ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகருக்குள் ஒரு வெப்பமண்டலக் காடு

3 posters

Go down

நகருக்குள் ஒரு வெப்பமண்டலக் காடு Empty நகருக்குள் ஒரு வெப்பமண்டலக் காடு

Post by சரவணன் Mon Jun 01, 2015 12:15 pm

தூசு நிறைந்த சூழலுக்கு மத்தியில் வன அதிகாரி ஒருவரின் உதவியுடன், வெப்பமண்டலக் காட்டில் வாழும் 50 வகை மரங்களை வளர்த்திருக்கிறார்கள் மதுரை முத்தமிழ்நகர் மக்கள்.

மதுரை அண்ணாநகர் கிழக்கில் உள்ள எல்.ஐ.ஜி. காலனியில், முத்தமிழ் குடியிருப்புப் பகுதியில் மாநகராட்சி பூங்கா இருக்கிறது. மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாததால், வாகன நிறுத்தும் இடமாகவும், குப்பை கொட்டும் இடமாகவும் இருந்த இடம் இப்போது மூலிகைப் பூங்காவாக மாறி இருக்கிறது. தும்பை, தூதுவளை, ஓமவல்லி, கண்டங்கத்திரி, வல்லாரை, நாராயணசஞ்சீவி, கீழாநெல்லி, தும்பை என்று ஏராளமான மூலிகைகள் இங்கு இருக்கின்றன. வெப்பமண்டலக் காடுகளில் உள்ள பல அபூர்வ மரங்கள் இங்கிருப்பதுதான் இந்தப் பூங்காவின் சிறப்பு.

மதுரைக்கு பெயர்க் காரணம் தந்த, மருத மரங்களையும் இங்கு பார்க்கலாம். மீனாட்சியம்மன் கோயிலின் தல விருட்சமான கடம்ப மரத்தையும் இங்கு பார்க்கலாம். மயிலடி (இதன் இலைகள் மயிலின் பாதம் போல் இருக்கிறது), ஏழிலைப்பாலை (ஜார்க்கண்ட் மாநில அரசின் மரம்), இலுப்பை, மகிழம், மலைவேம்பு, இயல் வாகை, அயல் வாகை, தூங்குமூஞ்சி வாகை, அரசு, பூவரசு, மலைப்பூவரசு, ஆலமரம், அத்தி, இச்சி, மருதமரம், நீர்மருது, கருமருது, உதியன்மரம், புன்னை, கடம்பு, வெள்ளைக்கடம்பு, நீர்க்கடம்பு, டெபிபியா, போலிச்சந்தன் (இந்தியாவில் அழியும் தருவாயில் இருக்கும் மரம்), மகாகனி, நெட்டிலிங்கம், குமிழ்மரம், கல் இச்சி பொன்மூங்கில், ஈச்சை, நாகலிங்கம், புங்கன், கருமரம், மந்தாரை, வில்வம், மீன்வால்ப்பனை, பிள்ளை மருது, மான்காது சவுக்கு, தேன்சிட்டு மரம், கூந்தல்பனை பால்பேட்மிட்டன் மரம், உசிலை என்று சுமார் 50 வகை மரங்கள் இங்கு இருக்கின்றன.
நாவல், அரைநெல்லி, முழுநெல்லி, சிங்கப்பூர் செர்ரி, எலுமிச்சை, தென்னை, மாதுளை, நாவல், விளாமரம், கொய்யா, மா, முருங்கை, கொடுக்காப்புளி போன்ற பலன் தரும் மரங்களையும் செம்பருத்தி, தாழை, பன்னீர் புஷ்பம், இட்லிப்பூ, மனோரஞ்சிதம், செந்தாழம் போன்ற மலர்ச் செடிகளையும் வளர்த்திருக்கிறார்கள். இந்தப் பூங்காவுக்கு புதிது புதிதாய் பறவைகள் வருவதைப் பார்த்து, அவை கூடு கட்டி வாழ்வதற்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த வனத்தை உருவாக்க, முத்தமிழ் குடியிருப்பு மக்களுக்கு உதவியவரான வன அதிகாரி ராஜ்குமார் கூறுகையில், "கட்டாந்தரையாக இருந்த இந்த இடத்தை, சட்டமன்ற மனுக்கள் குழுவிடம் மனு கொடுத்து பூங்கா அமைப்பதற்காக ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு பெற்றனர் இப்பகுதி மக்கள். பிறகு, குடியிருப்போர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் முத்துக்குமார் மூலம், பொதுநல வழக்கு போட்டு பூங்காவை அமைத்தனர். அவர்களின் ஆர்வத்தைப் பார்த்து, என்னுடைய பங்காக சில அபூர்வ மரங்களை நட்டுப் பராமரித்தேன். அடிமண்ணை மாற்றி, ஆட்டுப் புழுக்கையை உரமாக இட்டு வளர்த்ததில், அந்த மரங்கள் ஓரளவுக்கு வளர்ந்தன. இதனால், காடுகளில் மட்டுமே பார்க்க முடிகிற அபூர்வ மரங்களையும் இங்கே வளர்க்க முயன்றேன்.
மக்களின் ஒத்துழைப்போடு அந்த முயற்சி வெற்றி பெற்றிருக்கிறது. இங்கு இருக்கும் பெரும்பாலான மரங்கள், வெப்பமண்டலக் காடுகளில் வாழ்பவை என்றாலும், இவற்றில் நீர் மருது உள்ளிட்ட பல மரங்களுக்கு அதிகம் தண்ணீர் தேவைப்படும்.
எனவே, மரங்களின் தூருக்கடியில் கற்றாழை உள்ளிட்ட குத்துச்செடிகளை அதிகமாக நட்டு வைத்துள்ளோம். இவை தண்ணீரைச் சேகரித்து வைத்துக் கொண்டு, டிரிப்ஸ் போல பெரிய மரங்களுக்குத் தண்ணீர் அளித்துக்கொண்டே இருக்கும் என்பதால், கடும் வறட்சியிலும் கூட மரங்கள் பட்டுப்போகாமல் தப்பித்துக் கொள்ளும்.
இந்த பூங்காவுக்கு வந்து, ஒரே ஒரு முறை இயற்கைக் காற்றைச் சுவாசித்தவர்கள், இதேபோல தங்கள் பகுதி பூங்காவிலும் மரக்கன்று நடுமாறு கோரிக்கைவிடுத்து வருகிறார்கள்"என்றார்.

"மாநகராட்சி செய்ய வேண்டிய வேலையை, முத்தமிழ் குடியிருப்பு மக்களே செய்து வருகிறோம். பகலில் காவலுக்கு காவலாளியை நியமித்திருக்கிறோம். இரவு நேரத்தில் மூலிகைகளை பறிக்கிறேன் பேர்வழி என்று செடியையே சிலர் அழித்து விடுகிறார்கள். அரிய மரங்கள் எல்லாம் ஓரளவுக்குப் பெரிதாக வளர்ந்து விட்டதால், அவை திருடப்படும் அபாயமும் இருக்கிறது. எனவே, இரவுக் காவலாளி நியமிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். பூங்காவுக்கு வருவோர் அருகில் உள்ள குப்பைத் தொட்டியைப் பார்த்து முகம் சுளிக்கிறார்கள். அதை அகற்ற வேண்டும். பூங்கா பராமரிப்புக்கு மாநகராட்சியால் முழுமையாக உதவ முடியாதபட்சத்தில், தனியார் உதவியைப் பெறலாம் என்றிருக்கிறோம்" என்றார்.

- Courtesy: http://tamil.thehindu.com/


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நகருக்குள் ஒரு வெப்பமண்டலக் காடு Empty Re: நகருக்குள் ஒரு வெப்பமண்டலக் காடு

Post by balakarthik Mon Jun 01, 2015 12:18 pm

நகருக்குள் ஒரு வெப்பமண்டலக் காடு 3838410834 நகருக்குள் ஒரு வெப்பமண்டலக் காடு 3838410834 நகருக்குள் ஒரு வெப்பமண்டலக் காடு 3838410834 நகருக்குள் ஒரு வெப்பமண்டலக் காடு 3838410834 நகருக்குள் ஒரு வெப்பமண்டலக் காடு 3838410834 நகருக்குள் ஒரு வெப்பமண்டலக் காடு 3838410834


ஈகரை தமிழ் களஞ்சியம் நகருக்குள் ஒரு வெப்பமண்டலக் காடு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நகருக்குள் ஒரு வெப்பமண்டலக் காடு Empty Re: நகருக்குள் ஒரு வெப்பமண்டலக் காடு

Post by ஈகரைச்செல்வி Tue Jun 16, 2015 6:52 pm

நகருக்குள் ஒரு வெப்பமண்டலக் காடு 3838410834 நகருக்குள் ஒரு வெப்பமண்டலக் காடு 3838410834 நகருக்குள் ஒரு வெப்பமண்டலக் காடு 3838410834 நகருக்குள் ஒரு வெப்பமண்டலக் காடு 3838410834


மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Back to top Go down

நகருக்குள் ஒரு வெப்பமண்டலக் காடு Empty Re: நகருக்குள் ஒரு வெப்பமண்டலக் காடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum