புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
டாஸ்மாக்: தமிழர்களை மலடாக்கும் அம்மா திட்டம்! Poll_c10டாஸ்மாக்: தமிழர்களை மலடாக்கும் அம்மா திட்டம்! Poll_m10டாஸ்மாக்: தமிழர்களை மலடாக்கும் அம்மா திட்டம்! Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
டாஸ்மாக்: தமிழர்களை மலடாக்கும் அம்மா திட்டம்! Poll_c10டாஸ்மாக்: தமிழர்களை மலடாக்கும் அம்மா திட்டம்! Poll_m10டாஸ்மாக்: தமிழர்களை மலடாக்கும் அம்மா திட்டம்! Poll_c10 
75 Posts - 37%
i6appar
டாஸ்மாக்: தமிழர்களை மலடாக்கும் அம்மா திட்டம்! Poll_c10டாஸ்மாக்: தமிழர்களை மலடாக்கும் அம்மா திட்டம்! Poll_m10டாஸ்மாக்: தமிழர்களை மலடாக்கும் அம்மா திட்டம்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
டாஸ்மாக்: தமிழர்களை மலடாக்கும் அம்மா திட்டம்! Poll_c10டாஸ்மாக்: தமிழர்களை மலடாக்கும் அம்மா திட்டம்! Poll_m10டாஸ்மாக்: தமிழர்களை மலடாக்கும் அம்மா திட்டம்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
டாஸ்மாக்: தமிழர்களை மலடாக்கும் அம்மா திட்டம்! Poll_c10டாஸ்மாக்: தமிழர்களை மலடாக்கும் அம்மா திட்டம்! Poll_m10டாஸ்மாக்: தமிழர்களை மலடாக்கும் அம்மா திட்டம்! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
டாஸ்மாக்: தமிழர்களை மலடாக்கும் அம்மா திட்டம்! Poll_c10டாஸ்மாக்: தமிழர்களை மலடாக்கும் அம்மா திட்டம்! Poll_m10டாஸ்மாக்: தமிழர்களை மலடாக்கும் அம்மா திட்டம்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
டாஸ்மாக்: தமிழர்களை மலடாக்கும் அம்மா திட்டம்! Poll_c10டாஸ்மாக்: தமிழர்களை மலடாக்கும் அம்மா திட்டம்! Poll_m10டாஸ்மாக்: தமிழர்களை மலடாக்கும் அம்மா திட்டம்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
டாஸ்மாக்: தமிழர்களை மலடாக்கும் அம்மா திட்டம்! Poll_c10டாஸ்மாக்: தமிழர்களை மலடாக்கும் அம்மா திட்டம்! Poll_m10டாஸ்மாக்: தமிழர்களை மலடாக்கும் அம்மா திட்டம்! Poll_c10 
3 Posts - 1%
prajai
டாஸ்மாக்: தமிழர்களை மலடாக்கும் அம்மா திட்டம்! Poll_c10டாஸ்மாக்: தமிழர்களை மலடாக்கும் அம்மா திட்டம்! Poll_m10டாஸ்மாக்: தமிழர்களை மலடாக்கும் அம்மா திட்டம்! Poll_c10 
1 Post - 0%
ஜாஹீதாபானு
டாஸ்மாக்: தமிழர்களை மலடாக்கும் அம்மா திட்டம்! Poll_c10டாஸ்மாக்: தமிழர்களை மலடாக்கும் அம்மா திட்டம்! Poll_m10டாஸ்மாக்: தமிழர்களை மலடாக்கும் அம்மா திட்டம்! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாஸ்மாக்: தமிழர்களை மலடாக்கும் அம்மா திட்டம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 25, 2015 10:08 pm

டாஸ்மாக் வருமானம் ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடிகள் தாண்டி விடும் என்ற “சாதனையை” நோக்கி தமிழக அரசு சென்று கொண்டிருக்கிறது.

இதைப்போல வேறு வருமானம் அரசுக்கு இல்லை என்று சொல்லி மக்களை சாக வைத்தாவது டாஸ்மாக் சரக்கின் வருமானத்தின் மூலம் அரசு ஊழியருக்கு சம்பளமும், ஓட்டு வாங்க 'இலவசம்' என்ற பெயரில் லஞ்சமும் கொடுக்க முடிகிறது.

டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு என்ற பெயரில் இருந்து டாஸ்மாக் மக்களை வாழவைக்கும் “சாதனைக்குரிய” திரவமாக மாறி விட்டது. உணவுப்பொருளில் கலப்படம் என்றால் கூட வழக்கு போடும் சட்டமுள்ள இந்த நாட்டில் " விஷமே உணவாக " வழங்கப்படுவதை வேடிக்கை மட்டுமே பார்க்கிறது சட்டம்,

கணவனைக் காணவில்லை, மகனை காணவில்லை என்று காவல் நிலையம் செலவதற்கு முன் டாஸ்மாக் கடையில் பார்த்து விட்டு புகார் கொடுக்கச் சொல்லும் அளவிற்கு டாஸ்மாக் கடையால் "காணாமல் போனவர்கள்" அதிகம். 108 அவசர வண்டி குடிகாரருக்கு மட்டுமே சொந்தம் எனபது போல குடியால் விபத்து, இருதய நோயாளிகள், மூளைச் சாவு அடைந்தவர்கள் 108 ஐ ஆக்கிரமித்து விட்டனர்.

திருமணம்,கோவில் திருவிழா என்றால் முன்பெல்லாம் மகிழ்ச்சியுடன் உறவினர்கள், நண்பர்கள் குடும்ப உறவுகளை ஒற்றுமைப்படுத்தும் என்ற நிலை மாறி திருமணம் என்றால் திடீர் போதைச் சண்டையும், கோவில் திருவிழா என்றால் போதை ஆசாமிகள் செய்யும் அடாவடியால் போலீஸ் தடியடியும் , சாலை மறியலும் அன்றாடச் செய்தியாகி விட்டன.

தெய்வத்தால் நிம்மதி கிடைக்கும் என்று சொல்வதற்கு பதிலாக, மன நிம்மதியற்று அடுத்த முறை திருவிழாவிற்கு குடும்பத்துடன் செல்லக் கூடாது என்ற அளவிற்கு குடி போதையால் நடக்கும் கோவில் வன்முறைகள் குல தெய்வத்தை மறக்கச் செய்கின்றன.

இலங்கையில் நடந்த இன அழிப்பை விட மோசமான இன அழிப்பு இங்கு நடைபெறுகிறது. அங்கு கொத்துக் கொத்தாக அணு குண்டு வீசினார்கள். இங்கு குவார்டர் குவார்டராக விஷம் ஊற்றுகிறார்கள். அங்கு சாவ தற்கு பணம் வாங்கவில்லை. இங்கு சாவதற்கு முன்பணம் ஒவ்வொரு முறையும் அரசு வாங்கிக்'கொல்'கிறது”

வார இறுதி நாட்களில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் இருந்த தமிழன், இன்று வார இறுதி நாட்கள் என்றாலே காலை முதல் மறுநாள் திங்கள் காலை வரை அசைவ உணவுக்கு அடிமையாகி ,டாஸ்மாக் சரக்குடன் நடு ரோட்டில், டாஸ்மாக் கடையில் மயக்கத்தில் மன நோயாளி போல படுத்துக் கிடக்கின்றான்.

திரைப்படங்களிலோ, பத்து நிமிடத்திற்கு ஒரு முறை டாஸ்மாக் விளம்பரப்படமா என சந்தேகம் கொள்ளும் அளவிற்கு போதைகாட்சிகளும், மகளே தந்தைக்கு பாசத்தில் ஊற்றிக்கொடுக்கும் "பாசமலர் " காட்சிகளும், காதலிக்கும் பெண்ணும் குடிப்பாள் என்ற"தத்துவமும்" சொல்லும் விதமான காட்சிகள்.அதேப்போன்று மெகாத் தொடர்களும் மக்களை டாஸ்மாக் சரக்கை சாகும் வரை மறக்க முடியாதபடி செய்கின்றன.

டாஸ்மாக் கடையால் காவலர்களுக்கு கிடைக்கும் லாபமும் அதிகம். அன்றாடம் மதுவால் நடக்கும் குடும்ப பிரச்னைகளுக்கு தீர்வு தேடி வரும் மக்களிடமும், போதையால் வாகனம் ஒட்டுபவர்களிடம் "கவனித்து" வாகன ஓட்டிகளை அனுப்புவதும், ஒரு கையால் மதுவுடன் வண்டி ஓட்டுபவரை பிடிதுக்கொடுத்தாலும் பெரிய கேஸ் போடாமல் "கடமையை" செய்வதும், பெட்டி கேஸ் போடத் தேவையான தெருச் சண்டை களும் காவலர்கள் வாழ்வை வளமாக்கி வருகிறது.

மாதந்தோறும் குற்ற வழக்கு கணக்கு காட்ட குற்ற வழக்கைத் தேடி அலைந்த போலீசார், காவல் நிலையத் தை விட்டு வெளியே செல்லாமல் குடி போதையால் நடக்கும் வன்முறை புகார்களுக்கு கட்ட பஞ்சாயத்து செய்யவே நேரம் இல்லாமல் திணறி வருகின்றனர்.

ஏற்கனவே கேரளா, வட மாநிலத்தவர் ஆதிக்கத்தில் தமிழகம் தமிழர்களை தேடும் நிலைக்கு வந்துவிடு மோ என நினைக்கும் வேளையில், மதுவால் தமிழர்களின் மலட்டுத்தன்மை அதிகரித்து தமிழ் இனம் அழியும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இன்றைக்குள்ள இளைய சமூகத்தினரின் பெரும்பாலான மது குடிப்போரின் பிரச்னையே நரம்புத் தளர்ச்சியும், ஆண்மை குறைவும்தான்.

முதல்வர் வழக்கில் இருந்து விடுதலையாக எத்தனையோ பரிகாரங்கள் செய்துள்ளார். அதை எல்லாம் விட சக்தி வாய்ந்த பரிகாரம் மக்களின் ஏகோபித்த வாழ்த்தும், ஆசிர்வாதமும்தான். அதை மீறிய பரிகாரம் ஏதும் கிடையாது. அந்த வாழ்த்து டாஸ்மாக் கடை மூடுவதன் மூலம் நிச்சயம் கிடைக்கும்.

ஒரு காலத்தில் லாட்டரி சீட்டு தடை செய்யப்பட்டவுடன் அரசு என்ன நஷ்டத்தில் ஓடிப்போய் விட்டது?? அது போலத்தான் துணிவுடன் 'டாஸ்மாக்'கை தடை செய்ய வேண்டும். அரசுக்கு வருமானம் இல்லை என்பதும், அதனால்தான் டாஸ்மாக் சரக்கை ஊற்றிக்கொடுக்கிறது எனச் சொல்வதும் அரசுக்கு வருமானத்திற்கு வேறு வழி இல்லையா? என கேட்கத் தோன்றுகிறது.

அனைத்து கனிம வளங்களையும் அரசு கைப்பற்றி நேரடியாக அல்லது தனியார் ஏற்றுமதி நிறுவனத்தின் மூலமாகவோ ஏற்றுமதி செய்து வருமானம் பார்க்க முடியும். அரசை ஏமாற்றி சம்பாதித்தவர்களே பல லட்சம் கோடிகள் குவிக்கும்போது அரசே நேரடியாக ஏற்றுமதி செய்யும்போது ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடிகள் பெற முடியாதா?? அரசு தமிழகத்தில் இருந்து தாது மண், கிரானைட் கற்களை ஏற்றுமதி செய்ய தடை விதித்து கனிம வளத்தை கைப்பற்ற வேண்டும்.

சில வருடங்களுக்கு முன் இரண்டு வண்டி வைத்தது தொழில் ஆரம்பித்த ஆம்னி பஸ் நிறுவனம், இன்று 200 வண்டிகள் வாங்கும் அளவிற்கு ஒரு கையில் மதுவுடன் வண்டி ஒட்டி சம்பாதிக்கும் நிலையில், அரசு பேருந்து மட்டும் நஷ்டத்தில் இயங்குவதை தடுக்க சென்னை ஐ. ஐ.டி மாணவர்கள் குழுவைக கொண்டு ஆராய வேண்டும். பார்சல் போக்குவரத்தை அரசு தொடங்க வேண்டும்.

நகரில் ஷேர் ஆட்டோக்களை ஒழித்து அரசு சிற்றுந்து பேருந்துகளை அதிக அளவில் இயக்க வேண்டும்.

உங்கள் வழக்கு விடுதலைக்காக கோவில் கோவிலாகச் சென்ற மக்கள் பல லட்சம், அவர்களில் மொட்டை போடுவதாக வேண்டிக்கொண்டு பிரார்த்தனை நிறைவேற்றியவர்கள் அதிகம்.

அவர்கள் குடும்ப நலனுக்கு நீங்கள் என்ன கைமாறு செய்யப் போகிறீர்கள்? இலவசம் அளித்து மனிதர்களை கொல்வதைக் காட்டிலும், இலவசம் இல்லாமல் இனிமையான வாழ்விற்கு டாஸ்மாக் கடைகளை மூடுவது மக்களின் நிம்மதிக்கு வழி வகுக்கும் என்பதே உண்மை.

அம்மா செய்வார்களா?

எஸ். அசோக் @ விகடன்

டாஸ்மாக்: தமிழர்களை மலடாக்கும் அம்மா திட்டம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon May 25, 2015 10:13 pm

உண்மையான மதிப்பீடு .....அம்மா செய்யமாட்டார்கள் சிவா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 25, 2015 10:16 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:உண்மையான மதிப்பீடு .....அம்மா செய்யமாட்டார்கள் சிவா

ஆம், இதில் வரும் வருமானத்தில் தானே மத்திய அரசுக்கு கொட்டிக் கொடுத்து “புடம் போட்ட தங்கம்” விருது வாங்கியுள்ளார்கள்!

டாஸ்மாக்: தமிழர்களை மலடாக்கும் அம்மா திட்டம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 25, 2015 11:08 pm

//உங்கள் வழக்கு விடுதலைக்காக கோவில் கோவிலாகச் சென்ற மக்கள் பல லட்சம், அவர்களில் மொட்டை போடுவதாக வேண்டிக்கொண்டு பிரார்த்தனை நிறைவேற்றியவர்கள் அதிகம்.

அவர்கள் குடும்ப நலனுக்கு நீங்கள் என்ன கைமாறு செய்யப் போகிறீர்கள்? இலவசம் அளித்து மனிதர்களை கொல்வதைக் காட்டிலும், இலவசம் இல்லாமல் இனிமையான வாழ்விற்கு டாஸ்மாக் கடைகளை மூடுவது மக்களின் நிம்மதிக்கு வழி வகுக்கும் என்பதே உண்மை.//

ரொம்ப சரி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 25, 2015 11:20 pm

அட போங்க பாஸ் .... தமிழ்நாட்டில் அவனவன் டாஸ்மாக் இருப்பதால் எவ்வளவு சந்தோஷமா இருக்கிறான் அதை கெடுக்க நினைக்கிறீர்களா ?!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 26, 2015 7:24 am

அம்மா எல்லாம் செய்வார்கள்...
# மீண்டும் 2016 --ஜெயித்து வந்தவுடன் ...

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue May 26, 2015 10:57 am

ராஜா wrote:அட போங்க பாஸ் .... தமிழ்நாட்டில் அவனவன் டாஸ்மாக் இருப்பதால் எவ்வளவு சந்தோஷமா இருக்கிறான் அதை கெடுக்க நினைக்கிறீர்களா ?!
மேற்கோள் செய்த பதிவு: 1138664
அல்ப சந்தோஷம் இராஜா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 26, 2015 11:06 am

மதுபான விற்பனை எல்லா நாடுகளிலும் உள்ளன .
அங்குள்ளோர் , அளவுக்கு மீறி குடித்து ஆட்டம் பாட்டம் போடுவதில்லை .
ஈகரை உறவுகளிலும் சிலர் அளவாக குடித்து அமரிக்கையாக உலா வரலாம் .
(எந்தன் எண்ணம் சரியாகவும் இருக்கலாம் .இல்லாமலும் இருக்கலாம் )
அளவுடன் இருந்தால் எதுவுமே நஞ்சு இல்லை .

எந்த ஒரு அரசும் , கட்டாயமாக குடி என்று கூறி ,வாயில் புகட்டுவது இல்லை .

தமிழக அரசு , மதுவை தடை செய்தால் , பாண்டிச்சேரிக்கும் ,பக்கத்து மாநிலதிற்கும்
சென்று குடித்து வருவார்கள் . வந்துள்ளார்கள் . நாம் அறிந்த விஷயம்தான் .
எப்பிடி சாத்யப்படுத்துவது ?
நாடு முழுதும் தடை செய்தால்தான் முடியும் .
அப்பிடி செய்யாத பட்சத்தில் , நம் மாநிலத்தில் தடை செய்து , அண்டை மாநிலத்தில்
அது கிடைக்கும் போது, மது விற்பனையால் , அண்டை மாநிலம் வருமானத்தால் பயன் பெறும்.
நம் பணம் அவர்களுக்கு போகவேண்டாம் என்ற எண்ணம்தான் ,எந்த மாநிலமும் மதுவை தடை
செய்வதில்லை என்பது நடைமுறை .

சுயகட்டுபாடு இல்லை என்றால் , குட்டி சுவராய் போகவேண்டியதுதான் .  

என்னைப் பொருத்தவரையில் ,மதுவிற்கு தடை வந்தால் வரவேற்பேன் ,
அது உடலுக்கு ஊறு விளைவிக்கும் என்பதால் .

ரமணியன்

(தடை செய்யப்பட்டுள்ள அரபு நாடுகளிலும் ,
ஷேக்குகள் மாளிகைகளில் , இவை புழக்கத்தில் உள்ளன .)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 26, 2015 12:09 pm

T.N.Balasubramanian wrote:சுயகட்டுபாடு இல்லை என்றால் , குட்டி சுவராய் போகவேண்டியதுதான் .  
என்னைப் பொருத்தவரையில் ,மதுவிற்கு தடை வந்தால் வரவேற்பேன் ,
அது உடலுக்கு ஊறு விளைவிக்கும் என்பதால் .
ரமணியன்
(தடை செய்யப்பட்டுள்ள அரபு நாடுகளிலும் ,
ஷேக்குகள் மாளிகைகளில் , இவை புழக்கத்தில் உள்ளன .)
உங்கள் கருத்துக்களை ஏற்றுகொள்கிறேன் ஐயா ,

நான் சொன்னது மக்கள் சிந்திக்கும் அறிவே இல்லாமல் Robo போல ஆகி கொண்டிருக்கிறார்களே என்ற வேதனையின் வெளிப்பாடு தான்.

இந்தியாவில் எந்தவொரு அரசாங்கமும் பொதுமக்கள் நலனுக்கான அரசை நடத்தியதில்லை இனி நடத்தபோவதுமில்லை. பொதுமக்களும் இது பற்றி எந்தவொரு கவலையும் படமாட்டார்கள் ஏனென்றால் நாம் வாங்கிய சுதந்திரம் அப்படி. (எவனாவது ஒருத்தன் வந்து நம்மள பார்த்துப்பான் நாம் எதுக்கு வீணா அலட்டிக்கணும் என்ற எண்ணம் தான்)

தமிழ்நாட்டை பொருத்தமட்டில் , மற்ற கட்சிகளை விட அதிமுகவின் மதுகொள்கை பொதுமக்களை சிந்திக்க முடியாத அளவுக்கு ஏறக்குறைய "ஏன் தனக்கு தீவனமும் , தண்ணீரும் கொடுத்து சரியான வெப்பநிலையில் உறைவிடம் அமைத்து கொடுத்து பாதுகாக்கிறார்கள் என்ற எண்ணம் இல்லாத ப்ராய்லர் கோழி" அளவிற்கு மாற்றிவிட்டார்கள்.

மொத்த தமிழ்நாட்டையும் மதுவுக்கு அடிமையாக்கி அதன் மூலம் அவர்களின் மூளையை முடக்கி சிந்திக்கும் திறனை கொன்று அப்படி இவர்கள் எத்தனை காலம் வாழ்ந்துவிட போகிறார்கள் என்று தான் தெரியவில்லை. சோகம்

அரபு நாடுகளிலும் (சில நாடுகளில் வெளிப்படையாகவும் , சில நாடுகளில் Permit Card மூலமும் , இன்னும் சில நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது என்று சொல்லிகிட்டாலும் மறைமுகமாகவும்) மது விற்பனை உண்டு.

ஆனால் தமிழ்நாட்டை போல உலகின் எந்த ஒரு மூலையிலும் இவ்வளவு தரம் தாழ்ந்து அரசாங்கம் சாராயம் விற்று பிழைப்பு நடத்தவில்லை.

முன்பெல்லாம் ஊருக்கு ஓரிரு இடத்தில் இருந்த மதுக்கடைகள் இப்பல்லாம் தெருவுக்கு மூணு இருக்குது, இது தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 26, 2015 1:00 pm

Raja wrote:
நான் சொன்னது மக்கள் சிந்திக்கும் அறிவே இல்லாமல் Robo போல ஆகி கொண்டிருக்கிறார்களே என்ற வேதனையின் வெளிப்பாடு தான்.

இந்தியாவில் எந்தவொரு அரசாங்கமும் பொதுமக்கள் நலனுக்கான அரசை நடத்தியதில்லை இனி நடத்தபோவதுமில்லை. பொதுமக்களும் இது பற்றி எந்தவொரு கவலையும் படமாட்டார்கள்

முன்பெல்லாம் ஊருக்கு ஓரிரு இடத்தில் இருந்த மதுக்கடைகள் இப்பல்லாம் தெருவுக்கு மூணு இருக்குது, இது தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி

மிகவும் வருந்த தக்க விஷயம்தான் . மனம் வேதனை படுகிறது .நீங்கள் சொல்வதின் நியாயம்
புரிகிறது .என்ன செய்யலாம் . விழிப்புணர்வு முகாம்கள் நடத்தலாம் .
நிச்சயமாக எந்த கட்சியும் நடத்தாது .
எங்கள் அண்டை வீட்டில் வேலை செய்யும் பெண்மணியின் கணவன் , De addiction ப்ரோக்ராம் போய் வந்தும் குடித்துக் கொண்டு இருக்கிறான் .
கேவலமான நிலை . என்னப் பண்ணலாம்  ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக