புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_c10செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_m10செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_c10 
107 Posts - 49%
heezulia
செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_c10செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_m10செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_c10செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_m10செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_c10செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_m10செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_c10செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_m10செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_c10 
7 Posts - 3%
prajai
செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_c10செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_m10செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_c10 
3 Posts - 1%
Barushree
செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_c10செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_m10செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_c10செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_m10செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_c10செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_m10செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_c10செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_m10செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_c10செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_m10செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_c10 
234 Posts - 52%
heezulia
செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_c10செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_m10செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_c10செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_m10செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_c10செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_m10செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_c10செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_m10செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_c10 
18 Posts - 4%
prajai
செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_c10செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_m10செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_c10 
5 Posts - 1%
Barushree
செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_c10செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_m10செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_c10செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_m10செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_c10செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_m10செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_c10செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_m10செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக அரசியல் செய்திகள்


   
   

Page 13 of 13 Previous  1, 2, 3 ... 11, 12, 13

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 19, 2015 11:16 pm

First topic message reminder :

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் டிராபிக் ராமசாமி மனு

செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 201505192025138979_traffic-ramaswamy-challenge-jayalalitha-acquittal_SECVPF
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு விதித்த தண்டனையை ரத்து செய்தும், அவரை விடுதலை செய்தும் கர்நாடக ஐகோர்ட்டு கடந்த 11-ந் தேதி தீர்ப்பு அளித்தது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி  ஒரு மனு தாக்கல் செய்தார்.அதில், கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், ஜெயலலிதா பெற்ற கடன் தொகை பற்றி தவறாகக் கணக்கிடப்பட்டுள்ளது.   இந்த தவறால் சொத்துக்குவிப்பு குறித்த விகிதாச்சாரம் அதிகமாக உள்ளது; இந்த தவறான கணக்கு மற்றும் விகிதாச்சாரத்தினால் அவர் விடுதலை பெறுவதற்கு தகுதியற்றவர்.

அவர் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட பல முறைகேடான பணப்பரிமாற்றங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அவருக்கு எதிரான மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. எனவே ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.



செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 09, 2023 3:55 pm

"ஆட்சி நடத்த திமுகவிற்கு தகுதி இல்லை": சீமான்



காரைக்குடி: நாங்கள் முதன்மை மாநிலம் என்று பேசி, இன்று அத்தியாவசிய பொருட்கள் விலையை தி.மு.க., ஏற்றி விட்டது. ஆட்சி நடத்த அக்கட்சிக்கு தகுதி இல்லை என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடந்தது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து சீமான் கூறியதாவது: பெட்ரோல் டீசல் விலை உயர்வு பெரிதாக தெரிந்தது. தற்போது வெங்காயம் தக்காளி விலை பெரிதாக தெரிகிறது. நாங்கள் முதன்மை மாநிலம் என்று பேசி, இன்று அத்தியாவசிய பொருட்களின் விலையை ஏற்றி விட்டனர். இதற்கு காரணம் விவசாயத்தை கைவிட்டதுதான். விவசாய அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என முதல்வர் கூறுகிறார். அதை அவர்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆட்சி நடத்த திமுகவிற்கு தகுதி இல்லை.

5ஏக்கர் விளை நிலத்தை பறித்து ஏர்போர்ட் கட்டுகின்றனர். தமிழகத்தின் தலைநகரில் சாலைகள் மோசமாக உள்ளது. ஆனாலும் வளர்ச்சி என்கின்றனர். 50 ஆண்டுக்கும் மேலாக மாறி, மாறி 2 கட்சிகள்தான் உள்ளது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும், அதன் மூலம் ஓட்டு வாங்க வேண்டும் என்பது இல்லை. காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டும் என்பதுதான் முதன்மையாக உள்ளது.

தமிழகத்தில் 2 ஆண்டுகளை கடந்தது யுகத்தை கடந்தது போன்று உள்ளது. எல்லா இடமும் மரணம். போலீஸ் ஸ்டேஷனில் தற்கொலை. மொத்தமாக இவர்களை ஒழித்து விட்டு வேறு ஒரு அரசை கட்டமைக்க வேண்டும். மக்களுக்குள் மாற்று சிந்தனை, எழுச்சியை உருவாக்க வேண்டும். இன்னும் மக்கள் மேல் எனக்கு நம்பிக்கையில்லை.

மோடி ஆட்சியமைக்க எம்.பி.க்கள் தேவை என்றால் தற்போதைய அரசு சென்று விடும். பல கட்சிகள் சரணடைந்துள்ளன.ஆனால் நாங்கள் போராடுவோம். எங்கள் கொள்கை, கோட்பாடு வேறு. எந்த காலத்திலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடுவோம். சட்டசபை தேர்தலில் நான் சிவகங்கையில் நிற்க வாய்ப்பு இல்லை. காரைக்குடியில் நிற்க வாய்ப்பு உள்ளது. ஆயிரம் ரூபாய்க்கு கையேந்த வைத்து விட்டனர். என் காசை எடுத்து எனக்கு கொடுப்பது ஒரு நலத்திட்டமா?

தேர்தலில் அனைத்து குடும்ப அட்டைக்கும் ஆயிரம் ரூபாய் என்று கூறினார்கள். ஆனால் தற்போது தகுதி பார்த்து கொடுப்போம் என்கிறார்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு பேச்சு. ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சு. எதற்கு இந்த பொது சிவில் சட்டம். இருக்கின்ற நடைமுறையில் பிரச்சினை என்று ஏதாவது உண்டா.

பல ஆண்டுகளாக மக்களின் வழக்குகள் தேங்கி கிடக்கிறது. ஆனால் அரசியல் வழக்குகளான இரட்டை இலை யாருக்கு என்பதற்கு உடனே தீர்ப்பு கிடைக்கிறது. பொதுக்குழு தீர்மானம் செல்லுமா? செல்லாதா? என்பதற்கு உடனே தீர்ப்பு கிடைக்கிறது.

இருக்கின்ற சட்டமே எல்லாருக்கும் சமமாக இல்லை. அப்புறம் ஏன் இந்த பொது சிவில் சட்டம். ஆளுநர் அரசியல் பேசலாம். அரசியல் என்பது வாழ்வியல். அரசியல் இல்லாமல் ஆளுநர் ஆக முடியாது. அண்ணாமலையை விட கவர்னர் அதிகம் அரசியல் பேசுவதால் யார் தலைவர் என்பதில் குழப்பம் வருகிறது.

கவர்னரை சமாளிக்க முடியாமல் திணறும் முதல்வர் தற்போது கமிஷனர், தேர்தல் கமிஷனர் என எல்லாவற்றிலும் வட இந்தியர்களை நியமித்து வருகின்றார். கூட்டணி வைத்தால்தான் ஓட்டு போடுவேன் என என்னிடம் யாரும் கூறவில்லை. என்னிடம் மக்கள் கேட்பது கூட்டணி வைக்காதீர்கள் என்றுதான். எங்கள் கருத்துக்கு உகந்த கருத்துடைய கட்சி வந்தால் அது குறித்து சிந்திக்கலாம். இவ்வாறு சீமான் கூறினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 09, 2023 3:59 pm

``மக்களிடம் பணப்புழக்கம் இருப்பதால், விலைவாசி உயர்வு பாதிப்பை ஏற்படுத்தாது!"- செஞ்சி மஸ்தான்



இந்தியா முழுவதும் கடந்து சில நாள்களாக தக்காளியின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் தக்காளி விலையைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு மலிவு விலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் தக்காளியை மலிவு விலை விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்த நிலையில், சென்னை கோயம்பேடு சந்தைக்கு தக்காளியின் வரத்து குறைந்து கொண்டே வந்ததால், இன்று மீண்டும் விலை உயர்ந்திருக்கிறது.

சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்றைய தினம் தக்காளி கிலோ ரூ.120-க்கு விற்கப்பட்டது. இன்று ரூ.10 அதிகரித்து, ரூ.130-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் வருவாய் என்பது பெரிய விஷயமல்ல. இன்று அன்றாடம் கூலி தொழிலாளிகள்கூட ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார்கள்.

மக்களிடம் பணப்பழக்கத்தைக் கொண்டு வந்திருக்கிறோம். அதனால் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கிறது. வேலைவாய்ப்புகள் அதிகரித்திருப்பதால், பணப்புழக்கம் இருக்கிறது. எனவே, விலைவாசி உயர்கிற நேரத்தில் அது ஒரு பெரிய சிரமமாக மக்களுக்குத் தெரியவில்லை. வருவாய் அதிகமாக இருப்பதால் அதை வைத்து சரி செய்து கொள்கிறார்கள்.

தக்காளி சீசனுக்கு ஏற்றார்போல் விளையும் பொருள். பத்து நாள்கள்தான் சர்வசாதாரணமாக தக்காளியின் விலை ஏற்றம் இறக்கமாக இருக்கும். அதையும் கட்டுப்படுத்துவதற்காகத்தான் ரேஷன் கடை மூலமாக தக்காளி விற்பனை செய்துவருகிறோம்" என்றார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 30, 2023 7:01 pm

15+6+4+3 தி.மு.க.,விடம் கூட்டணி கட்சிகள் கோரிக்கை


தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், கடந்த தேர்தலை விட, இம்முறை அதிக தொகுதிகள் கேட்டு, குரல் கொடுக்கத் துவங்கியுள்ளன.

அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி முறிவு விவகாரம், எவ்வித சிக்கலும் இல்லாமல் சென்ற தி.மு.க., அணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனிடம், தொலைபேசியில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நலம் விசாரிக்கும் அளவுக்கு மாற்றத்தை தந்துள்ளது.

பா.ஜ.,வுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட பழனிசாமிக்கு, வலுவான கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. பா.ஜ.,வுடன் இருந்த வரை, அ.தி.மு.க.,வை எதிரியாக பார்த்த வி.சி., கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி போன்றவை, இப்போது நட்புக்கரம் நீட்டத் துவங்கியுள்ளன.

அரசியல் காற்று, திசை மாறி அடிப்பதை வாய்ப்பாக பயன்படுத்தி, தி.மு.க.,விடம் அதிக தொகுதிகள் கேட்டு, கூட்டணி கட்சிகள் கோரிக்கை விடுக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

காங்கிரஸ்


கடந்த 2019 லோக்சபா தேர்தலில், புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது. அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி முறிவுக்கு முன், இந்த 10 தொகுதிகள் கிடைத்தாலே போதும் என்ற மனநிலையில் தான் காங்கிரஸ் இருந்தது.

நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, 'வரும் தேர்தலில், ஐந்து தொகுதிகள் மட்டுமே தருவதாக தி.மு.க., கூறுகிறது' என வெளிப்படையாக புலம்பியிருந்தார்.

இப்போது, அரசியல் சூழல் மாறியிருப்பதால், 2009 லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 15 தொகுதிகள் வேண்டும் என, காங்கிரஸ் கோரிக்கை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதை உறுதிப்படுத்துவது போல, '2019 தேர்தலை விட, அதிக தொகுதிகளை, தி.மு.க.,விடம் கேட்டு பெறுவோம்' என, அடித்து சொல்கிறார் அழகிரி.

ம.தி.மு.க.,


கடந்த 2019 லோக்சபா தேர்தலில் ஈரோட்டிலும், 2021 சட்டசபை தேர்தலில் ஆறு தொகுதிகளிலும், உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க., போட்டியிட்டது.

மகனை எம்.பி.,யாக்கினால் போதும் என்றிருந்த அக்கட்சி பொதுச்செயலர் வைகோ, இப்போது விருதுநகர், திருச்சி, கடலுார், காஞ்சிபுரம், ஈரோடு, மயிலாடுதுறை ஆகிய ஆறு தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, தி.மு.க.,விடம் பட்டியல் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த ஆறு தொகுதிகளிலும் தேர்தல் பணிகளை மேற்கொள்ளுமாறு, கட்சியினரை வைகோ அறிவுறுத்திய தகவலும் வெளியாகி உள்ளது.

விடுதலை சிறுத்தைகள்


கடந்த தேர்தலில், சிதம்பரத்தில் தனி சின்னத்திலும், விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்திலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட்டது.

இந்த முறை தனி சின்னத்தில் போட்டியிடுவதில் உறுதியாக உள்ள வி.சி., தலைவர் திருமாவளவன், 13 தொகுதிகளை தேர்வு செய்து, பொறுப்பாளர்களையும் நியமித்திருக்கிறார். அந்த 13ல், நான்கு தொகுதிகள் வேண்டும் என்பதே அவரது கோரிக்கையாக இருக்கிறது.

மார்க்., கம்யூ.,


அதுபோல 2019ல் மதுரை, கோவையில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கூடுதலாக திருச்சி தொகுதியையும் கேட்கிறது.

இதனால், அனைத்து தொகுதிகளையும் கவனமுடன் ஆராய்ந்து, செல்வாக்கு குறித்த ஆதாரத்துடன் கூட்டணி கட்சிகளைக் கையாள, தி.மு.க., முடிவு செய்துள்ளது.

அதிக தொகுதிகள் கிடைக்கும்


சந்தர்ப்பவாதம், சபலங்களுக்கு காங்கிரசில் இடமில்லை. காங்கிரஸ் அணி மாறும் என்ற தகவல், அ,தி.மு.க.,வும், பா.ஜ.,வும் திட்டமிட்டு பரப்பும் வதந்தி. 'இண்டியா' கூட்டணி உடைய வேண்டும் என, அவர்களுக்கு ஆசையாக இருக்கலாம். ஆனால், எங்கள் கூட்டணி வலிமையானது.

மதம் சார்பற்ற அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் ஆற்றல், ராகுல் தலைமையிலான காங்கிரசுக்கு தான் உண்டு என்பதை மக்கள் அறிவர். இதற்கு உற்ற துணையாக இருப்பது, தி.மு.க., தலைமை. மக்கள் விரோத மோடி அரசை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை சிந்தனை தான், இந்த கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இருக்கிறது.

கூட்டணியில் தொகுதி பங்கீடு என்பது உரிய நேரத்தில் தலைவர்களால் முடிவு செய்யப்படும். கடந்த லோக்சபா தேர்தலில், ஒன்பது தொகுதிகளில் போட்டியிட்டோம். இந்த முறை அதை விட குறையும் என, யாரும் சொல்லவில்லை. அதிக தொகுதிகள் தான் எங்களுக்கு கிடைக்கும்.
- அழகிரிதமிழக காங்கிரஸ் தலைவர்

வைகோ விரும்பும் ஆறு களமிறங்குவது யாரு?


லோக்சபா தேர்தல் குறித்து கலந்தாய்வு மேற்கொள்ள, 12 மாவட்டங்களில் கூட்டம் நடத்த வேண்டும் என்றும், இந்த மாவட்டங்களில் சட்டசபை தொகுதிகள் வாரியாக, பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமிக்கும் பணியை, அக்., 30க்குள் முடிக்கும் படியும், மாவட்ட செயலர்களுக்கு வைகோ உத்தரவிட்டுள்ளார்.

உடனடியாக, தேர்தல் பணிகளுக்கான பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமிக்க வேண்டிய அவசரம் உள்ள ஈரோடு, விருதுநகர், திருச்சி, கடலுார், காஞ்சிபுரம், மயிலாடுதுறை ஆகிய லோக்சபா தொகுதிகள் பட்டியலையும் வைகோ வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து, ம.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:


மதுரையில் நடந்த கட்சி மாநாட்டில், 'நான் போட்டியிடவில்லை' என, வைகோ மகனும், கட்சி முதன்மை செயலருமான துரை அறிவித்தார். ஆனால், அவர் போட்டியிட வேண்டும் என, விருதுநகர், திருச்சி, தேனி மாவட்ட ம.தி.மு.க.,வினர் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

ஈரோடு தொகுதியில் மீண்டும் போட்டியிட, தனக்கு வாய்ப்பு தர வேண்டும் என, எம்.பி., கணேசமூர்த்தி விருப்பம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், காஞ்சிபுரத்தில் போட்டியிட்டு, இரண்டரை லட்சம் ஓட்டுகளை பெற்றிருந்த துணை பொதுச் செயலர் மல்லை சத்யாவும் களமிறங்க விரும்புகிறார்.

விருதுநகர் தொகுதியில், துணை பொதுச் செயலர் ராஜேந்திரன், மயிலாடுதுறையில், துணை பொதுச் செயலர் ஆடுதுறை முருகன், திருச்சியில் துணை பொதுச் செயலர் டாக்டர் ரொக்கையா, கடலுாரில் பொருளாளர் செந்தில் அதிபன் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.'இவங்களுக்கு ஒரு தொகுதி கொடுத்தாலே பெரிசு...' என தி.மு.க.,வினர் நகைக்கின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்



செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 02, 2023 11:41 pm

பா.ஜ.க. உடனான கூட்டணி முறிவு குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி


பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகுவதாக வெளியான அறிவிப்பு குறித்து, இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. உடனான கூட்டணி முறிவு குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், "பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது பொதுச்செயலாளரின் முடிவு அல்ல. ஒட்டுமொத்த தொண்டர்களின் முடிவு. கூட்டணி முறிவு குறித்து எடப்பாடி பழனிசாமி வாய் திறக்கவில்லை என சிலர் கூறுகிறார்கள்; அதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்," என்று தெரிவித்து உள்ளார்.

மேலும் பேசிய அவர், "ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பிரதமர் வேட்பாளரை அறிவித்த பிறகா தேர்தலை சந்திக்கின்றனர். மாநிலத்தின் உரிமையை காக்க பாராளுமன்றத் தேர்தலை அ.தி.மு.க. சந்திக்கும். தேர்தல் வந்தால் அழகாக பேசி ஏமாற்றும் அனைத்து தந்திரங்களையும் தி.மு.க. முன்னெடுக்கும்."

"மகளிருக்கு இலவச பயணம் எனக் கூறிவிட்டு சில பஸ்களுக்கு மட்டும் பிங்க் நிற பெயின்ட் அடித்துள்ளனர். கொரோனாவில் சிக்கி வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் மீது தாங்க முடியாத சுமையை தி.மு.க. அரசு சுமத்தியுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில், கொடுக்கப்படாத வாக்குறுதிகளையும் சேர்த்து நிறைவேற்றி இருக்கிறோம்," என்று தெரிவித்தார்.



செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 04, 2023 3:59 pm

ஜெயித்தால்தான் மா.செ., மந்திரி!” - கறார் ஸ்டாலின்... பதறும் நிர்வாகிகள்



நமது வேட்பாளர் தோல்வியடைந்தால், உங்களுடைய மாவட்டச் செயலாளர், மந்திரி பதவியில் நீங்கள் நீடிக்க முடியாது. சீனியர், ஜூனியர் என்றெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன். பதவி பறிக்கப்படுவது உறுதி...” சமீபத்தில் நடந்து முடிந்த தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் இப்படித்தான் கர்ஜித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அவர் கறார் காட்டியதற்கு அர்த்தமும் இருக்கிறது!

“234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தொகுதிவாரியாகப் பொறுப்பாளர்களை நியமித்திருக்கிறது தி.மு.க தலைமை. பூத் மட்டத்தில் பி.எல்.ஏ-2 ஏஜென்ட்டுகளை நியமிக்க மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தர விட்டிருந்தது. சில மாவட்டச் செயலாளர்கள் தொகுதிப் பொறுப்பாளர்களையும் மதிப்பதில்லை, பூத் ஏஜென்ட்டுகளையும் நியமிக்கவில்லை. அவர்களைக் கண்டித்துத் தான் கறாராக எச்சரித்திருக் கிறார் முதல்வர். கட்சிப் பணி செய்யாமல், வெறும் போட்டோ ஷூட் மட்டும் நடத்திக்கொண்டிருந்த நிர்வாகிகளெல்லாம் பதறித்தான் போயிருக்கிறார்கள்” என்கிறது அறிவாலய வட்டாரம். முதல்வருடைய சீற்றத்தின் பின்னணி என்ன... எங்கே, என்ன பிரச்னை... விரிவாகவே விசாரித்தோம்.

“பழைய காரணங்களை ஏன் தூக்கிட்டு வர்றீங்க?” - கடுகடுத்த முதல்வர்


தி.மு.க மாவட்டச் செயலாளர்கள், தொகுதிப் பொறுப்பாளர்கள், அமைச்சர்களுடனான இந்த ஆலோசனைக் கூட்டம் திடீரெனத்தான் ஏற்பாடாகியிருக்கிறது. `அக்டோபர் 1-ம் தேதி கூட்டம் நடைபெறும்’ என அறிவிப்பு வெளியானது முதலே தி.மு.க நிர்வாகிகளிடம் பதற்றம் தொற்றிக்கொண்டது.

கூட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் சிலர் அது குறித்துப் பேசுகையில், “சட்டமன்றத் தொகுதிகளில் பூத் ஏஜென்ட்டுகள் நியமனத்தைக் கண்காணிப்பதற்கும் தொகுதி நிலவரத்தை அறிந்து வாரம் ஒரு முறை ரிப்போர்ட் அளிக்கவும் 234 தொகுதிப் பொறுப்பாளர்களை நியமித்திருந்தது கட்சித் தலைமை. பூத் மட்டத்திலான பணி நிலவரங்கள் குறித்து விவாதிப்பதற்கு, இதுவரை நான்கு முறை ஆலோசனைக் கூட்டங்கள் நடந்திருக்கின்றன. ஐந்தாவது ஆலோசனைக் கூட்டம் அக்டோபர் 1-ம் தேதி காணொளி வாயிலாக நடந்தது. காலை 10:30 மணிக்கெல்லாம் கேமராவை ஆன் செய்துவிட்டுத் தயாரானோம். குறித்த நேரத்தில் முதல்வரும் வந்தமர்ந்தார். அவர் முகம் இறுக்கமாக இருந்தது. அப்போதே, ‘ஏதோ ஒரு சம்பவம் காத்திருக்கிறது’ என்பதை உணர்ந்துவிட்டோம்.

முதல்வர்தான் பேச்சைத் தொடங்கினார். ‘பூத் கமிட்டி அமைப்பதில் இன்னமும் சில மாவட்டச் செயலாளர்கள் சுணக்கமா இருக்கீங்க. என்ன மனோ, உங்க மாவட்டத்துல பூத் கமிட்டி நியமனம், உறுப்பினர் சேர்க்கை ஏன் இன்னும் பாக்கியிருக்கு?’ என எடுத்த எடுப்பிலேயே அமைச்சரும், கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலாளருமான மனோ தங்கராஜைப் பார்த்துக் கேட்டார். அதற்கு மனோ தங்கராஜ், ‘கடலோர மாவட்டம்கறதால பலரும் ஆழ்கடல்ல மீன்பிடிக்கப் போயிடுறாங்க தலைவரே... சிலர் கேரளாவுக்கு வேலைக்குப் போயிடுறாங்க. கமிட்டி அமைக்கவும், உறுப்பினர் சேர்க்கைக்காகவும் நம்ம கட்சி நிர்வாகிகள் போனாக்கூட யாரும் இருக்குறதில்லை. அதனாலதான், அந்தப் பணியை இன்னமும் முடிக்க முடியலை’ எனக் காரணங்களை அடுக்கினார். ‘பழைய காரணங்களையெல்லாம் ஏன் தூக்கிட்டு வர்றீங்க மனோ... நீங்க சொல்ற எந்தக் காரணமும் ஏத்துக்கற மாதிரி இல்லை. விரைவா வேலையை முடிக்கிற வழியைப் பாருங்க’ என முதல்வர் கடுகடுக்கவும், மனோவின் முகம் இருண்டுவிட்டது.

“அப்போ நான் பொய் சொல்றேனா?”


சென்னை தென்மேற்கு மாவட்டச் செயலாளர் மயிலை வேலுவைப் பார்த்து, ‘மனோதான் எல்லாரும் மீன்பிடிக்கப் போயிட்டாங்கன்னு சொல்றாரு. நீங்க என்ன காரணம் சொல்லப் போறீங்க?’ எனச் சீறவும், வேலுவுக்கு உதறல் எடுத்துவிட்டது. ‘வேலையெல்லாம் முடிஞ்சுட்டே இருக்கு தலைவரே’ எனப் பதற்றத்தில் உளறிக்கொட்டினார் மயிலை வேலு. அடுத்ததாக சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் சுதர்சனத்தின் பக்கம் முதல்வரின் பார்வை திரும்பியது. ‘உங்க மாவட்டத்துல அணிகளுக்கான நிர்வாகிகளை ஏன் இன்னும் நியமிக்கலை... எத்தனை தடவை சொல்றது...’ எனக் கடுகடுக்க, ‘சீக்கிரமே முடிச்சுடுறேன் தலைவரே... சிக்கீரமே முடிச்சுடுறேன்’ எனப் பதறினார் சுதர்சனம். சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சிற்றரசு, திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன் ஆகியோருக்கும் ‘டோஸ்’ விழுந்தது.

அடுத்ததாக சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான சேகர் பாபுவிடம் வந்தவர், ‘என்ன பாபு, உங்க மாவட்டத்துலயும் பெண்டிங் இருக்கே?’ எனக் கேட்டார். அதற்கு சேகர் பாபு, ‘தலைமை கேட்ட லிஸ்ட் எல்லாத்தையும் கொடுத்தாச்சு தலைவரே’ என பதிலளித்ததும், ‘அப்போ நான் பொய் சொல்றேனா... நீங்க கொடுத்த லிஸ்ட் முழுமையா இல்லை. தலைமைக் கழகம் சொன்னபடி, அணிகளுக்கு ஒரு மாவட்ட அமைப்பாளர், ஐந்து துணை அமைப்பாளர்களைத்தான் நீங்க பரிந்துரை பண்ணணும். ஆனால், 13 பேர் அடங்கிய பட்டியலைக் கொடுத்திருக்கீங்க. அதனாலதான், நியமனம் செய்ய முடியாமல் நிறுத்தி வெச்சுருக்காங்க. சரியான அளவுல பெயர்களைப் பரிந்துரை பண்ணுங்க’ என்றார் முதல்வர். ‘தலைமை சொன்னதை மீறி எதையும் செய்யப்போறதில்லை. விரைவிலேயே முடிச்சுடுறேன்’ என அமைதியானார் சேகர் பாபு.

சேகர் பாபு மாவட்டத்திலிருக்கும் பிரச்னைகள்தான் சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க-விலும் இருக்கின்றன. கடந்த முறை ஆலோசனைக் கூட்டம் நடந்தபோது, அரசு முறைப் பயணமாக ஜப்பானுக்குச் சென்றுவிட்டார் அந்த மாவட்டத்தின் செயலாளரும், அமைச்சருமான மா.சுப்பிரமணியன். இந்த முறை கூட்டம் நடந்தபோது, நீலகிரி பஸ் விபத்தில் உயிரிழந்த, காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் சொல்லப் போய்விட்டார். மொத்தத்தில் முதல்வரிடம் திட்டு வாங்காமல் எஸ்கேப் ஆகிவிட்டார் மா.சு.

“கட்சிதான் எனக்கு முக்கியம்... ஜெயித்தால்தான் பதவி...” - கறார் முதல்வர்!


தொடர்ந்து பேசிய முதல்வர், ‘அணி நிர்வாகிகள் நியமனத்தில் பலரும் உங்களோட குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நெருக்கமானவர்களுக்கே பொறுப்பு கொடுத்திருப்பதாக ரிப்போர்ட் கிடைச்சிருக்கு. பதவி கிடைத்தது உங்களோட பரிந்துரையால் இருக்கலாம். அது நீடிக்கணும்னா உழைக்கணும். அவங்களோட கட்சிப் பணிதான் அவங்க பதவியைக் காப்பாற்றிக் கொடுக்கும். உங்க சிபாரிசு எதுவும் காப்பாற்றாது’ எனச் சொன்னதும், சில மாவட்டச் செயலாளர்கள் முகத்தில் ஈ ஆடவில்லை.

‘எந்தவொரு தனிமனிதரையும்விடக் கட்சியும், அது அடையவேண்டிய வெற்றியும்தான் எனக்கு முக்கியம். மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட நமது திட்டங்களால் மக்கள் நம்மீது பெரிய மதிப்போடு இருக்கிறார்கள். அதை வாக்குகளாக மாற்றுவதற்கு உழையுங்கள். சட்டமன்றத் தேர்தலைவிட, இந்த நாடாளுமன்றத் தேர்தல் எனக்கு முக்கியமானது. வெற்றிக்கு உழைக்காத யாரையும் பதவியில் வைத்துக்கொள்ள நான் விரும்ப மாட்டேன். நமது வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும். ஒருவேளை தோல்வியைச் சந்தித்தால், அந்தத் தொகுதியின் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் பதவியில் நீடிக்க முடியாது. சீனியராக இருந்தாலும் சரி, ஜூனியராக இருந்தாலும் சரி... ஜெயித்தால்தான் பதவி.

234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தலைமையிலிருந்து தலா ஒரு தொகுதிப் பொறுப்பாளர் என 234 பேர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும். அவர்களை நீங்கள் நடத்தும்விதம்தான் நீங்கள் தலைமையை நடத்தும்விதம். அவர்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை எனத் தெரிந்தாலோ, அவர்களிடமிருந்து ஏதும் குற்றச்சாட்டுகள் வந்தாலோ குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் பதவியில் நீடிக்க முடியாது’ எனக் கறாராகப் பேசினார் முதல்வர்.

தி.மு.க மகளிரணி சார்பில், வரும் அக்டோபர் 14-ம் தேதி ‘மகளிர் உரிமை மாநாடு’ சென்னையில் நடைபெற விருக்கிறது. ‘இந்த மாநாட்டின் மேடையில் எந்த ஆணுக்கும் இடம் இருக்கக் கூடாது. முழுக்க முழுக்க மகளிருக்காக மகளிர் நடத்தும் மாநாடாக அது இருக்க வேண்டும்’ என்றவர், துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியைப் பார்த்து, ‘நீ எதுவும் பேசுறியா கனி?’ என்றார். ‘தலைவரே எல்லாம் பேசிட்டீங்களே...’ எனக் கனிமொழி சொல்லவும், இறுதியாக துரைமுருகனின் சில அட்வைஸ்களோடு ஆலோசனைக் கூட்டம் நிறைவுபெற்றது. முதல்வரின் வழக்கமான ஆலோசனைக் கூட்டமாக இது இருக்கவில்லை. ‘செயல்படவில்லை என்றால் ஆக்‌ஷன் உறுதி’ என முதல்வர் காட்டிய கண்டிப்பில் பலரும் ஆடித்தான் போயிருக்கிறார்கள்” என்றனர் விரிவாகவே.

அந்தரத்தில் பதவி... பதறும் நிர்வாகிகள்


கூட்டத்தில், சார்பு அணிகளுக்கு நடந்த நியமனங்கள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. அணிகளில் மாநிலப் பொறுப்பிலிருக்கும் சிலர் பணம் பெற்றுக்கொண்டு பதவிகளைத் தந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாகவும் விசாரித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ‘குற்றச்சாட்டு உறுதியானால், சம்பந்தப்பட்டவர்களின் பதவி மட்டுமல்ல, பரிந்துரைத்தவர்களின் பதவியும் பறிபோகும்’ என அவர் கடுமை காட்டியதில் பதறிப்போயிருக்கிறார்கள் நிர்வாகிகள்.

தி.மு.க-வின் மாநில நிர்வாகிகள் சிலர் பேசுகையில், “தேர்தல் நெருங்கும் சூழலில், முதல்வரின் கண்டிப்பு அவசியமானதுதான். கோவை மாவட்ட தி.மு.க-வில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் இடத்தை யார் பிடிப்பது என்பதில்தான் மாவட்டச் செயலாளர்களின் மொத்த கவனமும் இருக்கிறது.

கட்சிப் பணிகளெல்லாம் சுணக்கமாகியிருக்கின்றன. நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட அமைச்சர் ராமச்சந்திரன் ஊரில் இல்லாத நாள்களாகத் தேடித் தேடித்தான் கட்சி நிகழ்ச்சிகளை நடத்துகிறார் மாவட்டச் செயலாளர் முபாரக். ஒருவேளை அமைச்சர் நிகழ்ச்சிகளுக்கு வந்துவிட்டாலும்கூட, அவர் புகைப்படம் எதுவும் வெளியே வராததுபோல மாவட்ட ஐடி விங் நிர்வாகிகளை வைத்து அணை போட்டுவிடுகிறார். இவர்கள் இருவருக்குமிடையேயான மோதலால், மாவட்ட தி.மு.க-வில் அனல் வீசுகிறது.

மதுரை மாநகர் மாவட்டத்தில், மூத்த கட்சி உறுப்பினர்களுக்குப் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி, அமைச்சர் உதயநிதி தலைமையில் நடந்தது. அப்போது, மாநில மாணவரணித் துணைச் செயலாளர் அதலை செந்திலும், மதுரை மேயரின் கணவர் வசந்தும் மேடையில் ஏற முயலவும், மாவட்டச் செயலாளர் தளபதியின் தரப்பு அவர்களைக் கீழே இறக்கிவிட்டது. தளபதிக்கும், அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கும் இடையேயான மோதலே இதற்குக் காரணம். சென்னையில் இளைய அருணாவுக்கும் சில எம்.எல்.ஏ-க்களுக்கும் இடையே எழுந்திருக்கும் மோதல், திருப்பூரில் மேயர் தினேஷ், மாவட்டச் செயலாளர்கள் செல்வராஜ், இல.பத்மநாபன், சுற்றுச்சூழல் அணி நிர்வாகி கார்த்திகேய சிவசேனாபதி இடையே நடைபெறும் உரசல்கள் எனக் கட்சிக்குள் களேபரங்கள் ஒவ்வொரு பகுதியிலும் அனல் பறக்கின்றன.

அமைச்சர்களாக மட்டுமே இருப்பவர்களுக்கும், மாவட்டச் செயலாளர்களுக்குமிடையே மோதல் போக்கு அதிகரித்திருக்கிறது. இந்த மோதல்களையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு, கட்சிப் பணியாற்றச் சொல்லியிருக்கிறார் முதல்வர். பூத் கமிட்டி பணிகளை முடித்துவிட்டு, அதை அறிவாலயத்துக்கு நேரில் வந்து அப்டேட் செய்யவும் உத்தரவிட்டிருக்கிறார். கட்சித் தலைமைக்குக் கட்டுப்படாமல், ஆட்டம் போட்டுவந்த நிர்வாகிகளின் பதவிகள் அந்தரத்தில் தொங்க ஆரம்பித் திருக்கின்றன. பலரும் உதறலில்தான் இருக்கிறார்கள்” என்றனர்.

முதல்வரின் கறார் உத்தரவு ஒருபக்கம் தடதடக்கும் நிலையில், தி.மு.க-வில் அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் வரிசைகட்டுகின்றன. மகளிர் உரிமை மாநாடு, இளைஞரணி மாநாடு, வடக்கு மண்டலப் பயிற்சிப் பாசறைக் கூட்டம், சென்னை மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பாசறைக் கூட்டம், கட்சியின் பொதுக்குழு என அடுத்த சில மாதங்களுக்குப் பரபரப்பாகவே நகரத் திட்டமிட்டிருக்கிறது அறிவாலயம். நிகழ்ச்சிகளைக் காரணம் காட்டி, கட்சியின் அடிப்படைப் பணிகளான பூத் கமிட்டி பணி, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளை யாரும் கோட்டைவிட்டுவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் ஸ்டாலின். நாடாளுமன்றத் தேர்தலில் கோஷ்டி மோதல்களும், ஈகோ உரசல்களும் தோல்விக்குக் காரணமாக அமைந்துவிடக் கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தல் என்பது, இரண்டரை ஆண்டுக்கால ஆட்சியின் ரிசல்ட்டாகவும் பார்க்கப்படும். எனவேதான், ‘ஜெயித்தால்தான் பதவி நிலைக்கும்’ என்பது வரை கறார் காட்டிப் பேசியிருக்கிறார் ஸ்டாலின். தங்களுக்குள் முட்டி மோதிக்கொண்டிருக்கும் நிர்வாகிகள் நிலைமையையும், தங்கள் தலைவரையும் புரிந்துகொள்வார்களா அல்லது ஸ்டாலினின் உறக்கம் பறித்து டார்ச்சர் செய்வார்களா?



செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 04, 2023 7:34 pm

ஜெயித்தால்தான் பதவி.
அதுதான் நடைமுறை.
இதிலென்ன புதுமை.

குடும்பமென்றால் முதல் முறை ஜெயித்தாலே
பெரிய பதவி வரும்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 07, 2023 9:21 pm

பாஜக அலுவலகத்திற்குப் பதில் டீக்கடையை முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியினர்



2024 பாராளுமன்ற தேர்தலுக்கு பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் தயாராகிவிட்டதை காண முடிகிறது. காங்கிரஸ் கட்சியினர் மோடி பற்றியும் பாஜகவினர் ராகுல் காந்தி பற்றியும் சமூக வலைதளங்களில் கடுமையான சொற்களை வீசி விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், ராகுல் காந்தியை ராவணன் போல சித்தரித்து படம் ஒன்றை வெளியிட்டனர் பாஜகவினர்.அதை கண்டிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பாஜக அலுவலகங்களை முற்றுகையிட போவதாக அறிவித்தார் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி. இன்று காலை தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் இருக்கும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தை முற்றுகையிட காங்கிரஸ் கட்சியினர் கிளம்பி சென்றார்கள். அவர்கள் வருவதை எதிர்பார்த்து பாஜக அலுவலகத்தில் பாஜகவினர் காத்திருந்தனர்.ஆனால் காங்கிரஸ் கட்சியினருக்கு எதிர்பார்த்த அளவுக்கு நிர்வாகிகள் வரவில்லை. எனவே கேடிசி நகரில் உள்ள ஒரு டீக்கடை முன்பு அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.

பாஜக அலுவலகத்தில் காத்திருந்த நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியினர் வரட்டும் அதற்குள் ஒரு டீ குடித்து வரலாம் என்று அந்த டீக்கடைக்கு வந்தனர். அங்கு காங்கிரஸ் காரர்கள் இருப்பதை பார்த்ததும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக எதிராக கோஷமிட்டனர். பதிலுக்கு பிரதமர் மோடி ஒழிக என்று காங்கிரஸ் கட்சியினர் கோஷமிட்டனர். இரண்டு தரப்பினரையும் சமாதானப்படுத்திய போலீசார் காங்கிரஸ் கட்சியினரை அங்கேயே கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். காங்கிரஸ் கட்சியினர் மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டனர். மண்டபம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

பாஜக அலுவலகத்தை முற்றுகையிட போவதாக சொல்லிவிட்டு டீக்கடையிலேயே காங்கிரஸ் கட்சியினர் கைதாகி விட்டதால் பாஜகவிற்கு பெரிதாக வேலை எதுவும் இல்லாமல் போய்விட்டது.



செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 10, 2023 9:17 pm

இஸ்லாமிய மக்கள் மீது திடீர் பாசம் ஏன்? ஸ்டாலின் கேள்வி: கோவத்தில் வெளியேறிய இ.பி.எஸ்



நீண்ட நாள் சிறைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் மீது சட்டமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.

இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பேச வாய்ப்பளிக்கவில்லை என்று கூறி அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டபேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தமிழ்நாட்டு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டபேரவையில் இன்று நீண்ட காலமாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் ஏற்பட்டது.

”இஸ்லாமிய மக்கள் மீது ஏன் திடீர் பாசம் ? இந்த விவகாரம் தொடர்பான மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறது. தமிழக ஆளுநரை சந்தித்து அதிமுக அழுத்தம் கொடுத்திருக்கலாமே ” என்று முதல்வர் பேசினார்.

இஸ்லாமியர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று முதலமைச்சர் கூறியதற்கு நாங்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏக்கள் அனுமதி கோரினர். ஆனால் சபாநாயகர் அனுமதியளிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து பேசிய இ.பி.எஸ் “ பாபர் மசூதி இடிக்கப்பட்ட காலத்தில், தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ அதிமுக அரசு உரிய நடவடிக்கை எடுத்தது. அதுபோல் பேரரிவாளன் விடுதலைக்கு அதிமுக அரசு நடவடிக்கை எடுத்தது” என்று பேசினார்.

தீர்மானம் குறித்து அதிமுகவினருக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை என்று கூறி அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

சிறுபான்மை மக்களைக் காக்கும் ஒரே தலைவராக வலம் வந்த முதல்வருக்கு போட்டியாக எடப்பாடி பழனிசாமி வந்தால் கோபம் வரத்தானே செய்யும்..




செந்தில்_பாலாஜி - தமிழக அரசியல் செய்திகள் - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 13 of 13 Previous  1, 2, 3 ... 11, 12, 13

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக