ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவலை இல்லாத ஓய்வுக்காலம்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

4 posters

Go down

கவலை இல்லாத ஓய்வுக்காலம்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Empty கவலை இல்லாத ஓய்வுக்காலம்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

Post by பாலாஜி Thu Jun 11, 2015 4:27 pm

நம் வாழ்க்கையின் முதல் 25 வருடம் பெற்றோரை நம்பியே இருக்கிறோம். அடுத்த 35 வருடங்கள் நம்மை நம்பியே நாம் இருக்கிறோம். அதற்குமேல் இருக்கும் 20 ஆண்டுகள் வாரிசுகளையே நம்பி காலத்தை ஓட்டவேண்டிய கட்டாயம்தான் இன்றைக்கு பலருக்கும் இருக்கிறது. ஒவ்வொரு தனி மனிதனும் தனது ஓய்வுக்காலத்துக்காக திட்டமிட்டு பணத்தை சேமித்து வைத்திருந்தால், 60 வயதுக்கு மேல் எந்த பெரிய பிரச்னையும் இல்லாமல் காலத்தை ஓட்டிவிடலாம். ஆனால், அந்த வயதில் நிம்மதியாக காலத்தைக் கழிக்க எந்த ஏற்பாட்டையும் செய்யாமல் விட்டிருந்தால், ஓய்வுக்காலமானது நரகமாகிவிடும்.

கவலை இல்லாத ஓய்வுக்காலம்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! P52a

இன்றைக்கு 55 வயதில் இருப்பவர்களில் எத்தனை பேர் தங்கள் ஓய்வுக்காலத்துக்காக சரியாகத் திட்டமிடுகிறார்கள் என்பது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே, ஓய்வுக்காலத்துக்கான திட்டமிடலில் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

1. கடன் சுமை இல்லாத ஓய்வு!

ஒருவர் ஓய்வுக் காலத்தை நெருங்கும்போது எந்தவித கடன் பாக்கியும் இல்லாமல் இருப்பது அவசியம். தற்போதைய நிலையில், ஓய்வுபெற இன்னும் சில ஆண்டுகளே இருக்கும் நிலையில், வீட்டுக் கடனை கணிசமாக வைத்திருக்கிறார்கள் சிலர். இன்னும் சிலர் மகன் அல்லது மகளின் திருமணத்துக்கு கடன் வாங்கிவிடுகிறார்கள்.

இந்தக் கடன்கள் ஓய்வுக் காலத்திலும் தொடர்ந்தால், வருமானம் இல்லாதபோது அதை சரியாகக் கட்டுவதற்கான வாய்ப்பு இருக்காது. அப்போது வட்டி அதிகரித்து, நிலைமை மேலும் சிக்கலுக்குள்ளாகும். எனவே, ஏதாவது கடன் பெறும்போது அந்தக் கடனை ஓய்வுக்காலத்துக்கு முன்னர் திருப்பிச் செலுத்த முடியுமா எனக் கவனித்துப் பெறுவது நல்லது. அதிக வட்டி செலுத்தக்கூடிய தனிநபர் கடன், கடன் அட்டை, நகைக்கடன் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

2. அவசரக் கால நிதித் திட்டமிடல்!

ஓய்வுக் காலத்தின்போது அவசரத் தேவைகளுக்கு என குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வைப்பது முக்கியம். காரணம், அந்த வயதில்தான் பல செலவுகள் வந்து சேரும். முக்கியமாக, இந்த வயதில் திடீரென உடல்நிலை சரியில்லாமல் போக வாய்ப்புண்டு.

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து வைத் திருந்தாலும் அவசரக் கால நிதித் திட்டமிடல் படி கொஞ்சம் பணத்தைச் சேர்த்து வைத்திருந்தால்தான், கவலைப்படாமல் திடீர் செலவுகளை நம்மால் சமாளிக்க முடியும்.

இந்த வகையான சேமிப்பு எந்த நேரத்திலும் திரும்பப் பெறக்கூடிய முதலீடுகளில் இருப்பது அவசியம். அன்றாடத் தேவைகளுக்குத் தேவையான தொகையை வங்கி சேமிப்பிலும் இதரத் தேவைகளுக்குத் தேவையான தொகையை லிக்விட் மியூச்சுவல் பண்ட் திட்டங்களிலும் வைத்துக் கொள்ளலாம்.

3. செலவுகளுக்கான திட்டமிடல்!

ஓய்வுக் காலத் தின் போது நாம் செய்யும் செலவு களை மறு ஆய்வு செய்வது அவ சியம். பணியிலி ருக்கும்போது அன்றாடப் போக்குவரத்துச் செலவு, உடைகளுக்கான செலவு மற்றும் இதரச் செலவுகள் அதிகமாக இருக்கும். ஓய்வுக் காலத்தின்போது இத்தகைய செலவுகளைக் குறைத்துக் கொள்வது அவசியம். நாம் செய்யும் மொத்தச் செலவு நம் வருமானத்துக்குள் அடங்கி உள்ளதா என்பதை உறுதிச் செய்துகொள்வது அவசியம்.

4. முதலீடுகளின் விவரங்களைத் தெரியப்படுத்துதல்!

நாம் செய்யும் அனைத்து முதலீடுகளின் விவரங்களையும் அது சம்பந்தமான ஆவணங்களை யும் நமது குடும்ப உறுப்பினர்கள் நன்கு அறியும்படி பாதுகாப்பாக வைத்துக் கொள்வது அவசியம். அந்த முதலீடுகள் சம்பந்தமாகத் தொடர்புகொள்ள வேண்டிய நபர்கள் அவர்களது தொலைபேசி எண்கள், முகவரி அனைத்தையும் அதனுடன் இணைத்து வைத்துக் கொள்வது அவசியம்.

சிலர் சம்பாதிக்கும் காலத்தில் வங்கி எஃப்டி-களில் பணத்தைப் போட்டு வைக்கிறார்கள். இன்னும் சிலர் பல்வேறு இன்ஷூரன்ஸ் பாலிசிகளையும் எடுக்கிறார்கள். ஆனால், இதைப் பற்றி எல்லாம் குடும்பத்து உறுப்பினர்களிடம் அவர்கள் சொல்லாமலே இருந்து விடுகிறார்கள். இதுமாதிரியான சமயத்தில் திடீரென அவர்கள் மறைந்துவிடும்போது, அந்த பணம் குடும்பத்து உறுப்பினர்களுக்கு சேராமலே போய்விடுகிறது. இந்தியா முழுக்க பல வங்கிகளில் கேட்பாரற்றுக் கிடக்கும் பணம் மட்டுமே பல ஆயிரம் கோடி ரூபாயாகும். எனவே, எந்த முதலீடாக இருந்தாலும் அது பற்றிய விவரங்களை குடும்பத்து உறுப்பினர்களுக்கு அவசியம் தெரியப்படுத்த வேண்டும்.

5. முதலீடுகளில் இரண்டாவது நபரை நியமித்தல்!


முதலீடு பற்றிய விவரங்களை குடும்பத்து உறுப் பினர் களுக்கு தெரியப் படுத்துவது எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு முக்கியம், முதலீடுகளை மேற்கொள்ளும்போது குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவரை இரண்டாவது நபராகச் சேர்த்துக் கொள்வது.

இதனால் பிற்காலத்தில் நடைமுறை சிக்கல்களைத் தவிர்க்க உதவியாக இருக்கும். உதாரணமாக, முதலீடுகளை மேற்கொள்ளும் போது மனைவியின் பெயரை இரண்டாவது நபராகச் சேர்க்கும்போது இருவரும் அந்த முதலீடு சம்பந்தமான பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும். ஓய்வுக்காலத்தில் உடல்நிலை சரியில்லாத நேரங்களில் முதலீடுகளில் ஏதேனும் பரிவர்த்தனைகள் செய்ய வேண்டுமாயின் யாரேனும் ஒருவர் அதனைக் கவனிக்க ஏதுவாக இருக்கும்.

6. ஓய்வுக்காலத்துக்குத் தேவையான நிதியை கண்டறிதல்!

ஒருவரின் ஓய்வுக்காலம் முதல் தோராயமாக எத்தனை ஆண்டுகள் வரை ஓய்வுக்காலம் தொடரும் என்பதைக் கணித்து அத்தனை ஆண்டுகளுக்குத் தேவையான தொகையை முதலீடுகளின் மூலம் பெருக்குவது அவசியம். உதாரணமாக, ஒருவர் 60 வயதில் ஓய்வுபெற வேண்டுமானால் அன்றிலிருந்து குறைந்தபட்சம் அடுத்த 20 ஆண்டுகளுக்குத் தேவையான தொகையைச் சேமித்து வைத்திருக்க வேண்டும்.

தற்போது நம் நாட்டில் சராசரி ஆயுள் காலம் கணிசமாக அதிகரித்திருப்பதால், 80 வயது வரைக்கும் தேவையான தொகை கிடைக்கிறமாதிரி திட்டமிடுவது அவசியம். இல்லாவிட்டால், மீதமிருக்கும் காலத்தை வாரிசுகளை நம்பி கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும்.

7. பணத்தேவையைத் திட்டமிடல்!

முதலீடுகளின் மீதான வருமானத்தை தேவைக்கு ஏற்றாற்்போல் ஒவ்வொரு மாதமோ, மூன்று மாதங்களுக்கு ஒருமுறையோ கிடைக்கும்படி திட்டமிடுவது தேவையற்றப் பணச் சிக்கல்களைத் தவிர்க்கும்.

நாம் செய்யும் செலவுகளில் அன்றாடம் செய்யும் செலவு, மாதம் ஒருமுறை செய்யும் செலவு, வருடத்துக்கு ஒருமுறை செய்யும் செலவு எனப் பிரித்துப் பட்டியல் இடுவதன் மூலம் எந்த நேரத்தில் எவ்வளவு பணத்தை முதலீடுகளிலிருந்து பெற வேண்டும் என்பதைத் திட்டமிடுவதற்கு உதவியாக இருக்கும்.

8. வருமான வரித் திட்டமிடல்!

முதலீடுகளில் வரும் வரு மானத்துக்கான வரியைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரியைக் குறைக்கவோ, தவிர்க்கவோ முடியும். உதாரணமாக, மூத்த குடிமக்களுக்கு எனப் பிரத்யேகமாக வழங்கப்படும் வரிச்சலுகைகள், சேமிப்புத் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் வரிச்சுமையைக் குறைக்கலாம்.

9. போதுமான மருத்துவக் காப்பீடு பெறுதல்!

தற்போது நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்குவதால், பெரும்பாலானவர்கள் தனியாக மருத்துவக் காப்பீடு எடுக்கத் தயக்கம் காட்டுகிறார்கள். பணி முடிந்து ஓய்வு பெறும்போது மருத்துவக் காப்பீடு பெறுவது என்பது பல்வேறு நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்தும்.

இதனைத் தவிர்க்க முன்கூட்டியே மருத்துவக் காப்பீடு எடுத்தல் அவசியம். அறுபது வயதுக்குப் பிறகு மருத்துவ சிகிச்சைக்காக ஆகும் செலவு அதிகமாக இருக்கும் என்பதால், போதுமான மருத்துவக் காப்பீடு அவசியம் தேவை.

10. வாரிசுகளுக்குப் பிரித்தளித்தல்!

நமது காலத்துக்குப் பின், நம் சொத்துக்களை நமது வாரிசு களுக்கு எவ்வாறு பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்து உயில் மூலம் அதனைச் செயல்படுத்த வேண்டும். நாம் சேமித்த பணத்தை நம் காலத்துக்குப் பின் சரியான நபர்களிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தல் நமது கடமையாகும். இதைச் செய்யத் தவறினால் பிற்காலத்தில் வாரிசுகளுக்குள் தேவையற்ற மனக்கசப்புகளுக்கு வழி வகுக்கும்.

மேற்குறிப்பிட்ட வழிகளை ஒருவர் சரியாகப் பின்பற்றுவதன் மூலம் ஒருவர் தனது ஓய்வுக்காலத்தை நிம்மதியாகக் கழிக்க முடியும்.

--ந. விகடன்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கவலை இல்லாத ஓய்வுக்காலம்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Empty Re: கவலை இல்லாத ஓய்வுக்காலம்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

Post by krishnaamma Thu Jun 11, 2015 4:51 pm

வழக்கம் போல அருமையான பகிர்வு பாலாஜி புன்னகை................. சூப்பருங்க

//முதலீடுகளின் விவரங்களைத் தெரியப்படுத்துதல்!

நாம் செய்யும் அனைத்து முதலீடுகளின் விவரங்களையும் அது சம்பந்தமான ஆவணங்களை யும் நமது குடும்ப உறுப்பினர்கள் நன்கு அறியும்படி பாதுகாப்பாக வைத்துக் கொள்வது அவசியம். அந்த முதலீடுகள் சம்பந்தமாகத் தொடர்புகொள்ள வேண்டிய நபர்கள் அவர்களது தொலைபேசி எண்கள், முகவரி அனைத்தையும் அதனுடன் இணைத்து வைத்துக் கொள்வது அவசியம்.

சிலர் சம்பாதிக்கும் காலத்தில் வங்கி எஃப்டி-களில் பணத்தைப் போட்டு வைக்கிறார்கள். இன்னும் சிலர் பல்வேறு இன்ஷூரன்ஸ் பாலிசிகளையும் எடுக்கிறார்கள். ஆனால், இதைப் பற்றி எல்லாம் குடும்பத்து உறுப்பினர்களிடம் அவர்கள் சொல்லாமலே இருந்து விடுகிறார்கள். இதுமாதிரியான சமயத்தில் திடீரென அவர்கள் மறைந்துவிடும்போது, அந்த பணம் குடும்பத்து உறுப்பினர்களுக்கு சேராமலே போய்விடுகிறது. இந்தியா முழுக்க பல வங்கிகளில் கேட்பாரற்றுக் கிடக்கும் பணம் மட்டுமே பல ஆயிரம் கோடி ரூபாயாகும். எனவே, எந்த முதலீடாக இருந்தாலும் அது பற்றிய விவரங்களை குடும்பத்து உறுப்பினர்களுக்கு அவசியம் தெரியப்படுத்த வேண்டும்.//

இதுக்கு ரிடையர் ஆவது வரை காத்திருக்க வேண்டாம் என்பது என் கணிப்பு, எத்தனை பேர் நடுவில் 'போய்' விடுகிறார்கள்?........இவற்றை எடுக்கும் போதே  குடும்பதுக்கு தெரியப்படுத்துவது தான் நல்லது, afterall  நாம் எடுப்பதே அவர்களுக்காகத் தானே  ? புன்னகை
.
.
இல்லாவிட்டால் நாம் அப்புறம் 'சூர்யா' போல ஒருத்தருக்காக காத்திருக்கணும் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கவலை இல்லாத ஓய்வுக்காலம்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Empty Re: கவலை இல்லாத ஓய்வுக்காலம்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

Post by சரவணன் Thu Jun 11, 2015 8:51 pm

கவலை இல்லாத ஓய்வுக்காலம்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! 3838410834 கவலை இல்லாத ஓய்வுக்காலம்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! 103459460 கவலை இல்லாத ஓய்வுக்காலம்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! 1571444738

நோயின்றி வாழ்ந்தாலே போதும்....நிம்மதியா வாழலாம்...ஐடியாக்கள் சூப்பர் அண்ணா...........


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கவலை இல்லாத ஓய்வுக்காலம்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Empty Re: கவலை இல்லாத ஓய்வுக்காலம்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

Post by shobana sahas Fri Jun 12, 2015 4:10 am

கொஞ்சம் பயம்மா இருக்கு .... அந்த காலத்தை நினைத்தாலே .... சோகம் சோகம்
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

கவலை இல்லாத ஓய்வுக்காலம்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Empty Re: கவலை இல்லாத ஓய்வுக்காலம்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

Post by krishnaamma Sat Jun 13, 2015 2:05 am

சரவணன் wrote:கவலை இல்லாத ஓய்வுக்காலம்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! 3838410834 கவலை இல்லாத ஓய்வுக்காலம்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! 103459460 கவலை இல்லாத ஓய்வுக்காலம்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! 1571444738

நோயின்றி வாழ்ந்தாலே போதும்....நிம்மதியா வாழலாம்...ஐடியாக்கள் சூப்பர் அண்ணா...........
மேற்கோள் செய்த பதிவு: 1144092

நிஜம் சரவணன் புன்னகை HEALTH IS WEALTH !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கவலை இல்லாத ஓய்வுக்காலம்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Empty Re: கவலை இல்லாத ஓய்வுக்காலம்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum