ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக அரசியல் செய்திகள்

+5
ayyasamy ram
Namasivayam Mu
M.Jagadeesan
Dr.சுந்தரராஜ் தயாளன்
சிவா
9 posters

Page 6 of 13 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 11, 12, 13  Next

Go down

தமிழக அரசியல் செய்திகள் - Page 6 Empty தமிழக அரசியல் செய்திகள்

Post by சிவா Tue May 19, 2015 11:16 pm

First topic message reminder :

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் டிராபிக் ராமசாமி மனு

தமிழக அரசியல் செய்திகள் - Page 6 201505192025138979_traffic-ramaswamy-challenge-jayalalitha-acquittal_SECVPF
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு விதித்த தண்டனையை ரத்து செய்தும், அவரை விடுதலை செய்தும் கர்நாடக ஐகோர்ட்டு கடந்த 11-ந் தேதி தீர்ப்பு அளித்தது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி  ஒரு மனு தாக்கல் செய்தார்.அதில், கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், ஜெயலலிதா பெற்ற கடன் தொகை பற்றி தவறாகக் கணக்கிடப்பட்டுள்ளது.   இந்த தவறால் சொத்துக்குவிப்பு குறித்த விகிதாச்சாரம் அதிகமாக உள்ளது; இந்த தவறான கணக்கு மற்றும் விகிதாச்சாரத்தினால் அவர் விடுதலை பெறுவதற்கு தகுதியற்றவர்.

அவர் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட பல முறைகேடான பணப்பரிமாற்றங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அவருக்கு எதிரான மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. எனவே ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


தமிழக அரசியல் செய்திகள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


தமிழக அரசியல் செய்திகள் - Page 6 Empty Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by சிவா Mon Oct 29, 2018 6:38 pm



சென்னை – அண்மையில் நடிகர் ரஜினிகாந்தைத் தாக்கி திமுகவின் அதிகாரபூர்வ ஏடான முரசொலியில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்தை நேரடியாகத் தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார்.

அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் தனது மன்றத்திலிருந்து ஒரு சிலரை அவர்களின் நடத்தை காரணமாக மன்றத்திலிருந்து நீக்கினார். அதைத் தொடர்ந்து வெளியிட்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில், பணம், பதவியை எதிர்பார்த்து இருப்பவர்கள் இப்போதே மன்றத்தில் இருந்து விலகிவிடுங்கள் என்றும், மன்றத்தின் நடவடிக்கைகள் தனது கவனத்திற்கு வந்த பிறகே அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது என்றும் கூறியிருந்தார்.

ரஜினிகாந்தின் இந்த அறிக்கையை கடுமையாகச் சாடி முரசொலி செய்தி ஒன்றை வெளியிட்டது. முரசொலியின் இந்த செய்தியால் ரஜினி, திமுக வட்டாரங்களில் அதிர்வலைகள் ஏற்பட்டன.

இதைத் தொடர்ந்து இரசிகர்களுக்கு எழுதிய கடிதத்தில், ரஜினிகாந்த் “என்னையும், இரசிகர்களாகிய உங்களையும் ரசிகர்கள் யாராலும், எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. நாம் செல்லும் பாதை நியாயமானதாக இருக்கட்டும்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் முரசொலி அறிக்கை ஒன்றை வெளியிட்டு, “ரஜினிகாந்த் குறித்து முரசொலியில் வெளிவந்த கட்டுரை சில நல்ல மனதை புண்படுத்துவதாக உள்ளதென்று கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இனி அத்தகைய செய்திகளை வெளியிடுவதில் கவனத்துடன் செயல்படுமாறு ஆசிரியர் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தது.

அதே நேரத்தில் ரஜினிகாந்துடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உரையாடியிருக்கிறார். முரசொலி செய்தி தொடர்பாக அவர் ரஜினிகாந்துடன் பேசியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

20 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்கள் விரைவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் வேளையில், எந்தத் தரப்புடனும் பகைமை பாராட்டாமல் செயல்படும் எண்ணத்திலேயே ஸ்டாலின் ரஜினியை அழைத்துப் பேசியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.


தமிழக அரசியல் செய்திகள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக அரசியல் செய்திகள் - Page 6 Empty Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by சிவா Mon Aug 09, 2021 11:43 pm

தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனு அளித்தனர்.

திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர் சங்கரய்யாவின் நுாற்றாண்டு விழா நடந்தது. மா.கம்யூ.,மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார். தி.மு.க.,மாவட்ட செயலாளர்கள் ஆவுடையப்பன், அப்துல்வகாப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய நெல்லை கண்ணன்,‛தி.மு.க.,தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா கோயில்களுக்கு சென்றதால்தான் தி.மு.க.,வெற்றிபெற்றது என பா.ஜ.,வினர் பிரசாரம் செய்கின்றனர். ஆனால் பி.ஜே.பி.,நாய்களும் கோயிலுக்கு செல்பவர்கள்தானே.. அவர்கள் ஏன் வெற்றிபெறவில்லை. திருநெல்வேலியில் ஜெயித்துவிட்டார்கள்.

திருநெல்வேலி தொகுதியில் தி.மு.க.,வேட்பாளர் ஏ.எல்.எஸ்.,மகன் லட்சுமணன் தேர்தல் பணியில் ஈடுபடவில்லை. பணமும் செலவழிக்கவில்லை. அவனிடம் சொல்லிப்பார்த்தும் கேட்கவில்லை.

இதுபற்றி கட்சியின் ஆர்.எஸ்.பாரதி,டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரிடம் பேசினேன். கட்சியில் இருந்து 4 கோடி ரூபாய் கொடுத்துள்ளார்கள். ஆனால் செலவழிக்கவில்லை. கூட்டணிக்கட்சிக்கும் பணம் தரவில்லை என சிலர் என் வீட்டுக்கு வந்து கூறினார்கள். திருநெல்வேலியில் தாமரை மலர்ந்துவிட்டதே.. நானும் திருநெல்வேலியில் மூன்று முறை தேர்தலில் நின்றுபார்த்துவிட்டேன். எனக்கு ஓட்டுபோடக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக உள்ளார்கள். எவனாவது அறிவில்லாத முட்டாப்பயலுகளுக்கு ஓட்டுபோடுவார்கள்.

ஓ.பி.எஸ்.,மகன்கள் ஹவாலா பணம் கொண்டுசென்றபோதுதான் மொரிஷியஸ் தீவில் சிக்கிக்கொண்டனர். அதில் இருந்து தப்பிக்க ஓ.பி.எஸ்., பிரதமரை சந்திக்க டில்லி சென்றார். அவர் எதற்கு செல்கிறார் என தெரியாமல் இ.பி.எஸ்.,ம் டில்லி சென்றார். முதல்வருக்கு எதிராக தி.மு.க.,வில் ஒரு கோஷ்டியினர் கோபத்தில் உள்ளனர். ஒரு அமைச்சர் என்னிடம் பேசினார். தலைவர் ரொம்ப சீரியஸ்ஆக நடவடிக்கை எடுக்கிறார் என்றார்.

இரண்டு அமைச்சர்களை முதல்வர் ஸ்டாலின் கண்டித்துள்ளார். அதில் இருந்து இப்படி தி.மு.க.,வினர் இப்படி ஆரம்பித்துவிட்டார்கள் இவ்வாறு நெல்லை கண்ணன் பேசினார்.இதில் திருநெல்வேலியில் போட்டியிட்டு தோல்வியடைந்த தி.மு.க.,வேட்பாளர் லட்சுமணனை நாய் என்றும் ரூ 4 கோடிவாங்கிக்கொண்டு செலவழிக்காதவர் என தி.மு.க.,கட்சி குறித்தும் அவதுாறாக பேசியது குறித்து திருநெல்வேலி மாவட்ட வழக்கறிஞர்அணி நிர்வாகி உமாமகேஸ்வரன், தொழில்நுட்ப அணி நிர்வாகி பலராமன் போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணனிடம் புகார் அளித்தனர். கடந்த ஆட்சியில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு எதிராக அவதுாறாக பேசிய வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தற்போதும் தி.மு.க.,குறித்து பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.


தமிழக அரசியல் செய்திகள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக அரசியல் செய்திகள் - Page 6 Empty Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by சிவா Mon Aug 09, 2021 11:45 pm

பொதிகையில் விவாதம்: பா.ஜ., அ.தி.மு.க., தயார்!

புதுடில்லி: தமிழ் செய்தி சேனல்களில் இரவு நேரங்களில் அரசியல் விவாதங்கள் நடக்கின்றன. இதில், அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் பங்கேற்பதில்லை என முடிவெடுத்துள்ளன. ஊடகங்கள் தி.மு.க.,வுக்கு ஆதரவாக செயல்படுவதாக இவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், மத்திய செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஓர் அதிரடி முடிவை எடுத்துள்ளார். இனி பொதிகை 'டிவி'யில் அரசியல் விவாதங்கள் நடக்கும் என்பது தான் அந்த முடிவு. இந்த துறையின் இணை அமைச்சராக இருப்பவர் தமிழகத்தைச் சேர்ந்த முருகன்.

துார்தர்ஷனின் பொதிகை 'டிவி'யில் அரசியல் விவாதங்கள் நடப்பது இல்லை. ஆனால் இனிமேல் அனல் பறக்கும் அரசியல் விவாதம் பொதிகையில் வர உள்ளதாம். பா.ஜ., மற்றும் அ.தி.மு.க.,வினர் இந்த விவாதங்களில் பங்கேற்று தி.மு.க.,வை ஒரு வழியாக்குவர் என்கின்றனர் விஷயம் தெரிந்தவர்கள்.


தமிழக அரசியல் செய்திகள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக அரசியல் செய்திகள் - Page 6 Empty Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by சிவா Mon Aug 09, 2021 11:46 pm

தி.மு.க., தலைவர்கள் மீது வழக்குகள் பாயும்?

புதுடில்லி: அ.தி.மு.க., தலைவர்கள் மீது வழக்குகள் போடவும், பழைய வழக்குகளை துாசி தட்டவும் தி.மு.க., அரசு தயாராகி விட்டது. இதை வைத்து சில அ.தி.மு.க., தலைவர்களை தன் பக்கம் இழுக்கவும், தி.மு.க., பேரம் பேசுவதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க, தலைமை சமீபத்தில் மோடியைச் சந்தித்தது. இந்த சந்திப்பிற்கு பின் நிதி அமைச்சகம் பரபரப்பாகியுள்ளது. வருமான வரித் துறை அதிகாரிகள் அதற்கான வேலையில் இறங்கி விட்டனர். தி.மு.க., தலைவர்கள் மீதுள்ள வழக்குகளின் கோப்புகள் அனைத்தையும் அலசி வருகின்றனர்.

அவர்களது சொத்து விபரங்கள் குறித்து தீவிர ஆய்வுகள் நடக்கின்றன. இதில் சிலருக்கு வெளிநாடுகளிலும் சொத்து உள்ளது தெரியவந்துள்ளது. விரைவில், தி.மு.க., தலைவர்கள் வீடுகளில் வருமான வரித் துறை சோதனை நடக்கலாம். ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகள் இனிமேல் துரிதப்படுத்தப்படும் என்கின்றனர் அதிகாரிகள்


தமிழக அரசியல் செய்திகள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக அரசியல் செய்திகள் - Page 6 Empty Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by சிவா Wed Aug 11, 2021 7:57 pm

செய்தியாளர்கள் சந்திப்பின்போது தடை பட்ட மின்சாரம்: அணில் ஓடியிருக்கும் என அண்ணாமலை 'கிண்டல்'

திமுக ஆட்சியை ஆரம்பித்ததிலிருந்தே பல்வேறு அதிரடி நடவடிக்கைகள், மக்கள் நலத்திட்டங்கள் எடுக்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில் திமுக ஆட்சி ஆரம்பமானதில் இருந்து மின்தடை ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக சென்னையில் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இந்த நிலையில் இன்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களை சந்திது மத்திய அரசின் சட்டங்கள் குறித்து தமிழ் கையேடுகளை வெளியிட்டு அவர் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென மின்சாரம் தடைபட்டது. அப்போது இது குறித்து கமெண்ட் அடித்த அண்ணாமலை ’அணில் ஓடியிருக்கும் என்று கிண்டலுடன் கூறியதை அடுத்து அங்கிருந்த செய்தியாளர்கள் மற்றும் பாஜகவினர் மத்தியில் சிரிப்பலை எழுந்தது இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது


தமிழக அரசியல் செய்திகள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக அரசியல் செய்திகள் - Page 6 Empty Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by T.N.Balasubramanian Wed Aug 11, 2021 9:42 pm

நேற்று நீண்ட நேரம் முன்னறிவிப்பின்றி 10 முதல் மாலை 4 வரை மின்சக்தி இல்லை.

புராண  காலத்தில் வானரங்களுக்கு உதவி செய்த அணில்கள் இப்போது 
மாநகரங்களில் மின்கம்பிகளில் விளையாடுகின்றன.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழக அரசியல் செய்திகள் - Page 6 Empty Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by சிவா Mon Jan 09, 2023 8:54 pm

ஆளுநரின் சட்டப்பேரவை அவமதிப்புச் செயல்'' - சீமான் அறிக்கை வெளியீடு



ஆளுநரின் சட்டப்பேரவை அவமதிப்புச் செயல் தமிழ்நாடு அரசின் இறையாண்மையின் மீது நடத்தப்பட்ட கொடுந்தாக்குதல் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளார் சீமான் தெரிவித்துள்ளார்.

இன்று சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் தமிழ் நாடு, திராவிட நாடு போன்ற வார்த்தைகளை ஆளுநர் வாசிக்காமல் புறக்கணித்தார். இதற்கு ஆளும் கட்சி, அமமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கடும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.

அதில்.

‘’திராவிடம், திராவிடன், திராவிட நாடு, திராவிட ஆட்சி, திராவிட மாடல் இல்லையென்றாலும், திராவிடக் கொள்கையோடு, தமிழ்த்தேசியத்திற்கு எத்தனை முரண்கள் இருந்தாலும், எட்டுகோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு பரிந்துரைத்த வார்த்தைகளை, ஆளுநர் தனது உரையில் படிக்க மறுத்ததை ஒருபோதும் ஏற்க முடியாது. இது முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் இறையாண்மையின் மீது
நடத்தப்பட்ட கொடுந்தாக்குதலாகும்.

மேலும், மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் உரையாற்றிக்கொண்டிருக்கும்போதே அவை மரபுகளை மீறி, பாதியிலேயே ஆளுநர் வெளியேறி, பேரவையையும், அமைச்சர்களையும், உறுப்பினர்களையும் அவமதித்துள்ளார். தமிழ்நாட்டு ஆளுநரின் இத்தகைய தரம் தாழ்ந்தப்போக்கினை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

மேலும், தமிழ் மண்ணிற்கும், மக்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாத, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நியமனப் பொறுப்பாளரான ஆளுநர் தமது மலிவான நடவடிக்கையால் தமிழ்நாடு அரசினையும், மக்களாட்சி முறைமையினையும் மட்டும் அவமதிக்கவில்லை. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் அவமதித்துள்ளார். உடனடியாக ஆளுநர் ஐயா ஆர்.என்.ரவி அவர்கள் தமிழ்நாடு அரசிடமும், தமிழ்நாட்டு மக்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


தமிழக அரசியல் செய்திகள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக அரசியல் செய்திகள் - Page 6 Empty Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by சிவா Mon Jan 09, 2023 8:55 pm

முதல்வர் செய்தது தான் மரபை மீறிய செயல்: அண்ணாமலை



தமிழக சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்தது மரபை மீறிய செயல் என அரசியல் கட்சிகள் தெரிவித்து வரும் நிலையில் ஆளுநர் உரையாற்றிய பின் முதல்வர் பேசியதுதான் மரபை மீறிய செயல் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இது குறித்து கூறிய போது, திமுக தங்கள் கட்சியின் பொதுக் கூட்ட உரைகளை சட்டமன்றத்தில் ஆளுநர் படிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம் என்றும் ஆளுநர்களை சட்டப்பேரவையில் இருந்து நீக்க சேர்க்க சபாநாயகருக்கு அதிகார வரம்பு உள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்

ஆளுநர் பேசியபின் மரபிற்கு புறம்பாக முதல்வர் பேசியது முற்றிலும் தவறானது என்றும் தமிழகம் என பாரதிதாசன் குறிப்பிட்டுள்ள நிலையில் ஆளுநர் தமிழகம் என்று சொன்னதால் என்ன தாழ்வு ஏற்பட்டு விட்டது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்


தமிழக அரசியல் செய்திகள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக அரசியல் செய்திகள் - Page 6 Empty Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by சிவா Mon Jan 09, 2023 8:56 pm

தமிழ்நாடு முன்னேற்றக் கழகம் என்று பெயரை மாற்ற தயாரா?வானதி சீனிவாசன்



தமிழ்நாடு என்ற சொல் தான் தங்களுக்கு பிடித்த சொல் என்றால் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியின் பெயரை தமிழ் நாடு முன்னேற்ற கழகம் என்று பெயர் மாற்ற தயாரா என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டசபையில் இன்று தமிழ்நாடு என்ற வார்த்தைகளை ஆளுநர் படிக்கவில்லை என அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில் கவர்னருக்கு ஆதரவாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசியுள்ளார்.

தமிழ்நாடு என்பது முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கும் திமுகவினருக்கு விருப்பமானது என்றால் கட்சி பெயரை தமிழ் நாடு முன்னேற்ற கழகம் என்று மாற்ற தயாரா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்

மேலும் திராவிட மாடல் என்பதை தமிழ்நாடு மாடல் என்றும் சொல்ல தயாரா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது கேள்விக்கு திமுகவினர் என்ன பதில் சொல்லப் போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


தமிழக அரசியல் செய்திகள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக அரசியல் செய்திகள் - Page 6 Empty Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by சிவா Mon Jan 09, 2023 8:57 pm

அரசையும், மக்களையும் அவமானப்படுத்தும் செயல்! ஆளுனருக்கு பாமக கண்டனம்?



இன்று தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தில் ஆளுனர் நடந்து கொண்ட விதம் குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இன்று தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்ற நிலையில் ஆரம்பமாக ஆளுநர் உரையை வாசித்தார். ஆனால் அதில் அவர் தமிழ்நாடு அரசு குறிப்பிட்டிருந்த ‘திராவிட மாடல்’ என்ற வார்த்தையையும், மற்ற சில சொற்றொடர்களையும் தவிர்த்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் தமிழ்நாடு அரசு அச்சடித்த உரையே பதிவேற்றப்படும், ஆளுனர் பேசியது பதிவேற்றப்படாது என முதல்வர் கூறிய நிலையில் சில நிமிடங்களில் ஆளுனர் சட்டப்பேரவையை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்நிலையில் ஆளுனரின் இந்த செயலுக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் எம்.பி.அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள எம்.பி அன்புமணி ராமதாஸ் “தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்ட உரையை, சட்டப்பேரவையில் படிக்கும் போது சில வார்த்தைகளையும், சில பத்திகளையும், ஆளுனர் தவிர்த்திருக்கிறார். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், சட்டப்பேரவையும் அவமதிக்கும் செயலாகும்!” எனக் கூறியுள்ளார்.

மேலும் “தமிழ்நாடு அரசால் குறிப்பிடப்படும் சில சொற்களில் பாமகவுக்கு உடன்பாடு இல்லை; ஆளுனருக்கும் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசால் தயாரித்து வழங்கப்படும் உரையை மாற்றாமல் படிப்பது தான் நாகரிகமும், மரபும் ஆகும்! அச்சிடப்பட்ட ஆளுனர் உரையை மட்டுமே அவைக்குறிப்பில் ஏற்ற வேண்டும் என்று கோரி முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்த போது, அவை நடவடிக்கைகள் முடிவடைந்து தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே ஆளுனர் வெளியேறியது ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்காது!

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி அரசும் ஆளுனரும் நிர்வாகம் என்ற நாணயத்தின் இரு பக்கங்கள். அரசுக்கும், ஆளுனருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே செல்வது நல்லதல்ல. தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஆளுனரும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும்!” என பேசியுள்ளார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்த பாமக தற்போது மத்திய பாஜக அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஆளுனரின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு பேச்சுகளை ஏற்படுத்தியுள்ளது.


தமிழக அரசியல் செய்திகள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக அரசியல் செய்திகள் - Page 6 Empty Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 13 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 11, 12, 13  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum