புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 14:36

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:38

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 13:02

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது கவிதைகள் ! - Page 13 I_vote_lcapஎனது கவிதைகள் ! - Page 13 I_voting_barஎனது கவிதைகள் ! - Page 13 I_vote_rcap 
37 Posts - 45%
heezulia
எனது கவிதைகள் ! - Page 13 I_vote_lcapஎனது கவிதைகள் ! - Page 13 I_voting_barஎனது கவிதைகள் ! - Page 13 I_vote_rcap 
23 Posts - 28%
mohamed nizamudeen
எனது கவிதைகள் ! - Page 13 I_vote_lcapஎனது கவிதைகள் ! - Page 13 I_voting_barஎனது கவிதைகள் ! - Page 13 I_vote_rcap 
6 Posts - 7%
வேல்முருகன் காசி
எனது கவிதைகள் ! - Page 13 I_vote_lcapஎனது கவிதைகள் ! - Page 13 I_voting_barஎனது கவிதைகள் ! - Page 13 I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
எனது கவிதைகள் ! - Page 13 I_vote_lcapஎனது கவிதைகள் ! - Page 13 I_voting_barஎனது கவிதைகள் ! - Page 13 I_vote_rcap 
4 Posts - 5%
Raji@123
எனது கவிதைகள் ! - Page 13 I_vote_lcapஎனது கவிதைகள் ! - Page 13 I_voting_barஎனது கவிதைகள் ! - Page 13 I_vote_rcap 
2 Posts - 2%
prajai
எனது கவிதைகள் ! - Page 13 I_vote_lcapஎனது கவிதைகள் ! - Page 13 I_voting_barஎனது கவிதைகள் ! - Page 13 I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
எனது கவிதைகள் ! - Page 13 I_vote_lcapஎனது கவிதைகள் ! - Page 13 I_voting_barஎனது கவிதைகள் ! - Page 13 I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
எனது கவிதைகள் ! - Page 13 I_vote_lcapஎனது கவிதைகள் ! - Page 13 I_voting_barஎனது கவிதைகள் ! - Page 13 I_vote_rcap 
2 Posts - 2%
Srinivasan23
எனது கவிதைகள் ! - Page 13 I_vote_lcapஎனது கவிதைகள் ! - Page 13 I_voting_barஎனது கவிதைகள் ! - Page 13 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனது கவிதைகள் ! - Page 13 I_vote_lcapஎனது கவிதைகள் ! - Page 13 I_voting_barஎனது கவிதைகள் ! - Page 13 I_vote_rcap 
159 Posts - 41%
ayyasamy ram
எனது கவிதைகள் ! - Page 13 I_vote_lcapஎனது கவிதைகள் ! - Page 13 I_voting_barஎனது கவிதைகள் ! - Page 13 I_vote_rcap 
152 Posts - 39%
mohamed nizamudeen
எனது கவிதைகள் ! - Page 13 I_vote_lcapஎனது கவிதைகள் ! - Page 13 I_voting_barஎனது கவிதைகள் ! - Page 13 I_vote_rcap 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
எனது கவிதைகள் ! - Page 13 I_vote_lcapஎனது கவிதைகள் ! - Page 13 I_voting_barஎனது கவிதைகள் ! - Page 13 I_vote_rcap 
21 Posts - 5%
Rathinavelu
எனது கவிதைகள் ! - Page 13 I_vote_lcapஎனது கவிதைகள் ! - Page 13 I_voting_barஎனது கவிதைகள் ! - Page 13 I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
எனது கவிதைகள் ! - Page 13 I_vote_lcapஎனது கவிதைகள் ! - Page 13 I_voting_barஎனது கவிதைகள் ! - Page 13 I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எனது கவிதைகள் ! - Page 13 I_vote_lcapஎனது கவிதைகள் ! - Page 13 I_voting_barஎனது கவிதைகள் ! - Page 13 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
எனது கவிதைகள் ! - Page 13 I_vote_lcapஎனது கவிதைகள் ! - Page 13 I_voting_barஎனது கவிதைகள் ! - Page 13 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது கவிதைகள் !

Page 13 of 16 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15, 16  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat 16 May 2015 - 22:08

First topic message reminder :

மெரீனா
=======
அதுவொரு அழகிய நிலாக் காலம்
கடற்கரை பூண்டது விழாக் கோலம்
சித்திரை மாதக் கத்திரி வெய்யிலில்
நித்திரை துறந்த இத்தரை மக்கள்

காற்று வாங்க கடற்கரை மணலில்
களிப்புடன் அமர்ந்து கடலை நோக்க
அழகிய நிலவு மெல்ல எழுந்து
அடிவா னத்தில் ஒளிக்கரம் நீட்ட
பழகிய நட்பில் பரவைக் காதலி
அலைக்கரம் கொண்டு அக்கரம் பற்றும்.

நிலவும் கடலும் நடத்தும் காதலை
உலவும் தென்றலும் உடுக்களின் தொகுதியும்
பறவைக் கூட்டமும் பலபட நின்று
மறைவாய் நோக்கி மகிழ்ச்சியைக் காட்டும்.

நடுக்கடல் தன்னில் நாவாய்க் கூட்டம்
அடுக்கிய அலையின் அன்புக் கரத்தால்
ஆட்டும் அசைவில் தன்னை மறந்து
அழகிய குழந்தை போலத் தூங்கும்.

அலைகடல் தன்னில் பரதவர் கூட்டம்
வலையினை வீசி மீன்களைப் பிடிக்க
கடற்கரை மணலில் கன்னியர் கூட்டம்
கண்வலை வீச காளையர் சிக்குவர்.

மைவிழி மாதர் மையலில் சிக்கிக்
கைப்பொருள் இழந்த காளையர் ஒருபால்
கூடிய எடையைக் குறைக்க வேண்டி
ஓடும் முதியோர் கூட்டம் ஒருபால்
குதிரை முதுகில் ஏறி அமர்ந்து
அதிர ஓட்டும் ஆடவர் ஒருபால்
கடற்கரை மணலில் சிறுகுழி தோண்டிக்
குடிநீர் விற்கும் கூட்டம் ஒருபால்
வடையும் பஜ்ஜியும் வஞ்சிர மீனும்
கடைகளில் வாங்கும் கூட்டம் ஒருபால்
கைவினைக் கலைஞர் உழைப்பினில் எழுந்த
கடல்படுப் பொருட்களின் காட்சிகள் ஒருபால்
இத்தகுக் காட்சிகள் மொத்தமும் கொண்ட
மெத்தகுக் கடற்கரை மெரீனா என்னும்
உலகின் அழகிய இரண்டாம் கடற்கரை.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri 19 Jun 2015 - 12:09

நன்றி ரமணியன் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Sat 20 Jun 2015 - 18:52

சில்லரை கேட்டுத் தொந்தரவு செய்பவன்
பிச்சைக்காரன் மட்டுமல்ல
கண்டக்டரும்தான் ! எனது கவிதைகள் ! - Page 13 3838410834 எனது கவிதைகள் ! - Page 13 3838410834 எனது கவிதைகள் ! - Page 13 3838410834

மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat 20 Jun 2015 - 19:11

ஈகரைச்செல்வி wrote:சில்லரை கேட்டுத் தொந்தரவு செய்பவன்
பிச்சைக்காரன் மட்டுமல்ல
கண்டக்டரும்தான் ! எனது கவிதைகள் ! - Page 13 3838410834 எனது கவிதைகள் ! - Page 13 3838410834 எனது கவிதைகள் ! - Page 13 3838410834
எனது கவிதைகள் ! - Page 13 3838410834

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 21 Jun 2015 - 10:51

ஈகரைச்செல்வி wrote:சில்லரை கேட்டுத் தொந்தரவு செய்பவன்
பிச்சைக்காரன் மட்டுமல்ல
கண்டக்டரும்தான் ! எனது கவிதைகள் ! - Page 13 3838410834 எனது கவிதைகள் ! - Page 13 3838410834 எனது கவிதைகள் ! - Page 13 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1146378

அருமை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon 22 Jun 2015 - 14:22

கடன்
=======
கடன் இருப்பதால் எனைமணக்க
உடன்பாடு இல்லையென
உரைக்கும் காதலியே!

கதிரவனிடம் இருந்து கடன் வாங்கித்தானே
வெண்ணிலவு தண்ஒளியைத் தருகிறது!

மேகத்திடம் இருந்து கடன் வாங்கித்தானே நம்முடைய
தாகம் தணிக்கத் தண்ணீரைத் தருகிறது பூமி!

கடன் வாங்கும் கலையை பள்ளியிலே ஆசிரியர்கள்
கடன் வாங்கிக் கழித்தலில் கற்றுக் கொடுக்கவில்லையா?

காப்பிப்பொடியும் சர்க்கரையும் பக்கத்து வீட்டினிலே
கடன்வாங்கி அத்துடன் மிதமாகப் பால்சேர்த்து
சாப்பிடும் காப்பியிலே சுவையே அலாதி!

இந்தியத் திருநாடு இயங்குவதே கடனால்தான்
சிந்தித்து செயல்படுவாய் சிறியேனின் கடன் பொறுத்து
ஆட்கொண்டு என்னை அரவணைத்தல் உன் கடனே!

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon 22 Jun 2015 - 14:50

சுருட்டல் !
===========
நேபாளத்தை சுருட்டிய பூகம்பமே !
இந்தியாவை உன்னால் எதுவும்
செய்ய முடியாது !

இந்திய அரசியல் வாதிகள்
நாங்கள் இருக்கும் வரையில்
இந்தியாவை யாராலும்
சுருட்ட முடியாது !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed 24 Jun 2015 - 21:44

ஆண்டவன் சொன்ன " அவுட் "
==============================
எம்பி எகிறி வந்த பந்து
...எழுந்து வந்து நெற்றிப் பொட்டில்
தம்பி ஹியூசின் தலையைத் தாக்க
...தளர்ந்து அவனும் களத்தில் வீழ
அம்பயர் ஏதும் சொல்லும் முன்னே
...ஆண்டவன் சொன்னான் " அவுட் " என்று
பம்மி அழுதனர் உலக மாந்தர்
...பறந்து போன உயிரைக் கண்டு.

இந்தத் துயரம் ஓயும் முன்னே
...இஸ்ரேல் நாட்டின் ஆஷ்டாட் நகரில்
பந்து ஒன்று பறந்து வந்து
...பலமாய் அம்பயர் கழுத்தைத் தாக்க
நொந்து வலியின் வேதனை மீதுற
...நொடியில் விட்டனன் உயிரை ஆங்கே
சிந்திய கண்ணீர் காயும் முன்னே
...சிரித்துக் களித்தனன் எமனும் ஆங்கே.

விதிவந்து ஒருவன் நோயில் வீழ்ந்து
...விண்ணுல கடைதல் ஏற்புடைத் தாகும்
அதுவன்றி இதுபோல் அடிபட்டு ஒருவன்
...அகால மரணம் அடைதல் தகுமோ ?
மதியுடை மாந்தர் சிந்திப் பீரே ?
...மனித உயிரென்ன ஈயா ? கொசுவா ?
புதிதாய் விதிகள் வகுத்திடல் வேண்டும்
...புனித உயிர்களைக் காத்திடல் வேண்டும்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed 24 Jun 2015 - 21:47

சந்தை மனிதர்கள் !
===================
கண்கள் பெரிதானால் முட்டைக்கண் என்பார்கள்
மண்பார்த்து நடந்தால் கோழை என்பார்கள்
மூக்கு பெரிதானால் குடைமிளகாய் என்பார்கள்
நாக்கு பெரிதானால் வாயாடி என்பார்கள்
கறுப்பு நிறமென்றால் கருப்பாயி என்பார்கள்
மறுத்துப் பேசினால் திமிர்பிடித்தவள் என்பார்கள்
படிப்பு அதிகமெனில் கர்வி என்பார்கள்
படிப்பு இல்லையெனில் கைநாட்டு என்பார்கள்
குள்ளமாய் இருந்தாலோ " குள்ளி " என்பார்கள்
மெல்ல நடந்தாலோ " நொண்டி " என்பார்கள்
இந்தக் குறையெல்லாம் திருமணச் சந்தையிலே
வந்தவழி போகுமடா கோடிகள் கொடுத்தாலே!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed 24 Jun 2015 - 21:50

ஆடிப்பெருக்கு
================
ஆடிப் பெருக்கினிலே ஓடிவரும் தாயேஉன்
......அழகைக் காண்பதற்கே ஆயிரம் கண்வேண்டும்
வாடிய தமிழகத்தில் வளம்சேர்க்க வந்தவளே
......வழிபட்டு நிற்போர்க்கு வரந்தந்து காப்பவளே
கூடியே உன்கரையில் கொண்டாட வந்திட்டோம்
.....குலம்காக்க வந்தவளே கொண்டானின் நலம்காக்க
நாடியே வந்துன்னை வேண்டி நிற்கின்றோம்
......நாங்கள் சுமங்கலியாய் இருந்திட அருள்வாயே !

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed 24 Jun 2015 - 21:54

காக்கையும் செத்த எலியும்.
============================
காக்கையொன்று இரைதேடி கானகத்தின் மரத்திலே
யாக்கையெங்கும் வாடியே எதிலும் நாட்டமின்றியே
உண்பதற்கு ஏற்றதோர் உறுபொருள் தேடியே
நண்பகல் வேளையில் நாப்புலற அக்காக்கை
கத்திகத்தி ஓய்ந்தது கானகத்தின் நடுவிலே
செத்தஎலி பார்த்தது;ஜென்மம் கடைத்தேறிய
மகிழ்ச்சியினால் துள்ளியே மரத்தினின்று இறங்கியே
பகிர்ந்துண்ணும் எண்ணத்தில் பக்கத்தில் சென்றதே !
அழுகிவிட்ட எலியதனை அலகினால் கவ்வியே
நழுவாமல் அக்காக்கை நடுவானில் பறக்கையிலே

கழுகுஒன்று கண்டதே! கண்டவுடன் வாயிலே  
ஒழுகுகின்ற எச்சிலும் ஓயாமல் வந்ததே!
காக்கைவாய் எலியதனைக் கவர்ந்துண்ணும் எண்ணத்தில்
தூக்கியஇரு காலுடனே துரத்தியே சென்றதே!
தாக்கவரும் கழுகதனைத் தன்னுடைய கண்களால்
காக்கையும் கண்டதே கண்ணில்பயம் கொண்டதே!
மூச்சுமுட்டப் பறந்ததே முடியவில்லை காக்கையால்
"போச்சுஇன்று என்னுயிர் போதுமிந்த வாழ்க்கை " என
நலிவுற்ற உடலிலே நடுக்கமும் தோன்றவே
எலியைவிட்ட காக்கை ஏமாற்றம் கொண்டதே!

விழுந்துவிட்ட எலியினை விரைவாகக் கால்களால்
கழுகுகொத்திச் சென்றதால் காக்கையும் தப்பியதே!

ஆசையென்னும் எலியினை அக்காக்கை நாடியதால்
துன்பமென்னும் கழுகு துரத்தியே வந்ததுவே!
எலியைவிட்டக் காக்கைக்கு ஏமாற்றம் வந்தாலும்
பலியினின்று தப்பியதே!பதட்டமும் குறைந்ததே!

ஆசையென்னும் பேயினுக்கு அடிமையாகும் போதிலே
மாசுவந்து சேருமே மனதுதடு மாறுமே!
ஐயன்திரு வள்ளுவனும் போதிமரப் புத்தனும்
அன்றுசொன்ன வார்த்தையை நெஞ்சிலே நிறுத்தினால்
குன்றைஒத்த துன்பமும் உன்னைவிட்டு நீங்குமே!

Sponsored content

PostSponsored content

Page 13 of 16 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15, 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக