ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்

+8
ராஜா
mbalasaravanan
சதாசிவம்
சரவணன்
M.Jagadeesan
T.N.Balasubramanian
shobana sahas
சிவா
12 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் - Page 3 Empty தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்

Post by சிவா Tue Jun 09, 2015 1:21 am

First topic message reminder :

தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் ஆக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தன் கணவர் விபத்தில் இறந்ததால், கூடுதல் இழப்பீடு தொகை தரவேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த மல்லிகா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் விசாரித்தார்.

வழக்கு விசாரணையின் முடிவில், ''ரூ.20 லட்சம் இழப்பீடு தொகை தரவேண்டும். ஜூலை 1 முதல் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இதை ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

ஹெல்மெட் அணியாதவர்களின் ஓட்டுநர் உரிம அட்டையை பறிமுதல் செய்யலாம். ஏற்கெனவே உள்ள விதிமுறைகளை கட்டாயம் அமல்படுத்த வேண்டும். தேசிய நெடுஞ்சாலை போன்ற இடங்களில் கேமரா அமைத்து கண்காணிக்க வேண்டும்'' என்று நீதிபதி கிருபாகரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திடீர் அதிரடி உத்தரவின் பின்னணி:

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கட்டுமானப் பணி ஒப்பந்ததாரர் என்.குமார் (30), கடந்த 2011 மே 2-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது, வேன் மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தார். அவரது வாரிசுதாரர்களுக்கு ரூ.12 லட்சத்து 23 ஆயிரத்து 100-ஐ நஷ்ட ஈடாக வழங்க தீர்ப்பாயம் உத்தரவிட்டது. கூடுதல் நஷ்டஈடு வழங்க உத்தரவிடக் கோரி குமாரின் மனைவி மல்லிகா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

விபத்து நடந்தபோது குமார் ஹெல்மெட் அணியாததால் பலத்த தலைக்காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவர் ஹெல்மெட் அணிந்திருந்தால் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம் என்று காப்பீட்டு நிறுவனம் தனது பதில் மனுவில் தெரிவித்தது.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:

சாலை விபத்தில் குமார் உயிரிழந்ததால் அவரது குடும்பத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அவரது குடும்பத்துக்கு காப்பீட்டு நிறுவனம் ரூ.20 லட்சம் நஷ்டஈடாக வழங்க வேண்டும்.

ஹெல்மெட் அணிவது எவ்வளவு அவசியம் என்பதை இவ்வழக்கு உணர்த்துகிறது. செய்த தர்மம் தலைதாக்கும், தக்க சமயத்தில் உயிர்காக்கும் என்று தமிழில் சொல்லப்படுகிறது. தர்மம் தலையைக் காக்கிறதோ, இல்லையோ, ஹெல்மெட் அணிந்தால் அது நிச்சயம் தலையைக் காக்கும். ஆனால், பலரும் ஹெல்மெட் அணியாததால் விலைமதிப்பில்லா உயிரை இழக்கின்றனர்.

நகர சாலைகளில் ஹெல்மெட் அணியாமல் வாகனங்களில் செல்வோரை தினமும் சர்வசாதாரணமாக காணமுடிகிறது. தமிழகத்தில் 2014-ம் ஆண்டு மட்டும் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் 6,419 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. அதன்படி பார்த்தால், ஹெல்மெட் அணியாமல் செல்வதால் தமிழகத்தில் மட்டும் தினமும் 17 பேர் இறக்கின்றனர்.

நாடாளுமன்றத்தில் 1988-ம் ஆண்டு இயற்றப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். ஹெல்மெட் கட்டாயம் என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம், அனைத்து உயர் நீதிமன்றங்கள் பல்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளன. எனவே, சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்வதை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்களும் தங்களை மட்டுமல்லாமல், அவரவர் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ள கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும்.

ஹெல்மெட் அணியாமல் செல்வோரிடம், வெறுமனே அபராதம் மட்டும் விதிப்பதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது. அதனால், ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்ய வேண்டும். தேவைப்பட்டால், விசாரணைக்குப் பிறகு ஓட்டுநர் உரிமத்தை நிறுத்தி வைக்கவோ அல்லது ரத்து செய்யவோ வேண்டும். அவ்வாறு செய்தால்தான் மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமாகும்.

இந்த உத்தரவை காவல்துறை அதிகாரிகள் தவறாகப் பயன்படுத்தக்கூடாது. இருசக்கர வாகன ஓட்டிகளை காவல்துறையினர் தேவையில்லாமல் தொந்தரவு செய்வதாகவோ அல்லது ஊழல் செய்வதாகவோ புகார் வந்தால், அதுகுறித்து உயர் காவல்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜூலை 1-ம் தேதி முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம். அவ்வாறு அணியாவிட்டால் மோட்டார் வாகனச் சட்டப்பிரிவு 206-ன்படி ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் முடக்கப்படும். பின்னர், ஐஎஸ்ஐ முத்திரையிட்ட ஹெல்மெட் வாங்கியதற்கான ரசீதை காட்டிய பிறகு ஆவணங்கள் திருப்பித் தரப்படும் என்று வரும் 18-ம் தேதிக்குள் ஊடகங்கள் வாயிலாக உள்துறை முதன்மை செயலாளரும், காவல்துறை தலைவரும் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு விளம்பரம் செய்யாவிட்டால், உள்துறை செயலாளரும், காவல்துறை தலைவரும் வரும் 19-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, மோட்டார் வாகன சட்டப்பிரிவு 129-ஐ மீறுவதாக இருந்தால், ஓட்டுனர் உரிமத்தை நிறுத்தி வைக்கலாம். தேவைப்பட்டால், விசாரணைக்குப் பிறகு ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யலாம்.

முக்கிய சாலை சந்திப்புகள், தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். ஹெல்மெட் அணியாமல் செல்வோரைக் கண்காணித்து அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். விசாரணைக்குப் பிறகு ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.

துண்டுப்பிரசுரம், குறும்படம்

ஹெல்மெட் அணிவது அவசியம் என்பதை துண்டுப் பிரசுரங்கள், குறும்படங்கள், விளம்பரங்கள் மூலம் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் மத்திய, மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றியது குறித்த அறிக்கையை வரும் 19-ம் தேதி அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் விற்பனையாகும் ஹெல்மெட் அணிவதே ஆபத்தானது என்று நினைக்கிறேன்! ஹெல்மெட்டை கையாலே வளைத்து ஒடித்து விடலாம் பொலிருக்கிறது. அதன் தரம் அவ்வளவு கேவலமாக உள்ளது. இவ்வாறான ஹெல்மெட் அணிந்த ஒருவர் கீழே விழுந்தால் அந்த உடைந்து மண்டையைக் கிழித்துவிடும்.

மேலும் காவல்துறையினர் பிரத்யேக வருமானத்திற்கும் இந்த உத்தரவு வழிவகை செய்துள்ளது!


தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் - Page 3 Empty Re: தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்

Post by ayyasamy ram Wed Jun 10, 2015 11:52 am

தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் - Page 3 103459460 தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் - Page 3 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் - Page 3 Empty Re: தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்

Post by shobana sahas Wed Jun 10, 2015 11:49 pm

krishnaamma wrote:3.ஆர். வரதராஜன்  
ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்பதற்கு வரவேற்பும் எதிர்ப்பும் இருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். விபத்துகளுக்கு காரணமாக உள்ள பிற விஷயங்களை அரசு, காவல்துறை மற்றும் நீதித்துறை கண்டு கொள்வதில்லை என்பதில்தான் பல ஐயப்பாடுகள் எழுகின்றன.

எ-கா:

1. இரு சக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்லுதல்

2. 15 வயதுக்கும் குறைவாக உள்ள சிறுவர்கள் வாகனங்கள் ஒட்டுவது.

3. வாகனத்தை ஓட்டிக் கொண்டே செல்ஃபோனில் பேசுவது.

4. ஒரே வாகனத்தில் நால்வர், ஐவர் என ஒரு குடும்பமே பயணிப்பது - அதுவும் அசுர வேகத்தில்

5. மது போதையுடன் வாகனம் ஓட்டுவது

6. சாலை திருப்பங்களில் கை சைகை, ஒலி எழுப்புதல் என எதுவும் இல்லாமை

7. சிக்னல்களை கருதாது சந்திப்புகளைக் கடந்து செல்வது

8. சந்திப்புகளில் வாகன நிறுத்த எல்லைக் கோட்டையும் கடந்து நிற்பது.

இந்த எட்டு விஷயஙளும் காவல்துறையில் கவனதிற்கு எட்டினாலும் இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாத நிலை இருக்கும்வரை வெறும் ஹெல்மெட் பற்றி மட்டுமே பேசுவது அவ்வப்போது ஏதோ ஒரு பின்னணியுடன் அரங்கேற்றமாகும் நாடகம் என்றே படுகிறது..
மேற்கோள் செய்த பதிவு: 1143458

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு
அய்யா உங்கள மாதிரி ...இல்ல நீங்க ஒருவரே போதும் ....நாட்டை கெடுக்க ..... சீர் குலைக்க ...
நாட்டில் நீங்கள் குறிப்பிட்ட எல்லாவற்றையும் ஒரே நாளில் சட்டம் கொண்டு வர முடியாது . ஒவோவ்ன்ன தான் செயல் படுத்தனும் ...
ஒவ் ஒவொன்றாக கொண்டு வருவார்கள் .. ஒன்னு சொன்ன அதை எற்றுக்கணும் இல்ல மறுக்கனும் . அத விட்டு வேற கருத சொல்லி மக்களை discourage./ திசை திருப்பதிர்கள் .
"அவன திருந்த சொல்லு நான் திருந்தறேன் "....சரிவராது .. "நான் திருந்திட்டேன் ....நீயும் திருந்து ....." அது தான் சரி .
அடுத்தவன பத்தி பேசியே காலத்தை ஊட்டதீர்கள் . எதிர்ப்பு எதிர்ப்பு உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் - Page 3 Empty Re: தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்

Post by T.N.Balasubramanian Sat Jun 13, 2015 8:35 pm

தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் - Page 3 CMbOrDLWQMuKctBMsOf7+11390298_1447985762169735_630065676837782229_n

யார் போடவேண்டும் ஹெல்மெட் ?
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் - Page 3 Empty Re: தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்

Post by T.N.Balasubramanian Sat Jun 13, 2015 8:47 pm

பிரவீண், காமராஜர்புரம், மதுரை.

ஹெல்மெட் அணிந்தால், பின்புறம் பக்கவாட்டில் வரும் வாகனங்களை எளிதில் பார்க்க முடியாது. இருந்தாலும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவை வரவேற்கிறேன். விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க இது உதவும்.

டூ வீலர்களில் , இடது /வலது பக்கங்களில் ரியர் வ்யு மிர்ரர் , பொருத்தவேண்டியது , அவசியமானது .சட்டமும் அதுதான் . பின்புறம் /பக்கவாட்டில் வாகனங்களை இதன் மூலம் பார்க்க முடியும்.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் - Page 3 Empty Re: தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்

Post by தமிழ்நேசன்1981 Sat Jun 13, 2015 8:51 pm

நல்ல தலை கவசம் - ஹெல்மட் தரம் அறிவது எப்படி?

மூல பொருட்களை தெரிந்து கொள்ளுங்கள் :

ஃபைபர் க்ளாஸ் எனப்படும் கண்ணாடி நார்களை ஒன்றாக இணைக்க, ஒரு பைண்டர் ரெசின் (அசின் எப்படி விஜயோட ஒட்டிகிறாரோ, அதே மாதிரி பிசின் போல ஒரு ஈரப் பதம் உள்ள ப்ளாஸ்டிக் திரவம்). இதில் வெயிலில் மக்கிப்போகாமல் இருக்க ஒரு துளி யூ.வி ஸ்டெபிலைசர் ( UVStabilizer) மற்றும் ரெசினும் நாரும் சீக்கிரம் சேர்ந்து உறைந்து கெட்டியாக ஒரு செய்வினைவிரட்டி(Catalyst) ஒரு துளியும் சேர்த்து, கலந்து, தயாரிக்கின்றனர்.

ஹெல்மெட் வடிவிலுள்ள அச்சில் முதலில் ஒரு பூச்சு. அப்புறம் ஒரு பின்னிய கண்ணாடி நார் பூச்சு. மீண்டும் ஒரு கோட்டிங் ரெசின். இப்படியாக வேண்டிய அளவு தடிமன் கிடைக்க, பூச்சு மேல் பூச்சு பூசினால், அவை காய்ந்து, திடப் பொருளாகி, கிடைக்கும் வடிவமே ஹெல்மெட். இப்போது, கழுத்துப் பட்டி, அலங்கார ஸ்டிக்கர், மற்றும் உள்ளே தலையை ஒட்டிய பஞ்சு லைனிங், துணி லைனிங் இவை அனைத்தும் சேர்ந்து ஒரு Hல்மெட் உருவாகிறது. சரி, இதிலென்ன ப்ரச்னை என்கிறீர்களா?

கலப்படத்துக்கு பேர் போன டெல்லிக்காரர்கள் இந்த இழையிலும், ரெசினிலும், கலப்படம் செய்ய ஆரம்பித்து, வழக்கமாய் ரோட்டோரம் விற்கப்படும் ஹெல்மெட்டுகளை தயாரிக்க ஆரம்பித்து ஏறத்தாழ 15 ஆண்டுகள் ஆகின்றன! முதலில் ரெசினை எடுத்து கொள்வோம். நல்ல பாலிஎஸ்டர் மற்றும் ஈபாக்ஸி ரெசின்களை உபயோகித்தால், அவை நல்ல இருகுத்தன்மை உள்ளவையாக இருக்கும். இவை தொழிற்சாலைகளில் பைப்புகள், மின் தாங்கிகள், கூரைகள் போன்றவை செய்ய உபயோகிக்கப் படுகின்றன. ஆனால், அதற்கு மாற்றாக, ஆமணக்கு போன்ற தாவரங்களில் இருந்தும், நீர் கலந்தும், கொஞ்சம் போல் பெயின்டில் உபயோகிக்கும் தின்னர் கலந்தும் செய்யப்படும் ரெசின்கள் நீர் போல் குறைந்த பசைத்தன்மை உள்ளதால், அதிக பரப்பளவில் பூசப்படும். உதாரணம்: நல்ல ரெசினால், சுமார் ஒரு சதுர அடி பூச முடியுமானால், இந்த கலப்பட ரெசினால், சுமார் நான்கு சதுர அடி பூசிவிட முடியும்! ஹெல்மெட் செய்பவர்க்கு ரெசின் செலவு குரையும். ஆனால், அணிபவர்க்கு? மிக மெலிய பூச்சு கொண்ட ரெசின் சீக்கிரம் மக்க ஆரம்பித்து, பொடிப் பொடியாக ஆரம்பிக்கும் (மேலே அடிக்கப்பட்டுள்ள பெயிண்டினால் கண்ணுக்குத் தெரியாத அளவுகளில்!).

அதேபோல், கண்ணடி இழைகளிலும், C க்ளாஸ், E க்ளாஸ் என, நல்ல தாங்கு சக்தி உள்ள பலவகை இழைகள் உள்ளன. அவற்றை விட மிக குறைந்த விலையில், தரக் கட்டுப்பாட்டில் தனியே ஒதுக்கப் பட்ட இழைகளும், சீன மார்க்கெட்டுகளிலிருந்து மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் தரமற்ற இழைகளும் கொண்டு தயாரிப்பாளர்கள், தங்களது செலவுகளைக் குறைக்க இது போன்ற தரமற்ற மூலப் பொருட்களை வாங்கி ஹெல்மெட்டுகள் செய்கின்றனர். என்னய்யா இது, அதற்கு மேலேதான் ISI முத்திரை இருக்கிறதே என்றால், அதுவும் போலி! சும்மா ஒரு ISI முத்திரை போல் ஸ்க்ரீன் பிரின்டிங் செய்துவிட்டால், போலி ஹெல்மெட் தயார்!

அட, எப்படி இதை தெரிந்து கொள்வது?

1. விலை - நல்ல fஃபைபர் ஹெல்மெட் கட்டாயம் ஆயிரம் ரூபாய்க்குக் குறையாது. அதைவிட கம்மியாக விற்பனைக்கு வந்தால், 2ஆம் சோதனையை மேற்கொள்ளவும் :-

2. முடிந்தால் உள்ளே தைக்கப் பட்டுள்ள துணியை விலக்கிப் பார்க்கவும். கரடு முரடாக இழைகள் தெரிந்தாலோ, அல்லது, இடை இடையே மண் துகள்கள் போல் தெரிந்தாலோ (ஆம்! மண் துகள்கள்தான்! எடையை கூட்ட அதிக ரெஸினை இழுக்காமல் இருக்க போலி ஹெல்மெட் தயாரிப்பவர்கள் மூலப் பொருளில் மண்ணைக் கூட சேர்ப்பார்கள்.) கட்டாயம் அது தரமானது அல்ல. வாங்காதீர்கள்.

3. எடை - தேங்காய் அல்ல ஹெல்மெட்! எடை அதிகமாக, அதிகமாக, தலையைக் காப்பாற்றும் (அடிவாங்கும்) சக்தி அதிகம் என்று நம்பாதீர்கள். நல்ல ஹெல்மெட் அதிகம் போனால் சுமார் 800 கிராமிலிருந்து, 2 கிலோவுக்கு மேல் எடை பெறாது.

இப்போது இந்த ரெஸின்+கண்ணாடி இழை ஹெல்மெட்டுக்களை விட இஞ்சக்க்ஷன் மோல்டிங் செய்யப்படும் மெலிதான ஆனால் வலுவான ஹெல்மெட்டுகள் கிடைக்கின்றன. இவற்றைப் பார்த்தாலே சொல்லிவிடலாம். மேலே பெயின்டிங் ஏதும் செய்திருக்கப் படாது. உள்ளே இழைகள் கைகளை நெருடாது; உள்ளே, வெளியே அதன் பளபளப்பும் மிருதுவான பரப்பும் ஒரே மாதிரியாக இருக்கும். குண்டு துளைக்க முடியாத Polycarbonate, வளைந்து கொடுக்கும் தன்மை கொண்ட ரப்பர் கலந்த ABS ம் கலந்து மோல்டிங்க் செய்யப்பட்ட இந்த ஹெல்மெட்டுகள், சுமார் 2000 முதல் 3000 ரூபாய் வரையிலான விலைகளில் கிடைக்கின்றன! அதுதான் கனமும் குறைவு, பயமும் குறைவு! அதில் கலப்படம் செய்வதும் கஷ்டம். ஏனெனில், ஒரு மோல்டிங் அச்சு செய்ய குறைந்த பட்சம் 20 லட்சங்கள் வேண்டும். தரமான தயாரிப்பாளரே, அம்மாதிரியான அச்சுகளை செய்ய முடியும். கலப்படக் காரர்களுக்கு அவ்வளவு பணம் போட்டு செய்ய மனம் வராது. Steelbird, Studd, Protech போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் ஹெல்மெட்டுகள் தரமானவை. அவர்களது நேரடி விற்பனை நிலையங்கள் எல்லா முக்கிய நகரங்களிலும் உள்ளன.

அரசாங்கம் கட்டாய ஹெல்மெட் அணியும் சட்டத்தை போடுமுன், முதலில், இம்மாதிரியான தகவல்களை நாளிதழ்களில் வெளியிட்டு, கலப்படக் காரர்களை இருட்டடிப்பு செய்தால்தான் நம் தலை தப்பும்! சட்டம் போட்டதற்கும் பலன் இருக்கும்.

எனக்கு தெரிந்த சில நண்பர்கள், ரோட்டோரம் வாங்கிய ஹெல்மெட்டுகள் அணித்ததால், இறந்து போயுள்ளனர்! எப்படி? அந்த தரமற்ற ஹெல்மெட்டே அவருக்கு காலனாய் அமைந்துவிட்டது! அந்த ஹெல்மெட் சம்பவ இடத்திலேயே நொறுங்கி, தலை அதனுள்ளே சிக்கி, உடைந்த சில்லுகள் தலையில் தைத்து, அதனாலேயே, தலையும், தலைக்குண்டான உயிரையும் காப்பாற்ற முடியாமல் போனதுதான் பரிதாபம்!

எனவே, நண்பர்களே உஷார்!! இது நம் வாழ்க்கை ப்ரச்னை. நம்மை நம்பி, வீட்டில் காத்திருக்கும் குடும்பத்தாரின் ப்ரச்னை. ஆயிரம் ரூபாய் அதிகம் போட்டு சட்டை வாங்கினாலும், குறைந்த விலையில் தரமான காதியில் கதர் அணிந்தாலும், நம் மதிப்பு, நம் நடத்தையிலேயே உள்ளது.

ஆனால், ஹெல்மெட் போன்ற தலைக் கவசங்களில் நாம் காசு மிச்சம் பிடிக்கப் பார்த்தால், அப்புறம் வீட்டிலுள்ளவர்கள் நாம் திரும்பி வரும் வரை இன்னொரு கவசத்தை நம்ப வேண்டியது தான்!
அது - கந்தர் சஷ்டி கவசம்!

நன்றி- இணையம்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் - Page 3 Empty Re: தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்

Post by T.N.Balasubramanian Sat Jun 13, 2015 9:06 pm

அருமையான தகவல் தமிழ்நேசன் .

நன்றி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் - Page 3 Empty Re: தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» மதுரை: ஏப்.,1 முதல் ஹெல்மெட் கட்டாயம் : போலீஸ் கமிஷனர்
» புதுச்சேரியில் மே 1-ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம் : மீறினால் கடும் நடவடிக்கை
» "ஹெல்மெட்' அணிவது கட்டாயம் : வரும் 16ம் தேதி முதல் தீவிர அமல்
» 'ஹெல்மெட்' சோதனை இன்று முதல் தீவிரம்; பின்னால் அமருவோரும் அணிவது கட்டாயம்
» ஜூலை 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் 118 ஆதார் மையங்கள் திறப்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum