புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_c10 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_m10 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_c10 
36 Posts - 46%
heezulia
 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_c10 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_m10 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_c10 
19 Posts - 24%
mohamed nizamudeen
 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_c10 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_m10 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_c10 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_m10 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_c10 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_m10 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_c10 
4 Posts - 5%
prajai
 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_c10 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_m10 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_c10 
3 Posts - 4%
Raji@123
 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_c10 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_m10 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_c10 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_m10 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_c10 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_m10 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_c10 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_m10 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_c10 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_m10 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_c10 
156 Posts - 41%
ayyasamy ram
 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_c10 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_m10 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_c10 
150 Posts - 39%
mohamed nizamudeen
 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_c10 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_m10 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_c10 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_m10 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_c10 
21 Posts - 5%
prajai
 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_c10 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_m10 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_c10 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_m10 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_c10 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_m10 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_c10 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_m10 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_c10 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_m10 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_c10 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_m10 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 30 May 2015 - 3:16

First topic message reminder :


பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்

சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பதையடுத்து, தமிழக அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது. சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி பொது வேட்பாளராக தன்னை நிறுத்தக் கோரி அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து வருகிறார்.

ஆர்.கே.நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த வெற்றிவேல், தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து அந்தத் தொகுதிக்கு வரும் ஜூன் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்குமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தத் தொகுதியில், அதிமுக சார்பில் ஜெ.ஜெயலலிதா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளன.

இந்தத் தேர்தலில் முறைகேடு நடக்காது என தேர்தல் ஆணையம் வாக்குறுதி அளித்தால் மட்டுமே, தாங்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுவோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியிருக்கிறார். ஜூன் 3ஆம் தேதி தமிழக காங்கிரசின் செயற்குழு இது குறித்து முடிவெடுக்குமென அவர் கூறியிருக்கிறார்.

இந்தத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் அளிக்கப்பட மாட்டாது என உறுதியளித்தால் பாமக போட்டியிடுவது குறித்து பரிசீலிக்கும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.

இதற்கிடையில், சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார்.

அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து, தனக்கு ஆதரவளிக்கும்படி கேட்டுவருகிறார்.

இன்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரை அவர் சந்தித்து ஆதரவு கோரினார். டிராஃபிக் ராமசாமிக்கு ஆதரவளிப்பது குறித்து திமுக தலைவர் மு.கருணாநிதிதான் முடிவெடுக்க வேண்டுமென மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

திமுகவிடம் ஆதரவு கேட்டதால், டிராஃபிக் ராமசாமிக்கு ஆதரவளிக்கப் போவதில்லையென பாமக தெரிவித்திருக்கிறது.

தேசிய ஜனநாயக் கூட்டணியின் சார்பாக வேட்பாளரை நிறுத்துவது குறித்து விவாதிப்பதற்காக, தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை பாரதீய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் சந்தித்துப் பேசினார்.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஜூன் 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.



 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 9 Jun 2015 - 1:49

ஆர்.கே. நகர் தொகுதியில் காங்கிரஸ் போட்டி இல்லை இளங்கோவன் அறிவிப்பு

தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் நடைபெறும் அனைத்து இடைத் தேர்தல்களிலும் ஆளும் கட்சி வேட்பாளர்கள்தான் வெற்றி பெற முடியும் என்ற நிரந்தர நிலை உருவாக்கப்பட்டு விட்டது. சட்டத்தின்படி, சுதந்திரமாக, பாரபட்சமின்றி, நடுநிலையோடு செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையமே இதற்கு துணை போவது எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

சென்னை, ராதாகிருஷ் ணன் நகர் இடைத் தேர்த லில் முதல்-அமைச்சர் ஜெய லலிதா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் ஆத்து மீறல்களையும், ஒருதலைபட்சமான நடவடிக்கைகளையும் ஆளும் கட்சியின் அறங் கேற்ற ஆரம்பித்து விட்டனர்.

இந்நிலையை முன் கூட்டியே அறிந்த காரணத்தினால்தான் இத்தேர்தலில் போட்டி யிடுவதாக இருந்தால் சுதந்திரமாக, பாரபட்சமின்றி தேர்தல் நடத்துவதற்கு வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதை அனுமதிக்க மாட்டோம் என தேர்தல் ஆணையம் உறுதி மொழி அளித்தால் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் கட்சி பரிசீலிக்கும் என்று பகிரங்கமாக கூறி இருந்தோம்.

ஆனால் அதற்கு இதுவரை தேர்தல் ஆணையத்திடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

நாம் எதிர்பார்த்தபடி ராதாகிருஷ்ணன் நகர் இடைத் தேர்தலில் ஆளுங்கட்சியின் அராஜகங்கள், அத்துமீறல்கள் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் என தங்கு தடையின்றி ஆரம்பித்து விட்டன.எனவே இத்தகைய ஜனநாயக சட்ட விரோதமான அசாதாரண சூழலை தடுத்து நிறுத்திட தேர்தல் ஆணையம் முற்றிலும் தவறிவிட்ட காரணத்தினால் ராதாகிருஷ்ணன் நகர் இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கவில்லை என்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 14 Jun 2015 - 2:53

ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் 230 தேர்தல் பணிமனைகள் அமைப்பு; தொண்டர்களுக்கு பிரசார பணி ஒதுக்கப்படுகிறது

ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் 230 தேர்தல் பணிமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தொண்டர்களுக்கு பிரசார பணி ஒதுக்கப்பட்டு வருகிறது.

ஜெயலலிதா போட்டி

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இதில் போட்டியிடும் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அ.தி.மு.க. அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகள் தொகுதியில் முகாமிட்டு அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் இணைந்து தொகுதியை சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் வீதி, வீதியாக சென்று பொதுமக்களிடம், ஜெயலலிதா நிறைவேற்றிய திட்டங்கள், சாதனைகளை பட்டியலிட்டு, அதனை பொதுமக்களிடம் விளக்கியும், ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள அனைத்து குறைகளையும் ஜெயலலிதா நிவர்த்தி செய்வார் என்று வாக்குறுதி அளித்தும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

230 தேர்தல் பணிமனைகள்

ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட வண்ணாரப்பேட்டையில் கடந்த மாதம் 31-ந் தேதி அ.தி.மு.க.வின் முதல் தேர்தல் பணிமனை திறக்கப்பட்டது. அதன் பின்னர், அடுத்தடுத்த நாட்களில் அ.தி.மு.க. சார்பில் வரிசையாக தேர்தல் பணிமனைகள் திறக்கப்பட்டன.

நேற்றைய நிலவரப்படி 230 வாக்குச்சாவடி மையங்களுக்கு, ஒரு தேர்தல் பணிமனை என்ற அடிப்படையில் 230 தேர்தல் பணிமனைகளை அ.தி.மு.க.வினர் அமைத்துள்ளனர்.

இந்த தேர்தல் பணிமனைகளில் காலை 7 மணிக்கே குவியும் அ.தி.மு.க.வினர் எந்தெந்த பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ளலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். அதனடிப்படையில் குறிப்பிட்ட இடங்களை தேர்ந்தெடுத்து பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். திட்டமிட்டு குழு, குழுவாக பிரிந்து சென்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நூதன பிரசாரம்

உடலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை வர்ணம் பூசியும், இரட்டை இலை போன்று தலைமுடியை வெட்டியும், நின்றுகொண்டே சைக்கிளை ஓட்டியும் நூதன முறையில் அ.தி.மு.க. தொண்டர்கள் பலர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அ.தி.மு.க. மாணவர் அணியினர் வாக்காளர்கள் காலில் விழுந்து ஜெயலலிதாவுக்கு வாக்களியுங்கள் என்று வேண்டு கோள் விடுத்து வருகின்றனர். அ.தி.மு.க.வினர் பிரசாரத்தால் ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் களைகட்டி உள்ளது.

ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஒரு புறம் பிரசாரம் மேற்கொண்டபடியே, மற்றொரு புறம் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணியிலும் அ.தி.மு.க.வினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.




 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 14 Jun 2015 - 2:55

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளருக்கு தி.மு.க. ஆதரவு அளிக்குமா? மு.க.ஸ்டாலின் பேட்டி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளருக்கு தி.மு.க. ஆதரவு அளிக்குமா? என்ற கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

தி.மு.க. ஆதரவு அளிக்குமா?

கேள்வி:- ஓ.பன்னீர் செல்வம் முதல்-அமைச்சராக இருந்த போது தமிழகத்தில் எந்த அரசு பணிகளும் நடக்கவில்லை, இப்போதும் அமைச்சர்கள் அனைவரும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முகாமிட்டு இருப்பதால் பணிகள் எதுவும் நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- பத்திரிகையாளர்களாகிய நீங்கள் தான் இதுபற்றி அவர்களிடம் கேட்க வேண்டும், எழுத வேண்டும்.

கேள்வி:- ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. தங்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கேட்கப்பட்டு உள்ளதே? தி.மு.க. ஆதரவு கொடுக்குமா?

பதில்:- இந்திய கம்யூனிஸ்டு கட்சி மட்டும் அல்ல எந்த கட்சியும் ஆதரவு கேட்பது அவர்களது உரிமை. தி.மு.க. ஆதரவு அளிக்குமா? என்பதை தலைவர் கருணாநிதி தான் முடிவு செய்து அறிவிப்பார்.

பொது தேர்தலுக்கு தயார்

கேள்வி:- இடைத்தேர்தலை புறக்கணித்து விட்டீர்கள், சட்டமன்ற பொதுதேர்தலுக்கு தயாராகி விட்டீர்களா?

பதில்:- தி.மு.க.வை பொறுத்தவரை எப்போது தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க தயாராக இருக்கிறது.

கேள்வி:- ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தல் நியாயமாக நடத்தப்படுமா? தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி நடந்துகொள்ளும் என எதிர்பார்க்கிறீர்களா?

பதில்:- நீங்கள் சந்தேகமாக கேட்பதில் இருந்தே தேர்தல் எப்படி நடக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம்.

சி.பி.ஐ. விசாரணை தேவை

கேள்வி:- திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகள் இதுவரை கைதுசெய்யப்படாமல் இருப்பதற்கு ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்து உள்ளது. இதில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என கேட்பீர்களா?

பதில்:- இந்த வழக்கை பொறுத்தவரை ஆரம்பத்திலேயே சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என தி.மு.க. கோரிக்கை வைத்தது. சி.பி.ஐ. விசாரணை நடத்தினால்தான் முழு உண்மையும் வெளியே வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.




 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 14 Jun 2015 - 2:57

மதுபானத்துக்கு ரசீது வழங்கப்படுமா? சுயேச்சை வேட்பாளர்

27-ந்தேதி நடைபெற உள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு 53 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், பரிசீலனைக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சி.மகேந்திரன், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உள்பட 32 பேருடைய மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பாளர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்கான கூட்டம் தண்டையார்ப்பேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நேற்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது.

தேர்தல் நடத்தும் அதிகாரி சவுரிராஜன், பொது பார்வையாளர் ராஜீவ் நாராயணசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வேட்பாளர்கள் கலந்துகொண்டனர். ஜெயலலிதா சார்பில் ஆர்.கே.நகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல் பங்கேற்றார்.

கூட்டத்தில், மது குடிப்போர் சங்கம் சார்பில் சுயேச்சையாக போட்டியிடும் பி.குமாரசாமி என்பவர், ‘வேட்பாளர் செய்யும் செலவுகள் கணக்கு காட்ட வேண்டும் என்று கூறுகிறீர்கள். ஓட்டலில் உணவு சாப்பிட்டால் ரசீது வாங்கி கொள்கிறோம். ஆனால் ‘டாஸ்மாக்’ மதுபான கடையில் மது அருந்தினால் ரசீது தருவதில்லை. இது தேர்தல் நடத்தை விதிமீறலில் அடங்குமா? என்று கேட்டார்.

இந்த கேள்வியை கேட்டதும் தேர்தல் அதிகாரிகள் செய்வதறியாமல் சிறிது நேரம் திகைத்தபடி கூட்டத்தை நிறைவு செய்தனர்.




 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 14 Jun 2015 - 2:57

ஜெயலலிதா 21-ந் தேதி சூறாவளி பிரசாரம்; வேனில் சென்று 5 இடங்களில் பேசுகிறார்

சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சூறாவளி பிரசாரத்தில் ஈடுபடுகிறார். வேனில் சென்று 5 இடங்களில் அவர் பேசுகிறார்.

இடைத்தேர்தல்

தமிழகத்தில் காலியாக உள்ள சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு 27-ந் தேதி (சனிக்கிழமை) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. பிரதான எதிர்கட்சிகளான தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா., பா.ஜ.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் போட்டியிடவில்லை.

அ.தி.மு.க. சார்பில், அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சி.மகேந்திரன் போட்டியிடுகிறார். சுயேச்சையாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உள்பட பலர் களத்தில் உள்ளனர்.

ஜெயலலிதா பிரசாரம்

ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த 3-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து, அமைச்சர்கள் உள்ளிட்ட அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்கள் 50 பேர் தொகுதியில் தீவிரமாக பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இதேபோல், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சி.மகேந்திரன் உள்ளிட்ட வேட்பாளர்களும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். இதனால், ஆர்.கே. நகர் தொகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்த நிலையில், அ.தி.மு.க. வேட்பாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அங்கு சூறாவளி பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

அ.தி.மு.க.வினர் உற்சாகம்

அன்று மாலை 3 மணிக்கு மேல் வீட்டில் இருந்து பிரசார வேனில் புறப்படும் அவர், தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை, ராயபுரம் ஆகிய 5 இடங்களில் பொதுமக்கள் மத்தியில் பேசி வாக்குசேகரிக்க உள்ளார். ஜெயலலிதா பிரசாரம் செய்யும் இடங்கள் மேலும் 2 அதிகப்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

பிரசாரத்திற்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்கள் செய்து வருகின்றனர். ஜெயலலிதா வருகையையொட்டி, ஆர்.கே. நகர் தொகுதியில் உள்ள அ.தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.




 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 14 Jun 2015 - 2:58

ஓட்டுப்பதிவின்போது வாக்காளர் அடையாளத்தை உறுதி செய்வதற்கான ஆவணங்கள் எவை? தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓட்டுப்பதிவின்போது, வாக்காளர் அடையாளத்தை உறுதி செய்வதற்கான ஆவணங்கள் எவை என்பது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அடையாளம் காட்ட முடியாதவர்கள்

ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. வாக்காளர்கள் யாருக்கெல்லாம் புகைப்பட அடையாள அட்டை தரப்பட்டு இருக்கிறதோ, அவர்கள் அனைவரும் அந்த அட்டையை வைத்து தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்தி ஓட்டு போடவேண்டும்.

வாக்காளர் அட்டை இருந்தும் அதை வாக்குச்சாவடிக்கு கொண்டு வராதவர்களும், புகைப்படம் தெளிவாக இல்லாததால் தனது அடையாளத்தை உறுதி செய்ய முடியாதவர்களும், கீழ்க்கண்ட மாற்று ஆதாரங்களில் ஏதாவது ஒன்றை காட்டி ஓட்டுபோடலாம்.

11 மாற்று ஆவணங்கள்

பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம்; மத்திய அல்லது மாநில அரசு அல்லது பொதுத்துறை நிறுவனம் வழங்கியுள்ள அரசு பணிக்கான புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை; வங்கி அல்லது தபால் அலுவலகத்தின் புகைப்படத்துடன் கூடிய பாஸ்புக்; பான் அட்டை;

ஆதார் அட்டை; தேசிய ஜனத்தொகை பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டதற்கான ஸ்மார்ட் அட்டை; மகாத்மாகாந்தி வேலை உறுதிக்கான பணி அட்டை; தொழிலாளர் நலத்துறை வழங்கும் சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை; புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை; தேர்தல் கமிஷன் வழங்கும் “பூத் சிலிப்”, எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான அதிகாரபூர்வ அடையாள அட்டை ஆகியவை மாற்று ஆதாரங்களாகும். தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பே புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப்களை அனைவருக்கும் தேர்தல் கமிஷன் வழங்கும்.

பட்டியலில் பெயர்இருக்க வேண்டும்

வேறு சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பெயர் பதிவு அதிகாரியிடம் பெறப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையையும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓட்டுபோட வாக்காளர் பயன்படுத்தலாம். ஆனால் அந்த தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால் ஓட்டுபோட முடியாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 23 Jun 2015 - 1:47

மக்களால் நான், மக்களுக்காகவே நான்: ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா பேச்சு

‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என்ற அடிப்படையில் எப்போதும் செயலாற்றி வருகிறேன். எனக்கு எல்லாமே நீங்கள்தான் என்று ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா பிரச்சாரம் மேற்கொள்ளும் போது பேசினார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பிரச்ச்சாரத்தில் ஈடுபட்ட ஜெயலலிதா பேசியதாவது:

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவதே தனது லட்சியம்.கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வெற்றிவேலை, எனது வேண்டுகோளை ஏற்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தீர்கள்.

இந்த இடைத்தேர்தல், நீங்கள் விரும்பாத இடைத்தேர்தல். பொதுத்தேர்தலுக்கு ஓராண்டு மட்டுமே இருக்கும் நிலையில், அரசியல் சதியால் போடப்பட்ட வழக்கால், இடைப்பட்ட சிறிது காலத்துக்கு நான் முதல்வராக இல்லாத சூழல் ஏற்பட்டது. எனவே, இந்த இடைத்தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இப்போது நானே இங்கு போட்டியிடுகிறேன். தேர்தலில் வெற்றி பெறுவது என்பது வேறு. பிறரை தோற்கடிப்பது என்பது வேறு. ஆனால், இந்தத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவதே எனது லட்சியம்.

மக்கள் மனதில் இடம் பெற்றிருக்கும் என்னையும், அதிமுகவையும் வெல்ல முடியாது என்பதால்தான், எதிர்க்கட்சிகள் போட்டியிடவில்லை. ஆனால், அதற்கு பல கற்பனை கதைகளை கட்டவிழ்த்து விடுகின்றன.

பிறரின் குறைகளைச் சொல்லி வாக்குகளை கேட்க நான் இங்கு வரவில்லை. நாங்கள் செயல்படுத்திய சமூகநல, வளர்ச்சி மற்றும் தொலைநோக்குத் திட்டங்களை எடுத்துச் சொல்லி வாக்குகளை கேட்கவே வந்திருக்கிறேன்.

20 கிலோ விலையில்லா அரிசி, ரூ. 25-க்கு லிட்டர் பாமாயில், ரூ. 30-க்கு கிலோ துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, தாலிக்கு தங்கத்துடன் ரூ. 50,000 திருமண உதவி, கட்டணமில்லா கல்வி, ஆண்டுக்கு 4 பள்ளிச் சீருடைகள், காலணிகள், பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், விலையில்லா மிதிவண்டிகள், விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, ரூ. 1,000 ஓய்வூதியம், அரசு கேபிள்கள் மூலம் குறைந்த கட்டணத்தில் அதிக சேனல்களை பார்க்கும் வசதி, தாய்- சேய் நலம் காக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், விலையில்லா மடிக்கணினி, கட்டணமில்லா பேருந்துப் பயணம், மகப்பேறு உதவி, அம்மா உணவகங்கள், அம்மா குடிநீர், அம்மா மருந்தகங்கள், அம்மா சிமென்ட், அம்மா உப்பு, மக்களை நாடிச் சென்று குறைகளைத் தீர்க்கும் அம்மா திட்டம் என எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லாத அளவுக்கு கடந்த 4 ஆண்டுகளில் 4,992 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்துள்ளோம். இதனால் தொழில் வளர்ச்சி பெருகியுள்ளது. லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்தி இருக்கிறோம். ரூ. 41 கோடியில் துணை மின் நிலையப் பணிகள் நடந்துள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் இந்தத் தொகுதியில் 14,313 புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சிதிலமடைந்த வீடுகளுக்குப் பதிலாக ரூ. 101 கோடியில் 1,500 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

ரூ. 25 கோடியில் 254 உட்புறச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் ரூ. 17 கோடியில் 205 உட்புறச் சாலைகள் புதுப்பிக்கப்படவுள்ளன. கத்திவாக்கம் நெடுஞ்சாலை - ரயில்வே சந்திப்பில் ரூ. 12 கோடியில் மேம்பாலப் பணிகள், ரூ. 3.30 கோடியில் மீனம்பாள் நகரில் மகப்பேறு மருத்துவமனை ஆகிய பணிகள் முடியும் நிலையில் உள்ளன. 22,144 கர்ப்பிணிகளுக்கு ரூ. 8.86 கோடி நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. 11,106 நோயாளிகளிகளுக்கு ரூ. 19.89 கோடியில் முதல்வரின் விரிவான பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

44,596 குடும்பங்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குடும்பங்களுக்கு விரைவில் வழங்கப்படும். 32,609 பேர் ரூ. 1,000 மாத ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். 14 புதிய வழித்தடங்களில் 36 புதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த தொகுதியில் மட்டும் 10 அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன.

ஆர்.கே.நகரில் ரூ. 2.77 கோடியில் 10 குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் 236 தெருக்களில் குடிநீர் பற்றாக்குறை தீர்க்கப்பட்டுள்ளது. ரூ. 242 கோடியில் மழைநீர் வடிகால், தெரு விளக்குகள், சாலைகள் அமைக்கும் பணிகள் சென்னை மாநகராட்சியால் செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டில் ரூ. 36 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படி ஏராளமான பணிகளை ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்காக செய்திருக்கிறோம்.

இங்கே, என்னை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் போட்டியிடுகிறார். இதே கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் என்னையும், அதிமுக அரசையும் பாராட்டி பேசியுள்ளனர். அக்கட்சியின் எம்எல்ஏ எம்.ஆறுமுகம், ‘‘அம்மா உணவகம் ஏழைகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம்’’ என்றும், அக்கட்சியின் மற்றொரு எம்எல்ஏவான எஸ்.குணசேகரன், ‘‘திறமையான கல்வி கற்க பல்வேறு சலுகைகளை அதிமுக அரசு அளித்துள்ளதாகவும்’’ சட்டப்பேரவையில் என்னைப் பாராட்டி பேசியுள்ளனர். ஆனால், இன்று என்னை எதிர்த்து போட்டியிடுவதால் வேறு வழியின்றி எங்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர்.

‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என்ற அடிப்படையில் எப்போதும் செயலாற்றி வருகிறேன். எனக்கு எல்லாமே நீங்கள்தான். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் வகையில் உங்களுக்கா எப்போதும்போல பாடுபடுவேன்.

எங்களது சாதனைகளை சீர்தூக்கிப் பார்த்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும். வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் வகையில் நீங்கள் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.



 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 23 Jun 2015 - 12:57

பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில்

ஜெ- ஜெயிப்பார்...!!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue 23 Jun 2015 - 13:00

ஜெயித்த சில நாட்களிலேயே " மக்களின் முதல்வர் " ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளன !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
rajaalways
rajaalways
பண்பாளர்

பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Postrajaalways Tue 23 Jun 2015 - 13:12

முடிவு அனைவருக்கும் தெரிந்ததே

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக