புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இல்லம் என்னும் இனிய பள்ளி! Poll_c10இல்லம் என்னும் இனிய பள்ளி! Poll_m10இல்லம் என்னும் இனிய பள்ளி! Poll_c10 
56 Posts - 73%
heezulia
இல்லம் என்னும் இனிய பள்ளி! Poll_c10இல்லம் என்னும் இனிய பள்ளி! Poll_m10இல்லம் என்னும் இனிய பள்ளி! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
இல்லம் என்னும் இனிய பள்ளி! Poll_c10இல்லம் என்னும் இனிய பள்ளி! Poll_m10இல்லம் என்னும் இனிய பள்ளி! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
இல்லம் என்னும் இனிய பள்ளி! Poll_c10இல்லம் என்னும் இனிய பள்ளி! Poll_m10இல்லம் என்னும் இனிய பள்ளி! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இல்லம் என்னும் இனிய பள்ளி! Poll_c10இல்லம் என்னும் இனிய பள்ளி! Poll_m10இல்லம் என்னும் இனிய பள்ளி! Poll_c10 
221 Posts - 75%
heezulia
இல்லம் என்னும் இனிய பள்ளி! Poll_c10இல்லம் என்னும் இனிய பள்ளி! Poll_m10இல்லம் என்னும் இனிய பள்ளி! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
இல்லம் என்னும் இனிய பள்ளி! Poll_c10இல்லம் என்னும் இனிய பள்ளி! Poll_m10இல்லம் என்னும் இனிய பள்ளி! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
இல்லம் என்னும் இனிய பள்ளி! Poll_c10இல்லம் என்னும் இனிய பள்ளி! Poll_m10இல்லம் என்னும் இனிய பள்ளி! Poll_c10 
8 Posts - 3%
prajai
இல்லம் என்னும் இனிய பள்ளி! Poll_c10இல்லம் என்னும் இனிய பள்ளி! Poll_m10இல்லம் என்னும் இனிய பள்ளி! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இல்லம் என்னும் இனிய பள்ளி! Poll_c10இல்லம் என்னும் இனிய பள்ளி! Poll_m10இல்லம் என்னும் இனிய பள்ளி! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இல்லம் என்னும் இனிய பள்ளி! Poll_c10இல்லம் என்னும் இனிய பள்ளி! Poll_m10இல்லம் என்னும் இனிய பள்ளி! Poll_c10 
3 Posts - 1%
Barushree
இல்லம் என்னும் இனிய பள்ளி! Poll_c10இல்லம் என்னும் இனிய பள்ளி! Poll_m10இல்லம் என்னும் இனிய பள்ளி! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இல்லம் என்னும் இனிய பள்ளி! Poll_c10இல்லம் என்னும் இனிய பள்ளி! Poll_m10இல்லம் என்னும் இனிய பள்ளி! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
இல்லம் என்னும் இனிய பள்ளி! Poll_c10இல்லம் என்னும் இனிய பள்ளி! Poll_m10இல்லம் என்னும் இனிய பள்ளி! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இல்லம் என்னும் இனிய பள்ளி!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 11, 2015 11:41 am

இல்லம் என்னும் இனிய பள்ளி! P1k97FMVSGyBKeWVfJWt+Tamil_News_large_1271986

தகவல்களை மூளைக்குள் குவிப்பது மட்டுமா கல்வி? குழந்தைகளின் ஆளுமை, அவர்களின் மொழிவளர்ச்சி, சிந்தனைத் திறன், கற்பனையாற்றல், படைப்புத்திறன், தன்னம்பிக்கை, உயரிய மதிப்பீடுகள், நற்பண்புகள், மனிதநேயம், நம்பண்பாடு, கலாசாரம் கற்றல், மற்றவர்களை மதித்தல், நற்செயலைச்செய்தல், விட்டுக்கொடுத்தல் ஆகிய அனைத்தையும் கற்றுக்கொள்வதல்லவா கல்வி!வகுப்பறைகள் மாறிவிட்டன.

சாக்பீஸ் துாக்காமல், மவுஸ் பிடிக்கும் நவீன ஆசிரியர்கள், குளிர்சாதன வசதி கொண்ட ஸ்மார்ட் வகுப்பறைகள், அதிநவீன டேப்களோடு வகுப்பில் அமர்ந்திருக்கும் எல்.கே.ஜி. மாணவ மாணவியர். கரும்பலகைக்கு மாற்றாய் வெண்திரைகள். அந்த வெண்பலகையில் எழுதிய யாவற்றையும் சேமிக்கும் ஆற்றல்மிகு கணினிகள், நினைத்த மாத்திரத்தில் தேடுபொறிகளின் உதவியால் பாடத்தையும் படத்தையும் கண்முன் கொண்டுவரும் அதிவேக இணைய வசதிகள்...

காதால் கேட்டும், கண்ணால் கண்டும், கற்க உதவும் மொழி ஆய்வகங்கள் என வகுப்பறைகள் வசதியாக்கப்பட்டுவிட்டன. ஆனால் கற்றல் சுகமான அனுபவமாகி இருக்கிறதா? மகிழ்ச்சியோடு நம் குழந்தைகள் கற்கிறார்களா?இரட்டைக் கோடு, நான்கு கோடு போட்ட அழகான எழுத்துப்பயிற்சி ஏடுகள், வளைந்து நெளிந்து எழுதும் பிஞ்சுவிரல்கள் என்று எத்தனை சுகமாக இதமாகக் கற்றோம்?

அன்று எழுத்து எத்தனை சுகமான அனுபவம்! வளைவும் நெளிவும் கூட்டி மனதின் நடைச் சித்திரத்தை விரல்கள் வழியே நம் சொந்தக் கையெழுத்தில் எழுதுவது எத்தனை அழகானது! எழுத்தை மட்டுமா? சிலேட்டையுமல்லவா நாம் இன்று இழந்து நிற்கிறோம். அழித்து அழித்து அகரம் கற்ற அந்த அற்புதப் பொருளைக் காலம் தன் கருங்கைகளால் அழித்துப் போட்டதே..! எப்படி அனுமதித்தோம் இந்தப் பிரபஞ்சப் பிழையை?

விசித்திர செவ்வகம் :சிலேட்டு எனும் விசித்திரச் செவ்வகத்தை மரகதம் டீச்சர்தான் முதன் முதலில் என் பால்ய வகுப்பில் அறிமுகப்படுத்தினார். பாலிதீன் பைக்குள்ளிருந்து அந்தச் செவ்வக அதிசயத்தை டீச்சர் எடுத்ததும், குட்டையாய் இருந்ததால் முதல்பெஞ்சில் அமர்ந்திருந்த என்னை அழைத்து மாவுக்குச்சியால் கையைப் பிடித்து வளைத்து ஓட்டுனர் ஸ்டீரிங்கை லாவகமாக வளைக்கிற மாதிரி வளைத்து, 'அ'கரத்தைப் போடவைத்ததும் வாழ்வின் அபூர்வமான நிமிடங்கள்.

அன்று மாலையே அப்பாவிடம் அடம்பிடித்து கடையில் கல்சிலேட்டு வாங்கியதும், உருட்டிய பென்சில் போன்ற மாவுக்குச்சியால் ஆசைதீர அன்று முழுக்க ஏதேதோ கிறுக்கியதும் அழகான நிகழ்வுகள். கல்சிலேட்டைத் துாக்கக்கூட அப்போது தெம்பிருக்காது; ஆனாலும் துாக்கிக்கொண்டு வீடுமுழுக்கத் திரிந்திருக்கிறோம்.

சிலேட்டின் நான்கு ஓரங்களிலும் மடக்கப்பட்டு குட்டிஆணி அறையப்பட்ட தகரம் எத்தனையோ முறை என் கைகளைப் பதம் பார்த்திருக்கிறது. ஆனாலும் அதன் மீதான மோகம் மட்டும் குறைந்ததில்லை. அதில் எழுதுவது சுகமானது. அதுவும் மாக்குச்சியால் எழுதுவது பிடிக்கும், அது சிலேட்டில் நன்றாகப் பதியும்.

விளையாட்டு :பாம்பே குச்சியால் எழுதியது, கடல் குச்சியால் எழுதியது என்று குச்சியைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம். சில மாணவர்கள் எச்சில் தொட்டும் எழுத்தை அழிப்பார்கள். எழுதியதை அழிக்கக் கஷ்டமாக இருக்கும். புதியதை எழுதவேண்டுமானால் பழையதை அழித்துத்தானேயாக வேண்டும். வாழ்க்கையும் அதைத்தானே கற்றுத்தருகிறது! எண்ணையும் எழுத்தையும் அன்று அப்படித்தான் கற்றோம்.

அப்போது விளையாட்டு எங்களுக்கு உயிர். இன்றுபோல் சிந்தடிக் விளையாட்டுத் தரைகள் அன்று இல்லை. ஆலமரத்தடியில்தான் எங்கள் விளையாட்டு ஆசிரியரின் இருக்கை இருக்கும். ஆனால் அவர் அமர்ந்து பார்த்ததில்லை. தினமும் மைதானத்தில் வியர்க்க விறுவிறுக்க எங்களோடு அவரும் விளையாடிக்கொண்டிருப்பார். இதனால் பள்ளிக்கு செல்வது எங்களுக்கு மகிழ்ச்சி அனுபவம். தாத்தாவின் கையைப் பிடித்து பள்ளிசென்ற அந்த நாட்கள் அபூர்வமானவை. என்ன நடந்தது இந்த முப்பது ஆண்டுகளில்?

ஓடிவிளையாடிய பாப்பாக்கள் ஓட்டத்தை ஏன் நிறுத்திக்கொண்டார்கள்? ஒருகுடம் தண்ணியெடுத்து ஒருபூப் பூக்க வைத்த பிஞ்சுக்குழந்தைகள் ஏன் வீட்டுக்குள் முடங்கிப் போனார்கள்? பூவரச இலையைச் சுருட்டி பீப்பீ ஊதியகுட்டிக் குழந்தைகளைச் சோட்டாபீமும் ஜுக்கியும் ஜக்குவும் பவர்ரேஞ்ஜெர்சும் எப்படி ஆட்கொண்டன? கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த அந்தக் குழந்தைகளை வீடியோ கேம்ஸுக்குள் பிடித்துத் திணித்தது யார்?

செவ்வாய்க் கிரகத்திலிருந்து யாரும் செய்துவிடவில்லை. நாம்தான் அந்த நற்செயலைச் செய்தோம்.குழந்தைகளின் உலகம்மிக மென்மையானது, உண்மையானது, பாசாங்கற்றது, அன்புக்கு ஏங்குவது, வன்சொல் தாங்காதது, எல்லோரும் தன்னைப் புரிந்துகொண்டு கொண்டாட வேண்டும் என நினைப்பது.

எல்லாவற்றையும்விடச் சுதந்திரத்தையும் விளையாட்டையும் விரும்புவது. குழந்தைகளின் உலகத்தை நாம் புரிந்துகொண்டிருக்கிறோமா? அவர்களைச் சுதந்திரமாய் ஓடியாட நாம் அனுமதித்துள்ளோமா? நம் விருப்பங்களை அவர்கள் மீது திணித்து நம் ஆளுமையை காட்ட முயல்கிறோம். பூக்களின்மீது எப்படி நம்மால் கோடரியை இரக்கமில்லாமல் வீசியெறிய முடிகிறது? காலம் நமக்குத்தந்த கருவூலம் நம் குழந்தைகள். அவர்களின்மீது ஏன் பாரத்தை ஏற்ற வேண்டும்?

முதுகில் பாரம் :தங்கக்கடைகளிலும் குழந்தைகள் விரும்புவது பலுான்களைத்தானே. அந்தத் தளிர்களின் முதுகில் மூடையாய் பாரங்கள். அவர்களின் முதுகெலும்புகள் உறுதிபெற்றுவிட்டனவா?அவர்கள் மதிப்பெண் முட்டையிடும் வாத்துக்களா? உலக அனுபவம் இல்லாமல், செய்தித்தாள் படிக்காமல், சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை அறியாமல் மதிப்பெண்களைக் குவித்து என்ன பயன்?

இன்னும் நம் தாய்மொழியில் பிழையின்றிப் பேசவும் எழுதவும் நம் குழந்தைகளுக்கு நாம் கற்றுத்தரவில்லையே. திருக்குறளையும், நாலடியாரையும், கொன்றைவேந்தனையும், ஆத்திச்சூடியையும், மூதுரையும், நல்வழியையும் ஆசாரக்கோவையையும் நாம் அறிமுகப்படுத்தியிருக்கிறோமா? மனத்தையும் வாழ்வையும் செம்மைப்படுத்தாத கல்வி தரும் மதிப்பெண்ணால் என்ன பயன்?

பொம்மைகளைக் கூட உண்மைகளாய் நம்பிவிடும் அப்பாவிக் குழந்தைகளை நாம் இயற்கையோடு, செடியோடு, பூனைக்குட்டியோடு, பறவைகளோடு, மீன்களோடு பேச மண்ணில் விளையாட நாம் அனுமதித்துள்ளோமா? நம் குழந்தைகளுக்கு நதியும் வயலும் கடலும் அருவியும் தெரியுமா? மகிழ்ச்சியை மனதிற்குத் தந்து மலர்ச்சியை முகத்திற்குத் தருவதுதானே நற்கல்வி! வெளியே இருப்பதை உள்ளே திணிப்பதும் மனப்பாடம் செய்யவைத்து அதை அப்படியே தேர்வில் எழுத வைப்பது மட்டுமா கல்வி செய்யவேண்டும்?

பள்ளிகளில் மட்டுமே இவற்றைக் கற்றுத்தந்துவிட முடியாது. வீடுகள்தான் குழந்தைகளின் முதற் பள்ளிகள். பெற்றோர்கள் முதல் ஆசிரியர்கள். ஆனால் ஆசிரியர்கள் அக்குழந்தைகளைப் பெறாத பெற்றோர்கள். பெற்றோர்களும் தன்வாழ்நாளில் இதையெல்லாம் கற்றோர்கள்தானே! பின் ஏன் குழந்தைகளுக்குக் கற்றுத்தரக்கூடாது? பாடத்திட்டத்திலும் பள்ளியிலும் இல்லை சாதனை மாணவர்களின் உருவாக்கம். இல்லங்களிலும் இருக்கிறது இன்பமான கற்றல். அங்கிருந்து கற்றலைத் தொடங்குவோமா?

முனைவர் சவுந்தர மகாதேவன்,
தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லுாரி,
திருநெல்வேலி.

நன்றி : தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 11, 2015 12:30 pm

இப்ப நீங்க என்ன சொல்ல வரீங்க அம்மா? புன்னகை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக