ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறள் அந்தாதி

5 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

குறள் அந்தாதி Empty குறள் அந்தாதி

Post by M.Jagadeesan Wed Jun 03, 2015 8:39 pm

அன்பு நண்பர்களே !

யாப்பு அறிந்தவர்கள் எழுதிப் பழகவும் , அறிந்துகொள்ள விரும்புவோரை ஊக்கப்படுத்தவும் , குறள் அந்தாதி என்னும் இத்திரியைத் தொடங்குகிறேன் .

" அந்தாதி " என்றால் என்னவென்று அனைவருக்கும் தெரியும் . முதல் பாடலின் கடைசி சொல்லை , அடுத்த பாடலின் தொடக்கமாக வைத்துப் பாடுவதுதான் அந்தாதி ஆகும் . யாப்பிலக்கணத்தில் தவறு இருந்தால் தெரிந்தவர்கள் திருத்தலாம் . இதனால் அனைவரும் குறள் யாப்பதில் பயிற்சி பெறமுடியும் என்று நம்புகிறேன் .

"சித்திரமும் கைப்பழக்கம் , செந்தமிழும் நாப்பழக்கம் " என்றாள் ஔவைப் பாட்டி . எழுத எழுதப் பிழைகள் குறையும் . பிழைகள் குறையக் குறையக் கவிதை மெருகேறும் . முடிவில் கவிதை நம் வசப்படும் .

குறள் வெண்பாவின் இலக்கணம் .
===================================
குறள் வெண்பாவில் வெண்சீர் வெண்டளை, இயற்சீர் வெண்டளை ஆகியவை பயின்று வரலாம் . ஈற்றுச்சீர்  நாள் ,மலர் , காசு , பிறப்பு ஆகிய வாய்பாட்டில்  எதாவது ஒன்றில் முடியவேண்டும் .

காய்முன் நேர் வருவது வெண்சீர் வெண்டளையாகும் . விளமுன் நேரும் , மாமுன் நிரையும் வருவது இயற்சீர் வெண்டளையாகும் . வெண்பாவில் கனிச்சீர் வரக்கூடாது . எதுகை மோனை பெற்று வருவது குறள் வெண்பாவுக்கு அழகூட்டும் .

இப்பொழுது ஒரு குறளைப் பார்ப்போம் .

துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்துதான் வந்தாலும்
இன்புற் றிருக்கப் பழகு .

இக்குறள் " பழகு " என்ற சொல்லில் முடிந்துள்ளது . எனவே அடுத்த குறள் " பழகு " என்ற சொல்லில் தொடங்கவேண்டும் .

பழகக் குளிரும் ; விலக எரிக்கும்
அழகிய காதல் நெருப்பு .

இனித் தொடர்ந்து எழுதுவோம் .

அடுத்த குறள் " நெருப்பு " என்ற சொல்லில் தொடங்கவேண்டும் . முயன்று பாருங்களேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

குறள் அந்தாதி Empty Re: குறள் அந்தாதி

Post by M.Jagadeesan Sun Jul 26, 2015 8:35 pm

நெருப்பாய்த் தகிக்கின்ற கோடை வெயிலில்
செருப்பின்றி செல்லல் தவறு .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

குறள் அந்தாதி Empty Re: குறள் அந்தாதி

Post by M.Jagadeesan Thu Oct 29, 2015 9:29 am

அடுத்து " தவறு " என்ற சொல்லில் ஆரம்பிக்க வேண்டும் .

தவறுதல் என்றும் மனித இயல்பு
தவறாமை தெய்வ குணம் .

தவறுதல் - நிரை நிரை - கருவிளம்
என்றும் - நேர் நேர் - தேமா
மனித - நிரை நேர் - புளிமா
இயல்பு - நிரை நேர் - புளிமா
தவறாமை - நிரை நேர் நேர் - புளிமாங்காய்
தெய்வ - நேர் நேர் - தேமா
குணம் - மலர் என்னும் வாய்பாட்டால் முடிவுற்றது .


இனி அடுத்த குறள் " குணம் " என்ற சொல்லில் தொடங்கவேண்டும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

குறள் அந்தாதி Empty Re: குறள் அந்தாதி

Post by M.Jagadeesan Thu Oct 29, 2015 11:48 am

" குணம் " என்ற சொல்லில் தொடங்கும் வள்ளுவர் செய்த குறளைப் பார்ப்போம்

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது .

குணமென்னும் - நிரை நேர் நேர் - புளிமாங்காய்
குன்றேறி - நேர் நேர் நேர் - தேமாங்காய்
நின்றார் - நேர் நேர் - தேமா .
வெகுளி - நிரை நேர் - புளிமா  
கணமேயும் – நிரை நேர் நேர் – புளிமாங்காய்
காத்தல் – நேர் நேர் – தேமா
அரிது – – குற்றியலுகரத்துடன் சேர்ந்த நிரையசை

காய் முன் நேர் வருவது வெண்சீர் வெண்டளையாகும்.
மா முன் நிரையும், விளமுன் நேரும் வருவது இயற்சீர் வெண்டளையாகும் .

குணமென்னும் குன்றேறி – காய்முன் நேர் – வெண்சீர் வெண்டளை
குன்றேறி நின்றார் – காய் முன் நேர் – வெண்சீர் வெண்டளை
நின்றார் வெகுளி – மா முன் நிரை – இயற்சீர் வெண்டளை
வெகுளி கணமேயும் – மா முன் நிரை – இயற்சீர் வெண்டளை
கணமேயும் காத்தல் – காய்முன் நேர்
காத்தல் அரிது – மா முன் நிரை – இயற்சீர் வெண்டளை
அரிது – குற்றியலுகரத்துடன் சேர்ந்த நிரையசை

இனி “ குணம் “ என்ற சொல்லில் தொடங்கும் ஒரு குறளை நாம் யாப்போம் .

குணத்தால் ஒருவனுக்கு உண்டாம் பெருமை
பணத்தால் பயனுண்டோ சொல் .

இனி அடுத்த செய்யுளை “ சொல் “ என்று தொடங்கவேண்டும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

குறள் அந்தாதி Empty Re: குறள் அந்தாதி

Post by M.Jagadeesan Thu Oct 29, 2015 1:44 pm

திருக்குறளைச் செய்யும்போது கருத்துக்கு முதலிடமும் , இலக்கணத்திற்கு இரண்டாம் இடமும் கொடுக்கவேண்டும் . வெறும் வார்த்தைகளால் நிரப்பப்படும் குறட்பா , உயிரில்லாத உடலுக்குச் சமமாகும் .


சொல்லுக நாடோறும் வேலன் திருப்புகழை
வெல்லும் வழியதுவே காண்   .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

குறள் அந்தாதி Empty Re: குறள் அந்தாதி

Post by சசி Thu Oct 29, 2015 4:12 pm

அருமையான திரி ஐயா. நானும் முயற்சி செய்கிறேன்.  நன்றி ஐயா. நிறைய தமிழ் வகுப்புகள் எடுங்கள் ஐயா. ஆர்வமாக இருக்கிறேன்.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

குறள் அந்தாதி Empty Re: குறள் அந்தாதி

Post by M.Jagadeesan Thu Oct 29, 2015 4:18 pm

சசியின் ஆர்வத்திற்கு நன்றி !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

குறள் அந்தாதி Empty Re: குறள் அந்தாதி

Post by M.Jagadeesan Thu Oct 29, 2015 9:11 pm

காண்பதற்கோர் ஆயிரங்கண் வேண்டும் அவளுடைய
நாணமோ கோடி பெறும்.



குறட்பாவின் இறுதிச் சீர்  ஓரசைச் சீராக இருக்கவேண்டும் . அது நாள் , மலர் , காசு , பிறப்பு ஆகிய நான்கு வாய்பாட்டில் ஒன்றைக் கொண்டு முடியவேண்டும் . இக்குறட்பாவில் " பெறும் " என்னும் இறுதிச்சீர் மலர் என்னும் வாய்பாட்டைக் கொண்டுள்ளது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

குறள் அந்தாதி Empty Re: குறள் அந்தாதி

Post by M.Jagadeesan Thu Oct 29, 2015 11:11 pm

நானும் , என்னுடைய கெழுதகை நண்பர் , தமிழாசிரியர் திரு . குணமதி அவர்களும் போட்டி போட்டுக்கொண்டு குறட்பாக்களை எழுதினோம் . நான் எழுதும் குறட்பாவின் ஈற்றுச் சீரை , முதல் சீராகக்கொண்டு அவர் குறட்பா எழுதுவார் . அவர் எழுதும் குறட்பாவின் ஈற்றுச் சீரை , முதல் சீராகக்கொண்டு நான் குறட்பா எழுதுவேன் .

அக்குறட்பாக்களை இங்கு தருகிறேன் . நான் எழுதிய  குறட்பாக்கள் சிவப்பு வண்ணத்திலும் , நண்பர் குணமதி எழுதிய குறட்பாக்கள் நீல வண்ணத்திலும் காட்டியுள்ளேன் . மேலேகண்ட குறட்பாவின் தொடர்ச்சியாக நண்பர் குணமதி எழுதிய குறட்பா இது .

பெறுதற் கரியதோர் பேறெனவே கற்றேன்
குறுகத் தறித்த குறள்



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

குறள் அந்தாதி Empty Re: குறள் அந்தாதி

Post by விமந்தனி Thu Oct 29, 2015 11:15 pm

மிக அருமை ஐயா. தொடருங்கள் தெரிந்து கொள்கிறோம்.


குறள் அந்தாதி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகுறள் அந்தாதி L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312குறள் அந்தாதி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

குறள் அந்தாதி Empty Re: குறள் அந்தாதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum