ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது கவிதைகள் !

+9
balakarthik
shobana sahas
விமந்தனி
Preethika Chandrakumar
Achudhan
ayyasamy ram
krishnaamma
Dr.சுந்தரராஜ் தயாளன்
M.Jagadeesan
13 posters

Page 2 of 16 Previous  1, 2, 3 ... 9 ... 16  Next

Go down

எனது கவிதைகள் ! - Page 2 Empty எனது கவிதைகள் !

Post by M.Jagadeesan Sat May 16, 2015 8:38 pm

First topic message reminder :

மெரீனா
=======
அதுவொரு அழகிய நிலாக் காலம்
கடற்கரை பூண்டது விழாக் கோலம்
சித்திரை மாதக் கத்திரி வெய்யிலில்
நித்திரை துறந்த இத்தரை மக்கள்

காற்று வாங்க கடற்கரை மணலில்
களிப்புடன் அமர்ந்து கடலை நோக்க
அழகிய நிலவு மெல்ல எழுந்து
அடிவா னத்தில் ஒளிக்கரம் நீட்ட
பழகிய நட்பில் பரவைக் காதலி
அலைக்கரம் கொண்டு அக்கரம் பற்றும்.

நிலவும் கடலும் நடத்தும் காதலை
உலவும் தென்றலும் உடுக்களின் தொகுதியும்
பறவைக் கூட்டமும் பலபட நின்று
மறைவாய் நோக்கி மகிழ்ச்சியைக் காட்டும்.

நடுக்கடல் தன்னில் நாவாய்க் கூட்டம்
அடுக்கிய அலையின் அன்புக் கரத்தால்
ஆட்டும் அசைவில் தன்னை மறந்து
அழகிய குழந்தை போலத் தூங்கும்.

அலைகடல் தன்னில் பரதவர் கூட்டம்
வலையினை வீசி மீன்களைப் பிடிக்க
கடற்கரை மணலில் கன்னியர் கூட்டம்
கண்வலை வீச காளையர் சிக்குவர்.

மைவிழி மாதர் மையலில் சிக்கிக்
கைப்பொருள் இழந்த காளையர் ஒருபால்
கூடிய எடையைக் குறைக்க வேண்டி
ஓடும் முதியோர் கூட்டம் ஒருபால்
குதிரை முதுகில் ஏறி அமர்ந்து
அதிர ஓட்டும் ஆடவர் ஒருபால்
கடற்கரை மணலில் சிறுகுழி தோண்டிக்
குடிநீர் விற்கும் கூட்டம் ஒருபால்
வடையும் பஜ்ஜியும் வஞ்சிர மீனும்
கடைகளில் வாங்கும் கூட்டம் ஒருபால்
கைவினைக் கலைஞர் உழைப்பினில் எழுந்த
கடல்படுப் பொருட்களின் காட்சிகள் ஒருபால்
இத்தகுக் காட்சிகள் மொத்தமும் கொண்ட
மெத்தகுக் கடற்கரை மெரீனா என்னும்
உலகின் அழகிய இரண்டாம் கடற்கரை.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down


எனது கவிதைகள் ! - Page 2 Empty Re: எனது கவிதைகள் !

Post by M.Jagadeesan Tue May 19, 2015 8:42 pm

ஆண் பெண் நட்பு
==============
பெண்ணுடன் பெண்ணும் ஆணுடன் ஆணும்
...பேசிக் கொள்வதை ஏற்கும் உலகம்
பெண்ணும் ஆணும் பேசிக் கொண்டால்
..." பிறந்தது காதல் " என்பது சரியா ?
மண்ணுல காண்ட வள்ளல் அதியனும்
...மாண்புறு கிழவி ஒளவைப் பாட்டியும்
கொண்ட நட்பு ஆண் பெண் பேதம்
...கடந்த நட்பின் சாட்சி அன்றோ ?

துரியனும் கர்ணனும் கொண்ட நட்பு
...தூய நட்பின் இலக்கணம் ஆகும்
ஒருநாள் கர்ணனும் துரியனின் மனைவியும்
...பெருகிய நட்பில் தாயம் ஆடிட
அருகினில் கணவனின் வருகையைக் கண்டு
...அம்மட மாது சற்றே எழுந்திட
" இரு இரு " என்றே அவள் கைபற்றி
...இழுத்த கர்ணனின் செயலைக் கண்டு

சிரித்தனன் துரியன் தரையில் ஆங்கே
...சிதறிக் கிடந்த முத்தைக் குனிந்து
பொறுக்கி எடுத்தவன் கர்ணனை நோக்கி
...எடுக்கவோ அன்றிக் கோக்கவோ என்ற
அரிய மாண்பினைக் கவியில் வடித்திட
...ஆயிரம் பக்கம் போதா தன்றோ !
தெரியச் செய்வோம் உண்மை நட்பு
...ஆண்பெண் பேதம் கடந்தது என்றே !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எனது கவிதைகள் ! - Page 2 Empty Re: எனது கவிதைகள் !

Post by M.Jagadeesan Wed May 20, 2015 8:26 am

சாணைத் தொழிலாளி.
================
சாணைப் பிடிக்கும் மனிதன் ஒருவன்
வீணாய் தெருவில் அலைந்து திரிந்தான்
வத்திப் போன வயிறும் மார்பும்
முத்திப் போன வறுமையைக் காட்ட
முதுகில் சுமந்த இயந்திரம் தன்னை
மெதுவாய்க் கீழே இறக்கி வைத்தான்

பண்டிகை நாளாம் தீபத் திருநாள்
அண்டி வருகின்ற தருணம் தன்னில்
சாணைப் பிடிக்கும் இயந்திரம் தன்னில்
வானில் மின்னும் மின்னல் போல
எண்டிசை பறக்கும் பொறிதனைக் காண
மண்டினர் சிறுவர் குழாத்துடன் ஆங்கே

நாக்குத் தள்ளிய பாட்டி ஒருத்தி
பாக்கு வெட்டும் கருவியைத் தந்து
பதமாய்ப் பாக்கை வெட்டும் வண்ணம்
இதமாய்ச் சாணைப் பிடிக்கச் சொன்னாள்.

அடுத்த வீட்டு அலர்மேல் மாமி
உடுத்திய பட்டுச் சேலை மின்ன
கையில் அருவா மனையை ஏந்தி
" வையடா " சாணை என்றே சொன்னாள்.

கொடுவா மீசை கோவிந்த சாமி
அடுத்து சாணைப் பிடிக்க வந்தான்.
மீசை வெட்டும் கத்திரி தன்னை
ஆசை உடனே அவன்கை கொடுத்தான்.

வெட்டுக் குத்துப் பழிக்கு அஞ்சா
கட்டுடல் கொண்ட காளை ஒருவன்
பட்டாக் கத்தி ஒன்றைக் கொடுத்து
சிட்டாய் சாணைப் பிடிக்கச் சொன்னான்.

பல்லுக் கட்டிய கிழவன் ஒருவன்
பல்லு செட்டைக் கழற்றிக் கொடுத்து
உணவை நன்றாய் மெல்லும் வண்ணம்
சாணைப் பிடித்துத் தருவாய் என்றான்.

.கிழிந்த ஆடையும் மெலிந்த உடலும்
அழிந்த இளமையும் அவல முகமும்
உப்பிய வயிறும் உதிர்ந்த முடியும்
கப்பிய வறுமையும் கண்ணில் தோன்ற
பைத்தியம் ஒருவன் அவ்விடம் போந்து
"முட்டாள் என்றே உலகோர் என்னை
திட்டித் தீர்த்தே தினமும் மகிழ்வார்
சாணைப் பிடிக்கும் கருவியில் எந்தன்
ஊனம் மிகுந்து மழுங்கிய அறிவை
அழுக்குப் போக அழுந்தத் தேய்த்து
கூரிய அறிவை சீருடன் ஆக்கி
குவலயம் என்னை அறிவன் என்றே
செவியில் கேட்க சொல்லச் செய்வாய்!
என்றலும்
அவ்வுரை கேட்ட சாணை மனிதன்
செய்வ தறியாது திகைத்து நிற்க
பைத்தியம் அவனைத் தொட்டு இழுத்து
வைத்தியம் பார்க்க அனுப்பினர் ஆங்கே.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எனது கவிதைகள் ! - Page 2 Empty Re: எனது கவிதைகள் !

Post by Achudhan Wed May 20, 2015 1:55 pm

மெரினா கவிதை அருமை.மிக நன்றாக இருக்கிறது. மெரினாவை அப்படியே கண் முன்னால் காட்டி விட்டீர்கள். அதுபோக உங்கள் மூலம் 'பரவை' என்றொரு சொல் தெரிந்து கொண்டேன்.
Achudhan
Achudhan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 14/05/2015

Back to top Go down

எனது கவிதைகள் ! - Page 2 Empty Re: எனது கவிதைகள் !

Post by M.Jagadeesan Wed May 20, 2015 2:15 pm

நன்றி அச்சுதன் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எனது கவிதைகள் ! - Page 2 Empty Re: எனது கவிதைகள் !

Post by M.Jagadeesan Wed May 20, 2015 2:23 pm

பெரிய பணக்காரன்.
====================
வசிப்பதற்கு சிறிய வீடுஒன்று உண்டு
பசிஎடுத்துச் சாப்பிட வயிறுண்டு
உடுப்பதற்கு எளிய ஆடை உண்டு
படுத்தவுடன் வருகின்ற தூக்கம் உண்டு
அடுத்தவனைக் கெடுக்காத மனம் உண்டு
எடுத்தவினை முடிக்கின்ற மகன் உண்டு
நோய்நொடி இல்லாத உடல் உண்டு
தாயினும் தயைபுரியும் மனைவி உண்டு
கடன்பட்டு வாழாத வாழ்க்கை உண்டு
போதுமென்ற பொன்னான மனம் உண்டு
நானே பணியாள்; நானே எஜமான்
நானே இவ்வுலகின் பெரிய பணக்காரன்.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எனது கவிதைகள் ! - Page 2 Empty Re: எனது கவிதைகள் !

Post by M.Jagadeesan Thu May 21, 2015 8:58 am

நன்னெறி
=======
வாய்மை பேசல் வாய்க்கு அழகு
தூய்மை பேணல் மேனிக் ( கு ) அழகு.
தாய்மை உறுதல் பெண்ணுக் ( கு ) அழகு
சேய்மை பேணல் உறவுக் ( கு ) அழகு.

தாயை மிஞ்சிய தெய்வம் இல்லை
பாயை மிஞ்சிய படுக்கை இல்லை
வாயை மிஞ்சிய பகைவன் இல்லை
நாயை மிஞ்சிய காவல் இல்லை.

கற்ற வழியே நிற்றல் நன்று
குற்றம் இல்லா வாழ்க்கை நன்று
பெற்றம் பாலைக் குடித்தல் நன்று
சுற்றம் சூழ இருத்தல் நன்று.

உப்பைக் கடனாய் வாங்கல் தீது
தப்பை இருமுறை செய்தல் தீது
குப்பையை வீட்டில் குவித்தல் தீது
தொப்பை வளர்த்தல் என்றும் தீது.

கண்ணின்று பிறத்தல் காதல் ஆகும்
மண்ணின்று பிறத்தல் தங்கம் ஆகும்
பெண்ணின்று பிறத்தல் தெய்வம் ஆகும்
பண்ணின்று பிறத்தல் இன்பம் ஆகும்.

நிழலின் அருமை வெயிலில் தெரியும்
பழகிய நட்பு வறுமையில் தெரியும்
அழகிய மனது முகத்தில் தெரியும்
மழலைச் சொல்லில் இனிமை தெரியும்.

ஆவி நீப்பினும் ஆன்மா போகா
காவி உடுப்பினும் கவலை போகா
பாவி என்றுனைத் தூற்றும் முன்பே
தாவி இறைவன் திருவடி பற்றுக !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எனது கவிதைகள் ! - Page 2 Empty Re: எனது கவிதைகள் !

Post by Preethika Chandrakumar Fri May 22, 2015 12:04 am

எனது கவிதைகள் ! - Page 2 3838410834 எனது கவிதைகள் ! - Page 2 3838410834
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

Back to top Go down

எனது கவிதைகள் ! - Page 2 Empty Re: எனது கவிதைகள் !

Post by M.Jagadeesan Fri May 22, 2015 7:45 am

நன்றி பிரீதிகா சந்திரகுமார் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எனது கவிதைகள் ! - Page 2 Empty Re: எனது கவிதைகள் !

Post by M.Jagadeesan Fri May 22, 2015 7:48 am

கண்கள் பெற்றபயன் எது ?
===================
கண்கள் பெற்றபயன், இருவர்
...காதல் செய்யவே என்றார்
கண்கள் பெற்றபயன், வள்ளுவன்
...கல்வி கற்கவே என்றான்
கண்கள் பெற்றபயன், திண்ணன்
...கண்ணை அப்பவே என்றான்
கண்கள் பெற்றபயன்,இவற்றுள்
...எதுசரி எனச் சொல்வீரே !



திண்ணன் -கண்ணப்பன்


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எனது கவிதைகள் ! - Page 2 Empty Re: எனது கவிதைகள் !

Post by M.Jagadeesan Sat May 23, 2015 7:50 am

வார்த்தை ஜாலம்.
=============
எம்மதத்தில் சேர்ந்தாலும் தவறில்லை
ஆனால்
தாமதத்தில் மட்டும் சேராதே!

வேகமாகச் செயலாற்றுவதில் தவறில்லை
ஆனால்
விவேகமாக செயலாற்ற மறவாதே!

பாசம் காட்டுவதில் தவறில்லை
ஆனால்
ஆபாசம் காட்டுவது தவறாகும்.

கந்தை அணிவது தவறல்ல
ஆனால்
அகந்தை கொள்வதுதான் தவறாகும்.

பட்டம் உனக்குப் பெருமை தரும்
ஆனால்
தம்பட்டம் உனக்கு சிறுமை தரும்.

காரம் அளவோடு இருந்தால் உடலுக்கு நல்லது
அதுபோல
அதிகாரம் அளவோடு இருந்தால் ஆட்சிக்கு நல்லது.

தானம் கொடுப்பது சந்ததிக்கு நல்லது
அதுபோல
நிதானம் என்பது வாழ்க்கைக்கு நல்லது.

ஊழியம் செய்வது தவறல்ல
ஆனால்
அட்டூழியம் செய்வது தவறாகும்.

வாக்குக் கொடுத்தபடி நடந்துகொண்டால்
உனைத்தேடி
செல்வாக்குத் தானே ஓடிவரும்.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எனது கவிதைகள் ! - Page 2 Empty Re: எனது கவிதைகள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 16 Previous  1, 2, 3 ... 9 ... 16  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum