ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவினர்களிடம் பேசக்கூடாத விஷயங்கள்

+2
shobana sahas
சிவா
6 posters

Go down

உறவினர்களிடம் பேசக்கூடாத விஷயங்கள் Empty உறவினர்களிடம் பேசக்கூடாத விஷயங்கள்

Post by சிவா Sun May 24, 2015 10:33 pm


வீட்டுக்கு வரும் உறவினர்களையும், விருந்தினர் களையும் வரவேற்று, உபசரித்து பேசுவதில்கூட நிறைய கவனம் தேவைப்படுகிறது. அவர்களிடம் எதை பேசுவது என்பதைவிட, எதை பேசக்கூடாது என்பது ரொம்பவும் கவனிக்கத்தக்க விஷயம்.


உறவினர்களிடம் பேசக்கூடாத விஷயங்கள் பற்றி நாம் இங்கே பேசுவோம்!

பெண்ணின் திருமணம்:

திருமண பருவத்தில் உள்ள பெண்கள் பெரும்பாலான வீடுகளில் இருக்கிறார்கள். பெண்ணின் திருமணம் பற்றி அவர் களது பெற்றோரிடம் பக்குவமாக பேசவேண்டும்.

– உங்கள் பெண்ணிற்கு திருமணம் எப்போது?

– ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை?

– இன்னும் எவ்வளவு நாள் உங்கப் பெண்ணை வீட்டில் வைத்திருக்கப் போகிறீர்கள்?

.. என்றெல்லாம் கேட்பது அவர்களது மனதை நோகடித்துவிடும்.

அது பற்றி விசாரிக்க நேர்ந்தால் அல்லது அது பற்றி அவர்களே உங்களிடம் கூறினால், ‘ எனக்குத் தெரிந்த நல்ல வரன் இருந்தால் நானும் சொல்கிறேன். அதை பற்றி கவலைப்படாதீர்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும்’ என்று அவர்களுக்கு ஆறுதலாக பேசுங்கள். ஏனெனில் திருமணமாகாத பெண்ணை வீட்டில் வைத்திருப்பவர்கள் ஏற்கனவே மனக்கஷ்டத்தில்தான் இருப்பார்கள். மகளுக்கு வயது அதிகரித்துக்கொண்டே போகிறதே என்ற கவலை அவர்கள் மனதை உறுத்திக் கொண்டிருக்கும்போது, நீங்கள் அக்கறையாக கேட்கும் கேள்வி அவர் களுக்கு வேதனை தரக்கூடியதாக மாறிவிடக்கூடாது.

குழந்தை:

திருமணம் முடிந்தவுடன் அடுத்து எல்லோரும் கேட்கும் கேள்வி, ‘ஏதாவது விசேஷம் உண்டா?’ என்பதுதான். சில தம்பதிகளுக்கு ஏதேனும் பிரச்சினை இருக்கலாம். சிலருக்கு வேறு ஏதாவது எதிர்கால திட்டம் இருக்கலாம். இதையெல்லாம் தெரிந்துகொள்ளாமல் நீங்கள் ஏதாவது கேள்வி கேட்டு வைத்தால் அதற்கு பதில் சொல்ல அவர்களுக்கு சங்கடமாக இருக்குமல்லவா?

குடும்ப வருமானம்:

ஒருவர் மீது நாம் அதிக அக்கறை செலுத்துகிறோம் என்ற உரிமையில் அவரிடம் வருமானத்தைப் பற்றி கேட்பது தவறு. குடும்பத்தில் யார் யார் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள்? அவர் களது மொத்த வருமானம் எவ்வளவு? என்பன போன்ற கேள்விகளைக் கேட்கக்கூடாது. அவர்கள் வருமானத்தை தெரிந்து கொண்டு நாம் என்ன செய்யப்போகிறோம் என்ற சிந்தனை எப்போதும் இருக்கவேண்டும். ஏன்என்றால் இந்த சம்பள விஷயத்தை கேட்டுவிட்டு சும்மா இருக்கமாட்டோம். ஒன்று ‘இவ்வளவுதானா?’ என்போம். இல்லாவிட்டால் ‘அவ்வளவு சம்பளமா?’ என்று ஆச்சரியப்படுவோம். இந்த இரண்டு பதிலுமே சம்பந்தப்பட்டவர்களை எரிச்சலடையச் செய்யும்.

உத்தியோகம்:

எல்லா வீடுகளிலும் எதிர்பார்த்த வேலை கிடைக்காத இளைஞர்களோ, இளம்பெண்களோ இருந்துகொண்டிருப்பார்கள். அந்த கவலை, குடும்பம் முழுக்கவே இருந்துகொண்டிருக்கும். சிலர் அதை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல், ‘உங்கள் மகன் எங்கே வேலை செய்கிறான்?’ என்று ஆரம்பிப்பார்கள்.

‘அவனுக்கு இதுவரை வேலை கிடைக்கவில்லை’ என்று பெற்றோர் சொன்னால் ‘ஏன் கிடைக்கவில்லை? அவன் நல்ல மதிப்பெண் பெறவில்லையா? மகனுக்கு வேலையில்லாவிட்டால் உங்கள் குடும்பம் கஷ்டப்படுமே?’ என்றெல்லாம் கேள்விமேல் கேள்வி கேட்டு அவர்களை வெறுப்பேற்றிவிடுவார்கள்.

அந்தரங்கம்:

ஒருவருடைய அந்தரங்க வாழ்க்கை என்பது ரகசியமானது. நீங்கள் அவருக்கு மிக நெருக்கமானவர் என்பதை காட்டிக்கொள்ள அவரது அந்தரங்க வாழ்க்கையை பற்றி கேள்விகேட்பது நியாயமில்லை. அவர் திருமணத்திற்கு முன்பு யாரையாவது காதலித்து தோற்றிருக்கலாம். அதை அவரது புது மனைவி முன்னால் வைத்து பேசுவதும் சரியானதல்ல. அதுபோல் சிலர், குழந்தைகள் முன்னால்வைத்து அவர்களது தந்தையின் கடந்த கால காதல் விஷயங்களை சுவாரஸ்யமாக பேசுவார்கள். அதுவும் யாருக்கும் பிடிக்காத பேச்சாகும்.

கடந்தகால வாழ்க்கை:

கடந்தகால போராட்டங்களை மறந்து நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருப்பவரிடம் திரும்பத் திரும்ப அவைகளை நினைவுபடுத்தும் விதத்தில் விசாரிப்பது, கேள்விகள் கேட்பது தவறு. உன்னுடைய முதல் கணவர் என்ன செய்கிறார்? உன்னைப் போல ஒரு பெண்ணோடு வாழ அவருக்கு கொடுத்து வைக்கவில்லை என்பது போன்ற ஆதங்கம், அங்கலாய்ப்பை எந்த பெண்ணும் ரசிப்பதில்லை. எல்லோர் வாழ்க்கையிலும் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதைப் பற்றிய விசாரணை நமக்கெதற்கு என்று ஒதுங்கியிருப்பதே நல்லது.

‘நீ விவாகரத்து பண்ணிட்டியே உன் முதல் மனைவி, அவளை நான் நேத்து பார்த்தேன். பாவம் ரொம்ப நொந்துப் போயிருக்கா. எல்லாம் அவ தலையெழுத்து’ என்று இரண்டாவது மனைவி முன்னால் வைத்து அவளது கணவரிடம் நொந்துகொள்வதும் தவறு. அப்படி பேசும்போது இரண்டாவது மனைவிக்கு அச்சம் ஏற்படும். ‘இந்த ஆளே நம் கணவரை முதல் மனைவியிடம் கொண்டுபோய் மீண்டும் இணைத்துவிடுவார் போல் தெரிகிறதே!’ என்று நினைத்துவிடுவாள்.

இரண்டாம் திருமணம் செய்துகொண்ட உறவினரோ, நண்பரோ யாராக இருந்தாலும் அவர்களிடம் எதை பேசவேண்டும் என்று ஒரு எல்லை இருக்கிறது. அந்த எல்லையோடு பேச்சை நிறுத்திக் கொள்ளவேண்டும்.

மருமகளின் தாய் வீடு:

புகுந்த வீட்டினர் தன்னுடைய பிறந்த வீட்டை மதிக்க வேண்டும் என்று எல்லா பெண்களும் விரும்புவார்கள். ஒருவரை ஒருவர் மதித்தால்தான் அந்த வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிலவும்.

மருமகளின் பிறந்த வீட்டைப் பற்றி வருவோர் போவோரிடம் தேவையற்ற விஷயங்களை பேசும் மாமியார்களால் குடும்பத்தின் நிம்மதி குலையும். அதுபோல் தன் வீட்டில் போய் மாமியாரை குறைசொல்வதையும் பெண்கள் தவிர்க்கவேண்டும். எதை பேசக்கூடாது என்பதில் மாமியாரும், மருமகளும் கவனமாக இருந்தால்தான் அந்த குடும்பத்து நிம்மதியை காப்பாற்ற முடியும்.

பாகப் பிரிவினை:

எல்லா குடும்பங்களிலும் பாகப்பிரிவினை நடக்கும். அதில் ஒரு சிலர் பிரச்சினை வேண்டாம் என்பதற்காக விட்டுக்கொடுத்து நடந்து கொள்வார்கள். அது அவர்கள் இஷ்டம் என்று விட்டுவிடவேண்டும். தேவையில்லாமல் அதுபற்றி பேசி, குட்டையைக் குழப்பும் செயலில் ஈடுபடக்கூடாது. சொத்து விவகாரம் ஒரு குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட விஷயம். அதில் அடுத்தவர்கள் தலையிடுவது அவசியமில்லாதது. எவ்வளவு நெருங்கிய உறவினராக இருந்தாலும் நம்முடைய எல்லை எதுவரை என்பதை புரிந்துகொண்டு நடக்க வேண்டும். அவர்களாக தொடர்புகொண்டு ஆலோசனை கேட்டால் மட்டுமே அதுபற்றி பேசவேண்டும்.

சோகமான நிகழ்வுகள்:

எல்லோரும் ஒன்று கூடி மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தில் ஏதேனும் சோகமான நிகழ்ச்சியைப் பற்றி பேசி எல்லோரையும் கலங்கடிப்பது ஒரு சிலருக்கு கைவந்த கலை. உள்நோக்கம் எதுவும் இல்லாவிட்டாலும் பேசத் தெரியாமல் பேசி வம்பை விலைக்கு வாங்கக்கூடாது. என்றோ நடந்த சோகத்தை மீண்டும் மீண்டும் கிளறவேண்டியதில்லை. அதை வேகமாக மறக்க, நம்மால் முடிந்தால் உதவவேண்டும். இல்லையேல் சும்மா இருந்துவிடவேண்டும்.

உடல் நிலை:

ஒருவருடைய உடல் நிலையை பற்றி தொடர்ந்து அவரிடம் பேசி நோகடிக்கக்கூடாது. அதுபோல் பலர் முன்னிலையில் வைத்து நோய் பற்றி விசாரிப்பதும் தவிர்க்கப்படவேண்டும். தான் நோயாளி என்பதை எல்லோரும் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள். ஏன்என்றால் ஒருவர் நோயாளி என்றால் அவரது குடும்பத்தினரும், அவரது டாக்டரும் அதை பற்றி அறிந்தால்போதும். ஊரில் உள்ள அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் இல்லை.

பேசுவதற்குதான் வாய். ஆனால் என்ன பேசுவது, எந்த இடத்தில் எப்படி பேசுவது, யாரிடம் எப்படி எதை பேசுவது என்ற எல்லைகளை வகுத்துக் கொள்ளவேண்டும். விருந்தோம்பலில் இதுவும் ஒரு முக்கிய அங்கம் என்பதை மறந்துவிடக்கூடாது.

தினத்தந்தி


உறவினர்களிடம் பேசக்கூடாத விஷயங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உறவினர்களிடம் பேசக்கூடாத விஷயங்கள் Empty Re: உறவினர்களிடம் பேசக்கூடாத விஷயங்கள்

Post by shobana sahas Mon May 25, 2015 12:48 am

எல்லாருக்கும் தேவையான தகவல். பொதுவாக பேச ஆயிரம் விஷயங்கள் இருக்கு. மனம் நோகாமல் எது வேண்டுமானாலும் பேசலாம். பாராட்டி பேச நல்ல மனம் இருந்தால் போதும்.
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

உறவினர்களிடம் பேசக்கூடாத விஷயங்கள் Empty Re: உறவினர்களிடம் பேசக்கூடாத விஷயங்கள்

Post by krishnaamma Mon May 25, 2015 12:56 am

நல்ல பகிர்வு , நன்றி சிவா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உறவினர்களிடம் பேசக்கூடாத விஷயங்கள் Empty Re: உறவினர்களிடம் பேசக்கூடாத விஷயங்கள்

Post by ஜாஹீதாபானு Mon May 25, 2015 4:32 pm

உறவினர்களிடம் பேசக்கூடாத விஷயங்கள் 103459460 உறவினர்களிடம் பேசக்கூடாத விஷயங்கள் 1571444738


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உறவினர்களிடம் பேசக்கூடாத விஷயங்கள் Empty Re: உறவினர்களிடம் பேசக்கூடாத விஷயங்கள்

Post by விமந்தனி Mon May 25, 2015 5:36 pm

உறவினர்களிடம் பேசக்கூடாத விஷயங்கள் 103459460 உறவினர்களிடம் பேசக்கூடாத விஷயங்கள் 1571444738


உறவினர்களிடம் பேசக்கூடாத விஷயங்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉறவினர்களிடம் பேசக்கூடாத விஷயங்கள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உறவினர்களிடம் பேசக்கூடாத விஷயங்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

உறவினர்களிடம் பேசக்கூடாத விஷயங்கள் Empty Re: உறவினர்களிடம் பேசக்கூடாத விஷயங்கள்

Post by Preethika Chandrakumar Mon May 25, 2015 6:33 pm

நல்ல பகிர்வு , சிவா அண்ணா
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

Back to top Go down

உறவினர்களிடம் பேசக்கூடாத விஷயங்கள் Empty Re: உறவினர்களிடம் பேசக்கூடாத விஷயங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum