Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை'
4 posters
Page 1 of 1
பட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை'
தமிழ்த் திரை உலகில் அழுத்தமான -ஆழமான முத்திரை பதித்துள்ள கவிஞர்கள் இருவர். ஒருவர் கவியரசர் கண்ணதாசன். இன்னொருவர், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். முன்னவர், ஆர்மோனியப் பெட்டிக்கு அழகுத் தமிழை அறிமுகப்படுத்தி வைத்தவர்; பின்னவர், மக்கள் தமிழை அறிமுகம் செய்து வைத்தவர்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இந்த உலகில் வாழ்ந்த காலம் இருபத்தொன்பது ஆண்டுகளே. எனினும், இந்த குறுகத் தரித்த வாழ்வில் திரைப்படப் பாடல் துறையில் நிறையச் சாதனை படைத்த 'பாட்டுக்கோட்டை' அவர். பட்டப் படிப்புக் கூடப் பயிலாத அவர், வாழ்க்கை என்னும் அனுபவப் பள்ளியில் கற்றுத் தேர்ந்த மக்கள் கவிஞராகத் திகழ்ந்துள்ளார். பஞ்ச சீலக் கொள்கைகள் பட்டுக்கோட்டையார் திரைப்படப் பாடல்களில் பெரிதும் வலியுறுத்திப் எழுதியிருக்கும் கொள்கைகள் ஐந்து. அவை:
1. அறிவு வளர்ச்சியிலே வான்முகட்டைத் தொட்டிட வேணும்
2. உழைத்தால் தான் பற்றாக்குறையை ஒழிக்க முடியும்
3. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
4. தனியுடைமைக் கொடுமைகள் தீரத் தொண்டு
செய்திடல் வேண்டும்
5. நல்லவர்கள் ஒன்றாய் இணைந்திடல் வேண்டும்
பட்டுக்கோட்டையார் திரைப்பாடல்களில் அறிவுக்கு முதன்மையான ஓர் இடத்தினைத்
தந்துள்ளார். 'பாதை தெரியுது பார்' என்ற படத்திற்காக எழுதிய பாடல் ஒன்றில் அவர்,
“ அறிவுக் கதவைச் சரியாகத் திறந்தால்பிறவிக் குருடனும் கண்பெறுவான்”
எனக் கூறியுள்ளார்;. அவரைப் பொறுத்த வரையில் 'ஆளும் வளரணும் அறிவும் வளரணும், அதுதான் உண்மையான வளர்ச்சி!' பாப்பாவுக்குப் பாடினாலும் சரி, சின்னப் பயலுக்குப் பாடினாலும் சரி, பட்டுக்கோட்டையார் அறிவின் இன்றியமையாமையை வலியுறுத்தத் தவறுவதே இல்லை. இளைய தலைமுறையினர் துன்பத்தை வெல்லும் கல்வி கற்று, சோம்பலைக் கொல்லும் திறன் பெற்று,
“அறிவு வளர்ச்சியிலே வான்முகட்டைத்தொட்டிட வேணும்!”என வழிகாட்டுகிறார்.
உழைப்பின் அவசியம் பட்டுக்கோட்டை திரையுலகில் உழைப்பின் பெருமையை, - உயர்வை- ஓயாமல் பேசியவர். அவரது கருத்தில் மக்கள் முன்னேறக் காரணம் இரண்டு.
ஒன்று, படிப்பு; இன்னொன்று, உழைப்பு. படிப்பாலே உண்மை தெரியும், உலகம் தெரியும். உழைப்பாலே உடலும் வளரும், தொழிலும் வளரும். உலகில் பாடுபட்டதால் உயர்ந்த நாடுகள் பலப்பல உண்டு; தொழிலாளர்களாகப் பிறந்து கடுமையாக உழைத்துச் சிகரத்தில் ஏறிய தலைவர்கள், மேதைகள் மிகப் பலர் உண்டு. எனவே,“உழைத்தால்தான் பற்றாக்குறையைஒழிக்க முடியும் - மக்கள்ஓய்ந்திருந்தால் நாட்டின் நிலைமைமோசமாக முடியும்”என்று நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
“உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டாகெடுக்கிற நோக்கம் வளராது - மனம்
கீழும் மேலும் புரளாது!” என்றார்.ஒருவர் அல்லும் பகலும் தெருக்கல்லாய் இருந்து விட்டு, அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொள்ளுவதால் எந்தப் பயனும் ஏற்படாது; விதியை எண்ணி விழுந்து கிடப்பதாலும் எந்த நன்மையும் விளையாது. வாழ்க்கையில் ஏற்றம் காண்பதற்கு - முன்னேற்றம் அடைவதற்கு - பட்டுக்கோட்டையார் காட்டும் வழி:
“எறும்பு போல வரிசையாகஎதிலும் சேர்ந்து உழைக்கணும்…உடும்பு போல உறுதி வேணும்
ஓணான் நிலைமை திருந்தணும்ஒடஞ்சி போன நமது இனம்ஒண்ணா வந்து பொருந்தணும்.”
'வேலை செய்தால் உயர்வோம்' என்ற உண்மையை உணர்ந்து எல்லோரும் ஒற்றுமையாகப் பாடுபட்டால், இந்த உலகம் உறுதியாக, இன்பம் விளையும் தோட்டமாக மாறும்.
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் தம் நெஞ்சில் கல்வெட்டாய்ப் பொறித்து வைத்துக்கொள்ள வேண்டிய, என்றென்றும் பின்பற்ற வேண்டிய - பட்டுக்கோட்டையாரின் அற்புதமான வரிகள் இதோ:“ செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத்திறமைதான் நமது செல்வம்;கையும் காலும்தான் உதவி - கொண்டகடமை தான் நமக்குப் பதவி!”
ஒற்றுமையின் அவசியத்திற்கு அவர் பாடியது... நல்லவர்கள் இணைந்திடல் “ஓங்கி வளரும் மூங்கில் மரம்ஒண்ணையொண்ணு புடிச்சிருக்கு,ஒழுங்காக் குருத்துவிட்டு
கெளை கெளையா வெடிச்சிருக்கு,ஒட்டாம ஒதுங்கி நின்னா ஒயர முடியுமா? - எதிலும்
ஒத்துமை கலைஞ்சுதுன்னா வளர முடியுமா?”“ உச்சி மலையிலே ஊறும் அருவிகள்
ஒரே வழியில் கலக்குது;ஒற்றுமையில்லா மனித குலம்உயர்வும் தாழ்வும் வளர்க்குது.”
பட்டுக்கோட்டையாரின் பாடல்களை ஊன்றி நோக்கினால் அவர் இன்றைய சமுதாயத்திற்கு வழங்கி இருக்கும் இன்றியமையாத செய்தி ஒன்று புலனாகும். “நல்லோரை எல்லாரும் கொண்டாட வேண்டும்” என்பதுதான் அது. “நாளை உலகம் நல்லோரின் கையில், நாமும் அதிலே உயர்வோம் உண்மையில்” என்று ஆழமாக நம்பினார் அவர். அதே நேரத்தில் அவர், நல்லவர்களை நோக்கியும் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார்.
நல்லவர்கள் உலகத்தோடு ஒட்டாமல் ஒதுங்கி நிற்பதால் தம் வாழ்வில் உயர முடியாது; அதனால் சமுதாயத்திற்கு எந்தப் பயனும் விளையாது. மாறாக, அவர்கள் ஒன்றாக இணைந்து செயல்படத் தொடங்கினால் - வல்லவர்களாக மாறினால் - வகையாக இந்த நாட்டில் மாற்றங்கள் உண்டாகும்; வாழ்வில் ஏற்றங்கள் உருவாகும். 'நாடோடி மன்னன்' படத்திற்காக எழுதிய பாடல் ஒன்றில் பட்டுக்கோட்டையார் இக்கருத்தினை அழகாகப் பதிவு செய்துள்ளார்:
காதலி : நல்லவர் ஒன்றாய் இணைந்துவிட்டால், மீதிஉள்ளவரின் நிலை என்ன மச்சான்?காதலன் : நாளை வருவதை எண்ணி எண்ணி - அவர்நாழிக்கு நாழி தெளிவாராடி!”தாய்ப் பால் போல் சீக்கிரம் ஜீரணிக்கத் தகுந்த எத்தனையோ அருமையான கற்பனைகளையும், அற்புதமான சிந்தனைகளையும் ஊட்டச் சத்து மிகுந்த தம் திரைப்பாடல்களின் வாயிலாகத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு வாரி வாரி வழங்கியவர் பட்டுக்கோட்டையார். ஈழத்து அறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி குறிப்பிடுவது போல், “இத்தகைய மனிதர்களுக்கு 'மறைவு' தான் உண்டே ஒழிய 'இறப்பு' இல்லை. மரணம் இத்தகையோரை வென்று விடுவதில்லை. அவர்களது ஆளுமைக்கு உயிர்ப்புள்ள ஓர் ஆயுள் உண்டு”.
பேராசிரியர் இரா.மோகன்எழுத்தாளர்,
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை'
இவருடைய பாடல்கள் ஒவ்வொன்றும் தனி ராகம். எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: பட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை'
shobana sahas wrote:
சூப்பர் ஷோபனா...............சரியா போட்டு விட்டீங்களே !............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை'
மேற்கோள் செய்த பதிவு: 1142159krishnaamma wrote:shobana sahas wrote:
சூப்பர் ஷோபனா...............சரியா போட்டு விட்டீங்களே !............
nandri krishnaamma . yellaam neenga solli kuduthathu thaan .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: பட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை'
பட்டுக் கோட்டையாரின் வாழ்க்கை குறிப்பு கொண்ட புத்தகம் இருப்பதாக நண்பர் ஒருவர் சொல்லி இருந்தார், அப்படி ஒரு புத்தகத்தின் மின்னூல் கிடைக்குமா, அப்படி யாரிடமாவது இருந்தால், தயவு செய்து இங்கு பதிவிடுங்களேன், அடியேன் நன்றியோடு ஏற்றுக் கொள்ளுவேன்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum