ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

+7
shobana sahas
krishnaamma
ராஜா
Dr.சுந்தரராஜ் தயாளன்
விமந்தனி
Preethika Chandrakumar
சரவணன்
11 posters

Page 1 of 14 1, 2, 3 ... 7 ... 14  Next

Go down

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) Empty சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by சரவணன் Fri May 29, 2015 11:00 pm

Code:
இது சிற்ப சாஸ்திரம் என்னும் நூலிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள்:


சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) Challaram_Vaastu_12698......................................................சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) 2Q==


வேதங்களாகி விளங்கும் மும்மூர்த்தியாகி

     போதகம் விளங்கவந்த புன்னியநாள்கள் போற்றி

தீதிலார் மாயனார்சொன்ன சிற்பசாஸ்த்திர நூலை

      நீதியாய் தனாலே நெறிபட விளம்பலுத்தாம் 
 

பொருள்: வேதமுமாகி, அங்கமுமாகி விளங்கும் மும்மூர்த்தியை அடியனை தொழுது போற்றி ஐந்து முகமாகிய பரமேஸ்வரன் நெற்றிக்கண்ணிற் சென்றிய ஆதிவிசிய (விஸ்வ) கர்மன் அருளினாலே வந்து தித்தம் பயனாக விசுவன் வட்டச்சிபானென்று அஞ்சு பெரிய மாயனார் சொன்ன சிற்ப சாஸ்த்திர நூலை வடமொழியை தமித்தினாலே நெறியுண்டாகச் சொல்லுவநென்றவாறு.


Last edited by சரவணன் on Fri May 29, 2015 11:07 pm; edited 2 times in total
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) Empty Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by சரவணன் Fri May 29, 2015 11:00 pm

1.  சிற்பனக்கினி உண்டனவழி சொல்லும்போது
          காணுமே காமரூபியாய் நிற்குபொன்னய
     வாணிலிய முகமுஞ் செய்தாய் நினைவுடன்
          சிந்தையாலே நேசமாய் நடக்குநன்றே!
 

பொருள்: மனைக்கால் வேணுமென்று வந்தழைத்த யிசைமானும் சிற்பனும் கூட போம்பொழுது காமரூபியாய் அழகுபெத்த ஸ்திரியை(பெண்ணை) கண்டால் மிகவும் நல்லது. லக்ஷ்மி கடாக்ஷம் உண்டாம். சர்வ சம்பத்துடன் வாழ்வார்கள். 


சிற்பனகினி என்று தொடங்கும் தொடர் ஒரு பாட்டாகும். விருத்த யாப்புடையது பல சொற்களும் தொடையும் சிதைந்துள்ளன. அதன் உரை காண்க:


Last edited by சரவணன் on Fri May 29, 2015 11:18 pm; edited 4 times in total


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) Empty Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by சரவணன் Fri May 29, 2015 11:01 pm

2.      வலமிகச் செல்லும் பல்லி வாலிபயிடமுஞ் சொல்லில்
            பலமிக உயர னாகும் பாங்குடைக் கருமம் நன்றாம்
     குலமிகத் தளமும் நன்றாம் கொக்குறு காகம் நன்று...
            (இறுதி வரி கிடைக்கவில்லை)
 


பொருள்: தலத்திலே சிற்பனும் எசமானும் சென்று நின்றால், வெல்லைப்போர்வை, ரிஷபம், பசு, மான், மற்றும் னரவைக் கண்டால் மெத்த நல்லது. மனை எடுக்க நன்று. வாழ்வு சம்பத்து உண்டாகும்.


வலமிகச் சொல்லும் பள்ளி என்று தொடங்கும் பகுதி ஒரு பாட்டாகும் இதன் முதலடியில் பகுதி உரைக்கு இயைய "வாளுடை யிடப்பங்கானில் " என்றிருத்தல் வேண்டும், இப்பாடலின் இறுதி அடி சுவடில் இல்லை. 


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) Empty Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by Preethika Chandrakumar Fri May 29, 2015 11:12 pm

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) 3838410834 சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) 103459460
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

Back to top Go down

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) Empty Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by சரவணன் Fri May 29, 2015 11:16 pm

3.      எறும்புதா னெழுகுவிடு போயிடித்தியை கண்டால்
              சேர்ந்திடு கரையானொத்தி சோவுபீடிலது கருதவேண்டாம்
        சுரும்புதா னின்றுயர்ந்து தாண்டிடவேண்டாம் வேண்டாம்
             கரும்புபோல் மொழியினாலே காட்டினன் காக்ஷிதானே.
 

பொருள்: மனைகோலப் பாக்கிற தலத்தில் எறும்பு ஒழுங்கு விட்டு போகவும், கரையான் புற்று இருப்பினும், வண்டு கீழ் பறக்கிலும் அந்த தலத்திலே மனைகோலலாகாது. நோவும் பிணியும் உயிர் சேதமும் உண்டு.


இரும்புதான் என்று தொடங்கும் பாடலில் பிழை உள்ளதாக தெரிகிறது. 
எறும்புதா னொழுங்கு விட்டுப் போயிடு மிடத்தை கண்டால் 
செறிந்திடு கரையா னோந்தி சேர்விடம்  கருத வேண்டாம் 
சுரும்புதா னின்று யர்ந்து தாழ்ந்திடின் வேண்டாம் வேண்டாம் 
கரும்பு போன் மொழியினாலே காட்டினன் காட்சி தானே  - என்று திருத்தம் காணலாம்.


Last edited by சரவணன் on Fri May 29, 2015 11:21 pm; edited 2 times in total


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) Empty Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by சரவணன் Fri May 29, 2015 11:28 pm

4.   பாங்குடன் பரண்டையார்  தம் பன்னொடு வலத்தில்ப் பாடிப்
          பாங்குடநிடத்தில் போக தெயணியதால் வழியுமாகில்
    ஓங்கிய மனையும் நன்றாம் ஒள்ளியப்பயனுமுண்டாம் 
          தீங்குதான் வருவதில்லை செப்பியவண்ணன் தானே 


என்பது: சிற்பனும் எசமானனும் தலம் பார்க்குமிடத்தில் பாண்டி என்கிற கருங்குருவியிடத்திலே அணிகுரல் வழுவுமாகில் எடுத்த கருமம் நன்றாம், மனைகோலினால் வாழ்வு சம்பத்துண்டாம்.



பாங்குடன் என்பது பாட்டு திருத்தம் வருமாறு: 
பாங்குடன் பகண்டை யார் தம்பண்னொடு வலத்திற் பாடிப் 
யான்குயுனிடத்திற் போகி யனிகுரல் வழுவுமாகில்
ஓங்கிய மனையும் நன்றா மொள்ளிய பயனு முண்டாம்
தீங்குதான் வருவதில்லை செப்பிய வண்ணந் தானே.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) Empty Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by சரவணன் Fri May 29, 2015 11:42 pm

5. அருக்கனுஞ் சோமன் மேலு
           மண்டினால் மிகவே தாழ்ந்து
    திருத்திய மேற்கும் தெற்கும்
          சிறஞது பூமிமேலே
    வருத்தமில் வாழ்வாரெண்டு
           மனை தனை யெடுத்துக் கொள்ளும்
     கருத்துடை புலவோர்கெல்லாம்
           காரணம் விளம்பலுற்றாம்.
 
என்பது: வடக்கும் கிழக்கும் தாழ்ந்து. மேற்கும் தெற்கும் உயர்ந்து இருப்பதொரு பூமியில் மனைகோலினால் துன்பமில்லை, சுகத்தை கொடுக்கும். (இன்னும் முழு விளக்கத்தையும் யாரவது கொடும்பின் மிக்க நன்று)


அருக்கனுஞ் சோமன் என்பது பாட்டு, அதன் திருத்தம் வருமாறு:
அருக்கனுஞ் சோமன் மேலு மண்டினால் மிகவே தாழ்ந்து
திருத்திய மேற்குத் தெற்குஞ் சிறந்திடு பூமி மேலே
வருத்தமில்வாழ்வா ரென்று மனைதனை யெடுத்துக் கொள்ளும்
கருத்துடைப் புலவோர்க் கெல்லாங் காரணம் விளம்ப லுற்றாம்.   


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) Empty Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by சரவணன் Sat May 30, 2015 2:49 pm

6. அந்தணர் தென்திசை அரசர் மேல்திசை
        வந்திடு வணிகாக வடதிசை யாகுமே
     கொந்தமிழ் கீழ்திசை சூத்திரற் காரும்
        தந்திடு நடுவறு பிறமலைத் தானமே.
 
மனை கோல ஊருக்கு திசை பார்க்கும் படி நாலு வர்ணத்தாருக்கும் –
பிராமணருக்கு தெற்கு திசையும் சூத்திரர்கு கிழக்கு திசையும் அரசருக்கு மேற்கு திசையும், வணிகருக்கு வடக்கு திசையும் இப்படி மனை கோலினால் குடியிருக்க நன்றாம். நடுவே பிரம்மஸ்தானம் விடுவது அம்பலமுமாம்.. 


அந்தணர் தென்றிசை அரசர் மேற்றிசை 
வந்திடு வணிகர்கு வடதிசை யாகுமே
சொந்தமாக் கீழ்த்திசை சூத்திரர்க் காகுமாம்
தந்திடு நடுவினிற் பிரமத் தானமே. என்று இந்த பாடலில் திருத்தம் காணலாம்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) Empty Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by சரவணன் Sat May 30, 2015 3:06 pm

7. இனிதாகியமை வின் சுவைமண் மறையோன் 
         மனதாகிய கற்பது மன்னவர்க்காம்
   இனிதாகியதெ புரியான துமண் வசீயன்
         சொன்ன தாகிய கைத்தமண்  சூத்திரர்க்கு 


மனைகோல வேணுமென்ற தலத்தில் மண்ணின் சுவையானது 
தித்திப்பான மண் மறையோர்க்கு 
துவர்ப்பான மண் மன்னவருக்கு
புளித்த மண் வைசியருக்கு
கசப்பான மண் சூத்திரர்க்கு ஆகும்.

இப்பாடலின் திருத்தம்: வஞ்சிச்சந்த திருத்தம்;


இனிதாகிய வின்சுவை மண்மறையோன் 
மனதாய் துவற்பது மன்னவர்க்காம்
வனிதா புளி யானமண் வைசியருக்காம்
துனியாகிய கைத்தமண் சூத்திரருக்காம்


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) Empty Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by விமந்தனி Sat May 30, 2015 3:10 pm

நல்ல பகிர்வு. தொடருங்கள். புன்னகை புன்னகை


சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) Empty Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 14 1, 2, 3 ... 7 ... 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum