ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழீழம் கிடைக்காமல் போவதற்கு தடையாக இருப்பவர்கள் தமிழகத் தலைவர்கள்

Go down

தமிழீழம் கிடைக்காமல் போவதற்கு தடையாக இருப்பவர்கள் தமிழகத் தலைவர்கள் Empty தமிழீழம் கிடைக்காமல் போவதற்கு தடையாக இருப்பவர்கள் தமிழகத் தலைவர்கள்

Post by Guest Sun Mar 01, 2009 12:11 am

தமிழீழம் கிடைக்காமல் போவதற்கு தடையாக இருப்பவர்கள் தமிழகத் தலைவர்கள் - தமிழக இயக்குநர் குற்றச்சாட்டு

இலங்கை இன பிரச்சினை குறித்து தொடக்க காலத்திலிருந்து இன்று வரை தமிழகத்தில் விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருபவர்களில் குறிப்பிடத்தக்கவர், "எழுச்சி இயக்குநர்' என்று பாராட்டப்படும் திரைப்பட இயக்குநர் வி. சி. குகநாதன். வீரகேசரி இணையத்திற்கு அளித்த விசேட செவ்வியில் இருந்து...

ஈழத்தமிழர் போராட்டத்தில் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளும், கலைஞர்களும் அடிக்கடி தங்கள் நிலைபாட்டை மாற்றிக் கொள்கின்றனரே?

இதனால் ஈழத்தமிழர்களின் போராட்டம் பலவீனம் அடையாதா? பாதிக்கப்படாதா? ஈழத்தமிழர்கள் விடயத்தில் தமிழ்நாட்டில் மாணவர்கள், சட்டத்தரணிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள், கலைஞர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் ஒரே நிலைபாட்டில் இருக்கிறார்கள்.

தலைவர்கள் தடுமாறுகிறார்கள். தள்ளாடுகிறார்கள். அடிக்கடி தங்கள் நிலைபாட்டினை மாற்றிக்கொள்கிறார்கள். ஆனால் யாரும் ஈழத்தமிழர்கள்குக்கு ஆதரவு இல்லை என்று சொன்னதில்லை. அப்படி ஒரு மாநிலக்கட்சி சொல்லுமேயானால், அந்த கட்சி நிச்சயமாகத் தமிழ்நாட்டில் அரசியல் பண்ணமுடியாது.

இன்னும் ஒரு விடயத்தை வெளிப்படையாகவே சொல்கிறேன். தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளால் தான் தமிழ் ஈழம் கிடைக்கும் வாய்ப்பு முதல் தடவையாக நழுவிப்போனது. இல்லையெனில் இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர் காலகட்டத்திலேயே அது நிறைவேறியிருக்கும்.

பாகிஸ்தானிலிருந்து வங்க தேசத்தைப் பிரித்து முஜுபுர் ரஹ்மான் தலைமையில் புதிய நாடு படைத்தவர் அன்னை இந்திரா. அதே பாணியில் ஈழத்தமிழ் போராளிகள் இந்தியா வரவழைக்கப்பட்டனர். பயிற்சிகள் நடந்தன. ஆயுதங்கள் வழங்கப்பட்டன. சகல ஒத்துழைப்புகளும் அளிக்கப்பட்டது.

ஒரு கட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் அன்னையிடம் கோள் சொல்ல ஆரம்பித்தனர். தமிழகத்தில் திராவிட நாடு கேட்ட கட்சிகள் இன்னமும் செல்வாக்குடன் தான் இருக்கிறார்கள். தங்கள் உதவியோடு தனி ஈழம் அமைந்தால்.... அந்த தமிழர்கள் பாணியில் இங்கேயும் பிரிவினை வாதம் பேச ஆரம்பித்து போராட்டத்தில் ஈடுபடுவார்கள். அகண்ட தமிழ்நாடு உருவாக வழிவகுத்துவிடும் என்றெல்லாம் ஓதப்பட்டது.

இந்த வாதம் வந்தேறிகளான ஆரியர்களாலும் ஆதரிக்கப்பட்டது. அன்னை இந்திரா அவர்களுக்கும் இது சரியெனப்பட்டு விடவே, தன் நிலைபாட்டை சற்று மாற்றிக்கொண்டார். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தருவது. தனி ஈழத்தை தவிர்ப்பது.

ஆனால் எம். ஜி. ஆர் தன் முடிவிலிருந்து மாறவில்லை. தம்பி தலைமையில் தனி ஈழம்... இறுதி வரை இதுவே அவர் கொள்கை. இந்த இடத்தில் ஈழத்து மக்கள் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விடயம் ஒன்றிருக்கிறது.

பல மொழிகள் பேசும் மக்கள் வாழும் இந்திய தேசம், சுதந்திரம் அடைந்த பின்னால், மொழிவாரி மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு, தனித்தனி மாநில அரசுகள் அமைக்கப்பட்டு, நடுவில் ஒரு மைய அரசு நிறுவப்பட்டு.. பெற்ற சுதந்திரத்தை நூறு கோடி மக்களும் இன்றுவரை பயன்பெறும் விதமாகப் பரவலாக்கப்பட்டது.

தமிழ் மாநிலத்தில் முழுச்சுதந்திரத்துடன், யாருடைய அடக்கு முறைக்கும் ஆளாகாமல் தமிழர்களால் வாழ முடிந்தது. கல்வியறிவில் தமிழகம் அந்தக் காலத்தில் பின்தங்கியிருந்ததனால்.. இங்கே ஆரிய ஆதிக்கம் இருந்தது. பெண்ணடிமை இருந்தது.
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழீழம் கிடைக்காமல் போவதற்கு தடையாக இருப்பவர்கள் தமிழகத் தலைவர்கள் Empty Re: தமிழீழம் கிடைக்காமல் போவதற்கு தடையாக இருப்பவர்கள் தமிழகத் தலைவர்கள்

Post by Guest Sun Mar 01, 2009 12:12 am

அதை எதிர்க்க பகுத்தறிவுப் போராட்டம் தேவைப்பட்டது. தந்தை பெரியார் அரசியல் கலப்பில்லாத பகுத்தறிவுப் போராடடத்தை கையிலெடுத்தார். பாதிக்கப்பட்ட திராவிடர்கள் ஓரணியில் திரண்டனர். அடக்கு முறையை சாதீய கொடுமைகளை, மூடத்தனமான கடவுள் நம்பிக்கையை, பெண் அடிமைத்தனத்தை மூர்க்கத்தனமாக எதிர்த்தனர்.

இதற்கான அவசியம் அன்றைய தமிழகத்தில் இருந்தது.பேரறிஞர் அண்ணா அவர்கள் இதையே ஒரு சில மாற்றங்களுடன் அரசியல் இயக்கமாக மாற்றி.. தனியாகவே வந்து கட்சி ஆரம்பித்தார். "அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு'' என்ற ஜீவாதாரக் கொள்கையை முன் வைத்தார்.

அண்ணா கட்சிக்கு எதிராக பிரிவினை வாத தடைச்சட்டடத்தை கொண்டு வந்தது நேரு தலைமையிலான அரசு. அண்ணா, ஜீவாதாரக் கொள்கையை கைவிட்டு தமிழக ஆட்சியைப்பிடித்தார். ஏனெனில் தமிழ் மாநில அரசின் மூலமே ஆறரைக்கோடித் தமிழர்களுக்கும் நல்லது செய்ய முடியும் என நம்பினார். செய்தார். பிற்காலத்தில் அண்ணா மறைவுக்கு பின், கட்சி இரண்டானது. இடையிலே மறுபடி தேசீயகட்சிகள் நுழைந்து கூட்டணி என்ற பெயரில் கொடி தூக்க ஆரம்பித்தனர்.

கொள்கைகளில் பொருளாதார திட்டங்களில் பெரிய வேறுபாடுகள் இருக்கவில்லை. மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? மத்தியில் யாருடன் கூட்டணி எத்தனை மத்திய மந்திரிகள்? இசைதான் தமிழக கட்சிகள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள். இது காலத்துக்கு காலம் மாறும்போது தலைவர்கள் தடுமாறுகிறார்கள். தள்ளாடுகிறார்கள். தங்கள் நிலைபாட்டை அடிக்கடி மாற்றிக்கொளகிறார்கள்.

இதற்கிடையில் ஈழப்பிரச்சினை அவர்களுக்கு ஒரு தலைவலியே! இங்குள்ள தலைவர்களுக்கான அதிகார வரம்பிற்கு உட்படாத பிரச்சினை இது. வெளிநாட்டு பிரச்சினை. மத்திய அரசு தான் சாதிக்க முடியும். மத்திய அரசில் ஆட்சியிலிருக்கும் கட்சி, தங்கள் தலைவர் ராஜீவ் காந்தி அவர்களை இழந்த கோபத்தோடு செயல்படுகிறார்கள் என தமிழர்கள் நம்புகிறார்கள்.

மத்தியில் கூட்டணியில் இருக்கும் தமிழினத்தலைவர் கலைஞர் அவர்கள் மனது வைத்தால் ஈழத்தமிழர்களுக்கு விடியல் கிடைக்கும் என உலக தமிழினம் நம்புகிறது. இலங்கையில் நிலைமை வேறு. அது ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டம். இருபத்தியிரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் இனம் தமது உரிமைகளைப் பாராளுமன்றத்தில் பேசி பெற முடியாத நிலை.

இங்கு ஒரு இனம் ஒதுக்கப்பட்டது. பின்னர் மொழிப் போராட்டத்தின் பின்னர்ல் எல்லா உரிமைகளும் மறுக்கப்பட்டது. தந்தை செல்வா கடலிலே தூக்கி வீசப்பட்டார். வட்டுக்கோட்டை மகாநாட்டில் தனி ஈழமே ஒரே வழி என்று முரசு கொட்டினார். அதன் பின்னர் தான், போராளிகளின் ஆயுதப்போராட்டம். அதன் பின் தான் இனம் அழிக்கப்பட்டது.

தற்போது ஈழத்தில் தமிழ் இனம் பூண்டோடு அழிக்கப்படுகிறது. உலகுக்கு இந்த உண்மை தெரியும். ஆனால் பக்கத்து நாடான இந்தியா தீர்க்கமான முடிவை எடுக்காமல் பழி வாங்கும் நோக்குடன் நடற்து கொள்வது, போராளிகளையும் தமிழர்களையும் பிரித்துக்காட்டி வேண்டாத குழப்பத்தை ஏற்படுத்துவது இவை எல்லாம் மற்ற நாடுகள் ஆதரவு தெரிவிக்க அஞ்சும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொன்னால் சொல்லமுடியும். தலைவர்கள், கட்சிகளை புறந்தள்ளி தொப்புள்கொடி உறவான தாயகத் தமிழர்கள் ஈழத்தமிழர்களை காக்க, சட்ட வரம்புகளை மீறி, நாட்டின் எல்லைக்கோடுகளை கடந்து, கடல் பரப்புகளையும் தாண்டி வர தயாராகிறார்கள் என்ற உண்மை நிலையை நாம் மறுப்பதில்லை.
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum