Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனது கவிதைகள் !
+9
balakarthik
shobana sahas
விமந்தனி
Preethika Chandrakumar
Achudhan
ayyasamy ram
krishnaamma
Dr.சுந்தரராஜ் தயாளன்
M.Jagadeesan
13 posters
Page 4 of 16
Page 4 of 16 • 1, 2, 3, 4, 5 ... 10 ... 16
எனது கவிதைகள் !
First topic message reminder :
மெரீனா
=======
அதுவொரு அழகிய நிலாக் காலம்
கடற்கரை பூண்டது விழாக் கோலம்
சித்திரை மாதக் கத்திரி வெய்யிலில்
நித்திரை துறந்த இத்தரை மக்கள்
காற்று வாங்க கடற்கரை மணலில்
களிப்புடன் அமர்ந்து கடலை நோக்க
அழகிய நிலவு மெல்ல எழுந்து
அடிவா னத்தில் ஒளிக்கரம் நீட்ட
பழகிய நட்பில் பரவைக் காதலி
அலைக்கரம் கொண்டு அக்கரம் பற்றும்.
நிலவும் கடலும் நடத்தும் காதலை
உலவும் தென்றலும் உடுக்களின் தொகுதியும்
பறவைக் கூட்டமும் பலபட நின்று
மறைவாய் நோக்கி மகிழ்ச்சியைக் காட்டும்.
நடுக்கடல் தன்னில் நாவாய்க் கூட்டம்
அடுக்கிய அலையின் அன்புக் கரத்தால்
ஆட்டும் அசைவில் தன்னை மறந்து
அழகிய குழந்தை போலத் தூங்கும்.
அலைகடல் தன்னில் பரதவர் கூட்டம்
வலையினை வீசி மீன்களைப் பிடிக்க
கடற்கரை மணலில் கன்னியர் கூட்டம்
கண்வலை வீச காளையர் சிக்குவர்.
மைவிழி மாதர் மையலில் சிக்கிக்
கைப்பொருள் இழந்த காளையர் ஒருபால்
கூடிய எடையைக் குறைக்க வேண்டி
ஓடும் முதியோர் கூட்டம் ஒருபால்
குதிரை முதுகில் ஏறி அமர்ந்து
அதிர ஓட்டும் ஆடவர் ஒருபால்
கடற்கரை மணலில் சிறுகுழி தோண்டிக்
குடிநீர் விற்கும் கூட்டம் ஒருபால்
வடையும் பஜ்ஜியும் வஞ்சிர மீனும்
கடைகளில் வாங்கும் கூட்டம் ஒருபால்
கைவினைக் கலைஞர் உழைப்பினில் எழுந்த
கடல்படுப் பொருட்களின் காட்சிகள் ஒருபால்
இத்தகுக் காட்சிகள் மொத்தமும் கொண்ட
மெத்தகுக் கடற்கரை மெரீனா என்னும்
உலகின் அழகிய இரண்டாம் கடற்கரை.
மெரீனா
=======
அதுவொரு அழகிய நிலாக் காலம்
கடற்கரை பூண்டது விழாக் கோலம்
சித்திரை மாதக் கத்திரி வெய்யிலில்
நித்திரை துறந்த இத்தரை மக்கள்
காற்று வாங்க கடற்கரை மணலில்
களிப்புடன் அமர்ந்து கடலை நோக்க
அழகிய நிலவு மெல்ல எழுந்து
அடிவா னத்தில் ஒளிக்கரம் நீட்ட
பழகிய நட்பில் பரவைக் காதலி
அலைக்கரம் கொண்டு அக்கரம் பற்றும்.
நிலவும் கடலும் நடத்தும் காதலை
உலவும் தென்றலும் உடுக்களின் தொகுதியும்
பறவைக் கூட்டமும் பலபட நின்று
மறைவாய் நோக்கி மகிழ்ச்சியைக் காட்டும்.
நடுக்கடல் தன்னில் நாவாய்க் கூட்டம்
அடுக்கிய அலையின் அன்புக் கரத்தால்
ஆட்டும் அசைவில் தன்னை மறந்து
அழகிய குழந்தை போலத் தூங்கும்.
அலைகடல் தன்னில் பரதவர் கூட்டம்
வலையினை வீசி மீன்களைப் பிடிக்க
கடற்கரை மணலில் கன்னியர் கூட்டம்
கண்வலை வீச காளையர் சிக்குவர்.
மைவிழி மாதர் மையலில் சிக்கிக்
கைப்பொருள் இழந்த காளையர் ஒருபால்
கூடிய எடையைக் குறைக்க வேண்டி
ஓடும் முதியோர் கூட்டம் ஒருபால்
குதிரை முதுகில் ஏறி அமர்ந்து
அதிர ஓட்டும் ஆடவர் ஒருபால்
கடற்கரை மணலில் சிறுகுழி தோண்டிக்
குடிநீர் விற்கும் கூட்டம் ஒருபால்
வடையும் பஜ்ஜியும் வஞ்சிர மீனும்
கடைகளில் வாங்கும் கூட்டம் ஒருபால்
கைவினைக் கலைஞர் உழைப்பினில் எழுந்த
கடல்படுப் பொருட்களின் காட்சிகள் ஒருபால்
இத்தகுக் காட்சிகள் மொத்தமும் கொண்ட
மெத்தகுக் கடற்கரை மெரீனா என்னும்
உலகின் அழகிய இரண்டாம் கடற்கரை.
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: எனது கவிதைகள் !
தட்டு.
=======
தவறு செய்தால் தட்டிக் கேள் !
அது
ஆண்டவனாய் இருந்தாலும் அச்சம் கொள்ளாதே !
தட்டிக் கொடுத்து வேலை வாங்கு!
அது நீ
முதலாளி ஆவதற்கு முதல் தகுதியாகும்.
" தட்டுங்கள் திறக்கப்படும் "
என்ற
இயேசுவின் பொன்மொழியை என்றும் நினைவில் வை !
இரண்டு கைகளையும் தட்டினால்தான் ஓசை வரும்.
இது
கூட்டுறவுத் தத்துவத்தின் அரிச்சுவடியாகும்.
வருகின்ற வாய்ப்புகளை நழுவ விடாதே!
அவை உன்
வாசற்கதவை தினந்தோறும் தட்டுவதில்லை.
கொடுக்கின்ற பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காதே!
அது உன்
வெற்றிக்கு நீ போடும் முட்டுக் கட்டையாகும்.
பெண்ணுக்கு வருகின்ற வரன்களெல்லாம்
தட்டிப் போகிறதே என்று கவலை கொள்ளாதே!
கஜினியின் வெற்றிக்கு
பதினேழு முறை தோற்றதுதான் காரணம் என்பதைக்
கருத்தில் வை.
அடுத்தவன் தட்டிலே இருக்கின்ற
அறுசுவை உணவை விட
உன்னுடைய தட்டிலே இருக்கின்ற கூழே மேலானது.
=======
தவறு செய்தால் தட்டிக் கேள் !
அது
ஆண்டவனாய் இருந்தாலும் அச்சம் கொள்ளாதே !
தட்டிக் கொடுத்து வேலை வாங்கு!
அது நீ
முதலாளி ஆவதற்கு முதல் தகுதியாகும்.
" தட்டுங்கள் திறக்கப்படும் "
என்ற
இயேசுவின் பொன்மொழியை என்றும் நினைவில் வை !
இரண்டு கைகளையும் தட்டினால்தான் ஓசை வரும்.
இது
கூட்டுறவுத் தத்துவத்தின் அரிச்சுவடியாகும்.
வருகின்ற வாய்ப்புகளை நழுவ விடாதே!
அவை உன்
வாசற்கதவை தினந்தோறும் தட்டுவதில்லை.
கொடுக்கின்ற பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காதே!
அது உன்
வெற்றிக்கு நீ போடும் முட்டுக் கட்டையாகும்.
பெண்ணுக்கு வருகின்ற வரன்களெல்லாம்
தட்டிப் போகிறதே என்று கவலை கொள்ளாதே!
கஜினியின் வெற்றிக்கு
பதினேழு முறை தோற்றதுதான் காரணம் என்பதைக்
கருத்தில் வை.
அடுத்தவன் தட்டிலே இருக்கின்ற
அறுசுவை உணவை விட
உன்னுடைய தட்டிலே இருக்கின்ற கூழே மேலானது.
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: எனது கவிதைகள் !
வரும்.. ..ஆனா வராது!
=================
அளவுக்கு மீறிய செல்வம் சேர்ந்தால்
ஆனந்தம் வரும்; நிம்மதி வராது.
கலப்படம் செய்து வணிகம் செய்தால்
இலாபம் வரும்; புண்ணியம் வராது.
காப்பி அடித்து தேர்வில் வென்றால்
பட்டம் வரும்; பண்பு வராது.
வரவுக்கு மீறிய செலவு செய்தால்
வறுமை வரும்; வசந்தம் வராது.
பெற்றோர் வார்த்தையைப் பேணி நடந்தால்
வெற்றிகள் வரும்; வேதனை வராது.
சுற்றம் தம்மோடு சூழ இருந்தால்
இன்பம் வரும்; துன்பம் வராது.
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது
அழுகை வரும்; பேச்சு வராது.
கூடா நட்பினைத் தொடர விட்டால்
கேடுகள் வரும்; நன்மை வராது.
நான்கு கண்கள் சந்தித்த வேளையில்
காதல் வரும்; காமம் வராது.
அளவுக்கு மீறி பிள்ளைகள் பெற்றால்
அல்லல் வரும்; ஆனந்தம் வராது.
ஐந்து புலன்களை அடக்கிய ஒருவனுக்கு
ஞானம் வரும்; ஈனம் வராது.
திருக்குறள் நூலைத் தினமும் படித்தால்
ஏற்றம் வரும்; ஏமாற்றம் வராது.
கணபதி என்னும் கடவுளைத் தொழுதால்
கருணை வரும்; கவலை வராது.
=================
அளவுக்கு மீறிய செல்வம் சேர்ந்தால்
ஆனந்தம் வரும்; நிம்மதி வராது.
கலப்படம் செய்து வணிகம் செய்தால்
இலாபம் வரும்; புண்ணியம் வராது.
காப்பி அடித்து தேர்வில் வென்றால்
பட்டம் வரும்; பண்பு வராது.
வரவுக்கு மீறிய செலவு செய்தால்
வறுமை வரும்; வசந்தம் வராது.
பெற்றோர் வார்த்தையைப் பேணி நடந்தால்
வெற்றிகள் வரும்; வேதனை வராது.
சுற்றம் தம்மோடு சூழ இருந்தால்
இன்பம் வரும்; துன்பம் வராது.
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது
அழுகை வரும்; பேச்சு வராது.
கூடா நட்பினைத் தொடர விட்டால்
கேடுகள் வரும்; நன்மை வராது.
நான்கு கண்கள் சந்தித்த வேளையில்
காதல் வரும்; காமம் வராது.
அளவுக்கு மீறி பிள்ளைகள் பெற்றால்
அல்லல் வரும்; ஆனந்தம் வராது.
ஐந்து புலன்களை அடக்கிய ஒருவனுக்கு
ஞானம் வரும்; ஈனம் வராது.
திருக்குறள் நூலைத் தினமும் படித்தால்
ஏற்றம் வரும்; ஏமாற்றம் வராது.
கணபதி என்னும் கடவுளைத் தொழுதால்
கருணை வரும்; கவலை வராது.
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: எனது கவிதைகள் !
கவிஞர் ஜெகதீசன் அவர்களே, அத்தனை கவிதைகளும் அருமை. முத்து முத்தாய் உள்ளன. கவி மழை பொழிந்து உள்ளீர்கள். சபாஷ். மேலும் எழுதுங்கள். ரசிக்க காத்திருக்கிறோம்.
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: எனது கவிதைகள் !
எது கவிதை?
==========
கவிதையெனும் பந்தலுக்கு நான்கு தூணுண்டு
செவிக்கினிய சொற்கள் முதலாம் தூணாகும்
சந்தமெனும் ஓசையினால் மெல்லவே உள்ளத்தை
உந்துகின்ற உணர்ச்சி இரண்டாம் தூணாகும்
பருப்பின்றி சாம்பார் சுவைக்காது என்பதுபோல்
பொருட்சுவையே கவிதைக்கு மூன்றாம் தூணாகும்
தோப்புக்கு வேலியே காப்பு என்பதுபோல்
யாப்பென்னும் கட்டுறுதி நான்காம் தூணாகும்
இந்நான்கு தூண்களிலே ஒன்று பழுதெனினும்
சிங்காரக் கவிப்பந்தல் நில்லாது சரிந்திடுமே!
==========
கவிதையெனும் பந்தலுக்கு நான்கு தூணுண்டு
செவிக்கினிய சொற்கள் முதலாம் தூணாகும்
சந்தமெனும் ஓசையினால் மெல்லவே உள்ளத்தை
உந்துகின்ற உணர்ச்சி இரண்டாம் தூணாகும்
பருப்பின்றி சாம்பார் சுவைக்காது என்பதுபோல்
பொருட்சுவையே கவிதைக்கு மூன்றாம் தூணாகும்
தோப்புக்கு வேலியே காப்பு என்பதுபோல்
யாப்பென்னும் கட்டுறுதி நான்காம் தூணாகும்
இந்நான்கு தூண்களிலே ஒன்று பழுதெனினும்
சிங்காரக் கவிப்பந்தல் நில்லாது சரிந்திடுமே!
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: எனது கவிதைகள் !
திருக்குறளில் ஹைக்கூ கூறுகள்
===================================
திருக்குறள் :
==========
நீங்கின் தெறூவும் குறுகுங்கால் தண்என்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள் .( புணர்ச்சி மகிழ்தல் -1104 )
ஹைக்கூ ;
=========
நெருங்கினால் ஜில்லென்றிருக்கும்!
விலகினால் சுட்டெரிக்கும் வினோத நெருப்பு !
-காதல்.
===================================
திருக்குறள் :
==========
நீங்கின் தெறூவும் குறுகுங்கால் தண்என்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள் .( புணர்ச்சி மகிழ்தல் -1104 )
ஹைக்கூ ;
=========
நெருங்கினால் ஜில்லென்றிருக்கும்!
விலகினால் சுட்டெரிக்கும் வினோத நெருப்பு !
-காதல்.
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: எனது கவிதைகள் !
திருக்குறள் :
===========
இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. ( குறிப்பறிதல்- 1091 )
ஹைக்கூ :
=========
நோயும் தந்து அதற்குரிய
மருந்தும் கொடுக்கும் அதிசய மருத்துவர் !
- காதலி
===========
இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. ( குறிப்பறிதல்- 1091 )
ஹைக்கூ :
=========
நோயும் தந்து அதற்குரிய
மருந்தும் கொடுக்கும் அதிசய மருத்துவர் !
- காதலி
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: எனது கவிதைகள் !
திருக்குறள் :
===========
தன்னைத்தான் காக்கின் சினம்காக்க ; காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம். ( வெகுளாமை- 305 )
ஹைக்கூ :
=========
உடல் வளர்த்தேனே ! உயிர் வளர்த்தேனே !
உன்னையும் வளர்த்ததால் , உயிர் இழந்தேனே !
- சினம்
===========
தன்னைத்தான் காக்கின் சினம்காக்க ; காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம். ( வெகுளாமை- 305 )
ஹைக்கூ :
=========
உடல் வளர்த்தேனே ! உயிர் வளர்த்தேனே !
உன்னையும் வளர்த்ததால் , உயிர் இழந்தேனே !
- சினம்
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: எனது கவிதைகள் !
திருக்குறள் :
===========
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. ( ஈகை-226 )
ஹைக்கூ :
==========
சேர்த்த பொருளைப் பாதுகாப்பாக
சேமித்து வைக்க சிறந்த வங்கி
- பசித்தவன் வயிறு.
===========
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. ( ஈகை-226 )
ஹைக்கூ :
==========
சேர்த்த பொருளைப் பாதுகாப்பாக
சேமித்து வைக்க சிறந்த வங்கி
- பசித்தவன் வயிறு.
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: எனது கவிதைகள் !
திருக்குறள் :
===========
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு. ( வாய்மை- 299 )
ஹைக்கூ :
=========
ஆயிரம் வாட் பல்பைக் காட்டிலும்
அதிக ஒளியைத் தருவது
-உண்மை.
===========
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு. ( வாய்மை- 299 )
ஹைக்கூ :
=========
ஆயிரம் வாட் பல்பைக் காட்டிலும்
அதிக ஒளியைத் தருவது
-உண்மை.
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: எனது கவிதைகள் !
திருக்குறள் :
===========
யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. ( அடக்கமுடைமை -127 )
ஹைக்கூ :
==========
அணுகுண்டைக் காட்டிலும்
ஆபத்தான ஆயுதம்
- நாக்கு.
===========
யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. ( அடக்கமுடைமை -127 )
ஹைக்கூ :
==========
அணுகுண்டைக் காட்டிலும்
ஆபத்தான ஆயுதம்
- நாக்கு.
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Page 4 of 16 • 1, 2, 3, 4, 5 ... 10 ... 16
Similar topics
» எனது கவிதைகள் ...
» எனது கவிதைகள்
» எனது கவிதைகள் - பி எம் கமால்.
» எனது ஹைக்கூ கவிதைகள் !!
» எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு)
» எனது கவிதைகள்
» எனது கவிதைகள் - பி எம் கமால்.
» எனது ஹைக்கூ கவிதைகள் !!
» எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு)
Page 4 of 16
Permissions in this forum:
You cannot reply to topics in this forum