ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேதியியல் தொகுப்பு

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

வேதியியல் தொகுப்பு - Page 3 Empty வேதியியல் தொகுப்பு

Post by சிவா Wed May 20, 2015 12:18 am

First topic message reminder :

* ஒரு அமிலத்திற்கும், காரத்திற்குமிடையேயான நடுநிலையாக்கல் வினையில் இடப்பெயர்ச்சி செய்யப்பட வேண்டிய ஹைட்ரஜன் மற்றும் ஹைட்ராக்சில் அயனிகளில் சில இடப்பெயர்ச்சி அடையாமல் இருந்தால் அவ்வினை பகுதியளவு நடுநிலையாக்கல் எனப்படும்.

* இவ்வகை வினையில் கிடைக்கும் விளை பொருட்கள் அமில அல்லது கார உப்புக்களாக இருக்கும்.

* ஒரு அமிலத்தை ஒரு காரத்தால் பகுதியளவு நடுநிலையாக்கல் செய்யும்போது அமில உப்புக் கிடைக்கும். அமில உப்பில் குறைந்த அளவு ஒரு ஹைட்ரஜன் அயனியாவது காணப்படும்.

* சோடியம் ஹைட்ரஜன் பாஸ்பேட், சோடியம் பைசல்பேட் போன்ற உப்புக்கள் அமில உப்புக்களுக்கு பிற எடுத்துக்காட்டுகள் ஆகும்.

* ஒரு காரத்தை அமிலத்தால் பகுதி அளவு நடுநிலையாக்குமேபோதும் கார உப்பு கிடைக்கும் கார உப்புக்களில் குறைந்தது ஒரு ஹைட்ராக்சைடு அயனியாவது காணப்படும்.

* சோடியம் குளோரைடு உணவுப் பொருட்கள் தயார் செய்யவும். ஊறுகாய், மீன், இறைச்சி, காய்கறி போன்றவை கெடமால் பாதுகாக்கவும் பயன்படுகிறது.

* ரொட்டிச் சோடா, ரொட்டி மற்றும் கேக்குகள் தயாரிக்கவும் பயன்படுகிறது.

* சலவைச் சோடா துணிகளை சலவை செய்யப் பயன்படுகிறது. சலவைத் தூள் துணிகள் மற்றும் தண்ணீரை சுத்தம் செய்யப் பயன்படுகிறது.

* கால்சியம் கார்பனேட் சுண்ணாம்புக் கட்டி செய்யப் பயன்படுகிறது.

* பொட்டாஷ் படிகாரம், நீரில் உள்ள மாசுகளை விரைவாக வீழ்படியச் செய்து நீரைத் தூய்மை யாக்குகிறது.

* சோடியம் பென்சோயேட் உணவு கெடாமல் பாதுகாக்கும் பொருளாகப் பயன்படுகிறது. சில்வர் நைட்ரேட் முடிச்சாயம் தயாரிக்கப் பயன்படுகிறது.

* அம்மோனியம் குளோரைடு, அம்மோனியம் சல்பேட், கால்சியம் சூப்பர் பாஸ்பேட் ஆகியவை உரங்களாகப் பயன்படுகின்றன.

* NPK (நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம்) வகை உரங்களில் அம்மோனியம் நைட்ரேட், அம்மோனியம் சல்பேட், அம்மோனியம் பாஸ்பேட், பொட்டாசியம் குளோரைடு உப்புக்கள் அடங்கியுள்ளன.

* காப்பர் சல்பேட் உப்பு காளான் கொல்லியாகப் பயன்படுகிறது. நைட்டர் (பொட்டாசியம் நைட்ரேட்) ஒரு உரமாகப் பயன்படுகிறது.

* பாரிஸ் சாந்து (Plaster of Paris) எலும்பு முறிவு சிகிச்சையில் பயன்படுகிறது. எப்சம் உப்பு மலச்சிக்கலைத் தீர்க்கும் மருந்தாகப் பயன்படுகிறது.

* முகரும் உப்பு சளித்தொல்லைகளிலிருந்து விடுபெறப் பயன்படுகிறது. ரொட்டிச் சோடா வயிற்றில் அமிலத் தன்மையைக் குறைக்கும் ஆன்டாசிட் மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகிறது.

* சில்வர் நைட்ரேட், சில்வர் புரோமைடு, சோடியம் தயோ சல்பேட் (ஹைப்போ) ஆகியவை புகைப்படத் தொழிலில் பயன்படுகின்றன.

* பொட்டாசியம் நைட்ரேட் பட்டாசுகள் தயாரிக்கவும், சோடியம் நைட்ரேட் துப்பாக்கித் தூள் மற்றும் பட்டாசுகள் செய்யவும், பொட்டாஷ் படிகாரம் தோல் பதனிடுதலிலும், காகிதங்களின் தரத்தை உயர்த்தவும், நிறமூன்றியாகவும் பயன்படுகிறது.

* பொட்டாசியம் குளோரேட் தீப்பெட்டித் தொழிற் சாலைகளில் பயன்படுகிறது. காப்பர் சல்பேட் சாயத்தொழிலிலும், அச்சுத் தொழிலிலுலம், முலாம் பூசுதலிலும் பயன்படுகிறது.


வேதியியல் தொகுப்பு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


வேதியியல் தொகுப்பு - Page 3 Empty Re: வேதியியல் தொகுப்பு

Post by சிவா Wed May 20, 2015 12:29 am

2 S தொகுதி தனிமங்கள்

* தனிம வரிசை அட்டவணையில் இரண்டாம் தொகுதியில் பெரிலியம், மெக்னீசியம், கால்சியம், ஸ்ட்ரான்சியம், பேரியம் மற்றும் ரேடியம் ஆகியவை அடங்கி உள்ளன. இத்தனிமங்கள் காரமண் உலோகங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.

* மண் என்ற வார்த்தை பழங்காலத்தில் ஒரு உலோக ஆக்சைடைத் குறிப்பதாகும். ஏனைனில் கால்சியம், ஸ்ட்ரான்சியம் மற்றும் பேரியம் ஆக்சைடுகள் நீர்க்கார கரைசல்களைத் தருவதால் இவைகள் காரமண் உலோகங்கள் என அழைகப்படுகின்றன.

* மெக்னீசியத்தின் தாதுவான மெக்னசைட்டின் பெயரிலிருந்து மெக்னீசியம் பெறப்பட்டது.

* ஆங்கில வேதியியலால் ஹம்ப்ரி டேவி என்பவரால் 1808 ஆம் ஆண்டு தூய மெக்னீசியம் கண்டறியப்பட்டது.

* மெக்னீசியம் இயற்கையில் தனித்துக் கிடைப்பத்தில்லை. சேர்ந்த நிலையில் அதிக அளவாக புவிப்பரப்பில் காணப்படுகிறது.

* மென்னசைட், டோலமைட் எப்சம் உப்பு, கார்னலைட் ஆகிய வடிவில் காணப்படுகிறது.

* கடல்நீரில் கரைந்திருக்கும் C1 மற்றும் Na+ அயனிகளை அடுத்து மூன்றாவதாக மெக்னீசியம் Mg2+ காணப்படுகிறது. எனவே பெருங்கடல்களே மெக்னீசியத்தின் மூலங்களாகும்.

* தாவர உலகத்தில் பச்சை நிறத்தையுடைய இலைகளில் குளோரோஃபில் என்ற சேர்மமாக மெக்னீசியம் பரந்து காணப்படுகிறது


வேதியியல் தொகுப்பு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வேதியியல் தொகுப்பு - Page 3 Empty Re: வேதியியல் தொகுப்பு

Post by சிவா Wed May 20, 2015 12:30 am

P பிரிவு தனிமங்கள்

* தனிம வரிசை அட்டவணையில் 13ம் தொகுதியிலிருந்து 18ம் தொகுதி வரை சார்ந்திருக்கும் தனிமங்களில், p ஆர்பிட்டால்களில் எலக்ட்ரான்கள் தொடர்ச்சியாக நிரவுதல் செய்யும் தனிமங்களே p தொகுதி தனிமங்கள் எனப்படுகின்றன.

* இணைதிறன் கூட்டில் முழுமையாக நிரப்பப்படாத p ஆர்பிட்டாலைப் பெற்றுள்ள தனிமங்கள் p பிரிவு தனிமங்கள் ஆகும்.

* இத்தனிமங்கள் பொதுவாக ns2np1-5 என்ற வெளிக்கூடு எலக்ட்ரான் அமைப்பைப் பெற்றுள்ளன. p பிரிவு தனிமங்கள் ஐந்து தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு தொகிதியிலும் ஐந்து தனிமங்கள் வீதம் மொத்தம் 25 தனிமங்கள் உள்ளன.

* இவற்றில் 15 தனிமங்கள் அலோகங்களும், 10 உலோகங்களாகவும் உள்ளன.

* 13வது தொகுதியில் போரான், அலுமினியம், கேலியம், இன்டியம் மற்றும் தாலியம் ஆகியவை உள்ளன. இவை போரான் தொகுதி தனிமங்கள் எனப்படும்.

* கார்பன், சிலிக்கான், ஜெர்மானியம், காரீயம் மற்றும் வெள்ளீயம் போன்றவை 14வது தொகுதியில் உள்ளன. இவை கார்பன் தொகுதி எனப்படும்.

* நீர்வடிவ தனிம ஆவர்த்தன அட்டவணையில் 15வது தொகுதியில் அதாவது V-A ல், நைட்ரஜன், பாஸ்பரஸ், ஆண்டிமனி, பிஸ்மத், ஆர்சனிக் பொன்ற தனிமங்கள் உள்ளன. இத்தொகுதி நைட்ரஜன் தொகுதி என அழைக்கப்படுகிறது.

* இத்தொகுதியில் நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் ஆகியன அலோகங்கங்களாகும். எனினும் பிஸ்மத் ஒரு உலோகமாகும்.

* ஆர்சனிக் அலோகமாக இருப்பினும், உலோகத்திற்குரிய சிறப்புப் பண்புகள் சிலவற்றைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

* எனவே இத்தொகுதியில் நைட்ரஜனில் இருந்து பிஸ்மத் வரை செல்லச் செல்ல அலைகத் தன்மையில் இருந்து உலோகத் தன்மைக்கு சீரான மாற்றம் காணப்படுகிறது.


வேதியியல் தொகுப்பு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வேதியியல் தொகுப்பு - Page 3 Empty Re: வேதியியல் தொகுப்பு

Post by சிவா Wed May 20, 2015 12:30 am

மந்த வாயுக்கள்

* ஹீலியம், நியான், ஆர்கான், கிரிப்டான், செனான், ரேடான் ஆகிய தனிமங்கள் 18வது தொகுதியில் அமைந்துள்ளன. இவையே மந்த வாயுக்கள் ஆகும்.

* இந்த தனிமங்கள் ஹீலியத்தைத் தவிர மற்ற தனிமங்கள் மூழுமை பெற்ற எலக்ட்ரான் அமைப்பைப் பெற்றுள்ளன.

* எனவே இவற்றுடன் எளிதில் எலக்ட்ரானைச் சேர்க்கவோ, நீக்கவோ இயலாது. எனவே இவற்றின் வினைபுரியும் தன்மை மிகவும் குறைவாகும்.


வேதியியல் தொகுப்பு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வேதியியல் தொகுப்பு - Page 3 Empty Re: வேதியியல் தொகுப்பு

Post by சிவா Wed May 20, 2015 12:31 am

s தொகுதி தனிமங்கள்

* இவை பிரதிநித்துவ தனிமங்கள் என்றும் குறிப்பிடப்படும். அதாவது ஆவர்த்தன அட்டவணையில் 1 ஆம் தொகு, 2 ஆம் தொகுதி மற்றும் 13 முதல் 17 ஆம் தொகு ஆகியவற்றில் உள்ள தனிமங்கள் பிரதிநிதித்துவ தனிமங்கள் எனப்படுகின்றன.

* இவற்றில் முதல் தொகுதி தனிமங்கள் கார உலோகங்கள் எனப்படும். இரண்டாவது தொகுதி தனிமங்கள் காரமண் உலோகங்கள் எனப்படும்.

* இவை இரண்டும் சேர்ந்து s தொகுதி தனிமங்கள் எனப்படும்.

* பெரிலியம், மெக்னீசியம், கால்சியம், ஸ்டாரன்சியம், பேரியம் மற்றும் ரேடியம் ஆகியவை கார மண் உலோகங்கள் எனப்படும்.

* லித்தியம், சோடியம், பொட்டாசியம், ரூபிடியம், சீசியம் மற்றும் பிரான்சியம் ஆகிய தனிமங்கள் கார உலோகங்கள் எனப்படும். இவை தாவர சாம்பல் என்றும் குறிப்பிடப்படும்.


வேதியியல் தொகுப்பு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வேதியியல் தொகுப்பு - Page 3 Empty Re: வேதியியல் தொகுப்பு

Post by சிவா Wed May 20, 2015 12:31 am

கதிரியக்கம்

* 1896 ஆம் ஆண்டு ஹென்றி பெக்கோரல் என்பவர் யுரேனியத் தனிமத்திலிருந்து கதிரியக்கத்தை முதலாவதாகக் கண்டறிந்தார்.

* கியூரி அம்மையார் கதிரியக்கத் தன்மை கொண்ட மேலும் இரு புதிய தனிமங்களைக் கண்டறிந்தார். அவை ரேடியம், பொலேனியம் ஆகும்.

* தோரியமும் ஒரு கதிரியக்கத் தனிமமாகும்.

* தற்போது செயற்கை கதிரியக்க தனிமங்கள் தயார்க்கப்பட்டுள்ளன. கதிரியக்கத் தன்மையற்ற தனிமங்கள் கதிரியக்கத் தனிமங்களாக செயற்கை அணுக்கரு மாற்று முறையில் மாற்றப்படுகின்றன.

* யுரேனியம், தோரியம், பொலேனியம், ரேடியம் ஆகியவை இயற்கையிலேயே கதிரியக்கத் தன்மையுள்ள தனிமங்களாகும்.

* வேதிவினைகள் அணுக்களின் உட்கருவுக்கு வெளியே நடைபெறும் மாற்றங்கள் ஆகும்.

* கதிரியக்க வீச்சு என்பது அணுக்கருவிற்குள் ஏற்படும் மாற்றங்கள் ஆகும்.

* கதிரியக்கத்தில் வெளியிடப்படும் மின்சுமை கொண்ட துகள்களின் பாதை மற்றும் தன்மையை ஆராய மேகப்பெட்டகம் முறை பயன்படுத்தப்பட்டது.

* செயற்கை முறையில் தயார்க்கப்பட்ட கதிரியக்க ஐசோடோப்புகள் ரேடியோ நியூக்கிளியைடு அல்லது கதிரியக்க ஐசோடோப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.


வேதியியல் தொகுப்பு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வேதியியல் தொகுப்பு - Page 3 Empty Re: வேதியியல் தொகுப்பு

Post by சிவா Wed May 20, 2015 12:32 am

அணுக்களின் அணைப்பு

* ஹீலியத்தில் அணுக்களின் அமைப்பின்படி புரோட்டான்களின் எண்ணிக்கை 2, எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 2, நியூட்ரான்களின் எண்ணிக்கை 2, எல்க்ட்ரான் அமைப்பு (2) ஆகும்.

* நியான் தனிமத்தில் புரோட்டான்களின் எண்ணிக்கை 10, எலக்ட்ரான் எண்ணிக்கை 10, நியூட்ரான் எண்ணிக்கை 10, எல்க்ட்ரான் அமைப்பு (2,8) ஆகும்.

* சோடியத்தில் புரோட்டான்களின் எண்ணிக்கை 11, எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 11, நியூட்ரான்களின் எண்ணிக்கை 12, எலக்ட்ரான் அமைப்பு (2,8,1) ஆகும்.

* குளோரினில் புரோட்டான் எண்ணிக்கை 17, எலக்ட்ரான் எண்ணிக்கை 17, நியூட்ரான் எண்ணிக்கை 18, எலக்ட்ரான் அமைப்பு (2,8,7) ஆகும்.


வேதியியல் தொகுப்பு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வேதியியல் தொகுப்பு - Page 3 Empty Re: வேதியியல் தொகுப்பு

Post by சிவா Wed May 20, 2015 12:32 am

ஆல்ஃபா கதிரியக்கம்

* ஆல்ஃபா துகள்கள் ( துகள்கள்) ஹீலியத்தின் (2He4) உட்கருவைப் பெற்றவை. ஹைட்ரஜனின் அணு நிறையை விட 4 ம"்ஙகு கனமானது.

* அதிகயளவில் காணப்படும் U-238 ஐசோடோப்பு ஆல்ஃபா கதிர்கள் முக்கிய மூலம் ஆகும். இவை கதிரியக்கத் தனிமங்கள் வெளியிடும் மிகப் பெரிய துகள் ஆகும்.

* ஆல்ஃபா துகள்களுக்கு ஊடுருவும் திறன் மிகக் குறைவு. மேலும் அதிக நிறையும் அதிக திசைவேகத்தையும் பெற்றிருப்பதால் இவறஅறின் இயக்க ஆற்றல் அதிகமாகும்.

* எனவே இவை செயற்கை தனிமங்களை உருவாக்கப் பயன்படும் தாக்கிகளாகப் பயன்படுகின்றன.

* காற்றினை தொடர்ந்து அயனியாக்குவதால் இதன் ஆற்றல் விரைவாகக் குறைந்துவிடுகிறது. இதனால் இவை காற்றில் சிறிது தூரத்திலேயே தடுத்து நிறுத்தப் படுகின்றன. இத்துகள்கள் காற்றில் அதிகபட்ச தூரம் எவ்வளவு கடக்குமோ அதை ஆல்ஃபா கதிரின் இயக்க எல்லை என்று அழைக்கிறோம்.

* ஆல்ஃபா கதிர்கள் மின் சுமை பெற்றவையாதலால் அவை மின் மற்றும் காந்தப் புலங்களினால் விலக்கமடைகின்றன. புகைப்படத்தாளை ஆல்ஃபா கதிர்கள் பாதிக்கின்றன.

* கதிரியக்க தனிமத்திலிருந்து ஒரு ஆல்ஃபா கதிர் வெளியாகையில் அதன் நிறையில் 4 அலகுகளும், அதன் மின் சுமையில் 2 அலகுகளும் குறைகின்றன. புதிதாக உருவாகும் தனிமம் வேதிப்பண்புகளில் வேறுபட்டுக் காணப்படுகிறது. இதுவே கதிரியக்க மாற்றம் எனப்படும். இதனைக் கண்டறிந்தவர் சாடி என்ற அறிஞர் ஆவார்.


வேதியியல் தொகுப்பு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வேதியியல் தொகுப்பு - Page 3 Empty Re: வேதியியல் தொகுப்பு

Post by சிவா Wed May 20, 2015 12:33 am

பீட்டா கதிரியக்கம்

* பீட்டா கதிர்கள் பொருண்மைத் துகள்களாகும். அவை எல்க்ட்ரான்கள் ஆகும்.

* காற்றை இக்கதிர்கள் மிதமான முறையில் அயனியாக்குகிறது. இதன் இயக்க எல்லை, ஆல்ஃபா கதிர்களைப் போன்று தெளிவாக வரையறுக்கப்பட வில்லை.

* இவை அதிக திசைவேகம் பெற்று இயங்குகின்றன. சில நேரங்களில் ஒளியின் திசைவேகத்தை ஒத்துள்ளன.

* பீட்டா கதிர்கள் புகைப்படத் தாள்களைப் பாதிக்கின்றன. இவை மின்சுமை பெற்றிருப்பதால் மின் மற்றும் காந்தப் புலங்களால் விலக்கமடைகின்றன.

* இவை அயனியாக்கல் வினைக்கு ஆற்றலைச் செலவழிப்பதில்லை. எனவே, இவை ஆல்ஃபா துகள்களை விட காற்றில் அதிக தூரம் கடக்கவல்லவை.

* பீட்டா துகள்கள், ஆல்ஃபா துகள்களை விட 7000 மடங்கு இலேசானது. இவை நின்றொளிர்தல் நிகழ்வினைச் செய்கின்றன.


வேதியியல் தொகுப்பு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வேதியியல் தொகுப்பு - Page 3 Empty Re: வேதியியல் தொகுப்பு

Post by சிவா Wed May 20, 2015 12:33 am

காமா கதிர்கள்

* காமா கதிர்கள் ஆல்ஃபா, பீட்டா துகள்கள் போன்ற பொருண்மைத் துகள்கள் அல்ல. ஆனால், அவை மின்காந்த அலைகளாகும். அவற்றின் அலை நீளம் மிகச்சிறியது.

* காமாக் கதிர்கள் கண்ணிற்குப் புலப்படாது. இவை காற்றினை அயனியாக்கும். இக்கதிர் நின்றொளிர்தலை உண்டாக்கும்.

* இவை மின்காந்தக் கதிர்களானதால் மின் காந்தப் புலங்களால் பாதிக்கப்படுவதில்லை. படிகங்களால் இக்கதிரிகள் விளிம்பு விளைவு அடைகின்னறன.

* எக்ஸ் கதிர்களை விட இவற்றின் ஊடுருவும் திறன் அதிகம். ஏனெனில், எக்ஸ் கதிர்களை விட இவற்றின் அலைநீளம் குறைவு.

* காமா கதிர்களின் தாக்குதலால் உயிர் திசுக்கள் இறந்துவிடலாம். எனவே இவை ஆபத்தானவை.

* காமாக் கதிர்களை வெளியிடும் கதிரியக்க தனிமத்தின் உட்கரு வேதிப்பண்புகளில் மாறுவதில்லை.

* ஒரு ரேடியோ ஐசோடோப்பு கதிரியக்கத்தினால் அதன் தொடக்க நிறையில் இருந்து சரிபாதி நிறையாக மாறுவதற்கு ஆகும் காலம் அரை ஈயுட்காலம் எனப்படும்.

* இதனைப் பயன்படுத்தி, பாறைகள், மரம் மற்றும் புவியில் கிடைக்கும் கரிமப் பொருட்களின் வயதினை ரேடியோ கார்பன் தேதியிடல் முறையில் கண்டறிகிறார்கள்.

* கதிரியக்க வீச்சுகளை அறியப் பயன்படும் கருவிகள் எலக்ட்ரோ மீட்டர், மேகப்பெட்டகம், கெய்கர்-முல்லர் எண்ணி மற்றும் குறைகடத்தி மின்சுற்றுகள் ஆகியன.


வேதியியல் தொகுப்பு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வேதியியல் தொகுப்பு - Page 3 Empty Re: வேதியியல் தொகுப்பு

Post by சிவா Wed May 20, 2015 12:33 am

செயற்கைக் கதிரியக்கம்

* ஒரு தனிமம் வேறொரு தனிமமாக செயற்கை கதிரியக்க முறையில் மாற்றப்படுதலுக்கு தூண்டப்பட்ட கதிரியக்கம் அல்லது செயற்கைக் கதிரியக்கம் என்று பெயர்.

* தூண்டப்பட்ட கதிரியக்க தனிமங்கள் செயற்கை கதிரியக்க ஐசோசோப்புகள் எனப்படும். கதிரியக்க ஐசோடோப்புக்களைக் கொண்டு நோய்களைக் கணப்படுத்துதல் கதிரியக்க சிகிச்சை எனப்படும்.


வேதியியல் தொகுப்பு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வேதியியல் தொகுப்பு - Page 3 Empty Re: வேதியியல் தொகுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum