ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வணங்கா விட்டாலும் இறைவன்!

5 posters

Go down

வணங்கா விட்டாலும் இறைவன்! Empty வணங்கா விட்டாலும் இறைவன்!

Post by balakarthik Thu Jun 04, 2015 12:46 pm

எப்போதோ படித்த ஒரு அரபுக் கதை சிறு மாற்றங்களுடன்...

முன்னொரு காலத்தில் ஆன்மிக நாட்டம் அதிகம் உள்ள ஒரு முதியசெல்வந்தர் ஒரு புனிதத் தலத்திற்கு பாலைவன வழியில் பயணித்துக்கொண்டு இருந்தார். வழியில் தங்கி இளைப்பாற இடமோ, உணவு உண்ண வழியோ இல்லாமல் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாவதைக் கவனித்தார். இறைவனை நாடிப் போகும் பக்தர்கள் இப்படி அவதியுறுகிறார்களே என்று இரக்கப்பட்ட அவர், அவர்கள் குறை போக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணினார்.

புனிதத் தலத்தில் இறைவனைத் தொழுது விட்டுத் திரும்பிய பின் அவர் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தார். பாலைவனத்தில் ஒரு பெரிய கூடாரத்தைக் கட்டி அந்த வழியாகப் புனிதப் பயணம் செல்லும் பக்தர்களுக்கு உண்ண உணவும், இளைப்பாறிச் செல்ல வசதியும் ஏற்படுத்தித் தர முடிவு செய்தார். அதையும் தானே அங்கு தங்கிச் செய்ய நினைத்த அவர் மகன்களிடம் தன் வியாபாரத்தை ஒப்படைத்து விட்டுத் தன் செல்வதில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

பாலைவனத்தின் மத்தியில் அந்தப் பெரியவர் பெரிய கூடாரம் இட்டுக் கொண்டு அதில் சில வேலையாட்களுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தார்.  புனித யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு அவர் இலவசமாக நீர் மற்றும் உணவும் இளைப்பாற வசதிகளும் தந்தார். ஆனால் வருபவர்கள் தொழுகை நடத்தி இறைவனை வணங்கிய பின்னரே அவர்களுக்கு உணவு வழங்கப் பட்டது. அதை ஒரு கொள்கையாகவே அவர் வைத்திருந்தார்.

பாலைவன வழியாக பயணித்த அனைவருக்கும் அவர் சேவை பெரிய உபகாரமாக இருந்தது. புனிதத் தலத்திற்குச் செல்லாமல் மற்ற இடங்களுக்குச் செல்லும் பயணிகளும் அவர் கூடாரத்திற்கு வந்து தொழுகை நடத்தி சாப்பிட்டு இளைப்பாறி விட்டுத் திருப்தியுடன் சென்றார்கள். அந்தப் பெரியவரும் அந்தப் பயணிகளுக்கு உதவ முடிந்ததில் பெரும் திருப்தியை உணர்ந்தார். பசியுடனும் களைப்புடனும் கூடாரத்திற்குள் நுழையும் மக்கள் திருப்தியுடனும், உற்சாகத்துடனும் கிளம்புவதைக் காணும் போது இறைவனின் அடியார்களுக்குச் செய்யும் சேவை இறைவனுக்கே செய்யும் சேவை போல் அவருக்கு நிறைவைத் தந்தது.

அவரும் ஒரு ஆளிற்காவது உணவளிக்காமல் உணவருந்தியதில்லை. சில நாட்களில் யாத்திரீகர்கள் மிகவும் குறைவாக இருப்பார்கள். அவர் தொழுது முடித்தாலும் கூட யாத்திரீகர்களில் ஒருவராவது வந்து தொழுகை நடத்தி முடிக்கும் வரை காத்திருந்து அவருடன் சேர்ந்து தான் அவரும் உண்பார். நாளாவட்டத்தில் அவருடைய கூடாரமே புனிதத்தன்மை அடைந்திருப்பதாக யாத்திரீகர்கள் பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள்.

ஒரு நாள் தட்பவெப்ப நிலை மோசமாக இருந்தபடியால் பாலைவனத்தில் நீண்ட நேரம் யாரும் பயணிக்கவில்லை. பாலைவனத்தில் சாதாரணமாகப் பயணிப்பதே சிரமம் தான். தட்பவெப்ப நிலை மோசமாகி விட்டாலோ பாலைவனைத்தில் பயணிப்பதே கொடுமையான அனுபவம் தான். எனவே தான் பயணிகள் யாரையும் காணவில்லை. பெரியவர் ஒருவராவது வரட்டும் என்று உணவருந்தாமல் காத்திருந்தார். நீண்ட நேரம் கழித்து ஒரு பயணி களைத்துப் போய் வந்தான். அவனைப் பார்த்தவுடன் பெரியவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.  

அவனுக்கு வயது இருபத்தைந்து இருக்கும். பசியுடன் இருப்பது அவனைப் பார்த்தவுடனேயே அவருக்குத் தெரிந்தது. அவனை மனமார வரவேற்று உபசரித்த பெரியவர் சொன்னார். “வாருங்கள். கை கால் கழுவி விட்டு இறைவனைத் தொழுங்கள். உணவு தயாராக இருக்கிறது”

“இறைவனைத் தொழுவதா? நானா?” என்றான் அவன்.

அவர் ஆச்சரியத்தோடு கேட்டார். “ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்?”

“நான் இறைவன் என்று ஒருவன் இருக்கிறான் என்று நம்புவதில்லை. நான் இது வரை ஒரு முறை கூட இறைவனைத் தொழுததும் இல்லை”

பெரியவர் வருத்தத்தோடு சொன்னார். ”நான் இங்கு வசிப்பதையும், இந்த வழியாகப் புனிதத் தலத்திற்குப் பயணிக்கும் இறை உணர்வாளர்களுக்கு உணவு தந்து உபசரிப்பதையும் இறை பணியாகவே செய்து வருகிறேன்.  அதனால் இறைவனைத் தொழாதவருக்கு நான் உணவு தருவதில்லை.”

அவன் உறுதியாகச் சொன்னான். “இறைவனைத் தொழுதால் தான் உணவு கிடைக்கும் என்றால் எனக்கு தங்கள் உணவு தேவை இல்லை”.

அவர் எவ்வளவோ சொல்லியும் அவன் தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. அவரும் அவன் தொழாமல் உணவு பரிமாற சம்மதிக்கவில்லை. கடைசியில் அவன் பசியோடே அங்கிருந்து வெளியேறினான். பசியோடவே இருந்தாலும் இருப்பேனே தவிர இறைவனை வணங்க மாட்டேன் என்று அவன் பிடிவாதமாக இருந்தது அவருக்கு திகைப்பாக இருந்தது. அதே நேரம் பசியோடும், களைப்போடும் வந்த ஒருவன் அந்த கூடாரத்தில் இருந்து அப்படியே வெளியேறுவதும் அதுவே முதல் முறை என்பதால் அவருக்கு மிகுந்த வருத்தம் ஏற்பட்டது.
அன்று முழுவதும் வேறு யாரும் அந்த வழியாக வரவுமில்லை. அவரும் உணவருந்தாமலேயே இரவு வரை காத்திருந்து விட்டு உறங்கச் சென்றார்.

இரவில் அவரது கனவில் இறைவன் குரல் ஒலித்தது. “என்னை வணங்காத அவனுக்கு ஒவ்வொரு வேளையும் நான் இருபத்தைந்து வருடங்களாக உணவு அளித்து வந்திருக்கிறேன். ஆனால் நீ என்னை அவன் வணங்கவில்லை என்பதாக ஒரு வேளை உணவு கூட அளிக்க மறுத்து பட்டினியாக அனுப்பி விட்டாயே”

பெரியவருக்கு சுருக்கென்றது. விழித்துக் கொண்டு நீண்ட நேரம் உறங்காமல் விழித்திருந்தார். கருணை மயமான இறைவன் தன்னை வணங்கினாலும், வணங்கா விட்டாலும் எல்லோரையும் காத்து வரும் போது இறைவனை வணங்கிப் பின்பற்றும் அவர் மட்டும் ஏன் வேறு மாதிரியாக இருக்க வேண்டும்?

மறு நாளில் இருந்து அவர் இறைவனைத் தொழுதால் தான் உணவு என்ற கொள்கையைக் கைவிட்டு விட்டார். இறைவனைத் தொழுவது அவரவர் தனிப்பட்ட விஷயம் என்று எண்ணியவராக அனைவருக்கும் உணவளித்து மகிழ்ந்தார்.

இந்தக் கதையில் கிடைத்த பாடம் மிகவும் யோசிக்கத் தக்கது.

வணங்குபவன், வணங்காதவன், வாழ்த்துபவன், நிந்திப்பவன், நம்புபவன், நம்பாதவன் முதலான பாகுபாடுகள் இறைவனுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. நன்றாகக் கவனித்தால் அவன் படைத்த உலகில் எல்லோருக்கும் இடம் இருப்பது புரியும். அவன் அருளில்லை என்றால் அவனுக்குப் பிடிக்காதவர்கள் யாரும் இங்கிருக்க முடியாதல்லவா? ஆகவே அவனை வணங்காதவர்களும், நிந்திப்பவர்களும், நம்பாதவர்களும் கூட இன்னும் இங்கிருக்கிறார்கள் என்றால் எல்லாம் வல்ல இறைவன் அருள் அவர்களுக்கும் இருக்கின்றது என்றே அல்லவா அர்த்தம். அப்படி இருக்கையில் இறைவனுக்கு எதிரானவர்கள் என்று நாமாகக் கற்பனை செய்து கொண்டு அவர்களை எதிர்த்து விமரிசிக்கவும், போராடவும், அழிக்கவும் கிளம்புவது நம் அறிவீனமே அல்லாமல் இறைவழி அல்ல என்பதை உணர்வோமா?



நன்றி: என்.கணேசன்

தினத்தந்தி


ஈகரை தமிழ் களஞ்சியம் வணங்கா விட்டாலும் இறைவன்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வணங்கா விட்டாலும் இறைவன்! Empty Re: வணங்கா விட்டாலும் இறைவன்!

Post by krishnaamma Thu Jun 04, 2015 12:55 pm

//இந்தக் கதையில் கிடைத்த பாடம் மிகவும் யோசிக்கத் தக்கது.

வணங்குபவன், வணங்காதவன், வாழ்த்துபவன், நிந்திப்பவன், நம்புபவன், நம்பாதவன் முதலான பாகுபாடுகள் இறைவனுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. நன்றாகக் கவனித்தால் அவன் படைத்த உலகில் எல்லோருக்கும் இடம் இருப்பது புரியும். அவன் அருளில்லை என்றால் அவனுக்குப் பிடிக்காதவர்கள் யாரும் இங்கிருக்க முடியாதல்லவா? ஆகவே அவனை வணங்காதவர்களும், நிந்திப்பவர்களும், நம்பாதவர்களும் கூட இன்னும் இங்கிருக்கிறார்கள் என்றால் எல்லாம் வல்ல இறைவன் அருள் அவர்களுக்கும் இருக்கின்றது என்றே அல்லவா அர்த்தம். அப்படி இருக்கையில் இறைவனுக்கு எதிரானவர்கள் என்று நாமாகக் கற்பனை செய்து கொண்டு அவர்களை எதிர்த்து விமரிசிக்கவும், போராடவும், அழிக்கவும் கிளம்புவது நம் அறிவீனமே அல்லாமல் இறைவழி அல்ல என்பதை உணர்வோமா?//

நிஜம் தான் பாலா.....நல்ல கோணத்தில் சிந்தித்து எழுதிஇருக்கிறார் இதன் ஆசிரியர்........அருமை !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வணங்கா விட்டாலும் இறைவன்! Empty Re: வணங்கா விட்டாலும் இறைவன்!

Post by சரவணன் Thu Jun 04, 2015 1:27 pm

நல்ல அருமையான கதை...


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வணங்கா விட்டாலும் இறைவன்! Empty Re: வணங்கா விட்டாலும் இறைவன்!

Post by ராஜா Thu Jun 04, 2015 3:05 pm

சிந்திக்க வேண்டிய கதை புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வணங்கா விட்டாலும் இறைவன்! Empty Re: வணங்கா விட்டாலும் இறைவன்!

Post by shobana sahas Fri Jun 05, 2015 3:57 am

மிக சிறந்த கதை . வணங்கா விட்டாலும் இறைவன்! 103459460 வணங்கா விட்டாலும் இறைவன்! 3838410834
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

வணங்கா விட்டாலும் இறைவன்! Empty Re: வணங்கா விட்டாலும் இறைவன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum