ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு ஊழல் அதிகாரிகளுக்கு அரபு எரிபொருள் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பாக நன்றி! நன்றி! நன்றி!

3 posters

Go down

அரசு ஊழல் அதிகாரிகளுக்கு அரபு எரிபொருள் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பாக நன்றி! நன்றி! நன்றி! Empty அரசு ஊழல் அதிகாரிகளுக்கு அரபு எரிபொருள் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பாக நன்றி! நன்றி! நன்றி!

Post by சிவா Sat May 16, 2015 2:05 am

அரசு ஊழல் அதிகாரிகளுக்கு அரபு எரிபொருள் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பாக நன்றி! நன்றி! நன்றி! Thanks%20vadivelu%20right%20length(1)தமிழக அரசியலில் 'நன்றி' என்ற வார்த்தையை பயன்படுத்த இதுதான் இடம் என்று சொல்ல முடியாத அளவுக்கு நன்றி உணர்வு அரசியல்வாதிகளுக்கு அதிகரித்துவிட்டது.

உலகிலேயே முதன்முறையாக தமது வழக்குகளுக்கு தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு பேனர் வைத்து நன்றி சொல்லும் அளவுக்கு தமிழர்கள் நன்றி உணர்ச்சி மிகுந்தவர்களாக ஆகிக்கொண்டிருக்கிறார்கள். தீர்ப்பு பாதகமாகிவிட்டால் இதே தமிழர்களைப்போல் 'நன்றி' காட்டுபவர்கள் யாரும் இருக்க முடியாது. நீதிபதி தம் பதவியை ராஜினாமா செய்யும் அளவுக்கு போய் விடுகிறது அந்த நன்றியுணர்வு.

எத்தனை காலத்திற்குத்தான் அரசியல்வாதிகளுக்கு நன்றி சொல்வது. ஒரு பேச்சுக்கு காலம் முழுக்க நமக்கு தொண்டு செய்யும் சிலருக்கு நாம் நன்றி சொன்னால் என்ன என தோன்றியது. யார் யாருக்கெல்லாம் நன்றி சொல்லலாம்..

இது நீதிபதி குமாரசாமிக்கு கட்சியினர் சொல்லும் நன்றி அல்ல, ஓட்டு போட்ட மக்களை நான்கு வருடம் கழித்துப் பார்க்க வந்த எம்.எல்.ஏக்களுக்கு மக்கள் சொல்லும் நன்றி அல்ல, டாஸ்மாக் சரக்கு மூலம் பல கோடிகள் லாபம் பார்த்த மது நிறுவனங்கள் சொல்லும் நன்றி அல்ல, இடைத் தேர்தலை அறிவித்து பணப் புழக்கத்தை அதிகரிக்கும் தேர்தல் ஆணையத்திற்கு சொல்லும் நன்றி அல்ல, அனைத்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய வாய்ப்பளித்த நாட்டு மக்களுக்கு மோடி சொல்லும் நன்றி அல்ல, நமது ஊழல் அதிகாரிகளால் சாலைகள் எல்லாம் குளங்களாக மாறி வீணாகப் போன சாலையால் யாரெல்லாம் பயன் பெற்றார்களோ அவர்கள் தெரிவிக்கும் நன்றி.

ஊழல் அரசு அதிகாரிகளின் கைங்கரியத்தில் போடப்பட்ட சாலைகள் தற்போது பெய்து வரும் மழையால் குளம் குட்டை என உருமாறிக்கிடக்க, அதில் நடக்க முடியாமல் கஷ்டப்படும் சிலர் நன்றி சொல்கிறார்கள் .....

@ 50% கமிசனில் இருந்து 5% தள்ளுபடி செய்து 45 % த்தில் மீண்டும் சாலை போட அனுமதித்த பொ.ப.துவுக்கு (பொறுப்பாக லஞ்சப்பணம் வாங்கும் துறை) நன்றி!!.

@ அடிக்கடி சாலை போடுவதால் ஜல்லி, தார் விற்பனைக்கு உறுதுணையாக நிற்கும் தர்மத் தாயின் ஆசி பெற்ற அரசிற்கு ஜல்லி, தார் விற்பனையாளர்கள் சங்கம் சார்பாக நன்றி!!.

@ மாமூல் வாங்க சாலைக்கு வந்தால் எங்களை மீறி வேகமாச் செல்ல முடியாதபடி பள்ளமான சாலை போட்டு மாமூல் வாழ்க்கையை மலரச் செய்து லஞ்சத்தை மறக்க முடியாதபடி செய்யும் அரசுக்கு நன்றி!!.

@ மோசமான சாலையால் வெளியே செல்ல முடியாதபடி முடங்கியும் செலவும் செய்யாமல் வீட்டுக்குள் இருப்பதால் “ சிக்கன சிகாமணிகள்” சங்க சார்பாக அரசுக்கு நன்றி!!.

@வெளியே கால் வைக்க முடியாத அளவிற்கு மோசமான பள்ளத்தை பார்த்து பயந்து வீட்டிலேயே சமைத்து போடுகிறேன் (கொட்டுகிறேன்) என சலித்து வீட்டில் சமைக்க வைத்தமைக்கும் , எங்கள் பணத்தை காப்பற்றி கொடுத்தமைக் கும் "கைப்பணம் காப்பாற்றிக்கொண்ட கனவான்கள்" சங்கம் சார்பில் அரசுக்கு நன்றி!!

@ மோசமான சாலையால் முதுகெலும்பு உடைந்தும்,கை,கால் எலும்பு முறிவிற்கு மருத்துவ மனைக்கு வர வைத்த , மருத்துவமனை கட்டிடத்தை நிமர வைத்து, எங்களை கோடீஸ்வரனாக மாற்றி வரும் அரசுக்கு மருத்துவர் சங்கம் சார்பாக கோடி நன்றிகள் !!.

@ மேடு பள்ளமுள்ள சாலையால் காதலர்கள் அன்பு கூடும் என்பது அனுபவம் வாய்ந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை. அன்பு கூடுவதற்கு உதவி புரியும் உருப்படாத சாலை போட்ட அரசுக்கு காதலர்கள் சார்பாக அன்பு நன்றிகள்!!.

@ சாலையில் பள்ளம்,மேடு தெரியாமல் விழுந்து அவர்களை சொர்கத்திற்கு அனுப்பி வைக்க உதவும் ஊழல் அரசு அதிகாரிகளுக்கு சுடுகாட்டு பணியாளர்கள் சார்பாக அரசுக்கு நன்றி!!.

@ அதிக அளவில் "கண்ணீர் அஞ்சலி" போஸ்டர் வர காரணமாகும் சாலையை அமைத்த அரசுக்கு போஸ்டர் தயரிப்பாளர்கள் சார்பில் நன்றி!! .

@ கண்மாய் ,குளங்களுக்கு செல்ல வேண்டிய நீரை சாலையில் தேக்கி வீணாக்கி, நிலத்தடி நீர் உயராமல் செய்து மக்களின் நீர் தேவைக்கு லாரியை எதிர்பார்க்க வைக்கும் அரசுக்கு தண்ணீர் லாரிகள் தொழிலை வாழ வைக்கும், தண்ணீர் லாரிகள் தொழில் நசிந்து விடாமல் மக்களை லாரி நீருக்கு ஏங்க வைக்கும் அரசுக்கு தண்ணீர் லாரிகள் சங்கம் சார்பில் நன்றி!!..

@ நாங்கள் மது குடித்து விட்டு வீட்டுக்குச் செல்லும் போது நிதானமில்லாமல் வண்டியை வேகமாக ஓட்டவிடாதபடி சாலையை மேடு பள்ளமாக போட்ட அரசுக்கு டாஸ்மாக் குடிமகன்கள் சங்கம் சார்பாக எங்கள் ரத்தத்தை உறிஞ்சும் அரசுக்கு நன்றி!!.

@ சாலைகள் மோசமானதால் வண்டியின் டயர் தேய்ந்து புது டயர் வாங்க வைத்தமைக்கு டயர் கடைகள் சார்பாக நன்றி!!.

@ மேடு பள்ளமான சாலையில் வண்டியின் உதிரி பாகங்கள் உதிர்ந்து உருண்டு ஓடுவதால் வாகன சாதனங்கள் விற்போர் நலசங்கம் சார்பாக நன்றி!!.

@ சாலையில் நீர் தேங்கி கொசு வளர்வதால் கொசு ஒழிப்பு திரவம் வாங்க வைத்தமைக்கு கொசு ஒழிப்பு மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக அரசுக்கு நன்றி .

@ "கொசு வளர்ப்பில் வரலாறு" படைத்த அரசுக்கு நன்றி!!.

@ பழைய வண்டியை உடைக்க ஆள் கிடைக்காமல் தொழில் முடங்கிய நிலையில் மேடு பள்ளமான சாலையில் ஒரு முறை சென்ற வண்டி தானாகவே உடைந்து வண்டியை உடைக்கும் தொழிலை எளிதாக்கிய எங்கள் தொழிலை காப்பாற்றிய , தெய்வத்திற்கு, கண் கண்ட ஊழல் அரசு அதிகாரிகளை காப்பாற்றும் அரசிற்கு வண்டி உடைப்போர் சங்கம் சார்பாக நன்றி!!.

@ அதிகமான எரிபொருள் செலவு ஏற்பட்டு இறக்குமதி அதிகரிக்க உதவிய தமிழக ஊழல் அதிகாரிகளுக்கு அரபு எரிபொருள் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பாக நன்றி!!.

@ பயிற்சிக்கட்டணம் அதிகரித்துள்ள நிலையில் குழந்தைகள் இலவசமாக நீச்சல் கற்றுக்கொள்ள வசதியாக இலவச நீச்சல் குளமாக சாலைகளை அமைத்த அரசுக்கு ஏழை எளிய பெற்றோர்கள் சார்பாக நன்றி !!.

@ வண்டி சீக்கிரம் தேய்மானம் அடைவதால் புது வண்டி வாங்க வைக்கும் தமிழக அரசுக்கு வண்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பாக நன்றி!!.

@ வெளிநாட்டினர்,வெளி மாநிலத்தவர் வாழ் நாளில் தமிழகத்தை, தமிழக சாலையை (??) மறக்க முடியாமல் செய்தமைக்கு அரசுக்கு சுற்றுலா சங்கம் சார்பாக நன்றி!!.

@ வெள்ளம் வருவது போன்ற படப்பிடிப்புக்கு அலைய விடாமல் தென் மாவட்ட சாலைகளில் வரும் வெள்ள நீரை பயன்படுத்தி படப்பிடிப்பு நடத்த உதவிய லஞ்ச அரசு அதிகாரிகளுக்கு ஒளிப்பதிவாளர்கள் சங்கம் சார்பில் நன்றி!! . ( கட்டாயம் படம் இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக உங்கள் கட்சித் தொலைக்காட்சி நிறுவனத்துக்குத் தான்).

@ தார்ச் சாலையை மறந்து தரமற்ற சாலையில் ஆண்டு முழுவதும் பயணிக்க வைக்கும் தமிழக அரசுக்கு மலையேற்ற பயிற்சி வீரர்கள் கின்னஸ் சாதனை முயற்சியாளர்கள் சார்பில் நன்றி!!.

@ வாரம் ஒரு முறை லஞ்சம் வாங்கியோர் பட்டியல் ப்ளெக்ஸ் போர்ட் மூலம் வெளிவருவதால் லஞ்ச அதிகாரிகளை காப்பாற்றி வரும் அரசுக்கு ப்ளெக்ஸ் போர்ட் சங்கம் சார்பில் நன்றி !!.

- எஸ்.அசோக் @ விகடன்


அரசு ஊழல் அதிகாரிகளுக்கு அரபு எரிபொருள் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பாக நன்றி! நன்றி! நன்றி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரசு ஊழல் அதிகாரிகளுக்கு அரபு எரிபொருள் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பாக நன்றி! நன்றி! நன்றி! Empty Re: அரசு ஊழல் அதிகாரிகளுக்கு அரபு எரிபொருள் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பாக நன்றி! நன்றி! நன்றி!

Post by ராஜா Sat May 16, 2015 2:36 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அரசு ஊழல் அதிகாரிகளுக்கு அரபு எரிபொருள் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பாக நன்றி! நன்றி! நன்றி! Empty Re: அரசு ஊழல் அதிகாரிகளுக்கு அரபு எரிபொருள் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பாக நன்றி! நன்றி! நன்றி!

Post by ayyasamy ram Sat May 16, 2015 4:47 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82707
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அரசு ஊழல் அதிகாரிகளுக்கு அரபு எரிபொருள் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பாக நன்றி! நன்றி! நன்றி! Empty Re: அரசு ஊழல் அதிகாரிகளுக்கு அரபு எரிபொருள் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பாக நன்றி! நன்றி! நன்றி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஊழல் அதிகாரிகளுக்கு பாஸ்போர்ட் வழங்க தடை
» ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு
» சரியாக செயல்படாத அதிகாரிகளுக்கு ஓய்வு கொடுக்க மத்திய அரசு அறிவுரை!
» ராணுவ அதிகாரிகளுக்கு மின்சாரம் துண்டிப்பு: தெலுங்கானா அரசு மிரட்டலால் பரபரப்பு
» குஜராத்தில் சொத்து விவரம் தாக்கல் செய்யாத அதிகாரிகளுக்கு சம்பளம் இல்லை - மாநில அரசு தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum