்டே இருக்கிறேன் Empty Re: திட்டிக் கொண்டே இருக்கிறேன்

Post by ஜாஹீதாபானு on Sat Jun 13, 2015 2:54 pm

பாவம் முதியவர் சோகம் அவர் தன் கதையை சொல்லும்போதே உங்களால் முடிந்ததை குடுத்திருக்கலாமே அக்கா
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 31022
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7405

Back to top Go down

திட்டிக் கொண்டே இருக்கிறேன் Empty Re: திட்டிக் கொண்டே இருக்கிறேன்

Post by Aathira on Sat Jun 13, 2015 10:12 pm

@சரவணன் wrote:உங்களுக்கும் சேர்த்து தான் பிரார்த்தனை பண்ணிருக்கோம்!........ சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1144764
@சரவணன் wrote:உங்களுக்கும் சேர்த்து தான் பிரார்த்தனை பண்ணிருக்கோம்!........ சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1144764 நன்றி நன்றி நன்றி

திட்டிக் கொண்டே இருக்கிறேன் Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன் Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன் Tதிட்டிக் கொண்டே இருக்கிறேன் Hதிட்டிக் கொண்டே இருக்கிறேன் Iதிட்டிக் கொண்டே இருக்கிறேன் Rதிட்டிக் கொண்டே இருக்கிறேன் Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14369
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

திட்டிக் கொண்டே இருக்கிறேன் Empty Re: திட்டிக் கொண்டே இருக்கிறேன்

Post by Aathira on Sat Jun 13, 2015 10:14 pm

@ஜாஹீதாபானு wrote:பாவம் முதியவர் சோகம் அவர் தன் கதையை சொல்லும்போதே உங்களால் முடிந்ததை குடுத்திருக்கலாமே அக்கா
மேற்கோள் செய்த பதிவு: 1144769
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

திட்டிக் கொண்டே இருக்கிறேன் Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன் Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன் Tதிட்டிக் கொண்டே இருக்கிறேன் Hதிட்டிக் கொண்டே இருக்கிறேன் Iதிட்டிக் கொண்டே இருக்கிறேன் Rதிட்டிக் கொண்டே இருக்கிறேன் Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14369
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

திட்டிக் கொண்டே இருக்கிறேன் Empty Re: திட்டிக் கொண்டே இருக்கிறேன்

Post by சிவா on Sun Jun 14, 2015 1:21 am

முதுமைக் கால வாழ்க்கை மிகக் கொடியது என்பதை இதுபோன்ற சம்பவங்கள் உறுதிப்படுத்துகிறது!

92 வயது வரையிலும் நடக்க முடிகிற வகையில் உள்ளார் என்றால், இளமையில் சிறந்த உழைப்பாளியாக இருந்திருக்க வேண்டும்.

இறந்த பிறகு சொர்க்கம், நரகம் என்பதெல்லாம் கட்டுக்கதை. நம் வாழும் காலத்திலேயே அவற்றை அனுபவித்து விடுகிறோம் என்பதே உண்மை!

ஒரு ஆணுக்கான நரகம் எது? அவன் மனைவி அவனுக்கு முன்னராக இறந்துவிடுவது தான்!

ஒரு சிறந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள் அக்கா!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

திட்டிக் கொண்டே இருக்கிறேன் Empty Re: திட்டிக் கொண்டே இருக்கிறேன்

Post by Aathira on Sun Jun 14, 2015 11:04 am

@சிவா wrote:முதுமைக் கால வாழ்க்கை மிகக் கொடியது என்பதை இதுபோன்ற சம்பவங்கள் உறுதிப்படுத்துகிறது!

92 வயது வரையிலும் நடக்க முடிகிற வகையில் உள்ளார் என்றால், இளமையில் சிறந்த உழைப்பாளியாக இருந்திருக்க வேண்டும்.

இறந்த பிறகு சொர்க்கம், நரகம் என்பதெல்லாம் கட்டுக்கதை. நம் வாழும் காலத்திலேயே அவற்றை அனுபவித்து விடுகிறோம் என்பதே உண்மை!

ஒரு ஆணுக்கான நரகம் எது? அவன் மனைவி அவனுக்கு முன்னராக இறந்துவிடுவது தான்!

ஒரு சிறந்த அனுபவத்தைப்  பகிர்ந்து கொண்டுள்ளீர்கள் அக்கா!
மேற்கோள் செய்த பதிவு: 1144980
சிறந்த உழைப்பாளி மட்டுமல்ல. அனுபவசாலி, அரசியல் (சுதந்திரப் போராட்டம் பற்றியெல்லாம் பேசிக்கொண்டு வந்தார்., படிப்பு பற்றியெல்லாம் நன்றாகச் சொன்னார். அதனால்தான் என்னால் அவர் கையில் ரூபாய் இல்லாமல் பயனிப்பவர் போல தெரியவில்லை.   அத்தனை கம்பீரமான பேச்சு. போய்ட்டுப் போகட்டும் நான் பெத்த மகள்தானே என்று தாய் வேண்டுமானால் சொல்வாள். தந்தைக்கு அவ்வளவு தியாகம் இருக்காது. ஆனால் அவர் அப்படிச் சொன்னார். கெளரவுத்துடன் வாழ்பவரை நாம் மனம் வருத்தப் பட வைத்து விடக் கூடாது. அது மிகவும் முக்கியம் இல்லையா.

Last edited by Aathira on Sun Jun 14, 2015 11:15 am; edited 1 time in total

திட்டிக் கொண்டே இருக்கிறேன் Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன் Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன் Tதிட்டிக் கொண்டே இருக்கிறேன் Hதிட்டிக் கொண்டே இருக்கிறேன் Iதிட்டிக் கொண்டே இருக்கிறேன் Rதிட்டிக் கொண்டே இருக்கிறேன் Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14369
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

திட்டிக் கொண்டே இருக்கிறேன் Empty Re: திட்டிக் கொண்டே இருக்கிறேன்

Post by ராஜா on Sun Jun 14, 2015 11:13 am

சோகம் மிகவும் வருத்தமாக உள்ளது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

http://www.eegarai.net

Back to top Go down

திட்டிக் கொண்டே இருக்கிறேன் Empty Re: திட்டிக் கொண்டே இருக்கிறேன்

Post by Aathira on Sun Jun 14, 2015 11:18 am

@ராஜா wrote:சோகம் மிகவும் வருத்தமாக உள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1145014
நீங்கல்லாம் இருக்கற தைரியத்துலதான் நானெல்லாம் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் இருக்கிறேன் ராஜா,

திட்டிக் கொண்டே இருக்கிறேன் Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன் Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன் Tதிட்டிக் கொண்டே இருக்கிறேன் Hதிட்டிக் கொண்டே இருக்கிறேன் Iதிட்டிக் கொண்டே இருக்கிறேன் Rதிட்டிக் கொண்டே இருக்கிறேன் Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14369
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

திட்டிக் கொண்டே இருக்கிறேன் Empty Re: திட்டிக் கொண்டே இருக்கிறேன்

Post by தமிழ்நேசன்1981 on Sun Jun 14, 2015 11:36 am

இவரை போன்ற பெரியவர்கள்(மனதிலும்) நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்களை வாடவிடும் சிறியவர்கள்(மனதிலும்) இதே கொடுமையை அவர்களது பிள்ளைகலால் அனுபவிப்பார்கள் வெகு நிச்சயமாக இது நடக்கும். நடந்து கொண்டுதான் இருக்கிறது. உடம்பில் நல்ல இரத்த ஓட்டம் இருக்கும் வரை இதை அவர்கள் உணரமாட்டார்கள். உடல் தளரும்போது கை கொடுக்க ஆளிருக்கமாட்டார்கள்..
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989

Back to top Go down

திட்டிக் கொண்டே இருக்கிறேன் Empty Re: திட்டிக் கொண்டே இருக்கிறேன்

Post by T.N.Balasubramanian on Sun Jun 14, 2015 12:55 pm

பெற்றோரை காப்பாற்றும் காலங்கள் ,90% நம் தலை முறையுடன், முடிந்து விடும் என்ற எண்ணம் தான் மேலோக்கி நிற்கிறது . அதிக எண்ணிக்கையில் ,வளர்ந்து வரும் முதியோர் இல்லங்கள்
அதற்கு சாக்ஷி .
சுயகாலில் நிற்கும் வரை நின்றுவிட்டு , உடல் நன்றாக இருக்கும் போதே , உயிர் ,பொட்டென, பிரிந்தால் , அதிர்ஷ்டசாலிகள் நாம் .
92 வயது முதியவர் ,ஐயோ பாவம் !
ஆதிரா , எடிட் செய்து , உங்கள் FB இல் போடலாமே !

ரமணியன்

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 27824
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9909

Back to top Go down

திட்டிக் கொண்டே இருக்கிறேன் Empty Re: திட்டிக் கொண்டே இருக்கிறேன்

Post by விமந்தனி on Sun Jun 14, 2015 5:42 pm

பாவம் பெரியவர். மனதிற்கு கஷ்ட்டமாய் இருக்கிறது. அப்புறம் எப்படி போனாரோ ....

அவர் எதற்கு ஊருக்கு போகணும், அவர் மகள் வீட்டிலேயே தங்கியிருக்கலாமே... அந்த ஒரு ஜீவனுக்கா வீட்டில் இல்லாமல் பிபோய்விட்டது....? அவரின் தாய் மனம் அதை கூட தவறாக நினைக்கவில்லை.....

திட்டிக் கொண்டே இருக்கிறேன் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதிட்டிக் கொண்டே இருக்கிறேன் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312திட்டிக் கொண்டே இருக்கிறேன் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

திட்டிக் கொண்டே இருக்கிறேன் Empty Re: திட்டிக் கொண்டே இருக்கிறேன்

Post by விமந்தனி on Sun Jun 14, 2015 5:44 pm

@தமிழ்நேசன்1981 wrote:இவரை போன்ற பெரியவர்கள்(மனதிலும்) நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்களை வாடவிடும் சிறியவர்கள்(மனதிலும்) இதே கொடுமையை அவர்களது பிள்ளைகலால் அனுபவிப்பார்கள் வெகு நிச்சயமாக இது நடக்கும். நடந்து கொண்டுதான் இருக்கிறது. உடம்பில் நல்ல இரத்த ஓட்டம் இருக்கும் வரை இதை அவர்கள் உணரமாட்டார்கள். உடல் தளரும்போது கை கொடுக்க ஆளிருக்கமாட்டார்கள்..

உண்மை, உண்மை... ஆமோதித்தல் ஆமோதித்தல்

திட்டிக் கொண்டே இருக்கிறேன் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதிட்டிக் கொண்டே இருக்கிறேன் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312திட்டிக் கொண்டே இருக்கிறேன் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

திட்டிக் கொண்டே இருக்கிறேன் Empty Re: திட்டிக் கொண்டே இருக்கிறேன்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum