ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக அரசியல் செய்திகள்

+5
ayyasamy ram
Namasivayam Mu
M.Jagadeesan
Dr.சுந்தரராஜ் தயாளன்
சிவா
9 posters

Page 4 of 13 Previous  1, 2, 3, 4, 5 ... 11, 12, 13  Next

Go down

தமிழக அரசியல் செய்திகள் - Page 4 Empty தமிழக அரசியல் செய்திகள்

Post by சிவா Tue May 19, 2015 11:16 pm

First topic message reminder :

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் டிராபிக் ராமசாமி மனு

தமிழக அரசியல் செய்திகள் - Page 4 201505192025138979_traffic-ramaswamy-challenge-jayalalitha-acquittal_SECVPF
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு விதித்த தண்டனையை ரத்து செய்தும், அவரை விடுதலை செய்தும் கர்நாடக ஐகோர்ட்டு கடந்த 11-ந் தேதி தீர்ப்பு அளித்தது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி  ஒரு மனு தாக்கல் செய்தார்.அதில், கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், ஜெயலலிதா பெற்ற கடன் தொகை பற்றி தவறாகக் கணக்கிடப்பட்டுள்ளது.   இந்த தவறால் சொத்துக்குவிப்பு குறித்த விகிதாச்சாரம் அதிகமாக உள்ளது; இந்த தவறான கணக்கு மற்றும் விகிதாச்சாரத்தினால் அவர் விடுதலை பெறுவதற்கு தகுதியற்றவர்.

அவர் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட பல முறைகேடான பணப்பரிமாற்றங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அவருக்கு எதிரான மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. எனவே ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


தமிழக அரசியல் செய்திகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


தமிழக அரசியல் செய்திகள் - Page 4 Empty Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by சிவா Fri Sep 28, 2018 1:58 am

நாக்கை அறுத்துவிடுவேன் என்று கூறிய அமைச்சரின் அந்தர் பல்டி


அதிமுக ஆட்சி குறித்து தவறாக விமர்சனம் செய்பவர்களின் நாக்கை அறுத்துவிடுவேன் என்று பேசிய அமைச்சர் துரைக்கண்ணு இன்று அந்தர்பல்டியாக நாக்கு அழுகிவிடும் என்று கூறுவதற்கு பதிலாக தவறுதலாக அறுத்துவிடுவேன் என்று கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

நேற்று தஞ்சையில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழக வேளாண் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, ‘‘தமிழகத்தில் ஊழலைக் கண்டுபிடித்ததே திமுக தான். உணவு, நிலக்கரி என அனைத்திலும் ஊழல் செய்தது திமுக. அதிமுக அரசை பற்றி யாராவது தரக்குறைவாகப் பேசினால், நாக்கை அறுத்து விடுவேன்' என்று ஆவேசமாக பேசினார்.

ஒரு அமைச்சர் இவ்வாறு வரம்பு மீறி பேசியது குறித்து அனைத்து தரப்பினர்களிடம் இருந்து கண்டனக்குரல் எழுந்தது. அதிமுக அமைச்சர் ஜெயகுமார் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர்களும்
அமைச்சர் அப்படிப் பேசியிருக்கக்கூடாது என்று கூறினர்

இதனையடுத்து தமிழக அரசை பற்றி யாரேனும் குற்றம் சொன்னால், அவர்களின் நாக்கு அழுகிவிடும் என்று கூறுவதற்கு பதிலாக நாக்கை வெட்டிவிடுவேன் என தவறுதலாக கூறிவிட்டதாக அமைச்சர் துரைக்கண்ணு அந்தர் பல்டி அடித்திருக்கிறார்


தமிழக அரசியல் செய்திகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக அரசியல் செய்திகள் - Page 4 Empty Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by சிவா Fri Sep 28, 2018 2:37 am

எனக்கு தமிழக முதல்வராகும் எண்ணம் இல்லை : கனிமொழி விளக்கம்


சென்னை: எனக்கு தமிழக முதல்வராகும் எண்ணம் இல்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினரான  கனிமொழி தெரிவித்துள்ளார்.

உடலநலக்குறைவால் அவதிப்பட்டு வந்த திமுக தலைவரான கருணாநிதி கடந்த ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து முக ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்று கொண்டார். அதேபோல் கட்சிப் பொருளாளராக துரைமுருகனும், முதன்மைச் செயலாளராக டிஆர்.பாலுவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  

இந்நிலையில் எனக்கு தமிழக முதல்வராகும் எண்ணம் இல்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினரான  கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னையில் மகளிர் தொடர்பான நிகழ்வு ஒன்றில் கனிமொழி வியாழனன்று கலந்து கொண்டார். அப்போது அவரிடம் தமிழக அரசியலில் அவரின் பங்கு மற்றும் முதல்வராகும் எண்ணம் ஆகியவை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்து கனிமொழி கூறியதாவது:


முதலமைச்சராகும் எண்ணம் எனக்குத் துளியும் இல்லை. எனக்கு தில்லிஅரசியல் என்பது பழக்கமான ஒன்று. எனவே தில்லி அரசியலில் மட்டுமே எனது நாட்டம் உள்ளது.

மேலும், அரசியலில் ஆண் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. எனவே பெண்களுக்கு அதிக அளவில் பதவி வழங்க திமுகவில் வலியுறுத்துவேன்.

இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.

இப்படியெல்லாம் பேசப்படாது, நீங்கள் தான் அடுத்த முதல்வர். ஜெயலலிதா விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்ப வந்த தானைத் தலைவி வா....ழ்...க... (என்னடா சுதி குறையுது, ஓ... மப்பு இறங்கிப் போச்சா...


தமிழக அரசியல் செய்திகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக அரசியல் செய்திகள் - Page 4 Empty Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by சிவா Mon Oct 01, 2018 4:17 am


எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் எம்.ஜி.ஆர் பாடல்களை பாடி அசத்தினார்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா இன்று சென்னை நந்தனம் பகுதியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கிறது. இதனால் சென்னை முழுவது பல இடங்களுல் பிரம்மாண்டமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. தமிழகமெங்குமிலிருந்து ஏராளமாக தொண்டர்கள் சென்னையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இவ்விழாவில் 7 லட்சம் பேர் பங்கேற்கப் போகிறார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இவ்விழாவில் இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. அங்கிருந்த அமைச்சர் ஜெயக்குமாரை எம்ஜிஆர் பாடல்களை பாடுமாறு கட்சியினர் வலியுறுத்தினர்.

கட்சியினரின் வேண்டுகோளுக்கு இணங்க ஜெயக்குமார் எம்.ஜி.ஆரின் அழகிய தமிழ்மகள் இவள் என்ற பாடலை பாடினார். பின்னர் நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க பாடலை பாடினார். அங்கிருந்தவர்கள் அமைச்சரின் பாடல்களுக்கு பலத்த கரகோஷங்களை எழுப்பினர்.

அமைச்சர் ஜெயக்குமாருக்கு இப்படியொரு தனித்திறமை இருக்கிறதா என சமூக வலைதளங்களில் பலர் அவரை பாராட்டித் தள்ளி வருகின்றனர்.


தமிழக அரசியல் செய்திகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக அரசியல் செய்திகள் - Page 4 Empty Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by சிவா Mon Oct 01, 2018 4:18 am


இன்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நந்தனம் பகுதியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கிறது. இதனால், கிரீன்வேஸ் ஆலை மற்றும் நந்தனம் சாலை என அனைத்து இடத்திலும் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு ஸ்டாலின், தினகரன் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா அழைப்பிதழில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் என்னுடைய பெயரை இடம்பெறச் செய்திருக்கும் அரசியல் பண்பாட்டை மதிக்கிறேன்.

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் அரசு சார்பில் நடத்தப்பட்ட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களில், அவருடையை அருமை பெருமைகளைப் பரப்புவதை விட; எதிர்க்கட்சியான தி.மு.கழகத்தையும், குறிப்பாக எம்.ஜி.ஆர் அவர்களுடன் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நட்பு பாராட்டி மகிழ்ந்திருந்த தலைவர் கலைஞர் அவர்களையும், அவரது குடும்பத்தாரையும், கலைஞர் பெரிதும் நெருக்கமாக நேசித்த இயக்கத்தினரான உடன்பிறப்புகளையும், கடுமையாக விமர்சிப்பது ஒன்றையே முதலமைச்சரில் தொடங்கி துணை முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் முதன்மை இலக்காகக் கொண்டிருந்ததை, தமிழக மக்கள் நன்கறிவார்கள்.

முதலமைச்சர் உள்ளிட்டோரின் அந்த நாகரிகக் குறைவான அணுகுமுறையை மாண்புமிகு மக்களவை துணைச் சபாநாயகர் அவர்களுக்கு நினைவூட்டிட விரும்புகிறேன். நிறைவு விழா என்பது, இன்றைய ஆட்சியாளர்களின் மிச்சமிருக்கும் அரசியல் பயணத்திற்காக மக்கள் வரிப்பணத்தில் அரசு செலவில் நடத்தப்படும் ஆடம்பரமான முறையில் - உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், பல நூறு விளம்பர பேனர்களை பொதுப் போக்குவரத்திற்கு இடையூறாக பாதையெல்லாம் வைத்து நடத்தப்படும் விழா என்பதால், அதன் பின்னணியையும் உள்நோக்கத்தையும் புரிந்துகொண்டு, நான் அதில் பங்கேற்பதை தவிர்ப்பது நல்லது என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.

அரசு விழா என்ற பெயரில் கட்சி அரசியலுக்காகவும், இலாப நோக்கத்துடனும் எம்.ஜி.ஆரின் பெயரைப் பயன்படுத்தும் விழாக்களில் எனக்கு உடன்பாடில்லை.

அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டது கலைஞர் - எம்.ஜி.ஆர். நட்பு. அதனை அரசியலாக்காமல் நாளையாவது எம்.ஜி.ஆரின் புகழ் பாடும் விழாவாக அவரது நூற்றாண்டைக் கொண்டாட அரசினரை வலியுறுத்துகிறேன்.

என அந்த அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.


தமிழக அரசியல் செய்திகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக அரசியல் செய்திகள் - Page 4 Empty Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by சிவா Mon Oct 08, 2018 5:14 am



சென்னை: அரசியலில் நான் 8 மாத குழந்தை, சிறுபிள்ளை என நினைத்து விட வேண்டாம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கல்ந்துகொண்டு பேசியதாவது:

நான் ஆற்றாமையினால் அரசியலுக்கு வரவில்லை, ஆற்ற முடியும் என்ற நம்பிக்கையில் வந்தவன். அரசியலில் நான் 8 மாத குழந்தையாக நின்றுகொண்டிருக்கிறேன்; ஆனால் சிறுபிள்ளை என நினைத்துவிடாதீர்கள்.

பறக்கிறேன் மக்களுக்காக பறக்கிறேன்; வேட்டையாடி விளையாடுவது அல்ல என் வேலை! நான் கோழிக்குஞ்சுகளுடன் வளர்ந்த கழுகு: நான் கழுகு என்பதை மக்கள் தான் சொல்லிக்கொடுத்தார்கள்.

தமிழகத்தின் மரபணுவை மாற்ற முயற்சிக்கும் யாருடனும் கூட்டணி கிடையாது என்றும், தமிழகத்திற்கு என தனித்துவ மரபணு இருக்கிறது என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.


தமிழக அரசியல் செய்திகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக அரசியல் செய்திகள் - Page 4 Empty Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by சிவா Mon Oct 08, 2018 10:10 am



கடந்த சில நாட்களாகவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி தீவிர அரசியலில் குதித்துள்ளார். திமுக பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வது மட்டுமின்றி அவ்வப்போது தனது டுவிட்டரில் அமைச்சர்களின் ஊழல் குறித்து பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலையில் உதயநிதி கூறிய ஒரு குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி கிண்டலுடன் கூடிய ஒரு கருத்தை தெரிவித்து 'களத்தில் இறங்குங்கள் தம்பி, அப்போது தெரியும்' என்று கூறியிருந்தார்

இந்த கருத்துக்கு பதிலளித்த உதயநிதி, 'நான் எப்பவுமே களத்துல தான் இருக்கேன் வேலுமணிண்ணே. உங்கள் ஊழல் குளம் கோவையில இருப்பதற்கான ஆதாரத்தை போட்டோவா போட்டிருக்கேன். தமிழ்நாட்டில் கோவையை ஊழலுக்கே முன்னுதாரணமாக கொண்டு வந்தவர் நீங்கள்! விரைவில், நீதிமன்றத்திலும் - மக்கள் மன்றத்திலும் பதில் சொல்லத் தயாராக இருங்கள்!” என்று தெரிவித்திருந்தார். மேலும், ஆதாரத்தையும் புகைப்படத்துடன் வெளியிட்டார்.

உதயநிதி ஸ்டாலினின் டுவீட்டுக்கு பதிலளிக்கும் வகையில், “என் வேலையைப் பற்றிய ஆரோக்கியமான விமர்சனங்களை எப்போதும் வரவேற்கிறேன். ஆனால் நீங்கள் பேசியிருப்பதும், பதிவிட்டிருப்பதும் அப்பட்டமான பொய்” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. அமைச்சர் வேலுமணியும் உதயநிதியும் டுவிட்டரில் மல்லுக்கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தமிழக அரசியல் செய்திகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக அரசியல் செய்திகள் - Page 4 Empty Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by SK Mon Oct 08, 2018 10:23 am

சிவா wrote:

சென்னை: அரசியலில் நான் 8 மாத குழந்தை, சிறுபிள்ளை என நினைத்து விட வேண்டாம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கல்ந்துகொண்டு பேசியதாவது:

நான் ஆற்றாமையினால் அரசியலுக்கு வரவில்லை, ஆற்ற முடியும் என்ற நம்பிக்கையில் வந்தவன். அரசியலில் நான் 8 மாத குழந்தையாக நின்றுகொண்டிருக்கிறேன்; ஆனால் சிறுபிள்ளை என நினைத்துவிடாதீர்கள்.

பறக்கிறேன் மக்களுக்காக பறக்கிறேன்; வேட்டையாடி விளையாடுவது அல்ல என் வேலை! நான் கோழிக்குஞ்சுகளுடன் வளர்ந்த கழுகு: நான் கழுகு என்பதை மக்கள் தான் சொல்லிக்கொடுத்தார்கள்.

தமிழகத்தின் மரபணுவை மாற்ற முயற்சிக்கும் யாருடனும் கூட்டணி கிடையாது என்றும், தமிழகத்திற்கு என தனித்துவ மரபணு இருக்கிறது என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
மேற்கோள் செய்த பதிவு: 1280916

அந்த மரபணு பரிசோதனை முடிவு இதோ

தமிழக அரசியல் செய்திகள் - Page 4 PlLuSk4JQBEgH795wyon+FB_IMG_1538408225281

இது போல பேசும் அரசியல் கோமாளிகள் மற்றும் அவர்களை நம்பி நாசமாக போகும் எமாளிகலும் இருந்தால் எண்ண செய்ய


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தமிழக அரசியல் செய்திகள் - Page 4 Empty Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Oct 08, 2018 10:47 am

[தமிழகத்தின் மரபணுவை மாற்ற முயற்சிக்கும் யாருடனும் கூட்டணி கிடையாது என்றும், தமிழகத்திற்கு என தனித்துவ மரபணு இருக்கிறது என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.]
தனித்துவ மரபணு இது எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தமிழக அரசியல் செய்திகள் - Page 4 Empty Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by சிவா Tue Oct 09, 2018 3:00 am



முன்னாள் முதல்வர் கருணாநிதி மீது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின்போது பல்வேறு கட்டங்களில் அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் ஒரு வழக்கு கூட முடிவடைந்து தீர்ப்பு அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் மாதம் காலமானதை அடுத்து அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படுவதாக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமீபத்தில் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரணை செய்ய சிறப்பு நீதிமன்றத்தை தமிழக அரசு அமைத்தது. இந்த நீதிமன்றத்திற்கு கருணாநிதி மீதான அவதூறு வழக்குகள் மாற்றப்பட்டது. இந்த நிலையில் கருணாநிதி மரணம் அடைந்துவிட்டதால் அவர் மீதான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் முறையிட்டதோடு, கருணாநிதியின் இறப்பு சான்றிதழும் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி கருணாநிதி மீதானா 13 வழக்குகளையும் முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தார்.


தமிழக அரசியல் செய்திகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக அரசியல் செய்திகள் - Page 4 Empty Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by சிவா Tue Oct 09, 2018 3:01 am


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது அளிக்கப்பட வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்திருப்பது கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மறைந்த முதல்வர்கள் அண்ணாதுரை மற்றும் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென்றும், சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயரை வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது கேட்பது தவறான முன்னுதாரணம் என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


தமிழக அரசியல் செய்திகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக அரசியல் செய்திகள் - Page 4 Empty Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 13 Previous  1, 2, 3, 4, 5 ... 11, 12, 13  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum